புதன், 9 செப்டம்பர், 2009

தமிழ் நாட்டின் தண்ணீர் பிரச்சினை

அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.
தற்போது தண்ணீர் பிரச்சினைதான் தமிழ் நாட்டின் மிகமுக்கியமானதும் அவசியம் தேவையானதுமான பிரச்சினையாக இருக்கின்றது.
வற்றாத ஜீவநதிகள் தோன்றுகின்ற இமயமலை போன்ற உயர்ந்த மலைச்சிகரங்களோ அல்லது மழைக்காலத்திலாவது வெள்ளம் அடித்து செல்லுமாறு உள்ள ஆறுகளை உருவாக்குகின்ற மேற்குதொடர்ச்சி மலைகளோ நம்முடைய தமிழ் நாட்டில் இல்லை. அதனால் நம்முடைய அன்றாட தேவைக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தி வாழவேண்டிய அவலநிலையில் நாமெல்லாம் தற்போது வாழ்ந்துவருகின்றோம்.
இயற்கையாக மழையின்மூலம் தேவைக்கு மேல் கிடைக்கின்ற நீரினை வீணாக அரபிக்கடலில் கலந்திடுமாறு விடுவோமேதவிர தமிழ் நாட்டிற்கு ஒருசொட்டு தண்ணீரை கூட தரமாட்டோம் என்ற நல்ல மனிதாபிமான முள்ள அண்டை மாநிலங்கள் நமக்கருகில் உள்ளன. மேலும் தமிழ் நாட்டிற்கு வழக்கமாக செல்கின்ற தண்ணீரை வழங்குக என்றும் அணையின் உயரத்தை உயர்த்துவதால் பேரிழப்பு எதுவும் ஏற்படாது என்றும் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டாலும் அதனை மதிக்காமல் துச்சமென குப்பைகூடையில் தூக்கியெறிந்துவிட்டு ஒருசொட்டு தண்ணீரை கூட தருகின்ற செயலை.செயற்படுத்திமாட்டோம் எனும் அடம்பிடிக்கும் அண்டை மாநிலங்கள் உள்ள இந்தியாவில் நாம் தற்போது வாழ்ந்து குப்பை கொட்டிவருகின்றோம்
அண்டைமாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சி , எதிர்கட்சிகள் ஆகிய அனைத்தும் கட்சிவேறுபாடு எதுவுமின்றி மிக ஒற்றுமையாக ஒரேஒத்த குரலுடன் இந்த தண்ணீர்பிரச்சினையில் செயல்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலோ இதற்கு நேர்மாறாக தாம் செய்வது அனைத்தும் சரியான செயல் என ஆளுங்கட்சியும் ஆளுங்கட்சி செய்வது அனைத்தும் தவறு என எதிர்கட்சிகளும் தத்தமது கட்சி நலனே முதன்மையானது மக்களின் மற்ற பொதுப் பிரச்சினைகளனைத்தும் இரண்டாம்பட்சமே என்றவாறு செயல்படுகின்றன.
இதேபோன்ற தண்ணீர்பிரச்சினை ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கிடையில் கூட உள்ளன.
ஆயினும் இந்திய ஒருமைப்பாடு பற்றியும் இந்திய ஒற்றுமை பற்றியும் வாய்கிழிய பேசியே பொழுதினை கழிப்பதில் நாமெல்லாம் வல்லவர்கள்
நம்முடைய எல்லை புறங்களில் அன்றாடம் ஆக்கிரமிப்பு செய்திடும் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இரண்டு மூன்று சுற்று அமைதியான விவாதத்தின் வாயிலாக பிரம்மபுத்திரா சிந்து ஆகிய ஜீவநதிகளின் பிரச்சினையை எளிதாக தீர்வுசெய்யும் மத்தியஅரசானது மாநிலங்களுக் கிடையே ஏற்படும் இந்த தண்ணீர்பிரச்சினையில் மட்டும் அக்கறையுடன் தீர்வுசெய்யாமல் அல்லது குறைந்தபட்சம் தீர்வுசெய்வதற்கு கூட முயற்சி எடுக்காமல் யாராவது எக்கேடாவது கெட்டுபோங்கள் என விட்டேற்றியாக கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது. இவ்வாறான சூழலில் இந்திய ஒருமைப்பாடும் இந்திய ஒற்றுமையும் எவ்வாறு அமையும் என சிறிது நேரம் சிந்தித்து பாருங்கள்
இந்நிலையில் உடனடியாக நம்முடைய அனைத்து அரசியல் கட்சிகளும் தத்தமது கட்சிகளின் மனமாட்சியங்களனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த தண்ணீர்பிரச்சினை போன்ற மக்களின் பொதுப் பிரச்சினைகளுக்கு மட்டுமாவது ஒரேயணியாகதிரண்டு இந்தியநதிகளனைத்தும் தேசியமயமாக மாற்றிடவும் நதிநீரினை பங்கிட்டுகொள்ளும் அதிகாரம் மத்தியஅரசிற்கு மாற்றுவதற்காகவும் செயற்பட்டால் மட்டுமே மாநிலங்களுக்கிடையே ஏற்படும் இவ்வாறான தண்ணீர்பிரச்சினையை தீர்வுசெய்யமுடியும் என்பது திண்ணம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...