வெள்ளி, 7 மே, 2010

மூச்சுக்காற்றில் ஆல்கஹால் உள்ளதாவென ஒரு ஆய்வு



மூச்சுக்காற்றில் ஆல்கஹால் உள்ளதாவென ஒரு ஆய்வு
  மொடாக்குடிகாரர்கள் குடித்து முடித்தவுடன் பல்வேறுவகையான வாசனைப்பொருட்களை வாயிலிட்டு மென்று தாங்கள் ஆல்சஹாலை குடிக்கவேயில்லை என்று தங்களின் வாயிலிருந்து காற்றினை ஊதிசாதிப்பார்கள் அல்லது சத்தியம் செய்வார்கள் இவர்கள் குடித்தார்களா எவ்வளவு குடித்துள்ளளார்கள் என்பதுபோன்ற விவரங்களை அறிந்துகொள்வதுஇவ்வாறான நிலையில் சிறிது சிரமம் இருக்கும் இதனை போக்குவதற்காக பின்வரும் கருவிகள் பயன்படுகின்றன,இந்த கருவிகள் எவ்வாறு செயல்படுகின்றது என்றும் இதன் அடிப்படைகருத்தமைவை பற்றியும் இப்போது காண்போம்,
இவை குடிகாரர்களின் உடலில் ஓடும் இரத்தித்தில் எவ்வளவு ஆல்கஹால் உள்ளது என LCD திரையில் அலகுகளாக காண்பிக்கும், இதில் 0.20என காண்பித்தால் 100 மிலி இரத்தத்தில் 20மிலி ஆல்கஹால் உள்ளது என பொருள்படும் இது வழக்கமாக நாம் அனுமதிக்கும் அளவைவிட மிககூடுதலாகும் இவ்வாறு அறிந்தவுடன்  அளவிற்கதிகமாக குடித்துட்டு வண்டியை ஓட்டிடும்  ஓட்டுநரை தொடர்ந்து வண்டியை ஓட்டவேண்டாம் என தடுத்து நிறுத்தவேண்டும்,
  நாம் அருந்தும் காபி ,டீ, பால் உண்ணும் காய்கனி போன்ற உனவுப்பொருட்கள் உணவுக்குழாய் வழியாக உடலுக்குள் செல்லும்போதுஇவைகள் செரிமாணம் ஆகி சத்துப்பொருட்கள் மட்டும் இரத்தத்துடன் கலந்துவிடுகின்றுது பின்னர் இந்த சத்துக்கள் உடலின் இயக்கத்திற்குத்தேவையான சக்தியையும் உடல்வளர்ச்சிக்குத்தேவையான ஊட்டத்தையும் வழங்குகின்றது, ஆனால் ஆல்கஹால் ஆனது மற்ற சத்துப்பொருட்களை போன்று செரிமானம் ஆகாமல்  இரத்தத்தில் மட்டும் நேரடியாக கலந்து விடுகின்றது, வழக்கமாக உடலில் இரத்தமானது நுரையீரல் பகுதிக்கு வந்துசுத்தமான ஆக்ஜிஜனை மட்டும் எடுத்துக்கொண்டு  கழிவுகளைகாற்றுடன் கலந்துவிட்டு செல்கின்றது இந்நிலையில் இரத்தத்துடன் உள்ள ஆல்கஹால் எளிதில் ஆவியாகும் தன்மையுடனிருப்பதால் இதுவும் காற்றுடன் கலந்து வெளியேறுகின்றது,இவ்வாறு வெளியேறும் காற்றை இந்த கருவி ஆய்வுசெய்து 1மிலி இரத்தத்தில் எத்தனை மிலி ஆல்கஹால் உள்ளது எனக்காட்டி கொடுத்துவிடுகின்றது,
இந்த ஆய்விற்காக 1,வெட்கெமிஸ்ட்ரி,2போட்டோ ஸ்பெக்ரோஸ்கோபி 3,இன்ப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி போன்ற பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பின்வரும் இரன்டு தொழில்நுட்பத்தை மட்டும் இப்போது காண்போம்,
பியூல் செல் ஆய்வு  இது பயன்படுத்த எளிதானது குறைந்த விலையே உடையது,எந்த நிலையிலும் செயல்படக்கூடியது கையடக்கமானது ஆகியகாரணங்களினால் இதனை அனைவரும் ஆதரிக்கின்றனர்,
  இதில் மூச்சுக்காற்று குறிப்பிட்ட அழுத்தத்தில் உள்செலுத்துவதற்காக  தரமான பிளாஸ்டிக் குழாய் பயன்படுகின்றது,இதன்வழியே பயனிக்கும் மூச்சுக்£ற்று பின்னர் பியூல் செல்லுக்கு சென்றடைகின்றது  இது இரண்டு பிளாட்டின எலெக்ராடு களுக்கிடையில் போரஸ்லேயரால் கலவையாக உருவாக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது, மூச்சுக்காற்று இந்த கலவையின்¢வழியே செலுத்தப்படும்போதுஅங்குவைத்துள்ள போரஸ்லேயருடன் கலந்து ஆல்கஹால்மட்டும் உட்கவரப்பட்டு அஸிட்டடிக் அமிலமாக உருவாகின்றது பின்னர் இந்த அஸிட்டிக் அமிலம் பிளாட்டின எலெக்ட்ராடால் உட்கவரப்பட்டு புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான் என பிரிக்கப்படுகின்றது எலெக்ட்ரான் மட்டும்இந்த எலெக்ட்ராடின் தொடர்ச்சியான கம்பிச்சுருள்வழியே பயனித்து இறுதியாக மைக்ரோ சிப்பால்ஆன  செயலகத்திற்கு சென்றடைகின்றது அங்கு செயலகமானது இந்த எலெக்ட்ரான்களை மின்தூண்டலாக உருமாற்றுகின்றது அதன்பிறகு இந்த மின்தூண்டல் ஆனது  LCD பிரிதிபலிப்பு பகுதியில் அலுகுகளாக பிரிதிபலிக்கச் செய்யப்படுகின்றது
மற்ற அங்ககபொருட்கள் காற்றில்உள்ள ஆக்ஜிஜனுடன் சேர்ந்து தண்ணீராக உருமாற்றப்பட்டு நீராவியாக வெளியேற்றப்படுகின்றது,அளவிற்குஅதிகமான ஆல்கஹால் குடித்திருந்தால் அதிகமான அளவிற்கு அசிட்டிக்ஆக்ஸிட் உற்பத்தியாகி அதிகஅளவு பரோட்டான்களும் எலெக்ட்ரான்களும் உருவாகின்றன தொடர்ச்சியாக அதிகஅளவிற்கு மின்தூண்டுதலும் ஏற்படுகின்றது,
 இன்டக்சினேஷன்  ஆய்வு: இதில் அகச்சிவப்புக்கதிர் பயன்படுத்தப்படுகின்றது, இந்த அகல்கற்றை அகச்சிவப்பு கதிர் அதற்கான பிரத்யோக விளக்கின் மூலம் உற்பத்தி செய்யப்பபட்டு மூச்சுக்காற்று செல்லும் குழாய்வழியே பாய்ந்தோடும்படி செலுத்தப்படுகின்றது, இங்கு மூச்சுக்காற்றில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறும் ஒவ்வொருமாதிரி அசைந்தாடுவதால் இவைகளின் அலைநீளம் மாறுபடுகின்றது, இந்த அகச்சிவப்புக்கதிர் காற்றின் மூலக்கூற்றின் அசைவுதன்மையை சுட்டிக்காட்டுகின்றது இவற்றில் எத்தனாலின் அலைநீளம்மட்டும் சிறிது மாறுபட்டு இருக்கும இந்த அலைநீளங்கள் அளந்தறியப்பட்டு பதிவு செய்யப்படுகின்றதுஇவைகளில் அசைந்தாடும்  ஆல்கஹாலின்  மூலக்கூற்றின் அலைநீளம் மட்டும் தனியே அடையாளம் காட்டுகின்றது பின்னர் குழாயின் முடிவில் உள்ள வடிகட்டியானது குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஆல்கஹால் மூலக்கூறுகளை மட்டும் பிரித்து அனுப்புகின்றது இந்தஎத்தனால் மூலக்கூறு மட்டும் மின்னூட்டமாக உருமாற்றமடைகின்றது பின்னர் இந்த மின்னூட்டம்இறுதியக LCD திரையில் அலகுகளாக பிரிதிபலிக்க செய்யப் படுகின்றது,

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...