வியாழன், 15 டிசம்பர், 2011

உற்பத்தி செலவை குறைத்து இலாபத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள்


போட்டி மிகுந்த இன்றைய உலகில் ஒவ்வொரு நிறுவனமும் தம்முடைய உற்பத்தி செலவை எந்த வகையிலாவது குறைப்பதற்காக அரும்பாடுபடுகின்றன, இதுவே அந்நிறுவனத்தின் இலாபத்தை உயர்த்தும் அடிப்படை உத்தியாகும். அவ்வாறாக ஒரு நிறுவனத்தின் உற்பத்தி செலவை மேலும் எவ்வாறு குறைப்பது என இப்போது காண்போம் .

1. மூலப்பொருளின் கொள்முதல் செலவை குறைப்பதுதான் முதல் வழியாகும். இவைகள் உற்பத்தியாகும் இடத்திற்கு நேரடியாக சென்று இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்வது குறைந்த விலையில் மூலப்பொருள் கிடைக்கும் சிறந்த வழியாகும்.

2. குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் கிடைக்கும் பொருள் எனில் அப்போது பருவமற்ற காலங்களுக்கும் சேர்த்து கொள்முதல் செய்வது செலவை குறைக்கும் மற்றொரு செயலகும்,.

3. வெவ்வேறு இடங்களில் நிலவும் விற்பனை விலையை விசாரித்து ஒப்பிட்டு பார்த்து கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கின்றது என தரமற்ற பொருளை வாங்கினால் உற்பத்தி இழப்பு ஏற்படுவதை விட முடிவு பொருளை சரியான நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்படும்

4. விலையை ஒப்பிடும்போது பொருளை எடுத்து வருவதற்கான செலவையும் கணக்கில் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு பொருள் சென்னையில் அதிக விலைஉள்ளதுஅதே பொருளை வட இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கின்றது என கொள்முதல் செய்தால் வட இந்தியாவிலிருந்து பொருளை இங்கு கொண்டு வருவதற்கு ஆகும் வாடகை செலவை சேர்த்திடும்போது சென்னையிலேயே அந்தபொருளை வாங்குவது குறைந்த செலவாகும்

5. அவ்வாறே விற்பனை வரி, நுழைவு வரி ஆகியவறறையும் கணக்கில் கொள்ள வேண்டும். இவைகளும் மூலப்பொருளின் செலவை உயர்த்தும் காரணிகளாகும்

6. மாறுதல் தவிர மாறாதது உலகில் எதுவுமே இல்லை என்ற நிலையில் நம்முடைய உற்பத்தி பொருளுக்கு வேறு புதிய மூலப்பொருள் ஏதேனும் மாற்றாக குறைந்த செலவில் கிடைக்கின்றதா என எப்போதும் விழிப்புடன் கவணித்து கொண்டே இருந்து உடனுக்குடன் மாறுவதற்கும், உற்பத்தி வழிமுறைகளை மாற்றி கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்

7. உற்பத்திக்கு உதவும் இயந்திரங்கள் புதியதாக ஏதேனும் சந்தையில் வந்திருந்தால் உடனடியாக அவ்வாறான புதிய இயந்திரத்தை பொருத்தி இயக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

8. ஒரு சில துணை பொருட்கள் / உதிரி பொருட்கள் நம்முடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்வதற்கு பதிலாக சந்தையில் குறைந்த விலையில் அதே தரத்திற்கு கிடைக்கின்றது எனில் எது சிறந்தது என ஒப்பிட்டு அதற்கேற்றவாறு செயல்படுவது செலவை குறைக்கும் வழிமுறையாகும்.

9. உற்பத்திக்கு பயன்படும் ஒரு சில புதிய இயந்திரங்களை கொள்வமுதல் செய்வதை விட வாடகைக்கு கிடைக்கும் எனில் அவ்வாறு அமர்த்தி கொள்வது உற்பத்தி செலவை குறைக்கும் மற்றொரு வழிமுறையாகும். வாடகையா அல்லது சொந்தமா என்பதை எது குறைந்த செலவு என ஒப்பிட்டு முடிவு செய்வது சிறந்தது.

10. நம்முடைய மூலப்பொருட்களை வழங்குபவருக்கு நம்முடைய முடிவு பொருள் தேவைப்படும் அவ்வாறான நிலையில் பண்ட மாற்று முறையில் பரிவர்த்தனை செய்வது பரஸ்பரம் நம்பிக்கையும் உறவையும் வலுப்படுத்துவதுடன் குறைந்த செலவில் மூலப்பொருள் கிடைக்கும் சிறந்த வழியாகும்

11. பண்டிகை போன்ற விழாக்காலங்களில் அதிக அளவு நம்முடைய முடிவு பொருள் தேவைப்படும் சமயத்தில் தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கி கூடுதலாக உற்பத்திசெய்து தேவையை ஈடு கட்டுவது செலவை குறைக்கும் மற்றொரு சிறந்த வழிமுறையாகும்.

மேலும் இது போன்ற வழிமுறைகளை ஒரு நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தி உற்பத்தி செலவை குறைத்து இலாபத்தை உயர்த்திடுக..

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...