திங்கள், 31 டிசம்பர், 2012

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும்


வேட்டைகாரன் ஒருவன் காட்டில் ஒரு முயலை பிடிப்பதற்காக அந்த காட்டின் மையபகுதிவரை துரத்தி சென்றிடும்போது அது தப்பித்து புதருக்குள் சென்று மறைந்து போய்விட்டது அதனால் அம்முயலை பிடிக்கமுடியாமல் சோர்வுற்று திரும்பி வரும்போது வழியில் ஏராளமான எலும்புத்துண்டுகள் கறித்துண்டுகளும் இருப்பதை பார்த்தான்

அந்நிலையில் அவனுக்கு அருகே சிறுத்தை ஒன்று இவனை பார்த்துவிட்டு இவனை அடித்து கொன்று தின்றிட இவனைநோக்கி பாய்ந்து வந்தது

உடன் அவ்வேட்டைக்காரண் ஏ நண்பா நம்முடைய முயற்சியில் பாதிகூட வெற்றிபெறமுடியாது போல் இருக்கின்றது ஒன்றிற்கு மேற்பட்ட சிறுத்தையை பிடிக்கலாம் என இவ்விடத்தில் எலும்புத்துண்டுகளையும் கறித்துண்டுகளையும் போட்டு வைத்தோம் ஆனால் இப்போதுதான் ஒரு சிறுத்தை வருகின்றது சரி பரவாயில்லை இதனை மட்டுமாவது முதலில் பிடிப்போம் பின்னர் அடுத்து என்ன செய்வது என முடிவு செய்வோம் என மிக சத்தமாக கூறினான்

இதனை காதால் கேட்ட அந்த சிறுத்தையானது இவன் நம்மை பிடிப்பதற்காக இந்த எலும்புத்துண்டுகளையும் கறித்துண்டுகளையும் போட்டு வைத்துள்ளான் நாம் மாட்டினால் நம்முடைய உயிர் அவ்வளவுதான் என தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி போய்விட்டது

வேட்டைக்காரணும் இன்று வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை நாம் உயிரோடு வீடுபோய்சேருவோம் என வீட்டிற்கு திரும்பி சென்றான்

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாக அதிலிருந்து மீண்டு வந்து சேருவதற்காக மிகச்சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும் என்பதே இதில் நாம் அறியவேண்டிய நீதியாகும்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

உயர்ந்த இலட்சியத்தை /இலக்கை அடைவதற்காக மிகச்சரியாக முயற்சிசெய்து பாடுபட்டால் வெற்றி பெறுவோம்


ஒருமீனவபெண் ஒருநாள் அதிகாலையிலிருந்த மதியம் வரை முயற்சிசெய்தும் ஒரு சிறுமீன் கூட கிடைக்காமல் மிக அதிக சோர்வுற்றிருந்தாள் அந்நிலையில் அவளுக்கு அருகே மற்றொருவளின் வலையில் பெரிய பெரிய மீனாக கீடைத்தும் அதனை தூக்கி மீண்டும் தண்ணீரில் எறிந்து வந்தாள் பின்அவளும் சலிப்புற்று இருந்தாள்

அவ்வழியே சென்ற சாமியார் ஒருவரை பார்த்து அவர்கள் இருவரும் தம்முடைய குறைகளை கூறினார்கள் இவ்வாறுதான் நாமும் நம்முடைய வாழ்வில் நமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையே யென அதற்கான மிகச்சரியான முயற்சி செய்யாமல் முதலாவது மீனவபெண் போன்று மீன் எங்கு கீடைக்குமோ அங்கு வலைவீசினால் மட்டுமே கிடைக்கும் என தெரிந்து கொள்ளாமலும் அறிந்து கொள்ளாமலும் மற்றவர் களை குறைகூறுவதிலும் வீனாக பொழுதை கழிக்கின்றோம்

இரண்டாவது மீனவபெண் தன்னிடம் சிறிய கூடைதான் உள்ளது ஆனால் தன்னுடைய வலையில் கிடைப்பதோ மிகப்பெரிய மீன் அதனால் அவ்வகை மீன் ஆனது தன்னுடைய கூடைக்குள் கொள்ளாது என விட்டுவிடுவதை போன்று நம்முடைய எண்ணங்களும் முயற்சிகளும் மிகப்பெரியதாக இருந்தால் அவை நமக்கு ஏற்புடையவை அன்று என விட்டுவிடுகின்றோம் ஆனால் நம்முடைய கனவுகளும் எண்ணங்களும் முயற்சிகளும் மிகப்பெரியதாக இருந்தால் நாமும் அந்த அளவிற்கு நம்முடைய வாழ்வில் வெற்றி பெறுவோம் என்பது திண்ணம் என அறிவுரை கூறினார்

உடன் முதலாவது மினவபெண் மீன் கிடைக்கும் இடத்தை தேடி சென்று மீன்பிடிக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் தன்னுடைய கூடைநிரம்ப மீன்பிடித்து சென்றாள்

இரண்டாவது மீனவபெண் பெரிய கூடையாக எடுத்துவந்து தனக்கு கிடைத்த பெரிய அளவு மீன்களை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்றாள்

ஆம் நம்முடைய வாழ்வில் உயர்ந்த இலட்சியத்தை /இலக்கை அடைவதற்கான குறிக்கோளினை மனதில் கொண்டு அதனை அடைவதற்காக மிகச்சரியாக முயற்சிசெய்து பாடுபடுவோம் வெற்றி பெறுவோம்

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாக செயல்படவேண்டும்


தொழிலாளி ஒருவர் வார கடைசி நாளன்று தன்னுடைய அந்த வார கூலித்தொகையை வாங்கிகொண்டு தன்னுடைய வீட்டிற்கு குறுக்கே இருக்கும் சிறு முட்புதர்காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்தார் ு

அந்த சமயத்தில் திடீரென வழிப்பறி திருடன் ஒருவன் அவர்முன் துப்பாக்கியுடன் வந்து ஒழுங்காக பையில் உள்ள அந்த வார கூலி தொகையை அனைத்தையும் கொடுத்துவிடும்படியும் இல்லையென்றால் தன்னுடைய கையில் உள்ள துப்பாக்கியால் அவரை சுட்டு கொன்று விடப்போவதாகவும் மிரட்டினான்

உடன் “நான் என்னுடைய பையில் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு சென்றால் என்னுடைய மனைவி என்னை சந்தேகபடுவாள் அதனால் என்னுடைய சட்டையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த துப்பாக்கியால் சுட்டால் அதனை காண்பித்து திருடன் வந்து இந்த வார கூலித்தொகையை வழிப்பறி செய்துகொண்டு போய்விட்டதாக கூறிவிடுவேன்” எனக்கூறியதை தொடர்ந்து ஒருமுறைமட்டும் அவருடைய சட்டையில் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுவிட்டு “சரி பணத்தை எடு” என கூறினான்

பின்னர்“இது பத்தாது என்னுடைய சட்டை முழுவதும் சல்லடையாக உன்னுடைய துப்பாக்கியால் சுட்டால்தான் மிக கடுமையாக உன்னோடு போராடி முடியாமல் இறுதியாகபணத்தை இழந்துவிட்டதாக கூறமுடியும்” எனக்கூறியதை தொடர்ந்து வழிப்பறிதிருடனும் சரியென தன்னுடைய துப்பாக்கியால் அத்தொழிலாளியின் மேற்சட்டையை கழற்றி முழுவதும் சல்லடையாக தோன்றிடுமாறு சுட்டுதள்ளியபின் இறுதியாக “என்னுடைய துப்பாக்கியில் குண்டுகள் ஏதும் இல்லை அனைத்தும் காலியாகிவிட்டன அதனால் இப்போதாவது உன்னுடைய பணத்தை கொடுத்துவிடு” என கூறினான்

இறுதியா க“அப்படி வா என்னுடைய வழிக்கு நண்பா ஒழுங்காக உன்னுடைய வீட்டிற்கு செல்வதாக இருந்தால் விட்டுவிடுகின்றேன் இல்லையெனில் உன்னை அப்படியே கையை கட்டி இழுத்து சென்ற எங்களுடைய ஊரிலிருக்கும் காவல் நிலையத்தில் உன்னை கொண்டு சென்று சேர்த்து நீஎன்னிடம் கூலித்தொகையை வழிப்பறி செய்ய முயன்றதாக கூறி சிறைசாலைக்கு அனுப்பிவைத்துவிடுவேன்” எனக் கூறியதும் “ஐயோ அப்படியெதுவும் செய்தவிடாதீர்கள் நான் உங்களுடைய வழிக்கு குறுக்காக வரமாட்டேன்” என பயந்து ஓடிவிட்டான்

இவ்வாறே எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாக அதிலிருந்து மீண்டு வந்து சேருவதற்காக மிகச்சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும் என்பதே இதில் நாம் அறியவேண்டிய நீதியாகும்

செவ்வாய், 25 டிசம்பர், 2012

நம்முடைய உணர்வுகள் நாம்அதனை எடுத்துகொள்வதற்கேற்ப அதனுடையஅளவு தோன்றும்


பயிற்சியாசிரியர் ஒருவர் தம்கீழ் பயிற்சிபெறவந்துள்ள இளம் பயிற்சி யாளர்களிடம் ஒரு கைப்பிடி உப்பினை கொடுத்து அதன் சுவையை கூறும்படி கோரினார்

உடன் அனைவரும் உப்பு கரிப்பதாக கூறினார்கள்

பின்னர் அவ்வுப்பை ஒரு டம்ளர் தண்ணீரல் இட்டு அதனை நன்கு தண்ணீரில் கரையுமாறு கலக்கியபின் அந்த உப்புநீரை அருந்து மாறு கோரினார்

தற்போது உப்பின் கரிப்பு சிறிது குறைந்துள்ளதாக கூறினார்கள்

அதன்பின்னர் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் அவ்வுப்பினை கொட்டி அந்த குளத்தினுடைய தணினீரில் அவ்வுப்பை நன்கு கரையுமாறு செய்தபின் தற்போது அந்த நீச்சல் குளத்தின நீரை அருந்துமாறு கூறினார்

உடன் அனைவரும் அந்த குளத்தின் நீர் கரிப்பு சுவையில்லாமல் சாதாரணமாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்கள்

அப்பயிற்சியாசிரியர் அந்த உப்பின் அளவு எந்த நிலையிலும் மாறவில்லை ஆனால் அது சேரும் இடம் மாறு படுகின்றது அதற்கேற்ப அதனுடைய சுவையும் மாறி அமைகின்றது அதுபோன்றே நம்முடைய வலி துன்பம் என்பனபோன்ற உணர்வுகளும் ஒரேஅளவுதான் இருக்கும் ஆனால் அதனை பேரளவிற்கு அதாவது குளத்தின் ,ஏரியின், கடலின் நீரில் கரைத்த உப்பினை போன்று எடுத்து கொண்டால் அவ்வுணர்வு மிக சாதாரணமாக அமையும் என தம்மிடம் பயிலவந்த இளம் பயிற்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான வழிமுறைகள்


ஒரு நிறுவனம் எந்த அளவிற்கு தம்முடைய ஊழியர்களின் உற்பத்தி திறன் உள்ளது என அறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களின் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான அல்லது மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு ஒரு நிறுவனத்தின் ஊழியர்களின் உற்பத்தி திறனை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்

1.முதல் வழிமுறையாக தம்மிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவ்வப்போது நேரடி பணியில் பயிற்சி ,வகுப்பறை பயிற்சி, இணையத்தின் மூலம் பயிற்சி, கல்விச்சுற்றுலா அழைத்து செல்லுதல் ஆகியவற்றை அளித்தால் ஒருநிறுவனத்தின் வெற்றி ஏறுமுகமாக அமையும்

2. தம்முடைய ஊழியர்களை அவரவர்கள் சார்ந்த தொழில் நுட்பக் குழுக்களில் உறுப்பினராக சேரச்செய்து அதற்கான ஆண்டு சந்தா தொகையை நிறுவனமே செலுத்துமாறு செய்திடும்போது ஊழியர்கள் அவ்வாறான தொழில்பக்குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு புதுப்புது ஆலோசனகள் கருத்துகள் உருவாகி ஒருநிறுவனத்தின் உற்பத்திறன் உயர ஏதுவாக அமையும்

3. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து ஒரு நிறுவன்த்தில் ஏற்பாடு செய்துள்ள விருந்து கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொள்ளுமாறு செய்திடும்போது அவர்களின் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் ஏற்படுகின்றது அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஊழியரும் அதற்கேற்ப தம்முடைய பணியை புது உத்வேகத்துடன் செய்துவர காரணமாகின்றது

4. ஒரு நிறுவனத்தில் அதிக உற்பத்தி செய்பவர்களுக்கு பரிசு அளித்தல் தொடர்ந்து விடுப்பு ஏதுவும் துய்க்கமால் தம்முடைய பணிக்கு வரும்ஊழியர்களுக்கு பரிசளித்தல் இவ்வாறான பரிசை ரொக்கமாக அளித்தல் என்பன போன்ற நவடிக்கைகளால் ஒரு நிறுவனத்தின் உற்பத்திறன் உயர வாய்ப்பு ஏற்படுகின்றது

5. ஒவ்வொரு மாதமும் அல்லது வாரமும் தொழில்நுட்ப கருத்தரங்குகள் ,குறிக்கோளை அடைவதற்கான சொற்பொழிவு கூட்டங்களை ஏற்பாடு செய்தல் அவ்வாறான நிகழ்ச்சியை நடத்துதல் இவ்வாறான கருதரங்குகளில் ஊழியர்களும் தம்முடைய கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பினை அளித்தல் என்பன போன்ற நிகழ்வுகள் ஒருநிறுவனத்தின் உற்பத்திறன் உயருவதற்கான மறைமுக காரணிகளாக அமைகின்றன

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

மைக்ரோ ஓவனில் சமையல் செய்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்


மைக்ரோ ஓவன் அடுப்பிலும் சாதாரண அடுப்பிலும் தனித்தனியாக தண்ணீரை கொதிக்கவைத்து ஆறவைத்தபின் இருஒரேமாதிரியான செடிகளுக்கு தினமும் ஊற்றிவந்து சிறிதுகாலம் கழித்து பார்வையிட்டால் அவ்விரண்டில் மைக்கரோஓவன் அடுப்பில் சூடுசெய்து ஆறிய தண்ணீரை ஊற்றிய செடியானது வாடிதங்கி இன்றோ நாளையோ என்றிருப்பதை காணலாம்

ஆனால் சாதாரண அடுப்பில் கொதிக்கவைத்து ஆறிய தண்ணீரை ஊற்றிய செடியானது வாடிவதங்காமல் நன்கு உயிருடன் இருப்பதை காணலாம் தாவரங்களுக்கே இந்த நிலையெனில் மைக்ரோ ஓவன் அடுப்பில் சமையல் செய்து சாப்பிடும் மனிதர்களின் உடலவ்நிலை என்னவாகும் என யோசித்து பாருங்கள் நண்பர்களேஇதனால் பின்வரும் மறைமுக விளைவுகள் ஏற்படும்

1தாதுக்கள்,விடடமின்கள்,சத்துபொருச்கள் குறைந்துபோகும் அல்லது தன்மை மாறியமையும்

2 காய்களில் உள்ள சத்துகள் மாறிவிடும்

3 மனிதர்களின் செரிமான வாயில்களான குடல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பாக அமைகின்றது

4 இரத்தபுற்றுநோயேஉருவாவதற்கு கூட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன

5 மனிதனின் நோய்எதிர்ப்பு சக்தியும் அறவே இல்லாமல் போக ஏதுவாக அமைகினdறது

மனிதனின் நினைவகத்திறன் குறைந்து போகவும் ஒருமுகதன்மை மறையவும் புத்திசாலி தனம் அறவே இல்லாமல் போகவும் வாய்ப்பாக அமைகின்றன

அதனால் இன்றே மைக்ரோ ஓவனில் சமையல் செய்து சாப்பிடுவதை முதலில் விட்டுவிடுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

வெள்ளி, 30 நவம்பர், 2012

முயன்றால் முடியாதது இல்லை


தவளைகளின் குழுவொன்று தாங்கள் வாழும்இடத்தில் போதுமான உணவு கிடைக்காததால் வேறு இடம்நோக்கி சென்றுகொண்டிருந்தன அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது இரண்டு தவளைகள் மட்டும் வழியில் இருந்த மிகஆழமான ஒரு கிணற்றில் தவறிவிழுந்து விட்டன

மற்ற தவளைகள் அனைத்தும் "அவ்வளவுதான உங்களிருவரால் இந்த கிணற்றிலிருந்து மேலேஏறிவரமுடியாது அதனால் இதில் கிடைக்கும் உணவை உண்டு உங்கள் வாழ்நாளைஇதிலேயே முடித்துகொள்ளுங்கள்" என அறிவுரைகூறின

கினற்றிற்குள் விழுந்த தவளைகளுள் ஒன்றுமட்டும் நமக்கு விதித்தது அவ்வளவுதான் என உணவை தேடிபார்த்து கிடைக்காமல் பட்டினியாகவும் மேலே ஏறுவதற்கு முயற்சியின்றியும் சோம்பி அப்படியே உயிர்விட்டது

ஆனால் மற்றொரு தவளையோ கடுமையான முயற்சிசெய்து மேலே ஏறிவருவதற்காக எகிறி எகிறி குதித்து பார்த்தது மேலே தரையில் இருந்த தவளைகள் "ஏன் வீனாக உன்னுடைய உடலை வருத்திகொள்கின்றாய் மற்ற தவளைபோன்று அப்படியே இந்த கிணற்றிற்குள் கிடந்து சாகவேண்டியதுதானே" என ஒரேகூச்சலிட்டன ஆயினும் உயிருடன் கினற்றிற்குள் இருந்த தவளை மடடும் இந்த அறிவுரை எதனையும் கேட்டுகொண்டு சும்மா இல்லாமல் பகீரதபிரயத்தனம் செய்து கடுமையாக முயன்று தாவிகுதித்து ஒருவழியாக கரையேறிவிட்டது

உடன் "நாங்கள் கூச்சலிட்டுது எதுவும் உனக்கு கேட்கவில்லையா?" என அனைத்து தவளைகளும் வினவியபோது

"என்னுடைய கவனம்முழுவதும் எவ்வாறு வேலேஏறிவருவது என்பதில் மட்டுமே குறியாக இருந்ததால் எனக்கு நீங்கள் அனைவரும் கூறிய சொற்கள் எதுவும் சுத்தமாக என்னுடைய காதில் கேட்கவில்லை " என பதில் கூறிதன்னுடைய உணவை தேட சென்றது

ஆம் நம்முடைய குறிக்கோளில் அல்லது செயலில் முழுக்கவனமும் செலுத்தினால் நாம் எளிதில் வெற்றிபெறமுடியும் என இதிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு


நான் சிறுவயதாக இருக்கும்போது ஒருநாள் இரவு சாப்பாட்டில் எங்களுடைய அம்மா தண்ணீர்இல்லாமல் வற்றி சிறிது அடிபிடித்த சோற்றினை எங்களுடைய அப்பாவின் தட்டில் இட்டு சாம்பார் ஊற்றியிபின் “இன்று சோற்றினை சமைக்கும்போது கவனக்குறைவாக அரிசியின் அளவிற்கேற்ப தண்ணீர் ஊற்றிவைக்காமல் சிறிது குறைவாக ஊற்றி வைத்துவிட்டதால் சோறு அடிபிடித்துவிட்டது இன்று ஒருநாள் மட்டும் பொறுத்தருளவேண்டும்” என மிகப்பணிவுடன் கேட்டுக்கொண்டார்

.உடன் எங்களுடைய அப்பா “அடடா அப்படியா ஆகிவிட்டது பரவாயில்லை வறுத்தசோறும் உடலுக்கு நல்லதுதான் நாங்கள் சாப்பிடுகின்றோம் இந்நிகழ்வைபற்றி வருத்தபடாதே கவலையும் படாதே அதற்காக உன்னிடம் சண்டையிட்டேனா உடன் நீயும் சாப்பிட்டுவிட்டு போய் வேறு வீட்டுபணியிருந்தால் அதையும்முடித்து விரைவில் இரவு தூங்க செல்” என அன்புடன் கூறினார்.

அதோடு அல்லாமல் அந்த அடிபிடித்த சோறுமற்றவர்களின் தட்டுகளில் இருக்கின்றதாவென தேடிபிடித்து அவையனைத்தையும் சேகரித்து தன்னுடைய தட்டில் வைத்துகொண்டு மிகஇரசித்து சாப்பிட்டபின் கைகழுவினார்

பின்னர் நாங்கள் அனைவரும் அவரவர் அறைகளில் படுத்து உறங்க சென்றோம் நான் எப்போதும் இரவு சாப்பாடிற்கு பிறகு அப்பாவிற்கு அருகில் தினமும் படுத்துகொண்டு ஏதனுமொரு கதையை கூறும்படி கேட்டு மகிழ்ந்தபின் என்னுடைய படுக்கைக்கு சென்று படுத்துஉறங்குவது வழக்கமாகும்

அவ்வாறே அன்றிரவும் அப்பாவிடம் சென்று கதை கூறும் படி கேட்பதற்கு பதிலாக “அடிபிடித்து சோறுகருகியதற்காக அம்மாவை திட்டாமல் எவ்வாறு அடிபிடித்து கருகிய சோறு அனைத்தையும் சேகரித்து மிகஇரசித்து உங்களால் சாப்பிடமுடிந்தது” என ஆற்றுபடுத்தமுடியாமல் கேட்டபோது எங்களுடைய அப்பாவானவர் “ஏன் இன்று நல்ல கதை வேண்டாமா “என கேட்டார் “கதையெல்லாம் நாளை கேட்டுகொள்கின்றேன்

இன்று எவ்வாறு உங்களால் இவ்வாறு நடக்கமுடிந்தது என முதலில் தெரியவேண்டும்” என நான் அடம்படித்ததால். “அடடா அதெல்லாம் பெரியவர்களின் பணியாயிற்றே இருந்தாலும் உனக்கு கூறுகின்றேன்

நல்லது ,உங்களுடைய அம்மா பகல்முழுவதும் நமக்காக மாடாக உழைக்கின்றாள் அவ்வாறு உழைத்து சோர்வுற்ற நிலையில் இரவு உணவு தயார்செய்யும் போது தவறுதலாக அரிசிக்கு தேவையானஅளவைவிட சிறிது குறைவாக தண்ணீர் இட்டு சோற்றினை சமையல் செய்ததால் கொஞ்சமாக தீய்ந்து விட்டது அதனால் மிகுதி சோற்றுக்கு பாதிப்பெதுவுமில்லையே

உனக்கு தெரியுமா நம்முடைய வாழ்வில் எப்போதும் நம்மால் மிகச்சரியாக நடந்துகொள்ளமுடியாது ஏதேனுமொரு சந்தர்பத்தில் ஏதாவதொரு சிறியதவறு நம்முடைய செயலில் நடைபெற ஏராளமான வாய்ப்புள்ளன

அந்நிலையில் செய்த நல்லசெயலையெல்லாம் விடுத்து அவ்வாறான சிறிய தவறை மட்டும் பெரியதாக்கி வாழ்க்கையையே சண்டை சச்சரவு என போராட்டகளமாக மாற்றக்கூடாது

மேலும் இந்த புவியில் நம்முடைய இருப்போ மிகமிகச்சிறிய காலஅளவே அதனால் நாம் இருக்கும்வரை மற்றவர்களுக்கு அதிகம் தொந்தரவு ஏதும் தராமலும் மற்றவர்கள் ஏதேனும் ஒருசில தவறுசெய்தால் அதனை திருத்தி செய்வதற்கு வாய்ப்பளித்து வாழ்க்கையை இனிமையான அனுபவமாக கொண்டு செல்லவேண்டும

இவ்வாறு நாம் நடந்து கொண்டால் நம்முடைய வாழ்வு அமைதியாக தெளிந்த ஆற்றின் நீரோட்டம் போன்று செல்லும் நம்முடைய வாழ்வில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் அதனை அப்படியே நமக்கு கிடைத்ததை நம்முடைய அடுத்த வெற்றிக்கு அடித்தளமாகவும் படிக்கட்டாகவும் படிப்பினையாகவும் பயன்படுத்தி நம்முடைய வாழ்வின் அடுத்த கட்ட செயலிற்கு செல்வதற்கு தயாராக வேண்டும்

இதனால் கணவன் மனைவி உறவு மட்டுமல்லாமல் பெற்றோர்கள் பிள்ளைகளின் உறவும் , நண்பர்களின் உறவும் பல்கிபெருகி நம்முடைய வாழ்வு வளம் பெறும் போய் உன்னுடைய படுக்கையில் படுத்து அமைதியாக உறங்கு” என அறிவுரை கூறினார்.

புதன், 21 நவம்பர், 2012

உத்திரவாதத்திற்கும்(guarantee) உறுதியளிப்பிற்கும்(Warranty) இடையிலான வேறுபாடு


உத்திரவாதம்(guarantee) இது ஏதனுமொரு பொருளை கொள்முதல் செய்திடும்போது வழங்கபடும் ஒரு ஆவணமாகும் இதன்மூலம் குறிப்பிட்ட பொருளை கொள்முதல் செய்து பயன்படுத்திவரும்போதும் குறிப்பிட்ட காலம் வரை ஏதேனும் பிரச்சினை எழுந்தால் உடன் உற்பத்தியாளர் அப்பொருளிற்கீடாக வேறொரு புதிய பொருளை மாற்றியளிப்பதாக கூரும் உத்திரவாத கடிதமாகும்

இந்த உத்திரவாத ஆவணமானது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு ஆவணமாகும் இந்த ஆவணத்தை கொண்டு நுகர்வோர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்றுகுறிப்பிட்ட பொருளை நீதிமன்ற செலவின்றி அல்லது நீதிமன்ற செலவுடன் பெறுவதற்கு ஆதாரமாக விளங்குகின்றது இந்த உத்திரவாதகடிதமானது உற்பத்தியாளர் மட்டுமே வழங்குவார்

உறுதியளிப்பு(Warranty) இது ஒரு நுகர்வோருக்கு தன்னுடைய உரிமையை நிலைநாட்டிட உதவிசெய்வதற்காக குறிப்பிட்ட பொருள் சரியாக உள்ளது எனக்காட்டிடும் ஆதாரக்கடிதமாகும் இதனை விற்பனையாளர் நுகர்வோருக்கு ஒரு பொருள் விற்பனையாகும்போது அதனோடு அந்த பொருள் சரியாக உள்ளது என உறுதிஅளிப்பதற்கான கடிதமொன்றை அளிப்பார் இது ஏறத்தாழ ஒரு காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் உத்திரவாதம் போன்றதாகும் குறிப்பிட்ட காலம்வரை அப்பொருளை பயன்படுத்திடும் போது குறிப்பிட்ட வரைமுறைக்குள் ஏற்படும் பழுதுகளைமட்டும் சரிசெய்து நன்கு இயங்குமாறு செய்வதற்கான உறுதிமொழிகடிதமாகும்

உத்திரவாதமும் உறுதியளிப்பும் நுகர்வோர் நலனைகாப்பதற்கான ஆவணங்களே உத்திரவாதம் ஆனது உற்பத்தியாளரால் வழங்கபடுவதாகும் உறுதியளிப்பு விற்பனையாளரால் வழங்கபடுவதாகும்

உத்திரவாத்தத்தில் ஒருநுகர்வோர் தாம் கொள்முதல் செய்த பொருளிற்கீடான பணம் அல்லது புதிய பொருள் ஒன்றினை திரும்ப பெறமுடியும் ஆனால் உறுதியளிப்பின்போது குறிப்பிட்ட பொருள் உறுதியளித்த காலம் வரை மட்டும் இயங்கவில்லை எனில் அதனை பழுதுநீக்கம்மட்டும் செய்து இயங்கசெய்வார்

ஞாயிறு, 18 நவம்பர், 2012

எந்தவொரு செயலையும் அமைதியாக கூர்ந்து கவனித்தால் நம்மால் அதில் வெற்றிகொள்ளமுடியும் வீண் ஆரவாரமும் அவசரமும் வெற்றிகொள்ள தடைகற்களாகும்


விவசாயி ஒருவர் தன்னுடைய கையில் கட்டியிருந்த கைகடிகாரத்தை அவருடைய தானிய கிடங்கில் தவறவிட்டுவிட்டார் அதனை மிகமுக்கியமான நபரின் நினைவாக அவருடைய கையில் கட்டியிருந்தார் அதனால் அதனை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்திட வேண்டுமென விரும்பி ,”அதனை தேடிகண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க பரிசு அளிக்கப்படும்” என அறிவித்தார்

உடன் ஏராளமான நபர்கள் அவருடைய தானிய கிடங்கிற்குள் புகுந்து குறுக்கும் நெடுக்குமாக அலைந்து தேடினார்கள் அந்த கைக்கடிகாரம் மட்டும் யாருக்கும் கிடைக்கவேயில்லை அனைவரும் சோர்வுற்று வெறுங்கையுடனே திரும்பி சென்றனர்

ஒரு சிறுவன் “தான் அந்த தேடுதலை செய்யட்டுமா “என அவரிடம் அனுமதி கேட்டான் “அதற்கென்ன தாராளமாக தேடிகண்டுபிடித்து கொடு” என அவனுக்கு அனுமதிஅளித்தார்

அச்சிறுவன் அவருடைய தானிய கிடங்கிற்குள் சென்று ஒருசில நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக அவருடைய தொலைந்துபோன கைக்கடிகாரத்தை எடுத்துவந்து அவரிடம் கொடுத்தான்

“என்ன ஆச்சரியம்! தம்பி! இவ்வளவு நபர்கள் என்னுடைய தானிய கிடங்கு முழுவதையும் தேடிகிடைக்காததை ஒருசில நிமிடங்களில் உன்னால் எவ்வாறு தேடிக்கண்டுபிடித்து எடுத்துவரமுடிந்தது?” என வினவியபோது “அதுஒன்றும் பெரிய சிக்கலான தீர்வு இல்லை ஐயா மற்றவர்கள் ஆரவாரத்தோடு தேடியபோது நான் அமைதியாக இருந்து கவணித்தேன் அப்போது கைக்கடிகாரம் இயங்கிடும் ஒலி என்னுடைய காதிற்கு மட்டும் கேட்டது அந்த ஒலி வந்த திசையில் சென்று எடுத்துவந்தேன்” என்று கூறினான்

அதாவது எந்தவொரு செயலையும் அமைதியாக கூர்ந்து கவணித்தால் நம்மால் அதில் வெற்றிகொள்ளமுடியும் வீண் ஆரவாரமும் அவசரமும் வெற்றிகொள்ள தடைகற்களாகும் என்பதே இதிலிருந்த நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும்

வெள்ளி, 16 நவம்பர், 2012

திறமைசாலியான மதிப்புமிக்க ஊழியர்கள் யார் என அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்தல்


ஒரு நிறுவனத்தில் புதியதாக பணியில் சேர்ந்த இளம் ஊழியர்களில் சிலர் தாம் பெறும் ஊதியத்திற்கேற்ற அளவிற்கு மட்டும் தம்முடைய கடமையை ஆற்றினால் போதும் என இல்லாமல் தமக்கு வழங்கபடும் ஊதியத்தின் அளவைவிட மிக அதிகஅளவில் செயல்பட்டு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தினுடைய வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்கா கவும் மிகத்திறனுடன் ஆர்வுமுடன் தங்களுடைய உழைப்பை பங்களிப்பை நல்குவார்கள் .

முதலில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அவ்வாறான திறமைசாலியான மதிப்புமிக்க ஊழியர்கள் யார் என அடையாளம் கண்டு அவர்களின் திறன்மிகு பங்களிப்பை அங்கீகரித்து ஊக்குவித்து அவர்களின் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான வசதி வாய்ப்புகளை அளித்து அவ்வாறான ஊழியர்களே மற்றவர்களுக்கு எடுத்தகாட்டாக விளங்கும்படி அனைவருக்கும் அறிவித்து மற்றவர்களும் தம்மிடம் மறைந்துள்ள திறன்களை வெளிக்கொணர்ந்து அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பாடுபடுமாறான ஊக்குவிப்பு சூழலை ஏற்படுத்திடவேண்டும்

இவ்வாறான தனிநபர்களிடம் ஊழியர்களிடம் கவனிக்கவேண்டிய பின்வரும் மூன்று பண்புகள் உள்ளன:

1.அவர்கள் ஒரு செயலின் முடிவில் மட்டுமே கவனம். செலுத்துவார்கள் ஏனெனில் அவர்கள் ஒரு செயலிற்கான செயல்முறைகளை காட்டிலும் அதன் இறுதி விளைவுகள் மிகச்சரியாக வரவேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திடுவார்கள்,

2.அவர்கள் ஒவ்வொரு செயலிற்காகவும் ஏற்படுத்தபட்டுள்ள விதிகளை உடைத்தெறிந்திடுவார்கள் ஆயினும் அவர்கள் அதற்காக நிருவாகத்திற்கு எதிராக கட்டுக்கடங்காத கலகமோ போராட்டங்களையோ செய்திடமாட்டார்கள்

3.அவர்களுக்கு இளையவர்கள் என்ற முதுநிலை வரிசையின் பெயரிருந்தாலும் அவர்கள் தம்முடைய தனிமனித திறமை யினாலும் நட்சத்திர செல்வாக்கினாலும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிடுவார்கள் மேலும் அவர்கள் மற்றவர்களையும் தம்மோடு ஒருங்கிணைப்பதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஆன சூழலை உருவாக்கிடுவார்கள் .

அவர்கள் தம்முடைய நிறுவனத்திற்கான அதிக நம்பகத்தன்மையை நிரூபித்திடுவார்கள் . மேலும் அவர்களின் நடவடிக்கைகளும் சொற்களும் எப்போதும் மாறாதஒரே நிலைத்த தன்மையுடையதாக இருக்கும்

நிருவாகச்சிக்கல் ஏதேனும் எழுகின்ற சூழ்நிலையில் வழக்கமான நிருவாக தலைவர்களைவிட இவ்வாறான துடிப்புமிக்க செயல்திறன் கொண்ட ஊழியர்களின் செயல் எவ்வாறு வழிகாட்டியாக அமைய போகின்றது என அனைவரின் கவனமும் இவ்வாறானவர்களின் மீதே இருக்கும்

செவ்வாய், 13 நவம்பர், 2012

நம் ஒவ்வொருவருக்கும் ஒருமதிப்பு, தனித்தன்மை உள்ளது. அதன் மதிப்பு எப்போதும் மாறாது


மேடைபேச்சாளர் ஒருவர் தம்முடைய பேச்சினிடையே ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை தம்முடைய பையிலிருந்து கையில் எடுத்துகொண்டு தம்முன் அமர்ந்து தம்முடைய பேச்சினை கேட்டுகொண்டிருக்கும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

உடன் அந்த ஆயிரம் ரூபாய் தாளை கசக்கி அருகில் தரையில் கிடந்த ஒருசிறுகல்லின் மீது அதனை சுற்றி மீண்டும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மீண்டும் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

அதன்பின் அவ்வாறு சிறு கல்லில் சுற்றபட்ட அந்த தாளை மேலும் நன்கு கசக்கி தரையில் வீசிஎறிந்த பின் மீண்டும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மீண்டும் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

பிறகு “நன்கு கவணியுங்கள் பார்வையாளர்களே! இந்த ஆயிரம் ரூபாய்தாளானது, என்னதான் கசக்கினாலும சுருட்டி வீசிஎறிந்தாலும் அதனுடைய மதிப்பு எப்போதும் மாறவில்லை அல்லவா?

அவ்வாறே நம் ஒவ்வொருவருக்கும் ஒருமதிப்பு, தனித்தன்மை உள்ளது. அது என்னதான் நம்மை கசக்கி பிழிந்தாலும், அடித்து துவைத்தாலும் ,எந்தவொரு துன்பம் அல்லது கஷ்டம் நமக்கு வந்தாலும், நம்முடைய ஒவ்வொருவரின் தனித்தன்மையும் மதிப்பும் மாறாதவையாகும்.

அதனை பேணிக்காத்து நல்வழியில் பயனபடுத்திகொள்வது நம் ஒவ்வொருவரின் அடிப்படை கடமையாகும்” என கூறி தன்னுடைய பேச்சினை முடித்தார்

வியாழன், 20 செப்டம்பர், 2012

வருகின்ற எந்தவொரு வாய்ப்பையும் தக்கவைத்து கொள்க


இளைஞன் ஒருவன் ஒரு விவசாயின் வீட்டிற்கு சென்று அவருடைய மகளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினான் உடன் அந்த விவசாயி ஆனவர்

“நல்லது தம்பி என்னுடைய மாட்டு கொட்டிலில் இருந்து மூன்று காளைமாடுகளை இந்த திறந்த வெளியில் அவிழ்த்து விடுகின்றேன் நீ அவைகளில் ஏதாவதுஒன்றினுடைய வாலைமட்டும் பிடித்தால் நான் கண்டிப்பாக என்னுடைய மகளை உனக்கு திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்” என கூறினார்

அதற்கு அவ்விளைஞனும் சம்மதம் தெரிவித்தவுடன் மறுநாள் காலையில் அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து காளை மாடுஒன்றை திறந்து விட்டார்

வெளியேறிய மாடானது நீண்ட கொம்புடனும் உயரமான திமிளுடனும் ராஜநடையாக வந்தது உடன் அவ்விளைஞன் இதனை நம்மால் பிடிக்கமுடியாது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது அதனால் இதற்கடுத்ததாக வரும் காளையின் வாலை பிடித்துவிடுவோம் எனமுடிவுசெய்து ஓரமாக ஒதுங்கி அந்த காளை செல்வதற்கு வழிவிட்டான்

அதற்கடுத்ததாக அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து இதற்கு முன் பார்த்தயிராத மிகவலுவான மிகமுரட்டு காளையொன்று சிங்கம் போன்று பாய்ந்து வெளிவந்தது இதனையும் நம்மால் பிடிக்கமுடியாது இதுவும் நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது அதனால் இதற்கடுத்து மூன்றாவதாக வரும் காளையின் வாலை எப்படியாவது பிடித்துவிடுவோம் எனமுடிவுசெய்து ஓரமாக ஒதுங்கி அந்த காளை செல்வதற்கு வழிவிட்டான்

மூன்றாவதாக அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து இதற்கு முன் பார்த்தயிராத மிகநோஞ்சான்போன்ற காளை வெளியில் வந்தது ஆகா இதற்காகத்தான் இதுவரையிலும் நாம் காத்திருந்தோம் இதனுடைய வாலை மிகஎளிதாக பிடித்து வெற்றிகொள்வோம் என முடிவுசெய்து அந்த நோஞ்சான் காளை தனக்கு அருகில் வரும்வரை காத்திருந்து அருகில் வந்தவுடன் அந்த காளையின் அருகில் சாதாரணமாக சென்று அதனுடைய வாலை பிடிக்கலாம் என முயற்சி செய்தபோது என்ன ஆச்சரியம் அந்த நோஞ்சான் காளைக்கு வாலே இல்லை

அவ்விளைஞன் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறிவிட்டான்

அதாவது நம்முடைய வாழ்க்கையில் எதிர்வரும் எந்தவொரு முதல் வாய்ப்பையும் பின்னர் வருவது இதைவிட நல்லவாய்ப்பாக இருக்கும் என நழுவவிடாமல் அந்தவொரு வாய்ப்பு மட்டுமே நாம் முன்நோக்கி செல்ல கிடைத்த ஒரேவாய்ப்பு வேறு வாய்ப்பே இல்லையென முயற்சி செய்து அதில் வெற்றிபெற பாடுபடவேண்டும் இல்லையெனில் எந்தவொரு வாய்ப்பும் நமக்கு கிடைக்காது போய்விடும் என்பதை மனதில் கொள்க

திங்கள், 10 செப்டம்பர், 2012

பணியாளர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல்


மடிக்கணினிகளின் திரையில் கீழ்பகுதியில் உள்ள பட்டியின் வலதுபுறம் சிறு உருவபொத்தான் ஒன்று அம்மடிக்கணினிக்கான மின்கலனின் மின் திறன் அளவை குறிப்பிட்டு பிரதிபலிக்கும் அதில் அம்மின்கலனுடைய மின் திறன் அளவு 25% வரை வெண்மையாக இருந்த உருவபொத்தானின் வண்ணமானது 25% ஐ விட குறையும்போது ஆரஞ்சு வண்ணமாக மாறிவிடும், மேலும் 10% ஆக குறையும் போது சிவப்பு வண்ணமாக மாறி இன்னும் 10 நிமிடம் மட்டுமே மின்கலனில் இருக்கும் மின்திறன் போதுமானதாக இருக்கும் என நம்மை எச்சரிக்கும் உடன் அம்மின்கலனிற்கான மின்வழங்கிடும் இணைப்பை ஏற்படுத்திடவில்லையெனில் மடிக்கணினியின் இயக்கம் தானாகவே நின்றுவிடும்

அவ்வாறே ஒவ்வொரு நிறுவனத்தின் மேலாளரும் தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு தக்கநடவடிக்கையை மேற்கொண்டு செயற்படுத்தினால் மட்டுமே அப்பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பணித்திறன் தொடர்ந்து வெளிப்படும் அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் செயல்திறனும் மேம்படும். அதனால் ஒவ்வொரு மேலாளரும் தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

1. ஒருநிறுவனம் வெற்றிபெறுவதற்கு பணியாளர்களுக்கு போதுமான பயிற்சியை அவ்வப்போது அளித்தல் என்பது மிக முக்கியமான அடிப்படை நடவடிக்கையாகும் நீண்டகாலம் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பணியில் சேர்ந்தபேது அவர்களுக்கு இருக்கும் தகுதிகளை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்திடவேண்டியது அவசியமாகும் அதனால் வகுப்பறை பயிற்சியாகவோ நேரடிபயிற்சியாகவோ இணையத்தின்மூலமான பயிற்சியாகவோ அவ்வப்போது அவர்களுக்கு அளித்து பணியாளர்களின் திறனை புத்தாக்கம் செய்துகொள்வது நல்லது

2 ஒரு மேலாளர் தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தொழில்நுட்ப சம்மேளனங்களில் உறுப்பினராக சேரும்படியான சூழலை ஏற்படுத்தி அதற்கு ஆண்டு சந்தாவை தம்முடைய நிறுவனமே செலுத்திடுமாறு செய்திடும்போது அந்த தொழிலாளர்கள் திருப்தியுற்று தம்முடைய தொழில்நுட்ப சம்மேளனங்களின் மூலம் தமக்கு கிடைக்கும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும் ஆலோசனைகளையும் தம்முடைய நிறுவனத்தில் செயல்படுத்திடும் நிலைஏற்படும் அதன்மூலம் அந்நிறுவனத்தின் வளர்ச்சி உறுதியாக இருக்கும்

3. பணியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணையச்செய்து செய்து கல்விசுற்றுலா செல்லுமாறு செய்தல், விளையாட்டு போட்டி நடத்துதல், நாடகம்,பாட்டுபோட்டி, பேச்சுபோட்டி நடத்துதல் என்பன போன்ற நடவடிக்கைகளை ஒரு நிறுவனத்தில் செயற்படுத்திடவேண்டும் மேலும் இந்த நிகழ்வுகளில் பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு செய்தல் மறைமுகமாக அந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகும்

4. பணியாளர்கள் அனைவருக்கும் அவரவர்கள் அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்டு செயல்படுமாறு அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தபின் அவர்களுள் அந்த இலக்கை அடைபவர்களுக்கு மட்டும் அவர்களின் செயலை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மற்ற பணியாளர்களும் அவ்வாறு செயற்படுவதற்கான தூண்டுதல் ஏற்பட்டு அந்நிறுவனத்தின் உற்பத்தி திறன் மேம்படுத்துவதற்கான சூழல் ஏற்படுகின்றது

5.தற்போதைய புதிய தொழில்நுட்பம் ,புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை சார்ந்த புத்தாக்க வகுப்புகளை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை பணியாளர்களுக்கு நடத்துவது, பணியாளர்களுள் சிறந்த புத்தாக்கம் நிறைந்த பணியாளர்களை இந்த வகுப்புகளில் தம்முடைய கருத்துகளை மற்ற பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறான வாய்ப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கையின்மூலம் ஒருநிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்தமுடியும்

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது


சுன்டெலி ஒன்று ஒருகிராமத்தில் உள்ள ஒரு குடியானவன் வீட்டில் அதிக தொல்லை கொடுத்துவந்தது அதனால் அக் குடியானவன் இந்த சுன்டெலியை ஒழித்து கட்டவேண்டுமென புதிய எலிப்பொறியை கடையில் வாங்கிவந்து பையிலிருந்து அதனை அவிழ்த்து தன்னுடைய மனைவியிடம் காட்டினார்

முதலில் இதனை கண்ட சுன்டெலியானது “இதுஏதோ புதிய வகையான உணவுப்பொருள் போலும் இன்று இரவு நமக்கு நல்ல வேட்டைதான் “என எண்ணியது ஆனால் அதனை முழுவதுமாக பார்த்தபிறகுதான் “அய்யய்யோ ! இது நம்மை வேட்டையாடுவதற்காக வந்துள்ள எலிப்பொறி ஆயிற்றே” என பயந்து அலறியடித்து கொண்டு “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!”, “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!” எனக்கூவிக்கொண்டே ஓட்டம் பிடித்தது

இவ்வாறு இந்த சுன்டெலியானது பயந்து நடுங்கி கூவிக்கொண்டு ஓடுவதை கண்ணுற்ற அக்குடியானவன் வீட்டில் வளர்ந்து வரும் கோழியானது “ஏய்! சுன்டெலியே! அது உன்னை பிடித்து ஒழிப்பதற்காக வந்துள்ள எலிப்பொறி தானே தவிர, எங்கள் இனத்திற்கு அதனால் பாதிப்பெதுவும் ஏற்படாது, அதனால் வாயை மூடிக்கொண்டு தூரப்போ” என அந்த சுண்டெலியை விரட்டியடித்தது

அந்த சுன்டெலி மீண்டும் “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!”, “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!” எனக் கூவிக் கொண்டே வேறு இடத்திற்கு சென்றது

அந்த குடியானவன் வீட்டில் வளரந்து வந்த வெள்ளாடு ஆனது “டேய் சுன்டெலியே! அந்த எலிப்பொறியை குடியானவன் வாங்கி வந்துள்ளதால் உனக்கு மட்டும் தான் பாதிப்பு வருமேயொழிய எங்களுடைய இனத்திற்கு பாதிப்பு ஏதுவும் ஏற்படாது ,அதனால் முதலில் இவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்” என்று விரட்டியடித்தது

இதற்கு மேல் நமக்கு ஆதரவாக யாருமே இல்லையே என்ன செய்வது என பரிதவித்து அந்த சுன்டெலியானது மிக எச்சரிக்கையாக அந்த குடியானவன் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் மேல்பகுதியிலுள்ள பரன்மீது ஏறி ஒருமூலையாக சென்றமர்ந்து கொண்டது

அன்று நள்ளிரவில் எலிப்பொறிக்குள் ஏதோ மாட்டிக்கொண்ட சத்தம் கேட்டது உடன் அக்குடியானவனுடைய மனைவியானவள் “எலிப்பொறியில் சுண்டெலி மாட்டிகொண்டது இனி அந்த சுண்டெலியனுடையை தொல்லை ஒழிந்தது” என இருட்டில் இது சுன்டெலியின் வாலாகத்தான இருக்கும் என கைவைத்து பிடிக்க ஆரம்பிக்கும்போது அதில் மாட்டியிருந்த பாம்பானது அக்குடியானவனின் மனைவியை கடித்து விட்டது

உடன் குடியானவன் கடித்தது பாம்பென தெரிந்துகொண்டு உடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவருடைய மனைவியை அழைத்து சென்றார் அங்கிருந்த மருத்துவர் உடனடியாக தேவையான மருத்துவ உதவியை செய்து “வீட்டிற்கு சென்று கோழியை சூப்பாக செய்து அருந்த செய்தால் பாதிப்பு குறையும்” என அறிவுரைக்கூறினார்

அவ்வாறே அக்குடியானவன் அவருடைய வீட்டில் வளர்ந்துவந்த கோழியை கொன்று சூப்செய்து தன்னுடைய மனைவி அருந்திடுமாறு செய்தார் ஆனாலும் பாதிப்பு குறையவில்லை

அதனை கண்ட அருகிலிருந்த உற்றார் உறவினர் “வெள்ளாட்டு சூப் செய்து கொடுத்தால் குணமாகிவிடும்” என அறிவுறுத்தியதால் அவ்வாறே அவருடைய வீட்டில் வளர்ந்து வந்த வெள்ளாட்டினை கொன்று சூப் செய்து கொடுத்தார்

இவையனைத்தையும் கண்ணுற்ற அந்த சுன்டெலியானது தப்பித்தோம் பிழைத்தோம் என அடுத்தகுடியானவன் வீட்டிற்கு சென்றுவிட்டது

இந்த கதையிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் “எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதனால் மற்றவர்கள் தானே பாதிப்படைகின்றனர் நமக்கு அதனால் நேரடியாக பாதிப்பெதுவும் ஏற்படாது என அலட்சியமாக இருந்திட வேண்டாம் எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் நாமும் எச்சரிக்கையாக இருந்திடவேண்டியது அவசியமாகும்” என்பதே

புதன், 29 ஆகஸ்ட், 2012

மேலாண்மை பாங்குகள்அல்லது பாணிகள்


1 ஊழியர்களைவிட துரிதமாக செயல்படும் மேலாளர்கள் இந்த வகை மேலாளர்கள் ஊழியர்கள் கூறுவதை அரைகுறையாக கேட்டு அவர்கள் கூறி முடிப்பதற்கு முன்பே தவறாக புரிந்து கொண்டு அவர்களை அதற்கேற்ப நடத்துவார்கள்.

2.எப்போதும் ஜன்னல் வழியாக வெளியே வெறித்து பார்த்து கொண்டிருக்கும் மேலாளர் இந்த வகை மேலாளரிடம் பணியாளர்கள் தம்முடைய குறைகளை கூறி அதனைநிவர்த்திசெய்வதற்கான உத்திரவு வேண்டி அவர்கள் முன்பு நின்றிருந்தால் எதிரே இருக்கம் அப்பணியாளரை நேருக்கு நேர் பார்க்காமலும் அவர்கள் கூறுவதை கவனிக்காமலும் தூரத்திலிருக்கும் ஏதோவொரு பொருளை நோக்கி ஜன்னல்களுக்கு வெளியே.அவருடை பார்வை குத்திட்டு பார்த்து கொண்டே இருக்கும் ,

3. எந்தவொரு உத்திரவும் எழுத்துமூலமாக இருக்கவேண்டும் என எண்ணிடும் மேலாளர் இந்த வகை மேலாளர்கள் எந்த வொரு செயலையும் மறந்து விடுவார்கள் அதனால் எந்தவொரு செயலிற்காக உத்திரவிடுவதாக இருந்தாலும் அது எழுத்துமூலமாகவே இருக்கவேண்டும் என செயல்படுத்துவார்கள்

4. அதிகாரத்தை தம்முடைய செயலாளரிடம் வழங்கிடும் மேலாளர் இந்தவகை மேலாளர் எந்தவொரு செயலையும் செயல்படுத்தி கொள்ளுமாறு தம்முடைய அதிகாரத்தை தம்முடைய செயலாளரிடம் வழங்கிவிட்டு எப்போதும் அந்த செயலாளரை நம்பியே இருப்பார்கள்

5.எதைபற்றியும் தெரிந்து கொள்ளாத மேலாளர் இந்தவகை மேலாளர் எந்தவொரு செயலைபற்றியும் தெரிந்து கொள்ளாதவர் அதனால் பணியாளர்கள் அவரிடமிருந்து எதையும் எதிர் பார்த்திடமுடியாது ஆயினும் பணியாளர் ஏதேனும் கேட்டு அதற்கான மறு உத்திரவை எதிர்பார்த்தால் சம்பந்தமேஇல்லாதபொருத்தமற்ற உத்திரவே இவர்களிடமிருந்து கிடைக்கும்

. 6. தத்துவார்த்த பார்வையுடைய மேலாளர் இந்த வகை மேலாளர் எந்தவொரு நடப்பு செயலையும் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என அதனுடன் தொடர்புபடுத்தி தத்துவார்த்த பார்வையில் விளக்க முயற்சிப்பார்கள் அதனால் அவர்களின் கீழ் பணிபுரிபவர்களால் அவர்களை எப்போதும் திருப்தி படுத்தவே முடியாது அதனால் அந்நிறுவனத்தில் எந்தவொரு செயலும் நடைபெறாமல் முடங்கிவிடும்

7. . தகவலை மறைத்தேவைத்து பாதுகாத்திடும் மேலாளர் இந்த வகை மேலாளர் எந்தவகையான நிருவாக தகவலையும் யாருக்கும் தெரியாமல் மறைத்த வைத்திருந்து பழக்கபட்டவர்கள் ஆவார்கள் அதனால் ஒரு நிறுவனத்தின் சொத்துமதிப்பு போன்ற முக்கிய தகவலை மிக இரகசியமாக தன்னுடைய உயிரே போனாலும் வெளியே கசியவிடாது பாதுகாகத்து வைத்திருப்பார்கள் இவர்கள் அந்நிருவன்த்திற்கு மிக நம்பகமானவர்கள் ஆவார்கள்

8.. முதலாளி எதிர்பார்ப்பதை செயற்படுத்திடும் மேலாளர் இந்த வகை மேலாளர்கள் மிக சிறந்த ஆக்கச்சிந்தனை உள்ளவர்கள் தம்முடைய முதலாளி என்ன எதிர்பார்கின்றார் என்று சரியாக யூகித்து அதற்கேற்ப செயல்படுபவர்கள்

9. முதலாளிக்கு பின்னால் நாய்வால் போல்செல்லும் மேலாளர் ஒரு நிறுவனத்தின் அதிகாரபகிர்வு படிநிலை கட்டமைப்பில் இவ்வாறா னவர்கள் செயல்படுவதை நாம் பார்க்கலாம் அதாவது இந்தவகை யானவர்கள் கீழ்நிலை படியிலுள்ள மேலாளர்கள் தமக்கு மேல்நிலை படியிலுள்ள மேலாளர்களின் அடியை யொற்றி பின்பற்றி செயல்படுவார்கள்

10. எப்போதும் சுமுகமாக இன்முகத்துடன் இருக்கும் மேலாளர் அதாவது மேலாளர் என்ன செய்கின்றாரோ அதையே நாமும் செய்து அவரோடவே நம்முடைய அனைத்து அன்றாட செயல்களை செய்தாலும் அம்மேலாளர் இன்முகத்துடனும் அனைவரையும் வேறுபாடில்லாமல் சமமாக நடத்திடுவார்கள்

11. மேலாண்மையை கற்றுகொண்டே இருந்திடும் மேலாளர் இந்த வகை மேலாளர்கள் எப்போதும் ஆய்வுகள் ஆராய்ச்சிகள் என்றே இருப்பார்கள் உண்மை நிலவரம் என்ன அதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யவேண்டும் என எதைபற்றியும் சிந்திக்காமல் கற்பனையிலேயே வீற்றிருப்பார்கள்

12. தெளிவற்ற மேற்செலவு தாள்கள் உருவாக்குதலை போன்ற மேலாளர் இந்த வகைமேலாளர் தாம்தான் அந்நிறுவனத்தின் அனைத்து செயலிற்கு காரணமானவர் தம்மைவிட்டால் அந்த நிறுவனத்தை யாராலும் நடத்தவேமுடியாது என வெட்டிபந்தா செய்யம் இந்தவகை மேலாளரின் உண்மையான நிலையை பார்த்தால் வெங்காயதோலை உரித்தகதையாக அவருடைய திறன் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும்

13. வேற்றிடத்து மேலாளர் மேலாளரின் அறையை எப்போது யார் வந்து திறந்து பார்த்தாலும் காலியாகவேஇருக்கும் ஏனெனில் இந்த வகை மேலாளர்கள் அவருடைய பணியிடத்தில் எப்போதும் தென்படவே மாட்டார்கள் அந்நிறுவனத்தில் அவர் ஆற்றவேண்டிய பணியை தவிர மற்ற அனைத்து பணிகளையும் அவர் செய்துகொண்டிருப்பாரேயன்றி அவருடைய பணியை அவர் எப்போதும் செய்யமாட்டார்

14. மற்ற மேலாளர்களுடன் எப்போதும் சலசலவென பேசிக்கொண்டே யிருக்கும் மேலாளர் இந்த வகையான மேலாளர்கள் மிகவும் பிரபலமாக உள்ளவர்களாக இருப்பார்கள் அதாவது கால்மணிநேரத்தில் விளக்கமாக அளிக்ககூடிய ஒரு சிறுசெய்தியை ஒரு சில மணி நேரத்திற்கு அதே தகவலை திரும்ப திரும்ப சொல்லிக்கோண்டே யிருப்பார்கள்

15. ஆதரவற்ற உள்கட்டமைப்பு கொண்ட மேலாளர்கள் ஒரு நம்பிக்கையற்ற உட்கட்டமைப்பு கொண்டதொரு நிறுவனத்திற்கு , அதனை புத்துயிர் கொணடுவருவதற்கு ஒரு நிருவாக மேலாளர்கள் மிகவும் அவசியமாகும் . ஆனால் இந்த வகை மேலாளர்கள் இயல்பாகவே ஒரு நல்ல உள்கட்டமைப்பு உருவாவதை தடுத்திடுமாறு செயல்படுவார்கள்.

16. அதிரடி மேலாளர்கள் இந்தவகை மேலாளர்கள் இவர்களை தொடர்பு கொண்டு அடைவதற்காக ஒரு சிறிய மற்றும் தெளிவான வழியை ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் ஆவார்கள்.

17. புதிர்விளையாட்டுபோன்ற மேலாளர்கள் இந்த வகை மேலாளர்கள் எப்போதும் என்னசெய்வார்கள் எப்படி செயல்படுவார்கள் நாம் என்ன செய்தால் அதன்பின்விளைவாக அவரிடமிருந்த என்ன ஏற்படும் என எதிர்பார்க்கமுடியாது அதனால் இந்தவகை மேலாளர்களிடம் சிறிது கவனமுடன் இருப்பது நல்லது

18. எந்த செயலையும் தொடக்கத்திலிருந்தே செய்யவேண்டும் என எதிர்பார்த்திடும் மேலாளர் இந்த வகை மேலாளர் கள் எந்த செயலையும் மற்றவர்களை நம்பாமல் தம்முன்னிலையில் மட்டும் ஆரம்பித்திலிருந்து தொடங்கி செய்யவேண்டும் என உத்திரவிடுவார்கள்

19. எல்லா செயலிற்கும் மற்றவர்களை நம்மபி இருக்கும் மேலாளர் இந்த வகை மேலாளர் எந்தவொரு செயலையும் தானாகவே சுயமாக சிந்தித்து செயல்படாமல் மற்றவர்கள் கூறுவதை அப்படியே வேதவாக்காக கொண்டிருப்பார்கள்

20. தான் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடும் மேலாளர் இந்த வகை மேலாளர்கள் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவ்வப்போது நினைவுபடுத்தி கொண்டே இருந்தால் மட்டுமே அவற்றை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றிடுவார்கள்

மக்களின் வகை


பொதுவாக நம்மோடு வாழ்ந்திடும் மக்களைபின்வரும் வகையாக பிரித்திடலாம்

1. சுயநம்பிக்கை யுள்ளவர்கள் இந்த வகையினர் தம்முடைய வாழ்வின் இலட்சியம் அல்லது குறிக்கோள் ஒன்றினை தநக்கு தானே நிர்னயம் செய்து கொணடு அதை அடைவதற்காக மற்ற யாருடைய தூண்டுதலுமில்லாமல் தானே அதே அடைவதற்காக முயற்சிசெய்து அதனை அடைவதற்காக முயன்று வெற்றிபெறுவார்கள்

2. சுயநம்பிக்கை அற்றவர்கள் இந்த வகையினருக்கு மற்றயாராவதொருவர் அவர் வெற்றி பெறுவதற்கான குறிக்கோளை இலட்சியத்தை நிர்னயம் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்கள் அதாவது இவந்த வகையான மக்களுக்கு சமயம் கடவுள் என்பன போன்ற நம்பிக்கையை யூட்டி இன்னென்ன செயல்களை இந்த கடவுளிற்கு செய்தால் இன்னின்ன கிடைக்கும் என தூண்டிவிட்டு கொணடே இருக்கேவேண்டும்

3. இரண்டுநிலையிலுமிருப்பவர்கள் இந்த வகையினர் சிலநேரங்களில் சுயநம்பிக்கையுடன் செயல்படுவார்கள் ஒருசிலநேரங்களில் மற்றவர்கள் தூண்டிவிட்டால் மட்டுமே செயல்படுவார்கள்

மேலே கண்ட அடிப்படையை மனதில் கொண்டு நம்மோடு பழகுபவர்கள் அல்லது பணிபுரிபவர்கள் எந்த வகையை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டு அதற்கு தக்கவாறு நாம் அவர்களோடு நம்முடைய தொடர்பை பழக்க வழக்கங்களை பின்பற்றுவது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

புதன், 22 ஆகஸ்ட், 2012

ஒரு பேருந்து நடத்துநரின் பணியில் ஏற்பட்ட நிகழ்வு


ஒருநாள் அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் வழக்கமான பணியை தொடங்கினார் அவரோடு சேர்ந்து பணிபுரிந்துவரும் பேருந்து ஓட்டுநரும் அவர்களுடைய வண்டியை பேருந்து நிலையத்திலிருந்த மிக சீராக செலுத்தி வந்தார்

முதல் நிறுத்தத்தில் ஏராளமான பயனிகளுடன் வாட்டசாட்டமான திடகாத்திரமான பயில்வான போன்ற நபர் ஒருவர் அப்பேருந்தில் ஏறி நடத்துநரை நோக்கி “பெரியண்ணன் பேருந்து கட்டணம் செலுத்தமாட்டார் “என கூறிவிட்டு முன்னிருக்கையில் அமர்ந்தார் நடத்துநர் நோஞ்சான் போன்றிருந்ததால் அந்த பயில்வான போன்ற நபரிடம் பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தை எவ்வாறு கேட்டு பெறுவது என பயந்து தயங்கியபின் சரி நாமே நம்முடைய சொந்த பணத்தை அந்த பெரியண்ணன் பேருந்திற்கான கட்டணம் வாங்கியதாக சரிசெய்து கொள்ளலாம் என பெரியண்ணனிடம் பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தொகை கேட்பதை விட்டுவிட்டார் அதன்பின் கடைசியான பேருந்து நிலையத்தில் அந்த பெரியண்ணன் இறங்கி சென்றார்

மறுநாளும் அவ்வாறே முதல் நிறுத்தத்தில் ஏராளமான பயனிகளுடன் அதே வாட்டசாட்டமான திடகாத்திரமான பயில்வான போன்ற பெரியண்ணன் அப்பேருந்தில் ஏறி நடத்துநரை நோக்கி “பெரியண்ணன் பேருந்து கட்டணம் செலுத்தமாட்டார்” என கூறிவிட்டு முன்னிருக்கையில் அமர்ந்தார் நடத்துநர் நோஞ்சான் போன்றிருந்ததால் அவரிடம் எப்படி பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தை கேட்டு அந்த பயில்வான போன்ற நபரிடம் பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தை எவ்வாறு கேட்டு பெறுவது என பயந்து தயங்கியபின் சரி நாமே நம்முடைய சொந்த பணத்தை அந்த பெரியண்ணன் பேருந்திற்கான கட்டணம் வாங்கியதாக சரிசெய்து கொள்ளலாம் என பெரியண்ணனிடம் பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தொகை கேட்பதை விட்டுவிட்டார் அதன்பின் கடைசியான பேருந்து நிலையத்தில் அந்த பெரியண்ணன் இறங்கி சென்றார்

இவ்வாறே அந்நிகழ்வு தொடர்ச்சியாக தினமும் நடந்துவந்தது தினமும் நடைபெறும் இவ்வாறான நிகழ்வினால் நமக்கு பெருத்த அவமானமாக உள்ளதே இதனை எவ்வாறு தீர்வுசெய்வது என ஆலோசணை செய்து இறுதியாக அவரை போன்று தாமும் பயில்வானாக தம்முடைய உடலை வளர்த்து கொண்டால் அவரை தட்டி கேட்கமுடியும் என முடிவுசெய்து அவ்வூரில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று தன்னுடைய உடல்வலிமையை கட்டுடல் போன்று வலிமையாக்கி வந்தார்

தமக்கு போதுமான உடல்வலு உள்ளது என திருப்தி ஏற்பட்டபின் மறுநாள் தம்முடைய பணியை தொடங்கினார் இன்று வரட்டும் அந்த பெரியண்ணன் எனும் பயிலவானுடன் நேருக்கு நேர் மோதி இன்று இரண்டில் ஒன்றை பார்த்துவிடுகிறேன் என தம்முடைய மனத்தில் திட்டுமிட்டுகொண்டு வழக்கமான கட்டணம் வசூல் செய்திடும் பணியை ஆற்றிவந்தார்

இந்நிலையில் அப்பேருந்தின் முதல் நிறுத்ததில் வழக்கமாக ஏராளமான பயனிகளுடன் வாட்டசாட்டமான அந்த திடகாத்திரமான பயில்வான் போன்ற பெரியண்ணன் அப்பேருந்தில் ஏறி முன்கூட்டியே செலுத்தபட்ட மாதாந்திர பயனஅனுமதி சீட்டு தன்னிடம் இருப்பதாக அந்த பேருந்து நடத்துநரிடம் காண்பித்து “இந்த அனுமதிசீட்டு தன்னிடம் இருப்பதால் பெரியண்ணன் பேருந்து கட்டணம் செலுத்தமாட்டார் ” என கூறிவிட்டு முன்னிருக்கையில் அமர்ந்தார்

அதன்பின் அடடா நாம் ஏன் அவர் செலுத்தமாட்டார் என பெரியண்ணனிடமே கேட்டறிந்த பின் நம்முடைய முடிவை எடுத்திருக்கலாமே என நடத்துநர் வெட்கபட்டார் இவ்வாறே ஒருதலைமை நிருவாகி ஏதனுமொரு பிரச்சினை ஏற்பட்டவுடன் அதனைபற்றிய முழுவிவரமும் தெரிந்து கொள்ளாமல் தெரிந்த அரைகுறையான விவரங்களை கொண்டு தவறாக முடிவுசெய்து வீணாக அதை தீர்வுசெய்கிறேன் என தவறான முயற்சியை மேற்கொள்வது நிருவாகத்தின் நடைமுறைக்கும் அந்த பிரச்சினையை தீர்வுசெய்வதும் சரியான முன்னுதாரணம் அன்று

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

பிளாஷ்டிக் பைகளின் மறுசுழற்சி பயன்

பொதுவாக இன்று பிளாஷ்டிக்கால் ஆன பைகளை மட்டுமே நாமனைவரும் பயன்படுத்திடும் நிலையில் உள்ளோம் அதனால் நாம் அவைகளை பயன்படுத்தியவுடன் கண்ட இடத்தில் வீசிஎறிந்து விடுகின்றோம் இதனால் எங்கெங்கு நோக்கினும் பிளாஷ்டிக் பைகளானது குப்பையாக மலைபோல் குவிந்து போகின்றன அதனை கூட்டி பெருக்கி மாநாகராட்சி, நகராட்சிகளின் ஊழியர்கள் சாலையோரங்களில் குவியிலிட்டு எரியூட்டுகின்றனர் அவ்வாறு எரிப்பதால் நச்சுபுகை காற்றில் பரவி நம்முடைய உடல்நலனிற்கு கேடு விளைவிக்கின்றன.

தாம் வழக்கமாக உண்ணும் வைக்கோல் போன்ற பொருள் இதுஎன நம்மால் கீழே கண்ட இடத்தில் வீசிஎறியப்படும் இந்த பிளாஷ்டிக் பைகளை விழுங்கிடும் மாடுகள் அதனுடைய உணவுக்குழாய் அடைபட்டு ஏராளமான அளவில்இறந்து போகின்றன

நம்மால் கீழே கண்ட இடத்தில் வீசிஎறியப்படும் இந்த பிளாஷ்டிக் பைகளானது மழைக்காலத்தில் நிலத்திற்குள் தண்ணீர் ஊடுருவி செல்ல முடியாதவாறு தடுத்துவிடுதால் இம் மழைக்காலங்களில் வெள்ள பெருக்கும் பெருஞ்சேதமும் ஏற்படுகின்றன அதுமட்டுமன்றி இதன் தொடர்ச்சியாக மழைநீர் நிலத்திற்குள் ஊடுருவி செல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமாக குறைந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நாமெல்லோரும் அல்லாட வேண்டிய நிலை ஏற்படவாய்ப்புள்ளது

இதுபோன்ற எண்ணற்ற தீங்குகள் நம்மால் கீழே கண்ட இடத்தில் வீசிஎறியப்படும் இந்த பிளாஷ்டிக் பைகளால் ஏற்படுவதால் நாம் இவைகளை தவிர்ப்பதற்கு முயற்சி செய்வோம் இல்லையெனில் அதனை சேகரித்து வைத்து பாதுகாப்பாக அப்புறபடுத்திட முயற்சி செய்திடுவோம் அதைவிட முதலில் இதற்கான விழிப்புணர்வாவது நம் அனைவரிடமும் ஏற்படுவதற்காக முயற்சி செய்வோம்

சமீபத்தில் இந்திய நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தம்முடைய தீர்ப்பில் பிளாஷ்டிக் பைகள் ஒரு அணுகுண்டு வெடிப்பதைவிட மிக அதிக தீங்கிழைப்பவையாக உள்ளன அதனால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையயையும் அதற்கு மாற்று ஏற்பாட்டினையும் செய்திடுக என உத்திரவிட்டுள்ளது

இந்த பிளாஷ்டிக் பைகளை பின்வரும் வழிகளில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன்மூலம் மேலேகூறிய தீங்களிலிருந்து நம்மை காத்திட முடியும்

1- மளிகை கடைகளில் கொள்முதல் செய்த பொருளைஎடுத்து வருவதற்காக நாம் மளிகை கடைகளுக்கு திரும்ப செல்லும் போதெல்லாம் நம்மால் முன்பு பெறபட்ட பிளாஷ்டிக் பைகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்திடுவது நல்லது

2- முன்பு நாம் மளிகை பொருட்களை எடுத்து செல்வதற்காக பயன்படுத்திய பிளாஷ்டிக் பைகளை மளிகை கடைகளுக்கு திரும்ப செல்லும் போது அம்மளிகை கடைகளுக்கே திரும்ப கொடுத்திடுவது அதனினும் நன்று

3- நம்முடைய வீட்டிலுள்ள கழிப்பறைகளில் ,அலுவகங்களை சுற்றி குப்பைகளை போடும் தொட்டியாக இதனை பயன்படுத்திடுக
4- சமையல் அறையில் பயன்படுத்தபடும் எளிதில் வீணாக்கூடிய காய்கறிபொருட்களை இந்த பிளாஷ்டிக் பைகளுக்குள் இட்டு குளிர்பதன பெட்டிக்குள் வைத்து பராமரித்திட பயன்படுத்திடுக

5- வீட்டின் முற்றத்தில் அல்லது புழக்கடை பகுதியில் இந்த பிளாஷ்டிக் பைகளை குப்பைத்தொட்டிபோன்று வைத்து பயன்படுத்திடுக.

6- நூலகங்களில் நூல்களை எடுத்து செல்லும் பைகளாக பயன்படுத்திடுமாறு நூலகங்களுக்கு இதனை நன்கொடையாக வழங்கிடுக

7- காலில் அணியும் முழுக்காலணியின் உள்பகுதியை பாதுகாத்திட இந்த பிளாஷ்டிக் பைகளை பயன்படுத்திடுக.

8- இந்த பிளாஷ்டிக் பைகளை வெட்டி பின்னலால் ஆன பல்வகை கைப்பைகளாக உருவாக்கி பயன்படுத்தி கொள்க
9- இந்த பிளாஷ்டிக் பைகளை வெட்டி பின்னல் செய்து அழகிய வகைவகையான பூவேலைப்பாடு செய்து பயன்படுத்திகொள்க

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

நம்முடைய வாழ்க்கையின் முழுபயன் யாது


தத்துவ பேராசிரியர் ஒருவர் தம்முடைய வகுப்பில் ஒருநாள் பெரிய காலியான ஜாடி ஒன்றை கொண்டுவந்துவைத்து அதில் பெரிய உருண்டையான பந்துகள் சிலவற்றை இட்டு நிரப்பியபின் தம் வகுப்பு மாணவர்களிடம் “தற்போது அந்த ஜார் முழுவதும் நிரம்பிஉள்ளதா” என வினவினார்

“ஆம் ஐயா ஜாடி முழுவதும் பந்துகள் நிரம்பிஉள்ளன இனி நிரப்புவதற்கு இந்த ஜாடியில் மிகுதி காலியிடம் இல்லை ” என கூறி அதனை ஏற்றுக்கொண்டனர்

பிறகு அப்பேராசிரியர் அருகிலிருந்த கொஞ்சம் கூழாங்கற்களை பொறுக்கி அதே ஜாருக்குள் இட்டு அந்த ஜாடியை குளுக்கியபின் தம் வகுப்பு மாணவர்களிடம் “தற்போது அந்த ஜார் முழுவதும் நிரம்பிஉள்ளதா” என வினவினார்

“ஆம் ஐயா ஜாடி முழுவதும் பந்துகளோடு கூழாங்கற்களும் சேர்ந்து நிரம்பிஉள்ளன இனி நிரப்புவதற்கு இந்த ஜாடியில் மிகுதி காலியிடம் இல்லை” என கூறி ஏற்றுக்கொண்டனர்

பிறகு மீண்டும் அந்த தத்தவ பேராசியர் அருகிலிருந்த கொஞ்சம் மணலை அள்ளி அதே ஜாருக்குள் இட்டு அந்த ஜாடியை குளுக்கியபின் தம் வகுப்பு மாணவர்களிடம் “தற்போது அந்த ஜார் முழுவதும் நிரம்பிஉள்ளதா” என வினவினார்

“ஆம் ஐயா ஜாடி முழுவதும் பந்துகளோடும் கூழாங்கற்களோடும் மணலும் சேர்ந்து நிரம்பிஉள்ளன இனி நிரப்புவதற்கு இந்த ஜாடியில் மிகுதியாக காலியிடம் ஏதும் இல்லை “ என கூறி மீண்டும் ஏற்றுக்கொண்டனர்

பிறகு மூன்றாவது முறையாக அருகில் ஒருபாத்திரத்திலிருந்த கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதே ஜாருக்குள் ஊற்றி ஜாடியை நிரப்பியபின் தம் வகுப்பு மாணவர்களிடம் “தற்போது அந்த ஜார் முழுவதும் நிரம்பி உள்ளதா” என வினவினார்

“ஆம் ஐயா ஜாடி முழுவதும் நிரம்பிஉள்ள பந்துகளோடும் கூழாங்கற்களோடும் மணலும் சேர்ந்து நிரம்பியுள்ள அந்த ஜாடியில் சிறுசிறு இடைவெளியில் தண்ணீர் சென்று நிரம்பியுள்ளது இனி நிரப்புவதற்கு இந்த ஜாடியில் மிகுதியாக காலியிடம் ஏதும் இல்லை” என கூறி ஏற்றுக்கொண்டனர்

“நன்றாக கவனியுங்கள் மாணவர்களே இந்த ஜாடி போன்றதுதான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையாகும் அதில் பெரியபெரிய பந்துகள் பேன்றதுதான் நம்முடைய குடும்பம் பிள்ளைகள் ஆவார்கள் இவர்களாலும் நம்முடைய வாழ்க்கை முழுவதம் நிரம்பி விட்டதாக இருக்கவேண்டாம்

இவை மட்டும் நம்முடைய வாழ்க்கையன்று நாம் உயிர் வாழ பொருளீட்ட வேண்டுமல்லவா அதற்காக நாம் செய்யும் வேலை நாம் வாழுகின்ற நம்முடைய வீடு ,நம்முடைய தோட்டம் துறவு ,நிலம் போன்றவைகள் இந்த ஜாடிக்குள் இட்ட கூழாங்கற்களை போன்றவையாகும்

அது மட்டுமா நம்முடைய வாழ்க்கை நம்முடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இந்த ஜாடிக்குள் நிரப்ப பட்ட மணல் போன்றவர்கள் இதுமட்டுமா நம்முடைய வாழக்கை அன்று

நாம் அவ்வப்போது நம்முடைய பிள்ளைகளோடு வாழ்க்கைத் துனையோடும் ஒட்டிஉறவாடவேண்டும் இந்த செயலே நம் ஒவ்வொருவரின் முதல் கடமையாகும் இதனால்மட்டும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் முடிந்ததாக எண்ணிவிடவேண்டாம் இரண்டாவதாக நம்முடைய பணியை செவ்வன செய்வது நமக்கு தேவையான வீடு நிலம் போன்ற இதர பொருட்களை ஈட்டுவது ஆகியவை நம்முடைய இரண்டாவது கடமையாகும் இந்த இரண்டாவதால்மட்டும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் முடிந்ததாக எண்ணிவிடவேண்டாம்

மூன்றாவதாக நம் உற்றார் உறவினர் நண்பர்களோடு உறவாடுவது நான்காவது கடமையாகும் இந்த மூனாறாவதால்மட்டும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் முடிந்ததாக எண்ணிவிடவேண்டாம்

ஏழை எளியோர்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் இயலாவதர்களுக்கும் நம்முடைய உடல் பொருள் ஆகிய ஏதாவதொன்றால் நம்முடைய உள்ளன்போடு செய்யும் உதவியே இந்த ஜாடிக்குள் நிரப்பிய தண்ணீர் போன்றதாகும்” என விளக்கமளித்தார்

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பொதுவான சமூக நியதி


தம்முடைய கருத்துகளை மற்றவர்கள் ஏற்குமாறு செய்து தாம் கூறுவதற்கெல்லாம் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டும்படி செய்வதில் வெற்றிபெறுபவர் ஒரு ஆசிரியர் ஆவார்

மற்றவர்களின் பையில் இருக்கும் பணத்தினை தாம் பெற்று அதற்கீடாக ஏதாவது ஒருபொருளை அல்லது சேவையை ஏற்குமாறு செய்வதில் வெற்றி பெறுபவர் ஒரு வியாபாரி ஆவார்.

இவ்விரண்டு செயல்களிலும் வெற்றிபெறுபவர் ஒருகுடும்பத்தின் தலைவி அதாவது மனைவியாவார்

இவ்விரண்டு செயல்களிலும் தோல்வியுறுபவரே கணவனாவார் இதுதான் பொதுவான சமூக நியதியாகும்

ஒரு தந்தை தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் ரூபாய் 100 வீதம் வழங்கி இந்த பணத்திற்கு உங்களுக்கு விருப்பமான பொருளை கொள்முதல் செய்து இந்த வீட்டின் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கபட்ட அறைமுழுவதும் நிரப்பிவிடுங்கள் என்று கூறினார்

உடன் முதல் மகன் தனக்கு வழங்கபட்ட ரூபாய் 100 க்கு வண்டி நிறையுமாறு நெல் அறுவடையின்போது களத்துமேட்டில் கழிவாக வரும் வைக்கோலை வாங்கிவந்து நிரப்பினான் அவனுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட அறை நிரம்பவில்லை

இரண்டாவது மகன் தனக்கு வழங்கபட்ட ரூபாய் 100 க்கு பருத்தியிருந்து பறிக்கபடும் பஞ்சு மூட்டைகளை வாங்கிவந்து நிரப்பினான் அவனுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட அறை நிரம்பவில்லை

மூன்றாவது மகன் தனக்கு வழங்கபட்ட ரூபாய் 100 ல் ஒரே ஒருரூபாய்க்கு மட்டும் ஒரு மெழுகு வர்த்தியை கடையில் வாங்கிவந்து விளக்காக ஏற்றி வைத்தான் உடன் அவனுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட அறைமுழுவதும் அம்மெழுகுவர்த்தியின் ஒளி நிரம்பியது

உடன் அவர்களுடைய தந்தையானவர் பார்த்தீர்களா பிள்ளைகளை அறிவுக்கூர்மையுடன் சிறிய தொகையாகஅல்லது செயலாக இருந்தாலும் அனைவரும் விரும்பும் வண்ணம் நடப்பதுதான் சிறந்த செயலாகும்

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

பொதுவாக ஒரு நிறுவனத்தில் அவ்வப்போது எழும் சிக்கல்களும் அவைகளுக்கான தீர்வும்


ஒருநாள் என்னுடைய நண்பர் ஒருவர் மிகவும் மனவருத்தத்தில் இருந்தார் என்னவென்று வினவியபோது தன்னுடைய மேலாளர் அன்று தன்னை மிகவும் தரக்குறைவாக நடத்தியதாக வருத்தத்துடன் கூறினார் அதாவது தான் குறிப்பிட்ட அலுவலக மின்அஞ்சலை கையாண்ட செய்தியை மற்றொரு அலுவலக நண்பருடன் பகிர்ந்து கொண்டதுதான் தன்னுடைய தரப்பில் தவறியதாகவும் ஆனால் அவ்வாறு மற்ற அலுவலக நண்பர்களுடன் மின்அஞ்சலை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது அம்மேலாளருக்கு பிடிக்கவில்லையென்றும் கூறினார்

இவ்வாறான செயல் ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழில்முறை முதிர்ச்சியின்மை மற்றும் நெறிமுறை சார்ந்த சிக்கல்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைவதற்கு ஏதுவாகின்றது

பொதுவாக பின்வரும் சிக்கல்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் அவ்வப்போது எழுகின்றன

1தவறான வள தேர்வு (சரியான வேலைக்கு தவறான நபரை தேர்வு செய்தல்), அல்லது சரியான வேலைக்கு சரியான நபரை தேர்வுசெய்வதை கண்டு கொள்ளாமல் விடுதல்

2, இனம், மொழி சார்பாக ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளுதல்

3.பணியாளர்கள் தம்முடைய பணியை காலத்தில் நன்றாக முடித்தால் பாராட்டுவதும் இல்லை ஊக்கபடுத்துவதுமில்லை

4,புறங்கூறுதல் மற்றவர்களின் காலை வாரிவிடுதல்

5, மற்றவர்களைபற்றி பொய்யான தகவலை அல்லது கிசுகிசுக்களை அனைவரிடமும் பரப்புதல்

6-பணியாளர்களுக்கு முரன்பாடான பதவிஉயர்வை வழங்குதல் அல்லது பரிந்துரைத்தல்

7,பணியாளர்களுக்கு ஒரே மாதிரயாக அல்லது சமமாக பணிகளை ஒதுக்கீடு செய்யாமல் தாம் விரும்பியவாறு தவறான வகையில் பணிகளை ஒதுக்கீடு செய்தல்

8, பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மெருகூட்டல் நிகழ்வில் தவறான வழியில் செயல்படுதல்

9-பணியாளர்கள் தவறுபுரியும்போது அவர்களை கடுமையாகவும் தரக்குறைவாகவும் நடத்துதல்

இவ்வாறான சிக்கல்களுக்கு பின்வரும் சரியான நடைமுறைகளை பின்பற்றினால் நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

ஒவ்வொரு நிறுவனத்திலும் நெறிமுறை உதவியை தொலைபேசிமூலம் அனைத்து பணியாளர்களும் தத்தமது குறைகளை கூறுவதற்காக கிடைக்குமாறு செய்யவேண்டும். இந்த செயல்முறை முற்றிலும் நடுநிலையாகவும் இயற்கையானதாகவும் இருக்க வேண்டும்.

நிருவாக நிலை தணிக்கையானது இயற்கையாகவும் நடுநிலை பிறழாதவாறும் உள்ள ஊழியர்களால் செய்யபட்டு பணியாளர்கள் அனைவருக்கும் ஒருதலைபட்சமின்றி நடுநிலையாக தீர்வு கிடைப்பதை அதன்மூலம் உறுதி செய்யவேண்டும்

முதிர்ந்த ஊழியர்கள் கிசுகிசுக்கள் புறங்கூறல் , கிடைத்தபோது சமயம் பார்த்து மற்ற பணியாளர்களின் காலை வாரிவிடுதல் போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே மோப்பம் பிடித்து அவற்றை தவிர்த்து சரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பொருத்தமாக செயற்படுதல்.

நன்றாக பணியை செய்தபணியாளர்களுக்கு அவர்களின் திறமையை அங்கீகாரம்செய்வதும் அவர்களுக்கு பரிசு அளிப்பதும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.

திறமை அடிப்படையில் பதவிஉயர்வு அளிப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நிறுவனங்களில் பயன்படுத்தபடும் நிருவாக உரையாடலின் உண்மையான அர்த்தம்


நிறுவனங்களில் பயன்படுத்தபடும் நிருவாக உரையாடலின் உண்மையான அர்த்தம் பின்வருமாறு

1."We will do it" "நாங்கள் அதை செய்கின்றோம்" என்றால் "நீ அதைச்செய்" என அர்த்தமாகும்

2."You have done a great job" "நீ நன்றாக உன்னுடைய பணியை செய்தாய் " என பாராட்டினால் " மேலும் அதிகமான பணி உனக்கு வழங்கவதற்காக காத்திருக்கின்றது " என அர்த்தமாகும்

3."We are working on it" " நாங்கள் அதற்காக பணிசெய்து வருகின்றோம் " என்றால் " அவ்வேலையை நாங்கள் இதுவரையில் செய்யவே தொடங்கவில்லை " என அறிந்து கொள்ளலாம்

4."Tomorrow first thing in the morning" " நாளை காலையில் முதலில் இந்த பணிதான் செய்யவிருக்கின்றோம்" என்றால் "இதுவரையில் இந்த பணியை செய்யவே தொடங்கவில்லை நாளையாவது அதனை செய்யதொடங்கலாம் " என தெரிந்து கொள்ளலாம்

5."After discussion we will decide-I am very open to views" "நீண்ட விவாதத்திற்கு பிறகு நாங்கள் இதனை "நான் மிகதிறந்த மனதுடன் காண்பதாக" முடிவுசெய்தோம் " என்றால் "நான் ஏற்கனவே முடிவுசெய்துவிட்டேன் அதனை நீ எவ்வாறு செய்வது என நான் விரைவில் அதனைபற்றி கூறுவேன்" என அறிந்து கொள்க

6."There was a slight miscommunication" " சிறிது தவறான தகவல் தொடர்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்றால் " நாங்கள் உண்மையில் பொய்சொல்கிறோம் " என அர்த்தமாகும்

7."Lets call a meeting and discuss" " நாம் ஒரு கூட்டத்தை அழைத்து கூட்டி அதைபற்றி விவாதிப்போம் " என்றால் "தற்போது இதுபற்றி பேசுவதற்கு எனக்கு நேரமில்லை பின்னர் இது பற்றி பேசலாம் " என அர்த்தமாகும்

8."We can always do it" " நாங்கள் அதனைஎப்போதும் செய்யமுடியும்"என்றால் "எங்களால் உண்மையில் அதனை சரியான நேரத்தில் செய்யமுடியாது" என அறிந்து கொள்ளலாம்

9."We are on the right track but there needs to be a slight extension of the deadline" " நாங்கள் சரியான பாதையில் செல்கின்றோம் ஆனால் முடிவிற்கான சிறு விரிவாக்கம் மட்டும் தேவையாகஉள்ளது " என்றால் " இந்த செயல் குழம்பமாகிவிட்டது அதனால் அதனை சரியான நேரத்தில் முடித்து தருவதற்கு முடியாத நிலையுள்ளது" என அர்த்தமாகும்

10."We had slight differences of opinion " "நாங்கள் சிறிது கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம் " எனில் " உண்மையில் எங்களுக்குள் உட்பூசலில் நாங்கள் சிக்கியுள்ளோம் " என அர்த்தமாகும்

11."Make a list of the work that you do and let's see how I can help you" "முதலில் நீசெய்யவேண்டிய பணிகளை பட்டியலிடு அதன்பின் நான் அவற்றுள் எவ்வாறு உதவுமுடியும் என பார்க்கின்றேன் " என்றால் "எப்படியோ நீ மட்டும் முயன்று அந்தபணியை செய்து முடித்துவிட முயற்சிசெய் அதற்காக என்னிடமிருந்து எந்தவித உதவியும் எதிர்பார்க்காதே" என அர்த்தமாகும்

12."You should have told me earlier" "எப்போதும் எந்த தகவலையும் முன்கூட்டியே எனக்கு தெரிவித்து விடு " என்றால் " முன்பே சொல்வதாக இருந்தாலும் செயல் நடந்த பின் தகவல் சொல்வதாக இருந்தாலும் முடிவு ஒன்றமில்லை" என அர்த்தமாகும்

13."We need to find out the real reason" " உண்மையான காரணம் என்னவென அறிந்துகொள்ள வேண்டியுள்ளது " எனில் "நீ எந்தவிடத்தில் தவறினாய் என நான் ஏற்கனவே அறிந்து கொண்டுள்ளேன் " என அர்த்தமாகும்

14."Well Family is important; your leave is always granted. Just ensure that the work is not affected," " உன்னுடைய குடும்பம் மிகமுக்கியம்தான் அதனால் உன்னுடைய விடுப்பும் அனுமதிக்கபடுகின்றது ஆனால் உன்னுடைய பணியை கண்டிப்பாக முடித்து கொடுப்பதை உறுதிசெய்து கொள் " என்றால் " உனக்கு அளிக்கபட்ட உன்னுடைய பணியை முடித்தால் மட்டுமே நீ கோரும் விடுப்பை அனுமதிப்போம் " என அர்த்தமாகும்

15."We are a team," "நாங்கள் ஒரே குழுவாக உள்ளோம் " எனில் "நான் மட்டும் அத்தவறுக்கு பொறுப்பாக மட்டேன் " என அர்த்தமாகும்

16."That's actually a good question" "அது மிகச்சிறந்த கேள்விதான் "என்றால் அதனை பற்றி எந்த விவரமும் எனக்கு தெரியாது " என அர்த்தமாகும்

17."All the Best" "எல்லாம் நல்லவிதமாக அமையட்டும் " என்றால் " நீ மிக இக்கட்டான நிலையில் மாட்டிகொண்டுள்ளாய் " என அர்த்தமாகும்

சனி, 4 ஆகஸ்ட், 2012

உங்களின் பார்வைத்திறனை சரிபார்ப்பதற்கான பரிசோதனை


பின்வரும் பட்டியலில் இரண்டு B எழுத்துகள் உள்ளன அவைகளை முதலில் கண்டு பிடிக்கவும்

RRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR RRRRRRRRRRRBRRRRRRRRRRRRRRRRRRRR RRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR RRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR RRRRRRRRRRBRRRRRRRRRRRRRRRRRRRRR RRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR

அவ்வாறு இரண்டு B எழுத்துகளை மேலே கண்டுள்ள பட்டியலிலிருந்து கண்டுபிடித்தபின் பின்வரும் பட்டியலிலிருந்து 1 என்பதை கண்டு பிடிக்கவும்

IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII1III IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII

அவ்வாறுமேலே கண்டுள்ள பட்டியலிலிருந்து 1 என்பதை கண்டுபிடித்தபின் பின்வரும் பட்டியலிலிருந்து 6என்பதை கண்டு பிடிக்கவும்

9999999999999999999999999999999999 9999999999999999999999999999999999 9999999999999999999999999999999999 9999999999999999999999999999999999 9999999999999999999999999999999999 9999999999999999999999999999999999 9999699999999999999999999999999999 9999999999999999999999999999999999 9999999999999999999999999999999999 9999999999999999999999999999999999 9999999999999999999999999999999999 9999999999999999999999999999999999

அவ்வாறுமேலே கண்டுள்ள பட்டியலிலிருந்து 6 என்பதை கண்டுபிடித்தபின் பின்வரும் பட்டியலிலிருந்து Nஎன்ற எழுத்தை கண்டு பிடிக்கவும்

MMMMMMMMMMMMM MMMMMMMMMMMMM MMMMMMMMMMMMM MMMMMMMNMMMMM MMMMMMMMMMMMM MMMMMMMMMMMMM MMMMMMMMMMMMM MMMMMMMMMMMMM MMMMMMMMMMMMM MMMMMMMMMMMMM

அவ்வாறுமேலே கண்டுள்ள பட்டியலிலிருந்து N என்ற எழுத்தை கண்டுபிடித்தபின் இறுதியாகபின்வரும் பட்டியலிலிருந்து Qஎன்ற எழுத்தை கண்டு பிடிக்கவும்

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOQOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

இந்த சரிபார்ப்பு பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி

திங்கள், 30 ஜூலை, 2012

உலகப்பொருளாதாரம் பற்றிய ஒரு சாதாரணமான விளக்கம்


வழக்கமான பொருளாதாரம் நம்மிடம் இரண்டு பசுக்கள் உள்ளன எனில் அவற்றுள் ஒன்றை மட்டும் விற்பனைசெய்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு காளை மாட்டை வாங்கி பயன்படுத்தினால் நமக்கு அவைகள் ஒன்றிற்கும் மேற்பட்ட கன்றுகளை ஈனும் அதன்மூலம் நமக்கு அருந்துவதற்கு பாலும் பால் பண்ணை பெருகுவதற்கான பசுமாடு அல்லது உழவு மற்றும் இதர வேலைக்காக எருதும் பெருகிகொண்டே யிருக்கும் அதனால் கிடைக்கும் வருமானத்தில் நாம் நிம்மதியாக வாழமுடியும்

இந்திய பொருளாதாரம் நம்மிடம் இரு பசுமாடுகள் உள்ளன அவற்றுள் ஒன்றினை நாம் ஏற்கனவே வாங்கியிருந்த கடனை தீர்வு செய்வதற்காக விற்பனை செய்துவிட்டோம் மிகுதி ஒன்றை கடவுளாக போற்றி துதித்து வருகின்றோம் ஆனால் நாம் வாழுவதற்கான வருமானம் மட்டும் கிடைக்கும் வழிதான் கேள்விக்குறியாக உள்ளது

பாகிஸ்தான் பொருளாதாரம் நம்மிடம் பசுக்கள் எதுவுமில்லை ஆனாலும் இந்தியா வைத்துள்ள மிகுதி ஒரு பசுமாடு நம்முடையது என அடாவடியாக உரிமைகொண்டாடிகொண்டு அவ்வப்போது எல்லைகடந்து ஆக்கிரப்பாளர்களையும் தீவிரவாதிகளையும் இந்தியாவிற்குள் அனுப்பி அந்த ஒரு பசுமாட்டினை அபகரித்திட கடும் முயற்சி செய்து வருகின்றோம் இதற்கான செலவுத்தொகையை அமெரிக்கா நமக்கு அவ்வப்போது வேறுஒரு காரணத்திற்காக வழங்கிடும் பொருள்உதவியை நாம் தவறாக பயன்படுத்திவருகின்றோம்

அமெரிக்க பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன அவற்றுள் ஒன்றினை விற்பனை செய்துவிட்டு மிகுதியாக இருக்கும் ஒன்றினை நான்கு பசுக்கள் அளவிற்கு பால் கொடுக்கும்படி அதனை துன்புறுத்தி அதற்கு அதிக நெருக்குதல் கொடுத்து வருகின்றோம் அதனால் அது இறந்து போகும் சூழல் ஏற்படுகின்றது உடன் நாம் போலியாக அடடா இந்த பசு எவ்வாறு இறந்தது யாரோ ஒரு தீவிரவாதியால்தான இறந்திருக்கும் என பாசாங்கு செய்து அடாவடியாக ஏமாந்த நாட்டின்மீது பொருளாதாரம் தடையும் அதற்கடுத்ததாக மற்ற நாடுகளின் துனையுடன் இராணுவ ஆக்கிரமிப்பு போரும் ஏற்படுத்துகின்றோம்

பிரிட்டன் பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன அவையிரண்டும் பைத்தியம் பிடித்து மதிமயங்கியுள்ளன இருந்தாலும் அமெரிக்காவோடு சேர்ந்து மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து நமக்கு கிடைக்கவேண்டிய வருமானத்தை உறுதிபடுத்திகொண்டுள்ளோம்

ஆஸ்திரேலியன் பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன அவையிரண்டில் ஒன்றுமட்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் அனுமதியளித்தால் மட்டும் நமக்கு அது பால்கொடுக்கும் மற்றொரு பசுவோ மிகமிக சோம்பேறியானது பால் கொடுப்பதை பற்றியே கவலை படாது அதனால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய முழுநேர உணவாக விஸ்கி பிராந்தியைமட்டும் நம்பியுள்ளனர் தொடர்ந்து அந்தஒரு பசுமட்டும்நீண்டநாட்கள் உயிரோடு இருப்பதற்கு அரும்பாடுபடுகின்றனர்

இத்தாலிய பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன ஆனால் அவையிரண்டும் நமக்கு எங்கேயிருகின்றன என்று மட்டும் தெரியவில்லை ஒருவேளை நம்முடைய மதிய உணவிற்காக அதனைகொன்று கறிசமைத்துவிட்டோமோ என சந்தேகமாக உள்ளது

சீனப்பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன நம்மிடம் உள்ள நூற்றுகணக்கான மக்களுக்கும் அந்த இரண்டு பசுக்களில் இருந்துமட்டும் பால்கொடுக்கவேண்டும் என பெருமுயற்சி செய்துவருகின்றோம் மக்கள்அனைவருக்கும் போதுமான வேலைவாய்ப்பு அளிக்கபட்டுள்ளன என்றும் மக்கள் அனைவரும் எருதினை போன்று கடுமையாக உழைத்து அந்த இரு பசுக்களிலிருந்து அனைவருக்கும் தேவையான பாலினைபெறவேண்டும் என்றும் கடுமையான உத்திரவிடபட்டு அதனை நடைமுறைபடுத்திவருகின்றோம் உண்மைநிலையை யாராவது சுட்டிகாட்டினால் அவரை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைத்துவிடும் வழக்கம் நம்மிடம் உள்ளது

மத்திய மற்றும் கீழைநாடுகளின் பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன நாம் அமெரிக்காவிற்கும் பிரிட்டனிற்கும் இராணுவப்படைகளின்மூலம் அவ்விரு பசுக்களையும் பாதுகாப்பு அளிப்பதற்கான அனுமதியை அளித்துவிட்டோம் அவ்வாறு பாதுகாப்பதற்காக வந்திருந்த இராணுவ படைவீரர்கள் அவ்விரண்டு பசுக்களையும் தம்முடைய மதிய உணவிற்காக அடித்து கொன்று பயன்படுத்திகொண்டனர் மிகுதி அவைகளின் எலும்புகளை மட்டும் நமக்கு திருப்பிதந்துவிட்டு தவறுதலாக இவ்வாறான செயல் ஏற்பட்டுவிட்டதென்றும் ஆயினும் அப்பசுக்களுக்கு பதிலாக அவர்களுக்கு இரு F16போர்விமானத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்

இலங்கை பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன ஆனால் அவ்விரண்டிற்கு பதிலாக இரு காளைமாட்டை பண்டமாற்று செய்து பெற்றுகொண்டோம் அக்காளைமாடுகளில் ஒன்றை நாட்டின் தலைமை நிருவாகியான ஜனாதிபதிக்கும் மற்றொன்றை எதிர்கட்சித்தலைவருக்கும் வழங்கிவிட்டோம் அவ்விரண்டு காளைகளும் நிலத்தில் முளைந்துள்ள புல்லை மேய்ந்து ஏர் உழும்நபணியை செய்வதற்கு பதிலாக நாட்டையே மேய்ந்துவிட்டன

சனி, 28 ஜூலை, 2012

நன்பரின் சிக்கலை களைந்து ஆற்றுபடுத்துதல்


என்னுடைய நண்பர் ஒருவர் ஒருநாள் பின்வருமாறு என்னிடம் உதவி கோரினார் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் பணி புரிந்துவந்தேன். இக்காலத்தில் நான் அனுபவம் நிறைய பெற்றும் என்னுடை பணியை அனுபவித்தும் வந்தேன். மேலும், நான் எனது வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு செய்வது மட்டுமல்லாது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் எனது வேலையை முடித்து வந்தேன், மேலும் கூடுதலாக என்னுடைய உதவி தேவைப்படும் போதெல்லாம் என்னுடைய உடனடி மேலதிகாரி அதனை எனக்கு தெரியப்படுத்தியவுடன் நான் எப்போதும் அதனை செய்வதற்கு தயாராக இருந்துவந்தேன். நான் என்னுடைய வேலையில் ஒரு படைப்பு ஆற்றல் கொண்ட அணுகுமுறையை பின்பற்றிவந்தேன் , அதனால் நிறுவனத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மிகவும் பயனுள்ள வழிகளில் தீர்வுசெய்து நிரூபித்துவந்தேன் . என்னுடைய பிரச்சனை என்னவென்றால், எங்களுடைய நிறுவனத்தில் சில முக்கியமான சிக்கலான பிரச்சினை வரும்போதெல்லாம் அதனை தீர்வுசெய்வதற்கான ஆலோசனைகளை அவ்வப்போது நான் என்னுடைய உடனடி மேலதிகாரியிடம் கூறியவுடன் அதனை அவர்செயற்படுத்தி தான்மட்டுமே அந்த தீர்வு ஏற்படுவதற்கு காரணமானவர் என்றும் அந்த பிரச்சினை மிகசுலபமாக தீர்வுசெய்வதற்கு தம்முடைய பங்களிப்பே மிகமுக்கிய காரணம் என்றும் எங்களுடைய மேல்அதிகாரிகளிடம் நல்லபெயரை எனக்கு கிடைப்பதற்கு பதிலாக அவர் தட்டிசெல்வார் இவ்வாறு பலமுறை நடைபெற்றுள்ளன. இது மட்டுமன்றி, அடிக்கடி எனக்கு கூடுதல் பணியை அளித்து உடன்முடித்து தரும்படி என்னுடைய உடனடி மேலதிகாரி கோரியபோதெல்லாம் நான் சோர்ந்து போகாமலும் காலநேரம் பார்க்காமலும் என்னுடைய பணியை செய்துவந்துள்ளேன்

ஆனால் அதற்கு பதிலாக என்னுடைய உடனடி மேலதிகாரியானவர் என் முயற்சிகளை முற்றிலும் புறக்கணித்து விடுவது மட்டமின்றி என் கடின உழைப்பை அங்கீகரிப்பதுகூட கிடையாது, . நான் இவ்வாறு கூடுதல்பணியை சுனக்கமின்றி செய்தது மற்றும் முன்முயற்சி எடுத்துவந்தது தவறு ஒன்றும் இல்லை ,

ஆனால் என்னுடைய உடனடி மேலதிகாரியானவர் இந்த என்னுடைய முயற்சியையும் கடினஉழைப்பையும் அவரது சொந்த முயற்சியாகவும் தன்னுடைய கடின உழைப்பால் இந்த விளைவு ஏற்பட்டதாகவும் எங்களுடைய மேலதிகாரிகளிடம் இதனை காண்பித்து தட்டிபறித்து செல்லும் செயல் எனக்கு துரோகம் செய்வதாகவும் எனக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் நிலையும் உருவாகின்றது இவ்வாறான சிக்கலான சூழலில் குறைந்த பட்சம் அவர் தனது சொந்த பணியை நிறைவேற்ற முடியாதநிலையில் இருந்தும் நான்தான் அதனைசெய்ததாக ஒப்புக்கொண்டிருந்தால்கூட மிகநன்றாக இருந்திருக்கும், இவ்வாறு தொடர்ந்து என்னுடைய கடின உழைப்பை எல்லாம் தன்னுடைய கடினஉழைப்பாக தட்டிபறித்துசெல்வது கண்டிப்பாக நான் என்னுடைய பணியின் நோக்கம் மற்றும் வேலையை துறக்கும்நிலை எனக்கு ஏற்படுத்துகின்றது . நான் இந்த நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்று எனக்கு தெரியாது. நான் என்னுடைய உடனடிமேலதிகாரியிடம் பேச வேண்டுமா அல்லது நான் அவரது மேலதிகாரிகளிடம் சென்று அவரது தவறான நடத்தை பற்றி கூற வேண்டுமா? நான் என்னுடைய இந்த வேலையை விட்டுவெளியேறி வேறொரு புதிய ஒன்றை தேடலாம் என இருக்கின்றேன். நான் முற்றிலும் குழம்பியுள்ளேன் தயவு செய்து. எனக்கு சரியான வழிகாட்டி உதவும்படியும் இந்த குழப்பத்திலிருந்து என்னை விடுவிக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றேன்,

அதற்கு நான் பின்வருமாறு பதிலை அவருக்கு விளக்கமாக அளித்து ஆற்றுபடுத்துதல் செய்தேன்

நம்முடைய இந்த கடின உயர்ந்த உழைப்பை தன்னுடையதாக தட்டிபறித்துசெல்லும் நம்முடைய உடனடி மேலதிகாரியின் செயலினால் நாம் விரக்தியடைந்தும் கலங்கியுள்ளதுமான நிலை முற்றிலும் அனுதாபத்துடன் புரிந்துகொள்ளக்கூடியதாகும், ஆனால் நாம் இந்நிலைமையை மிகநன்றாக திறமையாக சமாளிக்க வேண்டும். முதலில், நம்முடைய மேலதிகாரிகளிடம் உடனடி அதிகாரிகாரியினுடைய இவ்வாறான தவறான செயலை பற்றி அவருடைய முதுகிற்கு பின்னால் சென்று புகார் கூறுவது மிக அபத்தமான செயலாகும் மேலும் நாம் இதனை மேலதிகாரியிடம் இவ்வாறு காட்டிகொடுத்தோம் என விரைவில் அவரால் மிகஎளிதாக கண்டு பிடித்து விட முடியும் அதனைதொடர்ந்து அவர் செய்யும் அனைத்து செயல்களும் நிகழ்வுகளும் நம்முடைய நிலைமையை இன்னும் மோசமானதாக ஆக்கிவிடும் இது ஒரு மோசமான யோசனை ஆகும். மேலும், உடனடி மேலதிகாரி யானவர் நாம் இந்நிறுவனத்திற்கும் அவருக்கும் விசுவாசமாக செயல்படவில்லை என்றும் நாம் நம்முடைய ஆலோசனைகளை மற்றவர்களுடன் பகிர்த்துகொள்வதற்கு பதிலாக நம்முடைய தனிப்பட்ட உயர்வைமட்டுமே நாம் கருத்தில் கொண்டுள்ளதாகவும் ஆகிய தவறான எண்ணத்திற்கு இட்டுசெல்லும் வழிஏற்பட வாய்ப்புள்ளது எனவே பின்வரும் ஒருசில ஆலோசனைகளை இவ்வாறான சூழலில் முயற்சிசெய்து பின்பற்றி இந்த சிக்கலில் இருந்து விடுபடமுயலற்சி செய்யலாம்

உடனடிமேலதிகாரிஏன்அவ்வாறு செய்தார் என நம்முடையஉடனடி மேலதிகாரியிடம் நேரடியாக கேள்விஎழுப்பலாம் அவ்வாறு கேள்வியை எழுப்பும்போது மிகஅமைதியாக கோபம் எதுவும் நமக்கு ஏற்படாமல் பாதுகாக்கவேண்டும் நம்முடைய பேச்சுத்த தொனி மோதல்போக்கு கொண்டதாக இருக்க கூடாது மேலும் பின் கதவு வழியாக சென்று நம்முடைய இந்த கருத்துகளுக்கான அவருடைய பதில்செயல் என்னவாக இருக்கும் என அறிந்துகொள்வது இதற்கு மிகச்சிறந்த தீர்வு ஆகும் . நம்முடைய ஆலோசனைக்கும் முயற்சிகளுக்கும் நாம் எதிர்பார்க்கும் யோசனைக்கும் இந்நிறுவனமேலதிகாரிகள் என்னவகையான ஒப்புதலை வழங்கவிருக்கிறார்கள் என நம்முடைய உடனடிமேலதிகாரிமூலம் அறிந்துகொள்ள முடியும் நம்முடை கடினஉழைப்பிற்கும் முயற்சிக்கும் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றாலும் உடனடிமேலதிகாரி யானவர் நம்முடைய இந்த முயற்சியையும் ஆலோசனையும் கருத்தில் கொணடு நம்முடைய பதவிஉயர்வு கிடைப்பதற்கான காலங்களில் அதனை மிகவிரைவில் கிடைத்திட ஆவன செய்வதற்கான வாய்ப்பை குறிப்பால் நாம் அறிந்துகொள்ளமுடியும்

மற்றொரு வழிமுறையில் சிக்கலை தீர்வுசெய்வதற்கான யோசனைகள் நமக்கு தோன்றியவுடன் அப்படியே அதனை உடனடியாக வெளியிடாமல் தகுந்த நேரம் காலம் வரும்வரை காத்திருந்து அந்நிறுவனத்தின் ஆலோசனைகூட்டம் நடைபெறும் போது அல்லது நம்மைசுற்றி நம்மோடு பணிபுரியும் மற்ற சகபணியாளர்கள் கூட்டமாக குழுமிமற்றவர்கள் கூறுவதை கேட்கதயாரக உள்ள நேரத்தில் மட்டுமே நமது நிறுவனத்தின் சிக்கலை தீர்வுசெய்வதற்கான நம்முடைய சொந்த கருத்துக்களை கூற வேண்டும். இந்த வழியில் நம்முடைய உடனடி அதிகாரியானவர் நம்மை தட்டிகழித்து நம்முடைய ஆலோசனைகளை தம்முடையதாக காண்பித்து நமக்கு கிடைக்கவேண்டிய பாராட்டுகளை அவருடையதாக தட்டிபறிக்கமுடியாது அப்படியே இருந்தாலும், குழுமியிருந்த மற்ற பணியாளர்கள் நம்முடைய கடின உழைப்பாலும் ஆலோசனையாலும் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வுஏற்பட்டுள்ளதாக தெரிந்துகொள்வார்கள் முடிவில் நிறுவனத்தின் உயர்அதிகாரியும் இந்த மேலான உண்மையை தெரிந்து நமக்கு தகுந்த சமயத்தில் பாராட்டுதலும் தக்க சன்மானமும் அவரால் நமக்கு கிடைக்கும் நிலை ஏற்படும்.

குறிப்பு இந்த குறிப்புகள் எந்தபணியாளரும் தன்னுடைய பணியின்போது தாம் எதிர்கொள்ளும் இவ்வாறான சிக்கலை தீர்க்க உதவும் என நம்புகின்றேன்.

வியாழன், 26 ஜூலை, 2012

பங்குசந்தை விளக்கம்


முன்னொரு சமயத்தில் கிராமம் ஒன்றிற்கு வியாபாரியொருவர் வந்து அந்தவூர்மக்களிடம் குரங்கு ஒன்றிற்கு ரூபாய்பத்துவீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் தான் வாங்கி கொள்வதாக அறிவிப்பு செய்தார் உடன் அந்தவூர் கிராமமக்கள் அனைவரும் ஊர்முழுவதும் தேடிபிடித்து குரங்குகளை கொண்டுவந்து அவ்வியாபாரியிடம் குரங்கு ஒன்றிற்கு ரூபாய்பத்துவீதம் விற்றனர் குறிப்பிட்டநாளிற்கு பிறகு குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியை கைவிட்டனர்

பின்னர் அதேவியாபாரி குரங்கு ஒன்றிற்கு ரூபாய் இருபது வீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் வாங்கி கொள்வதாக மறுஅறிவிப்பு செய்தார் மீண்டும் மக்கள் புதுஉத்வேகம் பெற்று ஊருக்குஅருகிலிருக்கும் தம்முடைய நிலங்களில் சுற்றிதிரிந்த குரங்குகளை தேடிபிடித்து கொண்டுவந்து குரங்கு ஒன்றிற்கு ரூபாய் இருபது வீதம் விற்பனை செய்தனர் குறிப்பிட்டநாளிற்கு பிறகு குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியை கைவிட்டனர்

அதன்பின்னர் அதேவியாபாரி மூன்றாவது முறையாக குரங்கு ஒன்றிற்கு ரூபாய் முப்பது வீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் வாங்கி கொள்வதாக மூன்றாவது முறையாக மறுஅறிவிப்பு செய்தார் மூன்றாவதுமுறையாக மீண்டும் மக்கள் புதுஉத்வேகம் பெற்று தம்முடைய நிலங்களுக்கு அருகிலிருக்கும் காடுகளில் சுற்றிதிரிந்த குரங்குகளை தேடிபிடித்து கொண்டுவந்து குரங்கு ஒன்றிற்கு ரூபாய் முப்பது வீதம் விற்பனை செய்தனர் குறிப்பிட்டநாளிற்கு பிறகு குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியை கைவிட்டனர்

அதன்பின்னர் அதேவியாபாரி நான்காவது முறையாக குரங்கு ஒன்றிற்கு ரூபாய் நாற்பது வீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் வாங்கி கொள்வதாக நான்காவது முறையாக மறுஅறிவிப்பு செய்தார் நான்காவது முறையாக மீண்டும் மக்கள் புதுஉத்வேகம் பெற்று தம்முடைய ஊரின் அனைத்து இடங்களிலும் தேடியும் ஒருசிலகுரங்குகளே கிடைத்தன அதனை கொண்டுவந்து குரங்கு ஒன்றிற்கு ரூபாய் நாற்பது வீதம் விற்பனை செய்தனர் அதற்கு மேலும் குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியையே கைவிட்டனர்

இந்நிலையில் அந்த குரங்கு வாங்கும் வியாபாரி தம்முடைய உதவியாளரை அழைத்து தமக்குபதிலாக இந்த குரங்கு வாங்கும் பணியை பார்த்துகொள்ளுமாறும் தான் தம்முடைய ஊருக்கு சென்றுவருவதாகவும் கூறி சென்றார்

மறுநாள் அவ்வியாபாரியின் உதவியாளர் அவ்வூர் மக்களிடம் தான் பாதுகாத்து வைத்துள்ள குரங்குகளை குரங்குஒன்றிற்கு முப்பதுவீதம் விற்பனைசெய்யவிருப்பதாகவும் தம்முடைய முதலாளி வந்தால் அதே குரங்குகளை குரங்குஒன்றிற்கு நாற்பதுவீதம் வாங்கிகொள்வார் என்றும் புதிய அறிவிப்பினை வெளியிட்டார்

இந்த புதியஅறிவிப்பினை கேள்விபட்ட அவ்வூர் மக்கள் அனைவரும் இன்று அக்குரங்களை வாங்கி அதேகுரங்களை நாளை அந்த வியாபாரியிடம் விற்பனைசெய்தால் நமக்கு ஒரேநாளில் குரங்கு ஒன்றிற்கு பத்துரூபாயும் அலைந்து திரிந்து தேடிபிடிக்கும் சிரமம் எதுவுமில்லாமல் கிடைக்குமே என்ற பேராசை கொண்டு தம்முடைய சேமிப்புகள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து கூண்டிலிருந்த அனைத்து குரங்குகளையும் குரங்குஒன்றிற்கு முப்பதுவீதம் வாங்கிகொண்டனர்

அவ்வாறு அனைத்து குரங்குகளும் விற்றவுடன் அதாவது அவ்வூர் மக்களிடம் பொருட்களை வாங்கி அவ்வூர் மக்களிடமே அதிக இலாபத்துடன் விற்பனை செய்த பணத்தினை எடுத்துகொண்டு அவ்வியாபாரியின் உதவியாளர் அன்று சாயுங்காலமே மறுநாள் தம்முடைய முதலாளி வருவார் என உறுதிகூறி தம்முடைய ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்

பிறகு மறுநாள் அக்குரங்கு வியாபாரி திரும்பி வரவேயில்லை மறுநாள் மட்டுமல்லாது எப்போதுமே அக்குரங்கு வியாபாரியும் அவருடைய உதவியாளரும் அவ்வூர்பக்கம் திரும்பி வந்ததேயில்லை பழையபடி குரங்குகள் மட்டுமே அவ்வூர்முழுவதும் சுற்றிதிரிந்தன இதுதான் ஒருபங்கு சந்தையின் நடைமுறையாகும்

ஒரு விவசாயியின் எதிர்காலம்?


எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி. அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.

மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.

அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.

சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.

கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப் போட்டு விட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார். அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர்.

சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார். இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார். குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.

இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார்.

இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது? இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும். வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது.

அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும். விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்

(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு). நன்றி. தினமனி

செவ்வாய், 5 ஜூன், 2012

பொறுப்பு வரையறுக்கபட்ட கூட்டாண்மை (limited liability partnership )


Limited liability partnership (LLP) ஒரு அறிமுகம் ஒரு பொறுப்பு வரையறுக்கபட்ட கூட்டாண்மை (limited liability partnership )(LLP) என்பது கூட்டுவாணிகம் மற்றும் கூட்டாண்மைக்குரிய அமைப்புமுறைகளின் ஒன்றாகும். இந்திய நாட்டின் அதிகார எல்லைகளின் பெரும்பான்மை சட்டத்தில் தொழில் நிறுவனத்தின் சட்ட வடிவமான இது அதன் உரிமையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பை வழங்குகிறது. பெரும்பாலும் தவறாக (நிறுமத்திற்க்கு பதிலாக) "வரையறுக்கப்பட்ட பொறுப்பு பெருநிறுமம்" என அழைக்கப்படும் சேர்க்கைத் தொழில் உட்பொருளான இது பெருநிறுமம் மற்றும் கூட்டாண்மை (எவ்வளவு உரிமையாளர்கள் உள்ளனர் என்பதைப் பொருத்து) இரண்டையும் முடிவான தனிச்சிறப்புப் பண்பாகக் கொண்டிருக்கிறது. இந்த LLP என்பது ஒரு தொழில் உட்பொருளாக இருந்தாலும் அது ஒரு கூட்டுருவாக்கப்படாத கழகத்தின் வகையாகும். மேலும் இது ஒரு பெருநிறுமம் அன்று. இது ஒரு கூட்டாண்மை மற்றும் பெருநிறுமம் இரண்டிற்கும் உள்ள முதன்மையான பண்பு வரையறுக்கப்பட்ட கடப்பாடு ஆகும். மேலும் பெருநிறும்ம் மற்றும் கூட்டாண்மை இரண்டிற்கும் உள்ள முதன்மையான பண்பு இருப்பு ஆகும். இது பெரும்பாலும் கூட்டுநிறுவனத்தைக் காட்டிலும் மிகவும் இணக்கமானதாக உள்ளது. மேலும் இது ஒற்றை உரிமையாளரைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

1.பொறுப்பு வரையறுக்கபட்ட கூட்டாண்மை (limited liability partnership )என்பதன் கருத்துரு 1.ஒரு LLP என்பது ஒரு பெரு வியாபார நிறுமத்திற்கு மாற்றானது ஆனால் அதே சமயத்தில்இந்த LLP ஆனது ஒருபெரு வியாபார நிறுமத்தின் நன்மைகளும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் நெகிழ்வுதன்மைகளும் தன்னகத்தே கொண்டது 2 ஒரு LLP யிலிருந்து அதனுடைய கூட்டாளிகள் ஒருசிலர் விலகினாலும் ஒரு சிலர் சேர்ந்தாலும் அந்த LLPக்கூட்டாண்மை நிறுவனம் கலைக்கபடமாட்டாது தொடர்ந்து அது ஒரு பெரு வியாபார நிறுமத்தை போன்று நிலைத்த தன்மை கொண்டதாக இருக்கும் மேலும் இந்த LLP கூட்டாண்மை நிறுவனமானது தன்பெயரில் ஒப்பந்தம் செய்துகொள்ளவும் சொத்துகளை தன்பெயரில் வைத்திருக்கவும் உரிமையை தன்மையை கொண்டது ஆகும் 3 ஒரு LLP ஆனது சட்டபடியான தனிஉருவும் தனித்தன்மையும் கொண்டதாகும் ஒரு LLP ஆனது அது தன்னகத்தே கொண்டிருக்கும் சொத்தின் அளவிற்கு ஏற்ப பொறுப்பை ஏற்கும் தன்மை கொண்டதாகும் ஆயினும் அதனுடைய கூட்டாளிகளின் பொறுப்பானது ஒரு வியாபார நிறுமத்தின் உறுப்பினர்களுக்கு இருப்பதை போன்று வரையறுக்கபட்டதாகும் 4ஒரு LLP-யில் தனிப்பட்ட அல்லது அனுமதியற்ற மற்ற கூட்டாளிகளின் செயல்களினால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்தவொரு கூட்டாளியும் பொறுப்பாக மாட்டார்.அதாவது மற்ற கூட்டாளிகளால் சேர்ந்து எடுக்கபட்ட தவறான வியாபார முடிவுகளினாலும் அல்லது தவறான செயலினாலும் ஏற்படும் இழப்புகளுக்கு தனிப்பட்ட கூட்டாளிகள் பொறுப்பாக மாட்டார் அவர்களுக்கு இதன்மூலம் சட்டபடியான பாதுகாப்பு அளிக்கபடுகின்றது 5 கூட்டாளிகள் தங்களுக்குள் அல்லது கூட்டாளிகள் LLPஉடன் சேர்ந்தும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வதை இந்த LLPஆனது அனுமதிக்கின்றது ஆயினும் இதனால் ஏற்படும் இழப்பை இந்த LLPயின் தனித்தன்மையினால் ஏற்படும் மற்ற பொறுப்புகள் எதுவும் மாற்றபடமாட்டாது மேற்கண்ட கூற்றுகளின் அடிப்படையில் ஒரு LLP ஆனது ஒரு வியாபார நிறுமத்தின் கட்டமைவுகளும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கட்டமைவகளும் ஒருங்கிணைக்கபட்ட புதியதொரு கூட்டாண்மை நிறுமம் ஆகும் அதாவது ஒரு LLP ஆனது மேம்பட்ட தொரு கூட்டாண்மையும் ஒரு வியாபார நிறுமும் சேர்த்து உருவாக்கிய புதிய கூட்டண்மை நிறுமமாகும்

2.ஒரு LLPஇன் கட்டமைவு ஒரு LLP என்பது ஒரு கூட்டுநிறுவன அமைப்பாகும் இது அதன் கூட்டாளிகளிடமிருந்து வேறுபட்ட தனிப் பட்ட உருகொண்ட சட்டஅமைப்பாகும் இது நிரந்தர நிலைத்தன்மை கொண்டதாகும் அதாவது பெருநிறுமத்தை போன்று கூட்டாளிகள் விலகினாலும் சேர்ந்தாலும் இதன் செயல் நிலையான தன்மை கொண்டதாகும்

ஞாயிறு, 27 மே, 2012

ஒரு நிறுவனத்தின் மேலாளரும் ஒரு நல்ல தலைவனும் சமமானவர்களா


ஒரு நிறுவனத்தின் மேலாளரும் ஒரு நல்ல தலைவனும் சமமானவர்களா எனில் பின்வரும் காரணங்களினால் இருவரும் சமமானவர்கள் அன்று என தெரியவரும் 1 ஒரு நிறுவனத்தின் மேலாளர் முன்கூட்டியே திட்டமிடபப்பட்ட அந்நிறுவனத்தின் குறிக்கோளை அடைவதற்காக தம்முடைய குழு சரியான நோக்கில் செயல்படுகின்றதா என மேற்பார்வை யிடுகின்றார் ஒரு நல்ல தலைவன் தம்முடைய குழுசரியான முடிவை அடைவதற்காக குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கின்றார்

2 ஒரு நிறுவனத்தின் மேலாளர் சரியான முடிவை அடைய குழுஉறுப்பினர்களின் செயலை மேற்பார்வையிடுகின்றார் ஒரு நல்ல தலைவன் சரியான முடிவை அடைய குழு உறுப்பினர்களுடன் தாமும் ஒரு உறுப்பினராக சேர்ந்து செயல்படுகின்றார்

3 ஒரு நிறுவனத்தின் மேலாளரின் குறிக்கோள் சரியான முடிவை அடைவதாகும் ஒரு நல்ல தலைவனின் குறிக்கோள்தம்முடைய குழு உறுப்பினர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதாகும்

4ஒரு நிறுவனத்தின் மேலாளரின் செயல் அந்நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுதல்களாகும் ஒரு நல்ல தலைவனின் செயல் அந்நிறுவனத்தின் சிறந்த வழிகாட்டுதல்களை உருவாக்குவதாகும்

5ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ் பணிபுரிபவர்கள் தாம் இட்டபணியை சரியாக செய்கின்றார்களா என மேற்பார்வையிடுவதாகும் ஒரு நல்ல தலைவன் தம்முடைய குழுஉறுப்பினர்களின் செயல் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு சரியாக வழிகாட்டுதல்களை செய்கின்றார்

6ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ் பணிபுரிபவர்களில் தவறு செய்பவர்களை தண்டிக்கின்றார் ஒரு நல்ல தலைவன் தம்கீழ் பணிபுரிபவர்கள் தவறுசெய்தால் அதனை ஆய்வுசெய்து சரியாக செய்வதற்காக வழிகாட்டுகின்றார்

7ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ் பணிபுரிபவர்களுக்கு அந்நிறுவனத்தின் குறிக்கோளை அடைவதற்காக எவ்வாறு செயல்படவேண்டும் என கட்டளை யிடுகின்றார் ஒரு நல்ல தலைவன் தம்கீழ் பணிபுரிபவர்களின் செயலை கவணித்து அக்குழுவின் குறிக்கோளை அடைவதற்கான வழியை அவர்களே பெறுமாறு செய்கின்றார்

8ஒரு நிறுவனத்தின் மேலாளர் அந்நிறுவனத்தின் குறிக்கோளை அடைவதற்கான செயல் எந்த நிலையில் உள்ளது என ஆய்வுசெய்வதற்காக அவ்வப்போது தம்கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் கூட்டத்தை கூடுவதற்காக கட்டளை இடுகின்றார் ஒரு நல்ல தலைவன் அக்குழுவின் கூட்டத்தை கூட்டி தம்முடைய குறிக்கோளை அடைவதற்கான செயல் எந்த நிலையில் உள்ளது என விவாதித்து முடிவுசெய்திடுமாறு ஊக்கவிக்கின்றார்

9ஒரு நிறுவனத்தின் மேலாளர் குழு உறுப்பினர்களின் அவரவர்களுக்கு உரிய மரியாதையை கட்டுபடுத்துபவர் ஆவார் ஒரு நல்ல தலைவன் குழுஉறுப்பினர்களின் மரியாதையை அவரவர்களுக்கு உரியதாக்குகின்றார்

10 ஒரு நிறுவனத்தின் மேலாளரின் அனுகுமுறை தொழில்நுட்பம் சார்ந்ததாகும் ஒரு நல்ல தலைவனின் அனுகுமுறை பகுத்தாயும் செயலாகும்

11 ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ்பணிபுரிபவர்களின் செயலை ஈடு செய்கின்றார் ஒரு நல்ல தலைவன் தம்கீழ் பணிபுவர்களின் செயலை ஊக்குவிக்கின்றார்

12 ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ்பணிபுரிபவர்களிடம் எப்போதும் கட்டளை யிடும் தொனியிலேயே பேசுகின்றார் ஒரு நல்ல தலைவன் தம்கீழ் பணிபுவர்களிடம் அறிவுரை கூறும் தொனியில் பேசுகின்றார்

திங்கள், 14 மே, 2012

மக்கள் தொடர்பு கலையை எவ்வாறு வளர்த்து மேம்படுத்துவது


தற்போது நாம் அனைவரும் ஒரு குழுவாக சமுதாயமாக சேர்ந்து வாழும் நிலையில் இருந்து வருகின்றோம்.இந்நிலையில் ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏதேனுமொரு தகவலை எவ்வாறு அளிப்பது என்பது மிக முக்கியமான தகவல்தொடர்பு கலையாகும் இவ்வாறான சமுதாயத்தோடு தொடர்பு கொள்வதற்கான தகவல் தொடர்பு திறனை பின்வரும் வழிகளில் மேம்படுத்தலாம்

1.மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு நம்முடைய செய்தியை பகிர்ந்து கொள்ளும் முதல் படிமுறையாக நம்மைவிட வயதில் மூத்தவர்களை உறவுமுறையிலும் நம்மைவிட இளையோரை பெயரிட்டும் அழைத்து தொடர்பு கொள்வது இருவருக்குமான தொடர்பை மிக நெருக்கமானதாக அமைத்திடும்

2. நாம் கூறவரும் செய்தியை மிக விரிவாக எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி கூறுவது நன்று

3. நாம் கூறவிரும்பும் செய்தி தொடர்பான அனைத்து விவரங்களையும் அதனுடன் சேர்த்து விவரமாக கூறுவது நன்று

4. தகவலை கூற ஆரம்பிக்கும்போதே அதன் முடிவை கூறுவது நாம் கூற விரும்பும் செய்தியை கேட்பவர்கள் அரைகுறையாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும் அதனால் முதலிலிருந்து வரிசை கிரமமாக செய்தி தொடர்பு விவரங்கள் அனைத்தையும் கூறுவது அதனினும் நன்று

5.செய்தியை மறைமுகமாக யூகித்து அறியுமாறு கூறுவது சரியன்று அதாவது நாம் கூறவிழையும் செய்தி ஒன்றாகவும் அதிலிருந்து பெறுபவர் அறிந்து கொண்ட செய்தி வேறுஒன்றாகவும் இருந்திடுமாறு கூறவேண்டாம்

6. நாம் கூறவிழையும் செய்தி நம்முடைய சொந்த சொற்களாக இருக்கவேண்டும் திரித்து புனைந்து கூறியதாக இருக்கவேண்டாம்

7.கூறும் செய்தி தெளிவாகவும் எளிதாகவும் பெறுபவர் அறிந்து கொள்ளும் வகையிலும் இருந்திடுமாறு பார்த்துகொள்க

8 பெறுபவர் கூறும் செய்திகேற்றவாறு நம்முடைய பதில் இருக்குமாறு பார்த்து கொள்க பதில் செயல் தேவையில்லை

இவ்வாறு மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நம்முடைய செய்தி தொடர்பு கலையை வளர்த்து மேம்படுத்தி கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...