செவ்வாய், 29 ஜனவரி, 2013

போலியான வேலைவாய்ப்பு விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள்


சரவணன் என்பவர் கடந்தமாதம் மாருதி சுசுகி மோட்டார் என்ற நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தை கண்டு விண்ணப்பித்தார். உடன் அவருக்கு மின்னஞ்சல் ஒன்று வருகின்றது அதில் இவர் விண்ணப்பித்த குறிப்பிட்ட வேலைக்கு தெரிவு செய்யபட்டுள்ளதாகவும் உடன் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கணக்கில் ரூபாய் 20,000/-ஐ உடன் செலுத்தினால் பணியில் சேரலாம் எனவும் குறிப்பிடபட்டிருந்ததை அறிந்து உடன் அங்கிங்கு என அலைந்து கடன்வாங்கி இந்த தொகையை அவருக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிடபட்ட பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் ரூபாய் 20,000/- ஐ செலுத்தி தமக்கு பணிக்கான உத்திரவு வந்துசேரும் என காத்திருந்தார்

ஆனால் இந்த நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவிலிருந்து போலியான விளம்பரத்திற்கு காப்புத்தொகை செலுத்தியதற்காக ஏன்உங்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்ற அறிவிப்பு தான் இவருக்கு கிடைக்கபெற்றது

ஆம் இவ்வாறான போலியான விளம்பரங்களின்மூலம் படித்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களிடமிருந்து காப்புத்துதொகை என்றும் இதர செலவினத்தொகை என்றும் அபகரிக்கும் போக்கு இன்று அதிகரித்துள்ளது மிகவருத்தத்திற்குரிய நிலையாகும்

மேலும் சமீபத்தில் பார்மா ரேன்பேக்ஸி லேபோரேட்டரிஸ் என்ற நிறுவனம் ஆனது தங்களுடைய நிறுவனம் ஆட்களை பணிக்கு அமர்த்துவதற்காக காப்புத்தொகை, நடைமுறை செலவிற்கான கட்டணம் அல்லது இதர கட்டணம் என எதுவும் தங்களுடைய நிறுவனத்திற்கான பணியாட்களை தேர்வுசெய்யும்போது வசூலிப்பது இல்லை எனவிளம்பரம் செய்கின்றது . பொதுமக்கள் அதுவும் மேற்படிப்புகள், தொழில்சார்ந்த படிப்புகளை படித்தபின் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போர் கண்டிப்பாக மேலே முதல் பத்தியில் கூறியவாறான போலியான விளம்பரங்களையோ வாக்குறுதிகளையோ குறிப்பிட்ட நிறுவனத்தின் லோகோவை கொண்டு ஏமாற்றபடுவதிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

உழைப்பின் அருமை


உழைப்பால் உயர்ந்த மிகப்பெரிய வியாபாரி ஒருவரும் அதற்கு மறுதலையாக மிகவும் சோம்பேறியான அவருடைய மகனும் இருந்தனர்

உழைப்பின் வலிமையையும் அதன் அருமையையும் தன்மகனுக்கு புரிந்துகொள்ளவும் அதன்படி தன்னுடைய மகன் நடந்துகொள்ளவும் செய்திட விரும்பினார்

அதனால் தன் மகனை அழைத்து அன்று ஏதாவது வேலையை செய்து அதன்மூலம் பொருள் ஈட்டி வந்தால் மட்டுமே அவனுக்கு அன்றைய உணவு வழங்கபடும் என திட்டவட்டமாக கூறி தன்னுடைய வியாபார பணியை பார்ப்பதற்கு சென்றுவிட்டார் சோம்பேறி மகன் எவ்வாறு உடல் உழைப்பில்லாமல் பொருள்ஈட்டுவது என வழிஎதுவும் தெரியாமல் அழுதுகொண்டிருந்தான் இதனை கண்ணுற்ற அவனுடைய தாயானாவள் பெண்ணல்லவா அதனால் தான் பெற்றெடுத்த மகன் கண்ணீர்விட்டு அழுவது பொறுக்கமுடியாமல் தன்னிடம் இருந்த தங்க காசு ஒன்றினை கொடுத்து அன்றைய பொழுது அவனாக உழைத்து அந்த தங்க காசினை சம்பாதித்ததாக அவனுடைய அப்பாவிடம் காண்பிக்குமாறு அறிவுரை கூறனாள்

அன்றைய இரவு அந்த சோம்பேறி மகனும் அந்த தங்க காசினை தான் உழைத்து சம்பாதித்ததாக தன்னுடைய தந்தையிடம் காண்பித்தான் நல்லது மகனே இந்த தங்ககாசினை நம்முடைய வீட்டில் உள்ள கிணற்றில் வீசி எறிந்துவிட்டுவா நம்முடைய இரவு உணவை அருந்த செல்லலாம் என அந்த தந்தை கூறியவுடன் சோம்பேறி மகன் உடன் தயக்கம் ஏதுமில்லாமல் அந்த தங்ககாசினை கிணற்றுக்குள் வீசிஎறிந்தபின் தன்னுடைய தந்தையுடன் இரவு உணவு அருந்த சென்றான் உடன் தந்தையானவர் அவருடைய மனைவியை அவர்களின் தாய்வீட்டிற்கு ஓரிருநாட்கள் சென்றிருந்துவிட்டுவருமாறு பணித்தார்

மறுநாள் அதேபோன்று தன் மகனை அழைத்து அன்று ஏதாவது வேலையை செய்து அதன்மூலம் பொருள் ஈட்டி வந்தால் மட்டுமே அவனுக்கு அன்றைய உணவு வழங்கபடும் என திட்டவட்டமாக கூறி தன்னுடைய வியாபார பணியை பார்ப்பதற்கு சென்றுவிட்டார்

சோம்பேறி மகன் எவ்வாறு உடல் உழைப்பில்லாமல் பொருள்ஈட்டுவது என வழிதெரியாமல் அழுதுகொண்டிருந்தான் இதனை கண்ணுற்ற அவனுடைய சகோதரியானாவள் பெண்ணல்லவா அதனால் தன்னுடைய சகோதரன் கண்ணீர்விட்டு அழுவது பொறுக்கமுடியாமல் தன்னிடம் இருந்த தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் ஒரு நூறுரூபாய் தாள் ஒன்றினை கொடுத்து அவனுடைய அப்பாவிடம் அன்றைய பொழுது அவனாக உழைத்து அந்த நூறுரூபாயை அவன் சம்பாதித்ததாக காண்பிக்குமாறு அறிவுரை கூறனாள்

அன்றைய இரவு அந்த சோம்பேறி மகனும் அந்த நூறுரூபாயை தான் உழைத்து சம்பாதித்ததாக தன்னுடைய தந்தையிடம் காண்பித்தான் நல்லது மகனே இந்த நூறுரூபாயை நம்முடைய வீட்டில் உள்ள கிணற்றில் வீசி எறிந்துவிட்டுவா நம்முடைய இரவு உணவை அருந்த செல்லலாம் எனஅந்த தந்தை கூறியவுடன் சோம்பேறி மகன் உடன் அந்த நூறுரூபாயை கிணற்றுக்குள் வீசிஎறிந்தபின் தன்னுடைய தந்தையுடன் இரவு உணவு அருந்த சென்றான் உடன் தந்தையானவர் அவருடைய மகளை அழைத்து அவர்களின் உறவினர் வீட்டிற்கு ஓரிருநாட்கள் சென்றிருந்துவிட்டுவருமாறு பணித்தார்

மூன்றாம்நாள் அதேபோன்று தன் மகனை அழைத்து அன்று ஏதாவது வேலையை செய்து அதன்மூலம் பொருள் ஈட்டி வந்தால் மட்டுமே அவனுக்கு அன்றைய உணவு வழங்கபடும் என திட்டவட்டமாக கூறி தன்னுடைய வியாபார பணியை பார்ப்பதற்கு சென்றுவிட்டார்

சோம்பேறி மகன் எவ்வாறு உடல் உழைப்பில்லாமல் பொருள்ஈட்டுவது என வழிதெரியாமல் அழுதுகொண்டிருந்தான் அவனுக்கு உதவுவதற்காக இருந்த அவனுடைய தாயும் சகோதரியும் உடன் இல்லாத்தால் வேறு வழிஇல்லாமல் கடைத்தெருவிற்கு சென்ற அன்று அவன் செய்வதற்கு தகுந்த வேலை ஏதாவது கிடைக்குமா என தேடினான்

அங்கு ஒரு சிறுவியாபாரி மொத்தவியாபார கடையில் தான் வாங்கிய பொருட்களை மூட்டையாக கட்டிவைத்துவிட்டு யாராவது அதனை தூக்கி செல்வதற்கு கூலிஆட்கள் கிடைப்பார்களா என தேடியபோது இந்த சோம்பேறி மகன் அந்த பணியை தான் செய்வதாகவும் அதற்காக ஐம்பது ரூபாய் மட்டும் அவனுக்கு கொடுத்தால் போதுமென கூற அவரும் சம்மதித்து அந்த மூட்டைய அவனுடைய தோளில் தூக்கிகொண்டு அவரை பின்பற்றி சென்றான்

இந்த சுமையை தூக்கிகொண்டு நடக்கும் போது இதுவரையில் சுகபோக இருந்தவனாதலால் அவனுடைய உடல்முழுவதும் அதிக வலி ஏற்பட்டது மிக களைப்பாக இருந்தது ஒருவழியாக அதனை அவர் கூறிய இடம் வரை எடுத்து சென்று சுமையை இறக்கி வைத்ததும் அவர் அவனுக்கு ரூபாய் ஐம்பதை கொடுத்தார்

அன்றைய இரவு அந்த சோம்பேறி மகனும் அந்த ஐம்பது ரூபாய் தாளை தான் உழைத்து சம்பாதித்ததாக தன்னுடைய தந்தையிடம் காண்பித்தான் நல்லது மகனே இந்த ஐம்பது ரூபாய் தாளை நம்முடைய வீட்டில் உள்ள கிணற்றில் வீசி எறிந்துவிட்டுவா நம்முடைய இரவு உணவை அருந்த செல்லலாம் எனஅந்த தந்தை கூறியபின் அந்த சோம்பேறி மகன் அதுஎப்படியப்பா நான் உடல் வலியோடு மிக கஷ்டபட்டு மூட்டையை தூக்கிசென்று சம்பாதித்த பணத்தை நம்முடைய வீட்டு கிணற்றில் வீசிஎறியமுடியும் என மறுத்தான்

ஆம் மகனே நேற்றும் அதற்கு முந்தையநாளும் நீவருந்தி உழைக்காமல் உன்னுடைய கைக்கு கிடைத்த பணம் என்பதால் நான்கூறியவுடன் எந்த மறுப்பும் கூறாமல் நம்முடைய கிணற்றில் அவைகளை வீசிஎறிந்தாய் ஆனால் இன்று உன்னுடைய உடல் உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தினை வீசிஎறிய தயங்குகின்றாய் உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் இன்றுதான உனக்கு தெரிந்தது அதனால் நாளைமுதல் நம்முடைய வியாபார நிறுவனத்திற்கு வந்து அதனை எவ்வாறு நிருவகிப்பது என என்மூலம் அறிந்துகொள் என அறிவுரைகூறியபின் அன்றைய இரவு தன்னுடைய தந்தையுடன் உணவு அருந்த சென்றான்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...