செவ்வாய், 30 டிசம்பர், 2014

தற்போது வாழும் மக்கள் நம்மைவிட நாம் பயன்படுத்தும்விலையுயர்ந்த உடைக்கும் , விலையுயர்ந்த வாகணங்களுக்கும் தான் மதிப்பை வழங்குகின்றனரே அன்றி அதனை பயன்படுத்தும் மக்களுக்கு அன்று


நல்ல புகழ்வாய்ந்த கவிஞர் ஒருவர் இருந்தார் அவருடைய சிறந்த கருத்துகளடங்கிய உரையினாலும் அறிவுரைகளினாலும் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.ஆயினும் அவர் மிக எளிமையாக வாழ்ந்துவந்தார்.

அவர்வாழ்ந்துவந்த ஊருக்கு அருகிலிருந்த நகரத்தில் ஒரு பெரும் பணக்காரர் தன்னுடைய மகனுக்கு நடத்தவிருந்த திருமண விழாவிற்கு இந்த கவிஞரை கண்டிப்பாக வந்து மணமக்களை வாழ்த்தும்படி கோரி அழைப்பிதழை நேரில் வந்து வழங்கிசென்றார்

குறிப்பிட்ட நாளன்று அந்த திருமணவிழாவிற்கு மிக சாதாரணமான எளிமையான உடையணிந்த அந்த கவிஞரும் அந்த பணக்காரரின் மகனுடைய திருமண விழாவிற்கு சென்றார் விழா மண்டபத்தின் நுழைவுவாயிலை அடைந்தபோது பளபளவென மின்னும் விலையுயர்ந்த பட்டாடைகளையும் காலணிகளையும் அணிந்த பல பணக்காரர்கள் மகிழ்வுந்து வண்டிகளில் தங்களின் மணைவிமார்களுடன் வந்து இறங்கியதை தொடர்ந்து அந்த பணக்காரரும் ஓடிஓடி சென்று அவர்களை வரவேற்றார்

ஆனால் நீண்டநேரம் நுழைவுவாயிலில் நின்றுகொண்டிருந்த இந்த எளிமையான கவிஞனை என்னவென கூட விசாரிக்காமலும் வரவேற்பு செய்யாமலும் இருந்ததை கண்ணுற்ற அந்த கவிஞர் உடன் வேகமாக அருகில் அதேதெருவில் இருந்த வாடகை துணிகள் வழங்கும் கடைக்கு சென்று விலையுயர்ந்த பட்டாடையையும் காலணிகளையும் வாடகைக்கு பெற்று அணிந்து அதே பணக்காரர் வீட்டு திருமணவிழா மண்டபத்திற்கு வந்தார்

அப்போது அந்த பணக்காரர் வாருங்கள் வாருங்கள் கவிஞர் அவர்களே என முகமலர்ந்து வரவேற்றார்

அதோடுமட்டுமல்லாது அனைவரும் விருந்து உண்ணும் நேரம் வந்ததால் கவிஞரையும் நேராக விருந்து நடைபெறும் கூடத்திற்கு அழைத்து சென்று அமரவைத்து பணியாளர்களை அழைத்து கவிஞருக்கு மிக உயர்ந்த உணவுவகைகளை பரிமாறசெய்து மற்ற விருந்தாளிகளை உபசரிக்க வேறுபக்கம் சென்று திரும்பவும் அந்த கவிஞர் உணவருந்தும் இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த கவிஞர் அவருடைய இலையில் பரிமாறபட்ட விலைமிகுந்த உணவுவகைகளை பட்டாடையிலும் துணிகளிலும் எடுத்து தேய்த்து கொண்டிருந்தார்

அதனை கண்ட அந்த பணக்காரர் என்ன கவிஞரே விலையுயர்ந்த பட்டாடைகளை இவ்வாறு வீணாக்குகின்றீர் என வினவியபோது ஐயா நான் இந்த திருமண விழாவிற்கு எளிமையான என்னுடைய சொந்த உடையில் வந்து நீண்டநேரம் காத்திருந்தபோது நீங்கள் என்னை கண்டுகொள்ளவே யில்லை ஆனால் நல்ல விலையுயர்ந்த இந்த பட்டாடைகளை அணிந்த வந்தபோதுமட்டும் மிக விமரிசையாக வரவேற்பு செய்து என்னை இந்த விருந்துநடைபெறும்கூடம் வரைவந்து விருந்தினை பரிமாற செய்தீர்கள்

அதனால் நீங்கள் நான் அணிந்த பட்டாடைக்குதானே மரியாதைசெய்தீர்கள் விருந்துணவை பரிமாறினீர்கள் அதனால்தான் இந்த விருந்து எனக்கன்று நான் அணிந்திருக்கின்ற இந்த பட்டாடைக்கு என்பதால் இந்த விலையுயர்ந்த பட்டாடையை இந்த விருந்துணவை உண்ணும்படி செய்கின்றேன் என கூறினார்

ஆம் தற்போது நம்மோட வாழும் மக்கள் கூட நம்மைவிட நாம் பயன்படுத்தும்விலையுயர்ந்த உடைக்கும் விலையுயர்ந்த வாகணங்களுக்கும் தான் மதிப்பை வழங்குகின்றனரே அன்றி அதனை பயன்படுத்தும் மக்களுக்கு அன்று என அறிந்துகொள்க

எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைக்கும் சிக்கல் இல்லாத எளிய தீர்வை கண்டு செயல்படுத்தி பயன்பெறுக


ஆவின் நிறுவனத்தில் பால்கோவாஉற்பத்தி செய்திடும் பகுதியில் உற்பத்தி செய்த பால்கோவாவை சிறிய பெட்டியில் வைத்து கட்டும் பிரிவு ஒன்று இருந்தது அவ்விடத்தில் நூறு பெட்டிக்கு ஒன்று என்றவாறு அவ்வப்போது பால்கோவாவை பெட்டியில் வைத்து கட்டபடாமல் இடையிடையே காலியான பெட்டிகளும் வெளியில் வந்துகொண்டிருந்தன.

இதனை அறிந்த ஆவின் நிறுவனத்தின் மேலாண்இயக்குநர் தனக்கு கீழ் பணிபுரியும் உற்பத்தி மேலாளரையும் பால்கோவாவை பெட்டியில் வைத்து கட்டபடும்பிரிவு மேற்பார்வையாளரையும் பணியாளர்களையும் அழைத்து கண்டிப்பாக இவ்வாறானநிகழ்வு ஏற்பட்டால் சம்பந்தபட்ட அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்தார்.

அதன்பின் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வு செய்வது என்று தலைமை அலுவலர்களின் கூட்டத்தில் ஆய்வுசெய்தபோது உற்பத்தி பொறியாளர் அந்தஇடத்தில் எக்ஸ்-ரே கருவி ஒன்றை அமைத்து பெட்டிகளில் ஏதேனும் காலியாக சென்றுகொண்டிருந்தால் அதனை கண்டுபிடித்திடவும் அதனடிப்படையில் அந்த காலிபெட்டியில் மட்டும் மீண்டும் பால்கோவாவை வைத்து கட்டி அனுப்பிடுமாறு செய்தால் இந்த பிரச்சினை தீர்வுசெய்யபட்டுவிடும் என கூறியதை ஏற்று அந்த தலைமை அலுவலர்கள் கூட்டத்தில் அதனையே செயல்படுத்துவது என ஒருமனதாக முடிவுசெய்தனர்.

அதனைதொடர்ந்து அந்ததீர்வை நடைமுறைபடுத்தினர் இந்நிலையில் அந்நிறுவனத்தில் உற்பத்தி கணக்கருக்கு இந்த செய்தி கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார் பிறகு அங்கு இந்த எக்ஸ்ரே கருவிக்கு பதிலாக ஒரு காற்றாடி ஒன்றை அமைக்கும்படி கூறி அந்த காற்றாடியின் சுழற்சியினால் ஏற்படும் வேகமான காற்றோட்டத்தின்மூலம் காலியான பெட்டி மட்டும் அந்த காற்றில் பறந்து செல்லுமாறும் அதன்பின்னர் அந்த காலியான பெட்டிகளைசேகரித்து மீண்டும் பால்கோவாவை நிரப்பும் படியும் செய்யபட்டது

இதனால் விலை அதிகமான எக்ஸ்ரே கருவிக்கு பதிலாக விலைகுறைந்த காற்றாடியாலேயே அந்த பணியை செய்யமுடிந்ததை கண்ணுற்ற மேலாண்மை இயக்குநர் உற்பத்தி கணக்கரின் இந்த பிரச்சினைக்கான எளிய தீர்வை பாரட்டினார்

ஆம் நாமும் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைக்கும் சிக்கல் இல்லாத எளிய தீர்வை கண்டு செயல்படுத்தி பயன்பெறுவோம்

சனி, 27 டிசம்பர், 2014

அவரவர்களுடைய நிலையில் இருந்தால் என்ன நிகழ்வு நடைபெறும் என அறிந்து நம்முடைய பிள்ளைகளை எப்போதும் அன்புடன் நடத்துவதுதான் நம்முடைய அடிப்படை கடமையாகும்


சிலகாலங்களுக்கு முன்ப என்னுடைய நண்பர் பொருளாதார சிக்கலில் மாட்டிகொண்டு மிக அல்லலுற்றிருந்தார் அவ்வாறான சமயத்தில் ஒருநாள் அவருடைய நான்குவயது மகள் அவர்களுடைய வீட்டிலிருந்த மதிப்பு மிக்க பொருள் ஒன்றினை வீனாக்கிவிட்டதை தொடர்ந்து அந்நண்பருக்கு மிக அதிக கோபாமாகி ஒவ்வொரு ரூபாய்க்கும் அல்லாடிகொண்டிருக்கின்ற இந்த நிலையில் இவ்வாறு மதிப்புமிக்க பொருள் விணாக்கபட்டுவிட்டதே என அவருடைய மகளை மிககடுமையாக தீட்டி தீர்த்தார்

அதன்பிறகு சிலநாட்கள் கழித்து அவர்களுடைய பொருளாதார சிக்கலும் தீர்ந்த நிலையில் அவருடைய நான்குவயது மகள் அவருக்கு ஒரு பரிசு பெட்டியை வழங்கி அப்பா இந்த அன்பு பரிசு உங்களுக்காகத்தான் பெற்றுக்கொள்ளுங்கள் என அளித்தபோது அவருக்கு முன்னர் கடுமையாக தங்களுடைய மகளை திட்டிய செயலால் மிக தருமசங்கடமான நிலையாகவிட்டது

அந்த பரிசுபெட்டியை பிரித்து பார்த்தபோது அதுவெறுகாலியான பெட்டியாக இருந்ததை பார்த்து முன்புபோலவே கோபம் அதிகமாகி யாருக்கும் பரிசுபெட்டி அளிக்கும்போது அதனுள் ஏதாவது பொருட்களை வைத்துதானே வழங்கவேண்டும் என கடுமையாக மீண்டும் திட்ட ஆரம்பித்தார்

அவர் திட்டி முடியும்வரை அமைதியாக இருந்த அவருடைய மகள் அப்பா இந்த பரிசு பெட்டியில் என்னுடைய அன்புமுத்தங்கள் மட்டுமே என்னால் வைக்க முடிந்தது இதை உங்களுக்காகவே வைத்துள்ளேன் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதும்

அவருக்கு மிக அதிக தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது மகளே பிஞ்சுஉள்ளம் கொண்ட உன்னை நான் கோபமாக திட்டிவிட்டேனே அவ்வாறு நான் திட்டினாலும் நீ உன்னுடைய அன்பு முத்தங்களை வழங்கியுள்ளாயே என வருத்தபட்டு அவருடைய மகளை பராட்டியதோடுஇல்லாமல் தன்னை மன்னிக்கும்படி கோரினார்

அந்த நிகழ்விலிருந்து அந்நண்பர் அவருடைய மகள் அன்புமுத்தங்களுடன் அளித்த அந்த காலியான பரிசு பெட்டியை எப்போதும் அவருடைய படுக்கை அறையில் வைத்திருந்தார்

ஆம் நாம் அனைவருமே நம்மைபோன்றே நம்முடைய பிள்ளைகளும் இருப்பார்கள் என நம்முடைய கோபத்தை அவர்கள்மீது திருப்பிவிடுகின்றோம் அவ்வாறில்லாமல் அவர்களுடைய நிலையில் இருந்தால் என்ன நிகழ்வு நடைபெறும் என அறிந்து நம்முடைய பிள்ளைகளை எப்போதும் அன்புடன் நடத்துவதுதான் நம்முடைய அடிப்படை கடமையாகும்

திங்கள், 15 டிசம்பர், 2014

எந்தவொரு கேள்விக்கும் அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறுதான் அதற்கான பதிலும் கிடைக்கும்


வகுப்பு ஆரம்பித்தவுடன் இரண்டாம் வகுப்பிற்குள் நுழைந்த கணித ஆசிரியர் அவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களில் ஒருவனிடம் "தம்பி! நான் ஒரு மாம்பழம் உன்னிடம் தருகின்றேன் ,மற்றொருமாம்பழம் தருகின்றேன் , மீண்டும் ஒருமாம்பழம் தருகின்றேன் என்றால் மொத்தம் எத்தனை மாம்பழம் உன்னிடம் இருக்கும்?" என கேட்டார்.

உடன் தயக்கமே இல்லாமல் அவனும் " நான்கு மாம்பழம் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான். இதனை கேள்வியுற்றதும் என்ன நம்முடைய வகுப்பு மாணவர்களுள் இவன் மட்டும் கணிதத்தில் இவ்வளவு மக்காக இருக்கின்றானே! என யோசித்து "தம்பி! நன்றாக கவணி! நான் ஒரு மாம்பழம் உன்னிடம் தருகின்றேன், மற்றொருமாம்பழம் தருகின்றேன், மீண்டும் ஒருமாம்பழம் தருகின்றேன் என்றால் மொத்தம் எத்தனை மாம்பழம் உன்னிடம் இருக்கும்?" என கேட்டபோது மீண்டும் தயக்கமில்லாமல் "நான்கு மாம்பழம்தான் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான்.

அவனுடைய தவறான பதிலை கேட்டவுடன் கோபம் அதிகமானாலும் வேறுவகையில் கேட்போம் என" தம்பி! நன்றாக கவணி! நான் உன்னிடம் ஒரு கொய்யாபழம் தருகின்றேன், மற்றொருகொய்யாபழம் தருகின்றேன், மீண்டும் ஒருகொய்யாபழம் தருகின்றேன் என்றால் மொத்தம் எத்தனை கொய்யாபழம் உன்னிடம் இருக்கும்?" என கேட்டபோது ஆசிரியரின் முகத்தை பார்த்து அவனும் உடனடியாக "மூன்று கொய்யாபழம் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான். "பார்த்தாயா தம்பி! இப்போது நான்கூறிய கொய்யாபழ கணக்கைமட்டும் சரியாக கவணித்து கணக்கிட்டு சரியான விடையை கூறிவிட்டாய் பரவாயில்லை ஆனால் சற்றுமுன்பு நான் கேட்ட மாம்பழ கணக்கிற்கு சரியான பதிலை கூறு!" என மீண்டும் கேட்டபோது மறுபடியும் தயக்கமில்லாமல் நான்கு மாம்பழம் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான்

அவனுடைய தவறான பதிலை கேட்டவுடன் கோபம் அதிகமானாலும் கட்டுபடுத்தி கொண்டு கொய்யாபழ கணக்கை சரியக கூறுகின்றாயே ஆனால் ஏன்தம்பி மாம்பழ கணக்கில் மட்டும் தவறான விடை கூறுகின்றாய் என பொறுமையாக கணிதஆசிரியர் அம்மாணவனிடம் விசாரித்தபோது "ஐயா! என்னிடம் ஏற்கனவே ஒருமாம்பழம் கால்சட்டைபையில் வைத்துள்ளேன் அதனோடு நீங்கள் மூன்று மாம் பழம் கொடுத்தால் என்னிடம் நான்கு மாம்பழம் தானே இருக்கும் அதனால்தான் முதல் கணக்கிற்கு அவ்வாறு நான்குமாம்பழம் என விடை கூறினேன் ஆனால் என்னிடம் கொய்யாபழம் எதுவும் இல்லை அதனால் நீங்கள் இரண்டாவதாக கேட்ட கொய்யாபழ கணக்கிற்கு மூன்று என கூறியதை நான் சரியாக பதில் கூறியதாக முடிவுசெய்தீர்கள்!" என பதிலளித்தான்.

ஆம் நாம் கோரும் எந்தவொரு கேள்விக்கும் முன்கூட்டியே நாம் முடிவுசெய்தவிடைக்கு பதிலாக எதிர்பார்க்காத விடைகிடைக்கின்றது எனில் விடைகூறுபவரின் பக்கத்திலிருந்து யோசித்தால் சரியோ தவறோ அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறுதான் அதற்கான பதிலும் கிடைக்கும் என இதிலிருந்து முடிவுசெய்து கொள்க

சனி, 6 டிசம்பர், 2014

யாரும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமலும் அவர்களை தீயவழியில்செல்ல தூண்டாமலும் இருந்தால் இவ்வுலகில் வாழும் அனைவரும் மிக நல்லவர்களாகவே இருப்பார்கள்


புத்தர் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்துதம்முடைய இளவரசர் எனும் பட்டத்தை துறுந்து துறவறம் பூண்டு வொகுதூர நாடுகளுக்கெல்லாம் பயனம் செய்து இவ்வுலக மாந்தர்கள் துன்பங்கள் எதவுமில்லாமல் இன்பமயமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வழி ஏதேனும் உள்ளதா என தேடிக்கொண்டிருந்தார் இந்நிலையில் அவரது புத்திசாலித்தனத்திலும், இளமையான அழகான உருவத்திலும் அவருடைய உடலைசுற்றி இருந்த ஒளிவட்டத்திலும் மயங்கி அவரை ஏராளமான மக்கள் பின்தொடர்ந்து சென்றனர். அவர்களுள் அம்பாசாலி எனும் பெண் ஒருத்தியும் இவருடைய அறிவுத்திறனில் மயங்கி பின்தொடர துவங்குவதற்காக புத்தரை அணுகி, "ஓ! அரசே, நீங்கள். இந்த உலக வாழ்வை துறந்து காவி அங்கியை அனிந்திருந்தாலும் ஒரு இளவரசர் போலவே இருக்கின்றீர் அதனால் இந்த இளம் வயதில் ஏன் நீங்கள் துறவறம் பூண்டு காவி உடையை அணிந்துகொண்டீர் என நான் அறிந்துகொள்ளலாமா?" என வினவினார் அதற்கு புத்தர் அவர் மூன்று பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அடைய தான் துறவறப் பாதையை தேர்வுசெய்த்தாக பதிலளித்தார்

. அதாவது "இந்த உடலானது தற்போது இளமையாகவும் அழகானதாகவும் உள்ளது ஆனால் காலபோக்கில் முதுமையுற்றும், நோயுற்றும், இறுதியில் அழிந்து மரணமுறவும் செய்வதற்கு காரணம் என்னவென்றும் அதன் உண்மைநிலையாது என்றும் தெரிந்துகொள்ளவே நான் துறவறம் பூண்டேன் ." என கூறினார் .இவருடைய உண்மை தேடலால் ஈர்க்கப்பட்ட அப்பெண் புத்தரை தன்னுடைய இல்லத்திற்கு மதியஉணவு அருந்த வருமாறு அழைத்தார். இந்த செய்தி அந்த கிராமம்முழுவதும் பரவியது. உடன் அந்த கிராமத்து மக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து ‘’ஐயா! தாங்கள் இளந்துறவியாக உள்ளீர்கள்! ஆனால், அந்தபெண்ணோ மிகமோசமான நடத்தையுள்ளவள், அவளுடைய அழைப்பை ஏற்று அவளுடைய இல்லத்திற்கு செல்லாதீர்கள்! அந்த அழைப்பையும் ஏற்கவேண்டாம்!’’, எனக் கேட்டுக் கொண்டனர்.

அவர்களுடைய புகார்களை புத்தரும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தார் பின்னர் புத்தர் புன்முறுவலுடன் அந்த கிராமத்தின் தலைவரிடம் , "நீங்களும் கூட அந்த பெண் மோசமானவள் என கூறுகிறீர்களா?" என கேட்டார்

உடன் அந்த கிராம்த்தின் தலைவர் "ஒருமுறை இல்லை, ஆயிரம் மடங்கு அந்த பெண் அம்பாசாலி தீய நடத்தை கொண்டவள் என நான் கூறுவேன் அதனால். அவளுடைய வீட்டிற்கு மட்டும் நீங்கள் செல்லவேண்டாம்" என்று பதிலளித்தார்.

உடன் புத்தர் கிராமத் தலைவருடைய வலது கையை தன்னுடைய கைகளால் பிடித்துகொண்டு,அந்த கிராமத்து தலைவரிடம் அவருடைய கைகளைத்தட்டி ஓசை எழுப்புமாறு கோரினார்

அதற்கு அந்த கிராமத் தலைவர் " தமது ஒரு கையை புத்தர் பிடித்திருப்பதால் மற்றொரு கையை மட்டும் தட்டி ஒலி எழுப்பமுடியாது யாரும் தன்னுடைய ஒரு கையால் மட்டும் கைத்தட்டி ஒலி எழுப்ப சாத்தியமே இல்லை", என பதிலிறுத்தார்

தொடர்ந்து புத்தரும் " ஆம் அவ்வாறுதான் இந்த கிராமத்தில் மோசமான நடத்தை கொண்ட ஆண்கள் இல்லாமல் அந்த பெண் அம்பசாலி மட்டும் எவ்வாறு மோசமான நடத்தை கொண்ட பெண்ணாக மாறமுடியும் ", என்றார். தொடர்ந்து “இந்த கிராமத்தில் உள்ள எல்லா ஆண்களும் நல்ல நடத்தை உள்ளவர்களாக இருந்தார்கள் என்றால், இந்த பெண்னும் மோசமான நடத்தைஉள்ளவளாக மாறியிருக்கமாட்டாள். எனவே, இந்த கிராமத்தில் உள்ள மோசமான நடத்தையுள்ள ஆண்களும் அவர்களுடைய பணத்திமிறுமே அந்த பெண்அம்பாசாலியை மோசமான நடத்தையுள்ளவளாக மாறிவிட்டதற்கு பொறுப்பு. ஆகும் " என கூறினார்

அதனை தொடர்ந்து "இங்கு கூடியிருக்கும் இவ்வூரின் ஆண்களில் மோசமான நடத்தைக்கான தடயமே இல்லாதவர்கள் யாராவது இருந்தால் என் முன்வாருங்கள் அவர்களுடைய வீட்டிற்கு நான் மதியஉணவுஅருந்த வரத்தயாராக இருக்கின்றேன்" என்ற கோரிக்கையை அவர்கள் அனைவரின் முன் வைத்தார்.

அவர்களுள் யாரும் அந்த கோரிக்கைக்கு முன்வரவில்லை பின்னர் புத்தர் " பார்த்தீர்களா உங்களில் யாரும் எனக்கு முன்வராத இந்த செயலினால் இந்த கிராமத்தில் மோசமான நடத்தையுள்ள ஆண்கள் பலர் உள்ளனர் என்ற உண்மை எனக்கு தற்போது தெரியவருகின்றது , அதனால் ஒரு பெண்ணை மட்டும் . அவள் மோசமான நடத்தையுள்ளவள் என சுட்டிக்காட்டுவது சரியாகாது மேலும் மோசமான நடத்தையுள்ள ஆண்கள் இந்த கிராமத்தில் இருப்பதால்தான் அந்த பெண்ணும் மோசமான நடத்தையுடைவளாக மாறியுள்ளாள் அதனால் அந்த பெண் மோசமான நடத்தை கொள்வதற்கு இந்த கிராமத்து ஆண்களும் உடந்தையாகி உள்ளீர்கள் அதுமட்டுமல்லாது நாம் நம்முடைய கைகளின் விரலை மற்றவர்களை நோக்கி நீட்டி நீ நடத்தை கெட்டவன் / கெட்டவள் என சுட்டிகாட்டிடும்போது மற்றவிரல்கள் உங்களை நோக்கியுள்ளதையும் கவணியுங்கள். "' என கூறினார் உடன் அந்த கிராமத்து மக்கள் அனைவரும் தங்களுடைய தவறை உணர்ந்து, புத்தரின் காலில் விழுந்து தங்களை மன்னிக்கும்படி கோரினர். .

அதன் பின்னர் அந்த பெண் அம்பாசாலி புத்தரின் போதனைகளை ஈர்க்கப்பட்டு, துறவறம் பூண்டு பக்தி பாதைக்குதிரும்பி பக்தி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தாள்.

அவ்வாறே இவ்வுலகில் வாழும் யாரும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமலும் அவர்களை தீயவழியில்செல்ல தூண்டாமலும் இருந்தால் இவ்வுலகில் வாழும் அனைவரும் மிக நல்லவர்களாகவே இருப்பார்கள் என்ற உண்மையை தெரிந்துகொள்க

வெள்ளி, 5 டிசம்பர், 2014

நம்முடைய அன்பையும் ஆதரவான சொற்களையும் யாருமற்ற அனாதையாக இருப்பவர்களுக்கு வழங்கிடுவோம்


ஒரு வயதான மனிதன் அவருக்கு ஏற்பட்ட தீவிர மாரடைப்பில் உருவான வலியால் தன்னுடைய இறுதி பயனத்திற்கு ஆயத்தமாக படுக்கையில் மயக்கமுற்று சோர்வாக படுத்திருந்தார் அப்போது அவரை கவணித்து கொள்ளும் செவிலியர் அவருடைய படுக்கைக்கு அருகில் துடிப்புள்ள இளைஞன் ஒருவனை அழைத்து வந்து " ஐயா! உங்களுடைய மகன் உங்களை பார்ப்பதற்காக இங்கே வந்துள்ளார் கண்திறந்து பாருங்கள் ," என அந்த வயதான மனிதனை அழைத்தார் ஆயினும் அந்த வயதான மனிதன் கண்திறக்கவில்லை அதனால் அவள் தொடர்ந்து " ஐயா! உங்களுடைய மகன் உங்களை பார்ப்பதற்காக இங்கே வந்துள்ளார் கண்திறந்து பாருங்கள் ," என மீண்டும் மீண்டும் பல முறை அந்த வயதான மனிதனை அழைத்தார்

ஏனெனில் அவருக்கு ஏற்பட்ட மிக தீவிர மாரடைப்பின் வலியால் மயக்கமுற்று படுத்திருந்தார் இருந்தபோதும் செவிலியரின் விடாமுயற்சியின் அழைப்பால், இறுதியாக அந்த வயதான மனிதன் தன்னுடைய படுக்கைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த கப்பல் படையின் சீருடையணிந்த இளைஞனை தன்னுடைய மங்கலான கண்களால் பார்த்தார். தொடர்ந்து தன்னுடைய தளர்ந்த கைகளை அந்த இளைஞனின் கைகளை பிடிப்பதற்காக நீட்டினார் உடன் அந்த இளைஞன்.தன்னுடைய கைகளால் ஆதரவாக அவருடைய கைகளை அழுத்தி பிடித்துகொண்டு அதன் வழியே தன்னுடைய அன்பையும் ஆதரவையும் வழங்கினார் இந்நிலையில் அந்த செவிலியர் அந்த படுக்கைக்கு அருகில் அந்த இளைஞன் உட்காருவதற்கு வசதியாக ஒரு நாற்காலியொன்றை கொண்டுவந்த வைத்து அந்த இளைஞனை அந்த வயதான மனிதனுக்கு அருகில் சிறிதுநேரம் உட்காரும்படி வேண்டினார் அவ்விளைஞனும் இரவு நீண்டநேரம் கண்மூடி தூங்காமல் அந்த வயதானமனிதனின் படுக்கைக்கு அருகில் வைத்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அந்த வயதான மனிதனின் கைகளை தொடர்ந்து இறுக்கமாக பிடித்துகொண்டு அவருக்கு தன்னுடை அன்பையும் ஆதரவையும் அளித்துகொண்டிருந்தார் இதனை கண்ணுற்ற அந்த செவிலியரும் அவ்வப்போது வந்து அவ்விளைஞனிடம் சிறிதுநேரம் ஓய்வுஎடுத்து கொள்ளும்படி பரிந்தரைத்தார்

ஆயினும் அந்த இளைஞன் ஒரு வயதான மனிதன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது தான் ஓய்வு எடுத்துகொள்ள விரும்பவில்லை என மறுத்துவிட்டார். அந்த செவிலியரும் அவ்வப்போது இந்த படுக்கைக்கு அருகில் வந்து பார்க்கும்போதெல்லாம் அவ்விளைஞன் தன்னுடைய கைகளால் அந்த வயதான மனிதனின் கைகளை ஆதரவாக தொடர்ந்து பிடித்து கொண்டிருந்ததை கண்டார் இரவு பணியில் ஈடுபட்டவர்களின் சிரிப்பு சத்தமும் நோயாளிகளின் வலியால் ஏற்படுத்திய முனகல்களும் சத்தமும் இரவு முழுவதும் இருந்துவந்தாலும் தொடர்ந்து அவ்விளைஞன் தன்னுடைய கைகளால் அந்த வயதான மனிதனின் கைகளை ஆதரவாக பிடித்து கொண்டேயிருந்தார்

அந்த செவிலியரும் அவ்வப்போது இந்த படுக்கைக்க்கு அருகில் வந்து பார்க்கும்போதெல்லாம் அவ்விளைஞன் தன்னுடைய கைகளால் அந்த வயதான மனிதனின் கைகளை ஆதரவாக தொடர்ந்து பிடித்து கொண்டு உங்களுக்கு ஒன்றுமில்லை நீங்கள் நன்றாக இருக்கின்றீர்கள் எழுந்து நடமாட போகின்றீர்கள் என்ற ஆதரவான சொற்களை அந்த இளைஞன் அந்த வயதான மனிதனிடம் கூறிக்கொண்டிருப்பதை கண்டு சென்றார் அந்த வயதான மனிதனும் அந்த இளைஞனின் கைகளை இரவுமுழுவதும் இறுக்கமாக பிடித்துகொண்டிருந்தார்

விடியற்காலையில் ஒருவழியாக,அந்த வயதான மனிதன் இறந்ததை கண்ட அவ்விளைஞன் தான் பிடித்திருந்த அந்த உயிரற்ற கைகளை விட்டிட்டு அந்த செவிலியரிடம் இந்த தகவலை கூறுவதற்காக சென்றார்

.அந்த செவிலியரும் தன்னுடைய இதர நோயாளிகளுக்கான பணிவிடைகளை செய்துமுடித்து இந்த படுக்கைக்கு திரும்பி வந்தார் அப்போதுதான் "அந்த மனிதன் யார்?" என அந்த இளைஞன் செவிலியரிடம் வினவியபோது "அவர்தான் உங்களுடைய தந்தை ," என செவிலியர் பதிலிறுத்தார் அதன்பின்னர் ‘’வயதானவருக்கு தன்னுடைய இறுதி தருனத்தில் அவருடைய மகனை காண விரும்பினார் அதனால் உங்களை அவருக்கு ஆதரவாக அவருடைய மகனாக இருக்குமாறு ஏற்பாடு செய்தேன்’’ எனகூறியதை தொடர்ந்து அவ்விளைஞன் ‘’நானும் அதனை தெரிந்துகொண்டேன் அதனால் தான் வயதான மனிதன் தன்னுடைய இறுதிநேரத்தில் அமைதியாகவும் ஆதரவாகவும் இருக்கவேண்டும் என்று நான்கூட அவருடைய கைகளை அன்பாக பிடித்துகொண்டே படுக்கைக்கு அருகில் இரவுமுழுவதும அமர்ந்திருந்தேன்’’ என கூறினார்

ஆம் வாருங்கள் நாமும் நம்முடைய அன்பையும் ஆதரவான சொற்களையும் யாருமற்ற அனாதையாக இருப்பவர்களுக்கு வழங்கி அவர்களுடைய அமைதியான நிம்மதியான வாழ்விற்கு வழியமைத்திடுவோம்

வியாழன், 4 டிசம்பர், 2014

எது நடந்தாலும் நல்லதே நடக்கும் என நம்முடைய மனதில் கொண்டு செயல்படுவோம்


புதியதாக திருமணம் ஆன ஒரு மனிதன் தன்னுடைய இளம் மனைவியுடன் படகு ஒன்றில் ஒரு ஏரி வழியே தங்களுடைய வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான். , அந்த மனிதன் ஒரு போர்வீரன் ஆவான் திடீரென ஒரு பெரிய புயல் உருவாகி உக்கிரமாக வீச ஆரம்பித்தது தொடர்ந்து அவர்கள் பயனம் செய்த படகு மிகச்சிறியதாக இருந்தது மேலும் அந்த படகு எந்த நேரத்திலும் மூழ்கிவிடுவதை போன்று தத்தளித்துகொண்டும் மேலும் கீழும் மிகவேகமாக அசைந்து கொண்டிருந்தது., அதனால் அந்த இளம் பெண் நம்பிக்கையற்ற நிலையில் மிகவும் பயந்து இப்போது நாம் சாகப்போகின்றோம் என உயிர் பயத்தில் கத்திகொண்டிருந்தால். ஆனால் அந்த மனிதன் மட்டும் மெளனமாக எதுவுமே நிகழாதவாறு மிக அமைதியாக இருந்தான்

அதனை கண்ணுற்ற அந்த பெண் மேலும் பயந்து நடுங்கி கொண்டு, "உங்களுக்கு பயமேயில்லையா?". இதுவே நம்முடைய வாழ்வின் கடைசி நிமிடமாக இருக்கலாம் அல்லவா! எதாவதொரு அதிசயம் நடந்தால் மட்டுமே நாம் இந்த இயற்கை பேரழிவிலிருந்து தப்பிக்க முடியும்; இல்லையெனில் நமக்கு மரணம் நிச்சயம் உண்டு” என பயத்துடன் நடுங்கி கொண்டு கீரீச்சிட்டு கத்தினாள்

அதற்கு அம்மனிதன் மிக மென்மையாக சிரித்தான் தொடர்ந்து தன்னிடமிருந்த வாள்ஒன்றை அதன் உறையிலிருந்து வெளியே எடுத்தார். அதனை கண்ணுற்ற அவருடைய மனைவி நம்முடைய கணவர் இப்போது எதற்கு வாளை போரிடபோவது போன்று வெளியிலெடுக்கவேண்டும் என அந்த செயலை மிக அதிசயமாக விளையாட்டாக பார்த்தார் தொடர்ந்து அம்மனிதன் அந்த வாளினை அப்பெண்ணின் கழுத்தை வெட்டுவதை போன்று மிக நெருக்கமாக தொடும்படி வைத்தகொண்டு

" நான் இந்த கத்தியால் உன்னுடைய கழுத்தினை வெட்டபோகின்றேன் அதனால் நீ இப்போது பயப்பட வில்லையா கிறாயா? ', என வினவினார்

உடன் அவ்விளம் மனைவி சிரிக்க தொடங்கினாள் தொடர்ந்து நான் ஏன் பயப்பட வேண்டும் ", என்று வினவியதுடன் இந்த வாள் உங்கள் கைகளில் தான் இருக்கிறது, ஆயினும் நீங்கள் உயிருக்குயிராக என்மீது அன்பு செலுத்திடும் நிலையில் என்னை எவ்வாறு கொல்ல துணிவீர்கள் . அதனால் , நான் ஏன் பயப்பட வேண்டும்? " என பதிலிறுத்தாள் உடன் அந்தமனிதன் தன்னுடைய வாளை மீண்டும் உறைக்குள் வைத்துவிட்டு, பார்த்தாயா உன்னுடைய சொல்லிலேயே நீகேட்ட கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது அதாவது கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகின்றார் என்பது நமக்கு தெரியும் மேலும் இந்த புயலின் செயல் அதன் விளைவு ஆகிய அனைத்து நிகழ்வுகளும் அந்த கடவுளின் கைகளில்தான் உள்ளது

. அதனால் தற்போது எதுநடந்தாலும் நன்றாகத்தான் நடக்கும் மேலும் நாம் உயிருடன் வாழ்கின்றோம் எனில் அதுவும் நல்லதுதான் அல்லது நம்மால் வாழமுடியவில்லை நாம் இறக்கபோகின்றோம் என்றாலும் அதுவும் நல்லதுதான் ஏனெனில் எந்தவொரு நிகழ்வும் அந்த கடவுளின் கையில் மட்டுமே உள்ளது அதனால் அவர் நமக்கு எதிராக எதையும் அவரால் தவறாக செய்யமுடியாது

நீதி நம்முடைய முழு வாழ்வையும் மாற்றியமைத்திடும் திறன் கடவுள் ஒருவரிடம் மட்டுமேஉள்ளது ஆயினும் எந்தவொரு நிகழ்விற்கும் ஏதோவோரு காரணம் இருக்கும் அதனால் எது நடந்தாலும் நல்லதே நடக்கும் என நம்முடைய மனதில் கொண்டு செயல்படுவோம்

ஞாயிறு, 30 நவம்பர், 2014

நம்முடைய பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களை மதித்து வனங்க உறுதி எடுப்போதோடு மட்டுமல்லாது நம்முடன் வைத்து அவர்களை காத்திட உறுதி பூனுவோம்


ஒரு மனிதன் ஒரு பூக்கடை வாயிலில் தன்னுடைய மகிழ்வுந்தை நிறுத்தி இருநூறு மைல்கள் தொலைவில் வாழ்ந்த தன்னுடைய அன்னைக்கு சில பூக்களை தபால் வாயிலாக கொண்டு சென்று சேர்த்திடுமாறு கோருவதற்காக அவர் தனது காரில் இருந்து இறங்கியபோது ஒரு இளம் பெண் தன்னுடைய அன்னைக்கு வழங்குவதற்காக ரோஜா பூவொன்று வாங்க முடியவில்லையே என புலம்பிகொண்டு அமர்ந்திருந்ததை கவனித்தார்.

அவர் உடன் அப்பெண்ணின் அருகில் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் என வினவினார் அதற்குஅந்த பெண் என்னுடைய அம்மாவிற்காக ஒரு சிவப்பு ரோஜாபூ வாங்க வேண்டும் என்றார் . என்னிடம் ஒரு ரூபாய்தான் உள்ளது ஆனால் அந்த சிவப்பு ரோஜாவை பூக்கடைக்காரர் இரண்டு ரூபாய் என கூறுகின்றார் நான் என்னசெய்வேன் இன்று எங்களுடைய அன்னையின் பிறந்த நாளாயிற்றே நான் என்ன செய்வேன் என கூறியதை தொடர்ந்து அம்மனிதன் இரண்டுரூபாய் கொடுத்து அந்த ரோஜாபூவை வாங்கி பெண்ணே வா உங்களுடைய அன்னையை நேரில் காணலாம் என அந்த பெண்ணை அவருடைய மகிழ்ந்தில் ஏற்றி கொண்டு சென்றார்

ஆனால் என்ன ஆச்சிரியம்அந்தஇளம்பெண் அவர்களுடைய வீட்டிற்கு செல்லாமல் தங்களுடைய அன்னையை அடக்கம் செய்த இடத்தில் புதியதாக கட்டப்பட்ட கல்லறையின் மீது அந்த ரோஜாபூவை வைத்து வணங்கினார்

அதை கண்ணுற்ற மனிதன் மனம்மிக நாம் நம்முடைய உயிரோடு இருக்கும் நம்முடைய அன்னையை மதிக்காமல் வெகுதூரத்தில் வாழ்ந்து வருகின்றோம் ஆனால் இந்த இளம்பெண் தன்னுடைய தாய் இறந்த பின்னர்கூட மறக்காமல் மரியாதை செலுத்துகின்றாரே என சங்கடப்பட்டது,

பின்னர் அந்த மனிதன் தன்னுடைய தாயின் பிறந்த நாளிற்காக தபால் வாயிலாக பூக்கள் அனுப்புவதை தவிர்த்து நேரடியாக அவரது அம்மா வாழும் வீட்டுக்கு இரு நூறு மைல்கள் மகிழ்வுந்தில் சென்று மலர்களை அவருடைய அன்னையின் காலில் வைத்து வணங்கினார்

ஆம் நாம் நம்முடைய பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களை மதித்து வனங்க உறுதி எடுப்போதோடு மட்டுமல்லாது நம்முடன் வைத்து அவர்களை காத்திட உறுதி பூனுவோம்

வெள்ளி, 28 நவம்பர், 2014

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு குழந்தையும் தத்தமது தாயின் முடிவில்லாத அன்பை எப்போதும் நினைவில் கொண்டுதத்தமது தாய்க்கு நன்றி செலுத்துவது நல்லது


ஜப்பானில் பூகம்பம் நிகழ்வு முடிந்து தணிந்த பிறகு இடிபாடுகளுக்கிடையே யாரேனும் உயிருக்கு போராடி கொண்டிருந்தால் அவர்களை மீட்பதற்கான பணிசெய்து கொண்டிருந்த ஒரு மீட்புகுழுவினர் இடிந்த வீடொன்றில், இடிபாட்டின் பிளவுகள் மூலம் ஒரு உயிரற்றநிலையில் இருந்த இளம் பெண்ணினுடைய உடலை பார்த்தனர்.

ஆனால் உயிரற்ற அந்த பெண்ணினுடைய உடலின் நிலையானது ஒரு நபர் குனிந்து வனங்குவதை போன்று உடல் மண்டியிட்டவாறு விசித்திரமாக இருந்தது; அதாவது அவருடைய உடல் முன்னோக்கி சாய்ந்தும் அவரது இரண்டு கைகளும் ஒரு பொருளை வளைந்து பாதுகாப்பதை போன்றும் இருந்தது மேலும் இடிபாடுகளுடைய அந்த வீடானது அவருடைய உடலையும் தலையையும் அழுத்தியபடி இருந்தது.

அதனால் அந்த பெண் உயிருடன் இருக்க முடியும் என்று நினைத்து, மீட்புகுழுவின் அணித் தலைவர் அந்த பெண்ணின் உடலை வெளியிலெடுப்பதற்காக இடிந்த சுவரின் ஒரு குறுகிய இடைவெளி வழியாக மிகசிரமபட்டு கையைஉள்நுழைத்து பார்த்தபோது குளிர்ந்தும் கடினமாகவும் அவ்வுடல் இருந்தை உணர்ந்து அவர் உறுதியாக காலமாகிவிட்டதாக முடிவுசெய்து அவரும் அவருடைய மீட்பு குழுவும் இடிந்த அந்த வீட்டை விட்டு அடுத்தடுத்துள்ள சரிந்துவிட்ட கட்டிடங்களில் வேறுயாரேனும் உயிரோடு இருக்கின்றனரா என தேடசென்றனர்.

ஆயினும் அந்த அணித்தலைவருக்கு முந்தை இடிபாடுகளுக்கிடையே இருந்த பெண்ணின் உடலின் நிலையை கண்டு சந்தேகம் கொண்டு அந்தஇளம் பெண்ணி இருந்த இடிந்த வீட்டிற்கு மீண்டும் வந்தார், குறுகிய பிளவுகள் மூலம் அவர் தன்னுடைய கையை மீண்டும் உள்ளே விட்டு தலைகுனிந்தநிலையில் உள்ள அப்பெண்ணினுடைய உடலின் கீழிருந்த சிறிய இடைவெளி வழியாக வேறு ஏதனும் உள்ளதாவென தேடிடமுனைந்தார்.

அந்நிலையில் திடீரென்று, அவர் மிக ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் "குழந்தையொன்று உயிருடன் இங்குள்ளது!" என கத்தினார்

உடன் மீட்பு குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மிககவனமாக இறந்த அப்பெண்ணினி சுற்றியுள்ள சிதைந்த பொருட்களின் குவியலை அகற்றினர். குனிந்து வளைந்து மண்டியிட்ட நிலையிலிருந்த அந்த தாயின் உடலுக்கு கீழ் பூக்களை பாதுகாப்பது போன்று பழைய போர்வையால் மூடப்பட்டிருக்கும் ஒரு மூன்று மாதங்களே நிறைவடைந்த சிறுவன் அமைதியாக உறங்கி கொண்டிருந்ததை கண்டு வெளியில் பத்திரமாகமீட்டெடுத்தனர்.

அதாவது அந்த பெண் தன்னுடைய உயிரை தியாகம் செய்து தன்னுடைய மகனை காப்பாற்றியிருப்பது தெரியவந்தது

உடன் மருத்துவக்குழு அங்கு வந்து அந்த சிறுவனின் உடலில் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி பார்த்த போது அப்போதும் அந்த சிறுவன் உறங்கி கொண்டிருப்பதை கண்டனர்

அதனுடன் போர்வையின் உள்ளே ஒரு செல்லிடத்து பேசி இருப்பதை கண்டனர் அதன் திரையில் ஒரு உரை செய்தி "மகனே , வருங்காலத்தில் நீ உயிருடன் இருந்தால் அப்போது எப்போதும் உன்னிடம் நான் அன்புடன் இருப்பதை நினைவில் கொள்வாயாக ." என்றிருந்தது

இந்த செல்லிடத்து பேசியின் செய்தியை அனைவரும் படித்தறிந்தனர் " ஆம் இத்தகைய தியாக குணமுள்ள ஒரு தாயின் அன்புதான் அக்குழந்தையின் உயிரை காத்துள்ளது !! "

அதனால் இந்த உலகில் வாழும் ஒவ்வொரு குழந்தையும் தத்தமது தாயின் முடிவில்லாத அன்பை எப்போதும் நினைவில் கொண்டுதத்தமது தாய்க்கு நன்றி செலுத்துவது நல்லது

புதன், 26 நவம்பர், 2014

மற்றவர்களின் செயலை மதித்து முதலில் செய்திடுமாறு அனுமதித்திடுக


நாம் அனைவரும் எப்போதும் மகிழ்வாக நிறைவாக வாழ்வது எவ்வாறு என்ற ஒரு பயிற்சி வகுப்பு எங்களூரில் நடைபெற்றது அதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

அந்த பயிற்சியின்போது இடையில் பயிற்றுவிப்பாளர் பயிற்சியாளர் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுடைய பெயரை தன்னிடம் வைத்துள்ள பலூனில் எழுதி அருகேயிருந்த ஒரு அறையில் கும்பலாக வைத்தார்

அனைவருடைய பெயரையும் எழுதி கும்பலாக அருகிலிருந்த அறையில் வைத்தபின் அவர்கள் அனைவரையும் ஒரேநேரத்தில் அருகிலிருந்த அறைக்கு சென்று அவரவர்களுடை பெயர் எழுதிய பலூனை ஐந்துநிமிடகால அவகாசத்திற்குள் தேடிபிடித்து எடுத்துவரும்படி கோரினார்

உடன் அனைவரும் கும்பலாக சென்றதாலும் ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொண்டு தேடியதாலும் ஒரே கலவரமாக இருந்தது அதனால் அந்த கால அவகாசத்திற்குள் யாராலும் அந்த அறையிலிருந்துஅவரவர்களின் பெயர்எழுதிய பலூனை தேடிபிடித்து எடுத்து வரமுடியவில்லை

நல்லது கனவான்களே சிறிதுநேரம் அமருங்கள் என அவர்களை வேண்டி கேட்டுகொண்டு சிறிதுநேரம் கழித்து ஒவ்வொருவராக அந்த அறைக்கு சென்ற கைக்கு கிடைக்கும் பலூனை எடுத்துவருமாரு வேண்டிக்கொண்டார்

சிறிதுநேரம் கழித்து பின் அவரவர்களின் கைகளில் உள்ள பலூனில் உள்ள பெயரை பார்க்குமாறு கூறியபோது என்ன ஆச்சரியம் அனைவரின் கைகளிலும் அவரவர்களின் பெயர் எழுதிய பலூன் மிக்கச்சரியாக இருந்தது

ஆம் நண்பர்களே நாம் நம்முடைய வாழ்வில் அவசரத்தினாலும் ஆத்திரத்தினாலும் மற்றவற்களுடன் ஒத்துழைப்பு இல்லாததாலும் நாம் விரும்பியது நமக்கு கிடைக்கவில்லை

ஆனால் இரண்டாவது செயலில் பொறுமையாக மற்றவர்களின் செயலை மதித்து முதலில் செய்திடுமாறு அனுமதித்தால் அவரவர்கள் விருப்பபட்டது கிடைத்தது என அறிந்தகொள்க என அறிவுரைகூறினார்.

செவ்வாய், 18 நவம்பர், 2014

வீனாக ஆராவாரமிட்டு கூச்சலிட்டு நம்முடைய சமூக சூழலை உருக்குலைப்பதில் கவணமாக இருக்கின்றோம் ஆனால் அந்த நிகழ்விற்கான மிகச்சரியான தீர்வைமட்டும் காணதவறுகின்றோம்


ஒரு சிற்றுண்டி உணவகத்தில் குழுவான பெண்கள் சிற்றுண்டி அருந்த சென்று இருக்கைகளில் அமர்ந்து தங்களுக்கு தேவையான சிற்றுண்டி உணவுவகைகளுக்கு உத்தரவை இட்டுவிட்டு குழு விவாதங்களில் ஈடுபட்டனர்

இந்நிலையில் வெட்டுகிளியொன்று ஒரு பெண்ணின் தோளின்மீது வந்து அமர்ந்ததும் அந்த பெண் கூச்சிலிட்டவாறு அந்த வெட்டுகிளியை அடித்து விரட்டுவதற்காக தாண்டிகுதித்து பார்த்தது எகிறி குதித்து பார்த்தது ஆனாலும் அந்த வெட்டுகிளி இடம் மாறாமல் அமர்ந்திருந்து

இந்த பெண்ணின் அளவிற்கதிகமான அதிகமான உடல் அசைவினால் உடன் அந்த வெட்டுகிளி எழுந்து பறந்து சென்று அடுத்தமர்ந்திருந்த பெண்ணின் தோளின்மீது சென்றமர்ந்ததும் இதே நிகழ்வு அந்த பெண்ணிடமும் தொடர்ந்தது மூன்றாவதாக ஒரு பெண்ணின் மீது அந்த வெட்டுகிளி அமர்ந்தது அந்தபெண்ணிடமும் இதே நிகழ்வு தொடர்ந்தது

இதனால் இவ்விட்ததில் என்ன நிகழ்வு நடைபெறுகின்றது என தெரிந்துகொள்ளஅந்த சிற்றுண்டி உணவகத்தின் பரிமாறுபவர் உடன் இவர்களின் அருகில்வந்தார் உடன் அந்த வெட்டுகிளி அந்த பரிமாறுபவரின் தோளின்மீது சென்றமர்ந்தபின்னர் இந்த பெண்களின் குழு சிறிது அமைதியாக அமர்ந்தது

அந்த சிற்றுண்டி உணவகத்தின் பரிமாறுபவர் இந்த பெண்கள் செய்தவாறு கத்தி கூச்சலிட்டு குதித்தோடியவாறு செய்திடாமல் அந்த வெட்டுகிளியை மிகச்சரியாக பிடித்து கொண்டுசென்று வெளியில் கிடாசிவிட்டுவந்தார்

ஆம் நாம் அனைவரும் எந்தவொரு நிகழ்வையும் அதற்கான மிகச்சரியான தீர்வு என்ன என காணமுயலாமல் ஆராவாரமிட்டு கூச்சலிட்டு நம்முடைய சமூக சூழலை உருக்குலைப்பதில் கவணமாக இருக்கின்றோம் ஆனால் அந்த நிகழ்விற்கான மிகச்சரியான தீர்வைமட்டும் காணதவறுகின்றோம்

வெள்ளி, 14 நவம்பர், 2014

நமக்கு கிடைத்த இந்த வாழ்வை ஏற்று மிகமகிழ்ச்சியாக இருந்துவருவோம்


ஓருகாட்டில் காகம் ஒன்று அமைதியாகவும் மிகமகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தது இந்நிலையில் அன்னப்பறவை ஒன்று அந்த வழியாக பறந்து சென்றதை பார்த்ததும் அந்த காகமானது 'அடடா! நாம் எவ்வளவு கருமையாக இருக்கின்றோம் ! இந்த அன்னப்பறவை எவ்வளவு வெண்மையாக இருக்கின்றது! மிக மகிழ்ச்சியாகவும் இருக்கின்றதே !' என வருத்தபட்டது.

அதனை தொடர்ந்து இந்த காகமானது அன்னப்பறவை வசிக்குமிடம் சென்று ''அன்னப்பறவையே ! நீ எவ்வளவு வெண்மையாகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாய் அதற்கான இரகசியசம் யாது?'' என வினவியது .உடன் ''அடபோ காகமே! நானும் என்னுடைய இரட்டை வண்ணத்தை கண்டு மிக கர்வமாக கொஞ்சகாலம் ஒரு பலவண்ண மயிலை பார்க்கும்வரை இருந்தேன்.

அதன்பின்னர் அடடா! நமக்கு அந்த மயிலை போன்று பல வண்ணங்கள் இல்லையே ? என வருத்தத்தில் இருந்துவருகின்றேன்' ,'' என மன வருத்தத்துடன் கூறியது. அதனை தொடர்ந்து காகமும் அடுத்ததாக அந்த மயிலை சென்றுபார்த்து ''மயிலே! நீ பலவண்ணங்களுடன் மிகஅழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாய் அதற்கான இரகசியசம்தான் யாது ?'' என வினவியது

உடன் ,'' அடபோ காகமே ! நானும் என்னுடைய பலவண்ணத்தை கண்டு மிக கர்வமாக கொஞ்சகாலம் இந்த விலங்குகளின் பூங்காவிற்குள் என்னை கொண்டுவந்து அடைக்கும்வரை இருந்தேன் இப்போது என்னை பலர் பார்த்துதான் செல்கின்றனர் ஆனால் உன்னை போன்று சுதந்திரமாக பறந்து சென்று இரைதேடவும் ஆடிபாடவும் முடியவில்லையே என வருத்தத்தில் இருந்துவருகின்றேன் என மன வருத்தத்துடன் கூறியது

உடன் காகமானது அடடா நாம் எவ்வளவு சுதந்திரமாக எங்குவேண்டுமானாலும் பறந்துசென்று இரைதேடி உண்டு மகிழ்வுடன் இருந்துவருகின்றோம் என மகிழ்வுடன் தன்னுடைய கூட்டிற்கு திரும்பி வந்தது

ஆம் நன்பர்களே நாம் அனைவரும் நம்மைவிட மற்றவர்கள் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக தவறாக எண்ணி நம்முடைய வாழ்வை நாமே கெடுத்துகொண்டு வருகின்றோம் அதனை தவிரத்து நமக்கு கிடைத்த இந்த வாழ்வை ஏற்று மிகமகிழ்ச்சியாக இருந்துவருவோம்

வியாழன், 13 நவம்பர், 2014

நேர்மறையாக பராமரித்து நமக்கு ஏற்படும் தீங்குகளையும் இன்னல்களையும் தவிர்த்திடுவோம்


ஒருஅரசன் தன்னுடைய அரசசபையில் உள்ளவர்களிடம் முந்தைய நாள் இரவு தன்னுடைய கனவில் தன்னுடைய பற்கள் முழுவதும் கொட்டிவிடுவதாக கண்டதாகவும் அதற்கான பொருள் என்னவென்றும் வினவினார்

உடன் அந்த அரசசபையில் அமர்ந்திருந்த்தில் ஒருவன் எழுந்து அரசே உங்களுடயை குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் விரைவில் இறந்துவிடுவார்கள் என்பதுதான் அந்த கனவின் பொருள் ஆகும் என கூறியதும்

உடன் அரசனுக்கு கோபம் அதிகமாகி தன்னுடைய காவல்வீரர்களை அழைத்து அம்மனிதனை தூக்கிலிடுமாறு உத்திரவிட்டார்

பின்னர் மற்றொருவனை அழைத்து தன்னுடைய கனவிற்கான உண்மையான பொருளை கூறுமாறு பணித்தார்

இரண்டமாவன் அரசே நீங்கள் உங்களுடைய குடும்பத்தாரை விட நீண்டநாட்கள் உயிர்வாழ்வீர்கள் என கூறியதை தொடர்ந்து அவ்வரசன் தன்னுடைய நிதி அமைச்சரை அழைத்து இரண்டாமவனுக்கு ஏராளமான தங்க காசுகளும் பொருளும் கொடுக்குமாறு உத்திரவிட்டார்

ஆம் இவ்விருவரும் ஒரே பதிலை எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் என இரண்டு வெவ்வேறு கோணத்தில் கூறி அதற்கேற்ற பலனை உடன் அனுபவித்தனர் நாமும் நம்முடைய செயல் சொல் போன்றவைகளை நேர்மறையாக பராமரித்து நமக்கு ஏற்படும் தீங்குகளையும் இன்னல்களையும் தவிர்த்திடுவோம்

புதன், 12 நவம்பர், 2014

வாழ்க்கையின் சிறந்த தருணம் எது?


அது ஒரு இளவேணிற்காலமாக இருந்தது, இன்னும் இரண்டு நாட்களில் என்னுடைய வயது முப்பது ஆக உயரபோகின்றது . நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தசாப்தத்தில் நுழைவதை பற்றி பாதுகாப்பற்று இருப்பதாக உணருகின்றேன் மேலும் என்னுடைய வாழ்வின் வசந்தகாலம் இதன் பின்னர் மட்டுமேஇருப்பதாகவும் அச்சபடுகின்றேன் இந்நிலையில் நான் என்னுடைய அன்றாட பணிக்கு செல்லுமுன் தினமும் பயிற்சிக்காக ஒரு உடற்பயிற்சி கூடத்துக்கு செல்கின்றேன். அவ்வாறு அந்த உடற்பயிற்சிகூடத்திற்கு செல்லும்போது அங்கு தினமும் காலையில் என்னுடைய நண்பர் ஒருவரை சந்திக்கின்றேன். அவருடைய வயது எழுபத்தொன்பதாக இருந்தாலும் கட்டுகுலையாத உடல் வடிவில் அவர் இருந்தார். அதனால் அன்று அந்த நண்பரை முகமன்கூறி வரவேற்று வணங்கியபோது , அவர் '' நீங்கள் இன்று வழக்கமான முழு உற்சாகத்துடன் இல்லையே ஏன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?'' என என்னிடம் வினவினார் . அதற்கு. நான் "எனக்கு வயதுமுப்பது ஆவது பற்றி மிகஆர்வத்துடன் இருக்கின்றேன் இருந்தாலும். நான் உங்களுடைய வயது அடையும்போது நான் என்னுடை வாழ்க்கையை திரும்பி பார்த்தால் எவ்வாறு இருக்கும் என ஆச்சரியப்படுகின்றேன் ", எனக்கூறியதுடன் தொடர்ந்து அவரிடம், " அதனால் உங்களுடைய வாழ்க்கையின் வசந்த காலமாக இருந்தது எது?" என கேட்டேன்.

உடன் அவரும் தயக்கம் இல்லாமல், " எல்லாம் சரிதான் தம்பி , உங்களுடைய இந்த தத்துவமான கேள்விக்கு என்னுடைய பின்வரும் தத்துவமான பதிலை கூறுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள் ", என்று கூறினார்:

",நான் முதன்முதலில் ஒரு குழந்தையாக இருந்தபோது எனக்கு தேவையான அனைத்தையும் வழங்கி என்னை என் பெற்றோர்கள் நன்றாக கவனித்து வளர்த்தனர் , அதுவே என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக உணர்ந்தேன் ."

"அதன்பின்னர் நான் பள்ளிக்கு சென்று இன்று எனக்கு தெரிந்துள்ள அனைத்து செய்திகளையும் கற்று போது , என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக அதனை உணர்ந்தேன் ."

"பின்னர் நான் வாழ்க்கையில் வாழ்வதற்கான என்னுடைய முதல் பணி எனக்கு கிடைத்தது அதனோடு பொறுப்புகளும் சேர்ந்திருந்தது அந்த பணியில் என்னுடைய முயற்சிகளுக்கேற்ற பொருள் ஈட்டியபோது , என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக அதனை உணர்ந்தேன் ."

",அதன்பின்னர் நான் என்னுடைய வாழ்க்கை துனைவியான மனைவியை முதன்முதலில் சந்தித்து அன்பு செலுத்திய போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

"பின்னர் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து எங்களுடை உயிர்களை காப்பாற்ற நம்முடைய நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதற்காக வெளிநாட்டிற்கு சென்ற ஒரு கப்பல் மீது ஒன்றாக பாதுகாப்பாக சென்றுகொண்டிருந்த போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாகஅது இருந்தது."

"அதன்பின்னர் போர்முடிந்து நாங்கள் நம்முடைய நாட்டிற்கு திரும்பிவந்து வழக்கமான எங்களுடைய குடும்ப வாழ்க்கையை தொடங்கிய போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

"பின்னர் எங்களுடைய குழந்தைகள் எங்களுக்கு பிறந்து வளர்ந்தபோது அவர்களை நான் ஒரு இளம் தந்தையாக நாங்கள் சிறந்த பெற்றோர்களாக அவர்களை கவணித்து வளர்த்து வந்தபோது, என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

" நண்பரே, இப்போது எனக்கு எழுபத்தி ஒன்பது வயதாகிறது. நான், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன் மேலும் என்னுடைய மனைவியை நான் முதன் முதலில் சந்தித்தபோது இருந்த அதே அன்புடன் இப்போதும் அவர்களை நேசிக்கின்றேன் . இதுவே என்னுடைய வாழ்க்கையில் சிறந்த நேரமாக உணருகின்றேன். "

"அதனால் நாம் எப்போதும் நமக்கு கிடைத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையே நம்முடைய இறுதி இலக்கு அன்று என்பதை நினைவில் கெள்க மேலும் நாம்முடைய வாழ்க்கையின் சிறந்த தருனம் மிகவிரைவில் நமக்கு வரவுள்ளது என எண்ணி எப்போதும் செயல்படுக" என எனக்கு அவர் அறிவுரை கூறினார்.

சனி, 30 ஆகஸ்ட், 2014

எதையும் தவறாக யூகித்து மற்றவர்களின் மனத்தை துன்பறுத்த கூடாது


மிககர்வமுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் ஒருவர் தன்னுடைய மாவட்டத்தின் ஏதாவதொரு கிராமத்தை சுற்றி பார்வையிட்டு வர விரும்பினார்

அதனால் வெகுதூரத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு பாதுகாப்பிற்கு உதவியாளர், பாதுகாவலர் ஆகிய எவரும் இல்லாமல் நான் இந்த மாவட்டத்திற்கே படிஅளக்கும் அரசு அதிகாரி என்னை யாரும் எதிர்த்து கேள்வி யொன்றும் கேட்கவும் வாதிடவும் முடியாது என்னை யாரும் ஏமாற்றவும் முடியாது என இறுமாப்புடன் தனியாக அரசு வாகணத்தில் சென்று அந்த கிராமத்தின் எல்லையிலிருந்த ஒரு விவசாயியின் விட்டிற்கருகில் வண்டியை நிறுத்தி இறங்கியவுடன் அந்த விவசாயியை அழைத்தார் .

"உன்னுடைய நிலத்தில் கஞ்சாசெடி வளர்ப்பதாக தகவல் வந்துள்ளது அதனால் உன்னுடைய நிலத்தினை சுற்றி பார்க்கவேண்டும்" எனகூறியபோது "நல்லது! ஐயா !நிலமெல்லாம் சுற்றிபாருங்கள் நான் தடுக்கவில்லை. ஆனால் ,அந்த கூறை கொட்டகை பக்கம் மட்டும் போகாதீர்கள்!" என கூறியவுடனேயே "நான் இந்த மாவட்டத்தின் ஆட்சிதலைவர் தெரியுமா?" என தன்னுடைய சட்டைபையில்ஒட்டி வைத்திருந்த மாவட்ட ஆட்சி தலைவர் என்ற பட்டியை தூக்கிபெருமையுடன் காண்பித்து "என்னை யாரும் எங்கு சென்றாலும் தடுக்கவோ வழிமறிக்கவோ முடியாது! நீ முக்கியமாக கஞ்சாவியாபாரத்தை அந்த கூறை கொட்டகையில் தான் செய்கிறாய் போலும் அதனால் என்னை தடுக்க நினைக்கின்றாய் நான் அங்கு சென்று பார்வையிடுவதை நீ தடுக்கவே முடியாது "என கோபமாக கூறியதை தொடர்ந்து அந்த விவசாயியும் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார் ..

மாவட்ட ஆட்சிதலைவரும் அந்த விவசாயியின் நிலமெல்லாம் சுற்றி பார்வையிட்டு ஒன்றும் கஞ்சா செடியில்லாததை உறுதிபடுத்திகொண்டாலும அந்த கூறை கொட்டகையில் கண்டிப்பாக அந்த விவசாயி கஞ்சா செடியை காயவைத்து மறைத்துவைத்திருப்பார் நாம் போய் கையும் களவுமாக பிடித்துவிடலாமென அந்த கூறை கொட்டகையை திறந்து உள்ளே போக முனைந்து கூறை கொட்டகையின் வாயில் கதவை திறந்து உள்நுழைந்த வுடனேயே அங்கிருந்த மிகவலுவான கொம்பேறிமூர்க்கன் காளையொன்று அந்நிய நபர் அந்த கொட்டகையினுள் நுழைந்ததால் கோபமுற்று கட்டியிருந்த தாம்புக் கயிற்றினை அறுத்துகொண்டு அந்த மாவட்ட ஆட்சி தலைவரை முட்டித்தள்ளுவதற்கு மிக ஆக்ரோசமாக அவரை நோக்கி ஓடிவந்தது.

அதனை கண்ணுற்றதும் துண்டை காணோம் துனியை காணோம் என தன்னுடைய உயிரை காப்பற்றிகொள்ளவேண்டிய சூழலில் அந்த மாவட்ட ஆட்சி தலைவர் மிகவேகமாக ஒடிவந்தார்

அதனை கண்ணுற்ற அந்த விவசாயி உடன் அநத மாவட்ட ஆட்சிதலைவரை காக்கவேண்டும் என்ற உத்வேகத்தில் தன்னுடைய கையிலிருந்த கொம்பை தூக்கி ஓடிவரும் கொம்போறிமூர்க்கன் காளையின் முன்புறம் வீசியெறிந்தார்

உடன் அந்த மூர்க்கமாக ஓடிவந்த காளையும் சத்தியத்திற்கு கட்டுபட்டவாறு அப்படியே நின்று விட்டது

உடன் அந்த விவசாயி" நான் அவ்வாறெல்லாம் கஞ்சாவை பயிரிடவில்லை ஐயா! உங்களுக்கு தவறான தகவல் யாரோ கொடுத்துள்ளனர் இருந்தாலும் பத்திரமாக சென்றுவாருங்கள்" என மாவட்ட ஆட்சிதலைவரை அவருடை வண்டியில் ஏற்றி பத்திரமாக செல்லுமாறு பாதுகாத்து அனுப்பி வைத்தார் . ஆம் எதையும் நாம் தவறாக யூகித்து மற்றவர்களின் மனத்தை துன்பறுத்த கூடாது!

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நாம் நம்முடைய கடமையை சரியாக திறமையாக செய்தால் நமக்கு கிடைக்கவேண்டியபதவி உயர்வு தானாகவே வந்து சேரும்


ராமு சோமு எனும் இரு நண்பர்கள் ஒரே மருத்துவ கல்லூரியில் ஒரேமாதிரியான மருந்தாளுநர் எனும் இளங்கலை கல்வியை பயின்று பட்டம் பெற்ற பின்னர் ஒரே மருந்து நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்தனர் பத்தாண்டுகள் அவ்விருவரும் மருந்து விற்பணையாளராக மிக்கடுமையக பணிபுரிந்து கொண்டிருந்தபோது அந்நிறுவனத்தின் நிருவாகமானது ராமுவை மட்டும் விற்பனை மேலாளராகபதவி உயர்வு வழங்கியது

ஆனால் சோமுவையும் அவருடையை கடினஉழைப்பையும் கண்டுகொள்ளாமல் அப்படியே பதவி உயர்வு வழங்காமல் அவருடைய நண்பனின் கீழ் வழக்கம்போன்ற விற்பனை யாளராக பணிபுரியுமாறு விட்டுவிட்டனர்

இதனால் ஆத்திரமடைந்த சோமுவானவர் நிருவாக அலுவலரை நேரில் சந்தித்து நீங்கள் செய்வது நியாயமான செயலா மனதை தொட்டு சொல்லுங்கள் ராமுவும் நானும் ஒரே கல்லூரியில் மருந்தாலுநர் பட்டம் பெற்று ஒரே நாளில் இந்த நிறுவனத்திற்கு விற்பனை பிரதிநிதியாக பணியில்சேர்ந்து மிக்கடிணமாக உழைத்து வருகின்றோம் ஆனால் என்னை மட்டும் விட்டுவிட்டு என்னோடு பணியில் சேர்ந்த ராமுவிற்கு மட்டும் எவ்வாறு விற்பனை மேலாளராக பதவி உயர்வு வழங்கிடமுடியும் என்னுடைய பணியை நீங்கள் அங்கீகரிக்கவேயில்லை அதனால் நான் என்னுடைய பணியிலிருந்து நின்று கொள்கின்றேன் என தன்னுடைய பணிவிலகல் கடிதத்தை கொடுத்தார்.

நிருவாக அலுவலர் சிறிது நேரம் காத்திருங்கள் என சோமுவிடம் கூறி நம்முடைய நகரில் உள்ளமருந்து கடைகளில் சர்க்கரை வியாதிக்கு ஊசிமருந்து இருக்கின்றதா வென பார்த்து வருமாறு ராமு சோமு ஆகிய இருவரையும் பணித்தார் உடன் சோமு பக்கத்திலிருந்த கடைக்கு சென்று இன்சுலின் ஊசிமருந்து இருப்பதாக திரும்பிவந்து கூறியதை தொடர்ந்து அது R வகையா அல்லது Nவகையா என திரும்பவும் விசாரிக்கும் படி கூறினார் மீண்டும் சென்றுவந்த சோமு R , N ஆகிய இரு வகைகளிலும் இருப்பதாக கூறினார் மீண்டும் அவற்றினுடைய விலை அதன்பின் எவ்வளவு கையிருப்பில் உள்ளன என்பன போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் சோமுவானவர் அருகிலிருந்த கடைக்கு சென்ற விசாரித்து வந்து பதில் கூறி எரிச்சல் அடைய வைத்து கொண்டிருந்தார்

இந்நிலையில் ராமுவானவர் என்னென்ன நிறுவனத்தின் என்னென்ன வகையான இன்சுலின் ஊசிமருந்துகள் எந்தெந்த கடைகளில் எவ்வளவு கையிருப்பில் உள்ளன அவைகளின் விற்பனை விலை விவரம் அவைகள் எந்த நாள்வரையில் பயன்படுத்தமுடியும் கழிவு போக மிகுதி என்னவிலைக்கு விற்பனை செய்கின்றனர் என்பன போன்ற அனைத்து விவரங்களையும் நிர்வாக அலுவலர் கேட்காத கேள்விக்கும் சேர்த்து பதிலளித்து கொண்டிருந்தார் அருகில் சோமுவும் பார்த்து கொண்டிருந்தார். “சோமு! நான் ஏன் ராமுவை விற்பனை மேலாளராக பதிவிஉயர்வு வழங்க பரிந்துரை செய்தேன்? என்பதை இப்போது பார்த்தாயா! நீயும் அதைபோன்று எள் எனும் முன்பு எண்ணெய்யாக இருந்தால் பதவிஉயர்வு உனக்கு தானாகவே வந்து சேரும். போய் விற்பனையாளர் பணியையாவது ஒழுங்காக செய்” என அறிவுறுத்தி அனுப்பினார்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உண்மையில் காகம் ஏமாந்ததா?


ஒருஊரில் அவ்வூரின் ஓரத்தில் இருந்த பெரியஆலமரத்தின் கீழ் பாட்டி ஒருவர் தன்னுடைய பிழைப்பிற்காக வடைசுட்டு அகலமான தட்டில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். அப்போது பசியோடிருந்த காகமொன்று தனக்கு ஏதேனும் இரைகிடைக்குமாவென பறந்து அலைந்து திரிந்து பார்த்து அந்த ஆலமரத்திற்கு வந்து சேர்ந்தது. தன்னுடைய பசியை போக்குவதற்காக அந்த பாட்டி ஏமாந்தநேரமாக பார்த்து அவர் விற்பதற்காக தட்டில் வைத்திருந்த வடைஒன்றை எடுத்துகொண்டு பறந்து சென்ற அருகிலிருந்த மற்றொரு மரத்தின் கிளையில் சென்றமர்ந்து அந்த வடையை தின்று பசியாறலாம் என முயன்றபோது அவ்வழியே வந்த நரியொன்று அதே மரத்தின் நிழலில் சிறிதுநேரம் ஓய்வு கொள்வோம் என நின்றது

உடன் அடடா வடைவாசனை வருகின்றதே எங்கிருந்து வருகின்றது எனசுற்றுமுற்றும் பார்த்துஏதும் காணாததால் உயரே அன்னாந்து பார்த்தபோது காகம் தன்னுடைய வாயில் வடையொன்றை கவ்விகொண்டு இருப்பதை பார்த்து அதனை எப்படியாவது அபகரிக்கவேண்டும் என தந்திரமாக காகமே காகமே உன்னுடைய குரல் எவ்வளவு இனிமையானது தெரியுமா அதனால் உன்னுடைய வாயால் ஒரு பாட்டினை பாடுகின்றாயா கேட்டுமகிழலாம் என கூறியவுடன் அக்காகமானது நம்முடைய குரலை கேட்ககூட நபர் ஒருவர் ரசிகராக இருக்கின்றாரா என உளம் மகிழ்ந்து தன்னுடைய வாயால் காகா என கூவ ஆரம்பித்தது உடன் அதனுடைய வாயில் வைத்திருந்த வடையானது கீழே விழுந்தது அதனை நரிஎடுத்துகொண்டு ஓடிவிட்டது காகம் தன்னுடைய பசியை போக்க வழிஇல்லாமல் ஏமாந்தது என நாமெல்லோரும் சிறுவயதிலேயே இந்த கதையை தெரிந்து வைத்துள்ளோம்

ஆனால் இதே கதையை பிற்காலத்தில் அந்த நரி அவ்வாறு காகத்தின் குரலை கேட்பதாக கூறியவுடன் நரியின் தந்திரத்தை தெரிந்துகொண்டு வடையை வாயிலிருந்து கால்களுக்கு மாற்றி கால்களால் பிடித்து கொண்டு காகா என கூவியது அதனால் வடைஎதுவும் தரையில் விழவில்லை தன்னுடைய தந்திரம் எதுவும் இந்த காகத்திடம் பலிக்காது என நரி வேறு ஏதாவது உணவு இருக்கின்றதா பார்ப்போமென தன்னுடைய வழியே செல்ல ஆரம்பித்தது என மாற்றியமைத்ததையும் நாமெல்லாம் அறிவோம் நாமெல்லோரும் இந்த ஏமாந்த காகம் என்ற கதையின் கருத்து என்ன வென அறிந்து தெளிவுபெறாமலேயே இதுவரை இருந்து வருகின்றோம் என்பதே உண்மை நிலவரமாகும்

அதாவது காகம் எனில் மிக கருமையாக இருக்கும் அதனால மனிதர்களில் கருமைநிறத்தில் இருப்பவர்களை அண்டங்காக்கை என நக்கலாக கூப்பிடுவதை கேள்விபட்டிருக்கின்றோம் அவ்வாறே அது கழிவையும் இதரபொருட்களையும் உண்டு சுத்தபடுத்துவதால் காகமானது ஊரின் தோட்டி என கூறுவதையும் கேள்விபட்டிருக்கின்றோம் அதேபோன்று அதன் குரலும் கரகரவென யாருக்கும் பிடிக்காது

இதனை தொடர்ந்து தன்னுடைய உருவத்தையும் குரலையும் யாருக்கும் பிடிக்காது எனஅந்த காகம் தாழ்வுமனப்பான்மையில் மனத்தின் அடியில் வேதனையோடு இருந்து வந்தது அதனால் நரி அந்த காகத்தின் குரல் இனிமையாக இருக்கின்றது அதனுடைய வாயால் ஒருபாட்டு பாடினால் அதனே கேட்பதாக புகழ்ந்து கூறியவுடன் அப்புகழிற்கு மயங்கி நம்முடையு உருவத்தைதான் அனைவரும் பழிக்கின்றார்கள் தன்னுடைய குரலை கேட்பதற்காகவாவது ரசிகர் ஒருவர் கிடைத்தாரே என அகமகிழ்ந்து தன்னுடைய தற்போதைய இருப்பை மறந்து வாயை திறந்து காகா என கூவியது என கதை முடிவதை அறிந்து கொள்வோமாக.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

பெண்பிள்ளையை போற்றிகாப்போம் ஆண்பிள்ளையை அம்போவென விட்டுவிடுவோம்


திருமணம் முடிந்து இளந்தம்பதிகள் தனியாக குடியமர்த்தபட்டனர் முதன்முதலில் அவ்விருவரையும் பார்ப்பதற்கு மணமகனின் பெற்றோர் இளந்தம்பதிகளின் குடியிருப்பு வீட்டின் கதவினை தட்டி திறக்குமாறு கோரினார்.

முன்னதாக அவ்விளந்தம்பதிகள் தாமிருவரும் தற்போதுதான் தனியாக வாழுவதற்கு இந்த வீட்டில் குடியேறி இருப்பதால் இருவரும் தங்களுடைய வீட்டின் கதவை யார்வந்து திறக்குமாறு கோரினாலும் திறப்பதில்லை என ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர்

அதனால் மணமகனின் பெற்றோர் எவ்வளவு நேரம் கதவை தட்டியும் அவ்விருவரும் அவர்களின் குடியிருப்பு கதவை திறக்கவேயில்லை நீண்டநேரம் அம்மணமக்கள் கதவினை திறந்து தங்களை அழைப்பார்தள் என பார்த்து சோர்வுற்றனர்.

அதன்பின் மணமகளின் பெற்றோர் வந்து சேர்ந்தனர் அவர்கள் தங்களுடைய மகளின் பெயரை அழைத்து கதவினை திறந்திடுமாறு தட்டியபோது மனமகளானவள் கண்ணீல் நீர்மல்க என்னை மன்னித்துவிடுங்கள் எங்களுடைய பெற்றோரை மடடும் என்னால் நம்முடைய வீட்டிற்கு வெளியே காத்திருக்க செய்யமுடியாது என கூறிக்கொண்டு வாயில் கதவினை திறந்து மணமகளின் பெற்றோரை வரவேற்றாள்

பிறகு அவ்விளம் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகளை பிறந்தன அவற்றுள் முதலிரு குழந்தைகளான ஆண்பிள்ளைகளுக்கும் ஒன்றும் செய்யாதிருந்து மூன்றாவதாக பெண்மகவு பிறந்தபோது மட்டும்மிகவும் பெரிய விழாவாக கொண்டாடிட ஏற்பாடு செய்து அவ்வாறே கொண்டாடபட்டது

அவனுடைய மனைவி தன்னுடைய கணவனிடம் "ஏன் முதலிரு ஆண்குழந்தைகளும் பிறந்தவுடன் கொண்டாட்டம் ஏதும் செய்யாதிருந்து மூன்றாவதாக பெண்பிள்ளை பிறந்தபோதுமட்டும் மிகவும் பெரிய விழாவாக கொண்டாட செய்தீர்கள்" என வினவினாள்

"ஆண்குழந்தை பெரியவனாக வளர்ந்து திருமணம் ஆனவுடன் தன்னுடைய மனைவியின் சொல்லை கேட்டு அதன்படி நடந்துகொண்டு வயதானபோது என்னை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள் ஆனால் பெண்பிள்ளையெனில் அப்பாவந்துவிட்டார் என என்னை வரவேற்பதோடுமட்டுமல்லாமல் வயதானபோது எனக்கு தேவையான உணவிட்டு என்னை நன்றாக பார்த்து கொள்வாள்" என பதில் கூறினான்

ஆம் தற்போது நாட்டு நடப்பும் அவ்வாறுதானே உள்ளது என்பது கண்கூடு அல்லவா?

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...