வெள்ளி, 16 செப்டம்பர், 2016

அனைவரும்ஒன்றாக கூடி ஒற்றுமையாக செயல்பட்டு மகிழ்ச்சியாக இருப்போம்


சமூக சேவையாளர் ஒருவர் ஆப்பிரிக்க நாட்டின் பழங்குடியினர் வாழும் குக்கிராமத்திற்கு சென்றார் அங்கு அந்த பழங்குடியினர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு நூறுமீட்டர் ஓட்டபந்தயம் நடத்தவிருப்பதாக தெரிவித்தார் அந்த ஓட்டபந்தயத்தில் கலந்து கொள்பவர்களில் யார் முதலில் நூறுமீட்டர் தூரத்தை முதலில் கடக்கின்றனரோ அவர் நூறாவது மீட்டர் தூரத்தில் அவர் வைத்துள்ள பெட்டிநிறைய இனிப்புவகைகள் அனைத்தும் வெற்றியாளரே எடுத்து கொள்ளலாம் என கூறினார் அதனைதொடர்ந்து அனைவரையும் அந்த ஓட்டபந்தயத்தில் ஓடுவதற்கு தயாராக நிற்க வைத்தார் பின்னர் ready steady go! என கூறினார்

உடன் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து கொண்டு ஒரே சீராக ஓடி அனைவரும் ஒரே சமயத்தில் அந்த சமூக சேவையாளர் குறித்த நூறாவது மீட்டர் தூரத்தில் அவர்வைத்திருந்த இனிப்புவகைகள்வைத்துள்ள பெட்டியை திறந்து அதிலுள்ள இனிப்புவகைகளை அனைவரும் சமமாக பங்கிட்டு தின்று மகிழந்தனர் அந்த சமூக சேவையாளருக்கு மிக ஆச்சரியமாகிவிட்டது ஏன் அந்த சிறுவர்கள் அவ்வாறு செய்தனர் என அவர்களிடம் வினவியபோது உபுண்டு என ஒரேயொரு சொல்லை கூறினர்

அதற்கான பொருள் என்னவென வினவியபோது ஒருவர் மற்றொருவரை வருத்தபடவைத்து எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கமுடியும் அதனால் நான் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் என்றால் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம் என பொருளாகும் அதனால் அனைவரும்ஒன்றாக கூடி ஒற்றுமையாக செயல்பட்டு மகிழ்ச்சியாக இருப்போம்

சனி, 10 செப்டம்பர், 2016

எளிய ஆலோசனை கிடைத்தாலும் அதனை ஏற்றுகொள்ளும் மனப்பாங்கு தலைமையாளருக்கு இருக்கவேண்டும்


ஒருமகிழ்வுந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைபொறியாளர் ஒருவர் புதிய வகை மகிழ்வுந்து ஒன்றினை வடிவமைத்து தொழிலகத்திலிருந்து நுழைவுவாயில் வழியாக வெளியில் காட்சி கூடத்திற்கு அந்தபுதிய வகை மகிழ்வுந்தினை கொண்டு செல்ல முயன்றார்

ஆனால் நுழைவுவாயிலின் வாயிற்படியானது மகிழ்வுந்தின் கூரை மோதிக்கொண்டு வெளியேகொண்டுவரமுடியாமல் நின்றுகொண்டது அதனால் அந்த நிறுவனத்தின் தலைமைபொறியாளருக்கு "முதன்முதல் புதியவகை மகிழ்வுந்து ஒன்றினை வடிவமைத்தோம் அதனை தொழிலகத்திலிருந்து காட்சி கூடத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லையே" என மனவருத்தமாகிவிட்டது

இந்நிலையில் வர்ணம் பூசம் தொழிலாளி "ஐயா மகிழ்வுந்தின் கூரையின் மேல் பூசிய வர்ணத்தை சுரண்டிவிட்டால் வண்டியை சுலபமாக வெளியே கொண்டுவரமுடியும்" என ஆலோசனை கூறினார் மேலும் இவ்வாறு ஒவ்வொருதொழிலாளியும் ஒவ்வொரு ஆலோசனை கூறியதை கேட்டதலைமைபொறியாளர் கோபம் அதிகமாகி யாரும் எனக்கு ஆலோசனை கூறத்தேவையில்லை நான் உத்திரவிடுவதை செயற்படுத்து-வதுதான் உங்களுடைய பணி எல்லோரும் பேசாமல் கலைந்து போய்விடுங்கள் " எனக்கூறியபின்னர் சிறிதுநேரம் தமக்குள் ஆலோசித்து தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்து "இந்த நுழைவுவாயிலின் மேற்பகுதியை மட்டும் வெட்டியெடுங்கள் போதும் என உத்திரவிட்டார்

அப்போது அந்த நுழைவாயிலின் காவலுக்கு நின்றிருந்த காவலாளி "ஐயா நான் இந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்கான வழியொன்று கூறுகின்றேன் சற்று காதுகொடுத்து கேட்கின்றீர்களா" என மிகமெதுவாக கோரினார் தற்போது அந்த தலைமை-பொறியாளர் கோபமில்லாமல் அமைதியாக இருந்ததால் "சரி சொல்" என உத்திரவிட்டார்

உடன் அந்த நுழைவாயிலின் "காவலாளி பெரியதாக ஒன்றுமில்லை ஐயா வண்டியின் உயரம் குறைந்துவிடும் அளவிற்கு வண்டியின் நான்கு சக்கரத்திலும் உள்ள காற்றினைதிறந்துவிட்டபின்னர் வண்டியை நுழைவு வாயிலிற்கு வெளியில் கொண்டுவந்து அதன்பின்னர் நான்கு சக்கரத்திலும் போதுமான காற்றினை பிடித்து கொள்ளலாம் இதற்காக நுழைவாயிலின் மேற்கூரையை வெட்டிடத் தேவையில்லை" என கூறினார் உடன் அவ்வாறே செயல்படுத்த பட்டது.

தகுதி குறைவானவர்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து மிகச்சரியான பொருத்தமான எளிய ஆலோசனை கிடைத்தால் அதனை ஏற்றுகொள்ளும் மனப்பாங்கு தலைமையாளருக்கு இருக்கவேண்டும்

புதன், 7 செப்டம்பர், 2016

கூடியவரை தவறு எதுவும் செய்திடாமல் கவணமாக வாழ பழகுக


பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒருநாள் தன்னுடைய வகுப்பு மாணவர்களுக்கு 4 ஆம் பெருக்கல் வாய்ப்பாட்டினை பின்வருமாறு கரும்பலகையில் எழுதினார் :

1X 4 =2

2X 4 =8

3X 4 =12

4X 4 =16

5X 4 =20

6X 4 =24

7X 4 =28

8X 4 =32

9X 4 =36

10X 4 =40

உடன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கேலியாகவும் கிண்டலாகவும் ஆசிரியரை பார்த்து சிரித்து மகிழ்ந்தனர் ஏனெனில் இந்த 4 ஆம் வாய்ப்பாட்டின் முதலில் 1X 4 =4 என எழுவதற்கு பதிலாக 1X 4 =2 என தவறாக எழுதிவிட்டார்

உடன் ஆசிரியர் அந்த மாணவர்களை பார்த்து "மாணவர்களே இந்த வாய்ப்பாடு நான் எழுதியதிலிருந்து நீங்கள் அனைவரும் ஒரு படிப்பினை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே நான் இந்த வாய்ப்பாட்டின் முதல்வரியினை வேண்டுமென்றே தவறாக எழுதினேன் இந்த வாய்ப்பாட்டின் 1 முதல் 10 வரையிலுள்ள வரிகளை பார்த்தீர்கள் எனில் முதல் வரியை தவிர மிகுதி ஒன்பது வரியும் மிகச்சரியாக எழுதியிருந்தாலும் அந்தமுதல் வரியிலுள்ள தவறு மட்டுமே நம்முடைய கண்களுக்கு தெரிகின்றது ஆனால் யாரும் சரியான இந்த ஒன்பது வரிகளை மட்டும் ஆமோதிக்க மறுக்கின்றோம் அதே போன்று நாம் வாழும் இந்த சமுதாயத்தில் ஆயிரகணக்கான நன்மை செய்தாலும் அதனை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் ஆனால் ஒரேயொரு சிறு தவறு செய்துவிட்டாலும் அதனை ஊதி பெருக்கி பூதாகரமாக செய்து இந்த உலகமே அதனால் மட்டுமே அழியபோவதாக தவறாக செய்த நபரை கேலியும் கிண்டலுமாக பேசி ஒருவழியாக்கிவிடுவார்கள் அதனால் முடிந்தவரை கூடியவரை தவறு எதுவும் செய்திடாமல் கவணமாக வாழ பழகுங்கள்" என அறிவுரை வழங்கினார்

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

எதையெதை எதனோடு மிகச்சரியாக கலந்தால் அமைதியாகிவிடும் என பக்குவமாக கையாளச்செய்தால் அமைதியான வாழ்க்கை அமையும்


ஒரு சிறுவன் தன்னுடைய பாட்டியிடம் ஏன் பாட்டி தற்போதெல்லாம் பள்ளிக்கு போனாலும் பிரச்சினை ,நண்பர்களுடன் விளையாடச்சென்றாலும் பிரச்சினை, வீட்டிற்கு ஓய்வெடுக்க வந்தால் இங்கு வீட்டிலும் பிரச்சினை வீட்டிற்கு வெளியில்தான் செல்வோமே என வெளியில் சென்றால் அங்கு பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் பிரச்சினை, அதைவிட தலைவலி உடல்வலி என நம்முடைய உடலிலும் பிரச்சினை என எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சினையாகவே உள்ளன இதற்கு என்னதான் காரணம் என வினவினான்

"பேராண்டி அவைகளுக்கான காரணத்தை அப்புறமாக விளக்கமாக கூறுகின்றேன் முதலில் இப்போது மாலை நேரமாகின்றது உனக்கு தின்பண்டம் எதுவும் இல்லை என்ன வேண்டும்" என பாட்டி வினவினாள் உடன் அந்த சிறுவன் "பாட்டி எனக்கு பஜ்ஜி செய்து கொடு பட்டி" என கோரினான்

உடன் பாட்டி "அப்படியா இது என்ன" சிறுவன் "எண்ணெய் பாட்டி". பாட்டி"இதை குடி பார்க்கலாம்" சிறுவன் "ஐய்யய்யோ வயிற்றுப்போக்கு ஆகிவிடும் பாட்டி" பாட்டி "சரி இது என்ன" சிறுவன் "பஜ்ஜி மாவு" பாட்டி"இதை தின்னு பார்க்கலாம்" சிறுவன் "ஐய்யய்யோ வயிறு செரிக்காது பாட்டி" பாட்டி "சரி இது என்ன" சிறுவன் "பச்சைமிளகாய் பாட்டி" பாட்டி "இதை கடித்து தின்னு பார்க்கலாம்" சிறுவன் "ஐய்யய்யோ காரம் வாயெல்லாம் எரியும் பாட்டி"

பாட்டி "ரொம்ப சரி ஆயினும் இவைகளுள் தேவையான பொருட்களை மட்டும் மிகச் சரியாக கலந்து அடுப்பில் வானலியை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி சூடேற்றி நீ கோரிய பஜ்ஜி செய்தால் சாப்பிடலாம் அல்லவா அதேபோன்று பிரச்சினைகளுள் எதையெதை எதனோடு மிகச்சரியாக கலந்தால் அமைதியாகிவிடும் என பக்குவமாக கையாளச்செய்தால் அமைதியான வாழ்க்கை அமையும்என தெரிந்துகொள்" என தன்னுடைய பெயரனுக்கு அறிவுரை கூறினார் பாட்டி

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...