ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

நம்முடைய வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய மூன்று விதிகள்


முற்காலத்தில் பணக்காரன் ஒருவன் வாழ்ந்துவந்தான் அவன் எப்போதும் பணம் பணம் என பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்துவந்தான் இந்நிலையில் ஒரு அழகான பளபளவென தங்கம்போன்று மின்னிடும் பறவை ஒன்று மரம் ஒன்றில் அமர்ந்திருப்பதை கண்டவுடன் அதனை பிடித்து விற்றால் நல்லவிலைகிடைக்கும் என அந்த வித்தியாசமான பறவையை எப்படியோ பிடித்து விட்டான் உடன் அந்த பறவையானது ஐயா என்னை ஏன் பிடித்தீர்கள் என்னை விட்டுவிடுங்கள் எனக்கதறியது உன்னை விடுவதற்கா பிடித்தேன் நீ நன்றாக பளபளவென்று தங்கம்போன்று மின்னுகின்றாய் அதனால் உன்னை நல்ல விலைக்கு விற்று மேலும் என்னால் பொருள் சேர்த்திடமுடியும் என கூறியதை தொடர்ந்து உங்களிடம்தான் ஏராளமான பணம் இருக்கின்றதே என பதில் கூறியது உடன் பணக்காரன் உன்னை விற்று மேலும் பணம் சேர்ப்பதற்குத்தான் உன்னை பிடித்தேன் அதனால் உன்னை எப்படி விடமுடியும் எனகூறினான் நீங்கள் தொடர்ந்து என்னை பிடித்து கொண்டிருந்தால் என்னுடைய தோற்றம் பார்க்க சகிக்காத மாறிவிடும் எனகூறியதை தொடர்ந்த அதனுடைய பளபளவென மின்னும் தோற்றமும் மாறிவிட்டது உடன் அவனுக்கு கோபம் அதிகமாகி உன்னை கொன்று சாப்பிட்டுவிடுகின்றேன் என கருவினான் உடன் அந்த பறவை ஐயா என்னை மன்னித்து விடுதலை செய்திடுங்கள் உங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கின்றேன் என மிகவும் பரிதாபமாக கேட்டது அதனால் அந்த பணக்காரண் மனமிரங்கி சரியென விடுதலை செய்தான் உடன் அந்த பறவையும் அருகிலிருந்த மரத்திற்கு சென்று உட்கார்ந்து கொண்டு மிக்க நன்றி ஐயா உங்களுக்காக பொதுவாக மனிதர்கள் கடைபிடிக்கவேண்டிய மூன்று விதிகளை கூறுகின்றேன் எனக்கூறி முதல் விதி மற்றவர்கள்கூறும் எந்தவொரு செய்தியை அப்படியே நம்பாதீர்கள் இரண்டாவது விதி நம்முடைய கையில் கிடைத்த பொருளை விட்டுவிடாதீர்கள் மூன்றாவது நம்மிடம் இருந்த பொருளை இழந்து விட்டால் அதற்காக வருத்தபடாதீர்கள் என மூன்று விதிகளை கூறியது அந்த பணக்காரன் அடமடப்பறவையே இந்த எளிய விதிகள்தான் எங்கள் எல்லோருக்கும்தான் ஏற்கனவே தெரியுமே மேலும் அவைகளைதான் நாங்கள் அனைவரும் ஏற்கனவே பின்பற்றி வாழ்ந்துவருகின்றோமே என எகத்தாளமாக கூறினான் அப்படியா ஐயா அப்படியெனில் நான்கூறியதை நம்பினேர்களே அதுஏன் அதனை தொடர்ந்து உங்களுடைய கையில் கிடைத்த என்னை ஏன் விட்டுவிட்டீர்கள் இது இரண்டும் நான்கூறிய முதலிரண்டு விதிகளாயிற்றே அதனை பின்பற்றியிருந்தால் நான் இவ்வாறு சுதந்திரமாக மரக்கிளையில் எவ்வாறு உட்கார்ந்திருக்குமுடியும் ரொம்ப நல்லது ஐயா மூன்றாவது விதியையும் கடைபிடியுங்கள் எனக்கூறியவாறு அந்த பறவை அந்த மரத்தில் இருந்து பறந்து சென்றது

திங்கள், 20 பிப்ரவரி, 2017

ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிடும் நண்பர்களாக வாழ்வதே சிறப்பானதாகும்


முற்காலத்தில் ஆடுகளை வளர்த்து வந்த குடியானவனும் காட்டிற்கு சென்று விலங்குகளை வேட்டைநாய்களை கொண்டு வேட்டையாடும் வேடனும் கிராமம் ஒன்றில் அருகருகே வாழ்ந்துவந்தனர் வேடனுடைய வேட்டைநாய்களானவை அவ்வப்போது ஆடுவளர்ப்பவனின் வீட்டு எல்லைக்குள் புகுந்து ஆட்டு குட்டிகளை கடித்து தின்று செல்வது வழக்கமான செயலாக இருந்துவந்தன அதனால் அந்த குடியானவன் பக்கத்து வீட்டிலிருந்த வேடனிடம் சென்று ஐயா உங்களுடைய வேட்டைநாய்களானவை எங்களுடைய வீட்டின் எல்லைக்குள் வந்து ஆட்டு குட்டிகளை அடித்து சாப்பிட்டுவிடுகின்றன என்னுடைய பிழைப்பே அந்த ஆட்டுகுட்டிகளை வளர்த்து பெரியஆடாக ஆக்கியபின் விற்பனைசெய்வதால் வரும் வருமானம் தான் நான் வயிறார சாப்பிடமுடியும் அதனால் தயவுசெய்து உங்களுடைய வேட்டைநாய்களை எங்களுடைய வீட்டிற்குள் வந்திடாமல் கட்டிவைத்திடுங்கள் என பலமுறை கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்குபோன்று அந்த வேடன் அந்த குடியானவன் கோரியவாறு செய்யாமலேயே இருந்துவந்தான் ஒரு நாள் வேட்டைநாய்கள் மிகவும் கொடூரமாக ஏராளமான ஆட்டுகுட்டிகளை அடித்து சாப்பிட்டதுமல்லாமல் வீணாக அடித்து போட்டுவிட்டும் சென்றன அதனால் இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆகவேண்டும் என அந்த கிராமத்தின் நீதிபதியிடம் சென்று முறையீடு செய்தார் அந்த குடியானவன் உடன் அந்த நீதிபதியானவர் சரி ஐயா பக்கத்து வீட்டுகார வேடன் உனக்கு எதிரியாகவேண்டுமா நண்பனாக வேண்டுமா எனக்கூறினால் அதற்கேற்ற தீர்வினை உனக்கு வழங்குவேன் எனக்கூறியதை தொடர்ந்து முடிந்தவரை நண்பனாக இருந்தால் நன்றாக இருக்கும் என அந்த குடியானவன் தன்னுடைய கருத்தினை கூறியதை தொடர்ந்து அந்த குடியானவன் காதில் இரகசியமாக அதற்கான தீர்வினை கூறி இதனை நடைமுறை படுத்தினால் நீங்கள் இருவரும் நண்பர்களாகிவிடுவீர்கள் எனஆலோசனை கூறி அனுப்பினார் அந்த குடியானவனும் தன்னுடைய வீட்டிற்கு வந்த மறுநாள் இரண்டு சிறிய ஆட்டுக்குட்டிகளை கையில் எடுத்து கொண்டு பக்கத்துவீட்டிற்கு சென்று அந்த வேடனின் பிள்ளைகளிடம் ஆளுக்கு ஒன்று கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறிதுநேரத்தில் அந்த வேடனின் பிள்ளைகள் அந்த ஆட்டுகுட்டியுடன் விளையாடுவதில் ஒன்றி போய்விட்டன காட்டிற்கு வேட்டைக்கு சென்ற வேடனும் திரும்பி வந்த பார்த்தபோது பக்கத்து குடியானவனின் ஆட்டுகுட்டிகளுடன் தங்களுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை கண்டு பெருமகிழ்ச்சியுற்றான் அதனை தொடர்ந்து தன்னுடைய பிள்ளைகளிடமிருந்த ஆட்டுகுட்டிகளை திண்பதற்கு பாய்ந்த சென்ற தன்னுடைய வேட்டைநாய்களை சங்கிலியால் கட்டிவைத்துவிட்டான் அதுமட்டுமல்லாது இத்தனை நாட்கள் நம்முடைய வேட்டைநாய்கள் பக்கத்து வீட்டு குடியானவனின் ஆட்டுக்குட்டிகளை அடித்து கொன்று சாப்பிட்டுவந்தாலும் அதனை பெரிய பகையாக எடுத்துகொள்ளாமல் நம்முடைய குழந்தை நாம் இல்லாதபோது பொழுதுபோக்காக விளையாடுவதற்கு தன்னுடைய ஆட்டுகுட்டியை கொடுத்து விளையாட செய்த குடியானவனின் பெருந்தன்மையை மெச்சி நாமும் அவ்வாறே ஏதாவது அந்த குடியானவனுக்கு செய்திடவேண்டும் என தான் வேட்டையாடும்போது கிடைத்த முயல்குட்டிகளை பக்கத்து வீட்டு குடியானவனுக்கு பரிசாக அளித்தான் அதன்பின்னர் இவ்விருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிடும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

தடையெதுவும் இல்லையென்றாலும் ஏற்கனவே பட்ட அனுபவத்தால் தடைஇருப்பதாக கற்பனை செய்துகொண்டு வேறு வழிகளில் முயற்சித்திடாமல் விட்டுவிடுகின்றோம்


கடல்வாழ் உயிரிகளை ஆய்வுசெய்திடும் ஆராய்ச்சியாளர் ஒருவர் மீன்களையும் சுறாவினை பற்றியும் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டார் இந்த ஆய்விற்காக ஒரு பெரிய நீர்தொட்டியில் சுறா ஒன்றையும் பல சிறிய மீன்களையும் விட்டு வளர்த்தார் அதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் சிறியமீன்கள் அனைத்தையும் பிடித்து சாப்பிட்டு விட்டதால் தனியாக வேறு உணவு ஏதேனும் கிடைத்திடுமாவென அந்த மீன் தொட்டியில் அந்த சுறாவானது அலைந்து திரிந்து நீந்திகொண்டிருந்தது அதன்பிறகு ஆய்வாளர் அந்த பெரிய மீன்தொட்டியை கண்ணாடியிழையினால் தடுப்புசுவர்போன்று இரண்டாக பிரித்து அந்த தொட்டியின் ஒரு பகுதியில் இந்த சுறாவையும் மறுபகுதியில் பலசிறியமீண்களையும் விட்டுவளர்த்தார் அதன்பின்னர் மறுபுறம் இருந்த சிறிய மீன்களை உண்பதற்காக அந்த சுறாவானது பாய்ந்த சென்றது ஆனால் இடையிலிருந்த கண்ணாடி-யிழையிலான தடுப்புசுவர் அதனை தடுத்துவிட்டது பின்னர் அந்த கண்ணாடி இழைதடுப்புசுவர் அருகில் சிறிய மீன்கள் நீந்திவரும்போது அவைகளை பிடித்து உண்பதற்காக சுறாவானது மீண்டும் பாய்ந்த செல்லும் ஆனால் கண்ணாடியிழைலான தடுப்பு சுவரின்மீது சுறாவானது மோதி திரும்பிவிடும் அதனால் பக்கத்தில் இருக்கும் சிறியமீன்களை பிடித்து உண்ண முடியவில்லையேயென கோபமுற்று மீண்டும் வேகமாக பாய்ந்து சென்றபோது மீண்டும் கண்ணாடி இழை தடுப்பு சுவரானது சுறாவினை தடுத்து விடும் இவ்வாறே கடுமையாக அந்த சுறா முயன்றாலும் அந்தசுறாவினால் சிறிய மீன்களை பிடித்து உண்ணமுடியாத நிலை ஏற்பட்டது இதே போன்று அந்த சுறாவானது தினமும் சிறிய மீன்களை உண்பதற்காக பாய்ந்து சென்று முயன்று பார்த்தாலும் அந்த சிறிய மீன்களை பிடிக்கமுடியாமல் சோர்வுற்று அதன்பின்னர் அவ்வாறான முயற்சியையே கைவிட்டுவிட்டது அதனை தொடர்ந்து அந்த கண்ணாடி இழைக்கு அருகில் அந்த சிறிய மீன்கள் நீந்துவதும் இந்த சுறாவானது அதற்கருகில் அவைகளை பிடித்து தின்னமுடியாமல் நீந்துவதும் வழக்கமான செயலாகி விட்டது இதன்பின்னர் சிறிதுகாலம் கழித்து இடையிலிருந்த கண்ணாடியிழையிலான தடுப்புசுவரினை அந்த ஆய்வாளர் எடுத்துவிட்டார் என்ன ஆச்சரியம் அப்போதும் அந்தசிறியமீன்கள் அந்த சுறாவின் அருகிலேயே நீந்தி சென்றாலும் அவைகளை பிடித்து உண்ணாமல் அந்தசுறாவானது வாழ்ந்துவந்தது

இந்த சுறாவினை போன்றே நம்மில் பலரும் கடந்த காலத்தில் செய்த செயல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் , தோல்விகள் ஆகியவற்றை அனுபவித்து வாழ்ந்துவந்ததால் எதிர்காலத்தில் குறிப்பிட்ட நிகழ்வினால் மீண்டும் நமக்கு அவ்வாறான தோல்வியே ஏற்படும் என நம்பி அந்த செயலை செய்வதற்கான வேறு வழிமுறையை காண முயற்சிக்காமல் அதற்கான முயற்சியையே கைவிட்டுவிடுகின்றோம் அதாவது நம்முடைய வாழ்வில் எந்தவொரு செயலிலும் தடையெதுவும் இல்லையென்றாலும் ஏற்கனவே பட்ட அனுபவத்தால் தடைஇருப்பதாக கற்பனை செய்துகொண்டு வேறு வழிகளில் முயற்சித்திடாமல் விட்டுவிடுகின்றோம் என்பதே எதார்த்தமான உண்மை நிலவரமாகும்

புதன், 8 பிப்ரவரி, 2017

விருந்தோம்புதல் எனும் பண்பு


ஒரு காட்டில் ஒருசமயம் கணவன் மனைவியாக இரண்டு புறாக்கள் பெரிய மரம்ஒன்றில் கூடுகட்டி வாழ்ந்துவந்தன அவை தினமும் பகல் முழுவதும் அந்த காட்டில் பறந்து சென்று தங்களுக்கு தேவையான உணவினை தேடிபிடித்து தாம்உண்டதுபோதுமிகுதியை இரவு உண்பதற்கு தங்களுடைய கூட்டிற்குஎடுத்துவருவது வழக்கமான நடைமுறை செயலாகும் இந்நிலையில் அன்று மழை நன்கு பொழிந்து கொண்டிருந்ததால் இவைகளுக்க இரை அதிகமாக கிடைக்கவில்லை பொழுது சாயும் நேரம் பெண்புறாமட்டும் கூட்டிற்கு திரும்பிவந்து சேர்ந்தது ஆண்புறா திரும்பவில்லை அடடா ஏன் இன்னும் திரும்பவில்லை ஏதாவது ஆபத்தில் மாட்டிகொண்டதா என பதைபதைப்புடன் காத்திருந்தது மழைபொழிவும் நின்றுவிட்டது அப்போது ஒரு வேடன் குளிரில் வெடவெடன நடுங்கிகொண்டு இந்த புறாக்களின் கூடு இருந்த மரத்தின்அடியில் வந்த ஒதுங்கி நின்று ஓய்வெடுக்கவிரும்பினான் அவனுடைய கையிலிருந்த கூண்டில் ஆண்புறா மாட்டிகொண்டிருந்தது அதனை கண்ணுற்ற பென்புறாவானது ஐயோ எவ்வாறு இந்த வேடன் வலையில் மாட்டிகொண்டீர்கள் எவ்வாறு உங்களை நான் காப்பாற்றுவேன் ஒன்றும் புரியவில்லையே என அழுது புலம்பியது உடன் அந்த ஆண்புறாவானது அழாதே என்னை காப்பாற்றுவதை பற்றி பின்னர் யோசிக்கலாம் இந்த வேடன் வந்திருப்பது நாம் வாழும் கூடுள்ள மரத்திற்கு அதனால் அவர் நமக்கு விருந்தாளி அவரை வரவேற்று உபசரிப்பது நம்முடைய முதல் கடமையாகும் என க்கூறியதை தொடர்ந்த பெண்புறாவானது சிறுசிறு குச்சிகளையும் இலைதழைகளையும் கொண்டுவந்து அந்த வேடன் அருகில் வைத்து நெருப்பிட்டு எரியவைத்தது பின்னர் ஐயா வேடரே நீங்கள் எங்களுடைய விருந்தாளி உங்களுடைய குளிரை போக்குவதற்குக நெருப்பினை எரியவிட்டுள்ளேன் உங்களுடைய பசியை போக்குவதற்கு இன்ற மழை பொழிந்ததால் காய்கணிகளைஎங்களால் சேகரித்து கொண்டுவரமுடியவில்லை அதனால் உங்களுடைய பசியை போக்குவதற்காக நான் இந்த நெருப்பில் பாய்ந்துவிடுகின்றேன் உடன் நெருப்பில் என்னுடைய உடல் நீங்கள் உண்பதற்கேற்ப பதமாகி விடும் அதன்பின்னர் நீங்கள் உண்டு பசியாறலாம் எனக்கூறி அந்த பெண்புறாவானது நெருப்பில் பாய தயாரானது உடன் ஐயய்யோ புறாக்களே உங்களுடைய இந்த விருந்தோம்புதல் பண்பினை புரிந்து கொள்ளாமல் நான் மடையனாக உன்னுடைய கணவனை என்னுடைய கூண்டில் பிடித்து அடைத்துவிட்டேனே எனக்கூறி உடன் அந்த ஆண்புறாவை கூண்டிலிருந்து விடுவித்துவிட்டான் வேடன் புறாக்கள் இரண்டும் அதன்பின்னர் சுதந்திரமாக வாழ்ந்த வந்தன

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...