வெள்ளி, 31 மார்ச், 2017

பொருட்களை விட மனித பாதுகாப்பே மிகமுக்கியமானது


முற்காலத்தில் வாழ்ந்துவந்த ஒரு அரசனுக்கு ஏராளமான அடிமைகள் சேவகர்களாக பணிபுரிந்து வந்தனர் ஒரு நாள் பக்கத்து நாட்டுக்கு முக்கிய செய்தியை நேரடியாக விவாதிப்பதற்காக அந்த அரசன் தன்னுடைய அடிமைகளுடன் குதிரைவண்டியில் பயனம் செய்தார் பயனம் செய்த பாதையானது மேடுபள்ளம் அதிகமாக இருந்தன அவ்வாறான பள்ளம் ஒன்று பாதையில் குறுக்கிட்டபோது குதிரைவண்டியானது பள்ளத்தில் இறங்கி பின்னர் மேட்டில் எகிறி ஏறி சென்றது இதனால் அந்த அரசன் கைகளில் வைத்திருந்தசிறுபெட்டியில் இருந்த முத்துக்கள் அனைத்தும் தரையில் கொட்டிசிதறிவிட்டன உடன் அரசன் தான் பயனம் செயந்துவந்த குதிரை வண்டியை நிறுத்தம் செய்து தன்னுடைய கையில் இருந்த பெட்டியலிருந்து சிதறியோடிய முத்துகள் அனைத்தையும் தேடிசேகரித்திடுமாறு உத்திர – விட்டார். அதனை தொடர்ந்து ஒரு அடிமையை தவிர மற்றவர்கள் அனைவரும் சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்தனர் ஒரு அடிமை மட்டும் சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்திடும் பணியை செய்திடாமல் அரசனுக்கு அருகிலேயே பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தான் இதனை கண்ணுற்ற அரசன் தன்னருகிலேயே நின்று கொண்டிருந்த அடிமையிடம் ஏன் அவ்வாறு சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்திடும் பணியை செய்திடாமல் நிற்கின்றாய் என வினவியபோது ஐயா அதைபோன்ற ஏராளமானமுத்துகள் நீங்கள் சம்பாதித்து விடுவீர்கள் அதைவிட உங்களை பாதுகாப்பதுதான் என்னுடைய தலையான பணியாகும் என பதில்கூறினான் அதனை தொடர்ந்து அந்த அடிமையை தன்னுடைய அந்தரங்க பாதுகாவலனாக தன்னுடைய வாழ்நாள்முழுவதும் பணியமர்த்தி கொண்டார்

வெள்ளி, 24 மார்ச், 2017

அந்த மூன்று கேள்விகள்


முன்னொரு காலத்தில் ஜான் எனும் அரசனொருவன் இங்கிலாந்தில் அரசாட்சி செய்து வந்தான் அவன் தன்னைத்தவிர இந்த உலகில் ஒப்பாரும் மிக்காருமான மிகப்பெரிய மனிதன் யாருமே இல்லை என்ற இறுமாப்புடன் அரசாட்சி செய்துவந்தான் இந்நிலையில் அரசசபையில் இருந்த அரசகுரு ஒருவர் மிக வசதி வாய்ப்புகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்துவந்தது இந்த அரசன் கவணத்திற்கு வந்தது அதனால் அரசனானவன் மிக கோபமுற்று தன்னுடையு படைவீரர்களை அழைத்து உடன் அந்த அரசகுருவை கைது செய்து அரசசபைக்கு அழைத்துவரும்படி உத்திரவிட்டார் அதனை தொடர்ந்து அவ்வாறே அந்த அரகுருவை அரசசபைக்கு படைவீரர்கள் அழைத்தவந்தபோது "இந்த நாட்டில் அரசன் பெரியவரா அரசகுரு பெரியவரா யார் மிகவும் உயர்ந்தவர் என கூறுங்கள் அரசனைவிட ஆடம்பரமாக அரசகுரு வாழமுடியமா அதனால் வருங்காலத்தில் இந்த நாட்டிற்கு நீங்கள் அரசனாக முடிசூட்டி கொள்வீர்களா அவ்வளவு உயர்ந்த இடத்திற்கு நீங்கள் சென்றுவிட்டீர்களா அவைக்காவலர்களே இவருடைய தலையை உடனே வெட்டி வீழ்த்துங்கள்" என உத்தரவிட்டார். உடன் அரசகுருவானவர் "மதிப்பிற்குரிய ஐயா என்னை மன்னித்துவிடுங்கள் அரசன்தான் இந்த உலகில் உயர்ந்தவன்" என பதில் கூறியதும் அரசன் "அவ்வாறு மன்னிப்பு அளிக்கவேண்டுமெனில் நான் கேட்கும் பின்வரும் மூன்று கேள்விகளுக்கான பதிலை உடன் கூறுமாறு அரசன் கேட்டார் "என்னுடைய(அரசனுடைய) மதிப்பு எவ்வளவு பெறும்? இந்த உலகை நான் (அரசன்) எவ்வளவு நேரத்தில் சுற்றிவந்து சேரமுடியும்? தற்போது என்னுடைய(அரசனுடைய) மனதில் என்ன எண்ணுகின்றேன்?” உடன் அரசகுருவானவர் நான்குநாட்கள் காலஅவகாசம் கொடுத்தால் இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதாக வேண்டி கொண்டதை தொடர்ந்து அரசனும் நான்கு நாள் கால அவகாசத்தினை அனுமதித்தான் அந்த அரசகுருவும் மிகவும் சோர்வுற்ற மனநிலையில் வீடு திரும்பினான் பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ஆகிய வற்றின் நூலகங்களில் இந்த கேள்விகளுக்கான பதிலை தேடிஅலைந்தான் மேலும் இந்த பல்கலைகழகங்களில் பணிபுரிந்த பேராசரியர்களிடமும் ஆலோசனை கோரியபோது அவர்களாலும் அவைகளுக்கான பதிலை கூறமுடியுவில்லை மிகவும் மனமுடைந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வரும் நிலையில் ஆடுமேய்த்திடும் இளைஞன் ஒருவன் குறுக்கிட்டான் "ஏன் ஐயா மிக மனவருத்ததுடன் இருக்கின்றீர்" என வினவியபோது தன்னுடைய இக்கட்டான நிலையை அவனிடம் அரசகுரு கொட்டிதீர்த்தார் மேலும் தன்னுடைய உயிருக்கு மிகுதி இரண்டுநாட்கள்தான் அவகாசம் இருப்பதாகவும் கூறினார் "கவலைப்படாதீர்கள் ஐயா உங்களுக்கு பதிலாக நான் அரகுருபோன்று வேடமிட்டு அரசன் கேட்ட மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதற்கு தயவுசெய்து என்னை அனுமதிப்பீர்களா" என ஆடுமேய்ப்போன் கோரியபோது எப்படியோ தன்னுடைய உயிர்தப்பினால் போதுமென அரசகுரு ஆடுமேய்ப்பவனை அவ்வாறே செய்திட ஏற்று அனுமதித்தார் உடன் ஆடுமேய்த்திடும் இளைஞன் அரசகுருவின் ஆடையை அணிந்து கொண்டவுடன் அச்சுஅசல் அரசகுருபோன்றே தோற்றமளித்தான் அதன்பின்னர் ஆடுமேய்த்திடும் இளைஞன் அரசகுருவின் வேடத்துடன் அரச சபைக்கு சென்றான் அரசன் இந்த அரசகுரு இவ்வளவு விரைவில் தன்னுடைய மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதற்காக வந்துசேரவார் என எதிர்பார்த்திடவில்லை வந்தவன் அரசகுருவா வேறுயாராவது அரசகுருபோன்று வேடமிட்டுவந்தாரா எனவித்தியாசம் எதுவும் தெரியாமல் அரசனானவன் "ரொம்ப மகிழ்ச்சி அரசகுருவே நீங்கள் வாக்களித்தவாறே விரைவாக அரசசபைக்கு என்னுடைய மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதற்கு வந்துள்ளீ்ர்கள்" என வரவேற்றபோது "ஆம் மேன்மைமிகு ஐயா அவர்களே என்னால் முடிந்தவரை அந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களை கூறுவதற்கு முயற்சிக்கின்றேன்" என கூறினான் "நான் இந்த இங்கிலாந்து நாட்டின் அரசன் என்னுடைய(அரசனுடைய) மதிப்பு எவ்வளவு பெறும்?” என அரசன் தன்னுடைய முதல் வினாவினை எழுப்பினார் உடன் அரசகுருவேடத்தில் இருந்த ஆடுமேய்ப்போன் "மேன்மைமிக்க ஐயா பைபிளின் படி இயேசுவானவர் இம்மூலகத்திற்கும் அரசனாவார் அவரை விற்பனை செய்தால் முப்பது ரூபாய் பெறுவார் உங்களுடைய மதிப்பு இயேசுவின் மதிப்பில் ஒருரூபாய் குறைவாகும் அதனால் இங்கிலாந்து நாட்டின் அரசனாகி தாங்கள் வெறும் 29 ரூபாய்தான் பெறுவீர்" என பதில் கூறினான் உடன் அரசன் "அடடா என்னுடைய மதிப்பு வெறும் 29 ரூபாய்தானா" என சிரிக்கஆரம்பித்தான் சிரிப்பு அடங்கியபின்னர் "என்னுடைய இரண்டாவது கேள்வி இந்த உலகை நான் (அரசன்) எவ்வளவு நேரத்தில் சுற்றிவந்து சேரமுடியும்?” என்பதை எழுப்பினான் உடன் அரசகுருவேடத்தில் இருந்த ஆடுமேய்ப்போன் "மேன்மைமிக்க ஐயா சூரியன் உதிக்கும்போது இந்த உலகை சுற்ற ஆரம்பித்து நாள் முழுவதும் சுற்றிவந்த பின்னர் இரவு முழுவதும் சுற்றிவந்து மறுநாள் காலை சூரியன் தோன்றும் நேரத்தில் அதாவது 24 மணிநேரத்திற்குள் இந்த உலகை சுற்றிவந்து விடுவீர்கள் ஐயா" என பதில் கூறினான் உடன் அரசன் "வெறும் 24 மணிநேரத்திற்குள்ளாகவே நான் இந்த உலகை சுற்றிவந்து-விடுவேனா அடடா வித்தியாசமான பதிலாக இருக்கின்றதே" என விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் அரசனுடைய சிரிப்பு நின்றபின் "என்னுடைய மூன்றாவது கேள்வியாக தற்போது என்னுடைய (அரசனுடைய) மனதில் என்ன எண்ணுகின்றேன்?” என கேட்டான் உடன் அரசகுருவேடத்தில் இருந்த ஆடுமேய்ப்போன் "மேன்மைமிக்க ஐயா தற்போது தாங்கள் உண்மையில் நான் அரசகுருதான் என எண்ணுகின்றீர்கள் ஆனால் உண்மையில் நான் அரசகுரு அன்று சாதாரண ஆடுமேய்த்திடும் ஒரு இளைஞன் எனக்காக அரசகுருவை மன்னித்திடும்படி மிகபபணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்" எனக்கூறி தன்னுடைய அரசகுருவாக உருமாற்றம் செய்த உடைகளை களைந்து சாதாரண ஆடுமேய்த்திடும் இளைஞனின் உடைக்கு மாறியிபின் அரசனை வணங்கினான் அரசன் தற்போது கோபமெதுவும் ஏற்படாமல்மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான் நீண்ட சிரிப்பிற்கு பின்னர் "தம்பி உன்னுடைய அறிவுத்திறனை நான் மெச்சுகின்றேன் நான் இன்றுமுதல் உன்னை அரசகுருவாக நியமிக்கின்றேன்" எனக்கூறியதை தொடர்ந்து "ஐயா நான் எழுதவும் படிக்கவும் தெரியாத சாதாரண ஆடுமேய்ப்பவன் அதனால் நான் அரசகுருவாக செயல்படமுடியாது என்னை மீண்டும் மன்னித்துவிடுங்கள்" என கோரினான் உடன் அரசன் "பரவாயில்லை இன்றுமுதல் நீ உயிர்வாழும்வரை வாரத்திற்கு ஒருஇலட்சம் ரூபாய் அரசு ஊதியமாக பெறுவாய் உன்னுடைய இருப்பிடத்திற்கு நீ செல்லலாம் அரசகுருவை நான் மன்னித்ததாக கூறு அவரை அரசசபைக்கு வரச்சொல் " என விடை கொடுத்தனுப்பினான் அரசன்

வியாழன், 16 மார்ச், 2017

எந்த வொரு நபரையும் அவருடைய சம்மதமில்லாமல் அவருடைய பெயரைவேண்டுமென்றே கெடுப்பதற்காக காயப்படுத்தி நக்கலாக கிண்டல் செய்திடாதீர்கள்


அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஒருவர் ஜனாதிபதி மாளிகையில் இருந்த கூட்டரங்கில் தனது பதவியை ஏற்பதற்கான தொடக்க உரையை ஆற்றுவதற்காக எழுந்துநின்றார் அப்போது பணக்கார உயர்குடியில் இருந்துவந்த மனிதன் ஒருவன் எழுந்து நின்று ஐயா ஜனாதி பதி அவர்களே உங்களுடைய தந்தை எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் காலணிகளை செய்து தரும் ஒரு சாதாரண தொழிலாளி என்பதை மறந்துவிடாதீர்கள் என நினைவு படுத்தியதை தொடர்ந்து ஜனாதிபதியை அந்த நபர் முட்டாளாக ஆக்கிவிட்டார் எனஅந்த கூட்டரங்கில் இருந்த மிகுதி அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதியை பார்த்து நக்கலாக கைகொட்டி சிரித்தனர் பொதுவாக ஒருசிலர் அவ்வா்று மற்றவர்களை மட்டம் தட்டி நக்கல் செய்திடும் மனநிலையிலேயே இருப்பார்கள் அதனை தொடர்ந்து அந்த ஜனாதியானவர் அந்த மனிதரின் முகத்தை நேருக்குநேர் பார்த்து ரொம்ப நல்லது ஐயா என்னுடைய தந்தை சிறந்ததொரு படைப்பாளியாக இருந்து. கால்களில் அணியும் காலணிகளை வெறுமனே காலணிகளாக இல்லாமல்; தன்னுடைய முழு ஆத்ம திருப்தியோடு உங்களுடைய குடும்பத்திற்கு தேவையான காலணிகளை தரமாக செய்து கொடுத்தது வழக்கமான செயல்தான் என எனக்கு தெரியும் அவர்செய்த காலணிகளில் குறைஏதாவது இருந்தது என உங்களால் கூறமுடியமா அவ்வாறுகுறை ஏதேனும் இருந்தால் கூறுங்கள் இப்போதே நானே அதற்கு மாற்று காலணிகளை செய்து வழங்குகின்றேன் இங்கு இருப்பவர்கள் யாராவது அவ்வாறு வாடிக்கையாளரொருவர் எந்தவொரு குறையும் கூறாமல் திருப்தியுறும் வண்ணம் தத்தமது பணியை செய்திடுவார்களா என பதிலடியாக ஜனாதிபதி பேசியதும் கூட்டரங்கமே அமைதியாகிவிட்டது வாடிக்கையாளரிடமிருந்து எந்தவொரு அதிருப்தியான புகார் எதுவும் இல்லாமல் அந்த ஜனாதிபதியின் தந்தை நல்ல தரமான பணியை வழங்கியுள்ளார் அதனால் அவருக்கும் அவருடைய சந்ததியினருக்கும் பெருமையாகும் பொதுவாக எந்த வொரு நபரையும் அவருடைய சம்மதமில்லாமல் அவருடைய பெயரைவேண்டுமென்றே கெடுப்பதற்காக காயப்படுத்தி நக்கலாக கிண்டல் செய்திடாதீர்கள்

சனி, 11 மார்ச், 2017

நம்முடைய சக்திக்கு ஏற்ப நம்மால் என்ன முடியுமோ அதைமட்டும் செய்திடுக


வெகு நாட்களுக்கு முன் மலையுச்சியில் பருந்து ஒன்றும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்தில் காகம் ஒன்றும் வாழ்ந்தவந்தன இந்த காகமானது அறிவில்லாத முட்டாளாகும் அதைவிட மற்றவர்கள் என்ன செய்கின்றார்களோ அதே செயலை அப்படியே தானும் போலியாக செய்திடும் மனப்பாங்கு உடையதாகும்

தினமும் மலையுச்சியில் இருக்கும் பருந்தானது ஏதேனும் உணவு இருக்கின்றதாவென தேடுவதற்காக சமதரைக்கு பறந்துவந்திடும். வெகுஉயரத்தில் இந்த பருந்து பறந்து செல்லும்போது சுன்டெலி யொன்று தன்னுடைய வலையைவிட்டு வெளியில் நடமாடுவதை தன்னுடைய கூறிய பார்வையால் கண்டுபிடித்தவிட்டது அதனால் பருந்தானது உடன் கீழே தாழ்ந்து பறந்து சென்று தன்னுடைய இரையான சுன்டெலியை அலகால் பிடித்து கொண்டு பழையபடி மேலே பறந்து சென்றது இந்த முட்டாள் காகமானது பருந்து செய்வதை பார்த்து கொண்டே இருந்த பின் ஏன் நாமும் அந்த பருந்துபோன்றே உயரத்தில் பறந்தவாறே நம்முடைய இரையை தேடி அவ்வாறு இரை கிடைத்தவுடன் கீழே தாழ்ந்த பறந்து பிடித்திடுவோமே என எண்ணியது அதனை தொடர்ந்து அந்த முட்டாள் காகமும் அவ்வாறே ஆலமரத்தில் இருந்து உயரத்தில் தன்னுடைய இரையை தேடி பறந்து கொண்டிருந்தது அப்போது பெரிய எலி ஒன்று வயல்வெளியில் இரைதேடி கொண்டிருந்ததை கண்ணுற்றதும் காகமானது தாழ்ந்த பறந்து சென்று இரையை பிடிக்க முயன்றது அதற்குமுன் காகம் தரையை நோக்கி தாழ்ந்த பறக்கஆரம்பித்ததை கண்ட பெரிய எலியானது தன்னுடைய வலைக்குள் உட்புக ஆரம்பித்தது அதனால் காகம் தன்னுடைய இரையை பிடிக்கமுடியாமல் தரையில் மோதி அதனுடைய அலகுமட்டும் காயமாகிவிட்டதா ஆ வலிக்குதே என்னசெய்வேன் என அப்படியே தரையில் வீழ்ந்ததுபின்னர் எப்படியோமுயன்று ஆலமரத்த்திலுள்ள தன்னுடைய கூட்டிற்கு பறந்து சென்றது இதே போன்று பலமுறை அந்த காகமானது பருந்து போன்று தன்னுடைய இரையை பிடிக்க முயலும்போது இரைக்கு பதிலாக தரையில் அது அடிபட்டு அதனுடைய உடலில் வலி மட்டும்தான் மிஞ்சியதே தவிர இரை எதையும் பிடிக்கமுடியாத நிலைஏற்பட்டன

இதன்பின்னர் அந்த காகமானது இவ்வாறு மற்றவர்களை போன்று போலியாக நடந்துகொள்வதை விட்டிட்டு தன்னால் என்ன முடியுமோ அதைமட்டும் செய்யஆரம்பித்தது அதே போன்று நாமும் நம்முடைய சக்திக்கு ஏற்ப நம்மால் என்ன முடியுமோ அதைமட்டும் செய்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 4 மார்ச், 2017

எது நடந்தாலும் அது நல்லதாகவே நடக்கும்


முன்பு ஒருகாலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அரசன் ஒருவன் இருந்தான் அவனுடைய அரண்மனை வாயிலில் இரு பிச்சைக்காரர்கள் எப்போதும் நின்று பிச்சை வாங்கிகொண்டிருப்பது வழக்கமானசெயலாகும் முதல் பிச்சைகாரன் "அரசனிடம் உதவி கோருபவர்களுக்கு அரசன் உதவிடுவார்" என எப்போதும் அரசன் வெளியே செல்லும்போதும் உள்ளே அரண்மனைக்கு திரும்பிடும்போதும் கூறி கொண்டிருப்பான் ஆனால் இரண்டாமவன் "ஆண்டவனிடவனிடம் உதவி கோருபவர்களுக்கு ஆண்டவன் உதவிடுவார்" என எப்போதும் அரசன் வெளியே செல்லும்போதும் உள்ளே அரண்மனைக்கு திரும்பிடும்போதும் கூறி கொண்டிருப்பான் முதலாவது பிச்சைகாகாரன் கூறுவதை கேட்டு மகிழ்ச்சியுற்ற அரசன் ஒருநாள் உணவினை பொட்டலமாக மடித்து அதனுள் தங்க நாணயங்களை உள்பொதியவைத்து முதலாவது பிச்சைகாகாரனுக்கு பிச்சையாக இட்டுசென்றார் முதலாவது பிச்சைகாகாரனுக்கு செலவிற்கு பணம் உடனடியாக தேவைப்பட்டதால் அந்த உணவு பொட்டலத்தை இரண்டாவது பிச்சைகாகாரனுக்கு மிக குறைந்த தொகையை வாங்கி விற்றுவிட்டு தன்னுடைய பணியை கவணிக்க சென்றுவிட்டான் இரண்டாவதுபிச்சைக்காரன் அந்த உணவு பொட்டலத்தை தன்னுடைய குடிசைக்கு சென்று பிரித்து பார்த்தபோது தங்க நாணயங்கள் அதனுள் இருந்ததை கண்ணுற்று அவைகளை எடுத்து கடைகளில் விற்று அதனால் கிடைத்த தொகையை கொண்டு பிச்சை எடுத்திடும் தொழிலையே மறுநாளில் இருந்து நிறுத்திவிட்டான் ஆனால் முதல் பிச்சைகாரன் மறுநாள் வழக்கம்போன்று "அரசனிடம் உதவி கோருபவர்களுக்குஅரசன் உதவிடுவார்" என பிச்சை எடுத்து கொண்டிருப்பதை கண்ணுற்ற அரசன் திடுக்கிட்டு நின்று "என்னப்பா நேற்று நான் கொடுத்த உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டாயா " என வினவியபோது " இல்லை அரசே நேற்று நீங்கள் உனவு பொட்டலத்தை என்னிடம் கொடுத்து சென்றவுடன் அதனை எனக்கு அருகில் "ஆண்டவனிடவனிடம் உதவி கோருபவர்களுக்கு ஆண்டவன் உதவிடுவார்" எனக்கூறும் பிச்சைக்காரனிடம் விற்றுவிட்டேன்" என பதிலளித்தான் "அடடா அப்படியா ஆயிற்று அதுவும் நல்லதுதான்" என கூறி சென்றார் அந்த அரசன்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...