சனி, 27 ஏப்ரல், 2019

நிறுமங்களின் பெயர்மாறுதல் செய்திடுவதற்கான வழிமுறைகள்


நிறுமங்களின் பெயர்மாறுதல்செய்வது என்பதுநிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 13 (2) உம் நிறுமங்கள் உருவாக்குதல் விதி கள் 2014 பிரிவு 29 (1) , 29 (2) ஆகியவை சார்ந்ததாகும்.ஒரு நிறுவனத்தின் பெயரில் மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் அவ்வாறான மாற்றங்களானவை நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 4 ன் உட்பிரிவுகள் (2) மற்றும் (3) ஆகியவைளுக்கு உட்பட்டிருக்கவேண்டும். ஆயினும் இந்தச் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க, ஒரு குறிப்பிட்ட வகுப்பு நிறுவனங்களை மற்றொரு வகுப்பிற்கு மாற்றுவதன் விளைவாக நிறுவனத்தின் பெயரில் உள்ள மாற்றங்களானவை தனியார் வரையறுக்கப்பட்ட என சொல்லினை மட்டும்நீக்குதல் அல்லது சேர்த்தல் ஆகியவற்றிற்கு அத்தகைய ஒப்புதல் தேவைப்படாது மற்றவைகளுக்கு மத்திய அரசின் எழுத்துமூலமான ஒப்புதல்இல்லாமல் நடைமுறைபடுத்தமுடியாது: .விதி 29- துனைவிதி (1) வருடாந்திர அறிக்கைகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் அல்லது நிறுமங்களின் பதிவாளரிடம் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க தவறிய நிறுவனத்திற்கும் முதிர்ந்த வைப்பு தொகைகள் அல்லது கடனீட்டுப் பத்திரங்கள் அல்லது வைப்புத் தொகைக்கான வட்டி அல்லது கடனீட்டுக்கு பத்திரங்களுக்கான வட்டி செலுத்தப்படுதல் ஆகியவற்றை செலுத்தத் தவறிய நிறுவனத்திற்கும் பெயரில் மாற்றங்கள், செய்யஅனுமதி வழங்கப்படமாட்டாது; துனைவிதி (2) நிறுமங்களின் சட்டம் 2013பிரிவு 13 உட்பிரிவு (3) ஐ நடைமுறை படுத்திடுவதற்காக நிறுமமானது படிவம் எண் INC-24 வாயிலாக நிறுமங்களின் பெயர்மாற்றம் செய்வதற்கான விண்ணப்பக் கட்டனத்துடன் விண்ணப்பம் ஒன்றினை சமர்ப்பிக்கவேண்டும் அதனை தொடர்ந்து நிறுமத்தின் பெயர்மாறுதலுக்கு பிறகான நிறுமத்தை பதிவுசெய்ததற்கான புதிய பதிவுசான்றிதழை படிவம் எண் INC-25 வாயிலாக வழங்கப்படும் இதற்கான படிமுறைகள் பின்வருமாறு நிறுமங்களின் பெயரை மாற்றுவதற்கான படிமுறைகள் பெயர்மாற்றம் செய்யவிரும்புவோர் நிறுமங்களின் விவாகாரத்துறைக்கான (Ministry of Corporate Affairs( MCA) ) இணைய பக்கத்தில் முதலில் ஒரு புதிய பயனாளராக பதிவு செய்து கொள்க பின்னர் பின்வரும் ஐந்து எளிமையான படிமுறைகளைப் பின்பற்றிடுக: படிமுறை.1: நிறுமத்தின் இயக்குநர்களின் குழுக்கூட்டத்தை கூட்டிடுக நிறுமத்தின் பெயரை மாற்றியமைக்க முடிவு செய்தவுடன், நிறுமத்தின் பெயர் மாற்றத்திற்கு தேவையான தீர்மாணத்தை அந்நிறுமத்தின்இயக்குநர்களின் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டும். ஆயினும் நிறுமங்களின் பதிவாளர் ஒப்புதல் அளிப்பதற்கேற்ப நிறுமத்தின் புதிய பெயரினை இயக்கநர்களின் குழு பரிசீலனை செய்து முடிவுசெய்திட வேண்டும். படிமுறை.2:தயார்நிலையிலானபெயர் கிடைத்தலும் அதன் ஒப்புதலும் இயக்குநர்களின் குழுவினால் இவ்வாறு பெயர்மாற்றம் செய்வதற்கு தேவையான தீர்மாணத்தை நிறைவேற்றிய பின்னர் நிறுவனத்தின் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட MCA இணையபக்கத்தில் நிறுமங்களின் பெயரை ஒதுக்கீடு பெறுவதற்கான RUN எனும் சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பெயர் ஒதுக்கீடு சேவை (Reserve Unique Name service )யின் வாயிலாக அந்நிறுமத்திற்கான புதிய பெயரை பெற்றுக் கொள்ளலாம். அதனால் முதலில் இந்த RUN எனும் சேவையின் மூலம் நம்முடைய நிறுமத்திற்கான புதிய பெயர்வேண்டி விண்ணப்பிக்கவும், அவ்வாறு விண்ணப்பிக்கும்போது பின்வரும் கட்டாய நிரல்களை நிரப்பிடுக: 1)New Request; எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக 2) Entity type- என்பதில் கீழிறங்கு பட்டியலின் வாயிலாக நிறுமத்தின் வகையை தெரிவுசெய்திடுக 3) CIN -இதில்பெயர் மாறுதல் செய்யவிருக்கும் நிறுமத்தின் சுட்டிஎண்ணை உள்ளீடு செய்திடுக 4) Proposed Names – இதில் புதியதாக தெரிவுசெய்யப்பட்ட பெயர்கள் அதிகபட்சம் இரண்டுபெயர்களை மட்டும் உள்ளீடு செய்திடுக. 5) Comment section - இதில் நிறுமத்தின் நோக்கங்களை பற்றி ஒருவரிக்குள் குறிப்பிடுக 6) Choose file Tab- இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் பெயர்மாறுதல் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மாண நகலை கண்டிப்பாக இதில் இணைத்திடுக இந்நிலையில் பின்வரும் கருத்துகளை மனதில் கொள்க • நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களானவை தனித்துவம் மிக்கதாக ஏற்கனவே உள்ள நிறுமங்களின் பெயர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரைகளாக இல்லாமல் வேறுபட்டதாக இருக்க வேண்டும் . • RUN எனும் இணைய சேவையை பயன்படுத்திகொள்வதன் மூலம் நம்முடைய விருப்பப்படி அதிகபட்சமாக இரண்டு பெயர்களைப் மட்டுமே பெறமுடியும். இந்நிலையில் பொருத்தமான பெயர்கள் கிடைக்க வில்லையெனில், மீண்டும் புதிய பெயர்களை தெரிவுசெய்வதற்காக மற்றொருமுறைமட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும். அதாவது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இந்த சேவையானது நம்மை பெயரினை தெரிவுசெய்துகொள்ளஅனுமதிக்கும் அதற்குமேல் அனுமதிக்காது • ROC என சுருக்கமாக அழைக்கப்படும் நிறுமங்களின் பதிவாளரால் நிறுமத்தின் பெயரானது அங்கீகரிக்கப்பட்டபின்னர் அதிகபட்சமாக 20 நாட்களுக்குமட்டும் நமக்கான ஒதுக்கீடாக அனுமதிக்கப்படும் , அதன்பின்னர் இந்த பெயருக்கான அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் மீண்டும் புதியதாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும். படிமுறை.3: அசாதரான பொதுப்பேரவை கூட்டத்தை கூட்டுதல் நிறுமங்களின் பதிவாளரால் நிறுமத்தின் பெயரானது அங்கீகரிக்கப்பட்டவுடன் EGM எனசுருக்கமாக அழைக்கப்படும் உறுப்பினர்களின் அசாதரான பொதுப்பேரவை கூட்டத்தை கூட்டி அதில் இவ்வாறு நிறுமத்தின் பெயர்மாறுதல் செய்வதற்கு தேவையான சிறப்புத்தீர்மாணத்தை நிறைவேற்றவேண்டும் மேலும் இவ்வாறு பெயர் மாறுதலைMOA , AOAஆகிய நிறுமத்தின் அடிப்படை ஆவணங்களில் தேவையான திருத்தம் செய்திடுவதற்காக பொதுப்பேரவையின் ஒப்புதல் வழங்கவேண்டும் படிமுறை. 4: தேவையான ஆவணங்களை தயார்செய்தல் நிறுமத்தின் பெயர்மாறுதல் செய்வதை ஏற்று அசாதாரன பேரவைகூட்டத்தில் சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெற்றபின்னர் பின்வரும்இரண்டு மின்னனு படிவங்களை ROC என சுருக்கமாக அழைக்கப்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் முதல் படிவமாக மின்னனு படிவம் எண் MGT-14 என்பதை அசாதாரன பொதுப்பேரவைகூட்டத்தில் சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெற்ற 30 நாட்களுக்குள் ROC இடம் MCA இணைய பக்கத்தின் வாயிலாக சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும் இவ்வாறான முதலாவது மின்னனு படிவம் எண் MGT-14 ஐ சமர்ப்பித்திடும்போது பின்வரும் ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும் 1) அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்திற்கான (EGM)அழைப்பு அறிவிப்பு 2) அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்தில்(EGM) பெயர்மாறுதல் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மாண நகல் 3) பெயர்திருத்தம் செய்யப்பட்டபின்னரான MOA , AOAஆகிய நிறுமத்தின் அடிப்படை ஆவணங்களின் நகல்கள் குறிப்பு இவ்வாறு இணைத்திடும் அனைத்து ஆவணங்களும் Pdfவடிவமைப்பில் இணைக்கவேண்டும் மின்னனு படிவம் எண் MGT-14 ஐ தேவையான ஆவணங்களுடன் ROC இடம் MCA இணையபக்கத்தின் வாயிலாக சமர்ப்பித்தபின்னர்ROC ஆனவர் அதனை சரிபார்த்து இதற்கு ஒப்புதல் வழங்குவார் அவ்வாறான ஒப்புதல் பெறப்புட்டபின்னர் மற்றொரு மின்னனு படிவம் எண் INC-24 என்பதை இரண்டாவது படிவமாக அசாதாரன பேரவைகூட்டத்தில் சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெற்ற 30 நாட்களுக்குள் ROC இடம் MCA இணையபக்கத்தின் வாயிலாக சமர்ப்பித்திடவேண்டும் இவ்வாறான இரண்டாவது மின்னனு படிவம் எண் INC-24 ஐ சமர்ப்பித்திடும்போது பின்வரும் ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும் 1) அசாதாரன பொதுப்பேரவை கூட்ட(EGM)நடவடிக்கை குறிப்புகளின் நகல் 2)அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்திற்கான (EGM)அழைப்பு அறிவிப்பு ,அதனை தொடர்ந்து நடைபெற்ற அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்தில்(EGM) பெயர்மாறுதல் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மாண நகல் அதனுடன் பெயர்திருத்தம் செய்யப்பட்டபின்னரான MOA ,AOA ஆகிய நிறுமத்தின் அடிப்படை ஆவணங்களின் நகல்கள் குறிப்பு இவ்வாறு இணைத்திடும் அனைத்து ஆவணங்களும் Pdfவடிவமைப்பில் இணைக்கவேண்டும் படிமுறை.5: தேவையானபடிவங்களை தயார்செய்தலும் MCAஇணையபக்கத்தில் சமர்ப்பித்தலும் மேலேகூறியவாறான இருமின்னனுபடிவங்களுக்கும் தேவையான ஆவணங்கள் தயாராக இருக்கின்றதெனில் மின்னனு படிவம் எண்MGT-14 , மின்னனு படிவம் எண் INC-24 ஆகிய இருமின்னனு படிவங்களையும் MCAஇணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மிகச்சரியாக நிரப்புதல் செய்திடவேண்டும் அவ்வாறு நிரப்புவதற்கான விளக்ககுறிப்புகள் பின்வருமாறு மின்னனு படிவம் எண்MGT-14 1) முதலில் நிறுமத்தின்பதிவுஎண்ணை (CIN) உள்ளீடு செய்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பிடுக 2) அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றபட்டதீர்மாணத்தினை பதிவுசெய்வதற்கான தேர்வு செய்பெட்டிகளை நிரப்பிடுக 3) அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்திற்கான (EGM)அழைப்பு அறிவிப்பு விவரங்களையும் அவைகளை அனுப்பிய நாளினையும் சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்ட நாளினையும் நிரப்பிடுக 4) சிறப்பு தீர்மாண விவரங்கள் தொடர்புடைய சட்டப்பிரிவு ,அதற்கான நோக்கம் தீர்மாண விவரங்கள் ஆகியவற்றை நிரப்பிடுக 5) தீர்மாணத்தை ஒப்புதல் வழங்குவதற்கான உரிமைபெற்றவர்கள் சாதாரண தீர்மாணமா அல்லது சிறப்புத்தீர்மாணமா என்பதற்கான தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்திடுக 6) படிமுறை. 4 இல் கூறிய ஆவணங்களை இந்த படிவத்துடன் இணைத்திடுக 7) இந்த படிவத்தில் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்ட இயக்குநரின் இரும கையொப்பத்துடன்(Digital Signature Certificate(DSC)) அதனை CA அல்லது CS அல்லது CMA ஆகியோர்களுள் ஒருவரால் அளிக்கப்பட்ட சான்றுடன் சமர்ப்பித்திடுக 8) மேலேகூறிய படிவத்தையும் ஆவணங்களையும் MCAஇணையபக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்குமுன் இவையனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றதாவென மீண்டுமொருமுறை முழுவதுமாக முன்னாய்வு செய்திடுக பின்னர் இந்த மின்னனு படிவம் எண் MGT-14 ஐ அதனுடைய இணைப்புகளுடன் MCA இணையபக்கத்தில் பதிவேற்றம் செய்திடுக இதன்பின்னர் மின்னனு படிவம் எண் MGT-14 உம் அதனுடன் இணைக்கப்பபட்ட ஆவணங்களையும் முழுவதுமாக ROC ஆல் ஆய்வுசெய்யப்பட்டு சரியாக இருக்கின்றது எனில் இதற்கு ஒப்புதல் வழங்கிடுவார் இதனை தொடர்ந்து மின்னனு படிவம் INC-24: ஐ பின்வருமாறு தயார்செய்திடவேண்டும் மின்னனு படிவம் எண்INC-24: 1) நிறுமத்தின் பதிவுஎண்ணை (CIN) உள்ளீடு செய்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பிடுக 2) நிறுமத்தின்புதியபெயர் ஒப்புதல் பெறுவதற்கான ROCஇடம் சமர்ப்பித்த தனித்துவமான பெயர் ஒதுக்கீட்டிற்காக RUNஇல் விண்ணப்பத்தபோது உருவான சேவைகோரும் எண்ணை (Service request number (SRN)) உள்ளீடுசெய்திடுக மேலும் தேவையான விவரங்களை உள்ளீடுசெய்திடுக 3) பெயர் மாறுதல் செய்வதற்கான முழுமையான காரணங்களின் விவரங்களை குறிப்பிடுக 4) மேலும் மின்னனு படிவம் எண் MGT-14ஐ ROCஇடம் சமர்ப்பித்திடும்போது உருவான சேவைகோரும் எண்ணை (SRN) உள்ளீடுசெய்திடுக மேலும் சிறப்புதீர்மாணம் நிறைவேற்றப்பட்ட நாளினையும் மின்னனு படிவம் எண் MGT-14ஐ ROCஇடம் சமர்ப்பித்திட்ட நாளினையும் குறிப்பிடுக 5) ஏற்கனவே நிறுமத்தினை பதிவுசெய்திடும்போது வழங்கப்பட்ட நிறுமபதிவுசான்றிதழில் குறிப்பிட்டுள்ள நிறுமத்தின் பெயரினை குறிப்பிடுக 6) அதுமட்டுமின்றி பின்வரும் விவரங்களைமிகச்சரியாக நிரப்பிடுக அசாதாரன பொதுப்பேரவைகூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிடுக சிறப்புதீர்மாணம் நிறைவேற்றுவதில் கலந்துகொண்டு ஒட்டெடுப்பில் சிறப்புத் தீர்மாணத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிடுக சிறப்புதீர்மாணம் நிறைவேற்றுவதில் கலந்துகொண்டு ஒட்டெடுப்பில் சிறப்புத்தீர்மாணத்திற்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிடுக சிறப்புதீர்மாணம் நிறைவேற்றுவதில் கலந்துகொண்டு ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிடுக 7)படிமுறை. 4 இல் கூறியவாறான ஆவணங்களை இந்த படிவத்துடன் இணைத்திடுக 8) இந்த படிவத்தில் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்ட இயக்குநரின் இரும கையொப்பத்துடன்(Digital Signature Certificate(DSC)) அதனை CA அல்லது CS அல்லது CMA ஆகியோர்களுள் ஒருவரால் அளிக்கப்பட்ட சான்றுடன் சமர்ப்பித்திடுக 9) மேலேகூறிய படிவத்தையும் ஆவணங்களையும் MCAஇணையபக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்குமுன் இவையனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றதாவென மீண்டுமொருமுறை முழுவதுமாக முன்னாய்வு செய்திடுக பின்னர் இந்த மின்னனு படிவம் எண் INC-24ஐ அதனுடைய இணைப்புகளுடன் MCA இணையபக்கத்தில் பதிவேற்றம் செய்திடுக இதன்பின்னர் மின்னனு படிவம் எண் INC-24 உம் அதனுடன் இணைக்கப்பபட்ட அவணங்களையும் முழுவதுமாக ROC ஆல் ஆய்வுசெய்யப்பட்டு சரியாக இருக்கின்றது எனில் படிவம் எண் INC-25இன் வாயிலாக நிறுமத்திற்கான புதிய பெயருடன் இந்த நிறுமத்தினை பதிவுசெய்ததாற்கான சான்றிதழை வழங்கிடுவார் குறிப்பு இவ்வாறான படிவங்களை சமர்ப்பிப்பதற்கான மிகச்சரியான கட்டணங்களை செலுத்திடுக

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

வியாபார வரவுகளின் தள்ளுபடி அமைப்பு (Trade Receivables Discounting System (TreDS ))ஒரு அறிமுகம்


MSMEஎனசுருக்கமாக அழைக்கப்படும் மிகச்சிறிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ( Micro, Small and Medium Enterprises) நாட்டின் பொருளாதாரத்தின் துணிச்சலான வளர்ச்சியில் முக்கிய பாத்திரத்தை வகிப்பதுடன் அவை நம்முடைய இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றன ; ஆயினும் இவை போதுமான நடைமுறைமூலதன நிதியுதவி பெறுவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வது, குறிப்பாக அவர்களது வர்த்தக வரவுகளை நடைமுறை மூலதன நிதியாக மாற்றியமைக்கும் திறன், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள், தொழில்முனைவோர் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஏராளமானஅளவில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இவற்றுள் வர்த்தக வரவுகளின் அடிப்படையில் அந்நிறுவனங்களுக்கு போதுமான நிதியளிப்பதன் மூலம் நடைமுறைமூலதனத்தை சிரமமில்லாமல் பராமரிக்கும்பொருட்டு , இந்திய ரிசர்வ் வங்கியானது மார்ச் 2014இல் மிகச்சிறிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME)"காரணிகளின் -வர்த்தக வரவுகளின் பரிமாற்ற அமைவு(Factoring-Trade Receivables Exchange )".எனும் அமைப்பை நிறுவுகை செய்து இந்த நடைமுறைமூலதன சிக்கலை தீர்வுசெய்திடலாம் எனும் கருத்தமைவை வெளிட்டது அதனை தொடர்ந்து பெறப்பட்ட கருத்தாக்கங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பயனாளர்களுடனான தொடர்பு மற்றும் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு வழங்கிய வாதவிவாதங்கள் ஆகியவற்றின் இறுதியில் பெறப்பட்ட பொதுக் கருத்துரைகளின்அடிப்படையில் இந்தியாவில் வர்த்தக பெறுதல் அமைப்புகளை அமைப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் Payment & Settlement Systems Act, 2007 (2007 ஆம் ஆண்டு 51 ஆவது) பிரிவின் 18 வது பிரிவுடன் பகுதி 10 (2) இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகிறது. இந்நிலையில்இந்த TreDS என்றால் என்ன? என்ற கேள்வி நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க அரசாங்க நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் பொதுமக்களும் மற்றும் பிறசேர்ந்து MSME களிடமிருந்து பொருட்களை அல்லது சேவைகளை பெறுவதால் உருவாக்கப்படும் வர்த்தக பெறுதல்களின் (Trade Receivables) அடிப்படையில் அவ்வாறான MSMEகளுக்கு போதுமான அளவிற்கு நடைமுறைமூலதன நிதியளிக்க உதவுவதற்கான நிறுவன அமைப்புமுறையை நிறுவுதல் மற்றும் செயற்படுத்துவதற்கான திட்டம் வர்த்தக வரவுகள் தள்ளுபடி தீர்வூட்டு முறை (Trade Receivables Discounting System (TReDS)) . என அழைக்கப்படும் இந்த டி.ஆர்.டீஎஸ்க்கள் பொருட்களுக்கானபட்டியல் (invoices), பட்டியல் மாற்று பரிமாற்றங்கள்( bills of exchange) ஆகிய இரண்டிற்கான தள்ளுபடி நடவடிக்கைகளையும் எளிதாக்குகின்றது. மேலும், அடிப்படைக் கூறுகள் ஒன்றுதான் (MSME கள் மற்றும் அரசாங்கத் துறைகளும் பொதுத்துறை நிறுவனங்களும் உட்பட), பெறத்தக்க காரணிகள், அதற்கு மறுதலையான பின்னோக்கி காரணிகள் ஆகிய இரண்டையும் இந்த TREDS ஆல் சமாளிக்க முடியும், இதனால் அதிக பணபரிவர்த்தனைகள் இந்த அமைப்புக்குள் வந்து, MSME நிலையை சிறந்ததாக நிர்ணயிக்கின்றன . இந்த டி.ஆர்.இ.டிஎஸ்.இன் கீழ் செயல்படும் பரிவர்த்தனைகள் MSME களுக்கு "எந்தவிதமானதொந்திரவும் இல்லாமல்"மிகவும் பயனுள்ளதாக உதவிகரமாக இருக்கும். TReDS என்பது வர்த்தவரவுகளின்மீது நிதிவழங்க தயாராக இருக்கும் நிறுவனங்களிடம் ஏலம் விடுவதன் வாயிலாக தேவையானநிதியை திரட்டிட அனுமதிக்கும் ஒரு மின்னணு தளம் ஆகும். பொதுவாக பொருட்களின் விற்பணை பட்டியல்களுக்கான தொகையை தள்ளுபடியுடன் வழங்குதல் அதாவது ஒரு நிதியாளர் (பொதுவாக ஒரு வர்த்தக வங்கி) பொருட்களுக்கான பட்டியலை( வர்த்தக வரவுகளை) தள்ளுடியுடன் வாங்கிடும் நடவடிக்கையாகும் அதாவது பொருட்களின் விற்பணையாளரிட மிருந்து பெறப்படும் பட்டியல்களுக்கான தொகையை அந்து பொருளை வாங்குபவர் வழங்குவதற்குமுன் அல்லது அந்த வழங்குவதற்கான காலக்கெடுவிற்குமுன் பொருட்களின் விற்பணையாளர் அந்த பட்டியலை ஒருநிதியாளரிடம்(பொதுவாக ஒரு வர்த்தகவங்கியிடம்) சமர்ப்பித்து அதன்மீது தள்ளுபடிசெய்து அந்த பொருட்களுக்கான பட்டியல் தொகையை முன்கூட்டியே பெறுகின்ற செயல்முறையாகும் அந்த தள்ளுபடி தொகையே வர்த்தவங்கிகளுக்கான வட்டிதொகையாகும் இந்த செயல்முறையின் ஆர்.பி.ஐ.இன் TReDS வழிமுறைகளின் படி வர்த்தக வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதியளிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவதற்காக, இந்த செயல்முறையில் MSME கள் மட்டுமே விற்பனையாளர்களாக பங்கேற்க முடியும் பெருநிறுவனங்கள்இதில் பங்கேற்று பயன்பெறமுடியாது. இந்த TReDS அமைப்பு எவ்வாறு இயங்குகிறது? ஒரு MSME விற்பனையாளர் இந்த தளத்தில் தான் விற்பணைசெய்த பொருட்களுக்கான பொருட்களின் விலைப்பட்டியலை பதிவேற்ற வேண்டும். அது பின்னர் அந்த பொருட்களை வாங்குவதற்காக அந்த பொருட்களை வாங்குபவருக்கு ஏற்றுகொள்வதற்காக செல்கிறது. அதனை தொடர்ந்து அந்த பொருளை வாங்குபவர் அந்த பொருளின் விற்பணை பட்டியலை ஏற்றுக்கொண்டவுடன், அந்தவிலைப்பட்டியலானது ஒரு காரணி அலகு ஆக மாறுகின்றது. தொடர்ந்து அந்த காரணி அலகு பின்னர் ஏலத்திற்கு செல்கிறது. அவ்வாறான ஏலத்தில் நிதியளிப்பாளர்கள் தங்களுடைய தள்ளுபடி விகிதங்களை அறிவிக்கின்றனர். இறுதியாக எந்த நிதியாளர் குறைந்த அளவு தள்ளுபடி வழங்குகின்றாரோ அதனை பொருளின் விற்பனையார் அல்லது பொருளை வாங்குபவர், ஏற்றகொள்கின்றனர் அதனை தொடர்ந்து நிதியாளர் விற்பணயாளருக்கு அந்த பொருளின்விலைபட்டியின்மீது தொகையை வழங்கி இந்நடவடிக்கையின் முதல்ஒருபகுதி நடவிக்கையை முடிவுக்கு கொண்டுவருகின்றார் இறுதியாக குறிப்பிட்ட காலகெடு முடிவடையும் போது அந்த பொருளை வாங்குபவர் அந்த விலைபட்டியலின் மொத்ததொகையை நிதியாளருக்கு வழங்குகின்றார் தள்ளுபடி தொகையானது நிதியாளர் வட்டியாகவும் விற்பணையாளருக்கு செலவாகவும் முடிவுபெறுகின்றது TReDS நன்மைகள்: MSMEகள் தாம் பொருட்களை உற்பத்தி செய்து விற்பணை செய்துவிட்டோம் ஆனால் அதற்கான விற்பணைத்தொகைமட்டும் உடன் கிடைக்காததால் நடைமுறைமூலதனம் இல்லாமல் அல்லாடவேண்டுமே என தவித்திடாமல் அவ்வாறான வர்த்தக பெறுதல்களை உடனடியாக நடைமுறைமூலதன நிதியாக மாற்றுவதற்கான திறன்இதன் வாயிலாக கிடைக்கின்றது. MSME கள் தங்களுடைய பெறுதல்களை உடனடியாக இந்த தளத்தில் பதிவேற்றம் செய்து அவற்றின் அடிப்படையில் தேவையான நடைமுறைமூலதன நிதியுதவி பெற அனுமதிக்கிறது. காலப்போக்கில் பெருநிறுவனங்கள் தாங்கள் உறுதியளித்தவாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விற்பணைக்கான தொகையை செலுத்திடவேண்டும் என்ற ஒழுங்கும் கட்டுபாடும் நடைமுறைபடுத்தப் படுகின்றது விற்பனையாளர்களுக்கான நிதியின் கால அளவு மேம்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் கொள்முதல் செலவில் சேமிப்புக்களை அனுபவிக் கவழியேற்படுகின்றது. நிறுவனங்கள் தங்களுடைய கடன் காலத்தை விரிவாக்குவதன் மூலமும், தங்களுடைய கட்டண சுழற்சியை அதிகரிப்பதன் மூலமும், நிதி செலவினத்தை சேமிக்கும் வழிஏற்படுகின்ரது. மறுபுறத்தில் வருங்காலத்தில் நிதியளிப்பாளர்கள் PSL சொத்துத் தொகுப்பு ஒன்றை உருவாக்கிடும் வாய்ப்புகூட உள்ளது. சிறு வணிகங்களை (MSMEs) தங்களுடைய நடைமுறை மூலதனத்திற்கு இதனை அணுகி தங்களுடைய வர்த்தக பெறுதல்களை ஏலமிடுவதன் மூலம் தேவையான நடைமுறைமூலதனத்தை திரட்டிடுவதற்கான ஒரு சிறந்த மின்னு தளமாக இருக்கும் - இந்த வர்த்தக பெறுநர்கள் தள்ளுபடித் திட்டத்தை (TReDS) தொடங்கி நிருவகிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி யானது Payment And Settlement Systems Act இன்படி Receivables Exchange of India (RXIL) , A Treds Mynd Solution ,Big Pushஆகிய மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் விரைவில் GST இன் கீழ்பதிவுசெய்யபணிக்கப்பட்டுள்ளன அதன் வாயிலாக போலியான விற்பணை பட்டியல்களுக்கு பணம் வழங்குதல் என்ற பிரச்சினை தீர்வுசெய்யப்பட்டு ஏறத்தாழ ரூ.20,000 கோடி அளவிற்கு பணபரிவர்த்தனை இந்த தளத்தின் வாயிலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

வியாழன், 18 ஏப்ரல், 2019

கூட்டாண்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதற்கான வழிமுறை


ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதால் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமங்களின் பல்வேறு வசதி வாய்ப்புகள் கிடைப்பதற்கு ஏதுவாகின்றன அவ்வாறு மாற்றி யமைப்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு இது தொடர்பாக நிறுமங்கள் சட்டம் 2013 பிரிவு 366 முதல் 374 வரையிலும் மேலும் நிறுவனங்கள் (பதிவுசெய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற) விதிகள், 2014. ஆகியவை நமக்கு வழிகாட்டுகின்றன இதற்காக முதலில் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் பொறுப்புகளும் சேர்ந்த வியாபாரத்தை தனியார் நிறுமமாக மாற்றிமைப்பதற்கான செயல்படுத்திடும் ஒப்பந்தத்தை தயாரித்திடவேணடும். குறிப்பு : இவ்வாறு மாற்றியமைப்பதற்கான விதிகள் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா வென உறுதிபடுத்திகொள்க. இவ்வாறு மாற்றிமைப்பதற்கான அடிப்படைதேவைகள்: அவ்வாறு விரும்பும் கூட்டாண்மை நிறுவனமானது நிறுமங்களின் பதிவாளரிடம்(Registrar of Ministry of Corporate Affairs ) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், மேலும் அந்நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 கூட்டாளிகளாகவாது தற்போது இருக்கவேண்டும் , அதனோடு தேவைப்பட்டால் இவ்வாறு மாற்றியமைப்பதற்காக கூட்டாண்மை ஒப்பந்தத்தில்போதுமான திருத்தம்செய்து மாற்றியமைப்பதற்கான விதிமுறைகளை சேர்த்து கொள்ளவேண்டும், அதுமட்டுமல்லாது கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து கூட்டாளிகளும் புதிய தனியார் நிறமத்தில் பங்குதாரர்களாக மாறும் நாளில் இவர்கள் ஏற்கனவே வைத்துள்ள நிறுவனத்தின் புத்தகங்களில் இருக்கும்மூலதன கணக்குகளின் அதே விகிதத்தில் பங்குகளாக மாற்றப்படும். அதைவிடமுக்கியமாக இவ்வாறு மாற்றம் செய்வதற்காக கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் பொதுக்குழு கூட்டத்தை அழைத்து அக்கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் அனுமதி பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு மாற்றிமயைப்பதற்கான படிமுறைகள் பின்வருமாறு படிமுறை 1.இவ்வாறு மாற்றம் செய்வதற்காக கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் பொதுக்குழு கூட்டத்தை அழைத்து அக்கூட்டத்தில் பின்வரும் செயல்களுக்கான தீர்மானத்தை நிறைவேற்றிடவேண்டும் செயல்.1.இவ்வாறு கூட்டாண்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாகமாற்றம்செய்து பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து ஒப்பந்தங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கையாளுவதற்கான அதிகாரத்தை ஒன்று அல்லது ஒன்றிற்குமேற்பட்ட கூட்டாளிகளுக்கு வழங்கப்படுதல் செயல்.2. இந்த கூட்டாண்மைநிறுவனமாது பதிவில்லாததாக இருந்தால் முதலில் நிறுமங்களின் பதிவாளரிடம் கூட்டாண்மை நிறுவனமாக பதிவுசெய்தல் செயல்.3.கூட்டாண்மை நிறுவனத்திலுள்ளஅனைத்துகூட்டாளிகளின் மொத்த மூலதனத்தை சிறுசிறுபங்குகளாக பிரித்தல் செயல்.4 இவ்வாறு தனியார் நிறுமமாக உருமாற்றுவதற்கான தனியாக தீர்மானம்ஒன்று நிறைவேற்றப்பட்டு அதன்படி ஒவ்வொரு கூட்டாளியும் இதனை ஏற்றுகொள்வதான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுதல் செயல்.5இதனை கூட்டான்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதை ஏற்றுகொள்வதற்கான ஒப்பந்த பத்திரம் தயார்செய்தல் படிமுறை 2. இவ்வாறு தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதை குறித்த அறிவிப்பினை நாளிதழ்களில் விளம்பரமாக கொடுப்பதற்கான விளம்பரப்படிவம் URC 2 ஐ ஒப்புதல் வழங்கவேண்டும் படிமுறை3. இவ்வாறு தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதற்கு முந்தைய மூன்றுஆண்டுகளில்அந்த கூட்டான்மைநிறுவனத்தின் சொத்துகளின் மதிப்பை மாற்றியமைத்திடவில்லை என உறுதி படுத்தி கொள்ளவேண்டும் படிமுறை4. இவ்வாறு தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதை பதிவுசெய்வதற்காக அங்கீகாரம் பெற்றவருக்குDSC எனசு ருக்கமாக அழைக்கப்படு இருமகையொப்ப சான்றிதழை (Digital Signature Certificate) பெற்றிடவேண்டும் படிமுறை5. புதிய தனியார் நிறுமத்தின் இயக்குநர்களின் குழுவில் இடம்பெறப்போகும் இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் PAN, AADHAAR , மார்பளவு உருவப்படம் ஆகியவிவரங்களுடன் பதிவுசெய்து அவர்களுக்கான DIN என சுருக்கமாக அழைக்கப்படும் இயக்குநர்களின் சுட்டிஎண்ணை பெறுவதற்காக படிவம் DIR – 3 இல் ஒவ்வொருவருக்கும் பெறப்படவேண்டும் படிமுறை6. புதிய தனியார் நிறுமத்திற்கு RUN என சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்குபெயர்ஒதுக்கீட்டின் (Reserve Unique Name) அடிப்படையில் பெயரை பெறுவதற்காக விண்ணப்பிக்கவேண்டும் படிமுறை7. படிவம் URC -2 இல் ஒரு ஆங்கிலமொழி ,ஒரு வட்டார மொழி வெளியிடப்பெறும் இரு நாளிதழ்களில் இந்தகூட்டான்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதால் பாதிப்பு எவருக்கேனும் இருந்தால் அதனை 21 நாளில் அறிவிக்கவேண்டும் என்ற விளம்பரப்படுத்திடவேண்டும் படிமுறை8. நிறுமங்கள் சட்டம் 4 இன்படி பதிவுசெய்வதற்கான பெயர் தயாராக இருக்கின்றது எனில் படிவம் URC-1 உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 9.மின் –படிவம் INC – 7 இல் புதிய தனியார் நிறுமத்தின் நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் பங்குதாரர்கள் ஆகியோர்பற்றிய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 10. அதனை தொடர்ந்துபடிமுறை 9.இல்குறிப்பிடப்பட்டுள்ள மின் - படிவம் INC – 7 இன் பின்னினைப்பாகமுக்கியமேலாண்மை பணியாளர்களை பற்றிய விவரங்களுக்கான மின் -படிவம் INC -8 ஐ சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 11.அவ்வாறே படிமுறை 9.இல்குறிப்பிடப்பட்டுள்ள மின்– படிவம் INC – 7 இன் மற்றொரு பின்னினைப்பாக பங்குதாரர்களின் உறுதிமொழிக்கான மின் -படிவம் INC -9ஐ சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை12. தொடர்ந்து மின் -படிவம் DIR -12 இல் புதிய தனியார் நிறுமத்தில் யார்யார் இயக்குநர்களாக நியமிக்கப்படவுள்ளனர் எனபுதிய தனியார் நிறுமத்தின் இயக்குநர்களின் நியமனங்களை பற்றிய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 13.அதனை தொடர்ந்து இறுதியாக படிவம் INC – 22 இன் படி நிறுமம் உருவாக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்நிறுமத்திற்கான பதிவுஅலுவலகத்தை சரிபார்த்திடுவதற்கான அந்த புதிய தனியார் நிறுமத்தின் பதிவு அலுவலக முகவரியை குறிப்பிட்டு சமர்ப்பிக்கவேண்டும் மேலும் இவ்வாறான படிமுறைகளுடன் படிவம் SPICE-32, e-MOA ,e-AOA ஆகியவற்றையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் இவ்வாறு மேலேகூறியவாறான 13.படிமுறைகளை மிகச்சரியாக பின்பற்றினால் அந் தகூட்டான்மை நிறுவனமானது புதிய தனியார் நிறுமமாக மாற்றம்செய்து பதிவு செய்யப்பட்டு அதற்கான பதிவுசான்றிதழ் (Certificate of Incorporation (COI))நிறுமங்களின் பதிவாளரால் வழங்கப்படும்

சனி, 6 ஏப்ரல், 2019

செயல்படாத நிறுமங்களை அறவே நீக்கம் செய்வதற்கான படிவம் எண்INC-22A ஐ 25.02.2019நாள் முதல் சமர்ப்பித்திடவேண்டும்


. இதற்காக படிவம் எண்INC-22A ஐ 25.02.2019நாள் முதல் சமர்ப்பித்தடவேண்டும்ஒருபுதிய செயல்முறை நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது. அதாவது செயல்படும் நிறுமத்தின் சுட்டிகாட்டுதலையும் சரிபார்த்தலையும் இணைத்தல் (Active Company Tagging Identification and verification(ACTIVE)) செயலிற்காக படிவம் எண்INC-22A என்பதை 25.02.2019 முதல் சமர்ப்பித்திடுமாறு நிறுமங்களின் விவகார அமைச்சகமானது (MCA) நடைமுறைபடுத்தி யுள்ளது அதாவது31.12.2017 அன்று வரை பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுமங்களும்இதன்படி இந்த படிவம் எண்INC-22A வருகின்ற15.06.2019 இற்குள் நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின்(MCA) கீழ்செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் அவ்வாறு சமர்ப்பித்த நிறுமங்கள்ACTIVE Compliant என குறிக்கப்பெறும் தவறினால்அவ்வாறு தவறிடும் நிறுமங்களை ACTIVE Non-Compliant என குறிக்கப்பெறும் அவ்வாறு தவறிடும் நிறுமங்கள் அதற்கு பிறகு ரூ.10,000/- அபராத தொகையுடன் இந்த படிவத்தை சமர்ப்பித்திடவேண்டும்

இந்த படிவத்துடன் நிறுமத்தின் பதிவு அலுவலகத்தின் உட்பகுதியின் நிழற்படத்தையும் பதிவுஅலுவலக பெயர்ப்பலகையுடன்கூடிய அலுவலகத்தின் வெளிப்புறநிழற்படத்தையும் அந்நிறுமத்தின் இயக்குநர் ஒருவரின் அல்லது முக்கியநிருவாக அலுவலர்(Key Managerial Person(KMP)) ஒருவரின் கையொப்பம் பெற்று அதனோடு பதிவுபெற்ற CA/ CMA/CS ஆகியவர்களுள் யாரேனும் ஒருவரின் சான்றொப்பம் பெற்று சமர்ப்பித்திடவேண்டும்

மேலும் நிறுமமானது அந்நிறுமத்தின் இயக்குநர்களின் குழுவிலுள்ள அனைத்து இயக்குநர்களின் விவரங்களுக்கான படிவம் எண்DIR-3KYCஐ நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின்(MCA)கீழ் செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருக்கவேண்டும் அந்தவிவரங்கள் தற்போது சமர்ப்பிக்கும் படிவம் எண் INC-22A உடன் ஒத்திருக்கவேண்டும்

அதுமட்டுமல்லாது நடப்பிலுள்ள தணிக்கையாளர், அடக்கவிலைதணிக்கையாளர், நிறுமச்செயலர் தலைமைநிதிஅலுவலர் ஆகியோர்களின் விவரங்களுக்கான படிவம் எண் ADT-1ஆனது தற்போது சமர்ப்பிக்கும் படிவம் எண் INC-22A உடன் ஒத்திருக்கவேண்டும் அதனோடு 2017-18 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர நிதி அறிக்கைக்கான SRN இன் படிவம் எண் AOCஉம் படிவம் எண் MGT-7 உம் கண்டிப்பாக நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின்(MCA)கீழ் செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருக்கவேண்டும் அந்தவிவரங்கள் தற்போது சமர்ப்பிக்கும் படிவம் எண் INC-22A உடன் ஒத்திருக்கவேண்டும்

இந்த படிவம் எண்INC-22A ஐ நிறுமமானது சமர்ப்பிக்கவில்லையெனில்அந் நிறுமத்தின் அனுமதிக்கப்பட்ட மூலதனத்தை மாற்றியமைத்திட(படிவம் எண் SH-07) முடியாது மேலும் செலுத்தப்பட்ட மூலதனத்தை மாற்றியமைத்திட(படிவம் எண் PAS-03) முடியாது இயக்குநர்களின் குழுவிலுள்ள இயக்குநர்களை மாற்றிட(படிவம் எண் DIR-12)முடியாது பதிவுஅலுவலகத்தையும் வேறுஇடத்திற்கு மாற்றிட(படிவம் எண் INC-22)முடியாது நிறுமங்களை ஒருங்கிணைத்தல் ஒன்றிணைத்தல் வெவ்வேறு நிறுமங்களாக பிரித்தல் ஆகியவற்றை செய்திட (படிவம் எண் INC-28)முடியாது .

இந்த நடைமுறை நீக்கம் செய்யப்பட்ட நிறுமங்கள் , நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் உள்ள நிறுமங்கள் ஒருங்கிணைப்பில் உள்ள நிறுமங்கள் கலைப்பு நடவடிக்கையிலுள்ள நிறுமங்கள் கலைக்கப்பட்ட நிறுமங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது

குறிப்பு இந்த படிவத்தினை இந்த ஏப்ரல் 25, 2019 இற்குள் சமர்ப்பித்திடவேண்டும் என்ற செய்தியை மனதில் கொள்க தவறினால் அவ்வாறான நிறுவனம் செயல்படாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டுவிடும் அதனை தவிர்க்க உடன் இந்த படிவத்தினை விதிக்கப்பட்ட கெடுதேதிக்கு முன் சமர்ப்பித்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...