கடற்கரையில் ஒரு வலுவான அலை வந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் காலில்அணியும் செருப்பை அடித்து சென்றது இதைகண்டஅந்த குழந்தை, அந்த கடற்கரையின் மணல் மீது விரலால் - கடல் ஒரு திருடன் என எழுதியது. அதேகடற்கரையின் சிறிதுதூரத்தில் வாழும் மீனவர் ஒருவருக்கு அன்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது ஏராளமான மீன்கள் கிடைத்தது. அம்மீனவர் அதே கடற்கரையின் மணலில் - கடல் என்னை சீராட்டி வளர்க்கின்றது என எழுதினார். சிறிது நேரத்தில்அருகிலுள்ள ஊரில் வாழ்ந்துவந்த , ஒரு வாலிபர் அந்த கடலில் மூழ்கி இறந்தார். மகனின் இழப்பால் வருந்திய அவ்வாலிபனின் தாய் கடற்கரையின் மணலில் - கடல் ஒரு கொலையாளி என எழுதினார் . அதே கடற்கரையின் வேறொரு பகுதியில், ஏழ்மைநிலையிலுள்ள முதியவர் ஒருவர் அந்த கடற்கரையின் மணலில் ணன ஆறுதலுக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய சிப்பியில் விலைமதிப்பற்ற முத்து ஒன்றைக் கண்டெடுத்தார். அவர் அதே கடற்கரையின் மணலில் - கடல் மிகவும் தாராளமான கொடையாளிஎன எழுதினார் .
அப்போது திடீரென ஒரு பெரிய அலை வந்து அந்த கடற்கரையின் மனதில் அவ்வாறு எழுதிய எழுத்தையெல்லாம் அழித்து விட்டுச் சென்றது.
இதன் பொருள் என்ன?
அதாவது கடலானது பொதுமக்களின் கருத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை, எப்போதும் அதன் அலைகளால் அவற்றைஅழித்து விட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாமும் அவ்வாறு ஒரு கடல் போன்ற பரந்தமனப்பாண்மைக்கு மாற விரும்பினால், பயனற்ற பேச்சுகளுக்கு ஒருபோதும் கவனம் செலுத்த வேண்டாம். நம்முடைய வாழ்க்கையின் ஏற்படும் அனைத்து செயல்களுக்கும் அமைதியாக தைரியமாக உற்சாகமாக அவைகளை ஏற்று சொந்த வாழ்க்கைக்கு ஏற்ப அதற்கேற்ப பொருத்தமான முடிவு செய்திடுக. உன்னைபற்றி மற்றவர்கள் என்ன எண்ணுகின்றார்கள் என கவலைப்படவேண்டாம் ஏனெனில், அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் கருத்துகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அருந்த விழையும் ஒரு கோப்பை தேநீரில் ஒரு ஈ விழுந்திருந்தால், அந்த ஒரு கோப்பை தேநீரை ஈயுடன் கீழே கொட்டிவிடப்படும், ஆனால் அதுவே சுத்தமான நெய்யில் ஈ விழுந்திருந்தால், ஈயைமட்டும் தூக்கி எறியப்படும். என்பதை மனதில் கொண்டு, எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்சியாகவும், வாழ கற்றுகொள்க
ஞாயிறு, 29 அக்டோபர், 2023
கடல் போன்று பரந்தமனப்பாண்மையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திடுக
ஞாயிறு, 22 அக்டோபர், 2023
முயலும் அதன் நண்பர்களும்!
ஒரு வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஒரு காட்டில் முயல்ஒன்று வசித்து வந்தது அது தன்னுடைய இனமல்லாத மற்றபல்வேறு இன விலங்குளை நண்பர்கள்ஆக கொண்டிருந்தது, அதனால் அது எப்போதும் தனது நண்பர்களுடன் வேடிக்கையாக பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் , இருந்துவந்தது, அவ்வாறாக அந்த முயலின் வாழ் நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிந்து கொண்டிருந்தன, அதனால் பல்வேறு நண்பர்களைநாம் பெற்றிருப்பது எவ்வளவு அதிர்ஷ்டசாலி என எப்போதும் நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்துவந்தது. ஒரு நாள், அதுவாழும் வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஆற்றங்கரையில் நண்பர்களுடன் விளையாடியபின் தன்னுடைய உணவிற்காக சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது, சிறிது நேரத்தில், ஒரு சிங்கம் தன்னை நோக்கி மெதுவாக தன்னை பிடித்து உண்ணவருவதைக் கண்டு பயந்துவிட்டது, அதனால் நமக்குதான் ஏராளமான நண்பர்கள் இருக்கின்றனரே இவ்வாறான இக்கட்டான நேரத்தில் அவர்களிடம் நம்மை காப்பாற்றுமாறு உதவிகேட்போம் அவர்கள் கண்டிப்பாக நமக்கு உதவுவார்கள்என நினைத்து அருகில் மேய்ந்து கொண்டிருந்த தன் நண்பன் குதிரையை நோக்கி ஓடி வந்து அதனிடம் தன்னுடைய உயிரை காப்பதற்காக உதவி கேட்டு அழுதது உடன் குதிரையான, "நண்பரே, நான் உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் விரும்புகிறேன், ஆனால் நான் இப்போது ஒருமுக்கியமான வேலைக்கு செல்லவேண்டியுள்ளது " எனக்கூறியவாறு குதிரை ஓடிவிட்டது. அப்போது முயல் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன் நண்பன் காளையைப் பார்த்து, “நண்பா, என்னை கொள்ள ஒரு சிங்கம் வருகிறது. தயவு செய்து உனது கூர்மையான கொம்புகளால் அந்த சிங்க்ததினைப் பயமுறுத்தி துரத்தி என்உயிரை காப்பாற்று." எனகோரியது .உடன் அதனுடைய மற்றொரு நண்பனான படுத்துகொண்டிருந்த காளையான எழுந்து நின்று, "நண்பா, நான் என்கூரியகொம்பால்குத்தி அந்த சிக்கத்தை ஓட வைக்க முடியும், ஆனால் இந்த வேளாளர் தன்னுடைய வயலில் உழுவுபணி செய்திட என்னை அழைத்துள்ளார்." எனக்கூறிவிட்டு காளை நழுவியது. இப்போது, முயல் மற்றுமொரு நண்பனான ஆட்டைப் பார்த்து, அதனிடம் சிங்கம் ஒன்று தன்னை கொல்லவருவதாகவும், தயவு செய்து. தன்னை அதன் முதுகில் ஏற்றிகொண்டு இங்கிருந்து வெகுதூரத்திற்கு ஓடி காப்பாற்றிடமாறு கோரியது. என்னுடைய உயிரைக் காப்பாற்றவே நான் சிரமபட்டு தனியாக ஓட வேண்டும். அவ்வாறான நிலையில் நாம் நம்முடைய முதுகில் முயலை கூடுதலாக சுமந்து கொண்டு பாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆடு நினைத்தது. உடன் அந்த ஆடு மட்டும் அங்கிருந்து ஓடியது. சிங்கம் தன்னை நெருங்குவதை முயல் பார்த்தது. வேறு வழியின்றி அது முடிந்தவரை வேகமாக ஓடி வெகுதூரம் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு நிலத்தில் இருந்த ஒரு குழிக்குள் ஒளிந்து கொண்டது. அன்றைக்குதான் முயல் தனக்கு ஏராளமான அளவில் பலவேறு நண்பர்கள் உள்ளனர் ஆனால் இவ்வாறான ஆபத்தான நிலையில் உதவக்கூடிய உண்மையான நண்பர்களாக அவர்கள் இல்லை, அவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாக இருப்பதைப் புரிந்துகொண்டது,
தன்னை காத்திட தான் நம்பக்கூடிய ஒருவன் தான் மட்டுமே என்று புரிந்துகொண்டது. கற்றல்: மற்றவர்களை நம்புவதற்கு பதிலாக உங்களைமட்டுமே நம்புங்கள்
ஞாயிறு, 15 அக்டோபர், 2023
ஏழை மனிதனின் இழப்பும் அவனது நேர்மறையான அணுகுமுறையும்!
ஒரு ஏழை கடந்த இருபது வருடங்களாக மிகசிக்கனமாக செலவுசெய்தபின் மிகுதி செலவிடப்படாமல் உள்ள தொகையை ஒவ்வொரு பைசாவாக சேமித்து கொண்டுவந்து கனிசமான தொகைசேர்ந்ததும் அந்த பணத்தை தனது குடும்பத்துடன் சேர்ந்து சொந்த வீட்டில் வாழ்வதற்காக தன்னுடைய குடும்பத்திற்காகவென தனியாக ஒரு வீடு கட்ட பயன்படுத்தினார். இறுதியாக, அவரது வீடு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு, அவரது குடும்பத்துடன் புதுவீட்டில் குடிபுகுவதற்காக ஒரு நல்ல நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அந்த புதுவீட்டில் குடிபுகுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல நாளிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது அதனால் அவரது வீடு முற்றிலும் அழிக்கப்பட்டது. ஏழைக்கு அந்த செய்தி கிடைத்ததும், நிலநடுக்கத்தால் இடிந்த போன தன்னுடைய புதிய வீடு இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு முன் கடைத்தெருவிற்குச் சென்று இனிப்பு வாங்கிகொண்டுவந்தார் இடிந்துபோன புதியதாக கட்டப்பட்டிருந்த அவரதுவீ்ட்டிற்கு முன்பாக வேடிக்கை பார்ப்பதற்காக. பலர் கூடியிருந்த இடத்தை அவர் அடைந்தபோது, பலரும் அந்த புதுவீட்டில் அவரது குடும்பம் குடிபுகும் முன்பே தனது வீட்டை இழந்ததால், அவரிடம் வருத்தம் தெரிவித்தனர். சிலர் அவருக்கு ஆறுதல் கூற முயன்றனர். ஆனால் அந்த ஏழை வேடிக்கை பார்ப்பதற்காக கூடியிருந்த அவர்கள் அனைவருக்கும் இனிப்புகளை எடுத்து விநியோகிக்க ஆரம்பித்தார். இதைகண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுள் அந்த ஏழையை நன்கு அறிந்த அவனது நண்பன் ஒருவன் "நண்பரே நீங்கள் வாழ்நாளெல்லாம் மிகவும் அதிக சிக்கனத்துடன் வாழ்ந்து சேமித்த பணத்தை கொண்டு புதிதாகக் கட்டிய வீடு இடிந்து விழுந்து விட்டது, நீங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை இந்த நிலநடுக்கம் வீணடித்து விட்டது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறீர்கள்!!" என கேட்டார். உடன் ஏழை சிரித்துக்கொண்டே," நண்பரே இந்த செயலின் எதிர்மறையான பக்கத்தை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள், எனவே, உங்களால் நேர்மறையான பக்கத்தைப் காண முடியாது. இன்று நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்தது நல்லது. ஒருவேளை இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் இந்த புது வீட்டிற்கு குடிபுகுந்து இதில் என் குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கியபின்னர் இடிந்து விழுந்திருந்தால் என்ன செய்வது. அப்போது இடிந்து விழுந்திருந்தால், நான், என் மனைவி, குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா! அப்போது எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்? எனவே எது நடந்தாலும் அது நன்மைக்காக மட்டுமே நடந்தது. எனக்கொள்க அதனால்தான் நான் அனைவருக்கும் இனிப்பு வழங்குகின்றேன்
ஞாயிறு, 8 அக்டோபர், 2023
இரண்டு பயணிகளின் உரையாடலிலுள்ள- ஆழ்ந்த பொருள்
தற்போதை.ய போக்குவரத்து வசதி வாய்ப்புகள் போன்றில்லாத முற்காலத்தில் ஒருமுறை, இரண்டு வெவ்வேறு மனிதர்கள் தத்தம் கால்களால் நடந்தே செல்கின்றவாறான ஒரு மிகநீண்டதூர பயணம் செய்வதற்காக புறப்பட்டனர். இருவரும் ஒரே பாதையில் செல்லவேண்டியிருந்தது, எனவே இருவரும் அந்த பயணத்தில் ஒன்றாக சேர்ந்தே பயனம்செய்ய முடிவு செய்து அவ்வாறே பயனித்தனர். ஏழு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும்பிரிந்து தனித்தனியாக செல்ல வேண்டிய நேரம் வந்தது. முதல் பயணி , “அண்ணே, நாம் இருவருவரும் கடந்த வாரம் முழுவதும் ஒன்றாக பயனித்தோம். நாம் இவ்வாறு நம்முடைய பயனத்தை துவங்குவதற்குமுன் நான் ஒரு பிரபலமான பணக்காரன் என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நீங்கள் என்னை விட பெரிய பணக்காரர் என்று தெரியவருகிறது.” எனக்கூறினார் .உடன் இரண்டாவது பயணி , "எப்படி" எனக்கேட்டார் முதல்பயனி, "கடந்த ஏழு நாட்களாக, நீங்கள் ஏதேனும் உங்களடைய சொந்த பணியை செய்வதற்காக என்னைத் தனியாக விட்டுவிட்டு செல்லும்போது, உங்களுடைய பையிலிருந்து ஏதாவவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் தொடர்ந்து தேடினேன், ஆனால் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு நாள் நாமிருவரும் சேர்ந்து மிக, நீண்டதூரம் பயனம் செய்து கொண்டு இருக்கின்றோம். அவ்வாறான நீண்டதூரபயனத்திற்கு மிக அதிக செலவாகும் அல்லவா அதற்காக நீங்கள் அதிக பணம் எடுத்து கொண்டு வந்திருப்பீர்கள் அல்லவா .ஆனால் உங்களிடம் எதுவும் இல்லையே இது எப்படி சாத்தியம்? நீங்கள் பணம் எதுவும் கொண்டு வரவில்லையா?" என சந்தேக கேள்வி எழுப்பினார் .அதனை தொடர்ந்து இரண்டாமவர் , “நிச்சயமாக நான்நீண்டதூர பயனத்திற்கு தேவைான பணம் கொண்டுவந்தேன். அதனுடன் என்னிடம் விலையுயர்ந்த வைரமும் சில வெள்ளி நாணயங்களும் உள்ளன." என பதிலளித்தா.ர் அந்த பதிலை கேட்டு முதல் பயனி மிகவும் ஆச்சரியப்பட்டு, "உங்களுடைய பையில் அதுபோன்ற பொருட்கள் இருந்தால்,நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன்?" என்று கேட்டார். அதற்கு இரண்டாவது பயனி , "ஏனென்றால் நான் உங்களை தனியாக விட்டிட்டு வெளியே ஏதேனும் என்னுடைய சொந்த பணியை செய்வதற்காக செல்லும்போதெல்லாம் வைரங்களையும், வெள்ளி நாணயங்களையும் பணத்தையும் உங்கள் பையில் வைத்து செல்வேன், நீங்கள் கடந்த ஏழு நாட்களாக ஏதாவது கிடைக்குமா வென என்னுடைய பையை மட்டுமே அலசிக்கொண்டே ஆராய்ந்து இருந்தீர்களே தவிர. உங்களுடைய சொந்த பையில் ஏதேனும் உள்ளதாவென நீங்கள் நினைக்கவில்லை, பிறகு நீங்கள் எப்படி எதையும் என்னுடைய பையில் கண்டுபிடிப்பீர்கள்?"என பதிலளித்தார் .
ஆம் நாம் வாழ்கின்ற நம்முடைய வாழ்க்கையும் அவ்வாறுதான். இயற்கையானது நம்முடைய மகிழ்ச்சியை நமக்குள் வைத்திருக்கின்றது, ஆனால் இன்னும் நாம் மற்றவர்களிடம் இருப்பதை கண்டு பொறாமை பட்டுக்கொண்டே இருக்கிறோம், அவர்களிடம் இருப்பதைப் பெற விரும்புகிறோம். ஒருவர் பிறர் மகிழ்ச்சியாக வாழ்கின்றாற் எனக் காண்பதை நிறுத்திவிட்டு, நம்மிடம் உள்ள மகிழ்ச்சியைக் காண முயன்றால், அந்த நிமிடத்திலிருந்து ஒருவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள...
-
முன்னொ ரு காலத்தில் , வயதானவர்ஒரு வர் தனது பக்கத்து வீட்டுக்கார இளைஞன ை ஒரு திருடன் என் றுகூறி அந்த தவறான வதந்தி யை அந்த ஊர...
-
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...