ஞாயிறு, 18 நவம்பர், 2012

எந்தவொரு செயலையும் அமைதியாக கூர்ந்து கவனித்தால் நம்மால் அதில் வெற்றிகொள்ளமுடியும் வீண் ஆரவாரமும் அவசரமும் வெற்றிகொள்ள தடைகற்களாகும்


விவசாயி ஒருவர் தன்னுடைய கையில் கட்டியிருந்த கைகடிகாரத்தை அவருடைய தானிய கிடங்கில் தவறவிட்டுவிட்டார் அதனை மிகமுக்கியமான நபரின் நினைவாக அவருடைய கையில் கட்டியிருந்தார் அதனால் அதனை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்திட வேண்டுமென விரும்பி ,”அதனை தேடிகண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க பரிசு அளிக்கப்படும்” என அறிவித்தார்

உடன் ஏராளமான நபர்கள் அவருடைய தானிய கிடங்கிற்குள் புகுந்து குறுக்கும் நெடுக்குமாக அலைந்து தேடினார்கள் அந்த கைக்கடிகாரம் மட்டும் யாருக்கும் கிடைக்கவேயில்லை அனைவரும் சோர்வுற்று வெறுங்கையுடனே திரும்பி சென்றனர்

ஒரு சிறுவன் “தான் அந்த தேடுதலை செய்யட்டுமா “என அவரிடம் அனுமதி கேட்டான் “அதற்கென்ன தாராளமாக தேடிகண்டுபிடித்து கொடு” என அவனுக்கு அனுமதிஅளித்தார்

அச்சிறுவன் அவருடைய தானிய கிடங்கிற்குள் சென்று ஒருசில நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக அவருடைய தொலைந்துபோன கைக்கடிகாரத்தை எடுத்துவந்து அவரிடம் கொடுத்தான்

“என்ன ஆச்சரியம்! தம்பி! இவ்வளவு நபர்கள் என்னுடைய தானிய கிடங்கு முழுவதையும் தேடிகிடைக்காததை ஒருசில நிமிடங்களில் உன்னால் எவ்வாறு தேடிக்கண்டுபிடித்து எடுத்துவரமுடிந்தது?” என வினவியபோது “அதுஒன்றும் பெரிய சிக்கலான தீர்வு இல்லை ஐயா மற்றவர்கள் ஆரவாரத்தோடு தேடியபோது நான் அமைதியாக இருந்து கவணித்தேன் அப்போது கைக்கடிகாரம் இயங்கிடும் ஒலி என்னுடைய காதிற்கு மட்டும் கேட்டது அந்த ஒலி வந்த திசையில் சென்று எடுத்துவந்தேன்” என்று கூறினான்

அதாவது எந்தவொரு செயலையும் அமைதியாக கூர்ந்து கவணித்தால் நம்மால் அதில் வெற்றிகொள்ளமுடியும் வீண் ஆரவாரமும் அவசரமும் வெற்றிகொள்ள தடைகற்களாகும் என்பதே இதிலிருந்த நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும்

வெள்ளி, 16 நவம்பர், 2012

திறமைசாலியான மதிப்புமிக்க ஊழியர்கள் யார் என அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்தல்


ஒரு நிறுவனத்தில் புதியதாக பணியில் சேர்ந்த இளம் ஊழியர்களில் சிலர் தாம் பெறும் ஊதியத்திற்கேற்ற அளவிற்கு மட்டும் தம்முடைய கடமையை ஆற்றினால் போதும் என இல்லாமல் தமக்கு வழங்கபடும் ஊதியத்தின் அளவைவிட மிக அதிகஅளவில் செயல்பட்டு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தினுடைய வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்கா கவும் மிகத்திறனுடன் ஆர்வுமுடன் தங்களுடைய உழைப்பை பங்களிப்பை நல்குவார்கள் .

முதலில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அவ்வாறான திறமைசாலியான மதிப்புமிக்க ஊழியர்கள் யார் என அடையாளம் கண்டு அவர்களின் திறன்மிகு பங்களிப்பை அங்கீகரித்து ஊக்குவித்து அவர்களின் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான வசதி வாய்ப்புகளை அளித்து அவ்வாறான ஊழியர்களே மற்றவர்களுக்கு எடுத்தகாட்டாக விளங்கும்படி அனைவருக்கும் அறிவித்து மற்றவர்களும் தம்மிடம் மறைந்துள்ள திறன்களை வெளிக்கொணர்ந்து அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பாடுபடுமாறான ஊக்குவிப்பு சூழலை ஏற்படுத்திடவேண்டும்

இவ்வாறான தனிநபர்களிடம் ஊழியர்களிடம் கவனிக்கவேண்டிய பின்வரும் மூன்று பண்புகள் உள்ளன:

1.அவர்கள் ஒரு செயலின் முடிவில் மட்டுமே கவனம். செலுத்துவார்கள் ஏனெனில் அவர்கள் ஒரு செயலிற்கான செயல்முறைகளை காட்டிலும் அதன் இறுதி விளைவுகள் மிகச்சரியாக வரவேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திடுவார்கள்,

2.அவர்கள் ஒவ்வொரு செயலிற்காகவும் ஏற்படுத்தபட்டுள்ள விதிகளை உடைத்தெறிந்திடுவார்கள் ஆயினும் அவர்கள் அதற்காக நிருவாகத்திற்கு எதிராக கட்டுக்கடங்காத கலகமோ போராட்டங்களையோ செய்திடமாட்டார்கள்

3.அவர்களுக்கு இளையவர்கள் என்ற முதுநிலை வரிசையின் பெயரிருந்தாலும் அவர்கள் தம்முடைய தனிமனித திறமை யினாலும் நட்சத்திர செல்வாக்கினாலும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிடுவார்கள் மேலும் அவர்கள் மற்றவர்களையும் தம்மோடு ஒருங்கிணைப்பதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஆன சூழலை உருவாக்கிடுவார்கள் .

அவர்கள் தம்முடைய நிறுவனத்திற்கான அதிக நம்பகத்தன்மையை நிரூபித்திடுவார்கள் . மேலும் அவர்களின் நடவடிக்கைகளும் சொற்களும் எப்போதும் மாறாதஒரே நிலைத்த தன்மையுடையதாக இருக்கும்

நிருவாகச்சிக்கல் ஏதேனும் எழுகின்ற சூழ்நிலையில் வழக்கமான நிருவாக தலைவர்களைவிட இவ்வாறான துடிப்புமிக்க செயல்திறன் கொண்ட ஊழியர்களின் செயல் எவ்வாறு வழிகாட்டியாக அமைய போகின்றது என அனைவரின் கவனமும் இவ்வாறானவர்களின் மீதே இருக்கும்

செவ்வாய், 13 நவம்பர், 2012

நம் ஒவ்வொருவருக்கும் ஒருமதிப்பு, தனித்தன்மை உள்ளது. அதன் மதிப்பு எப்போதும் மாறாது


மேடைபேச்சாளர் ஒருவர் தம்முடைய பேச்சினிடையே ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை தம்முடைய பையிலிருந்து கையில் எடுத்துகொண்டு தம்முன் அமர்ந்து தம்முடைய பேச்சினை கேட்டுகொண்டிருக்கும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

உடன் அந்த ஆயிரம் ரூபாய் தாளை கசக்கி அருகில் தரையில் கிடந்த ஒருசிறுகல்லின் மீது அதனை சுற்றி மீண்டும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மீண்டும் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

அதன்பின் அவ்வாறு சிறு கல்லில் சுற்றபட்ட அந்த தாளை மேலும் நன்கு கசக்கி தரையில் வீசிஎறிந்த பின் மீண்டும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மீண்டும் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

பிறகு “நன்கு கவணியுங்கள் பார்வையாளர்களே! இந்த ஆயிரம் ரூபாய்தாளானது, என்னதான் கசக்கினாலும சுருட்டி வீசிஎறிந்தாலும் அதனுடைய மதிப்பு எப்போதும் மாறவில்லை அல்லவா?

அவ்வாறே நம் ஒவ்வொருவருக்கும் ஒருமதிப்பு, தனித்தன்மை உள்ளது. அது என்னதான் நம்மை கசக்கி பிழிந்தாலும், அடித்து துவைத்தாலும் ,எந்தவொரு துன்பம் அல்லது கஷ்டம் நமக்கு வந்தாலும், நம்முடைய ஒவ்வொருவரின் தனித்தன்மையும் மதிப்பும் மாறாதவையாகும்.

அதனை பேணிக்காத்து நல்வழியில் பயனபடுத்திகொள்வது நம் ஒவ்வொருவரின் அடிப்படை கடமையாகும்” என கூறி தன்னுடைய பேச்சினை முடித்தார்

வியாழன், 20 செப்டம்பர், 2012

வருகின்ற எந்தவொரு வாய்ப்பையும் தக்கவைத்து கொள்க


இளைஞன் ஒருவன் ஒரு விவசாயின் வீட்டிற்கு சென்று அவருடைய மகளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினான் உடன் அந்த விவசாயி ஆனவர்

“நல்லது தம்பி என்னுடைய மாட்டு கொட்டிலில் இருந்து மூன்று காளைமாடுகளை இந்த திறந்த வெளியில் அவிழ்த்து விடுகின்றேன் நீ அவைகளில் ஏதாவதுஒன்றினுடைய வாலைமட்டும் பிடித்தால் நான் கண்டிப்பாக என்னுடைய மகளை உனக்கு திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்” என கூறினார்

அதற்கு அவ்விளைஞனும் சம்மதம் தெரிவித்தவுடன் மறுநாள் காலையில் அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து காளை மாடுஒன்றை திறந்து விட்டார்

வெளியேறிய மாடானது நீண்ட கொம்புடனும் உயரமான திமிளுடனும் ராஜநடையாக வந்தது உடன் அவ்விளைஞன் இதனை நம்மால் பிடிக்கமுடியாது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது அதனால் இதற்கடுத்ததாக வரும் காளையின் வாலை பிடித்துவிடுவோம் எனமுடிவுசெய்து ஓரமாக ஒதுங்கி அந்த காளை செல்வதற்கு வழிவிட்டான்

அதற்கடுத்ததாக அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து இதற்கு முன் பார்த்தயிராத மிகவலுவான மிகமுரட்டு காளையொன்று சிங்கம் போன்று பாய்ந்து வெளிவந்தது இதனையும் நம்மால் பிடிக்கமுடியாது இதுவும் நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது அதனால் இதற்கடுத்து மூன்றாவதாக வரும் காளையின் வாலை எப்படியாவது பிடித்துவிடுவோம் எனமுடிவுசெய்து ஓரமாக ஒதுங்கி அந்த காளை செல்வதற்கு வழிவிட்டான்

மூன்றாவதாக அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து இதற்கு முன் பார்த்தயிராத மிகநோஞ்சான்போன்ற காளை வெளியில் வந்தது ஆகா இதற்காகத்தான் இதுவரையிலும் நாம் காத்திருந்தோம் இதனுடைய வாலை மிகஎளிதாக பிடித்து வெற்றிகொள்வோம் என முடிவுசெய்து அந்த நோஞ்சான் காளை தனக்கு அருகில் வரும்வரை காத்திருந்து அருகில் வந்தவுடன் அந்த காளையின் அருகில் சாதாரணமாக சென்று அதனுடைய வாலை பிடிக்கலாம் என முயற்சி செய்தபோது என்ன ஆச்சரியம் அந்த நோஞ்சான் காளைக்கு வாலே இல்லை

அவ்விளைஞன் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறிவிட்டான்

அதாவது நம்முடைய வாழ்க்கையில் எதிர்வரும் எந்தவொரு முதல் வாய்ப்பையும் பின்னர் வருவது இதைவிட நல்லவாய்ப்பாக இருக்கும் என நழுவவிடாமல் அந்தவொரு வாய்ப்பு மட்டுமே நாம் முன்நோக்கி செல்ல கிடைத்த ஒரேவாய்ப்பு வேறு வாய்ப்பே இல்லையென முயற்சி செய்து அதில் வெற்றிபெற பாடுபடவேண்டும் இல்லையெனில் எந்தவொரு வாய்ப்பும் நமக்கு கிடைக்காது போய்விடும் என்பதை மனதில் கொள்க

திங்கள், 10 செப்டம்பர், 2012

பணியாளர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல்


மடிக்கணினிகளின் திரையில் கீழ்பகுதியில் உள்ள பட்டியின் வலதுபுறம் சிறு உருவபொத்தான் ஒன்று அம்மடிக்கணினிக்கான மின்கலனின் மின் திறன் அளவை குறிப்பிட்டு பிரதிபலிக்கும் அதில் அம்மின்கலனுடைய மின் திறன் அளவு 25% வரை வெண்மையாக இருந்த உருவபொத்தானின் வண்ணமானது 25% ஐ விட குறையும்போது ஆரஞ்சு வண்ணமாக மாறிவிடும், மேலும் 10% ஆக குறையும் போது சிவப்பு வண்ணமாக மாறி இன்னும் 10 நிமிடம் மட்டுமே மின்கலனில் இருக்கும் மின்திறன் போதுமானதாக இருக்கும் என நம்மை எச்சரிக்கும் உடன் அம்மின்கலனிற்கான மின்வழங்கிடும் இணைப்பை ஏற்படுத்திடவில்லையெனில் மடிக்கணினியின் இயக்கம் தானாகவே நின்றுவிடும்

அவ்வாறே ஒவ்வொரு நிறுவனத்தின் மேலாளரும் தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு தக்கநடவடிக்கையை மேற்கொண்டு செயற்படுத்தினால் மட்டுமே அப்பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பணித்திறன் தொடர்ந்து வெளிப்படும் அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் செயல்திறனும் மேம்படும். அதனால் ஒவ்வொரு மேலாளரும் தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

1. ஒருநிறுவனம் வெற்றிபெறுவதற்கு பணியாளர்களுக்கு போதுமான பயிற்சியை அவ்வப்போது அளித்தல் என்பது மிக முக்கியமான அடிப்படை நடவடிக்கையாகும் நீண்டகாலம் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பணியில் சேர்ந்தபேது அவர்களுக்கு இருக்கும் தகுதிகளை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்திடவேண்டியது அவசியமாகும் அதனால் வகுப்பறை பயிற்சியாகவோ நேரடிபயிற்சியாகவோ இணையத்தின்மூலமான பயிற்சியாகவோ அவ்வப்போது அவர்களுக்கு அளித்து பணியாளர்களின் திறனை புத்தாக்கம் செய்துகொள்வது நல்லது

2 ஒரு மேலாளர் தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தொழில்நுட்ப சம்மேளனங்களில் உறுப்பினராக சேரும்படியான சூழலை ஏற்படுத்தி அதற்கு ஆண்டு சந்தாவை தம்முடைய நிறுவனமே செலுத்திடுமாறு செய்திடும்போது அந்த தொழிலாளர்கள் திருப்தியுற்று தம்முடைய தொழில்நுட்ப சம்மேளனங்களின் மூலம் தமக்கு கிடைக்கும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும் ஆலோசனைகளையும் தம்முடைய நிறுவனத்தில் செயல்படுத்திடும் நிலைஏற்படும் அதன்மூலம் அந்நிறுவனத்தின் வளர்ச்சி உறுதியாக இருக்கும்

3. பணியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணையச்செய்து செய்து கல்விசுற்றுலா செல்லுமாறு செய்தல், விளையாட்டு போட்டி நடத்துதல், நாடகம்,பாட்டுபோட்டி, பேச்சுபோட்டி நடத்துதல் என்பன போன்ற நடவடிக்கைகளை ஒரு நிறுவனத்தில் செயற்படுத்திடவேண்டும் மேலும் இந்த நிகழ்வுகளில் பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு செய்தல் மறைமுகமாக அந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகும்

4. பணியாளர்கள் அனைவருக்கும் அவரவர்கள் அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்டு செயல்படுமாறு அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தபின் அவர்களுள் அந்த இலக்கை அடைபவர்களுக்கு மட்டும் அவர்களின் செயலை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மற்ற பணியாளர்களும் அவ்வாறு செயற்படுவதற்கான தூண்டுதல் ஏற்பட்டு அந்நிறுவனத்தின் உற்பத்தி திறன் மேம்படுத்துவதற்கான சூழல் ஏற்படுகின்றது

5.தற்போதைய புதிய தொழில்நுட்பம் ,புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை சார்ந்த புத்தாக்க வகுப்புகளை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை பணியாளர்களுக்கு நடத்துவது, பணியாளர்களுள் சிறந்த புத்தாக்கம் நிறைந்த பணியாளர்களை இந்த வகுப்புகளில் தம்முடைய கருத்துகளை மற்ற பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறான வாய்ப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கையின்மூலம் ஒருநிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்தமுடியும்

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது


சுன்டெலி ஒன்று ஒருகிராமத்தில் உள்ள ஒரு குடியானவன் வீட்டில் அதிக தொல்லை கொடுத்துவந்தது அதனால் அக் குடியானவன் இந்த சுன்டெலியை ஒழித்து கட்டவேண்டுமென புதிய எலிப்பொறியை கடையில் வாங்கிவந்து பையிலிருந்து அதனை அவிழ்த்து தன்னுடைய மனைவியிடம் காட்டினார்

முதலில் இதனை கண்ட சுன்டெலியானது “இதுஏதோ புதிய வகையான உணவுப்பொருள் போலும் இன்று இரவு நமக்கு நல்ல வேட்டைதான் “என எண்ணியது ஆனால் அதனை முழுவதுமாக பார்த்தபிறகுதான் “அய்யய்யோ ! இது நம்மை வேட்டையாடுவதற்காக வந்துள்ள எலிப்பொறி ஆயிற்றே” என பயந்து அலறியடித்து கொண்டு “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!”, “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!” எனக்கூவிக்கொண்டே ஓட்டம் பிடித்தது

இவ்வாறு இந்த சுன்டெலியானது பயந்து நடுங்கி கூவிக்கொண்டு ஓடுவதை கண்ணுற்ற அக்குடியானவன் வீட்டில் வளர்ந்து வரும் கோழியானது “ஏய்! சுன்டெலியே! அது உன்னை பிடித்து ஒழிப்பதற்காக வந்துள்ள எலிப்பொறி தானே தவிர, எங்கள் இனத்திற்கு அதனால் பாதிப்பெதுவும் ஏற்படாது, அதனால் வாயை மூடிக்கொண்டு தூரப்போ” என அந்த சுண்டெலியை விரட்டியடித்தது

அந்த சுன்டெலி மீண்டும் “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!”, “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!” எனக் கூவிக் கொண்டே வேறு இடத்திற்கு சென்றது

அந்த குடியானவன் வீட்டில் வளரந்து வந்த வெள்ளாடு ஆனது “டேய் சுன்டெலியே! அந்த எலிப்பொறியை குடியானவன் வாங்கி வந்துள்ளதால் உனக்கு மட்டும் தான் பாதிப்பு வருமேயொழிய எங்களுடைய இனத்திற்கு பாதிப்பு ஏதுவும் ஏற்படாது ,அதனால் முதலில் இவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்” என்று விரட்டியடித்தது

இதற்கு மேல் நமக்கு ஆதரவாக யாருமே இல்லையே என்ன செய்வது என பரிதவித்து அந்த சுன்டெலியானது மிக எச்சரிக்கையாக அந்த குடியானவன் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் மேல்பகுதியிலுள்ள பரன்மீது ஏறி ஒருமூலையாக சென்றமர்ந்து கொண்டது

அன்று நள்ளிரவில் எலிப்பொறிக்குள் ஏதோ மாட்டிக்கொண்ட சத்தம் கேட்டது உடன் அக்குடியானவனுடைய மனைவியானவள் “எலிப்பொறியில் சுண்டெலி மாட்டிகொண்டது இனி அந்த சுண்டெலியனுடையை தொல்லை ஒழிந்தது” என இருட்டில் இது சுன்டெலியின் வாலாகத்தான இருக்கும் என கைவைத்து பிடிக்க ஆரம்பிக்கும்போது அதில் மாட்டியிருந்த பாம்பானது அக்குடியானவனின் மனைவியை கடித்து விட்டது

உடன் குடியானவன் கடித்தது பாம்பென தெரிந்துகொண்டு உடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவருடைய மனைவியை அழைத்து சென்றார் அங்கிருந்த மருத்துவர் உடனடியாக தேவையான மருத்துவ உதவியை செய்து “வீட்டிற்கு சென்று கோழியை சூப்பாக செய்து அருந்த செய்தால் பாதிப்பு குறையும்” என அறிவுரைக்கூறினார்

அவ்வாறே அக்குடியானவன் அவருடைய வீட்டில் வளர்ந்துவந்த கோழியை கொன்று சூப்செய்து தன்னுடைய மனைவி அருந்திடுமாறு செய்தார் ஆனாலும் பாதிப்பு குறையவில்லை

அதனை கண்ட அருகிலிருந்த உற்றார் உறவினர் “வெள்ளாட்டு சூப் செய்து கொடுத்தால் குணமாகிவிடும்” என அறிவுறுத்தியதால் அவ்வாறே அவருடைய வீட்டில் வளர்ந்து வந்த வெள்ளாட்டினை கொன்று சூப் செய்து கொடுத்தார்

இவையனைத்தையும் கண்ணுற்ற அந்த சுன்டெலியானது தப்பித்தோம் பிழைத்தோம் என அடுத்தகுடியானவன் வீட்டிற்கு சென்றுவிட்டது

இந்த கதையிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் “எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதனால் மற்றவர்கள் தானே பாதிப்படைகின்றனர் நமக்கு அதனால் நேரடியாக பாதிப்பெதுவும் ஏற்படாது என அலட்சியமாக இருந்திட வேண்டாம் எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் நாமும் எச்சரிக்கையாக இருந்திடவேண்டியது அவசியமாகும்” என்பதே

புதன், 29 ஆகஸ்ட், 2012

மேலாண்மை பாங்குகள்அல்லது பாணிகள்


1 ஊழியர்களைவிட துரிதமாக செயல்படும் மேலாளர்கள் இந்த வகை மேலாளர்கள் ஊழியர்கள் கூறுவதை அரைகுறையாக கேட்டு அவர்கள் கூறி முடிப்பதற்கு முன்பே தவறாக புரிந்து கொண்டு அவர்களை அதற்கேற்ப நடத்துவார்கள்.

2.எப்போதும் ஜன்னல் வழியாக வெளியே வெறித்து பார்த்து கொண்டிருக்கும் மேலாளர் இந்த வகை மேலாளரிடம் பணியாளர்கள் தம்முடைய குறைகளை கூறி அதனைநிவர்த்திசெய்வதற்கான உத்திரவு வேண்டி அவர்கள் முன்பு நின்றிருந்தால் எதிரே இருக்கம் அப்பணியாளரை நேருக்கு நேர் பார்க்காமலும் அவர்கள் கூறுவதை கவனிக்காமலும் தூரத்திலிருக்கும் ஏதோவொரு பொருளை நோக்கி ஜன்னல்களுக்கு வெளியே.அவருடை பார்வை குத்திட்டு பார்த்து கொண்டே இருக்கும் ,

3. எந்தவொரு உத்திரவும் எழுத்துமூலமாக இருக்கவேண்டும் என எண்ணிடும் மேலாளர் இந்த வகை மேலாளர்கள் எந்த வொரு செயலையும் மறந்து விடுவார்கள் அதனால் எந்தவொரு செயலிற்காக உத்திரவிடுவதாக இருந்தாலும் அது எழுத்துமூலமாகவே இருக்கவேண்டும் என செயல்படுத்துவார்கள்

4. அதிகாரத்தை தம்முடைய செயலாளரிடம் வழங்கிடும் மேலாளர் இந்தவகை மேலாளர் எந்தவொரு செயலையும் செயல்படுத்தி கொள்ளுமாறு தம்முடைய அதிகாரத்தை தம்முடைய செயலாளரிடம் வழங்கிவிட்டு எப்போதும் அந்த செயலாளரை நம்பியே இருப்பார்கள்

5.எதைபற்றியும் தெரிந்து கொள்ளாத மேலாளர் இந்தவகை மேலாளர் எந்தவொரு செயலைபற்றியும் தெரிந்து கொள்ளாதவர் அதனால் பணியாளர்கள் அவரிடமிருந்து எதையும் எதிர் பார்த்திடமுடியாது ஆயினும் பணியாளர் ஏதேனும் கேட்டு அதற்கான மறு உத்திரவை எதிர்பார்த்தால் சம்பந்தமேஇல்லாதபொருத்தமற்ற உத்திரவே இவர்களிடமிருந்து கிடைக்கும்

. 6. தத்துவார்த்த பார்வையுடைய மேலாளர் இந்த வகை மேலாளர் எந்தவொரு நடப்பு செயலையும் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என அதனுடன் தொடர்புபடுத்தி தத்துவார்த்த பார்வையில் விளக்க முயற்சிப்பார்கள் அதனால் அவர்களின் கீழ் பணிபுரிபவர்களால் அவர்களை எப்போதும் திருப்தி படுத்தவே முடியாது அதனால் அந்நிறுவனத்தில் எந்தவொரு செயலும் நடைபெறாமல் முடங்கிவிடும்

7. . தகவலை மறைத்தேவைத்து பாதுகாத்திடும் மேலாளர் இந்த வகை மேலாளர் எந்தவகையான நிருவாக தகவலையும் யாருக்கும் தெரியாமல் மறைத்த வைத்திருந்து பழக்கபட்டவர்கள் ஆவார்கள் அதனால் ஒரு நிறுவனத்தின் சொத்துமதிப்பு போன்ற முக்கிய தகவலை மிக இரகசியமாக தன்னுடைய உயிரே போனாலும் வெளியே கசியவிடாது பாதுகாகத்து வைத்திருப்பார்கள் இவர்கள் அந்நிருவன்த்திற்கு மிக நம்பகமானவர்கள் ஆவார்கள்

8.. முதலாளி எதிர்பார்ப்பதை செயற்படுத்திடும் மேலாளர் இந்த வகை மேலாளர்கள் மிக சிறந்த ஆக்கச்சிந்தனை உள்ளவர்கள் தம்முடைய முதலாளி என்ன எதிர்பார்கின்றார் என்று சரியாக யூகித்து அதற்கேற்ப செயல்படுபவர்கள்

9. முதலாளிக்கு பின்னால் நாய்வால் போல்செல்லும் மேலாளர் ஒரு நிறுவனத்தின் அதிகாரபகிர்வு படிநிலை கட்டமைப்பில் இவ்வாறா னவர்கள் செயல்படுவதை நாம் பார்க்கலாம் அதாவது இந்தவகை யானவர்கள் கீழ்நிலை படியிலுள்ள மேலாளர்கள் தமக்கு மேல்நிலை படியிலுள்ள மேலாளர்களின் அடியை யொற்றி பின்பற்றி செயல்படுவார்கள்

10. எப்போதும் சுமுகமாக இன்முகத்துடன் இருக்கும் மேலாளர் அதாவது மேலாளர் என்ன செய்கின்றாரோ அதையே நாமும் செய்து அவரோடவே நம்முடைய அனைத்து அன்றாட செயல்களை செய்தாலும் அம்மேலாளர் இன்முகத்துடனும் அனைவரையும் வேறுபாடில்லாமல் சமமாக நடத்திடுவார்கள்

11. மேலாண்மையை கற்றுகொண்டே இருந்திடும் மேலாளர் இந்த வகை மேலாளர்கள் எப்போதும் ஆய்வுகள் ஆராய்ச்சிகள் என்றே இருப்பார்கள் உண்மை நிலவரம் என்ன அதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யவேண்டும் என எதைபற்றியும் சிந்திக்காமல் கற்பனையிலேயே வீற்றிருப்பார்கள்

12. தெளிவற்ற மேற்செலவு தாள்கள் உருவாக்குதலை போன்ற மேலாளர் இந்த வகைமேலாளர் தாம்தான் அந்நிறுவனத்தின் அனைத்து செயலிற்கு காரணமானவர் தம்மைவிட்டால் அந்த நிறுவனத்தை யாராலும் நடத்தவேமுடியாது என வெட்டிபந்தா செய்யம் இந்தவகை மேலாளரின் உண்மையான நிலையை பார்த்தால் வெங்காயதோலை உரித்தகதையாக அவருடைய திறன் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும்

13. வேற்றிடத்து மேலாளர் மேலாளரின் அறையை எப்போது யார் வந்து திறந்து பார்த்தாலும் காலியாகவேஇருக்கும் ஏனெனில் இந்த வகை மேலாளர்கள் அவருடைய பணியிடத்தில் எப்போதும் தென்படவே மாட்டார்கள் அந்நிறுவனத்தில் அவர் ஆற்றவேண்டிய பணியை தவிர மற்ற அனைத்து பணிகளையும் அவர் செய்துகொண்டிருப்பாரேயன்றி அவருடைய பணியை அவர் எப்போதும் செய்யமாட்டார்

14. மற்ற மேலாளர்களுடன் எப்போதும் சலசலவென பேசிக்கொண்டே யிருக்கும் மேலாளர் இந்த வகையான மேலாளர்கள் மிகவும் பிரபலமாக உள்ளவர்களாக இருப்பார்கள் அதாவது கால்மணிநேரத்தில் விளக்கமாக அளிக்ககூடிய ஒரு சிறுசெய்தியை ஒரு சில மணி நேரத்திற்கு அதே தகவலை திரும்ப திரும்ப சொல்லிக்கோண்டே யிருப்பார்கள்

15. ஆதரவற்ற உள்கட்டமைப்பு கொண்ட மேலாளர்கள் ஒரு நம்பிக்கையற்ற உட்கட்டமைப்பு கொண்டதொரு நிறுவனத்திற்கு , அதனை புத்துயிர் கொணடுவருவதற்கு ஒரு நிருவாக மேலாளர்கள் மிகவும் அவசியமாகும் . ஆனால் இந்த வகை மேலாளர்கள் இயல்பாகவே ஒரு நல்ல உள்கட்டமைப்பு உருவாவதை தடுத்திடுமாறு செயல்படுவார்கள்.

16. அதிரடி மேலாளர்கள் இந்தவகை மேலாளர்கள் இவர்களை தொடர்பு கொண்டு அடைவதற்காக ஒரு சிறிய மற்றும் தெளிவான வழியை ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் ஆவார்கள்.

17. புதிர்விளையாட்டுபோன்ற மேலாளர்கள் இந்த வகை மேலாளர்கள் எப்போதும் என்னசெய்வார்கள் எப்படி செயல்படுவார்கள் நாம் என்ன செய்தால் அதன்பின்விளைவாக அவரிடமிருந்த என்ன ஏற்படும் என எதிர்பார்க்கமுடியாது அதனால் இந்தவகை மேலாளர்களிடம் சிறிது கவனமுடன் இருப்பது நல்லது

18. எந்த செயலையும் தொடக்கத்திலிருந்தே செய்யவேண்டும் என எதிர்பார்த்திடும் மேலாளர் இந்த வகை மேலாளர் கள் எந்த செயலையும் மற்றவர்களை நம்பாமல் தம்முன்னிலையில் மட்டும் ஆரம்பித்திலிருந்து தொடங்கி செய்யவேண்டும் என உத்திரவிடுவார்கள்

19. எல்லா செயலிற்கும் மற்றவர்களை நம்மபி இருக்கும் மேலாளர் இந்த வகை மேலாளர் எந்தவொரு செயலையும் தானாகவே சுயமாக சிந்தித்து செயல்படாமல் மற்றவர்கள் கூறுவதை அப்படியே வேதவாக்காக கொண்டிருப்பார்கள்

20. தான் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடும் மேலாளர் இந்த வகை மேலாளர்கள் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவ்வப்போது நினைவுபடுத்தி கொண்டே இருந்தால் மட்டுமே அவற்றை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றிடுவார்கள்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...