வியாழன், 14 ஏப்ரல், 2016

நல்லமனமும் நல்ல செயலும் நல்லதையே நாடும்


ஒரு ஊரில் இரு சகோதரர்கள் இருந்தனர் அவர்களுள் ஒருவன் குடிகாரனாகவும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை எப்போதும் அடித்து உதைத்துகொண்டே இருப்பவனாகவும் வாழ்ந்துவந்தான். மற்றொருவன் அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்று அனைவராலும் விரும்பும் நல்ல குடும்பத்தலைவனாகவும் சமூகத்தில் அனைவராலும் விரும்பப்படும் மிகப்பெரிய வியாபாரியாகவும் மதிக்கதக்க நல்லதலைவனாகவும் விளங்கினான்.

அதனால் அந்த ஊரில் இருந்த ஒருசிலருக்கு ஒரே தாய்தகப்பனுக்கு பிறந்து ஒரேகுடும்ப சூழலில் வளர்ந்த இருசகோதரர்களும்எவ்வாறு வெவ்வேறு தன்மையுடன் மாறி யமைந்துவிட்டனர் என்ற மிகப்பெரிய சந்தேகம் வந்தது அதனை தீர்வு செய்வதற்காக முதல் சகோதரனிடம் “தம்பி!நீஏன் இவ்வாறு மகாகுடிகாரனாக மாறி உன்னுடைய வீட்டில் உள்ளவர்களை அடித்து உதைக்கின்றவனாக இருக்கின்றாய்?” என வினவியபோது, “எங்களுடைய தந்தை மகாகுடிகாரனாக இருந்தார் எப்போதும் வீட்டிற்கு வந்துவீட்டில் உள்ளவர்களை அடித்து உதைப்பவராக வாழ்ந்துவந்ததை நான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து பார்த்து வளர்ந்து வந்தேன் அதனால் நாமும் அவ்வாறே இருக்கலாம் எனமுடிவுசெய்து அவ்வாறே தற்போது இருந்துவருகின்றேன்.” என்றான்.

இரண்டாம் சகோதரனிடம் அவ்வாறே “தம்பி! ஒரே தாய்தகப்பனுக்கு பிறந்து ஒரேகுடும்ப சூழலில் வளர்ந்த உங்கள் இருவரில் நீமட்டும் எப்படி அனைவராலும் மதிக்கதக்க நலலதலைவனாகவும் மற்றொருவன் குடிகாரனாகவும் மாறிவிட்டீர்கள்?” என வினவியபோது, “ எங்களுடைய தந்தை மகாகுடிகாரனாக இருந்தார். எப்போதும் வீட்டிற்கு வந்துவீட்டில் உள்ளவர்களை அடித்து உதைப்பவராக வாழ்ந்துவந்ததை நான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து பார்த்து வளர்ந்து வந்தேன். அதனால், நாம் அவ்வாறில்லாமல் அனைவராலும் மதிக்கதக்க நல்லதலைவனாக வாழவேண்டும் என முடிவுசெய்து அதன்படி வாழ்ந்துவருகின்றேன்.” எனக்கூறினான்.

நாம் வாழும் சூழல் ஒன்றாக இருந்தாலும் அதனை அவரவர்கள் எவ்வாறு தங்களுக்கு முன்மாதிரியாக அதாவது அதற்கு எதிர்மறையாகவோ அல்லது நேராகவோ எடுத்து கொள்வதற்கேற்ப நல்லமனம் நல்லதையே நாடும் என்ற அடிப்படையில் அவரவர்களுடைய வாழ்க்கையும் மாறியமையும்.

சனி, 26 மார்ச், 2016

தவறான நம்பிக்கையை விடுத்துமுயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றிபெறலாம்


நெடுஞ்சாலையோரம் இருந்த கிராமப்பகுதியில் யானை ஒன்று சிறு கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது அந்த யானையும் நின்ற இடத்தில் இருந்தவாறு அசைந்து கொண்டேயிருந்தது அந்த வழியாக சென்ற வழிபோக்கன் ஒருவன் . இந்த யானையை பார்த்து மிக ஆச்சரியத்துடன் "என்னடா இது இவ்வளவு பெரிய யானையை மிகச்சிறிய கயிற்றினால் அதனுடைய ஒரேயொரு காலை மட்டும் கட்டியுள்ளனர் அந்த யானையும் அதனை கட்டிய சிறு கயிற்றினை அறுத்துகொண்டு செல்லாமல் அப்படியே நின்ற இடத்தில் இருந்தவாறு அசைந்து கொண்டேயிருக்கின்றது" என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவ்விடத்தில் இருந்த யானைப்பாகனிடம் "ஐயா இவ்வளவு பெரிய யானையை மிகவும் சிறிய கயிற்றினால் ஒரேயொரு காலை மட்டும் கட்டியுள்ளீர் இந்த யானையும் அந்த சிறிய கயிற்றினை அறுத்து கொண்டு செல்லாமல் அப்படியே நின்றுஅசைந்துகொண்டுமட்டும் உள்ளதே ஏன்?” என வினவினார் . " ஐயா இந்த யானை சிறிய குட்டியாக இருக்கும் போது இந்த சிறிய கயிற்றால் கட்டி பிடித்து அழைத்து கொண்டு செல்வதும் பின்னர் இந்த கட்டுத்தறியில் கொண்டுவந்த கட்டிவிடுவதும் வழக்கம் குட்டியானையால் அந்த கயிற்றினை அறுத்து செல்லமுடியாது அதே பழக்கத்தில் தற்போது யானை பெரியதாக வளர்ந்துவிட்டாலும் தன்னால் இந்த கயிற்றினை அறுத்து கொண்டு செல்லமுடியாது என நம்பிகொண்டுஅப்படியே நின்றஇடத்தில் அசைந்து கொண்டுமட்டும் உள்ளது"

அதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்வில் நாம் செய்திடும் செயலில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் அதனை தொடர்ந்து நம்மால் அந்த குறிப்பிட்ட செயலை செய்யமுடியாது செய்து வெற்றி கொள்ள முடியாது என நம்முடைய மனத்தில் தவறான நம்பிக்கை ஆழபதிந்துவிடும் அதன்பின்னர் நாமும் அந்த தவறான நம்பிக்கையிலிருந்து விடுபட்டு குறிப்பிட்ட செயலை செய்து வெற்றி கொள்வதற்காக மீண்டும் முயற்சி செய்யாமல் நம்மால் வெற்றிபெறமுடியாது என தவறாக நம்பிக்கொண்டு செயலை செய்திடாமல் விட்டுவிடுவோம் .

புறச்சூழல் என்னவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியில்,நம்முடைய செயலில் மட்டும் மிககவணமாக கருத்தூன்றி வெற்றிபெற முயற்சி செய்க


யானை ஒன்று ஆறு ஒன்றில் கட்டப்பட்டிருந்த ஒருபாளத்தின் வழியாக ஆற்றின் அடுத்த கரைக்கு செல்லவிரும்பி அந்த பாளத்தின் முகப்பில் நடக்க ஆரம்பித்தது. கொசுஒன்று அவ்வாறே ஆற்றின் அடுத்த கரைக்கு செல்ல விரும்பியது. ஆனால் அந்த கொசுவினால் அவ்வளவு தூரம் பறந்த செல்ல இயலவில்லை. அதனால் இந்த யானையின் முதுகில் கொசுவானது உட்கார்ந்து கொண்டு "யானையாரே நாமிருவரும் மிக அதிக எடையுடையவர்கள் அதனால் நாம் நடந்து செல்லும் போது இந்த ஆற்றின் பாளம் உடைந்துவிடப்போகின்றது அதனால் கவணமாக பார்த்து மெதுவாக நடந்து போங்கள்" என உத்திரவு இட்டது. யானை ஒன்றும் கண்டு கொள்ளாமல் நடந்துகொண்டிருந்தது.

யானையானது அந்த ஆற்றப்பாளத்தி நடுவில் நடந்து கொண்டிருந்தது. "ஐயோ இந்த ஆற்றில் எவ்வளவு வேகமாக வெள்ளம் சுழன்றோடு கின்றது யானையாரே பார்த்து மெதுவாக செல்லுங்கள்" என அந்த கொசுவானது உயிர்பயத்துடன் கத்தி உத்திரவிட்டது. அப்போதும் யானை எதையும் சட்டை செய்யாமல் நடந்துகொண்டிருந்தது.

ஒருவழியாக ஆற்றின் அடுத்த கரையை யானை சென்றடடைந்தது. உடன் கொசுவானது "யானையாரே பார்த்தாயா இவ்வளவு வேகமாக வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஆற்றின் அந்த கரையிலிருந்து இந்த கரைக்கு பாளத்தின் வழியாக பத்திரமாக நாமிருவரும் வந்து சேருவதற்காக நான் மிகச்சரியாக வழிகாட்டிவந்ததால் பிரச்சினை ஏதுமில்லாமல் நாமும் பாதுகாப்பாக வந்த சேர்ந்தோம். என்னை உன்னுடைய முதுகில் ஏற்றி வந்ததற்கு மிக்க நன்றி" எனக்கூறி விடைபெற்றது. அப்போதும் அந்த யானையானது அந்த ஆற்றின் மறுகரையில் எதனையும் சட்டை செய்திடாமல் தன்னுடைய இரையை தேட சென்றுகொண்டிருந்தது .

இதே போன்று நம்முடைய வாழ்வில் நாம் வாழும் இந்த சமூகத்தில் நம்முடைய செயலைபற்றியும் நம்முடைய பணியை பற்றியும் பலரும் பல்வேறுவிதமாக அவர்வர்கள் மனதில் தோன்றியவாறு தவறாக மதிப்பீடு செய்து தாங்கள்தான் நம்மை மிகச்சரியாக வழிநடத்தி செல்வதாகவும் நம்முடைய வெற்றிக்கு தங்களுடைய அறிவுரையே காரணம் என்றும் வெட்டிபந்தா காட்டிகொள்வார்கள். இவ்வாறான நிலையில் நாமும் அவ்வாறான எதனையும் கவணத்தில் கொள்ளாமல் நம்முடைய முயற்சியில்,நம்முடைய செயலில் மட்டும் மிககவணமாக கருத்தூன்றி வெற்றிபெற முயற்சி செய்க.

சனி, 19 மார்ச், 2016

நாமும் தனியானதொரு தனிஅரசியல்கட்சியை ஆரம்பிக்கலாம்


.வெளிநாட்டினை சுற்றிபார்ப்பதற்காக சுற்றுலாவாக இந்தியாவிலிருந்து ஒருவன் சென்றான் அங்கு உள்ள கடைகளில் விதவிதமான சிலைகள் இருந்ததை கண்ணுற்று அவைகளில் வெங்கலத்தால் ஆன எலியின் உருவச்சிலை பார்வையாளர்களை கவரும் வண்ணம் மிக அழகாக இருந்தது அதனை தன்னுடைய வீடடிற்கு வாங்கி செல்லலாம் என அதனுடைய விலை என்னவென அந்த கடைமுதலாளியிடம் விசாரித்தபோது அந்த வெங்கலத்தால் ஆன எலியின் உருவச்சிலையின் விலையானது பத்து டாலர் என்றும் ஆனால் அந்த எலிஉருவச்சிலை உருவாக்குவதற்கான கதைக்கான விலை மட்டும் நூறு டாலர் என்றும் கூறினார் உடன் எலியின் உருவச்சிலைக்கு மட்டும் பத்து டாலரை வழங்குவதாகவும் எலிஉருவத்தை உருவாக்குவதற்கான கதையை கடைகாரரே வைத்துகொள்ளும்படி கூறி அந்த எலிஉருவசிலையைமட்டும் வாங்கிகொண்டு கடைத்தெருவில் இறங்கி நடக்கதுவங்கினார் உடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த நகரத்தின் வீடுகளில் வாழ்ந்துவந்த எலிகள் அவரை பின்தொடர ஆரம்பித்தன அந்த நகரை தாண்டும்போது நகரில் இருந்த இலட்சகணக்கில் ஏராளமான எலிகள் அவரை பின்தொடர ஆரம்பித்தன அவர் வேகமாக நடந்தால் அந்த எலிகளும் வேகமாக அவரை பின்தொடர்ந்தன அவர் விரைவாக ஓடஆரம்பித்தால் பின்தொடரும் எலிகளும் அவரோடு வேகமாக ஓடிவர ஆரம்பித்தன. என்னடா இது ஒரு வெங்கலச்சிலை அழகாக இருக்கின்றதே என அதனை நாம் வாங்கி எடுத்து செல்லமுடிவு செய்தால் அவ்வாறு எடுத்து செல்ல முடியவில்லையே யென தவித்தார் சரி இந்த சூழலிலிருந்து தப்பிப்பதற்காக என்னசெய்யலாம் என தவித்தபோது சிறந்ததொரு ஆலோசனை அவருடைய மனதில் தோன்றியது அதன்படி அந்த நகருக்கு அருகில் கடல் இருந்ததால் கடற்கரைக்கு வேகமாக ஓடிச்சென்று கரையிலிருந்து அந்த எலியின் வெங்கல உருவச்சிலையை கடலில் தூக்கி எறிந்தார் உடன் அவரை பின்தொடர்ந்து ஓடிவந்த அனைத்து எலிகளும் கடலிற்குள் பாய்ந்து குதித்தன அப்பாடா நிம்மதியாகிவிட்டது என அவர் மட்டும் கடற்கரையிலிருந்து அந்த நகரிலிருந்த அதே கடைக்கு திரும்பி வந்து சேர்ந்தார் ஹாஹா பார்த்தீர்களா அந்த எலிஉருவச்சிலை உருவாக்கியதற்கான கதையையும் எங்களுடைய கடையிலிருந்து வாங்க வந்துவிட்டீர்கள் அல்லவா என அந்த கடைகாரர் கூறினார் அதெல்லாம் எனக்கு தேவையில்லை ஐயா எலி உருவச்சிலையை வாங்கி நான் அவஸ்தை பட்டது போதும் அதற்கு பதிலாக இந்திய அரசியல் தலைவர்களின் உருவச்சிலை ஏதேனுமிருந்தால் வாங்கலாம் என வந்தேன் உங்களுடைய கடையின் வாங்கபடும் உருவச்சிலையினால் ஏராளமான மக்கள் பின்பற்றுவார்கள் அல்லவா அதனால்நான் தனிஅரசியல்கட்சி ஆரம்பிக்கலாம் அல்லவா என அரசியல் கட்சியினுடை தலைவர்களின் உருவச்சிலை இருக்கின்றதாவென அந்த கடையில் தேடஆரம்பித்தார்

உண்மையான அன்புமட்டும் இருந்தால் எந்த செயலும் நடைபெறும்


ஒரு ஊரில் ஒரு எட்டுவயது பெண் இருந்தாள் அவளுக்கு இளைய சகோதரன் ஒருவன் இருந்தான் அவன் அதிக நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக இருந்தான் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்தால்தான் அவனுடைய உயரை காத்திடமுடியும் என்றும் அதற்காக பணம் அதிகம் செலவாகும்என்றும் தங்களிடம் அந்த அளவிற்கு பணம் இல்லையென்றும் ஏதாவது அதிசயம் நடந்தால் தான் அவனுடைய உயிரை காத்திடமுடியும் என்றும் அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலையுடன் விவாதித்துகொண்டிருந்தனர் இந்த செய்தியை அந்த பெண் கேட்டவுடன் அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டில் அவளுக்காக ஒதுக்கிய தன்னுடைய அறைக்கு சென்று அங்கிருந்த சிறுசிறு பெட்டிகளில் தன்னுடைய பெற்றோர்கள் அவ்வப்போது அவளுக்கு வழங்கும் தொகைகளை சேமித்து வைத்திருந்தை முழுவதையும் எண்ணிக்கை செய்து பார்த்தபோது நூற்று பத்துரூபாய்மட்டும் இருந்தது அந்த பெண் அந்த தொகைமுழுவதையும் எடுத்து கொண்டு நேராக அடுத்த தெருவில் இருந்த மருந்து விற்பணை செய்திடும் கடைக்கு சென் றாள் அங்கு ஏராளமான மக்கள் அந்த மருந்து கடைக்கு வந்து மருந்து களை வாங்கி சென்றுகொண்டிருந்தனர் அந்த கடையின் விற்பணையாளர் அந்த சிறு பெண்ணை திரும்பி கூட பார்க்கமுடியாத வாறு பரபரப்பாக தன்னுடைய பணியை செய்துகொண்டிருந்தார் அந்த பெண் அவருடைய கவணத்தை ஈர்ப்பதற்காக செருமினாள் உடன் அந்த விற்பணையாளர் என்னம்மா வேண்டும் என வினவியவுடன் ஐயா உங்களுடைய மருந்துகடையில் அதிசயம் இருக்கின்றதா என வினவினாள் உடன் அந்த மருந்து விற்பணையாள் தன்னுடைய மற்ற பணியை விட்டுவிட்டு அந்த பெண்ணை என்னவேண்டும் மீண்டும் சொல் என கோரினார் மருந்து வாங்கிட வந்தவர்களும் அந்த தெருவில் சென்ற நபர்களும் இதனை வேடிக்கை பார்க்கதுவங்கினர் ஐயா என்னுடைய தம்பி உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கின்றான் அவனுக்கு பெரிய அறுவைசிகிச்சை செய்தால் தான் உயிர்பிழைப்பானாம் அல்லது அதிசயம் கிடைத்தால்தான் உயிர் பிழைப்பான் எனஎங்களுடைய பெற்றோர்கள் விவாதித்தனர் அதனால் அந்த அதிசயத்தை நான் உங்களுடைய கடையில் வாங்கி செல்லவந்தேன் என விவரமாக அந்த பெண் கூறினாள் உடன் அந்த மருந்த கடை விற்பணையாளர் உண்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என கோரியபோது உடன் இதோ என்னுடைய முழு சேமிப்பு தொகையான ரூபாய் நூற்று பத்து மட்டும் உள்ளது என கைகளில் காட்டினாள் அந்த சமயத்தில் அங்கு வந்த மருத்துவர் உடன் அந்த பெண்ணிடம் உங்களுடைய வீட்டினை காண்பி நான் வந்த உன்னுடைய தம்பியை பார்த்து அந்த அதிசயத்தை தருகின்றேன் எனக்கூறினார் உடன் அவர்களுடைய வீட்டிற்கு அந்த பெண் அந்த மருத்துவரை அழைத்து சென்றாள் அதன்பின்னர் அந்த மருத்துவர் அந்த பெண்ணின் உண்மையான அன்பிற்காக தொகை எதுவும் பெற்றுகொள்ளாமல் அவளுடைய தம்பிக்கு அறுவைசிகிச்சை செய்து அவளுடைய தம்பியின் உயிரை காத்தார் உண்மையான அன்புமட்டும் இருந்தால் எந்த செயலும் நடைபெறும் எனஇதன்மூலம் அறிந்துகொள்க

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

கடையின் விற்பனையாளர்கள் கடையில் இருந்து பொருட்களை விற்பனை செய்வதில் மட்டும் நோக்கமாக ஆனால் உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்யமாட்டார்கள்


மனிதர்கள் ஆசையுடன் வளர்க்கும் பறவைகளையும் மிருகங்களையும் விற்பதற்கான கடை ஒன்று இருந்தது. நான் பணிபுரிவதற்காக தனியாக வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது பணிநேரம் போக நான் தங்கியிருக்கும் வீட்டில் தனியாக இருப்பது வெறுமையாக இருந்தது. அதனை தவிர்க்கும் பொருட்டு இந்த கடையில் ஏதாவதொரு பறவை அல்லது மிருகத்தை வீட்டிற்கு வாங்கி சென்று வளர்க்கலாம் என முடிவுசெய்து அந்த கடைமுதலாளியை எதனை வாங்கினால் எனக்கு நன்றாக இருக்கும் என வினவியபோது ஐயா பேசும் கிளியை வாங்கிசெல்லுங்கள் பணிமுடிந்து வீட்டிற்கு வந்தபின்னர் அதனுடன் பேசிகொண்டிருந்தால் பொழுதுபோவதே தெரியாது என பேசும் கிளியையும் அதனை வளர்ப்பதற்கான கூண்டினையும் அவருக்கு விற்பனைசெய்தார் வீட்டிற்கு அதனை வாங்கிவந்து அதற்கு பால் பழம் என வழங்கி வளர்த்துவந்தேன் ஆனால் அந்த கிளி வாய்திறந்து பேசவில்லை அதனால் அந்த கடைமுதலாளியிடம் சென்று கிளி பேசவேயில்லையே என்ன செய்வது என வினவியபோது அப்படியா ஐயா அதற்கு ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி வாங்கி கூண்டில் பொருத்தினால் அதில் தன்னுடைய முகத்தை பார்த்து பேச ஆரம்பிக்கும் என கண்ணாடியை விற்பனைசெய்தார் சிறிதநாள் கழித்து மீண்டும் அதே கடை முதலாளியிடம் சென்று இன்னும் அந்த கிளி பேசவேயில்லை என புகார் கூறியபோது அந்த கிளி ஏறி இறங்கி விளையாடுவதற்கு ஏனிபோன்ற கருவியை விற்பனைசெய்தார் இதனை கொண்டுசென்று அந்த கூண்டில் பொருத்தினால் இதில் ஏறிஇறங்கி பேசும் கிளிவிளையாடும் அந்த மகிழ்ச்சியில் பேச ஆரம்பித்துவிடும் என்ற ஆலோசனையை கூறினார் அவ்வாறே ஏறி இறங்கி விளையாடுவதற்கான ஏனிபொம்மையை வாங்கி கிளிவளர்க்கும் கூண்டில் பொருத்தினேன் அப்போதும் பேசவில்லை இவ்வாறு ஒவ்வொருமுறையும் தன்னுடைய கடையில் இருந்து பொருட்களை விற்பனை செய்வதில் மட்டும் நோக்கமாக இருந்தாரே யொழிய உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்யவில்லை சிறிதுநாள் கழித்து அதே கடைமுதலாளியை சந்தித்தபோது என்ன ஐயா கிளி பேசஆரம்பித்துவிட்டதா கூடுதலாக வேறு ஏதோவொரு பொருளை வாங்கி செல்லுமாறு அந்த கடைகார்ர் கூறினார் அதனை தொடர்ந்து நான் உங்களிடம் வாங்கிய கிளி இறந்து விட்டது என க்கூறினேன் அடடா ஐயோபாவம் அந்த பேசும்கிளி ஒருவார்த்தையாவது பேசியதா என்ன பேசியது என கடைகாரர் வினவினார் அந்த கிளி இறப்பதற்கு முன் பறவை உருவாவதற்கான முட்டையமட்டும் அந்த கடையில் விற்பணைசெய்யமாட்டார்கள் ஆனால் தேவையில்லாத மற்ற அனைத்து பொருட்களையும் விற்பணை செய்வார்கள் அதனால் அந்த கடையை நம்பாதே என்ற பேசும் கிளி பேசியதாக கூறினேன்.

சனி, 6 பிப்ரவரி, 2016

எந்தவொரு செயலையும் நாமாக தவறுதலாக யூகித்து செயல்படக்கூடாது நடப்பு நிகழ்வுகளை சரியாக தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுக


பிரபல செய்திநிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் சமீபத்திய சென்னையின் வெள்ள பாதிப்புகளை செய்திபடமாக படப்பிடிப்பு செய்து வெளியிடவிரும்பினார் அதனால் விமான நிலையத்தில் உடன் புறப்படதயாராக இருந்த ஏதோவொருவிமானத்தில் ஏறி நான் ஏறிவிட்டேன் விமானத்தை புறப்படசெய்யலாம் என கூறினார்

உடன் விமானமானது ஓடுபாதையில் ஓடி மேலே பறக்க ஆரம்பித்தது. அப்போது இந்த செய்தியாளர் விமானியிடம் சென்று மேகம்பறக்கும் அளவிற்கு கீழ்பகுதியில் இந்த விமானத்தை சென்னையை சுற்றி வருமாறு பறக்க செய்க எனக்கூறினார்

அதற்கு அந்த விமானி ஏன் அவ்வாறு செய்யவேண்டும் என வினவியபோது உனக்கு என்னை பற்றி தெரியுமா நான்தான் எனும் மிகப்பிரபலமான செய்தி பத்திரிகையின் மிகமுக்கிய நிருபர் சென்னையின் மழைவெள்ள பாதிப்பை நான் படப்பிடிப்பு செய்து செய்தியாக வெளியிட விருக்கின்றேன் என பதில் கூறியபோது

அப்படியா ஐயா ரொம்பநல்லதுங்க ஆனால் இந்த விமானத்தை பொருத்தவரையில் தற்போது நான்தான் மிகமுக்கிய நபர் இந்த விமானத்தை எப்படி பறக்கசெய்யவேண்டும் என எனக்குமட்டுமே தெரியும் அதனால் மிகமோசமான வானிலையாக இருப்பதால் தற்போது அவ்வாறு தாழ்வாக பறக்க செய்யமுடியாது அதைவிட இந்த விமானம் பெங்களூர் செல்கின்றது உங்களுக்காக காத்திருப்பது வேறு விமானமாக இருக்கும் தவறுதலாக இந்த விமானத்தில் ஏறிவிட்டீர்கள் பெங்களூர் சென்று மீண்டும் சென்னைக்கு வந்து உங்கள் பணியை தொடர்க இப்போது விமானம் பெங்களூர் நோக்கி போய் கொண்டிருக்கின்றது என கூறி விமானி அவருடைய வழக்கமான பணியை செய்யஆரம்பித்தார்

எந்தவொரு செயலையும் நாமாக தவறுதலாக யூகித்து செயல்படக்கூடாது நடப்பு நிகழ்வுகளை சரியாக தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுக.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...