ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

எதிரில் தெரியும் பலாப்பழத்தைவிட கையிலிருக்கும் சிறிய கலாப்பழமே சிறந்தது


அது ஒரு மிகவும் வெம்மைமிகுந்த கோடைக்காலநாளாகும் காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று மிகவும் பசியோடு உணவு எதுவும் கிடைக்காமல் உணவிற்காக அங்கிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்து ஆனாலும் ஒரு சிறிய முயலைகூட தன்னுடைய உணவிற்காகஅந்த சிங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை அதற்குமேல் அந்த வெயிலில் இரைதேடமுடியாதுஎன சோர்வுற்று ஒருமரத்தின் நிழலில் இளைப்பாறி சிறிதுநேரம் ஓய்வெடுத்த-பின்னர் தன்னுடைய உணவிற்கானவேட்டையை தொடரலாம் என முடிவு-செய்து அந்த மரத்தின் கீழ் வந்தது அப்போது வெயிலிற்காக சிறிதுநேரம் ஓய்வெடுக்கலாம்என சிறியமுயல் ஒன்று அதே மரத்தில்ஓய்வெடுத்து கொண்டிருந்தது உடன் அந்த சிறியமுயலை சிங்கமானது தன்னுடைய வாயால் பற்றி உண்ணலாம் எனமுயலும் போது, மான் ஒன்று வெயிலிற்காக அதே மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுக்கலாம் என வந்து கொண்டி-ருந்ததை கண்டது அதனால் சிங்கமானத தன்னுடைய பிடியில் இருந்த முயல் மிகவும் சிறியது நம்முடைய பசிக்கு சோளப்பொறி போன்று பத்தாது அதனால் இந்த சிறியமுயலை வாயில் வைத் துகொண்டு பெரிய அந்தமானை பிடித்து உண்ண-முடியாது என தன்னுடைய வாயால் கவ்வியிருந்த சிறியமுயலை விட்டிட்டு மானை பிடிப்பதற்காக தாவியது மரத்தின் நிழலில் சிங்கம் இருந்ததை ஏற்கனவே பார்த்து விட்ட மானானது தற்போது உயிர்பிழைத்தால் போதும் நிழலில் ஒதுங்கி ஓய்வெடுப்பதை பின்னர் பார்த்து கொள்ளலாம் என சிட்டாக ஒடியது சிங்கமானது வெகுதொலைவு வரை அந்த மானை தூரத்தி சென்றாலும் சிங்கத்தால் அந்த மானை பிடிக்கமுடியவில்லை அதனால் அந்த சிங்கமானது மானையும் பிடிக்கமுடியாமல் கையிலிருந்த சிறியமுயலையும் விட்டுவிட்டோமே என சோர்வுற்ற அருகிலிருந்த மரத்தின் நிழலில் பசியால் அதற்குமேல் ஓடமுடியாமல் படுத்துவிட்டது எதிரில் தெரியும் பலாப்பழத்தைவிட கையிலிருக்கும் சிறிய கலாப்பழமே சிறந்தது அதிக மதிப்புள்ளதுஎன அறிந்து கொள்க

சனி, 24 மார்ச், 2018

பெற்றோர்களுடன் ஒத்துவாழ முயன்றிடுவோம்


ஒரு நாள் என்னுடைய பெற்றோர் கேவலம் ஒரு இருசக்கர வாகணத்தை (bike)கூட எனக்கு வாங்கிதரக்கூடாது என்றும் நான் ஒரு மருத்துவராகவோ அல்லது ஒரு பொறியாள-ராகவோ ஆவதற்கு கனவு காணகூடாது எனக்கூறுவதற்கு ம் அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது இவ்வாறான கட்டுபாடுகளுடன் இந்த வீட்டில் இனி ஒரு நிமிடம் கூட வாழமுடியாது அதனால் இப்போதே இந்த வீட்டை விட்டு வெளியேறுவதுதான் சரியான செயலாகும் என்றும் , நான் ஒரு பெரிய மனிதனாக ஆகாதவரை இந்த வீட்டிற்கே திரும்புவதில்லை என்றும் முடிவுசெய்து , மிகவும் கோபமாக எங்களுடைய வீட்டிலிருந்து வெளியேறினேன் கோபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியேற முடிவுசெய்திடும்போது செலவிற்கு பணம் வேண்டுமே அதனால் என்னுடைய தந்தையின் பணப்பையை திருடி பாக்கெட்டில் வைத்து கொண்டுதான் வெளியேறினேன் அவ்வாறு கோபமாக நான் வீட்டைவிட்டு வெளியேறும்போது கவணிக்காமல்என்னுடைய தந்தையின் முழுக்காலணிகளை என்னுடைய கால்களில் அணிந்து கொண்டிருப்பதை உணரவில்லை. பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தேன் வேகமாக நடக்கும்போது காலில் தரையிலிருந்த கற்கள் குத்தி வலி ஏற்படுத்தி கொண்டிருந்தன பேருந்துநிலையம் வந்து சேர்ந்தபோது பேருந்து எதுவும்அப்போது இல்லை அதனால் காலில் ஏன்கற்கள்குத்துகின்றன என குனிந்து பார்த்தபோது தந்தையின் முழுக்காலணி கிழிந்திருந்ததால் தரையிலிருந்த கற்கள் என்னுடைய காலை குத்தி பதம்பார்த்து வந்து கொண்டிருந்தன , என்ன செய்வது என்று தெரியாமல், நான் என் அப்பாவின் பணப்பையை பார்க்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு ஒரு மடிக்கணினி வாங்கியதற்கான பட்டியலும் அதனை வாங்குவதற்கான கடன் உறுதி ஆவணமும் இருந்தன அதிர்ச்சியுடன் அதனை பார்த்து கொண்டிருந்தேன் மேலும் அதனோடு மற்றொரு குறிப்புத்தாளும் இருந்தது அது என்னுடைய தந்தையின் அலுவலக மேலாளரிடமிருந்தான கடிதமாகும் அதில் எப்போதும் நல்லஆடையை அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் காலில் கிழியாத நல்ல முழுக்காலணியை அணிந்து வருமாறும் கோரியிருந்தது அதனை கண்ணுற்றதும் எனக்கு மேலும் அதிர்ச்சியாகிவிட்டது அந்நிலையில் என்னுடைய தாயும் அவ்வப்போது என்னுடைய தந்தையிடம் புதிய ஆடைகளை வாங்கி அணியுமாறும் புதிய முழுக்காலணியை வாங்கி அணிந்து அலுவலகத்திற்கு செல்லுமாறும் நினைவூட்டி கொண்டேயிருப்பது என்னுடைய நினைவிற்கு வந்தது என்னுடைய தந்தையோ தற்போதைய தன்னுடைய மாதஊதியத்தில் வீட்டின் அன்றாட செலவிற்கே சமாளிக்கமுடியாமல் தத்தளித்து நம்முடைய மகனின் படிப்பிற்காக அவ்வப்போது கடன் வாங்கி சரிசெய்து வருகின்றோம் அதனால் இன்னும் ஆறுமாதம் கழித்து அவ்வாறு செய்கின்றேன் என தன்னுடைய ஆற்றாமையால் சமாளிப்பதும் என்னுடைய நினைவில் வந்து என்னை அலைக்கழித்தது அதுமட்டுமல்லாது அவருடைய ஸ்கூட்டரை கொடுத்து அதற்கு பதிலாக நான்கோரியவாறு பைக்காக மாற்றி கொள்வதற்கான கடிதம் ஒன்றும் இருந்ததை கண்டேன் அதனால் மனவருத்தம் அதிகமாகி மனம் திருந்தி என்னுடைய பெற்றோரை கண்டு மன்னிப்பு கோரிட வீட்டைவிட்டு வெளியேறிய வேகத்தைவிட வேகமாக வீட்டிற்கு திரும்பி ஓடிவந்தேன் , நான் வீட்டை விட்டு வெளியேறியபோது, என்னுடைய தந்தையின் ஸ்கூட்டர் வாயிலில் நின்று கொண்டிருந்தது ஆனால் தற்போது அது அங்கு இல்லை. அதனால் மிகவும் அதிர்ச்சியாகி எனது தந்தை தன்னுடைய ஸ்கூட்டரை கொடுத்துவிட்டு எனக்கு பைக் வாங்குவதற்கு சென்ற இடத்திற்கு வேகமாக ஓடிசென்றேன் எனக்கு துக்கம் கட்டுபடுத்தமுடியாமல் என் அப்பாவைப் பார்த்து, நான் அவரை இறுக்கமாக கட்டி அணைத்து, "அப்பா எனக்கு பைக் தேவையில்லை" என சத்தமாக அழுது கொண்டே கூறினேன் இனி உங்களை இவ்வாறு தொந்திரவுசெய்திடமாட்டேன் உங்களுடைய ஸ்கூட்டருடன் நாம் வீடடிற்கு திரும்பி செல்வோம் என வற்புறத்தி அழைத்து கொண்டு திரும்பினேன் ஆம் நம்முடைய பெற்றோர்கள் எந்தவொரு வலி, துன்பம் போன்ற எதுவும் நமக்கு ஏற்படாமல் நம்முடைய வளர்ச்சிக்காகவும் மகிழ்ச்சியான வாழ்விற்காகவும் தங்களுடைய தேவைகளை தியாகம் செய்து மெழுகு வர்த்தி போன்று தங்களை வருத்திகொண்டு வாழ்ந்துவருவதை உணர்ந்து அவர்களுடன் ஒத்து வாழ முடிவுசெய்திடுவோம் வாருங்கள்

செவ்வாய், 13 மார்ச், 2018

பதிலுக்குபதில்


விவசாயி ஒருவர் தன்னுடைய வயலில் தர்பூசணிகளை பயிரிட்டிருந்தார் . அவர் தன்னுடைய வயலில் பயிரிட்ட அந்த தர்பூசனியை நன்றாக பராமரித்து செய்துவந்தார், அதனால் அவருடைய வயல் முழுவதும் தர்பூசனி காய்த்து குலுங்கின ஆனால் சில உள்ளூர் சிறுவர்கள் அந்த தர்பூசனிகளை அவர் இல்லாதபோது அவருடைய வயலில் திருட்டுதனமாக தர்பூசணிகளை அறுவடைசெய்து தின்று காலிசெய்து வந்தனர் அதனால் அந்த விவசாயி மிகவும் அவதிப்பட்டார், அதனை தொடர்ந்த இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்து அல்லது இந்த செயலை தவிர்ப்பதற்கு என்ன மாற்றுவழி செய்வதுஎன தவித்து சோர்வுற்றார் கடைசியாக புத்திசாலிதனமான சிந்தனை ஒன்று அவருக்கு தோன்றியது உடன் அந்த திட்டத்தை செயல்படுத்திட முடிவுசெய்தார் அதாவது அவருடைய வயலில் , "எச்சரிக்கை! இந்த வயலில் உள்ள தர்பூசனிகளில் ஒன்றுமட்டும் சயனைடு என்ற விசம் உட்செலுத்தப்பட்டது" என்றஎச்சரிக்கை செய்தியை வைத்து சென்றார் அடுத்தநாள் அந்த தற்பூசனி விளைந்திருந்த வயலிற்கு வந்த சிறுவர்கள் இந்த எச்சரிக்கை செய்தியை படித்தவுடன் "ஐய்யய்யோ! நமக்குஇந்ததர்பூசனி பழமே வேண்டாம்"என ஓடிவிட்டனர் இருந்தாலும் மீண்டும் அந்த வயலிற்கு திரும்பிவந்து இந்த விவசாயியானவர் நாம் இந்த தற்பூசனி பழத்தை சாப்பிடக்கூடாது என நம்மை பயமுறுத்துவதற்கு இவ்வாறு செய்துள்ளார் அதனால் நாமும் அந்த விவசாயியால் இதனை பயன்படுத்தமுடியாதவாறு செய்திடுவோம் என முடிவுசெய்துஅதற்கு பதிலடியாக "எச்சரிக்கை! இந்த வயலில் உள்ள தர்பூசனிகளில் ஒன்றுமட்டுமன்று இரண்டுமட்டும் சயனைடு என்ற விசம் உட்செலுத்தப்பட்டது" என்ற எச்சரிக்கை செய்தியை எழுதிவிட்டு சென்றுவிட்டனர் அதற்கடுத்த நாள் விவசாயி தன்னுடைய வயலை வெகு தூரத்தில் இருந்து பார்த்த போது தன்னுடைய வயலில் அனைத்து தர்பூசனிகளும் பறிக்காமல் பத்திரமாக இருப்பதை கண்ணுற்று மனநிம்மதியுடன் வயலிற்கு வந்து சேர்ந்தார்ஆனால் அந்த சிறுவர்கள் வைத்த எச்சரிக்கை செய்தியை பார்த்தபோது திகைத்து மனசோர்வுற்ற தலையில் கைவைத்து கொண்டு வயலில்அமர்ந்து விட்டார்

புதன், 7 மார்ச், 2018

மற்றவர்களை எப்போதும் கண்ணியமாகவும் மற்றவர்களுடைய பார்வையில் இருந்து எந்தவொரு செயலை பார்க்கவும் கற்றுக்கொள்க


முன்னொரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில் தன்னுடைய கண்களால் வெளிஉலகை காண முடியாத ஒரு மனிதன் வாழ்ந்து வாழ்ந்தார். அவர் கண் பார்வையற்ற குருடனாக இருந்தார். ஆனாலும், இரவில் அவர் வெளியே செல்லும் போதெல்லாம் தன்னுடைய கையில் ஒளிரும் விளக்கு ஒன்றை எடுத்துச் செல்வது வழக்கமாகும். அவ்வாறு ஒருநாள் இரவு அவர் வெளியே சென்று இரவு உணவு உண்ட பிறகு தன்னுடைய கையில் ஒளிரும் விளக்கு டன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இளைஞர்கள் குழு ஒன்று சிரித்து பேசிகொண்டு எதிரில் வந்தது. இவர் கண்பார்வையில்லாத குருடனாயிருந்தாலும், பிரகாசிக்கிற விளக்கை கையில் ஏந்திக்கொண்டு வருவதை கண்ணுற்று அவரைப் பற்றி கிண்டலும் கேலியும் கருத்துத் தெரிவித்து கொண்டிருந்தனர் அவர்களுள் ஒருவன் , "ஐயா! நீங்கள் கண்பார்வையில்லாத குருடனாக இருக்கின்றீர்கள், உங்களால் எதையும் பார்க்க முடியாது! ஆயினும் ஏன் நீங்கள் கையில் ஒளிரும் விளக்கை ஏந்தி கொண்டு நடக்கின்றீர்கள்? " என அவரிடம் வினவினான் உடன் கண்பார்வையற்ற அம் மனிதர், "ஆமாம் தம்பி, துரதிர்ஷ்டவசமாக, நான் குருடனாக இருக்கிறேன், நான் எதையும் என்னுடைய கண்களால் பார்க்க முடியாது என்பது சரிதான் ஆனால் இந்த இரவுநேரத்தில் கண்பார்வையுடைய உங்களை போன்றவர்கள் இந்த ஒளி விளக்கு என்னுடைய கைகளில் இல்லையெனில் என்மீது வந்து மோதி கீழே நான்விழாமல் நடந்து செல்லவேண்டாமா அதனால் தான் "என்றார். உடன் அந்த இளைஞர்கள் குழுவானது வெட்கத்துடன் தங்களுடைய தவறினை உணர்ந்தது அவரிடம் தாங்கள் தவறாக அவரை பார்த்து கிண்டலும் கேலியமாக பேசியதை மன்னிக்குமாறு தங்களுடைய நடத்தைக்கு மன்னிப்பு கோரியுது. ஆம் மற்றவர்களை எப்போதும் கண்ணியமாகவும் மற்றவர்களுடைய பார்வையில் இருந்து எந்தவொரு செயலை பார்க்கவும் கற்றுக்கொள்க

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

நமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியையும் சேர்த்து முடித்தால் அதற்கான பரிசு கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்


கடலில் இயங்கிடும் படகிற்கு வண்ணம் பூசுமாறு ஒரு வண்ணம் பூசுபவரிடம் படகின் சொந்தகாரர் கோரிவிட்டுசென்றார் அந்த படகிற்கு வண்ணம் பூசி கொண்டிருந்தபோது அந்த படகின் அடிப்பகுதியில் சிறு ஓட்டை ஒன்று இருந்ததை கண்டு அதனையும் அடைத்து வண்ணம் பூசும் பணியை முடித்தார் படகின் சொந்தகாரர் வந்து வண்ணப்பூச்சினை பார்த்து திருப்தியுற்று வண்ணம் பூசுவதற்கான தொகையை அவருக்கு வழங்கிவிட்டு தன்னுடைய படகினை எடுத்து சென்றார்

மறுநாள் அதே படகின் சொந்தகாரர் பெரிய அளவு தொகையுடன் மீண்டும் அந்த வண்ணம் பூசுபவரிடம் கொண்டுவந்து கொடுத்தார் வண்ணம் பூசுபவர் உங்களுடைய படகில் வண்ணம் பூசுவதற்கான தொகையைதான நேற்றே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே நானும் பெற்றுகொண்டேனே இந்த பெருந்தொகை எனக்கு வேண்டாம் என மறுத்தளித்தார்

உடன் படகின் சொந்தகாரர் இந்த தொகை படகில் வண்ணம் பூசியதற்காக அன்று நான் நேற்று படகினை உங்களிடம் ஒப்படைக்கும்போது அதில் ஒரு சிறு ஓட்டை இருந்தது அதனை நான் கூறாமலேயே நீங்களாகவே அடைத்துசரிசெய்துள்ளீர்கள் அதன்பின்னரே என்னுடைய படகிற்கு வண்ணம் பூசியுள்ளீர் அந்த படகினை நான் எடுத்து சென்று அதில்உள்ளஓட்டையை பின்னர் அடைத்து சரிசெய்தபின்னர் எடுத்துசெல்லலாம் என இருந்தபோது அவசர வேலை ஒன்று குறுக்கிட்டது சரிஇந்த அவசர வேலையை முடித்தபின்னர் படகின் ஓட்டையை அடைத்து சரிசெய்திடலாம் என வெளியேசென்றுவிட்டேன் அந்த நேரத்தில் எங்களுடைய மகன் இந்த படகினை எடுத்து சென்றுவிட்டான் ஓட்டைபடகினை எங்களுடைய மகன் எடுத்து சென்றுவிட்டானேஎன்ன நடக்கபோகின்றதோ என நான் பதைபதைப்புடன் தவித்துகொண்டிருக்கும் போது எங்களுடைய மகன் மிகபத்திரமாக திரும்பிவிட்டான் நான் ஓடிசென்று என்னுடைய படகினைை பார்த்தபோது அந்த ஓட்டையை நீங்கள் அடைத்து சரிசெய்துவண்ணம் பூசியுள்ளீர்கள் எங்களுடைய மகனின் உயிரை காத்துள்ளீர்கள் அதற்கான பரிசு இந்த தொகைஎனவிளக்கம் அளித்தார்

நமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியையும் சேர்த்து முடித்தால் அதற்கான பரிசு கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் என்பது திண்ணம்

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

உயிர் பயம் மனிதனை எதையும் ஏற்கசெய்துவிடும்


ஒரு தொழிலகத்தில் பணிபுரியும்தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தினர் அதற்காக தங்களுடைய விருப்பத்தை அதற்கான ஒப்பந்த படிவத்தை இளவரசன் என்ற தொழிலாளி தவிர மற்ற அனைவரும் கையெழுத்திட்டு நிருவாகத்திடம் சமர்ப்பித்தனர் அவனுடைய சகதொழிலாளிகள் அவனுடைய மேற்பார்வையாளர் ஆகிய அனைவரும் அந்த ஓய்வூதிய ஒப்பந்தத்தில் இளவரசனை கையெழுத்திட்டு நிருவாகத்திடம் சமர்ப்பிக்குமாறு கோரியும் இளவரசன் மட்டும் கையெழுத்திட மறுத்துவந்தார் இந்நிலையில் அந்நிறுவனத்தின் முதலாளி அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து தம்பி இளவரசன் நீ கையெழுத்திடுவதற்கான ஓய்வூதிய ஒப்பந்த பத்திரம் மேஜைமேல் உள்ளது பேனாவும் அருகில் உள்ளது உனக்கு இரு வாய்ப்புகள் தரப்படுகின்றன அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அல்லது நீ நாளையிலிருந்து வேலைக்கு வரமுடியாமல்உன்னை பணிநிறுத்தம் செய்வது ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க என கூறியதும் உடனடியாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டான் இளவரசன் ஏன்தம்பி உன்னுடைய சக தொழிலாளர்களும் உன்னுடைய மேற்பார்வையாளரும் கோரியபோது ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவந்தாய் ஆனால் தற்போதுமட்டும் மறுபேச்சில்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டாயே என வினவியபோது மற்றவர்கள் யாரும் இந்த திட்டத்தின் முழுவிவரங்களை கூறவில்லை அதனால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்துவந்தேன் இப்போதுதான் இதன்முழுநன்மையை நீங்கள் கூறினீர்கள் அதனால் அதனை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டேன் என பதிலிறுத்தான் இளவரசன்

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

புறங்கூறுதலை பொருட்டாக எடுத்து செயல்படவேண்டாம்


சீனநாட்டின் ஒரு கிராமத்தில் வயதான மனிதனும் அவனுடைய மகனும் வாழ்ந்துவந்தனர் அவர்களுக்கு சிறிதளவுநிலமும் அந்த நிலத்தின் விவசாய பணிக்காக ஒரு குதிரையும் தங்குவதற்கு ஒரு குடிசையும் மட்டுமேஅவர்களின் சொத்தாக இருந்துவந்தனஇந்நிலையில் அவர்களிடம் இருந்த அந்த ஒருகுதிரையும் ஓடிவிட்டது அதனால்காடுகழனிகளில்விவசாய பணிசெய்வதற்கு குதிரை இல்லாமல் என்னசெய்வது எனஅவ்விருவரும்தங்களின் வறுமையினால் வேறு குதிரையும்வாங்கமுடியவில்லையேஎன்ன செய்வதுஎன தவித்துகொண்டிருந்தனர் இதையறிந்த அவ்வூரில் வாழ்ந்துவந்த மற்றஅனைத்து கிராமமக்களும் அவருடையவீட்டிற்கு வந்து கைவசம் இருந்த ஒரு குதிரையும் ஓடிவிட்டதாமேஅடடா என்ன செய்வீர்கள்பாவம் எனதுக்கம் விசாரித்தனர் இருந்தபோதிலும் அந்த குடியானவன் தங்களுடைய துக்கத்தை அவர்கள்அனைரும் விசாரி்க்க வந்ததால் அனைவருக்கும் நன்றி கூறி அனுப்பிவைத்தார் சிலநாட்கள் கழித்தபின்னர் அந்த விவசாயியின் ஓடிபோன குதிரையானது துனைக்கு குதிரைக்குட்டியுடன்கூடிய பெண்குதிரை ஒன்றுடன் திரும்பவந்து சேர்ந்தது அதனால் அவருக்கு காடுகழனிகளின் பணியைமுடிப்பதற்கான இரண்டு குதிரைகளாகவும்மூன்றாவதாக புதிய குதிரையும் அவருக்குபரிசாக கிடைத்தது இதை கேள்வி்பட்ட அந்த கிராமத்தவரகள்அனைவரும் அவரிடம் வந்து அதிர்ஷ்டம் ஐயா உங்களுக்கு குட்டியுடன் கூடிய புதிய பெண்குதிரையுடன் உங்களுடைய குதிரை திரும்பி வந்துவிட்டதாமேஇனி உங்களைபிடிக்கவேமுடியாதுஎனஅனைவரும் அவரிடம் வந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் அப்போதும் அவ்வனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் அவர் இந்நிலையில் அந்த விவசாயியின் மகன் அவர்களிடம் இருந்த இருகுதிரைகளையும் கொண்டுதங்களுடைய நிலத்தில் விவசாய பணியைசெய்யலாம் என துவங்கிடும்போது புதியதாக வந்த குதிரை அவ்விவசாயியின் மகனை காலால் எட்டி உதைத்து அவருடைய மகனின் கால் நடக்கமுடியாதவாறு உடைந்துவிட்டது அதனால் அந்த விவசாயியானவர் இவ்வாறான மகனுக்கு எவ்வாறு மருத்தும் செய்வது எவ்வாறு வயிறாற சாப்பிடுவது எவ்வாறு வாழ்வது என மிகமனவருத்ததுடன் இருந்தார் அதனை தொடர்ந்து அந்த கிராமத்து மக்கள் அனைவரும் அவரிடம் வந்து அடடா உங்களுடைய வயதான காலத்தில்உறுதுனையாக இருக்கின்ற உங்களுடைய மகனின் காலை புதியதாக வந்த குதிரை உடைத்துவிட்டதாமே பாவம் என்ன செய்யபோகின்றீர் என துக்கம் விசாரித்து சென்றனர் இருந்தபோதிலும் அவர் மனமுடையாமல் அனைவருக்கும் நன்றி கூறிஅனுப்பிவைத்தார் இந்நிலையில் அருகிலிருந்த ஜப்பான் நாடு இவர்களின் சீன நாட்டுடன் கடுமையான போர் ஒன்றை தொடுத்தது அதனால் சீன நாட்டு அரசர் நாட்டில் உள்ளஅனைத்து குடும்பங்களிலும் உள்ள இளைஞர்களை போரிடுவதற்காக கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும் என உத்திரவிட்டதை தொடர்ந்து அந்த கிராமத்தில் அந்தவயதானவிவசாயின் மகனுடைய கால்நடக்கமுடியாதவாறு உடைந்து விட்டதால்அவருடைய மகனைதவிர மற்ற அனைத்து இளைஞர்களும் போர்படையில் சேர்க்கபட்டு ஜப்பான்நாட்டிற்கு எதிரான போரில்கலந்து கொண்டனர் ஆனால் ஒருவரும் திரும்பிவரவேஇல்லை சிறிது நாட்களில் போரும் முடிவுக்கு வந்தது அந்த விவசாயியின் மகனுடைய கால் சரியாகிவிட்டது தற்போது அந்த விவசாயியின் மகன் தங்களுடையநிலத்தில் அந்த குதிரைகளை கொண்டு விவசாய பணியை நன்கு செய்தான் போதுமான வருமானத்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...