சனி, 15 ஆகஸ்ட், 2020

தேர்விற்கான காலியான கேள்வித்தாள்

 
ஒரு நாள் ஒரு பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்து தனது மாணவர்களிடம் ஒரு வித்தியாசமான தேர்வுநடத்த தயாரானார். மாணவர்கள் அனைவரும் அந்த தேர்வு எழுதுவதற்கு தங்கள் இருக்கைகளில் ஆவலுடன் காத்திருந்தனர். பேராசிரியர் வழக்கம் போல் தேர்விற்கான வினாத்தாளை அனைத்து மானவர்களிடமும் வழங்கினார். அவர் அனைவருக்கும் கேள்வித்தாளை ஒப்படைத்தவுடன், தங்களுடைய விடைத்தாளில் பதில் எழுத தொடங்கும்படி மாணவர்களைஅனுமதித்தார். மாணவர்கள்அனைவரும் ஆச்சரியமாக கேள்வித்தாளை திருப்பிதிருப்பி பார்த்தனர் ,அந்த சேள்வித்தாளில் கேள்விகள் எதுவும் இல்லை, ஆனால் கேள்வித்தாளின் மையத்தில் ஒரேயொரு கருப்பு புள்ளி மட்டுமே இருந்தது.
அனைவரின் முகத்திலும் ஆச்சரியவெளிப்பாட்டைக் கண்ட பேராசிரியர்,மாணவர்களிடம், “நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் என்ன பார்க்கின்றீர்களோ அதை நீங்கள் எழுத வேண்டும்” என்று கூறினார். இவ்வாறு பேராசிரியர் கூறியதை கேட்டவுடன் மிகவும் குழப்பமான மாணவர்கள் காலியான கேள்வித்தாளை வைத்து எவ்வாறு பதில் எழுதுவது என்ற விவரிக்க முடியாதசிக்கலில் தங்களுடைய விடை எழுதும் பணியை தொடங்கினர். அனைவரும் தங்களுடைய பதிலை எழுதி பேராசியிரிடம் ஒப்படைத்தனர் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் விடைத்தாளை ஒப்படைத்துமுடித்தபின்னர், பேராசிரியர் அனைத்து விடைத்தாட்களையும் எடுத்து, அவை ஒவ்வொன்றையும் அம்மாணவர்களின் முன்னால் உரக்கப் படிக்கத் தொடங்கினார். விதிவிலக்குகள் இல்லாமல் அவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளின் மையத்தில் இருந்த கருப்பு புள்ளியை பற்றி மட்டுமே விவரித்து எழுதிஅதனை விளக்க முயன்றனர்.
அனைத்துவிடைத்தாட்கள் எல்லாம் படித்த பிறகு, வகுப்பறை அமைதியாக இருந்தது. பேராசிரியர் விளக்கத் தொடங்கினார், “நான் உங்கள் அனைவரையும் வித்தியாசமாக சிந்திக்குமாறு தூண்டுவதற்காக விரும்பினேன். அதற்காக காலியான வினாத்தாளை உங்களுக்கு வழங்கினால் நீங்கள் சிறிது வித்தியாசமாக சிந்தித்து எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்அவ்வாறு வழங்கினேன் ஆனால் உங்களுள் யாரும் நான் எதிர்பார்த்தவாறு காகிதத்தின் வெள்ளை பகுதி பற்றி எழுதவேயில்லை. எல்லோரும் மையத்தில் இருந்த கருப்பு புள்ளியில் மட்டுமே கவனம் செலுத்தினீர்கள், நம் வாழ்க்கையிலும் இதே போன்று நிகழ்கிறது. வித்தியாசமாக சிந்திக்கவும் அதற்கேற்ப செயல்படவும் நம்மிடம் வெள்ளை தாள் போன்று நல்ல பகுதி ஏராளமாக உள்ளன, ஆனால் நாம் அனைவரும் எப்போதும் சிறிய இருண்ட கருப்பு புள்ளிபோன்ற குறைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அதனை ஊதிபெரியதாக ஆக்கி வாழ்க்கையை வீணடித்து அதனால் நம்முடைய மனத்தை எப்போதும் மாசாக்கி வீணடிக்கின்றோம் வெள்ளைதாளை போன்ற ஏராளமான அளவிலான பல்வேறு நல்ல செயல்கள் எதுவும் நம்முடைய கண்ணிற்கு தெரிவதே இல்லை அதனை ஏற்று அனைவருடன் அன்புடனும் அக்கறையுடனும் அவை இயற்கை நமக்கு அளித்த பரிசாக. கொண்டாடி மகிழ்ச்சியுடன் வாழ மறந்துவிடுகின்றோம்
அதாவது நம்மைத் தொந்தரவு செய்யும் உடல்நலப் பிரச்சினைகள், பணமின்மை, குடும்ப உறுப்பினருட னான சிக்கலான உறவு, நண்பர்களுடனான ஏமாற்றம் போன்ற நம்முடைய வாழ்வின் இருண்ட கருப்பு புள்ளியில் மட்டுமே நாம் கவனம் அனைத்தையும் செலுத்தி நம்முடைய வாழ்க்கையை வீணாக்குகின்றோம் அவைதான் நம் மனதை மாசுபடுத்துகின்றன.அவ்வாறானநம்முடைய வாழ்க்கையில் உள்ள கருப்பு புள்ளிகளிலிருந்து கண்களை விலக்கிக் வெள்ளைதாளை போன்ற ஏராளமான அளவில் உள்ள நல்ல செயல்களில் கவணம் செலுத்திடுக., வாழ்க்கை உங்களுக்கு ஒவ்வொரு கணமும்வழங்கும் பல்வேறு நல்ல செயல்களை கொண்டு. சாதகமாக மாற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்திடுக! ” என நீண்ட விளக்கமளித்தார்
பேராசிரியர் விளக்கமளித்தபடி, வாழ்க்கை என்பது நல்ல மற்றும் கெட்ட செய்திகளின் ஒரு கலவையாகும், நம் அனைவரின் முன் நேர்மறையான செயல்களும் எதிர்மறைசெயல்களும் உள்ளன. ஆனால் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான நேர்மறைகளில் மட்டு் நாம் எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறைகளைப் பற்றி நினைத்து நம்முடைய நேரத்தை வீணாக்கவேண்டாம்


வியாழன், 13 ஆகஸ்ட், 2020

குறுஞ்செய்தி மூலம் சசேவ இல்லை( Nill)எனும் அறிக்கையை எவ்வாறு சமர்ப்பிப்பது?


GSTR 3B எனும் படிவத்தினை குறுஞ்செய்தி மூலம்சமர்ப்பித்தல் செய்வதற்கான வசதியை உள்ளடக்கிய சசேவ விதிகளில் ஒரு சிஇல் மாற்றங்களைச் செயல்படுத்த 2020 ஜூன் 8 , 9 ஆகிய தேதிகளில் CBIC என சுருக்கமாக அழைக்கபெறும் மத்திய மறைமுக வரிகளின் வாரியம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அத்தகைய அறிவிப்பின் விவரங்கள் பின்வவருமாறு

1. மத்திய வரியின் கீழ் அறிவிப்புகளின் சுருக்கம் -

 

 

2.வரியில்லை எனும் GSTR NIL அறிக்கையை குறுஞ்செய்தி மூலம் சமர்ப்பித்தல் - CBIC என சுருக்கமாக அழைக்கபெறும் மத்திய மறைமுக வரிகளின் வாரியம்  படிவம் GSTR 3B இன் வாயிலாக வரியில்லை என சமர்பிப்பதற்காக அறிவிப்பு எண் 44/2020 இன் வாயிலாக   அறிமுகப்படுத்தியுள்ளது -
மத்திய வரி 8 ஜூன், 20.மசசேவ விதிகள், 2017 இன் விதி 67 ஏ இந்த மாற்றத்தை நடைமுறைப் படுத்திடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மூலம் GSTR 3B இன் வாயிலாக வரியில்லை என சமர்பிப்பதற்கான நடைமுறை பின்வருமாறு -

 

 

 


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

சசேவ(GST)இன் கீழ் சுய விலைப்பட்டியல் (Self Invoice)

மத்திய சசேவ(CGST ) சட்டத்தின் பிரிவு 9 (4) இவ்வாறு கூறுகிறது: -
"மத்திய வரி விதிக்கக்கூடிய பொருட்கள் அல்லது சேவைகள்  அல்லது இரண்டையுமே   வழங்குவதற்காக ,ஒரு பதிவு செய்யப்படாத வழங்குநரால்  பதிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு, அத்தகைய நபரால் செலுத்தப்படும்  பெறுநராக தலைகீழ் கட்டணத்தின் அடிப்படையில் மற்றும் இந்த சட்டத்தின் அனைத்து விதிகளும் பொருந்தும்  அத்தகைய பெறுநர் வழங்கல் தொடர்பாக வரி செலுத்துவதற்கு பொறுப்பான நபர் என்றால் அத்தகைய பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும்  வழங்குவதற்காக தயார்செய்வதே  சுயவிலைபட்டியலாகும்".பொருட்களை வாங்கும் அனைத்து பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கும் மேற்கூறிய சட்டம் பொருந்தும் என கூறுகிறது
பதிவு செய்யப்படாத நபரின் சேவைகள் தலைகீழ் கட்டண அடிப்படையில் வரிகளை செலுத்த வேண்டும்
மேலும் இந்தச் சட்டத்தின் அனைத்து விதிகளும் வழக்கமான சசேவஇன்கீழ் பதிவு செய்யப்பட்ட நபருக்கு பொருந்துவது போலவே பொருந்தும்
வரி செலுத்த வேண்டிய பொறுப்பு.
மத்திய சசேவ(CGST )  சட்டத்தின் பிரிவு 31(f)  பின்வருமாறு கூறுகிறது:
"ஒரு பதிவு செய்யப்பட்ட நபர் துணைப்பிரிவு (3) அல்லது துணைப்பிரிவு (4) இன் கீழ் வரி செலுத்த வேண்டியவர் ஆவார் . பதிவு செய்யப்படாத வழங்குநரிடமிருந்து பிரிவு 9 இன்கீழ்அவர் பெற்ற  பொருட்கள் அல்லது சேவைகளைஅல்லது இரண்டையும் பெற்ற தேதியில் பொருட்கள் அல்லது சேவைகள்  அல்லது இரண்டிற்கு ஒரு விலைப்பட்டியலை வெளியிடுபவர் ஆவார்    ".
எனவே, சசேவஇன் பிரிவு 9 (4) இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் தலைகீழ் கட்டண அடிப்படையில் வரி செலுத்துகின்றார்கள் எனில் விலைப்பட்டியலை வெளியிடுபவரா்களாக. அவர்கள் இருப்பார்கள்
தங்களுக்குள்ளே விலைப்பட்டியல் தயார்செய்வதால் அது சுய விலைப்பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், சசேவ விதிகள் 2017 இல், விதி 46 வரி விலைப்பட்டியல் பற்றி பேசுகிறது, அதில் விதிமுறை
பிரிவு 9 (4) இன் கீழ் அனைத்து பதிவு செய்யப்பட்ட நபர்களும் எனத்தெளிவாகக் குறிப்பிடபட்டுள்ளது
சசேவ சட்டம், அதாவது தலைகீழ் கட்டணத்தின் கீழ் வரி செலுத்தும் அனைத்து பதிவு செய்யப்பட்ட நபர்களும் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் ஒருங்கிணைந்த விலைப்பட்டியல்தயார்செய்திடவேண்டும், அத்தகையவற்றின் மொத்த மதிப்பு  எந்தவொரு வழங்குநரிடமிருந்தும் ஒரு நாளில் பொருட்கள்  ரூ.5000ஐத் தாண்டின என குறிப்பிடவேண்டும். எனவே, பொருட்களின் மொத்த மதிப்பு   ரூ5000ஐத் தாண்டாத நிலையில்உள்ள பொருட்கள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேற்கூறியவற்றைத் தவிர, தலைகீழ் கட்டணத்தில் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் செலுத்தப்படும்
பணத்தின் மூலம், அத்தகைய வரிகளை செலுத்துவதற்கு உள்ளீட்டு வரிவரவைப் பயன்படுத்த முடியாது. பிறகு  கட்டணம், நம்முடைய வரிவரவை செலுத்துவதற்கான உள்ளீட்டு வரவாக அவற்றைப் பயன்படுத்தலாம்.
சசேவ விவரஅறிக்கையில் என்ன காட்ட வேண்டும்?
 GSTR1- வழங்கப்பட்ட ஆவணங்களின் அட்டவணையின் கீழ் வழங்கப்பட்ட விலைப்பட்டியலின் வரிசை எண்களைக் கொடுக்கப்படவேண்டும்.சுய விலைப்பட்டியல் தொடர்பாக வேறு எந்த விவரங்களும் கொடுக்கப்பட வேண்டியதில்லை.
GSTR 3B- அட்டவணை 3.1 வரிகளில் தலைகீழ் கட்டணத்தின் கீழ் பொறுப்பைக் காட்ட வேண்டும்
வெளிப்புற மற்றும் தலைகீழ் கட்டணம் உள்நோக்கி வழங்கல் மற்றும் தலைகீழ் கட்டணத்தின் கீழ் உள்ளீட்டு வரிவரவுஅட்டவணை 4 இல் தகுதியான உள்ளீட்டு வரிவரவு( ITC)ஆகும்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

எதையும் வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து வாக்குறுதி அளித்திடுக

முற்காலத்தில் கவிஞர் ஒருவர் ஒரு நாள் தங்களுடைய நாட்டு அரசனிடம் தனது கவிதைகளை பாடி ஏதாவது பரிசுபொருட்கள் பெற்று தன்னுடைய வறுமையை போக்கலாம் என அந்நாட்டு அரசஅவைக்கு சென்றார். அரசஅவையில் மன்னனைபற்றி இந்தகவிஞர் பாடிய கவிதைகளால் மன்னர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அரசன்: கவிஞரே நான் உங்களுடைய கவிதைகளால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் பரிசுபொருட்களாக நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள் நான் வழங்க தயாராக இருக்கின்றேன் . கவிஞர்: என்னுடைய வறுமையை போக்கவந்த அரசே, எனக்கு அதிகமாக வேறுஒன்றும் தேவையில்லை அடுத்த 64 நாட்களுக்கு மட்டும் நான் கோருகின்றவாறுஅரிசிகளை வழங்கினால் போதும் அரசே. அரசன்: (மிகவும் குழப்பத்துடன்) கவிஞரே நீங்கள் விரும்பிய அளவிற்கு தங்கத்தையும் நிலத்தையும் உங்களுக்கு நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் நீங்கள் விலை மலிவான வெறும் அரிசிகள் மட்டும் போதும் என்று கேட்கிறீர்ளே? கவிஞர்: ஆம் அரசே. இன்று எனக்கு ஒரு அரிசி கொடுங்கள். நாளை எனக்கு 2 அரிசிகளை கொடுங்கள் . நாளை மறுநாள் எனக்கு 4 அரிசிகளை கொடுங்கள். இவ்வாறு தினமும் முந்தைய நாள் கொடுத்ததை போன்று இரண்டு மடங்கு அரிசிகளின் எண்ணிக்கையை கூட்டி கொடுத்தால் போதும்அரசே. இது போன்று அடுத்த 64 நாட்களுக்கு நான் தொடர்ந்து வருவேன் 64 நாட்களுக்கும் எனக்கு முந்தைய நாள் கொடுத்ததை போன்று இரண்டு மடங்கு அரிசிகளை தாங்கள் வழங்கினால் போதும் அரசே . அரசன்: (சத்தமாக சிரிக்கிறார்) நீங்கள் மிகவும் வேடிக்கையானவர். உங்களுக்கு அரிசிகளை 64 நாட்களுக்கு கொடுக்குமாறு கோருகிறீர்கள், அதுவும் இன்று ஒரு அரிசி மட்டுமே. அதனால் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக நான் உறுதியளிக்கிறேன். அத்தகைய வேடிக்கையான விருப்பத்தை அரசஅவையின் முன்பு அரசன் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அந்த அரசன் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியான கொள்கைகளை உடையவர். அவர் எப்போதும் தனது வாக்குறுதிகளை கடந்த காலங்களில் தவறாது நிறைவேற்றியிருந்தார். எனவே ஏழை கவிஞர் அன்றைய தினம் ஒரு அரிசியுடன் துவங்கி தினமும் அந்த கவிஞர் கோரியாவாறு அரிசிகள் பின்வருமாறு வழங்கப்பட்டுவந்தன. நாள் 0: 1 அரிசி நாள் 1: 2 அரிசிகள் நாள் 2: 4 அரிசிகள் நாள் 3: 8 அரிசிகள் நாள் 4: 16 அரிசிகள் நாள் 5: 32 அரிசிகள் நாள் 6: 64 அரிசிகள் நாள் 7: 128 அரிசிகள் நாள் 8: 256 அரிசிகள் நாள் 9: 512 அரிசிகள் நாள் 10: 1024 அரிசிகள் .நாள் 32: 4,294,967,296 அரிசிகள் .நாள் 64: 18,446,744,073,709,551,616 அரிசிகள் சொற்களில் குறிப்பிடவேண்டுமெனில் 64ஆவது நாளில் கொடுக்கப்படவேண்டிய அரிசிகளின் மொத்த எண்ணிக்கை ◦ “பதினெட்டு குவிண்டிலியன், நானூற்று நாற்பத்தி ஆறு குவாட்ரில்லியன், எழு நூற்று நாற்பத்து நான்கு டிரில்லியன், எழுபத்து மூன்று பில்லியன், எழு நூற்று ஒன்பது மில்லியன், ஐநூற்று ஐம்பத்தொராயிரம், அறுநூற்று பதினாறு” [1] அரிசிகள். அதாவது 1 அரிசியின் எடை = 0.03 கிராம் என கணக்கில் கொண்டு 64ஆவது நாளில் கொடுக்கப்பட வேண்டிய அரிசிகளின் எடையை டன்களாக மாற்ற முயற்சித்தால் தோராயமாக 553 402 322 211 டன் கள் அளவிற்கு அரிசிகள் வழங்கப்படவேண்டும் என்று தெரியவருகிறது அதாவது அரிசிகளின் எடை சொற்களில் “ஐநூற்று ஐம்பத்து மூன்று பில்லியன் நானூற்று இரண்டு மில்லியன் முந்நூற்று இருபத்தி இரண்டாயிரத்து இருநூற்று பதினொரு” டன் கள் என தெரியவருகின்றது இந்த அரிசிகளின் எடை . கிலோ கூட இல்லை டன்களாகும் என்பதை கவணத்தில் கொள்க . தற்போதைய நிலையில் ஒப்பிடும்போது: ◦ “தற்போது உலகளாவிய ஆண்டு ஒன்றிற்கு அரிசி உற்பத்தியானது 700 மில்லியன் டன் கள் மட்டுமேயாகும்” மன்னர் தனது நாடு முழுவதையும் விற்றாலும் நாளுக்கு நாள் தான் வாக்குறுதி கொடுத்தவாறு 64 நாட்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் அரசர் கவிஞரிடம் உறுதியளித்தவாறு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றமுடியவில்லை அதற்காக தன்னை மன்னித்துவிடுமாறு இறைஞினார் . கவிஞர் அரசரை மன்னித்து “நீங்கள் எதையும் வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா வென நன்கு சிந்தியுங்கள். ஒரு சில செயல்கள் முதலில் தவறானவையாகவும் மிகவும் வேடிக்கையானவையாகவும் தோன்றும், ஆனால் அவை உண்மையில் சரியானவை, நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவை ” என அறிவுறை கூறினார் . என்னவாசகரே நீங்களும் இதைபோன்ற கற்பணைக்கு அப்பாலான வாக்குறுதிகளை கொடுத்து அதனை நிறைவேற்றமுடியாமல் அல்லாடுமாறு சிக்கலில் மாட்டிகொள்ளாதீர்கள்

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

சிறு வணிகநிறுவனங்களுக்கானசிறிய நடுத்தர நிறுவனங்களின் துவக்கநிலை பொதுவெளியீடு(SME IPO)

 

கடந்த சில ஆண்டுகளாக, சிறு நடுத்தர நிறுவனங்கள் (Small and Medium Enterprises (SMEs) ) இந்திய பொருளாதாரத்தின் மிகவும் பிரமிப்பூட்டும் அளவில் வளர்ந்து வருகின்றன.பெரிய அளவிலான தனியார் பொது த்துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இ்ந்த SME க்கள் மிகக் குறைந்த முதலீட்டைக் கொண்டுள்ளன, ஆனால் அவை இந்திய நாட்டுமக்களுக்கு வழங்குகின்ற வேலை வாய்ப்புகளானவை பெரிய நிறுவனங்களை விட நான்கு மடங்கு அதிகமாகும் , இதனால், SME க்கள் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகமுக்கிய பங்களிப்பாளராக விளங்குகின்றன. இவை வட்டார அளவிலான வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கும், சமமான பொருளாதார வளர்ச்சியுடன் வருமான சமத்துவமின்மையைக் சரிசெய்து கொண்டுவருவதற்கும் பேருதவியாக அமைந்துள்ளன.அதாவது SME க்கள், நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஏனெனில் அவை பொதுமக்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முக்கியஆதாரமாகவிளங்குகின்றன. வேலைவாய்ப்புகளை வழங்குவதைத் தவிர, SME க்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்பகுதியில் இவை செழித்து வளரும்போது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்கின்றன, அதனால் இவை கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பேருதவியாய் திகழ்கின்றன. இந்த SME களானவை பெரிய தொழில்நிறுவனங்களுக்கு , துணை அலகுகளாக, தோள்கொடுத்து அவைகளின் தடையறா இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும்பேராதரவை வழங்குவதன் வாயிலாக நமது நாட்டின் பொருளாதாரா வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கினறன. வெற்றிகரமான SME களின் சிறந்த சமநிலை என்னவென்றால், அவை புதிய முயற்சிகளைத் தொடங்க மக்களை ஊக்குவிக்கின்றன, மேலும் புதுமையான ஆலோசனைகளைப் பற்றி சிந்திக்க, போட்டித் தன்மையை மேம்படுத்துகின்றன எல்லாவற்றிற்குமேலாக இவை பொருளாதாரத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தி செல்லுகின்றன. SME களின் வளர்ச்சிகளுக்கான தடைகள் சிறு வணிகநிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளரச்சிக்கு பேரார்வங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவற்றின் செயல்முறையில் பல்வேறுவகையிலான இடையூறுகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றன, எல்லாவற்றிற்கும் மேலாக முதன்மையாக மிகப்பெரியஇடையூறாக இருப்பது அவைகளின் தடையற்றஇயக்கத்திற்கு போதுமான அளவிற்கு நிதி உதவியைப் பெறுவதாகும். எந்தவொரு முதலீட்டாளரையும் சமாதானப்படுத்துவதும், அவர்களின் கனவை யதார்த்தமாக மாற்றுவதும் கிட்டத்தட்ட சாத்தியமற்ற செயலாகும், எனவே, முதலீட்டிற்கான கணிசமான தொகையினை மூலதனக் கடன்களாகப் பெறுவது சாத்தியமற்றதாக அமைகின்றது. இவ்வாறான சூழலில் நிதி நிறுவனங்கள் துவக்கநிலைநிறுவனங்கள் , தனிநபர் நிறுவனங்கள் ஆகிய SMEகள் தங்களுக்குத்தேவையான மூலதன நிதியை அணுகுவது சந்தேகத்திற்கு இடமின்றி அவைகளின் விரும்பிய வளர்ச்சியில் மிகப்பெரிய தடையாக இருந்துவருகின்றன. எந்தவொரு வணிகநிறுவனத்திற்கும் ‘அவ்வணிகத்தின் உயிர்நாடி’ என்பது அவைநன்றாக செயல்படுவதற்கு தேவையான நிதிவசதிபெறுவதாகும் மிகச்சரியாகக் கூறவேண்டுமெனில் இந்நிதிவசதியானது எப்போதுமே SME க்களுக்கு குறுகிய காலவிநியோகத்தில் மட்டுமேஉ ள்ளது, அதனால் அவைகளின் விரிவாக்கத்தையும் வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு தேவையான நிதிவசதியைஉடனுக்குடன் பெறமுடியாத நிலையானது SME களை மேலும் வளர்ச்சிபெறமுடியாமல்தேக்கநிலையை அடையச்செய்கின்றன. தற்போது நமது நாட்டில் கிட்டத்தட்ட 55 மில்லியன் SME க்கள் செயல்பட்டு வருகின்றன, மேலும் இவை 60 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பதால், இவை மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்குநராக இருப்பதில் ஆச்சரியமில்லை. SME களின் பங்களிப்பை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நன்கு அறிந்திருக்கிறது. , அவைகளுக்கு இணக்கமான செயல்களையும் நிதி உதவிகளையும் பெறுகின்ற நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு ஏதுவாகவும் அரசானது செயல்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக SME IPO எனும் திட்டத்தின் வாயிலாக தங்களுக்கு தேவையான நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்டிகொள்வதற்கான வசதியை துவக்கியுள்ளது இந்தியாவில் SME களின் மகத்தான பங்கு உணரப்பட்டு அவற்றின் பரந்த அளவிலானவளர்ச்சியினை புரிந்துகொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் SME IPO எனும் திட்டத்தினை நடைமுறைபடுத்திடுவதற்காக இந்திய அரசால்NSE , BSE ஆகிய தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பு SME IPO என்பது சிறுநடுத்தர நிறுவனங்களில் (Small and Medium Enterprises (SMEs) ) பொது மக்களின் துவக்கநிலை முதலீட்டிற்கான வாய்ப்பு (Initial Public Offer) எனும் திட்டத்தின் படி பரவலாக பொதுமக்களும் இந்த SMEகளில் தங்களுடைய முதலீட்டினை இடுவதற்கான வாய்ப்பினை வழங்குவதாகும் இந்த பங்குபரிமாற்றதளங்கள் SMEகளுக்கு SME IPO புதிய பட்டியல் வெளியிடும் வாய்ப்பை வழங்குகின்றன, இதனால் SMEகளும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான அளவில் நிதிதிரட்டுவதற்கான வாய்ப்புகளை பெறுகின்றன.SMEகளின் ஒட்டுமொத்த முயற்சிகளுக்கு தேவையான மூலதனத்தை எளிதில் அணுகுவதற்கான சிறந்த வழியாக இருப்பது SME IPO பட்டியலிடும் வழிமுறைக்கு செல்வதாகும். அவ்வாறான SME IPOவை வெளியிடுவதற்கான தகுதிகள் பின்வருமாறு 

 

SME IPO இல் புதியதாக பட்டியலிடுவதற்காக விண்ணப்பிப்பதற்கு முன் வேறு சில முக்கியமான காரணிகளை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 1. தொழில்துறை நிதி புனரமைப்பு வாரியத்தின் ((BIFR)) அல்லது தற்போதைய IBCஎனும் நிறுவன நொடிப்புதீர்வு வாரியத்தின் நடவடிக்கையி ன் கீழ் நிறுவனம் இருக்கக்கூடாது. 2. நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு மனுவும் இருக்கக்கூடாது. 3. SME IPO பட்டியலிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாளிலிருந்து முந்தைய ஒரு வருடத்தில் நிறுவனத்தினை உருவாக்கியவர்களில்(Promoters) எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. SME IPO பட்டியலிடுவதற்கான நடைமுறை SME க்களுக்கான IPO செயல்முறையை முதன்மைப்படுத்துவதுஎன்பது ஒப்பீட்டளவில் எளிதானது நிறுவனம் இவ்வெளியீட்டிற்காக ஒரு முன்னணி மேலாளரை நியமிக்கும் நாளிலிருந்து கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் ஆகும். வணிக வங்கியாளரை நியமித்தல், மூலதன கட்டமைப்பு, அதற்குரிய விடாமுயற்சி , IPO-க்கு முந்தையசெயல்முறை, வங்கியாளர்கள், பதிவாளர், சந்தை தயாரிப்பாளர்கள், RTA போன்றவர்களை நியமித்தல், வெளியீட்டு ஆவணம் தயாரித்தல் (DRHP), பங்குசந்தையில் DRHP ஆவணத்தை சமர்ப்பி்த்தல் , பங்கு பரிமாற்ற சந்தையிலிருந்தும் நிறுவனங்களின் பதிவாளரிடமிருந்தும்(RoC) ஒப்புதல்பெறுதல், வெளியிடும் பங்குகளுக்கான விலை நிர்ணயம் செய்தல், பொது வெளியீட்டைத் திறத்தல், வெளியீடுசெய்தல் பங்குகளை ஒதுக்கீடுசெய்தல், பட்டியலிடுதல் , வர்த்தகம் செய்தல் ஆகியவை SME IPO பட்டியலிடுவதற்கான பொதுவான நடைமுறைகளாகும் SME IPO வெளியிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 1. சமபங்குவெளியீட்டின் வாயிலாக முதலீட்டு தொகையை SMEகளில் உள்ளீடு செய்வதன் மூலம் அவைகளின் மூலதனத்தை பொதுமக்கள் அணுகுவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. 2. இவ்வாறான வெளியீடானது பொதுமக்களிடம் SME களின் கவுரவத்தையும் நம்பகத்தன்மையையும் வளர்ப்பதோடுமட்டுமல்லாமல், நிறுவனத்தின் நிகர மதிப்பையும் மேம்படுத்துகிறது. 3. நிறுவனத்தின் நிகர மதிப்பு உயர்வுஅடைவதால் அந்நிறுவனத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்தி பன்முகப்படுத்தவும், முடிகின்றது. 4. முன்னுரிமை பங்குகள் வெளியீடு, உரிமைபங்குகள் வெளியீடுகள், தகுதிவாய்ந்த நிறுவன முதலீடு (QIP) பிற சர்வதேச நிதி திரட்டும் கருவிகள் என்பன போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து SME க்கள் போதுமான மூலதனத்தை திரட்ட முடியும். 5. இவ்வெளியீடானது பொதுமக்களின் கைகளுக்கு செல்வதன் மூலம், நிறுவனம் பங்குதாரர்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை வழங்குகின்றது. இவ்வெளியீடானது பொதுமக்களின் கைகளுக்கு சென்றபின் SME களின் வளர்ச்சி விகிதமானது மிகவும் ஊக்கமளிக்கின்றது, எனவே, இதனை தொடர்ந்து மேலும் தொடக்கநிலை(STRATUP) நிறுவனங்களும் சிறு வணிகநிறுவனங்களும் இதேபோன்று பொதுமக்களுக்காக பட்டியலிடுவதற்காக தயாராகி வருகின்றன. SME IPO பட்டியல் வளர்ந்து வரும் நிறுவனங்கள் சமபங்குகளின் மூலம் மூலதனத்தை திரட்டக்கூடிய ஒரு வழியைத் உருவாக்குகின்றதுது, இதனால் சேகரிக்கப்பட்ட நிதியும் நிறுவனத்தின் தேவையைப் போலவே முழு சுதந்திரத்துடன் அதைப் பயன்படுத்துவதற்கான வசதியையும் அளிக்கின்றது. வெற்றிகரமான IPO பட்டியலிடும் செயலானது முதலீட்டாளர்கள், முதலாளிகள் பணியாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினர்களுக்கும் பேரளவு நன்மைகளைத் வழங்குகின்றது

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

புதியவர்கள் ஒரு சட்டத்தைப் படித்தால் புரிந்துகொள்வதற்கான சட்டம் பற்றிய அடிப்படைகள்

சட்டம் பயிலும் விரும்பும் எவரும் எதிர்வருங்காலத்தில் வெற்றிகரமான தொழில்முறைசட்ட நிபுணராக பயனிக்க பல்வேறு வகையான சட்டங்கள் (வரிவிதிப்பு சட்டங்கள், வியாபார சட்டங்கள், வணிக சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், பாதுகாப்பு சட்டங்கள், பொருளாதார சட்டங்கள் என்பன போன்றவை) பற்றிய நல்ல அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இதற்காக தற்போது சந்தையில் ஏராளமான சட்ட குறிப்பு புத்தகங்கள் கிடைக்கன்றன, அவை சட்டத்தைஓரளவிற்கு புரிந்துகொள்ள உதவுகின்றன.
பொதுவாக பொதுமக்கள் செயல்படும் சூழல் ,சமுதாயத்தினுடைய தேவைகள்ஆகியவற்றின் அடிப்படையிலேயே சட்டங்கள் அனைத்தும் உருவாக்கப் படுகின்றன. நாம் வாழும் மனித சமுதாயம் ஒருபோதும் நிலையானதாக இல்லாததால், நமது சட்டங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன . நம்முடைய வாடிக்கையாளர்களை நாம் கையாளும் போது பயன்படுத்தி கொள்கின்ற இன்று நாம் பயன்படுத்தி கொண்டுவரும் சட்டங்களும் விதிகளும் எப்போதும் நிலையாக அப்படியே இருக்கும் என்பது ஒருபோதும் உறுதியாகத் தெரியவில்லை. அதனால் தற்போது நாம் பயன்படுத்திகொள்வதற்காக கிடைக்கும் புத்தகங்கள் எதுவும் நமக்கு பிற்காலத்தில் உதவாது, அந்நிலையில் நாம் முதன்முதலில் நிறைவேற்றபட்ட உண்மையான சட்டங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். இருப்பினும், ஒரு வெற்றுச் சட்டங்களின்(Bare Acts) சட்ட மொழியில் படிப்பது என்பது நம்முடைய அலமாரியில் உள்ள வேறு ஏதேனுமொரு புத்தகத்தைப் படிப்பதைப் போன்றதன்று. இதற்கு சட்டத்தின் மொழி பற்றிய சிறப்பான புரிதலும் சரியான விளக்கமும் நமக்கு தேவையாகும். அத்தகைய சூழ்நிலையில், வெற்றுச் சட்டங்களைக் குறிப்பிடாமல், அவற்றைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற முயற்சிக்காமல், அந்த குறிப்பு புத்தகங்களின் உதவியுடன் தற்போதைய சட்டங்களைப் படித்து புரிந்துகொள்வதன் மூலம் இதற்காக நடத்தபெறும் தேர்வுகளில் மட்டும் வெற்றி பெறுவது சரியன்று
அதனால் சட்டத்தை படிக்கவிரும்பும் ஒவ்வொருவரும் எந்தவொரு சட்டத்தையும் படிக்கும்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு சில விவரங்களைக் கண்டுபிடித்து தொகுத்து வழங்க முயற்சிக்கப்படுகின்றது. இருப்பினும்,இந்த பட்டியல் முழுமையானது அன்று என்ற செய்தியை மனதில் கொண்டு தொடர்ந்து செல்க.
1. பொதுவாக இந்தியாவில் நாம் பயன்படுத்தி கொண்டுவருகின்ற அனைத்து சட்டங்களும் இந்திய நாடாளுமன்றத்திலோ அல்லது மாநிலங்களின் எந்தவொரு மாநில சட்டமன்றத்திலோ நிறை வேற்றப் பட்டவைகளாகும். ஒரு நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த பல்வேறு விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு பிரச்சினையிலும் சட்டத்தை உருவாக்க வும் நிறைவேற்றிடவும் ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் (மத்திய அல்லது மாநில) அதிகாரம் இல்லை. அதாவது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் சட்டமியற்றிடும் அதிகாரங்கள் (மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் நாட்டில் எழும் பிரச்சினைகள் குறித்து சட்டங்களை உருவாக்க அதிகாரம் பெற்றவைகளாகும் ) அவ்வாறான சட்டம் இயற்றிடும் அதிகாரங்கள் 1.இந்திய ஒன்றியத்தின் பட்டியல் , 2 இந்திய ஒன்றியம் ,மாநிலங்கள் ஆகிய இரண்டிற்குமான பட்டியல் , 3.மாநிலங்களின் பட்டியல் என்றவாறு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன:
.
2. ஒரு சில சட்டங்களின் பெயருக்கு முன்பு 'Central ' என்ற சொல் முன்னொட்டாக ஏன் வருகின்றது என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் (இது குறித்த விவரங்களை அறிந்து கொண்டுள்ளோம்). அல்லது நம்மில் எத்தனை பேருக்கு இது மாநில சட்டம் அன்று நாடளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மத்திய சட்டமாகும் அதனால் இந்த 'Central ' என்ற சொல் முன்னொட்டாக வந்துள்ளது என தெரிந்து கொண்டிருக்கின்றோம். அதெல்லாம் சரி, சுங்க சட்டம், 1962 (Customs Act, 1962 )பற்றி நமக்கு என்ன தெரியும்? இதுவும் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மத்தியச் சட்டம்தான், ஆயினும் இதில் 'Central' என்ற முன்னொட்டு சொல் இல்லையே. அதனால் இது மத்திய அரசுச்கு சொந்தமானது அன்று என தவறாக எண்ணக்கூடாது நிச்சயமாக அது ஒரு முழுமையற்ற பதிலாகும் .இந்நிலையில் 'Central' என்ற முன்னொட்டு சொல் எப்போதும் மத்தியஅரசின் சட்டங்களுடன் முன்னொட்டாக இருக்கும். ஆனால் அவ்வாறான 'Central' என்ற முன்னொட்டு சொல் அனைத்து மத்திய அரசின் சட்டங்களிலும் இல்லையே ஆயினும் அவற்றை மத்திய அரசு நடைமுறைபடுத்தி வருகின்றதே எனும் சந்தேகம் நம்மனைவருக்கும் எழும் நிற்க . பொதுவாக மத்தியஅரசு மாநிலஅரசுகள் ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் சட்டங்களை உருவாக்குவதற்கான அல்லது இயற்றுவதற்கான அதிகாரங்களை பெற்றுனள்ளன இருந்தபோதிலும் இந்தியா முழுவதற்குமான பிரச்சினைகள் குறித்த சட்டங்களை மாநில சட்டத்திலிருந்து வேறுபடுத்தி காண்பிப்பதற்காக மத்திய அரசால் 'Central என்ற சொல் முன்னொட்டாக சேர்க்கப்படுகின்றன.( Central Goods And Service Tax Act(CGST),என்பது மத்திய அரசிற்கு உரியது Integrated Goods And Service Tax Act(IGST) என்பது மாநிலங்களுக்கு இடையேயான சட்டமாகும் State Goods And Service Tax Act(SGST)என்பது மாநில அரசுகளுக்கு உரியது) . ஆயினும் மத்திய அரசால் கொண்டுவரப்படும் வேறுசில சட்டங்களில் 'Central' என்ற சொல்கொண்டிருக்கவில்லையே, ஏனெனில் மைய அரசிற்கு உரிய உரிமையின் அடிப்படையில் அயலுறவு ,பொருட்களை அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல் அயல்நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தல் போன்றவை தொடர்பான சட்டத்தை உருவாக்க எந்த மாநில அரசாங்கங்களுக்கும் அதிகாரம் வழங்கப் படவில்லை. அவ்வாறே வருமானவரி வசூலித்தல் தொடர்பான வருமான வரிச் சட்டம், 1961 இல்'Central' என்ற சொல் இல்லை என்பதை நினைவில் கொள்க. ஆயினும் வேளாண்மை வருமானம் குறித்த சட்டத்தை உருவாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும், விவசாய வருமான வரிவிதிப்பை நிர்வகிக்கும் எந்தவொரு சட்டத்தையும் இன்றுவரை எந்த மாநிலமும் வடிவமைக்கவில்லை.என்ற செய்தியை மனதில் கொள்க
3. நாம் எப்போதாவது எந்தவொரு புதிய சட்டத்தை பார்த்ததாலும், அதில் No _ of Year _). போன்ற சொற்களைக் பார்த்திருப்போம். எ.கா. நிறுவனங்களின் சட்டம், 2013 (No. 18 of 2013). இது உண்மையில் எதைக் குறிக்கிறது என்று எப்போதாவது யோசித்தோமா? எந்த ஆண்டில் குறிப்பிட்ட சட்டம் நிறைவேற்றப் பட்ட து என்றும் எத்தனையாவது சட்டமாக நிறைவேற்றபட்டது என்றும் இது குறிக்கிறது. கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டில்,இதில் பிறையடைப்பில் உள்ள, 2013 என்பது2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது எண் 18 என்பது அது18 வது சட்டமாக நிறைவேற்றபட்டதாக கூறுகிறது.

4. யாராவது நம்மிடம் வந்து வருமான வரிச் சட்டம், 1961 இன் நோக்கம் என்ன? என்ற ஒரு அடிப்படை கேள்வியைக் கேட்டால், தொழில் ரீதியாக அதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்க முடியும்? ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒரு முன்னுரை( preamble) உள்ளது, அது அந்த சட்டத்தின் நோக்கங்களை குறிக்கின்றது. அதாவது எந்தவொரு சட்டத்திலும் பிரிவு -1 க்கு மேல்பகுதியான, அந்த சட்டத்தின் முதல் பக்கத்தில் அந்த சட்டம் இயற்றப்படுவதற்கான நோக்கத்தைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்கும். எ.கா. வருமான வரிச் சட்டத்தின் குறிக்கோள்களாக அந்த சட்டத்தின் முதல்பக்கத்தின் முன்னுரையின் (preamble )படி, வருமான வரி மற்றும் முதன்மை வரி தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்தம் செய்திடுதல் எனக் குறிப்பிடப் பட்டிருக்கும்

5. ஒவ்வொரு சட்டமும் பகுதிகளாகவும் பிரிவுகளாகவும் இடையிடையே பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது துணைப்பிரிவுகள், உட்பிரிவுகள், துணை உட்பிரிவுகள்ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால், "Section - 40(1)" என்பது குறித்து விவரமாக கூறுக என யாரவது நம்மிடம் கோரினால், நாம் எவ்வாறு அதனை பார்த்து அதனுடைய விவரங்கள்குறித்து விவரிக்க முடியும்? அதாவது பிரிவு 40 இன் துணைப்பிரிவு 1 அல்லது பிரிவு 40 இன் இனம் (Clause) 1? இவற்றுள் எது சரி, சட்டத்தில் கொடுக்கப்பட்ட பிரிவைப் பார்க்காமல் பேசுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனெனில், பிரிவுக்குப் பிறகு ஏதேனும் அடிப்படைக் கோடு( Base Lline) கொடுக்கப்பட்டிருந்தால், அது ஒரு இனம் (Clause),ஆகும் இல்லையெனில் அது துணைப்பிரிவாகும். இதனை புரிந்து கொள்வதற்காக வருமான வரிச் சட்டத்தின் விரிவான எடுத்துக்காட்டு ஒன்றினை இப்போது காண்போம்: வருமான வரிச் சட்டத்தின் 24 வது பிரிவைப் பார்வையிட்டால், அது பின்வருமாறு கூறுகிறது:
பிரிவு 24. "Income from house Property" என்ற தலைப்பில் வசூலிக்கக்கூடிய வருமானம் பின்வரும் விலக்குகளைச் செய்தபின் கணக்கிடப்படும், அதாவது: -
(a) A sum equal to எனத்துவங்கிடும் இதனுடைய உட்பிரிவு (a) , பிரிவு (24) ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு அடிப்படைக் கோடு உள்ளது. எனவே இது பிரிவு 24 இன் இனம் (Clause), (a) ஆக படிக்கப்படும். இருப்பினும், இதே சட்டத்தின் பிரிவு 23 ஐப் பார்வையிட்டால், 23. (1) for the purposes of section 22 எனகுறிப்பிடப்பட்டுள்ளது இங்கு துனைப்பிரிவு (1) பிரிவு (23) ஆகியஇரண்டிற்கும் இடையில் அவ்வாறான அடிப்படைக் கோடு எதுவும் இல்லாததை காணலாம். எனவே, இது பிரிவு 23 இன் துணைப்பிரிவு (1) ஆக படிக்கப்படும்.

6. இப்போதெல்லாம் சட்டமியற்றுபவர்கள் ஒரு சில நேரங்களில் "a, b, c ..." ஆகியவற்றை உட்பிரிவுகளாகவும் வேறு சில நேரங்களில் "1, 2, 3 .." ஆகியவற்றை உட்பிரிவுகளாகவும் பயன்படுத்து கின்றனர்? அவ்வாறாயின் சட்டமியற்றுபவர்கள் தம்முடைய விருப்பப்படி ஒருசில சட்ட பிரிவுகளுக்கு பிரிவு 40 (a ),40 (b ), 40 (c ) ... என்றவாறும் வேறுசில சில சட்ட பிரிவுகளுக்கு பிரிவு 22(1), 22(2), 22(3 ) ... என்றவாறு அவரவர்களுடைய விருப்பத்தின் பேரில் உருவாக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. உண்மையில் சட்டத்தின் பிரிவில் 26 அல்லது அதற்கும் குறைவான உட்பிரிவுகளை மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்ற நிலையில், "a, b, c,..." என்பவற்றை உட்பிரிவுகளாகயும் ஒரு சட்டத்தின் உட்பிரிவுகளானவை அதற்கும் அதிகமாக இருந்தால் "1, 2, 3,..." என்பவற்றை உட்பிரிவுகளாக வும் பயன்படுத்தி கொள்கின்றனர்

7. ஒருசில சட்டப்பிரிவுகளில் (40A (2), 47A) என்றவாறு குழப்பமான பிரிவுகளை கொண்டிருந்தால் அதென்ன அவைகளில் ஆங்கில பெரியஎழுத்து A என்பதை சட்டத்தின் பிரிவுஎன்களுடன் சேர்த்து கொடுத்து விடுகின்றனர் என்று மனம் ஒரே சோர்வாக இருக்கிறதா? கவலையேப்படாதீர்கள் இந்த ஆங்கில பெரிய எழுத்து A ஆனது பொதுவாக குறிப்பிட்ட சட்டப்பிரிவில் செய்யப்பட்ட திருத்தத்தை குறிக்கிறது.

8. உள்ளடக்கிய வரையறைகள் ஒவ்வொரு சட்டத்தின் ஒரு பகுதியாகும். புனைகதையாக கருதுகின்ற உள்ளடக்கத்தை உருவாக்கப் பயன்படும் "Include" என்ற சொல் ஒரு வரையறையின் நோக்கத்தை அதன் பொது அர்த்தத்திற்கு அப்பால் நீட்டிக்கிறது. ஒரு சாதாரண மனிதனின் மொழியில், "Include" என்ற சொல்லுடன் துவங்கும் ஒரு வரையறை இருந்தால், இதன் பொருள் பொதுவாக அந்த சொல்லின் அர்த்தம் என பொதுவாகக் கருதப்படுவதைத் தவிர, அதற்கு பின்வருவனவும் அதனுடன் உள்ளடங்கியதாகக் கருதப்படும் .

9. ஒவ்வொரு சட்டத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு சட்டப்பிரிவுகளில் அவற்றை திருப்தி செய்வதற்காக பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அத்தகைய நிலைமைகளில் பொதுவாக "AND" அல்லது "OR" உடன் அந்த நிபந்தனைகள் பிரிக்கப்படுகின்றன. அவ்வாறு பிரிப்பதில் இவ்விரண்டும் என்ன வித்தியாசத்தை உருவாக்குகின்றன? ஒரு சட்டப்பிரிவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிபந்தனைகளுக்கு இடையில் "AND" இருந்தால், அவை அனைத்தும் திருப்தி அடைந்தால் மட்டுமே குறிப்பிட்ட சட்டப்பிரிவு செயலில் இருக்கும் .வேறொரு சட்டப்பிரிவின் நிபந்தனைகளுக்கு இடையில் "OR" என்ற சொல் இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒரு நிபந்தனையை மட்டும் திருப்தி செய்தால் போதுமானதாகும் என குறிக்கின்றது .

10. சட்டம் என ஒன்று இருந்தால் அந்த சட்டத்திற்கு எப்போதும் விதிவிலக்குஎன்ற ஒன்றும் கண்டிப்பாக இருக்கும்; அவ்வாறான சட்டத்தின் விதிவிலக்குள் கூட. பல்வேறாக இருக்கும். அவை Proviso's என்பதன் உதவியுடன் சட்டப்பிரிவுகளுக்கிடையில் வழங்கப்படுகின்றன. "Provided that" என்று துவங்குபவை அந்த சட்டப்பிரிவின் அவ்வாறான விதிவிலக்குகளாகும் என்பதை நினைவில் கொள்க

11. வழக்குச் சட்டங்கள் (Case Laws ) என்பவை எப்போதும் எந்தவொரு சட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, அவற்றின் சரியான மேற்கோளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும் எடுத்துக் காட்டாக Union of India Versus Delhi Cloth and General Mills Co. Ltd. 1977 (1) E.L.T. (J 199) (S.C.)
- இதில், Union of India என்பவர் ஒரு மேல்முறையீட்டாளர் (அல்லது வாதியாவார்)
- அதாவது இந்த வழக்கினை தாக்கல் செய்த வர் ஆவார்.
- Delhi Cloth and General Mills Co. Ltd. என்பவர் அவ்வழக்கின்ஒரு பிரதிவாதி (அல்லது பதிலளிப்பவர்)
- 1977 என்பது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடபட்ட ஆண்டு ஆகும்.
- (1) என்பது தீர்ப்பு வெளியிடப்பட்ட பத்திரிகையின் தொகுப்பு எண் ஆகும்.
- E.L.T.. அந்த தீர்ப்பினை வெளியிட்ட வெளியீட்டாளர் அல்லது பத்திரிகையாகும்.
- (J 199) என்பது. அந்த தீர்ப்பு வெளியிடப்பட்ட இதழின் பக்க எண் ஆகும்.
- (S.C.)என்பது அந்த தீர்ப்பு எந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது எனக்குறிப்பிடும் நீதிமன்றத்தின் பெயராகும் .

12. தடைசெய்யப்படாத இனம்(Clause ) - இவை கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின் திருப்தி குறித்த ஒரு சில விதிகளை( provisions) இரத்து செய்யும் அதிகபட்ச ஆளுமை கொண்ட இனங்களாகும்( clauses) . இவை பொதுவாக பின்வரும் வழியில் உள்ளடக்கங்களாக உள்ளன; "Notwithstanding anything contained in". என்றவாறும். அதுமட்டுமல்லாமல் "Subjects to the provisions of." என்றவாறான உள்ளடக்கங்களாககூட இருக்கலாம்

வேறு ஒருசில பொதுவானவைகள்
1. வருமான வரிச் சட்டத்தில், "Income from House Property" என்ற பெயரில் ஒரு தலைப்பு இருப்பதும், "Property consisting of any building or land". என்று பொறுப்பு ஏற்பு செய்திடும் விதிகள் பிரிவு 22 இல் இருப்பதும் ஒரே குழப்பமாக இருக்கின்றதல்லவா? ஆயினும், தலைப்பிற்கும் அதனுடைய விதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால், நிச்சயமாக பிந்தையதே மேலோங்கும் என்ற தகவலை மட்டும்தெரிந்து கொள்க .
2. நம்முடைய வருமான வரிப் பொறுப்பைக் குறைக்க மூன்று வழிகள் உள்ளன:
அ) வரி திட்டமிடல் - சட்டத்தால் வழங்கப்பட்ட நன்மைகளைப் பயன்படுத்தி முற்றிலும் சட்டபூர்வமாக குறைப்பது.
b) வரி தவிர்ப்பு - சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தவறாகப் பயன்படுத்துதல். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, வரி தவிர்ப்பு சட்டவிரோதமானது அன்று. இருப்பினும், எந்தவொரு பொறுப்புள்ள குடிமகனும் அதைப் பயன்படுத்தக்கூடாது.
c) வரி ஏய்ப்பு - அதை மறைப்பதற்காக தவறான தகவல்களை வழங்குவதற்காக. சட்டவிரோத நடைமுறையை பயன்படுத்துதல்.
3. பொதுவாக சட்டத்தில் உள்ள தவறுகளை ஓட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை சரிசெய்வது " சட்டத்தின் ஓட்டைகளை அடைத்தல் ( Plugging the Loophole)" என்று அழைக்கப்படுகிறது.
  இதுவரை நாம் கண்டுவந்த சட்டத்தை விளக்கம் செய்வது என்பது சட்டத்தை கற்றல்தொடர்பான ஒரு தொடர்ச்சியான மற்றும் முடிவில்லாத செயலாகும் .

சனி, 1 ஆகஸ்ட், 2020

மதிப்புமிக்க பேனா- வாழ்க்கை பாடம்

ஜே.ஆர்.டி டாடாவுக்கு ஒரு நண்பர் இருந்தார், அவர் தனது பேனாவை அடிக்கடி  தவறவிட்டு காணாமல் போக்கிவிடுவதால்  எழுதவதற்காக புதிய பேனாக்களை அவ்வப்போது வாங்கி கொண்டேயிருந்தார். அவை மிகவும் விலை மலிவானதாக இருந்ததால் அவ்வாறு தன்னுடைய பேனாக்கள் இழப்பதைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை என இறுமாந்திருந்தார் .
நண்பர் ஜே.ஆர்.டி டாட்டாவிடம் தான்  பேனாக்களை பத்திரமாக வைத்திருக்காமல் காணாமல் போக்கிடும் தனது பொறுப்பற்ற  பழக்கத்தைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறினார்.
ஒரு நாள், ஜே.ஆர்.டி தன்னுடைய நண்பரிடம்  விலையுயர்ந்த பேனாவை வாங்குமாறு பரிந்துரைத்தார், இவ்வாறான விலையுயர்ந்த பேனாவாக இருந்தால் அவருடைய பொறுப்பு எவ்வாறு இருக்கின்றது என பார்க்கலாம் என அறிவுரைகூறினார் அதனைதொடர்ந்து . அந்நண்பரிடம் 22 காரட் தங்கத்திலான பேனாஒன்றினை வாங்கி பரிசளித்தார்.
ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜே.ஆர்.டி தன்னுடைய நண்பரைச் சந்தித்த போது, தற்போதும் பேனாவை இழக்கும் செயல் நடைபெறுகின்றதா என நண்பரிடம் வினவினார்.
நண்பர் சிரித்துக்கொண்டே, இப்போது  தனது பேனாவைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பதாகவும், தங்கத்திலான பேனா மட்டும் தற்போது காணாமல் போகவில்லை பத்திரமாக தன்னுடைய கைவசம் இருக்கின்றது என்றும்  இப்போது மட்டும்   எப்படி கவனக்குறைவாக இல்லாமல் பேனாவை தான்பத்திரமாக வைத்திருக்கமுடிகின்றது  என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதாகவும் கூறினார்.
அதற்கான வித்தியாசம்  பேனாவின் மதிப்பு மட்டுமே என்று ம்  வழக்கமான  அவருடைய செயல்களில் அல்லது பொருட்களின் மீதான கவனமாக வைத்திருப்பதில்  அவரிடம் தவறில்லை, அவர் எதிலும் கவனக்குறைவாக இல்லை, ஆனால் கவனமானது அந்த பொருளின்  அல்லது செயலின் மதிப்பிற்கு ஏற்ப மட்டுமே மாறுகின்றது என ஜே.ஆர்.டி அவருக்கு விளக்கமளித்தார்

ஆம்.  நாம் நம்முடைய  வாழ்க்கையில் மிகவும் மதிப்புள்ள செயல்களை அல்லது பொருட்களைப் பற்றி மிககவனமாக இருக்கின்றோம். கவனம் என்பது மனிதனின் அடிப்படை பண்பு, ஆனால் எப்போது கவனமாக இருக்க வேண்டும் எப்போது கவனமில்லாமல்  இருக்க வேண்டும் என்பது  அந்தந்த பொருளின் அல்லது செயலின் மதிப்பிற்கு ஏற்ப மாறுபடும் .என்பதே வாழ்க்கையின்எதார்த்தமான உண்மை நிலவரமாகும்    மேலும் கவனக்குறைவு  என்பது அதனுடைய  மதிப்பில்லாததண்மையை மட்டுமே காட்டுகிறது.நாம் பணத்தை மதிக்கிறோம் என்றால், செலவு செய்யும் போது கவனமாக இருப்போம் ..
நாம் நேரத்தை மதித்தால், நாம் நேரத்தை வீணாக்க மாட்டோம் ..

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...