சனி, 8 ஜனவரி, 2022

கலைச்சிற்பங்களும் பணியாளரும்

 


முன்னொரு காலத்தில் சிற்பங்களை மிகவும் நேசித்த மன்னர் ஒருவர் இருந்தார். அவர் உலகெங்கிலும் உள்ள சிற்பங்களை சேகரித்து தனது அரண்மனைக்கு கொண்டு வந்துசேர்த்து பாதுகாத்து வந்தார். அவரது அரண்மனையில் பல சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றில் மூன்று சிற்பங்களை மட்டும் அவர் மிகவும் விரும்பினார். அந்த சிற்பங்களை அரசன் மிகுந்த கவணத்துடன் பாதுகாத்து வைத்திருந்தார் என்பது அவருடைய நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும். ஒரு நாள் அவரது பணியாள் அந்த சிற்பங்களை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது, தவறுதலாக அரசனுக்கு பிடித்த சிற்பம் ஒன்று உடைந்து விட்டது
இதை அறிந்த மன்னன் மிகவும் கோபமடைந்து, அந்த பணியாளுக்கு உடனடியாக மரண தண்டனை விதித்தார்
. அரசனின் இந்த உத்திரவினைக் கேட்டவுடன், அந்த பணியாளர் அரசன் மிகவும் விரும்பிய மற்ற இரண்டு சிற்பங்களையும் உடனடியாக உடைத்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அரசன் தன் உதவியாளரை கொண்டு அந்த பணியாளரை தன் அரசவைக்கு அழைத்து வரச் செய்தார்.
பணியாளர் அரசவைக்கு வந்ததும், "மற்ற இரண்டு சிற்பங்களை ஏன் உடைத்தாய்?" என்று தான் மிகவும் நேசிக்கின்ற சிற்பங்களை உடைத்த அந்த பணியாளரிடம் அரசன் கேள்விஎழுப்பியபோது அந்த பணியாளர்., "அரசே, இந்த சிற்பங்கள் களிமண்ணால் செய்யப்பட்டவை , மிகவும் உடையக்கூடியவை. அவை உடையாமல் நிலையாக இருக்ககூடியவை அல்ல. இன்று இல்லையென்றால் நாளை உடைந்துவிடும்.தன்மை கொண்டவை அதனால் பிற்காலத்தில் என்னைப் போன்ற வேறு யாரோஒருவரால் அது உடைந்தால், அவர் கண்டிப்பாக மரண தண்டனையை சந்திக்க நேரிடும் ஏற்கனவே நான் ஒரு சிலையை உடைத்ததால் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது, அதனால் மற்ற இரண்டு சிற்பங்களை உடைத்தால் எனக்கு மேலும் இரண்டு மரணதண்டனைய வழங்கமுடியாது ஆனால் வேறு நபர்கள் அவ்விரண்டினையும் உடைத்தால் அவ்வாறு உடைக்க விருக்கின்ற இரண்டு பேருக்கும் மரணதண்டனை கண்டிப்பாக கிடைக்கும் அதனால் எதிர்காலத்தில் அவ்விரண்டுநபர்களுக்கு மரணதண்டனை கிடைக்காமலிருக்குமாறு இந்த செயலின் மூலம் இரண்டு உயிரைக் காப்பாற்றினேன்," என மிக நீண்ட விளக்கமான பதிலை அளித்தார் அதைக் கேட்ட மன்னன் ஒரு சிலையை உடைத்ததற்காக கடுமையான மரண தண்டனை விதிப்பது சரியன்று என தன் தவறை உணர்ந்து அந்த பணியாளரை மரண தண்டனையிலிருந்து விடுவித்தார்.
அரசன் சிற்பங்களை மிகவும் விரும்பினான் ஆனால் தான் விரும்பிடும் சிலையை உடைத்ததற்காக சாதாரணமான தண்டனை வழங்குவதற்கு பதிலாக மிகக்கடுமையான மரண தண்டனையை பணியாளருக்கு வழங்கியது நீதிக்கு எதிரானது
. நீதியின் நாற்காலியில் அமர்ந்து, ஒருவர் தனது ஆளுமை/உணர்வுகளால் பாதிக்கப்படாமல், செயல்களுக்கு தக்கவாறு நியாயமாக முடிவெடுக்க வேண்டும் பணியாளர் அந்த அரசனுக்கு மனிதவாழ்க்கையின் மதிப்பை கற்றுக் கொடுத்தார்..
பணியாளர் தன்னை விட பல மடங்கு சிறந்தவர் என்பதை மன்னன் புரிந்துகொண்டார் அந்த பணியாளர் தான் மரணத்தின் அருகில் இருந்தும். மனித வாழ்க்கையின் அருமையை மன்னனுக்கு உணர்த்தினார்...
உயர் பதவியில் இருப்பவருக்கு பொறுப்பு உண்டு, அவருடைய தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக
, ஒரு சிறிய குற்றத்திற்கு கூடமரண தண்டனை வழங்குவது அந்த பதவியையே அவமதிப்பதாகும். அரசனாக இருந்தாலும் , நீதி பரிபாலனம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு யாராக இருந்தாலும் நீதியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தீர்ப்பினை வழங்க வேண்டும்.



ஞாயிறு, 26 டிசம்பர், 2021

பொறாமை கொண்ட கிராமத்தின் ஒரு தையல் கடைக்காரர்


ஒரு கிராமத்தில் ஒரேயொரு தையல்கடைகாரர் இருந்தார், அந்த கிராமத்தில்அவர் ஒருவர்மட்டுமே தையல் பணிசெய்ததால் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்களுடைய துனிகளை அவர் ஒருவரிடம் மட்டுமே தைத்து கொண்டனர் அதனால் . தங்களுடைய துனிகளை தைப்பதற்காக அந்த தையல்கடைகாரர்எவ்வளவு பணம் கேட்டாலும் வேறுவழியின்றி அந்த தொகையை கொடுத்து தங்களுடைய துனிகளை தைத்திடும் பணியை செய்து முடித்து கொண்டனர் அதனால் அந்த தையல்கடைகாரர் ஏராளமாக சம்பாதித்தார் கிராம மக்கள்அனைவரும் தன்னிடம் மட்டுமே தங்களுடைய துனிகளை தைக்க வருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்து கொண்டார், அதனால் துணி தைப்பது தொடர்பாக யாராவது அவரிடம் புகார் கூறினால், அவர் அதிக திமிருடன் நடந்து கொள்வார், அவர்களிடம் அதிக வாக்குவாதத்தில் ஈடுபடுவார். அதனால் அந்த கிரமாத்தில் வாழும் பொது மக்கள் அனைவரும் அவர் மீது அதிக கோபமடைந்தனர், ஆனாலும் வேறு வழியில்லாததால் அனவரும் தங்களுடைய துனிகளை தைப்பதற்காக அவரிடமே செல்ல வேண்டியிருந்தது. இந்த சூழலில் ஒரு நாள் ஏழைப் பெண் ஒருவர்தன் குழந்தையுடன் அந்த கிராமத்திற்கு வந்து வாழத் தொடங்கினார். அந்தபெண்ணிற்கு தையல் பணி தெரியும். அதனால், அந்த தையல்கடைகாரரின் கடையில் தனக்கு துனி தைத்திடுவதற்கான பணியை கொடுத்து உதவிடுமாறு அந்த பெண் கோரியபோது அந்த தையல்கடைகாரர் இங்கு தையல் வேலை எதுவும் இல்லை என மறுத்து அந்த பெண்ணை விரட்டினார் . வேறு வழியில்லாததால், அந்த பெண் தன்னிடம் கையிருப்பில் இருந்த சிறிதளவு பணத்தில் தையல் இயந்திரம் ஒன்றினை வாங்கி அந்தகிராமத்தின் ஓரமாக இருந்த ஒருவீட்டின் ஒரு சிறிய அறையை வாடகைக்கு ஏற்பாடு செய்து அந்த கிராமத்தில் தன்னுடைய தையல் பணியை செய்ய ஆரம்பித்தார். அந்தபெண் மனியின் தையல் நன்றாக இருந்தது, மேலும் அந்த பெண் அனைவருடன் மென்மையாகவும் மிக மரியாதையுடனும் பேசுவதுடன் நட்பாகவும் இருந்து வந்தததால். அந்த கிராமத்துமக்கள் ஒவ்வொருவராக அந்த பெண்மனியிடம் தங்கள் துணிகளை தைத்துக்கொள்வதற்காக வர ஆரம்பித்தனர். அந்த பெண்மனியினுடைய தையல் பணி மிகவேகமாக வளர ஆரம்பித்தது, மிகக்குறுகிய காலத்தில், அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் அந்தப் பெண்ணிடம் தங்களுடைய துனிகளை தைத்திடும் பணிக்காகசெல்லத் தொடங்கினர் ஏற்கனவே இருந்த தையல் கடைக்கு யாரும் செல்வதில்லை வாடிக்கையாளர்கள் யாரும் வராததால், அந்த கிராமத்தில் ஏற்கனவே இருந்த தையல் கடையின் வருமானம் நின்று போனது. அதனால் அந்த கிராமத்திற்கு தையல்பணிககாக வந்த அந்தப் பெண்ணை காணும் போதெல்லாம் பொறாமையும் அதிககோபமும் அந்த தையல்கடைகாரருக்கு வந்துவிடும். ஒரு நாள் ஏற்கனவை தையல்கடைவைத்திருந்த தையல்கடைகாரரின் மனைவி புதியதாக தையல்கடை வைத்திருந்த பெண்ணிடம் சென்று, "நீ வந்த பிறகு என் கணவரின் கடைக்கு துணி தைக்க யாரும் வருவதில்லை. இந்த சிறிய கிராமத்தில் இரண்டு தையல்காரர்கள் இருந்தால் நன்றாக சம்பாதிக்க முடியாது. நீங்கள் சம்மதித்தால் நான் . உங்கள் கடையை நீங்கள் கூறும் விலைக்கு வாங்கிகொள்கிறேன்." எனக்கூறினார் புதிய தையல்கடைகார பெண்ணும் தன்னுடைய கடையை விற்க ஒப்புக்கொண்டார். அந்த புதிய தையல் கடைக்கு ஐம்பதாயிரத்திற்கு விற்பதற்கு இருவரும் ஏற்றுகொண்டு கையோடு எடுத்துக்கொண்டு சென்ற பணத்தினை உடன் அந்தபுதிய தையல்கடை வைத்திருந்த பெண்ணிடம் கொடுத்ததால் அன்று மாலையே அந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினார்.

ஆயினும் பொறாமையும் கோபமும் கொண்ட தையல் கடைகாரர், அன்று இரவே அந்த பெண்ணின் தையல் கடையை தீ வைத்து எரித்தார். தையல்கடை எரிய ஆரம்பித்து, அனைத்தும் சாம்பலாயின. இதையறிந்த தையல்கடைகாரரின் மனைவி , " அந்த புதிய தையல்கடையை என்ன செய்தீர்கள்! அந்த புதிய தையல்கடை பெண்மனியை சந்தித்து இந்த கிராமத்தை விட்டே செல்லுமாறு ஒப்பந்தம் ஒன்றினை செய்தேன். அதற்கு நட்டஈடாக ரூபாய் ஐம்பதாயிரத்தினை அந்த தையல்கடைகார பெண்ணிற்கு கொடுத்துவிட்டேன் அந்த பெண்ணும் அந்த தையல் கடையை நமக்கு கொடுத்துவிட்டு இன்று மாலை இந்த ஊரை விட்டு வெளியேறச் சொன்னேன். அவளும் ஒப்புக்கொண்டு இந்த கிராமத்தினை விட்டு வெளியே சென்று விட்டாரே உங்கள் சொந்த கடைக்கு நீங்களே தீ வைத்து எரித்து விட்டீர்களே." எனக்கூறினாள் அதைக் கேட்ட தையல் கடைகாரர் தன் தவறை உணர்ந்தார் ஆனால் இப்போது அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலையாகிவிட்டது

நீதி.எந்தவொரு செயலையும் செய்வதற்குமுன் தன்னுடைய உறவினர்களுடன் கலந்து உரையாடிய பின் முடிவுசெய்து அந்த செயலை செயற்படுத்திடுக



சனி, 18 டிசம்பர், 2021

நிறுவனத்தின் முகப்பு அறிவிப்புபலகையின் இருந்த செய்தி

 ஒரு நாள் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலக ஊழியர்களும் தங்களுடைய அலுவலகத்திற்குள் சென்றுகொண்டிருந்தபோது, அலுவலக வாயிலின் முகப்பில் " நேற்று உங்களுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார், அவர் இந்நிறுவனத்தில் உங்களுடைய முன்னேற்றத்தையும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியையும் தடுப்பதில் முதன்மையானவர். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் அலுவலகத்திலுள்ள கருத்தரங்கு மண்டபத்தில் இன்று காலை சரியாக 11 மணிக்கு அன்னாருக்கு இறுதி நினைவு அஞ்சலி கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதி அஞ்சலி கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கப் படுகிறது” என்று எழுதப்பட்ட செய்தியுடன் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்ததை கண்டனர். .முதலில் அனைவரும் தங்களுடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரின் மரணச் செய்தியை கண்டு மிகவும் வருத்தப்பட்டனர், ஆனால் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவருக்கும் 'நம்மோடு பணிபுரியும் ஊழியர் ஆனால் நம்மனைவரின் முன்னேற்றத்தையும் தடுத்திட முனைகின்ற அந்த நபர் யார்? எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடை இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தையும் தடுக்கின்ற அந்த ஊழியர் யார்?’ என அறிந்துகொள்வதில் மிகவும் அதிக ஆர்வம் எழத் தொடங்கியது . அன்று காலை சரியாக, 11 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய நிறுவனத்தின் கருத்தரங்கு மண்டபத்திற்கு ஒவ்வொருவராக வரத்து துவங்கினர், ஊழியர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், கருத்தரங்கு மண்டபத்தில் மக்கள் நடமாட்டமும் அதிகரித்தது ." நிறுவனத்தில் எனது முன்னேற்றத்தையும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தினையும் தடுப்பதில் முனைப்பாக இருந்த அந்த நபர் இறந்து விட்டது ஒருவகையில் நல்லதுதான் " என்ற ஒரே செய்திதான் அவ்வூழியர்களின் அனைவருடைய மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது இறுதி நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு ஒவ்வொருவராக வரஆரம்பித்தவுடன் ஆர்வமுள்ள ஊழியர்கள் ஒவ்வொருவராக இறந்த அந்த ஊழியர் யார் என காண்பதற்காக அவ்வூழியரை வைத்திருந்த சவப்பெட்டியை நெருங்கத் தொடங்கினர்,ஆனால் அதனை ஒவ்வொருவராக மட்டுமே பார்க்கமுடியும் என்பதால் அலுவலக ஊழியர்கள் வரிசையாக ஒவ்வொருவராக சென்று பாரக்கதுவங்கினர் ஆயினும் அந்த நிறுவனத்தின் அலுவலக ஊழியர் ஒவ்வொருவரும் அந்த சவப்பெட்டியின் உள்ளே பார்த்தவுடன் , அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் திகைத்து அசையாது நின்றுவிட்டனர். அதாவது அந்த சவப்பெட்டியில் உள்பகுதியில் முகம்பார்த்திடும் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனால் யாரொருவரும் அதனுள் பார்த்தாலும் அவரது முகமே அந்த கண்ணாடியில் தெரியும் அதனால் சவப்பெட்டியில் இறந்த நபர் யார் என பார்த்த ஊழியர் ஒவ்வொருவரும் அதில் தன்னுடைய முகத்தை கண்டதும் அதிர்ச்சியில் திகைத்து நின்றுவிட்டனர்


மேலும் "உங்கள் முன்னேற்றத்திற்கும் இந்த நிறுவனத்தின் வளரச்சிக்கும் தடையாக இருப்பவர் , நீங்கள் ஒருவர்தான். உங்களுடைைய வாழ்க்கையை வெற்றிகரமாக உருவாக்கக்கூடியவர் நீங்கள் ஒருவர்மட்டுமே. உங்கள் மகிழ்ச்சி, உங்கள் வெற்றி ஆகியவற்றினை பாதிக்கக்கூடிய நபர் நீங்கள் ஒருவர் மட்டுமே. உங்களுடைய வாழ்க்கையின் வெற்றிக்காக உதவக்கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். நீங்கள் வேறுநிறுவன்த்திற்கு மாறிசென்றாலும்அல்லது உங்கள் நிறுவனத்தின் முதலாளி மாறினாலும், உங்கள் நண்பர்கள் மாறினாலும் வெற்றிகரமான உங்கள் வாழ்க்கை மட்டும் மாறாது,, ஆனால் நீங்கள் "உங்களை" மாற்றிகொண்டு வெற்றிகரமாக உழைப்பதற்காக முயற்சி செய்திடும்போது உங்கள் வாழ்க்கை மாறுகிறது. உங்கள் சொந்த நம்பிக்கைகளின் வரம்புகளை நீங்கள் கடக்கும்போது, உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக மாறுகிறது." என்ற குறிப்பு அங்குள்ள கண்ணாடியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அந்த கண்ணாடியில் தங்களுடைய முகத்தினையும் இந்த செய்திகுறிப்பினையும் கண்டு அனைவரின் உள்ளத்தையும் அந்த செய்தியானது உலுக்கியதால் ஊழியர்கள் அனைவரும் திகைத்து நின்றுவிட்டனர் ஆம் நம்முடைய வாழ்க்கையின் வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் மட்டுமே பொறுப்பு 

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...