ஒருமுறை அரசன் ஒருவன் குதிரையின் மீது ஏறிதனியே காட்டுக் சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு குடிசையைக் கடந்து சென்றபோது, அங்கு கூண்டில் ஒரு கிளி இருப்பதைக் கண்டார்.அரசன் அந்த வழியே செல்வதைக் கண்டதும் அந்த கூண்டுக்கிளி “ஓடு...ஓடு பிடி.. பிடி உடனே அவனை பிடித்து அவனுடைய... குதிரையைப் பிடுங்கு... அவனிடமிருக்கும் பணத்தை பிடுங்கு” என்று கூவியது.
தான் கொள்ளைக்காரர்களின் குடியிருப்பு பகுதிக்குள் வந்திருப்பதை அவ்வரசன் புரிந்து கொண்டார். அதனால் அவ்வரசன் தன் குதிரையை முழு வேகத்தில் ஓடச் செய்தான்.
அந்த கிளியின் பேச்சினை கேட்டு கொள்ளைக்காரர்கள் அந்த அரசனை பின்தொடர்ந்தனர், ஆனால் அரசனின் குதிரை மிக வேகமாக ஓடியது, அதனால் அந்த அரசனை கொள்ளைக்காரர்களால் சுற்றிவளைத்து பிடிக்கமுடியவில்லை அதற்குமேலும் அரசனை துரத்துவதை விட திரும்பி செல்வதே மேல்என பின்தொடர்வதை கைவிட்டுவிட்டனர்
அதனை தொடர்ந்து அடுத்த குடியிருப்புபகுதிக்குள் செல்லும் போது அம்மன்னன் மற்றொரு கிளி ஒரு கூண்டிற்குள் குடிசை ஒன்றில் இருப்பதைக் கண்டார்்.
இந்த இரண்டாவது கிளியானது அந்த அரசனைப் பார்த்ததும் “வணக்கம் வாருங்கள் ஐயா.. விருந்தினர் வந்துவிட்டார்கள்...அவர் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வாருங்கள் அமர்ந்து ஓய்வெடுங்கள் ஐயா விருந்தினர் சாப்பிடுவதற்கு உணவுப்பொருட்களை கொண்டுவாருங்கள் ஐயா உங்களுடைய வயிறாற உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்லுங்கள்” என முகமன்கூறி வரவேற்றது .
அந்த நேரத்தில் தான், கிராமத்தின் விவசாயி ஒருவரின் வீட்டிற்கு வந்ததை அந்த அரசன் அறிந்துகொண்டார் உடன் தன்னுடைய குடிசைக்கு மன்னர் வந்திருப்பதை உணர்ந்த அந்த விவசாயி உடனே வெளியே வந்து அரசனை வரவேற்றார்
அரசன், அவ்விவசாயியின் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டான். பின்னர், அவரிடம் , முன்பு நடந்த அனைத்தையும் கூறி, “ஐயா! ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகளின் இயல்பில் ஏன் இவ்வளவு வேறுபாடு?” என சந்தேகம் எழுப்பினார்
அந்த விவசாயிபதில் எதுவும் கூறுமுன், அவருடைய கிளியானது , “அரசே.. நாங்கள் இருவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகள்தான் ஆனால் சிறு வயதிலேயே இருவரும் பிரிந்துவிட்டோம். அந்தகிளி ஒரு கொள்ளைக்காரனிடம் வளர்க்கப்பட்டது, நான் ஒரு வவிவசாயியால் இங்கு வளர்க்கப்பட்டேன்.
அந்த கிளியானது நாள் முழுவதும், கொள்ளையர்களின் வன்முறை யுடன் கூடிய சொற்களைக் கேட்டு கேட்டு அவ்வாறு மாறிவிட்டது , நான் இந்த கிராமத்தின் விவசாயியின் விவசாயம்சார்ந்த விவதங்களையும் விருந்தினர்களின் உபசரிப்புகளையும் கேட்டு பழகிவருகிறேன். அதனால்தான் நாங்கள் இருவரும் வெவ்வேறாமாக வளர்ந்துவருகின்றோம்.” என விளக்கமளித்தது
கற்றல்: எந்தவொரு குழந்தையும் வளரும்போது, பெற்றோர், சுற்றியுள்ளஉறவினர்கள், நண்பர்கள் அந்த குழந்தையினுடைய வாழ்க்கையில்அதிக செல்வாக்கு செலுத்துகின்றனர். அதனால்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்களை புகுத்துவதில் நன்கு கவனம் செலுத்த வேண்டும் . குழந்தைகளை கெட்ட சகவாசத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும். என கோரப்படுகின்றது
சனி, 23 ஏப்ரல், 2022
ஒருஅரசனும் இரண்டு கிளிகளும்
சனி, 16 ஏப்ரல், 2022
மிகவும் சக்திவாய்ந்த நபர் யார்?
ஒரு நகரத்தில், ஏழை தையல்காரர் ஒருவர் தனது ஒரே மகனுடன் தங்களுடைய சிறிய வீட்டில் வசித்து வந்தார். தன் மகன் நன்றாகப் படித்து நல்ல பணியில் சேர வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.
எனவே, அவர்களின் தற்போதைய நிலைமை எப்படி இருந்தாலும், தங்களுடைய மகனுக்கு சிறந்த கல்வியைப் பெற அவர் முடிவு செய்தார். மகனின் கல்விக்காக தந்தை அல்லும் பகலும் அயராது உழைத்து பணம் சம்பாதித்தார். அவரது மகனும் நன்கு கவனத்துடன் படித்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தையின் கனவு நனவாகியது, அவரது மகன் அருகிலுள்ள நகரத்தின் பெரிய நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு நாள், தந்தை தனது மகனின் அலுவலகத்திற்குச் செல்ல முடிவு செய்தார். தந்தை தனது மகனை அலுவலகத்தில் காண வந்தபோது, அவரது மகன் மிகப்பெரிய நிறுவனத்தின் நிருவாக அலுவலகத்தில் மிக ஆடம்பரமான நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சிஅடைந்தார். அவருடைய மகன் தன் தந்தையைப் பார்த்தவுடனேயே மிகவும் மகிழ்ச்சியடைந்து நாற்காலியில் இருந்து எழுந்து அவரை வரவேற்றான்
தந்தை சிரித்துக்கொண்டே மகனை நாற்காலியில் உட்கார வைத்து, மகனின் பின்னால் நின்று, மகனின் தோளில் கைகளை வைத்து கொண்டு, “மகனே, இப்போது யார் மிகவும் சக்திவாய்ந்த மனிதராக உணர்கின்றாய்?" என வினவினார்
அதற்கு அவருடை மகன் , "அப்பா, நான்தான் மிகவும் சக்திவாய்ந்த நபராக உணர்கிறேன்." என பதிலளித்தான்
உடன் தங்களுடைய மகன் தன்னை மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கூறுவான் என எதிர்பார்த்திருந்தார், ஆனால் மகனின் பதிலால் மிகவும் ஏமாற்றமடைந்த அவர், "சரிதான் மகனே" என்று பதிலளித்தார். தங்களுடைய மகனின் அலுவலகத்தை சுற்றி பார்ததுவிட்டு தங்களுடைய வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறவிருந்தார்
ஆனால் புறப்படுவதற்கு முன், அந்த தந்தை தங்களுடைய மகனிடம் , "மகனே நீ இன்னும் சக்திவாய்ந்த நபர் என்று நினைக்கின்றாய்?" என அதே கேள்வியைக் கேட்டார்
அதற்கு மகன், "இல்லை, தந்தையே, தற்போது யாரேனும் மிகவும் சக்தி வாய்ந்தவர் யார் என வினவினால், அதற்கு நீங்கள்தான் என நான் பதில்கூறுவேன்" என்று பதிலளித்தார்.அதனைதொடர்ந்து அவரது தந்தை “ஆனால்சற்றுமுன் நீ கூறினாயே, நீதான் மிகவும் சக்தி வாய்ந்தவன் என்று ” என மீண்டும் சந்தேகம் எழுப்பினார்
அதனை தொடர்ந்து மகன் சிரித்துக்கொண்டே , "ஆம், அப்பா அப்போது நான் கூறினேன், ஏனெனில் அந்த நேரத்தில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபரின் கைகள் என் தோள்களில் இருந்தன, எனவே அந்த நேரத்தில் நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்ந்தேன்." என பதில் கூறினார் இதைக் கேட்ட தந்தை கண்களில் நீர் பெருக, மகனைக் கட்டி்அணைத்துக் கொண்டார்
கற்றல்: நம் பெற்றோரின் அன்பும்அறவணைப்புமே நம்மை இந்த உலகின் மிக சக்திவாய்ந்த நபராக மாற்றும்.
சனி, 9 ஏப்ரல், 2022
இரு சகோதரர்களின் கதை
ஒரு சிறிய கிராமத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையும் அவரோடு அவருடைய இரண்டுமகன்களும் வாழ்ந்து வந்தனர். அந்த குடிகார தந்தைதினமும் அதிகமாக குடித்துவிட்டு தங்களுடைய இரு மகன்களையும் அடித்து உதைத்து கொடுமை படுத்திகொண்டேஇருப்பார். அந்த குடிகார தந்தையுடைய இருமகன்களும் இவ்வாறே வளர்ந்தது வந்தனர் ஆனால் அவ்விருவரில் பெரியவன் தன்னுடைய தந்தையைப் போலவே ஒரு குடிகாரனாக மாறிவிட்டான், இளையவன் வெற்றிகரமான ஒரு தொழிலதிபரானாக உயர்ந்தான், அதே குடிகார தந்தையுடன் வாழ்ந்த இருவரில் , ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்று இவ்வளவு பெரிய தொழிலதிபராகவும், மற்றொருவன் தந்தையை போலவே குடிகாரனாகவும் எவ்வாறு மாறி வளரமுடியும் என்ற சந்தேகம் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரி்ன் மனதிலும் எழுந்தது.
அதனால், ஒரு நாள் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் சகோதரர்கள் இருவரிடமும் இதனை குறித்து பேச நினைத்தனர். முதலில் அவர்கள் மூத்த சகோதரனிடம் சென்றனர். ஆனால் அவன் தன்னுடைய தந்தையை போன்று வழக்கம் போல் அதிகமாக குடித்துவிட்டு தரையில் படுத்திருப்பதை கண்டு அருவறுப்பு அடைந்தனர்.
அவர்களில் சிலர் அந்த பெரியசகோதரனை எழுப்பி நாற்காலியில் உட்கார உதவினார்கள், அவன் சற்று நிதானமானபோது, “ஏன் இவ்வாறு குடித்து வாழ்க்கையை வீணாக்கி கொள்கிறாய்?” என வினவினார்கள்.
உடன் அநந்த மூத்த சகோதன், "எங்களுடைைய தந்தை ஒரு குடிகாரர். அவர் தினமும் மிக அதிகமாக குடித்துவிட்டு எங்கள் இருவரையும் அத்துக்கொண்டேயிருப்பார்.இவ்வளவு காலம் தொடர்ந்து அவரோடு வாழ்ந்துவந்ததால் நானும் என் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவரைப் போலவே ஆனேன்”, என பதிலளித்தார்.
பின்னர் அவர்கள் இளைய சகோதரனை சந்தித்து அவரிடம், "நீங்கள் ஒரு மரியாதைக்குரிய தொழிலதிபர்,என எல்லோரும் உங்களைப் போற்றுகிறார்கள், உங்களுக்கு எவ்வாறு மிகப்பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் எனும் உத்வேகம் கிடை்ததது?" என சந்தேகம் எழுப்பினார்
உடன் இளைய சகோதரன், "என் தந்தைதான்" என பதிலளித்தார். எல்லோரும்மிகவும் ஆச்சரியமாக, “அது எவ்வாறு?” என மீண்டும் சந்தோகம் எழுப்பினார்கள்.
அதற்கு அவர், “எனது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், குடிபோதையில் எங்களை தினமும் அடி்ததுகொண்டேஇருப்பார். இவ்வாறான நிகழ்வை தினமும் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போதுதான் நான் அவரைப் போல இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். கண்ணியமாக இருக்க வேண்டும், மதிக்கப்பட வேண்டும் வெற்றி பெற வேண்டும். என முடிவுசெய்தேன் அதனால்தான் நான்கடுமையாக உழைத்து சிறந்த தொழில் அதிபராக முன்னேறினேன்." என பதிலளித்தார்
கற்றல்: நாம் என்னவாக இருக்கிறோம் என்பது நமது சிந்தனையைப் பொறுத்தது. நமது நேர்மறையான நல்ல சிந்தனையே நம்மை நல்ல மனிதனாக மாற்றுகிறது.
சனி, 2 ஏப்ரல், 2022
அரசனின் கேள்வியும் அறிஞரின் சுவாரசியமான பதிலும்
ஒரு நாள் அரசன் ஒருவன் தனது நாட்டிற்கு அறிஞர் ஒருவர் வருகை தருவதை பற்றி அறிந்தார். அம்மன்னன், அந்த அறிஞரை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருந்தார் அதனால் அவ்வறிஞரை தன்னுடைய அரசவைக்கு வருமாறு அழைத்தார், அவ்வறிஞர் அவ்வரசனின் அவைக்கு வந்தபோது, அவரிடம், “நீங்கள் மிகப்பெரிய அறிஞர் என நான் மிக மகி்ழ்ச்சியடைகின்றேன் என் மனதில் கேள்வி ஒன்று எழுந்துள்ளது அதற்கான பதிலை தங்களிடம் அறிந்து கொள்ளவிரும்புகின்றேன் ஆனால் எனது கேள்விக்கு தங்களால் பதிலளிக்க முடியாவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.” எனக்கூறினார்
உடன் அவ்வறிஞரும் “ அரசே தாராளமாக கேளுங்கள் அதற்கான பதிலை நான் கண்டிப்பாக கூறுகின்றேன்” என சிரித்துக் கொண்டே சம்மதித்தார் .அதன்பின்னர் அவ்வரசன், ‘மனித உடலின் சிறந்த உறுப்பு எது? அதனை உங்களால் கொண்டு வர முடியுமா?” என வினவினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர் சிறிது நேரம் வெளியே சென்று, இறந்த மனிதனின் நாக்குடன் திரும்பி வந்து, "இதோ, இதுதான் மனித உடலின் சிறந்த உறுப்பு" என்று மன்னரிடம் காட்டினார்.இப்போது, அந்த மன்னன், ‘மனித உடலின் மிக மோசமான உறுப்பு எது?" என மீண்டும் மற்றொரு வினா எழுப்பினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர் மீண்டும் சிறிது நேரம் வெளியே சென்று இறந்த மனிதனின் நாக்குடன் திரும்பி வந்து அந்த அரசரிடம் காட்டி, "இதோ மனித உடலின் மிக மோசமான உறுப்பு" என காண்பித்தார்.
அந்த அரசன் தன்னுடைய இரண்டாவது கேள்விக்கும் அவ்வறிஞர் மனிதனுடைய அதே நாக்கை மீண்டும் கொண்டுவந்து காண்பிப்பதைக் கண்ட மன்னன், "என்னுடைய இரண்டு வெவ்வேறான கேள்விக்கும் மனிதனின் ஒரே உறுப்பினை ஏன் கொண்டு வந்து காண்பிக்கின்றீர்? அது எவ்வாறு மனித உடலின் சிறந்த உறுப்பாகவும் மோசமான உறுப்பாகவும் இருக்க முடியும்?" என மிகப்பெரும் சந்தேகத்தினை எழுப்பினார்
உடன் அவ்வறிஞர், "அரசே, நாமனைவரும் இந்த நாவின் உதவியால் பேசுகிறோம், நாம் நல்லதையும்இந்த நாவினால்தான் பேசுகின்றோம் அவ்வாறே கெட்டதையும் இந்த நாவினால்தான் பேசுகின்றோம் அதாவது நல்லது கெட்டது ஆகிய இரண்டையும் நம்முடைய ஒரே நாவினால்தான் பேசுகிறோம், அதனால்தான் நாம் வாழும் இந்த சமுதாயத்தில் எல்லா பிரச்சினையும் உருவாகி கெட்டது நடக்கின்றது அல்லது அந்த பிரச்சினைக்கான தீர்வு உருவாகி நல்லதும் நடக்கின்றது." என விவரம் கூறினார். இந்தவிவரத்தை கேட்டு மன்னன் மிகமகிழ்ச்சியடைந்து அந்த அந்த அறிஞருக்கு வெகுமதி அளித்தார்.
கற்றல்: ஒருவர் எப்போதும் பொறுப்புடன் பேச வேண்டும்
சனி, 26 மார்ச், 2022
பார்வையற்ற கணவன்
ஒருவன் மிக அழகான பெண்ஒருத்தியை மணந்தான் .திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அந்த மனிதன் தன்னுடைய மனைவியை மிகவும் நேசித்தான்
ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, தனக்கு தோல் நோய் வந்தது என்பதையும், அதன் காரணமாக படிப்படியாக தனது அழகை இழக்கின்றோம் என்பதையும்அந்த மனைவி அறிந்தார்.
இதை அறிந்த மனைவி , “நான் அழகாயில்லாமல் இருந்தால், என் கணவர் என்னை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்...அதனை பொறுத்துக் கொண்டு என்னால் வாழ முடியாது.",மனதிற்குள் யோசிக்க ஆரம்பித்தாள்
இதற்கிடையில் ஒரு நாள் அவளுடைய கணவன் ஏதோ பணிசெய்வது தொடர்பாக வெளியூர் செல்ல நேர்ந்தது. பணி முடிந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பி கொண்டி ருந்தபோது ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் அந்த மனிதன் தனது இரண்டு கண்களையும் இழந்தார்
இதையெல்லாம் மீறி, அவர்களின் திருமண வாழ்க்கை வழக்கமாகவே நடந்துவந்தது.
சிறிது காலம் கழிந்தபின்னர், அம்மனைவி தனதுதோல் நோயால் தன்னுடைய அழகை முற்றிலும் இழந்தாள். அதனால் அம்மனைவயின் உருவம் பார்க்க சகிக்காமல் அசிங்கமாக மாறிவிட்டது, ஆனால் அவளுடைய பார்வையற்ற கணவனால் அதைப் பார்க்க முடியவில்லை. அதனால் அவர்களின் திருமண வாழ்க்கை பாதிக்கவில்லை
அவளுடைய கணவன் எப்போதும் போல இருந்ததால் அவர்களுடைய திருமண வாழ்க்கையும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது
ஒரு நாள் மனைவி இறந்து போனார். இப்போது அந்த மனிதன் மிகவும் சோகமாகவும் தனியாகவும் இருந்தார்.அதனால் அந்த மனிதன் தான் வாழும் நகரத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
தன்னுடைய மனைவிக்கான அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்தபின்னர். அடுத்த நாள்,புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த மனிதனுடைய பக்கத்து வீட்டுக்காரர் , அந்த மனிதனிடம் சென்று, “உங்களுக்கோ இரு கண்களும் பார்வை தெரியாததால் பல ஆண்டுகளாக உங்களுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் உங்கள் மனைவி எப்போதும் இருந்தார் உங்களுடைய மனைவியின் ஆதரவின்றி நீங்கள் எவ்வாறுதனியாக வாழ முடியும்? அது உங்களுக்கு மிகக்கடினமாக இருக்குமே." என அனுதாபம் தெரிவித்தார்
அதற்கு அந்த மனிதன், “நண்பரே, நான் பார்வையற்றவன் அன்று. நான் பார்வையற்றவன் போன்று நடித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், என் மனைவிக்கு தன் தோல்நோயைப் பற்றித் தெரிந்ததும், அவள் அதைப் பற்றி கவலைப்படுவதையும் பயப்படுவதையும் உணர்ந்தேன் என் மனைவிக்கு அவளின் அசிங்கமான தோற்றத்தை நான் பார்க்க முடியும் என்று தெரிந்திருந்தால், அவளுடைய நோயை விட அது அவளை அதிகம் பாதித்திருக்கும். அவள் மிகவும் நல்ல மனைவி, நான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினேன். அதனால்தான் இத்தனை வருடங்களாக நான் பார்வையற்றவனாக நடித்தேன்." என பதில் கூறினார்
கற்றல் மகிழ்ச்சியாக இருக்க, சில சமயங்களில், ஒருவருக்கொருவர் குறைபாடுகளை சுட்டிகாட்டாமல் அனுசரித்து வாழ பழகிகொள்ள வேண்டும்.
சனி, 19 மார்ச், 2022
மகிழ்ச்சியாக எவ்வாறு வாழ முடியும்?
நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு மனிதன் துறவிஒருவரிடம் சென்று, "ஐயா நான் எவ்வாறு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது?" என வினவினார்
இதைக் கேட்டஅந்த துறவி, அந்த மனிதனை தன்னுடன் காட்டிற்கு நடந்து வரும்படி கூறினார். அந்த மனிதனும் ஒப்புக்கொண்டான் அவர்கள் இருவரும் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டில் நடந்துகொண்டிருந்தபோது, துறவி அந்த மனிதனிடம் அங்கே தரையில் கிடந்த கல் ஒன்றினை கையில் எடுத்துகொண்டுவருமாறு கூறினார், உடன் அந்த மனிதனும் தரையில் கிடந்த அந்த கல்லை கையில் எடுத்து வைத்து கொண்ட பின்னர் இருவரும் நடக்கத் தொடங்கினர். சிறிது நேரம் அந்த கல்லை கையில் வைத்து கொண்டே நடந்த பிறகு, அந்த மனிதன் துறவியிவிடம், “ஐயா, இந்த கல்லை என்னுடைய கையில் தூக்கி கொண்டுவருவதால் என்னுடைய கை வலிக்கிறது” என்றார்.
துறவியும், “சரி, நீ கையில் எடுத்துகொண்டுவரும் அந்தக் கல்லை கீழே தரையில் போட்டு விட்டு வா” என்றார்.
துறவி இவ்வாறுச் சொன்னவுடனேயே, அந்தமனிதனும் அந்தக் கல்லைக் கீழேவீசி எறிந்து விட்டான். மீண்டும் அவர்கள் இருவரும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர்
சிறிது நேரம் கழித்து, துறவி, “இப்போது எப்படி உணர்கிறாய்?” என அந்த மனிதனிடம் வினவினார்.
உடன் , ‘ ஐயா நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அந்த கல்லை எறிந்த பிறகு, எனக்கு அவ்வளவு வலி எதுவும் இல்லை கையிலும் வலிஎதுவும் இல்லாமல் நன்றாக மகிழ்ச்சியாக உணர்கிறேன்." என அந்த மனிதன் பதிலளித்தான்
அப்போது துறவி, “இதுதான் மகிழ்ச்சியின்இரகசியம். இனி நீயும் இவ்வாறே மகிழ்ச்சியாக வாழலாம்.” என அறிவுரை கூறினார்
அவ்வாறான துறவியின் அறிவுரையை கேட்ட அந்த மனிதன் மிகக்குழப்பமடைந்து, “எனக்கு புரியவில்லை ஐயா” என வினவினான்.
துறவி சிரித்துக் கொண்டே , 'மக்கள் தங்கள் வாழ்க்கையில் மனதில் வலியை ஏற்படுத்தும் எத்தனையோ கற்களைத் தொடர்ந்து சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டுவருகிறார்கள், பிறகு அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எனவே, மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அவ்வாறான மனதிற்கு வலியைத் தரும் கற்களை மனதிலிருந்து தூக்கி எறிந்து விட்டு நிம்மதியாக வாழ பழக வேண்டும்.” என அறிவுரைகூறினார்
சனி, 12 மார்ச், 2022
ஓவியரும் பணக்கார பெண்ணின் உருவப்படமும்
ஒரு நகரத்தில்ஓவியர் ஒருவர் வாழ்ந்துவந்தார், அவருடைய புத்திசாலித்தனமான ஓவியத்தினால்ர் அந்நகரம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். அவருடன் ஓவியம் வரைகின்ற பயிற்சியாளர் ஒருவரும் வாழ்ந்துவந்தார் ஒரு நாள் ஒரு பணக்கார பெண்மணி தனது நாயுடன் அவரைச் சந்தித்து, தனது நாயுடன் இருக்குமாறான தோற்றத்துடன் தன்னை ஓவியம் வரையுமாறு கோரினார், அந்த ஓவியரும் ஒரு வார கடின உழைப்பிற்குப் பிறகு, நாயுடன் சேரந்துநிற்கும் பணக்கார பெண்மணியின் ஓவியத்தினை ஒருவழியாக வரைந்து முடித்தார். அந்த வார முடிவில் அந்த பணக்கார பெண்மனி தன்னுடைய நாயுடன் தான்சேர்ந்து நிற்கும் தன்னுடைய ஓவியத்தை பெற்று கொள்ள வந்தாள், அவளுடைய நாயும் அவளுடன் வந்திருந்தது.
ஓவியர் அந்த உருவப்படத்தைஅந்த பணக்கார பெண்மனியிடம் காட்டினார்.
அந்த பணக்கார பெண்மணி அந்த ஓவியத்தைப் பார்த்தார் ஓவியம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் அவளுடைய நாய் அந்த ஓவியத்தைப் பார்த்து அமைதியாக இருந்தது அதனால் அந்த பணக்கார பெண்மனி, “நீ வரைந்த என்னுடைய ஓவியத்தைைபார்த்து என்னுடைய நாய் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கின்றது உன்னுடைய ஓவியம் என்னுடைய நாயைக்கூட கவரமுடியவில்லை. அதனால் இதுவெறும் குப்பைதான் உன்னுடைய ஓவியத்தைப் பற்றி பலரும் மிகவும் பாராட்டியதால்தான் நான் இங்கு வந்தேன், ஆனால் அது தவறு. இந்த ஓவியத்திற்கு பணம் எதுவும் தரமாட்டேன். நீயே இதை வைத்துகொள்", என கோபமாக கூறிவிட்டு அவள் கிளம்ப தயாரானாள் .
அப்போது, அந்த ஓவியர் அவளைத் தடுத்து நிறுத்தி, “அம்மா, உங்களுடைய நாயை இந்த ஓவியம் கவரவில்லை என்பதுதானே உங்களுடைய விருப்பம், நாளைக் காலை வாருங்கள், அதற்குள் நான் இந்த ஓவியத்தில் அவ்வாறான தவறைத் திருத்தி சரிசெய்துவிடுகின்றேன். நாளை உங்கள் நாய்க்கும் இந்த ஓவியம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.", என கேட்டுகொண்டார்
அடுத்த நாள், அந்த பணக்கார பெண்மனி மீண்டும் தனது நாயுடன் வந்துசேர்ந்தாள்
இந்த முறை பணக்கார பெண்மணி தனது நாயுடன் தன்னுடைய ஓவியத்தை காண அருகில் வந்தவுடன், அந்த பெண்மனியினுடைய நாய் மிகவிரைவாக ஓடிவந்து அந்த ஓவியத்தை நக்க ஆரம்பித்தது, இதைப் பார்த்தஅந்த பணக்கார பெண்மணி தனது நாய்க்கு தன்னுடைய நாயுடனான அந்த ஓவியம் மிகவும் பிடித்துவிட்டது என மிக மகிழ்ச் சியடைந்தார். அந்த ஓவியத்திற்கான பணத்தை அந்த ஓவியரிடம் கொடுத்துவிட்டு ஓவியத்தை வாங்கி கொண்டு திரும்பி சென்றுவிட்டாள்
இதைப் பார்த்த ஓவியரின் பயிற்சியாளர் மிகவும் ஆர்வமாகி அந்த ஓவியரிடம் , “நேற்று, இதே ஓவியத்தை அந்த பணக்கார பெண்மனியின் நாய் திரும்பிகூட பார்க்கவில்லை ஆனால் இன்றுஅந்த நாய் வேகமாக ஓடிவந்து அதே ஓவியத்தினை நக்கிக்கொண்டிருந்ததே. இது எப்படி சாத்தியம்?" என சந்தேகத்தினை எழுப்பினார்
ஓவியர் சிரித்துக்கொண்டே, "தம்பி நான்நேற்று இரவு அந்த ஓவியத்தின் கீழ் விளிம்பில் சிறிய இறைச்சித் துண்டு ஒன்றினை கொண்டு வந்துத் தேய்த்தேன், அந்த இறைச்சியின் வாசனையால் இன்று அந்த பணக்கார பெண்மனியினுடைய நாயானது அதே ஓவியத்தை நக்க ஆரம்பித்துவிட்டது" , என பதிலளித்தார்
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள...
-
முன்னொ ரு காலத்தில் , வயதானவர்ஒரு வர் தனது பக்கத்து வீட்டுக்கார இளைஞன ை ஒரு திருடன் என் றுகூறி அந்த தவறான வதந்தி யை அந்த ஊர...
-
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...