ஒரு முறை பெரிய கப்பல் ஒன்றின் இயந்திரம் பழுதடைந்துவிட்டது. அந்நிறுவனத்தில் இருந்த யாராலும் அந்த கப்பலின் பழுதைசரி செய்ய முடியவில்லை. எனவே, அதை பழுதினை சரிசெய்ய, 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இயந்திரப்பொறியாளரை நிறுவன உரிமையாளர் பணியமர்த்தினார்.
அந்த புதிய இயந்திர பொறியாளர் அந்த கப்பலுக்கு வந்து பழுதடைந்த இயந்திரத்தை மேலிருந்து கீழாகமுழுவதையும் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார்.
அதன் பிறகு, அவர் தனது கருவிகளின் பையை தரையில் வைத்து அதிலிருந்து ஒரு சிறிய சுத்தியலை மட்டும் வெளியே எடுத்தார். அவ்வியந்திர பொறியாளர்
அந்த கப்பலின் இயந்திரத்தில் மெதுவாக எதையோ தட்டினார். அந்த நிகழ்வின்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் உடன் இருந்தார், உடன் கப்பலின் அந்த இயந்திரம் நன்றாக இயங்க ஆரம்பித்தது இதைப் பார்த்துஅந்த நிறுவனத்தின் உரிமையாளர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
அந்த கப்பலின் இயந்திரத்தின் பழுதுபார்த்திடும் பணி முடிந்ததும், அவ்வியந்திர பொறியாளர் பழுதுபார்க்கும் கட்டணத்திற்கான பட்டியாலை கப்பல் நிறுவன உரிமையாளரிடம் கொடுத்தார். அந்த பட்டியலை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
பட்டியலில் - 20,000$ என இருந்தது
உடன் கப்பலின் உரிமையாளர் , "ஏன் இவ்வளவு? நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. எங்களுக்கு விரிவான பட்டியலாக கொடுங்கள்…" எனக்கோரினார்
உடன் பொறியாளர் புதிய விவரமான பட்டியலை நிறுவன உரிமையாளரிடம் கொடுத்தார். உரிமையாளர் பட்டியலை பார்த்தபோது அதில்..
- விவரம்- ஒரு சுத்தியலால் தட்டுதல் கட்டணம் :2$,எங்கே தட்டவேண்டும் என தெரிந்துகொள்வதற்கான கட்டணம்: 19,998$. ஆக மொத்த கட்டணம் - 20,000$ என இருந்தது
(பட்டியலின் முடிவில் பின்வருமாறான குறிப்பு இருந்தது)
குறிப்பு 30 நிமிடங்களில் ஒரு பணி செய்தால், அதை 30 நிமிடங்களில் எவ்வாறு செய்வது என்று 20 வருடங்கள் கற்றுக்கொண்டேன். நீங்கள் எனக்கு பல வருடங்களாக கடன்பட்டிருக்கிறீர்கள் நிமிடங்களி அல்ல..
கற்றல்:
ஒருவரின் நிபுணத்துவம் அனுபவத்தை நாம் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவை போராட்டங்கள், சோதனைகள் கடின உழைப்பின் விளைவாகும்.
ஞாயிறு, 29 ஜனவரி, 2023
பழுதுபார்க்கும் செலவு
ஞாயிறு, 22 ஜனவரி, 2023
முதுமையில் மகிழ்ச்சியின் இரகசியம் (கட்டாயம் படிக்கவும்)
ஒருமுறை புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் பயணத்தின் போது ஒரு நகரத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஒரு முதியவரை சந்தித்தார். சிறிது நேரத்தில் இருவரும் நன்றாகப்பேசி பழகினர்.
முதியவர் சாக்ரடீஸை தனது இல்லத்திற்கு வரும்படி வற்புறுத்தினார். சாக்ரடீஸ் சம்மதித்து முதியவரின் வீட்டிற்கு சென்றார். முதியவர் மகன்கள், பேரன்கள் பேத்திகள் என ஒரு பெரிய அளவிலான குடும்பஉறுப்பினர்களைக் கொண்டிருந்தார்,
சாக்ரடீஸ் முதியவரிடம் , 'உங்கள் வீட்டில் திருப்தியும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. , நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்?" என கேட்டார்
உடன் முதியவர் , "இப்போது, நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை. , எங்கள் குடும்பத்திற்கு என ஒரு நல்ல தொழில் உள்ளது, அதன் அனைத்து பொறுப்புகளும் இப்போது மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அதனால் எங்கள் குடும்பத்தொழிலை மகன்களும் எங்கள் மருமகள்கள் வீட்டையும் நன்குக் கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் எங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது." என விளக்கமளித்தார்
இதைக் கேட்ட சாக்ரடீஸ், "ஆனால் இந்த முதுமையிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியம் என்னவென்று கூறுங்களேன்?"
முதியவர் சிரித்துக்கொண்டே , “நான் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்க்காமல், கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் ஒரே ஒரு கொள்கையை மட்டுமே ஏற்றுவாழ்ந்துவருகின்றேன்.
நானும் என் மனைவியும் எங்கள் குடும்பப் பொறுப்பை மகன்களிடமும் மருமகள்களிடம் ஒப்படைத்தோம். நான் என் பேரக்குழந்தைகளுடன் சிரித்து விளையாடுகிறேன்.
எங்கள் மகன்ள் தவறு செய்தால், நான் அவர்களின் எந்த வேலைக்கும் இடையூறாக இல்லாமல் அமைதியாக இருப்பேன். ஆனால் பிள்ளைகள் என்னிடம் ஆலோசனைக்கு வரும்போதெல்லாம், என் வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் அவர்கள் முன் வைத்து, அவர்களின் தவறின் தீய விளைவுகளைப் பற்றி எச்சரிக்கிறேன்.
இப்போது அவர்கள் என் ஆலோசனையை எவ்வாறு பின்பற்றுகின்றார்கள் அல்லது பின்பற்றவில்லை என்பதைப் பார்ப்பது என் வேலை அன்று, அதனால்அவர்கள் பின்பற்றவில்லை என்றால், என் மனதை வருத்தப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். என்னுடைய அறிவுரைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் அவர்களை வற்புறுத்துவதும்இல்லை.
என்னுடைய ஆலோசனைக்குப் பிறகும் அவர்கள் தவறு செய்தால் நான் கவலைப்பட மாட்டேன், ஆனால் அவர்கள் மீண்டும் என்னிடம் வந்தால், நான் அவர்களுக்கு மீண்டும் சரியான ஆலோசனைகூறி அனுப்பிவைக்கிறேன்." என மிகநீண்ட விளக்கமளித்தபோது சாக்ரடீஸ் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
சாக்ரடீஸ், " இந்த வயதில் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உங்களிடமிருந்து நான் மிகச்சரியாக புரிந்து கொண்டேன்." எனக்கூறினார்
கற்றல்:
நீங்கள் வயதின் நான்காவது கட்டத்தில் நுழைந்தால், முதலில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள், இது மகிழ்ச்சிக்கான முதல் படியாகும். மற்றவர்களின் வேலையில் தலையிடுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம்.
ஞாயிறு, 15 ஜனவரி, 2023
பயத்திலிருந்து வெளியேறிடுக
"ஒரு காலத்தில் அரேபியாவிலிருந்து இரண்டு அற்புதமான பருந்துகளைப் பரிசாகப் பெற்ற ஒரு மன்னன். அவை தான் இதுவரை கண்டிராத மிக அழகான பறவைகளான அவ்விலைமதிப்பற்ற பருந்துகளுக்கு நன்கு பறப்பதற்கான பயிற்சி அளிக்க ஒருபயிற்சியாளரை நியமித்து பயற்சி கொடுத்தார். பலமாதங்கள் கடந்தபின்னர் ஒரு நாள் பருந்துகளில் ஒன்று கம்பீரமாகப் வானத்தில் உயர்ந்து பறந்தது ஆனால், மற்றொருப் பறவையானது வந்த நாள் முதல் அது அமர்ந்திருந்த கிளையை விட்டு நகரவேயில்லை என அப்பருந்துகளுக்கான பயிற்சியாளர் அரசனிடம் தெரிவித்தார். பலவகைகளில் சிறந்த அறிவுதிறனுள்ள பலரும் பல்வேறு வகையில் முயன்றாலும் யாராலும் அந்த மற்றொரு பறவையை மட்டும் பறக்க வைக்க முடியவில்லை, அதனால் அரசன் தனது அமைச்சரிடம் அந்தபணியை வழங்கினார், அமைச்சராலும் அந்த மற்றொருபறவையை பறக்கவைக்கமுடியவில்லை உடன் தன்னுடைய நாடுமுழுவதும் அந்த மற்றொரு பறவையை பறக்க வைக்க கோரி அறிவிப்பு செய்தார்
. அறிவிப்பு செய்த சிலநாட்களுக்கு பிறகு மற்றொரு பருந்து வானத்தில் பறப்பதை கண்டு அவ்வரசன் மிக பரவசமடைந்து. அரசன் தனது அரசவையில், "இந்த அதிசயத்தைச் செய்தவரை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார். அரசன் முன் வந்து நின்ற ஒரு எளிய விவசாயியை கண்ட . அரசன், "நீ மட்டும் எப்படி அந்த பருந்தினை பறக்க வைத்தாய்? " என்ற கேள்வியை எழுப்பினார் அந்த விவசாயி அரசனை வணங்கி, "அரசே அந்தபணி மிகவும் எளிதானது, நான் வேறொன்றும் செய்யவில்லை, நான் பறவை அமர்ந்திருந்த கிளையை வெட்டத்துவங்கினேன் அவ்வளவுதான் அந்த பறவை வானத்தி்ல் பறக்க ஆரம்பிததுவிட்டது." என பதில் கூறினார்
மனிதர்களாகிய நாமும் நம்மிடம் உள்ள நம்பமுடியாத பல்வேறு திறமைகளை பயன்படுத்தி கொள்ளாமல் , நமக்குப் பாதுகா்பான செயல்களை மட்டும் அப்படியே பற்றிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறாமல் வாழ்ந்துவருகின்றோம் . நமக்குள் இருக்கும் திறன்கள் முடிவற்றவை, ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு அவை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. . எனவே பெரும்பாலும், நம் வாழ்க்கை உற்சாகமாகவும்,, நிறைவாகவும் இருப்பதற்குப் பதிலாக நாம் பழக்கமான, சாதாரணமான செயல்களைமட்டும் செய்து வருகின்றோம்து.
எனவே நாம் நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் பயத்தின் கிளையை அழித்து, மறைந்திருக்கும் சக்திகளைப் பயன்படுத்தி வானத்தை நோக்கி உயர்ந்து வெற்றியை அடைய ஆறுதல் மண்டலங்களை விட்டு வெளியேறிடுக
சனி, 31 டிசம்பர், 2022
பாம்பும் மரம் அறுக்கும் வாளும் - கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்
ஒரு நாள்இரவில் ஒரு தச்சரின் மரப்பட்டறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. அப்போது இரவுநேரமானதால் அந்த மரப்பட்டறையானது இருள்சூழ்ந்து இருந்தது. அந்த பாம்பு மரப்பட்டறைக்குள் ஊர்ந்து நகர்ந்தசென்றுகொண்டிருந்த போது ஏதோ ஒன்று அதன் மீது உராய்ந்ததால் அந்த பாம்பின் உடலில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த காயத்தினால் ஏற்பட்ட உடல் வலியால் ஆத்திரமடைந்த பாம்பு தனது தலையை தூக்கி படம் எடுத்து ஆடியவாாறு சீறிக்கொண்டு தன்னுடைய உடலில் உராய்ந்து காயம் ஏற்படுத்திய பொருளை கடிக்க முயன்றது . இந்த முயற்சியில் அந்த பாம்பின் வாயிலும் முகத்திலும் மேலும் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல், எதிரி தன்னைத் தாக்க முயல்கின்றார் எனதவறாக நினைத்து கொண்டு, அந்த பாம்பானது அதிக கோபத்துடன் கடுமையாக சீறிக்கொண்டு தன்னுடைய முழு பலத்துடன் தன்னுடைய எதிரியை மூச்சுத் திணறச் செய்வது போன்று தன்னுடைய நீண்ட உடலால் அதைச் சுற்றி வளைக்க முடிவு செய்து அவ்வாறே செய்தது. ஆனால் மறுநாள் காலையில், அந்த தச்சர் தனது மரப்பட்டறைக்குள் நுழைந்தபோது, கூர்மையான மரம் அறுக்கும் வாளில் பாம்பு ஒன்று சுற்றப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டார்.
கற்றல் சில நேரங்களில், நாம் கோபத்தில் எந்தவொரு செயலிற்கும் பதில் செயல்செய்திடுமாறு நடந்து கொள்கிறோம், அதாவது நம்மை காயப்படுத்து பவர்களை தீங்கிழைப்ப வர்களை பதிலுக்கு பதில் காயப்படுத்த நினைக்கிறோம், ஆனால் அதன்மூலம் நம்மை அறியாமல் நமக்கு நாமே காயப்படுத்திக் கொள்கிறோம். எனவே, அவ்வாறான சூழல்களில் அத்தகைய நபர்களையும் சூழ்நிலையையும் புறக்கணிப்பது நல்லது, ஏனென்றால் அவர்களுக்கு எதிர்வினையாற்றுவதாக எண்ணிக்கொண்டு நாம் நமக்கான மீளமுடியாத பேரழிவுகளையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் சூழலில் மாட்டிகொள்கின்றோம்
சனி, 24 டிசம்பர், 2022
கொல்லனும் இரும்பு சங்கிலியும்
முன்புஒருகாலத்தில், ரோம் நகரில் ஒரு கொல்லன் வாழ்ந்துவந்தார், அவர் தனது ஒப்பற்ற திறமைகளால் உலகம் முழுவதும் பிரபலமானார். அவர் தன்னுடைய உலைகளத்துடன்கூடிய பட்டறையில் எந்தவொரு பொருள் செய்தாலும், அதை யாராலும் உடைக்க முடியாத தாக இருந்தது. எனவே, அந்த கொல்லனின் பட்டறையில் செய்யப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் மதிக்கப்பட்டு, தொலைதூர சந்தையில்கூட விற்கப்பட்டன. ஒரு முறை, எதிரியால் ரோம்நகரின்மீது தாக்குதல் செய்யப்பட்டு அந்த போரில் தோற்றது. அதனால் ரோமில் இருந்த பல முக்கிய நபர்கள் பிடிபட்டனர். மொத்தத்தில் ரோமில் புகழ்பெற்ற முப்பது நபர்கள் பிடிபட்டனர், அவர்களில் அந்த கொல்லனும் ஒருநபர்ஆவார். அவர்கள்அனைவரும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப் பட்டு அருகிலிருந்த மலையின்உச்சியிலிருந்து கீழே தரைக்கு உருட்டி விடுவதற்கு மலையின் உச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அனைவரும் மலையின் உச்சிக்கு கொண்டுவந்தபோது, அந்த சங்கிலியால் கட்டப்பட்டவர்களில் இருபத்திஒன்பது பேர்களும் தங்களுடைய உயிர் உடன்போகப்போகின்றது என அழுது கொண்டிருந்தனர், அழாத ஒரே நபர் அந்த கொல்லன் மட்டுமேயாகும். அதனால் அவர்களில் ஒருவர் கொல்லனிடம், “நீமட்டும்எப்படி அமைதியாக இருக்கிறாய்? விரைவில் இங்கிருந்து நம்மை கீழே மரம் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டிற்குள் உருட்டிவிடப் போகின்றனர், இந்த மலையடியிலுள்ள காட்டில் வாழும் வன விலங்குகளால் நம்முடைய உடல்கடித்து தின்னப்படும்.“ என கூறியதற்குக் கொல்லன் , “கவலைப்படாதே நண்பா, நான் ஒரு கொல்லன், என் வாழ்நாள் முழுவதும் நான் ஏராளமான சங்கிலிகளையும் கைவிலங்குகளையும் உருவாக்கி யிருக்கிறேன். அதனால் அவற்றைத் எவ்வாறு திறப்பது என எனக்குத் தெரியும், நீங்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். நாம் உருட்டிவிடப்பட்டவுடன், நான் முதலில் என்னை பினைத்த சங்கிலியை அவிழ்த்து விடுவேன், பின்னர் நான் உங்கள் அனைவரின் சங்கிலியையும் அவிழ்க்க உதவுவேன், பயப்பட வேண்டாம்.“ எனக்கூறினார். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தைரியம் அடைந்து நம்பிக்கையுடன் இருந்தனர் .அதன்பிறகு அவர்கள் அனைவரும் மலையின் உச்சியிலிருந்து உருட்டிவிடப்பட்டனர். அதனைதொடர்ந்த அவர்களஎல்லாரும் கடுமையாக முயற்சி செய்து மெதுவாக நகர்ந்து ஊர்ந்து எப்படியோ கொல்லனின் அருகில் வந்தசேர்ந்தனர். அவர்கள் அனைவரும் கொல்லனின் அருகில்வந்து சேர்ந்ததபோது, அங்கு கொல்லனும் தாங்கள் முன்பு அழுதுகொண்டிருந்ததேபோன்றே தனியாக அழுதுகொண்டிருப் பதைக் கண்டனர். அவர்களில் ஒருவர் , ""ஏன் என்ன செய்தி? நீங்கள் எங்களுக்கு எல்லாம் தைரியமும் நம்பிக்கையும் அளித்தீர்கள் அதனால் நாங்கள் அனைவரும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இப்போது நீங்கள் மட்டும் ஏன் அழுகின்றீர்கள்? , இப்போது என்ன நடந்தது?" என வினவியபோது கொல்லன், "நான் , ஏன் அழுகிறேன் என்றால் நான் இப்போது நம்மை பினைத்த இந்த சங்கிலிகளை உன்னிப்பாகப் பார்த்தபோது, அவற்றில் எனது முத்திரை இருப்பைதப் பார்த்தேன், இந்த சங்கிலிகள் நான் செய்தவை.. வேறுயாராவது செய்திருந்தால், அவ்வாறான சங்கிலிகளை என்னால் உடைத்திருக்கமுடியும், ஆனால் நான் செய்த இந்த சங்கிலியை என்னால் கூட உடைக்க முடியாது. இப்போது, இங்கிருந்து நாம் தப்பிப்பது சாத்தியமில்லை. காட்டு விலங்குகளால் நாமனைவரும சாவது உறுதி" எனக்கூறினார்
சனி, 17 டிசம்பர், 2022
மற்றவர்களை ஏமாற்றிடும் இனிப்புக் கடை உரிமையாளரின் புகார்!!
ஒரு இனிப்புக் கடைக்காரர் தன்னுடைய கடைக்கு தேவையான வெண்ணெயை ஒரு விவசாயியிடம் வாங்குவது வழக்கமாகும்,அவ்வாறுஒரு நாள் அந்த விவசாயியிடம் ஒரு கிலோ வெண்ணெய் வாங்கியபோது அந்தஇனிப்புக் கடைக்காரர், “ விவசாயி கொடுத்துவருகின்ற வெண்ணெயின் எடையை ஒருநாள்கூட சரிபார்த்ததே இல்லை, அதனால் இன்று சரிபார்த்திடுவோம் ” என நினைத்தார். எனவே அவர் அளவுகோலின் ஒரு பக்கத்தில் வெண்ணெயையும் மறுபுறம் 1 கிலோ எடைக்கல்லையும் வைத்து சரிபார்த்தபோது அன்று வாங்கிய வெண்ணெயானது 1கிலோவிற்கும் குறைவாக இருப்பதைக் கண்டார். அதனால் அந்த இனிப்புக்கடைகாரர் அதிக கோபமடைந்து அந்த நகரத்தின் நகரமன்றத் தலைவரிடம் சென்று அந்தவிவசாயி தன்னை ஏமாற்றியது குறித்து புகார் கூறினார்.அதனை தொடர்ந்து அந்த நகரமன்றத்தலைவர் இனிப்புக்கடைக்காரர் விவசாயி ஆகிய இருவரையும் நேரடி விசாரணைக்கு அழைத்தார்.அந்த விசாரணையின்போது "நீங்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கும் குறைவான வெண்ணெய் கொடுத்து இனிப்பு கடைக்காரரை ஏமாற்றுவது சரியா" என நகரமன்றத் தலைவர் வினவினார். அதற்கு விவசாயி, "ஆனால்.. இது 1 கிலோ வெண்ணெய்தான் ஐயா" என்றார். உடன் கோபமடைந்த நகரமன்றத் தலைவர், "ஆனால் இனிப்புக் கடைக்காரர் அதனை சரிபார்த்தபோது, அதன் எடை 1 கிலோவிற்கும் குறை வாகவே இருக்கின்றதே." என மேலும் வினவினார். அதனால் அந்த விவசாயி அதிக குழப்பத்துடன், "ஐயா, பொருட்களை எடையிட்டு கணக்கிடு வதற்கென தனியாக என்னிடம் எடைகற்கள் எதுவும் இல்லை ஐயா." என பதில் கூறினார் ,அதனை தொடர்ந்து நகரமன்றத் தலைவர் "அவ்வாறாயின் நீங்கள் விற்பனை செய்திடும் வெண்ணெயை எவ்வாறு எடையிட்டு கொடுத்து வருகின்றீர்கள்? அதனை1 கிலோ என்று எவ்வாறுச் சொல்வது?" என மீண்டும் வினவியதற்கு அவ்விவசாயி, "ஐயா, இன்று நான் அவரிடமிருந்து 1 கிலோ இனிப்பு வாங்கினேன். அந்த இனிப்புப் பொட்டலத்தை எடுத்து வெண்ணெயை எடையிடுவதற்கு தராசின் மறுபக்கத்தில் வைத்து எடையிட்டு கொடுத்தேன். இதேபோன்று நான் வாரத்திற்கு ஒருமுறை இவரிடம் ஒரு கிலோ இனிப்பு வாங்குவேன் அதனை அந்த வாரமுழுவதிற்கும் வைத்துகொண்டு வெண்ணெயை எடையிட்டு வழங்குவது வழக்கமாகும் " என பதில் கூறினார் இந்த பதிலைக் கேட்டு இனிப்புக்கடைக்காரர் திகைத்துப் போனார், இப்போது தனது ஏமாற்றும் பணி அம்பலமாகிவிட்டதால் வெட்கமடைந்தார்.
கற்றல். இந்த இனிப்பு விற்பவரைப் போல நமக்கும் வாழ்க்கையில் நாம் கொடுப்பதுதான் கிடைக்கும். நாம் மற்றவர்களுக்கு என்ன கொடுக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும், ஏனென்றால் வாழ்க்கையில் நாம் விதைப்பதையே நாம் அறுவடை செய்திடுவோம் ...
ஞாயிறு, 11 டிசம்பர், 2022
யாரோஒருவர்முதுகில் கேலிசெய்திடும்தாளை ஒட்டுவது
கல்லூரியில் பயிலும் மாணவர்களில் ஒரு மாணவன் ஒருமுறை தங்களுடைய வகுப்பில் பயிலும், மற்றொரு மாணவனை குறும்பு செய்து விளையாட நினைத்தான். அதற்காக அம்மாணவன் எழுதும் ஒரு தாளினை எடுத்து அதில் - நான் ஒரு முட்டாள் - என எழுதிய, பின்னர் அந்த தாளினை தான் குறும்பு செய்து விளையாட விரும்பும் வகுப்பு தோழரின் முதுகில் ஒட்டினார், அந்த தாள் அம்மாணவரின் முதுகில் ஒட்டப்பட்டதால் அதுகுறித்து அந்த மாணவனுக்கு எதுவும் தெரியாது அதனால் அம்மாணவன் அதனை கவனிக்காமல்.தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் மாணவனின் முதுகில்- நான் ஒரு முட்டாள் - எனும் தாள் ஒட்டப்பட்டதைப் பார்த்த மற்றொரு மாணவனிடம் அந்த தாளை ஒட்டிய மாணவன், இந்த மாணவனை கேலி செய்வதற்காகத்தான் நான் இதை ஒட்டினே் இது குறி்த்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து அந்தநாள் முழுவதும் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் அந்த கல்லூரி மாணவரின் முதுகில் ஒட்டுப்பட்டிருந்த - நான் ஒரு முட்டாள் - என ஒட்டப்பட்ட தாளினை பார்த்து அந்த மாணவனின் முதுகுக்கு பின் கிண்டலும் கேலியும் செய்துசிரித்து கொண்டிருந்தனர். அன்றைய நாளின் கடைசி நேர வகுப்பிற்கு கணித விரிவுரையாளர் வந்துசேர்ந்தார், கணித விரிவுரையாளர் வந்தவுடன் முந்தையநாளில் நடத்தப்பட்ட கணித பாடத்திற்கான கணக்கு ஒன்றினை சுவரிலிருந்த கரும்பலகையில் எழுதி இந்த கணக்கினை யாரால் தீர்வுசெய்ய முடியும் என அந்த வகுப்பு மாணவர்களை பார்த்து கேட்டுக் கொண்டார். அந்த கணக்கு மிகக்கடினமாக இருந்ததால், அவ்வகுப்பில் இருந்த கல்லூரி மாணவர்களுள் முதுகில் - நான் ஒரு முட்டாள்- எனும் தாள் ஒட்டப்பட்ட மாணவனை தவிர வேறுஎந்த மாணவரும் அந்த கணக்கினை தீர்வுசெய்திட முடியும் என தங்களுடைய கைகளை உயர்த்தவில்லை. விரிவுரையாளர் அந்த மாணவரை மட்டும் அழைத்து கரும்பலகையில் அந்தகணக்கிற்கான வழிமுறையை எழுதி தீர்வுசெய்து விடை காணுமாறு அழைத்தார். உடன் அம்மாணவன் அந்த கணக்கிற்கான தீர்வுகாண கரும்பலகையை முன்னோக்கிச் சென்றுபோது, அந்த மாணவனது முதுகுக்குப் பின்னால் அனைத்து மாணவர்களும் கிண்டலும் கேலியும் செய்து சிரித்து கொண்டிருந்தனர். அதை அந்த வகுப்பு விரிவுரையாளர் கவனித்தார். வகுப்பு மாணவர்களின் கிண்டலும் கேலிக்கும் மத்தியில், அம்மாணவர் அந்தகணக்கிற்கான வழிமுறையை கரும்பலகையில் மிகஎளிதாக எழுதி தீர்வுசெய்துவிட்டு திரும்பிச் செல்லவிருந்தார். அப்போது விரிவுரையாளர் அவரைத் தடுத்துநிறுத்தி அவரைப் பாராட்டி முதுகில் தட்டிகொடுத்த பின் அம்மாணவரின் முதுகில் ஒட்டியிருந்த- நான் ஒரு முட்டாள்- எனும் தாளினையும் பிய்த்து அகற்றினார். தொடர்ந்த விரிவுரையாளர் அந்த தாளினை அந்த கல்லூரி மாணவரிடம் கொடுத்து - இந்த தாள் உங்கள் முதுகில் ஒட்டியிருந்தது. - நான் ஒரு முட்டாள்- என தன்னுடைய முதுகில் ஒட்டியிருந்த தாளினை கண்டு அந்தக் கல்லூரி மாணவர் மிகவும் வெட்கப்பட்டார். பின்னர் விரிவுரையாளர் மற்ற வகுப்பு மாணவர்களை அழைத்து, “மாணவர்களே இன்று உங்களுக்கு மிக முக்கியமான கருத்து ஒன்றினை கூறவிழைகிறேன்... இந்த தாளை பற்றி இம்மாணவருக்கு விவரம் தெரிந்திருந்தால் இந்த கணக்கினை தீர்வுசெய்திட இவர் முன்வந்திருக்க மாட்டார்.அல்லவா அதே போன்று உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க, மற்றவர்கள் உங்கள் முதுகிற்கு பின்னால் பல்வேறு மோசமான செய்திகளை பரப்பிடுவார்கள். வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மக்கள் உங்களுக்குக் கொடுக்கும் இந்த பட்டப்பெயர்களைப் புறக்கணித்து, நீங்கள் கற்றுக்கொள்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், உங்களை மேம்படுத்திகொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திகொள்ளுங்கள்." என அறிவுரை கூறினார்
என்ன வாசகரே மற்றவர்கள் புறங்கூறுவதை புறக்கணித்து உங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வீர்களா
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள...
-
முன்னொ ரு காலத்தில் , வயதானவர்ஒரு வர் தனது பக்கத்து வீட்டுக்கார இளைஞன ை ஒரு திருடன் என் றுகூறி அந்த தவறான வதந்தி யை அந்த ஊர...
-
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...