கடற்கரையில் ஒரு வலுவான அலை வந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் காலில்அணியும் செருப்பை அடித்து சென்றது இதைகண்டஅந்த குழந்தை, அந்த கடற்கரையின் மணல் மீது விரலால் - கடல் ஒரு திருடன் என எழுதியது. அதேகடற்கரையின் சிறிதுதூரத்தில் வாழும் மீனவர் ஒருவருக்கு அன்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது ஏராளமான மீன்கள் கிடைத்தது. அம்மீனவர் அதே கடற்கரையின் மணலில் - கடல் என்னை சீராட்டி வளர்க்கின்றது என எழுதினார். சிறிது நேரத்தில்அருகிலுள்ள ஊரில் வாழ்ந்துவந்த , ஒரு வாலிபர் அந்த கடலில் மூழ்கி இறந்தார். மகனின் இழப்பால் வருந்திய அவ்வாலிபனின் தாய் கடற்கரையின் மணலில் - கடல் ஒரு கொலையாளி என எழுதினார் . அதே கடற்கரையின் வேறொரு பகுதியில், ஏழ்மைநிலையிலுள்ள முதியவர் ஒருவர் அந்த கடற்கரையின் மணலில் ணன ஆறுதலுக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய சிப்பியில் விலைமதிப்பற்ற முத்து ஒன்றைக் கண்டெடுத்தார். அவர் அதே கடற்கரையின் மணலில் - கடல் மிகவும் தாராளமான கொடையாளிஎன எழுதினார் .
அப்போது திடீரென ஒரு பெரிய அலை வந்து அந்த கடற்கரையின் மனதில் அவ்வாறு எழுதிய எழுத்தையெல்லாம் அழித்து விட்டுச் சென்றது.
இதன் பொருள் என்ன?
அதாவது கடலானது பொதுமக்களின் கருத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை, எப்போதும் அதன் அலைகளால் அவற்றைஅழித்து விட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாமும் அவ்வாறு ஒரு கடல் போன்ற பரந்தமனப்பாண்மைக்கு மாற விரும்பினால், பயனற்ற பேச்சுகளுக்கு ஒருபோதும் கவனம் செலுத்த வேண்டாம். நம்முடைய வாழ்க்கையின் ஏற்படும் அனைத்து செயல்களுக்கும் அமைதியாக தைரியமாக உற்சாகமாக அவைகளை ஏற்று சொந்த வாழ்க்கைக்கு ஏற்ப அதற்கேற்ப பொருத்தமான முடிவு செய்திடுக. உன்னைபற்றி மற்றவர்கள் என்ன எண்ணுகின்றார்கள் என கவலைப்படவேண்டாம் ஏனெனில், அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் கருத்துகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அருந்த விழையும் ஒரு கோப்பை தேநீரில் ஒரு ஈ விழுந்திருந்தால், அந்த ஒரு கோப்பை தேநீரை ஈயுடன் கீழே கொட்டிவிடப்படும், ஆனால் அதுவே சுத்தமான நெய்யில் ஈ விழுந்திருந்தால், ஈயைமட்டும் தூக்கி எறியப்படும். என்பதை மனதில் கொண்டு, எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்சியாகவும், வாழ கற்றுகொள்க
ஞாயிறு, 29 அக்டோபர், 2023
கடல் போன்று பரந்தமனப்பாண்மையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திடுக
ஞாயிறு, 22 அக்டோபர், 2023
முயலும் அதன் நண்பர்களும்!
ஒரு வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஒரு காட்டில் முயல்ஒன்று வசித்து வந்தது அது தன்னுடைய இனமல்லாத மற்றபல்வேறு இன விலங்குளை நண்பர்கள்ஆக கொண்டிருந்தது, அதனால் அது எப்போதும் தனது நண்பர்களுடன் வேடிக்கையாக பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் , இருந்துவந்தது, அவ்வாறாக அந்த முயலின் வாழ் நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிந்து கொண்டிருந்தன, அதனால் பல்வேறு நண்பர்களைநாம் பெற்றிருப்பது எவ்வளவு அதிர்ஷ்டசாலி என எப்போதும் நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்துவந்தது. ஒரு நாள், அதுவாழும் வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஆற்றங்கரையில் நண்பர்களுடன் விளையாடியபின் தன்னுடைய உணவிற்காக சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது, சிறிது நேரத்தில், ஒரு சிங்கம் தன்னை நோக்கி மெதுவாக தன்னை பிடித்து உண்ணவருவதைக் கண்டு பயந்துவிட்டது, அதனால் நமக்குதான் ஏராளமான நண்பர்கள் இருக்கின்றனரே இவ்வாறான இக்கட்டான நேரத்தில் அவர்களிடம் நம்மை காப்பாற்றுமாறு உதவிகேட்போம் அவர்கள் கண்டிப்பாக நமக்கு உதவுவார்கள்என நினைத்து அருகில் மேய்ந்து கொண்டிருந்த தன் நண்பன் குதிரையை நோக்கி ஓடி வந்து அதனிடம் தன்னுடைய உயிரை காப்பதற்காக உதவி கேட்டு அழுதது உடன் குதிரையான, "நண்பரே, நான் உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் விரும்புகிறேன், ஆனால் நான் இப்போது ஒருமுக்கியமான வேலைக்கு செல்லவேண்டியுள்ளது " எனக்கூறியவாறு குதிரை ஓடிவிட்டது. அப்போது முயல் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன் நண்பன் காளையைப் பார்த்து, “நண்பா, என்னை கொள்ள ஒரு சிங்கம் வருகிறது. தயவு செய்து உனது கூர்மையான கொம்புகளால் அந்த சிங்க்ததினைப் பயமுறுத்தி துரத்தி என்உயிரை காப்பாற்று." எனகோரியது .உடன் அதனுடைய மற்றொரு நண்பனான படுத்துகொண்டிருந்த காளையான எழுந்து நின்று, "நண்பா, நான் என்கூரியகொம்பால்குத்தி அந்த சிக்கத்தை ஓட வைக்க முடியும், ஆனால் இந்த வேளாளர் தன்னுடைய வயலில் உழுவுபணி செய்திட என்னை அழைத்துள்ளார்." எனக்கூறிவிட்டு காளை நழுவியது. இப்போது, முயல் மற்றுமொரு நண்பனான ஆட்டைப் பார்த்து, அதனிடம் சிங்கம் ஒன்று தன்னை கொல்லவருவதாகவும், தயவு செய்து. தன்னை அதன் முதுகில் ஏற்றிகொண்டு இங்கிருந்து வெகுதூரத்திற்கு ஓடி காப்பாற்றிடமாறு கோரியது. என்னுடைய உயிரைக் காப்பாற்றவே நான் சிரமபட்டு தனியாக ஓட வேண்டும். அவ்வாறான நிலையில் நாம் நம்முடைய முதுகில் முயலை கூடுதலாக சுமந்து கொண்டு பாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆடு நினைத்தது. உடன் அந்த ஆடு மட்டும் அங்கிருந்து ஓடியது. சிங்கம் தன்னை நெருங்குவதை முயல் பார்த்தது. வேறு வழியின்றி அது முடிந்தவரை வேகமாக ஓடி வெகுதூரம் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு நிலத்தில் இருந்த ஒரு குழிக்குள் ஒளிந்து கொண்டது. அன்றைக்குதான் முயல் தனக்கு ஏராளமான அளவில் பலவேறு நண்பர்கள் உள்ளனர் ஆனால் இவ்வாறான ஆபத்தான நிலையில் உதவக்கூடிய உண்மையான நண்பர்களாக அவர்கள் இல்லை, அவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாக இருப்பதைப் புரிந்துகொண்டது,
தன்னை காத்திட தான் நம்பக்கூடிய ஒருவன் தான் மட்டுமே என்று புரிந்துகொண்டது. கற்றல்: மற்றவர்களை நம்புவதற்கு பதிலாக உங்களைமட்டுமே நம்புங்கள்
ஞாயிறு, 15 அக்டோபர், 2023
ஏழை மனிதனின் இழப்பும் அவனது நேர்மறையான அணுகுமுறையும்!
ஒரு ஏழை கடந்த இருபது வருடங்களாக மிகசிக்கனமாக செலவுசெய்தபின் மிகுதி செலவிடப்படாமல் உள்ள தொகையை ஒவ்வொரு பைசாவாக சேமித்து கொண்டுவந்து கனிசமான தொகைசேர்ந்ததும் அந்த பணத்தை தனது குடும்பத்துடன் சேர்ந்து சொந்த வீட்டில் வாழ்வதற்காக தன்னுடைய குடும்பத்திற்காகவென தனியாக ஒரு வீடு கட்ட பயன்படுத்தினார். இறுதியாக, அவரது வீடு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு, அவரது குடும்பத்துடன் புதுவீட்டில் குடிபுகுவதற்காக ஒரு நல்ல நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அந்த புதுவீட்டில் குடிபுகுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல நாளிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது அதனால் அவரது வீடு முற்றிலும் அழிக்கப்பட்டது. ஏழைக்கு அந்த செய்தி கிடைத்ததும், நிலநடுக்கத்தால் இடிந்த போன தன்னுடைய புதிய வீடு இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு முன் கடைத்தெருவிற்குச் சென்று இனிப்பு வாங்கிகொண்டுவந்தார் இடிந்துபோன புதியதாக கட்டப்பட்டிருந்த அவரதுவீ்ட்டிற்கு முன்பாக வேடிக்கை பார்ப்பதற்காக. பலர் கூடியிருந்த இடத்தை அவர் அடைந்தபோது, பலரும் அந்த புதுவீட்டில் அவரது குடும்பம் குடிபுகும் முன்பே தனது வீட்டை இழந்ததால், அவரிடம் வருத்தம் தெரிவித்தனர். சிலர் அவருக்கு ஆறுதல் கூற முயன்றனர். ஆனால் அந்த ஏழை வேடிக்கை பார்ப்பதற்காக கூடியிருந்த அவர்கள் அனைவருக்கும் இனிப்புகளை எடுத்து விநியோகிக்க ஆரம்பித்தார். இதைகண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுள் அந்த ஏழையை நன்கு அறிந்த அவனது நண்பன் ஒருவன் "நண்பரே நீங்கள் வாழ்நாளெல்லாம் மிகவும் அதிக சிக்கனத்துடன் வாழ்ந்து சேமித்த பணத்தை கொண்டு புதிதாகக் கட்டிய வீடு இடிந்து விழுந்து விட்டது, நீங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை இந்த நிலநடுக்கம் வீணடித்து விட்டது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறீர்கள்!!" என கேட்டார். உடன் ஏழை சிரித்துக்கொண்டே," நண்பரே இந்த செயலின் எதிர்மறையான பக்கத்தை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள், எனவே, உங்களால் நேர்மறையான பக்கத்தைப் காண முடியாது. இன்று நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்தது நல்லது. ஒருவேளை இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் இந்த புது வீட்டிற்கு குடிபுகுந்து இதில் என் குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கியபின்னர் இடிந்து விழுந்திருந்தால் என்ன செய்வது. அப்போது இடிந்து விழுந்திருந்தால், நான், என் மனைவி, குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா! அப்போது எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்? எனவே எது நடந்தாலும் அது நன்மைக்காக மட்டுமே நடந்தது. எனக்கொள்க அதனால்தான் நான் அனைவருக்கும் இனிப்பு வழங்குகின்றேன்
ஞாயிறு, 8 அக்டோபர், 2023
இரண்டு பயணிகளின் உரையாடலிலுள்ள- ஆழ்ந்த பொருள்
தற்போதை.ய போக்குவரத்து வசதி வாய்ப்புகள் போன்றில்லாத முற்காலத்தில் ஒருமுறை, இரண்டு வெவ்வேறு மனிதர்கள் தத்தம் கால்களால் நடந்தே செல்கின்றவாறான ஒரு மிகநீண்டதூர பயணம் செய்வதற்காக புறப்பட்டனர். இருவரும் ஒரே பாதையில் செல்லவேண்டியிருந்தது, எனவே இருவரும் அந்த பயணத்தில் ஒன்றாக சேர்ந்தே பயனம்செய்ய முடிவு செய்து அவ்வாறே பயனித்தனர். ஏழு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும்பிரிந்து தனித்தனியாக செல்ல வேண்டிய நேரம் வந்தது. முதல் பயணி , “அண்ணே, நாம் இருவருவரும் கடந்த வாரம் முழுவதும் ஒன்றாக பயனித்தோம். நாம் இவ்வாறு நம்முடைய பயனத்தை துவங்குவதற்குமுன் நான் ஒரு பிரபலமான பணக்காரன் என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நீங்கள் என்னை விட பெரிய பணக்காரர் என்று தெரியவருகிறது.” எனக்கூறினார் .உடன் இரண்டாவது பயணி , "எப்படி" எனக்கேட்டார் முதல்பயனி, "கடந்த ஏழு நாட்களாக, நீங்கள் ஏதேனும் உங்களடைய சொந்த பணியை செய்வதற்காக என்னைத் தனியாக விட்டுவிட்டு செல்லும்போது, உங்களுடைய பையிலிருந்து ஏதாவவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் தொடர்ந்து தேடினேன், ஆனால் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு நாள் நாமிருவரும் சேர்ந்து மிக, நீண்டதூரம் பயனம் செய்து கொண்டு இருக்கின்றோம். அவ்வாறான நீண்டதூரபயனத்திற்கு மிக அதிக செலவாகும் அல்லவா அதற்காக நீங்கள் அதிக பணம் எடுத்து கொண்டு வந்திருப்பீர்கள் அல்லவா .ஆனால் உங்களிடம் எதுவும் இல்லையே இது எப்படி சாத்தியம்? நீங்கள் பணம் எதுவும் கொண்டு வரவில்லையா?" என சந்தேக கேள்வி எழுப்பினார் .அதனை தொடர்ந்து இரண்டாமவர் , “நிச்சயமாக நான்நீண்டதூர பயனத்திற்கு தேவைான பணம் கொண்டுவந்தேன். அதனுடன் என்னிடம் விலையுயர்ந்த வைரமும் சில வெள்ளி நாணயங்களும் உள்ளன." என பதிலளித்தா.ர் அந்த பதிலை கேட்டு முதல் பயனி மிகவும் ஆச்சரியப்பட்டு, "உங்களுடைய பையில் அதுபோன்ற பொருட்கள் இருந்தால்,நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன்?" என்று கேட்டார். அதற்கு இரண்டாவது பயனி , "ஏனென்றால் நான் உங்களை தனியாக விட்டிட்டு வெளியே ஏதேனும் என்னுடைய சொந்த பணியை செய்வதற்காக செல்லும்போதெல்லாம் வைரங்களையும், வெள்ளி நாணயங்களையும் பணத்தையும் உங்கள் பையில் வைத்து செல்வேன், நீங்கள் கடந்த ஏழு நாட்களாக ஏதாவது கிடைக்குமா வென என்னுடைய பையை மட்டுமே அலசிக்கொண்டே ஆராய்ந்து இருந்தீர்களே தவிர. உங்களுடைய சொந்த பையில் ஏதேனும் உள்ளதாவென நீங்கள் நினைக்கவில்லை, பிறகு நீங்கள் எப்படி எதையும் என்னுடைய பையில் கண்டுபிடிப்பீர்கள்?"என பதிலளித்தார் .
ஆம் நாம் வாழ்கின்ற நம்முடைய வாழ்க்கையும் அவ்வாறுதான். இயற்கையானது நம்முடைய மகிழ்ச்சியை நமக்குள் வைத்திருக்கின்றது, ஆனால் இன்னும் நாம் மற்றவர்களிடம் இருப்பதை கண்டு பொறாமை பட்டுக்கொண்டே இருக்கிறோம், அவர்களிடம் இருப்பதைப் பெற விரும்புகிறோம். ஒருவர் பிறர் மகிழ்ச்சியாக வாழ்கின்றாற் எனக் காண்பதை நிறுத்திவிட்டு, நம்மிடம் உள்ள மகிழ்ச்சியைக் காண முயன்றால், அந்த நிமிடத்திலிருந்து ஒருவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.
சனி, 30 செப்டம்பர், 2023
வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறுவது ?தாத்தா பேரனுக்கு அறிவுரை
ஒருமுறை ஒரு சிறுவன் கோடை விடுமுறையில் தன்னுடைய தாத்தாவைப் பார்க்க கிராமத்திற்கு வந்தான். அவன் எப்பொழுதும் தன்னுடைய தாத்தாவோடு விளையாடுவது வழக்கமாகும். ஒரு நாள் அவன் தன்னுடைய தாத்தாவிடம், "தாத்தா நான் வளர்ந்தவுடன், நான் வெற்றிகரமான மனிதனாக மாற விரும்புகிறேன், அவ்வாறு வெற்றிகரமான மனிதனாக மாறுவதற்கான வழிமுறைகளை கூற முடியுமா?" எனக்கோரினான்.
உடன் அவனுடைய தாத்தா சரி அதற்கான வழிமுறைகளை கூறுகின்றேன் வா ஆம் என க்கூறி,அந்த சிறுவனை தன்னுடன் அருகில் உள்ள தோட்டங்களுக்கான நாற்றங்காளிற்கு அழைத்துச் சென்றார்.அந்நாற்றங்காலில் இருந்து இரண்டு சிறிய செடிகளை வாங்கிக்கொண்டு தாத்தா தன்னுடைய பேரனுடன் வீட்டிற்கு திரும்பிவந்தார். வீட்டிற்கு வந்தபின்னர் ஒரு தொட்டியில் ஒரு செடியை நட்டு வீட்டிற்குள் வைத்தார் மற்றொன்றை வீட்டிற்கு வெளியே நட்டார்.தொடர்ந்து " இந்த இரண்டு செடிகளில் எது எதிர்காலத்தில் நன்றாக வளரும் " என்று தாத்தா தன்னுடைய பேரனிடம் கேட்டார். சிறுவன் சிறிது நேரம் ஆலோசனைசெய்து, "வீட்டினுள் பாதுகாப்பாக வைத்த செடிதான் நன்றாக வளரும், ஏனென்றால் அது எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கும், அதே நேரத்தில் வெளியில் உள்ள செடி அதிகசூரிய ஒளி, பலமான புயல், விலங்குகள் போன்ற பலவற்றால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளது." என்றார் .தாத்தா சிரித்துக் கொண்டே, "சரி என்ன நடக்கும் என காண்போம்.* என்றார் .அதன் பிறகு சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் நகரத்திற்கு சென்றுவிட்டான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறுவன் மீண்டும் தன் தாத்தாவைகாண கிராமத்திற்கு வந்தான். சிறுவன் தன்னுடைய தாத்தாவைப் பார்த்ததும், "தாத்தா, கடந்த முறை நான் வாழ்க்கையில் வெற்றிபெற சில வழிமுறைகளைக் கேட்டேன், ஆனால் நீங்கள் என்னிடம் எதுவும் கூறவில்லை. அதனால் இந்த முறை நீங்கள் கண்டிப்பாக எனக்கு கூறவேண்டும்." என்றான் .இப்போதும் தாத்தா சிரித்துக் கொண்டே , ‘கண்டிப்பாக ஆனால் முதலில் நாம் சில வருடங்களுக்கு முன்பு நட்டுவைத்த செடிகளை எந்த நிலையில் உள்ளது எனக்காண்போம்". எனக் கூறியவாறு, தாத்தா அந்த சிறுவனை வீட்டிற்குள் செடியை நட்டு வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த செடி.யானது காற்றில் தள்ளாடும் மெல்லிய மரமாக மாறியதைக் கண்டனர். பின்னர் வீட்டிற்கு வெளியே நட்டுவைத்திருந்த செடியை காண அந்த சிறுவனை அழைத்துச் சென்றார். அங்கே ஒரு பெரிய மரம் நிற்பதையும் அதன் கிளைகள் வெகுதூரம் பரவி, வழிப்போக்கர்களுக்கு நிழல் தருகின்றவாறு இருப்பதையும் கண்டனர். இப்போது, தாத்தா அந்த சிறுவனைப் பார்த்து, ", எந்தச் செடி நன்றாகவும் வெற்றிகரமாகவும் வளர்துள்ளது?" கேட்டார். அதற்கு அந்த சிறுவன், "நாம் வெளியில் நட்டதுதான். ஆனால் தாத்தா, இது எப்படி சாத்தியம்? அந்த செடி இவ்வளவு பெரியதாக வளர்ந்துள்ளது ஆனால்அது பல ஆபத்துகளைச் சந்தித்திருக்க வேண்டுமே!" என சந்தேகமாக வினவினானஅ .உடன்தாத்தா சிரித்துக்கொண்டே , "ஆம், வெளியில் உள்ள செடி பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருந்தது, அதனால் அவ்வாறான பிரச்சனைகளைச் சமாளிப்பதும் அதன் பலனாக. வெளியில் உள்ள செடிக்கு தன் வேரையும் கிளைகளையும எவ்வளவு வேண்டுமானாலும் பரப்பும் சுதந்திரம் இருந்தது. புயல் போன்ற பிரச்சனை, வேர்களை வலுவாக்கியது. இன்று ஒரு சிறிய புயல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது. , நான் உனக்குச் சொல்லப் போவது, அதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்க, அப்போதுதான் வாழ்க்கையில் நீ எதைச் செய்தாலும் வெற்றி பெறுவாய். நீ எப்போதும் வசதியான தேர்வுகளைச் செய்தால், எல்லா ஆபத்துகளையும் மீறி இந்த உலகத்தில் வெற்றியாளனாக வளரமுடியாது அவ்வாறான ஆபத்துகளை எதிர்கொள்ள நீ தயாராக இருந்தால் அவற்றை சமாளித்து வெற்றியாளனாக உன்னால் வளரமுடியும் .வாழ்க்கையி்ல் ஏற்படும் அவ்வாறான பிரச்சனைகளை தடைகள் என நினைக்காதே அவைகளை வெற்றிக்கான படிகள் என்று எண்ணி செயல்படுக." என நீண்ட விளக்கமளித்தார் சிறுவன் நீண்ட பெருமூச்சு எடுத்து கொண்டு வெளியில் வளர்ந்திருந்த மரத்தை உற்றுப் பார்த்தான், அவனது தாத்தாவின் சொற்கள் அவனுக்குப் புரிந்தது - வாழ்க்கையில் நாம் எதிர்படும் கருதும் தடைகள் நம்மை தோல்வியுறச்செய்வதாக கருதாமல், அதே தடைகள் நம்மை வலிமையடையச் செய்கின்றன, மேலும் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றன. என முடிவுசெய்துசெயலபடுக.
சனி, 23 செப்டம்பர், 2023
.துறவிக்கு துனி துவைப்பவரின் அமைதியான பதில் -
ஒரு சமயம் துறவி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த ஒரு பெரிய பாறையில் அமர்ந்து தியானம் செய்யத்துவங்கினார்.அவ்வாற்றின் கரையின் அவ்விடத்தில் ஒரேயொரு பாறை மட்டுமே இருந்ததால், தினமும் ஒரு துனிதுவைப்பாவரும் அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரை பயன்படுத்தி அந்த பாறையில் துணி துவைக்க வருவார் . அவ்வாறே இன்று, துனிதுவைப்பதற்காக அந்த பாறைக்கு வந்த அந்த துனிதுவைப்பவர் அந்த பாறையில் துறவி தியானம் செய்து கொண்டிருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் துறவி தியானம்முடிந்து எழுந்து சென்றுவிடுவார் நாமும் நம்முடைய பணியை செய்திடலாம் என, அவர் காத்திக்க முடிவு செய்தார், ஆனால் இரண்டு மணி நேரம் கழித்துகூட அந்த துறவி எழுந்து செல்லவில்லை. எனவே, அந்த துணி துவைப்பவர் கைகளைகூப்பி வணங்கிய வாறு துறவியிடம் பணிவுடன் - ஐயா எனக்கு துணி துவைக்க இந்த பாறை தேவை, நீங்கள் வேறு எங்காவது சென்று உட்கார்ந்து தியானம் செய்தால், நான் என்னுடையபணியைமுடிக்க முடியும். என கேட்டுக் கொண்டார் அந்த துறவி எழுந்திருப்பதாக தெரியவில்லை அதனால், துணிதுவைப்பவர் தான் கொண்டு வந்த துணிகளை அந்த பாறையில் துவைக்கத் தொடங்கினார், அவ்வாறான அவரின் துணி துவைக்கும் பணியில் அழுக்கடைந்த நீர் துறவியின் மீது தெறித்தது. இதனால் துணிதுவைப்பரின் மீது அதிக கோபம் கொண்டு துறவி அவரை மோசமாக திட்டினார். இதைகண்ட அந்த துணிதுவைப்பவர் - நான் ஏதாவது குற்றம் செய்திருக்க வேண்டும் அதனால்தான் என்னை இவ்வாறு இந்த துறவியானவர் கோபமாக திட்டு கின்றார். என எண்ணினார் எனவே, அவர் தனது கைகளை மடக்கி துறவியிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார். துறவி கோபமாக அவரை நோக்கி கத்தினார் - உன்னிடம் எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லை, நீ துணிகளை துவைப்பதால் என் மீது அழுக்குத் தண்ணீர் த்தெறித்துவிழுவதை ப் பார்க்கவில்லையா. , அவ்வாறான அழுக்கு நீர் தெறிப்பதால் இப்போது என் உடைகள் அனைத்தும் அழுக்காகிவிட்டன.என திரும்பவும் கோபமாக திட்டினார் உடன் துணிதுவைப்பவர் - தயவுசெய்து அமைதியாக இருங்கள், நான் தவறு செய்துவிட்டேன். அழுக்குத் துணிகளைத் துவைக்கும்போது அழுக்கு தண்ணீர் உங்களின்மீது தெறித்து விழாமல் இருப்பதற்காக நான் கவனம் செலுத்த வில்லை. தயவு செய்து என்னை மன்னித்திடுங்கள் ஐயா. என்று கூறிவிட்டு,தொடர்ந்து தான்கொண்டுவந்த துணிகளை துவைத்து எடுத்துக்கொண்டு, மீண்டும் துறவியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றார். இப்போது யோசித்துப் பாருங்கள், உண்மையான துறவி யார்? கோபமும் சகிப்புத்தன்மையும் உண்மையான புரிதலின் எதிரிகள்.
சனி, 16 செப்டம்பர், 2023
குயவன் அல்லது நகைக்கடைக்காரன் - யார் பெரிய முட்டாள்
மண்பானை செய்திடும் ஒரு குயவன் தான் கொண்டுசென்ற பானைகளை யெல்லாம் விற்றுவிட்டு சந்தையிலிருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் போது, வழியில் கண்ணாடி போன்று பளபளப்பான கல்ஒன்றினைக் கண்டார். தனது குழந்தைகளுக்கு இந்த பளபளப்பான கல்லை விளையாடி மகிழ்வதற்காக கொடுக்கலாம் என்று நினைத்து அதை தன்னுடைய கையலெடுத்தார். முற்காலத்தில் பொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு செல்வதற்காக கழுதைதான் பயன்பட்டது இந்த கல்லை எவ்வளவுதூரம் கைகளிலேயே எடுத்துக் கொண்டு வருவது அதற்கு பதிலாக தன்னுடைய கழுதையின் கழுத்தில் கட்டி கொண்டு வருவது நல்லது என்று நினைத்தார். மேலும் அது கழுதைக்கு ஒருஅணிகலண் போன்று இருக்கும் என எண்ணி அந்த கல்லை தன்னுடைய கழுதையின் கழுத்தில் கட்டிடுவதற்கான ஒரு கயிற்றை தேடி கண்டுபிடித்தார் தொடர்ந்துஅந்த பளபளப்பான கல்லை கழுதையின் கழுத்தில் கட்டியபின் அந்த கழுதையுடன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். நகைக்கடைக்காரன் ஒருவன் அதே வழியில் ஒரு குதிரையின்மீது அமர்ந்து பயனம் சென்று கொண்டிருந்தார். அவரது கண்கள் கழுதையின் கழுத்தில் விழுந்தது, கழுதையின் கழுத்தில் இவ்வளவு அழகான வைரம் தொங்கவிடப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதனால் உடன் அந்த நகைக்கடைக்காரன் தன் குதிரையை நிறுத்தி, "உன் கழுதையின் கழுத்தில் தொங்கும் கல்லின் விலை என்ன?" என்று கேட்டார். குயவன் அதிகநேரம் செலவிட்டு, "எட்டு அணாவுக்கு (பழைய இந்திய நாணயம்) விற்கலாம்" என்று பதிலளித்தார். அதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்த வைரக்கல்லை அந்த குயவன் எட்டு அணாவுக்கு விற்கத் தயாராக இருந்ததால்!அந்தக் கல் விலைமதிப்பற்ற வைரம் என்பது குயவனுக்குத் தெரியாது என்பதை நகைக்கடைக்காரன் முழுமையாகப் புரிந்துகொண்டார். ஆனால் அந்த நகைக் கடைக்காரன் பேராசை கொண்டார். அதனால் குயவனிடம், °இது வெறு கல்தான் இந்தக் கல்லை எட்டு அணாவுக்கு விற்பதற்கு வெட்கமாக இல்லையா? நான்கு அணா மட்டுமே என்னால் கொடுக்க முடியும் இந்த கல்லை எனக்கு தருகின்றாயா?" என வினவினார். நான்கு அணாவுக்கு இந்தக் கல்லை கழுதையின் கழுத்தில் இருந்து யார் அகற்றி கொடுப்பார்கள் என்று நினைத்த குயவன், "அப்படியானால் அந்த கல் கழுதையின கழுத்தில் அப்படியே இருக்கட்டும். நான் அதை விற்க விரும்பவில்லை" என்று பதிலளித்தார். அதனால் நகைக்கடைக்காரன் தன்னுடைய பயனத்தினை தொடர்ந்தார் சிறிது நேரம் கழித்து குயவன் இன்னும் இரண்டு அணா சேர்த ஆறு அணா அல்லது நான்கு அணாவுக்கு கூட விற்றுவிடலாம் என்று முடிவுசெய்து கொண்டிருந்தார் . சிறிது நேரபயனத்திற்கு பின்னர் அந்த நகைக்கடைக்காரன் மீண்டும் திரும்பி வந்து அந்த கல்லினை குயவன் என்னவிலை சொல்கின்றாரோ அந்த விலைக்கு தான் வாங்கி கொள்வதாகவும் தனக்கு அந்த கல்லை விற்பனைசெய்திடுமாறும் கோரினார். அதற்கு குயவன், "நீங்கள் போன பிறகு இன்னொருவர் வந்து அந்தக் கல்லுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார். அதனால் அவருக்கு நான் விற்றுவிட்டேன்" என்றார். இதைக் கேட்ட நகைக் கடைக்காரன், "முட்டாளே! பைத்தியக்கார குயவனே! என்ன செய்தாய் தெரியுமா? கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரத்தை ஒரு ரூபாய்க்கு விற்றுவிட்டாயே" என்று கோபத்துடன் கத்தினார். இதைக் கேட்ட குயவன் சிரிக்க ஆரம்பித்தான். அவர், "நான் ஒரு குயவன். அது கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரம் என்று எனக்குத் தெரியாது, எனக்கு ஒரு ரூபாய் கிடைத்தது, அதுவே அந்த கல்லுக்கு போதுமானது என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் ஒரு நகைக்கடைக்காரர், அதை எட்டு அணாவுக்கு அல்லது ஆறாணவிற்கு கூட வாங்க தயாராகஇல்லை!அதனால் நீங்கள் கோடிகணக்கான வருமானத்தினை இழந்தீர்கள், நான் அன்று, ஏனென்றால் அது இவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று எனக்குத் தெரியாது". எ்ன்றார். குயவன் ஒரு முட்டாள்தான், ஆனால் அது அறியாமையால் ஏற்பட்டது, ஆனால் நகைக்கடைக்காரனும் ஒரு பெரிய முட்டாளாக மாறிவிட்டான், ஆனால் அவனுடைய பேராசையால் வருமானத்தினை இழந்தான். என்ன வாசகரே இதில் யார் பெரிய முட்டாள் என்று நீங்களே முடிவுசெய்திடுக
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள...
-
முன்னொ ரு காலத்தில் , வயதானவர்ஒரு வர் தனது பக்கத்து வீட்டுக்கார இளைஞன ை ஒரு திருடன் என் றுகூறி அந்த தவறான வதந்தி யை அந்த ஊர...
-
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...