ஞாயிறு, 31 மே, 2015

எவரையும் தற்போதைய நிலையைவைத்து எடைபோடகூடாது


ஒருஊரில் ஒருவன் தன்னுடைய அன்றாட செலவிற்கு போதுமானஅளவிற்கு மட்டுமான நிலையில் பொருள்ஈட்டும் பணியை செய்துவந்தான் இந்நிலையில் அவ்வூரில் இருந்த மிகபணக்கார குடும்பத்தின் பெண்ணை அவன் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது அந்த மணப்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணின் ஒருநாளைய செலவிற்கு அவனுடைய வருடமுழுவதுமான வருமானம் போதுமானதாக இல்லை அதனால் அவனுக்கு பொருத்தமான வேறொரு மணப்பெண்ணை பார்த்துகொள்ளுமாறு அறிவுறுத்தினர்

அதன்பின் அவன் மிககடினமாக முயன்று படித்து சொந்தமாக நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்திடும் நிறுவனத்தினை ஆரம்பித்து அதில் பத்துநபர்களுக்கு பணிவழங்கி நல்லதொரு தணிக்கை நிறுவனமாக நடத்திவந்தான் இந்நிலையில் ஒருநாள் அவன்முதலில் திருமணம் செய்வதற்காக விரும்பிய பெண்ணை பெரிய வியாபார கடை ஒன்றில் கண்டான் உடன் அந்த பெண் "என்னை தெரிகின்றதா ! என்னுடைய கணவர் மாதம் ஒன்றிற்கு ஒருஇலட்சம் சம்பாதிக்கின்றார் நான் இப்போதுமிக மகிழ்வோடு இருக்கின்றேன் " என கூறினாள்

அப்போது அந்த பெண்ணின் கணவன் அங்கு வந்துசேர்ந்தான் "வணக்கம்! இவள்தான என்னுடைய மனைவி " என அறிமுகபடுத்திகொண்டு தன்னுடைய மனைவியிடம் "இவர்தான் நான் பணிசெய்திடும் தணிக்கை நிறுவனத்தின் முதலாளி அதிகஅளவு நிறுவனங்களின் தணிக்கை பணியை நான் பணிசெய்யும் நிறுவனம் விரைவாக முடித்துதருவதால் ஏராளமான அளவு வருமானம் நிறுவனத்திற்கு வந்துகொண்டிருக்கின்றது .ஆயினும் ,இவர் ஆரம்பத்தில் பெண்ஒருத்தியை திருமணம் செய்துகொள்ள கோரியபோது இவருடைய அன்றைய வருமானத்தை கணக்கிட்டு மறுத்துவிட்டாள் அதனால் இப்போதும் இவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே உள்ளார்" என கூறியதை தொடர்ந்து அவருடைய மனைவிக்கு மிகவெட்கமாகிவிட்டது ஒன்றும் பேசாமல் பிரிந்து சென்றுவிட்டனர்

பொதுவாக எவரையும் தற்போதைய நிலையைவைத்து எடைபோடகூடாது அவருடைய திறமையையும் இதரகாரணிகளையம் வைத்து மட்டுமே அளவிடவேண்டும் என அறிந்துகொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...