திங்கள், 9 மே, 2016

எந்தவொரு நிகழ்வையும் தீர விசாரித்து அறிவதே நல்லது


ஆறு,ஓடை ,கினறு போன்றவைகளில் காணப்படும் தவளையை பிடித்து எடுத்துவந்து ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தினை சூடேற்றிடுக அதனை தொடர்ந்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பநிலை உயர உயர அதற்கேற்றவாறு அதில் நாம் கொண்டு வந்த இட்ட தவளையும் தன்னுடைய உடல் வெப்பநிலையை சரிசெய்து கொண்டு சமாளித்து நீந்திகொண்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பநிலையானது கொதிநிலைய அடையும்போது அதற்குமேல் அந்த தவளையால் தன்னுடைய உடல் வெப்பநிலையை சரிசெய்து வாழமுடியாத நிலை ஏற்படும் அதனால் அந்த தவளையானது பாத்திரத்தில் சூடான தண்ணீரில் இருந்து தப்பிக்கலாம் என தாவிகுதிக்க முயற்சிசெய்திடும் ஆனால் அந்த தவளையால் தாவிகுதித்து தப்பிக்கமுடியாது ஏனெனில் தவளையானது தன்னுடைய சக்தி முழுவதையும் பாத்திரத்தில் இருந்த தண்ணீரின் வெப்பநிலைக்கு ஏற்ப தன்னுடைய உடலின் வெப்பநிலை சரிசெய்து கொள்வதற்காகவே செலவிட்டுவிட்டது அதனால் அந்த தவளையால் பாத்திரத்திலிருந்து வெளியே தாவி குதித்து செல்வதற்கான சக்தி அதனிடம் காலியாகி விட்டதால் அப்படியே அந்தவளையானது கொதிக்கும் நீரில் இறந்து மிதக்கும்

உடன் நம்மில் பெரும்பாலானோர் சூடாக கொதிக்கும் தண்ணீர்தான் அந்த தவளையை கொன்றுவிட்டது எனமுடிவுசெய்திடுவோம் உண்மை அதுவன்று அந்தவளையானது தான் இருக்கும் சூழல் மாறுகின்றதே உடனே இந்த சூழலிலிருந்து தப்பித்துவிடுவோம் என ஆரம்பத்திலேயே முயற்சிசெய்திருந்தால் தப்பித்திருக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக சூழலிற்கு தக்கவாறு தன்னுடைய உடல்நிலையை தகவமைத்து கொள்வதற்காகவே தன்னுடைய சக்திமுழுவதும் செலவிட்டபின் சக்தியே இல்லாதுபோது அதற்கு மேலும் உடலை தகவமைத்து கொள்ளமுடியாத நிலையில் வெளியே தப்பிசெல்லவேண்டும் எனஅதற்காக முயலும்போது அந்ததவளையால் இயலவில்லை என்பதே எதார்த்தமான உண்மைநிலையாகும்

இவ்வாறே நாம் வாழும் இந்த சமூக சூழலில் எந்தவொரு நிகழ்விற்கு ஏற்பவும் நம்மை சரிசெய்து தகவமைத்து கொண்டு வாழத்தலைப்படு-வதற்காக நம்முடைய சக்தி, அறிவாற்றல் ஆகிய அனைத்தையும் செலவிட்டு அவைமுழுவதையும இழந்துவிடுகின்றோம் குறிப்பிட்ட நிலைக்குமேல் நம்மால் தகவமைத்து வாழ இயலாத சூழலில் தப்பிக்கமுடியாமல் நாம் வாழும் இந்த சமூக சூழலை குறைகூறி நம்முடைய வாழ்வை முடித்து கொள்கின்றோம் ஆயினும் மிகச்சரியாக நன்றாக நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ நினைப்பவன் எந்தெந்த சூழலில் சரிசெய்து தகவமைத்து வாழ்வது எந்தெந்த சூழலை தவிர்த்து தப்பித்து செல்வது என முடிவுசெய்தால் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

குழுவான நபர்கள் ஏன் சிரித்து பேசிக்கொண்டிருப்பார்கள் தெரியுமா


நான் ஒரு நகர்புறத்தில் இயந்திரமயமான வாழ்க்கையில் இருந்து வருவதால் அதிலிருந்து சிறிது உடலிற்கும் மனதிற்கும் ஒய்வு கொடுப்பதற்காக ஒவ்வொருவார இறுதியாக வரும் விடுமுறை நாளில் அந்த நகரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று இயற்கை காற்றில் யோகா நடை,பயிற்சி போன்றவைகளோடு பொழுது போக்குவது வழக்கமாகும் அப்போது குழுவான நான்கைந்து பென்களும் அதே பூங்காவில் இருந்த உட்காரும் மேடையில் அமர்ந்துகொண்டு சிரித்து பேசி கொண்டு இருப்பது வழக்கமாகும்

இவ்வாறான சூழலில் அன்றுஒருநாள் நான் வழக்கமாக செல்லும் அந்த பூங்காவிற்கு சென்று என்னுடைய பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன் அதே பூங்காவில் அதே உட்காரும் மேடையில் வழக்கம்போன்று அதே நான்கைந்து பெண்கள் அமர்ந்திருந்தனர் ஆனால் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிடாமல் மெளனமாக இருந்ததை கண்ணுற்ற என்னுடைய மனம் பொறுக்கமுடியாமல் அவர்களிடம் சென்று மன்னிக்கவும் ஒவ்வொரு வார இறுதிநாட்களில் நான் இந்த பூங்காவிற்கு வந்து யோகா நடைபயிற்சி போன்றவைகளை செய்துவருகின்றேன் அப்போதெல்லாம் நீங்கள்அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசுவதை கண்டு வருவேன் ஆனால் இன்று நீங்கள் அனைவரும் அவ்வாறு ஏன் மகிழ்ச்சியாக சிரித்து பேசிடாமல் மெளனமாக அமர்ந்திருக்கின்றீர்கள் என தெரிந்துகொள்ளலாமா என வினவியவுடன் யாரும் பதில் பேசவில்லை மீண்டும் வற்புறுல்த்தியபின் ஒருநபர் மட்டும் எழுந்து கொஞ்சதூரம் தள்ளிவந்து மிகமெதுவான குரலில் அதுவா வழக்கமாக நாங்கள் நால்வர்மட்டுமே ஒவ்வொரு வாரமும் வருவோம் அதனால் மிகுதி வராத நபரைபற்றி கேலியும் கிண்டலுமாக பேசி மகிழ்வோம் ஆனால் இன்று ஐந்து பேரும் வந்துவிட்டோம் அதனால் யாரைபற்றி கேலியும் கிண்டலுமாக பேசிமகிழமுடியும் அதனால் தான் அமைதியாக உட்கார்ந்திருக்கின்றோம் என கூறி சென்றார்

திங்கள், 2 மே, 2016

பால் பண்ணை விவசாயிக்கும் ரொட்டி கடைகாரருக்கும் இடையே எழுந்த தகராறு


ஒருகிராமத்தில் வாழ்ந்துவந்த விவசாயி ஒருவர் தன்னுடைய பண்ணையில் இருந்து தினமும் அருகிலிருந்த நகரத்து ரொட்டி கடைகாரர் ஒருவருக்கு பசும்பாலினை விற்று வந்தார்

ஒருசமயம் அவர் அளந்து கொடுத்த பால் குறைந்து விட்டது என நகரத்தில் இருந்த நீதி மன்றத்தில் அந்த விவசாயிக்கு எதிராக வழக்கு ஒன்றினை தொடுத்தார்

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் அந்த விவசாயியை அழைத்து ஏன்குறைவாக பசும் பாலினை ரொட்டிகடைக்காரருக்கு அளந்து கொடுத்தீர்கள் என நீதிபதி வினவியபோது

ஐயா நான் தனியாக பால் அளப்பதற்கு என பாத்திரம் எதுவும் வைத்துகொள்வதில்லை அதனால் நான் தினமும் இந்த ரொட்டிகடைக்காரர் ரொட்டிகளை எடுத்துவருவார் அந்த ரொட்டிகளை ஒருஎடைதட்டிலும் எங்களுடைய பண்ணையில் கறந்த பாலினை மற்றொரு எடைதட்டிலும் வைத்து எடையிட்டு வழங்குவதுதான் வழக்கம்

அதேபோன்று அன்றும் ரொட்டிகடைக்காரர் கொண்டுவந்த ரொட்டிகளை எடைத்தட்டில் வைத்து எங்களுடைய பண்ணையில் கறந்த பாலினை மற்றொரு எடைதட்டிலும் வைத்து எடையிட்டு வழங்கினேன் இதில் என்னுடை தவறு எதுவுமில்லை ஐயா தவறு ரொட்டிக் கடைக்காரருடையதாகும் ஐயா அவர் கொண்டுவந்த ரொட்டி எடையின் அளவிற்கே படும் பாலினை வழங்கினேன் எனக்கூறியதை தொடர்ந்து நீதிபதி அந்த வழக்கினை தள்ளுபடிசெய்தார்

நாம் என்ன செய்கின்றோமோ அதற்கேற்ற பலன்தான் நமக்கு கிடைக்கும் என்ற செய்தியை அறிந்துகொள்க

சனி, 23 ஏப்ரல், 2016

நாம் வாழும் இந்த சமூதாய மக்களின் மனப்பாங்குகளின் வகைகள்


டைட்டானிக்கப்பல் மூழ்கி அதில் ஏராளமான பயனிகள் இறந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. அந்த கப்பல் மூழ்கி கொண்டிருக்கும்போது 7 கிமீ தூரத்தில் சாம்ஸன் என்றொரு கப்பல் பயனித்துகொண்டிருந்தது அந்த கப்பலில் உள்ளவர்கள் அனுமதியில்லாமல் விதிகளுக்கு மாறாக சீல் எனும் மீன்களை பிடித்து கொண்டிருந்தனர் டைட்டானிக்கப்பலின் வெள்ளைக்கொடியையும் அதிலிருந்த பயனிகள் தாங்கள் ஆபத்தில் சிக்கிகொண்டிருப்பதால் தங்களுடைய உயிரை காத்திடுமாறு கூவிக்கொண்டிருந்த்தையும் கண்ணுற்ற சாம்ஸன் கப்பலில் இருந்தவர்கள் டைட்டானிக் கப்பலில் இருப்பவர்கள் நம்மை போன்று விதிகளுக்கு மாறாக மீன் பிடித்து மாட்டிகொண்டார்கள் அதனால் நாம் அந்த பக்கம் சென்றால் நாமும் விதிகளுக்கு மாறாக மீன் பிடித்து கொண்டிருப்பதால் நாமும் மாட்டிகொள்வோம் அதனால் நீங்களும் இங்கு வந்து எங்களை போன்று மாட்டிகொள்ளவேண்டாம் என எச்சரிக்கை செய்தியை நமக்கு கூறுகின்றனர் நாம் வேறுபக்கம் சென்று மீன்பிடிக்கலாம் என தங்களுடைய கப்பலைவேறுபக்கத்திற்கு திருப்பி சென்றனர்

இரண்டாவதாக 14 கிமீ தூரத்தில் கலிபோர்னியோ எனும் கப்பல் பயனித்துகொண்டிருந்தது ஆயினும் அவர்களுடைய கப்பலைசுற்றி பனிக்கட்டியானது மலைபோன்று இருந்ததால் டைட்டானிக்கப்பலின் வெள்ளைக்கொடியையும் அதிலிருந்த பயனிகள் தாங்கள் ஆபத்தில் சிக்கிகொண்டிருப்பதால் தங்களுடைய உயிரை காத்திடுமாறு கூவிக்கொண்டிருந்த்தையும் கண்ணுற்ற கலிபோர்னியோ எனும் கப்பலில் பயனித்தவர்கள் நம்மைவிட மிகமோசமாக பணிக்கட்டியால் அவர்களுடைய கப்பல் சூழ்ந்துள்ளது போலும் நம்முடைய கப்பலையே நகர்த்துவதற்கு சிரமபடுகின்றோம் ஒரே இருட்டாகவேறு உள்ளது அதனால் இன்று இரவு தூங்கி காலையில் எழுந்தால் பகல் வெளிச்சத்தில் ஏதாவது வழிகிடைக்கின்றதாவென தேடிப்பிடித்திடலாம் என முடிவுசெய்து அவ்வாறே அனைவரும் தூங்க சென்றனர்

கார்பாத்தியா எனும் மூன்றாவது கப்பல் 50 கிமீ அப்பால் பயனித்துகொண்டிருந்தாலும் டைட்டானிக்கப்பல் மூழ்கி கொண்டிருப்பதையும் அதில்பயனித்தவர்கள் உயிரைகாப்பாற்றும்படியுமான வானொலி வாயிலான செய்தி கிடைக்கபெற்றவுடன் அவர்கள் டைட்டானிக்கப்பலை நோக்கி விரைவாக பயனித்து 700 க்கும் மேற்பட்ட பயனிகளின் உயிர்களை காப்பாற்றினர்

இந்த மூன்று கப்பல்களில் முதல்கப்பலில் பயனித்தவர்கள் போன்று நாம் வாழும் சமூகத்தில் யார் எப்படியிருந்தாலும் அதனைபற்றி கவலைப்படாமல் தங்களுடைய பணியை மட்டும் செய்பவர்கள் ஒருசாரர் இருக்கின்றனர்

இரண்டாவது கப்பலில் உள்ளவர்கள்போன்று தங்களுடைய பாதுகாப்பினை மட்டும் கவணித்தகொண்டு மற்றவர்களை பற்றி கவலைபடாமல் இருந்திடும் மற்றோரு சாரரும் உள்ளனர்

மூன்றாவது கப்பலில் உள்ளவர்கள் போன்று நம்முடைய சமூகத்தில் எங்கு எப்போது ஆபத்து ஏற்பட்டாலும் உடனடியாக அங்கு சென்று ஆபத்தில் சிக்கிகொண்டவர்களை காத்திடும் தன்னலமில்லாதவர்கள் ஒருசிலர் இந்த சமூகத்தில் இருப்பதால்தான் இந்த சமூதாயம் ஓரளவு நன்றாக இருக்கின்றது

வயதான பெற்றோர்களின் விரும்புவதை செய்திடுக


எங்களுடைய வயதான பெற்றோர்கள் வடஇந்தியாவில் உள்ள மற்றோரு சகோதரனுடைய வீட்டிற்கு செல்லவிரும்பினர் அதற்காக வழக்கமாக தொடர்வண்டியில் பயனிப்பதற்கு பதிலாக விமானத்தின் மூலம் பயனம் செய்யலாமே என விரும்பினர் அதனால் அதிக செலவாகுமே அவ்வாறெல்லாம் முடியாது என மறுத்ததுடன் இல்லாமல் இதுதொடர்பாக நீண்டவிவாதத்திற்கு பிறகு விமானத்தின் மூலம் அவர்கள் செல்வதற்காக பயனச்சீட்டு உறுதிபடுத்தபட்டது

விமான பயனம் துவங்கும் அன்று காலையிலேயே சிறுபிள்ளைகள் போன்று வயதான எங்களுடைய பெற்றோர்கள் பயனத்திற்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தையும் மிக மகிழ்ச்சியாகவும் குதூகூலத்துடனும் தயார்செய்தனர் அதுமட்டுமல்லாது விமானத்திற்குள் ஏறுவதற்காக பாதுகப்பு பரிசோதனை போன்றவைகளை துவங்கிடும்போது அவ்விருவரும் சிறுகுழந்தைகள் போன்று எங்களுடைய வாழ்நாளில் ஒருநாளாவது விமானத்தில் பயனம் செய்வோமா என்று கனவு கண்டுகொண்டிருந்ததை தம்பி நீ நிறைவேற்றி விட்டாய் என என்னுடைய கையை பிடித்துகொண்டு கண்ணீர் விட்டு மகிழ்ச்சியுடன் அழுதனர் வயதான பெற்றோர்களும் குழந்தை போன்றவர்களே

நாம் சிறுவயதாக இருக்கும்போது நாம் கோரிய அனைத்தையும் தன்னுடைய சக்திக்கு ஏற்ப தங்களை தியாகம் செய்து செயல்படுத்தியதைபோன்று நாமும் நம்முடைய பெற்றோர்களுக்கு அவர்கள் வரும்புவதை செய்வதே நம்முடைய முதல் கடமைஎன உறுதிகொள்க.

சனி, 16 ஏப்ரல், 2016

உதவிதேவைப்படு்ம் மற்றவர்களுக்கு உதவிசெய்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்க்கையாகும்


ஏராளமானஅளவில் வீடு ,நிலம்,பணம் என அனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லாமல் இருந்த ஒருவன் மனநல மருத்துவரிடம் சென்று "ஐயா எனக்கு போதுமான அளவில் அனைத்து செல்வங்களும் உள்ளன ஆனால் மகிழ்ச்சிமட்டும் இல்லை அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என கோரினான்

உடன் அம்மருத்துவர் "அப்படியா தம்பி "என அங்கு தரையை பெருக்கி சுத்தம் செய்துகொரண்டிருந்த வயதானபெண்ணை அழைத்து "நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றாய் எனக்கூறு" என்றார்

உடன் அந்த பெண்மனி தான் செய்து கொண்டிருந்த பணியை அப்படியே நிறுத்திவிட்டு "என்னுடைய கணவர் நோய்வாய்பட்டு இறந்தார் அதன்பின்னர் எங்களுடைய ஒரேமகனும் பயனத்தின்போது அடிபட்டு இறந்து விட்டான் அதனைதொடர்ந்து என்னுடைய வாழக்கைக்கு துனையாரும் இல்லை அதனால் நான்வயிறார சாப்பிடவும் நன்றாக தூங்கவும் முடியவில்லை மகிழ்ச்சி யென்பது என்னுடைய வாழ்வில் இல்லை என்ற நிலையாகிவிட்டது

அந்நிலையில் ஒருநாள் சிறியபூனைகுட்டி ஒன்று நான் வெளியில் சென்று வீடுதிரும்பிவரும்போது என்னை பின்தொடர்ந்து வந்தது வெளியே ஒரே குளிராக இருந்ததால் அந்த பூனை குட்டியை வீட்டிற்குள் அனுமதித்து அதற்கு ஒரு தட்டில் பாலினை ஊற்றினேன் உடன் அந்த பூனைகுட்டி தட்டில்ஊற்றிய பாலை குடித்தபின்னர் என்னுடைய பாதத்தினை நக்கி தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டது அதனை தொடர்ந்து முதன்முதல் என்னுடைய முகத்தில் அப்போதுதான் புன்னகை தோன்றியது மனதிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

”சாதாரனமாக ஒரு சிறிய பூனைகுட்டிக்கு உதவிசெய்ததற்கே நம்முடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது எனில் உதவிதேவைப்படும் மற்றவர்களுக்கு நம்மாலான உதவிசெய்தால் இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் வாழ்க்கையின் அர்த்தமும் கிடைக்கும் என முடிவுசெய்தேன் அதனால் தினமும் உதவிதேவைப்படும் எந்தவொரு நபருக்கும் என்னால் முடிந்த உதவியை செய்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன் அதனை தொடர்ந்து தற்போது நான் வயிறார சாப்பிட்டு நிம்மதியாக உறங்குகின்றேன் மற்றவர்களுக்கு என்னாலான உதவியை செய்து அதன்மூலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகின்றேன் என்றார்

"அய்யய்யோ நான் இந்த உலகில் மகிழ்ச்சியையும் சேர்த்து அனைத்தையும் பணத்தின்மூலம் வாங்கிவிடலாம் என தவறாக எண்ணியிருந்தேனே" என அழுதுபுலம்பினார் அதன்பின்னர் "இன்றுமுதல் நானும் உதவிதேவைப்படு்ம் மற்றவர்களுக்கு உதவிசெய்து மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற முயற்சிசெய்வேன்" என உறுதிகூறி சென்றார்

வியாழன், 14 ஏப்ரல், 2016

நம்முடைய வாழ்வில் ஏற்படும் எதிர்ப்புகளை கண்டு சோர்வுறாமல் அவைகளை எதிர்த்து போராடி வெற்றி பெறுக


எட்டுவயது உள்ள ஒருசிறுவன் தன்னுடைய தாத்தாவிடம் வந்து “தாத்தா நான் மிகச்சிறந்த வெற்றியாளனாக வளரவிரும்புகின்றேன் அதற்கான தங்களுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளும் கூறங்கள்,” என கோரினான்.உடன் அவரும்அந்த சிறுவன் கோரியவாறு அவனுக்கான ஆலோசனைகள் எதையும் கூறாமல் அவனுடைய கையை பிடித்து அழைத்துகொண்டு அருகிலிருந்த நாற்றங்காளிற்கு சென்றார். அங்கு மரங்களுக்கான இரு நாற்றுகளை வாங்கிகொண்டுவந்து ஒன்றினை வீட்டிற்குள் ஒருமண்தொட்டியிலும் மற்றொன்றினை வீட்டிற்கு வெளியே தோட்டத்திலும் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினா.ர் பின்னர் தங்களுடைய பேரபிள்ளையிடம் “இவ்விரண்டில் எது மிகப்பெரிய மரமாக வளரும்?” என வினவினார். உடன் அந்த சிறவன்“அதில் என்ன சந்தேகம் தாத்தா! வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளதுதான் வளர்ந்து மரமாகும்”, என பதிலிறுத்தான். “அப்படியா! சரிபார்க்கலாம்,”என பதில்கூறினார் .கல்லூரி செல்லும் இளங்காளையாக வளர்ந்தபின்னர் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தான் அப்போது தன்னுடைய தாத்தாவிடம் வந்து “தாத்தா! நான் எட்டுவயது சிறுவனாக இருந்தபோது மிகச்சிறந்த வெற்றியாளனாக வளருவதற்கான தங்களுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோரினேன் இதுவரையில் தாங்கள் எனக்கு எதையும் கூறவில்லை.” என வினவியபோது, “அப்படியா! சரி வா, நாமிருவரும் நட்டுவைத்த மரக்கன்றுகளை பார்த்திடுவோம் அதன்பின்னர் நீகோரியவாறு ஆலோசனைகளை உனக்கு கூறுகின்றேன்.” என பதிலிருத்தவாறு இருவரும் வீட்டிற்குள் மண்தொட்டியில் வைத்த மரக்கன்றினையும் வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் வைத்த மரக்கன்றினையும் பார்வையிட்டனர். என்னஆச்சரியம்! வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் வைத்த மரக்கன்று குட்டையாக வளர்ச்சியெதுவுமில்லாமல் இருந்தது.ஆனால், வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் வைத்திருந்த மரக்கன்றானது மிகப்பெரியமரமாக வளர்ந்து பூவும் காயுமாக பூத்து குலுங்கியது. “பார்த்தாயா தம்பி! பாதுகாப்பான சூழலில் வைத்த மரக்கன்று பெரியமரமாக வளராமல் இருந்ததையும் வெளியே பாதுகாப்பற்ற சூழலில் வைத்த மரக்கன்று நல்ல மரமாக வளர்ந்துள்ளதையும்; இதேபோன்று நம்முடைய வாழ்விலும் ஏராளமான எதிர்ப்புகளும் மேடுபள்ளங்களும்குறுக்கிடும் நாமும் அவைகளை கண்டு சோர்வுற்று ஒதுங்கிவிடாமல் நாம்ம அவைகளுடன் போராடி வெற்றிபெறவேண்டும் என போராடுவோம் அதனை தொடர்ந்து நம்முடைய வாழ்க்ககையானது வெற்றிகரமாக அமையும். அவ்வாறில்லாமல் பாதுகாப்பான சூழலில் வாழ்க்கையானது வெற்றிகரமாக அமையாது என்பதை தெரிந்து கொள்: நீயும் அவ்வாறே நாம் வாழும் இந்த சமூகசூழலில் எதிர்ப்படும் எந்தவொரு இக்கட்டிற்கும் மிகச்சரியான தீர்வினை கண்டு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துகொள்!” என்று அறிவுரை கூறினார்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...