ஞாயிறு, 27 டிசம்பர், 2015

எந்தவொரு செயலையும் செய்துமுடிப்பதற்கு முன் நம்முடைய மனதை ஒருமுகபடுத்தி அந்த குறிப்பிட்ட செயலை செய்துமுடிப்பதையை முதன்மையானதாக வைத்து செயல்படுவோம்


முந்தைய காலத்தில் இராணுவத்தில் போர்பயிற்சி என்பது வில்வித்தையே முதண்மையானதாகும் அதிலும் முதன்முதல் வில்வித்தை கற்க விரும்பும் போர்விரன் தன்னுடைய கையால் வில்லையும் அம்பையும் சேர்த்து பிடித்துதயாரானவுடன் எதிரே உள்ள ஒரு பொருளை அவனுக்கு காண்பித்து அவனுடைய குருவானவர் அவனிடம் கேட்கும் முதல் கேள்வி் நீ கண்களால் என்ன காண்கிறாய் என்பதுதான் உடன் அந்த போர்வீரண் அந்த பொருளிற்கு அருகேயுள்ள மரத்தை பார்க்கின்றேன் மேலே சூரியனை பார்க்கின்றேன் தூரத்தில் ஒடும் விளங்குகள் பார்க்கின்றேன் அவைகளின் கீழே உள்ள பசுமையான நிலங்களை பார்க்கின்றேன் என விவரி்க்க ஆரம்பித்தால் ரொம்ப சரிதம்பி நீசென்று நாளைவா என அனுப்பி விட்டு அடுத்தவனிடம் இதே போன்ற கேள்வியை கேட்க ஆரம்பித்துவிடுவார்

சரியான போர்விரன் இந்த கேள்விக்கு பதிலாக அவர்குறிப்பிடும் பொருள் மட்டும் தன்கண்களுக்க புலப்படுவதாகவும் மற்றவை எதுவும் கண்ணிற்கு தோன்றவில்லை எதுவும் தோன்றவில்லை என கூறுவான் உடன் குருவும் இவனே சரியான போர்வீரண் என தெரிவுசெய்வார்

இது அந்த காலத்திற்கு மட்டுமல்ல எந்த காலத்திற்கும் பொருந்தகூடிய கருத்தாகும் போர்விரணுக்கு மட்டுமல்லாது எந்த வொரு பணியைசெய்திடும் நம் அனைவருக்குமே இந்த கருத்து பொருந்துகின்றது எவ்வாறு எனில் நாம் எந்தவொரு செயலை செய்வதற்கு முடிவெடுத்தோமெனில் அதிலிருந்து நம்முடைய கவணத்தை திசை திருப்ப ஏராளமான நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன நம்முடைய மனமும் நிலையற்ற தன்மைமையால் அலைபாய்ந்து மாறக்கூடியதாக இருப்பதால் நாமும் நம்முடைய செயலில் கவணத்தை செலுத்திடாமல் புறக்காரணிகளால் மற்ற நிகழ்வுகளை கவணிக்க ஆரம்பித்துவிடுவோம் அதனால் நம்முடைய செயல் துவங்கபடாமலே அப்படியே இருந்துவிடும் அதனை தொடர்ந்து நாமும் நம்முடைய செயலில் வெற்றிபெறமுடியாது நின்றுவிடுவோம்

அதனால்தான் நாம் அனைவரும் நாம் எடுத்துகொண்ட நம்முடைய எந்தவொரு செயலையும் செய்துமுடிப்பதற்கு நம்முடைய மனதை ஒருமுகபடுத்தி அந்த குறிப்பிட்ட செயலை செய்துமுடிப்பதையை முதன்மையானதாக வைத்து செயல்படுவோம் என உறுதி செய்துகொள்க என கோரப்படகின்றது அப்போதுதான் நாம் எடுத்துகொண்ட எந்தவொரு பணியும் முழுமையாக வெற்றிகரமாக முடிவடையும் நாம் எதிர்பார்த்த விளைவும் நமக்கு கிடைக்கும் என்ற செய்தியை எப்போதும் மனதில் கொள்க

சனி, 12 டிசம்பர், 2015

இதில் யார் பணக்காரன்? யார் ஏழை?


நடுத்தர குடும்பத்தாய் ஒருத்தி வியாபார பணித்தொடர்பாக சென்னைக்கு தன்னுடைய மகிழ்வுந்தில் வந்து ஐந்துநட்சத்திர தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்

தங்கும் விடுதிக்குள் நுழையும்போதே அவருடைய கைக்குழந்தை வயிற்றுப்பசியினால் அழஆரம்பித்தது உடன் தற்போதைய. நாகரிகத்தின்படி தாய்ப்பாலை அந்த கைக்குழந்தைக்கு புகட்டாமல் புட்டிபால் புகட்டுவதற்காக அந்தஐந்துநட்சத்திர தங்குவிடுதியில் பசும்பால் கோரினால் உடன் கால்லிட்டர் பால் ரூபாய் 50.00 என்ற விலையில் வழங்கியதை தன்னுடைய கைக்குழந்தைக்கு புகட்டினார்

அன்ற சாயுங்காலம் அந்தாய் பணி முடிவடைந்தபின் தன்னுடைய சொந்தஊருக்கு நெடுஞ்சாலைவழியாக மகிழ்வந்தில் திரும்பி சென்று கின்றிருந்தபோது மீண்டும் அந்தக் கைக்குழந்தை வயிற்றுப்பசியினால் அழஆரம்பித்தது

உடன் சாலையோர இருந்த தேநீர் கடை ஒன்றில் வண்டியை நிறுத்தம் செய்து அந்த கைக்குழந்தைக்கான கால்லிட்டர் பால் வழங்குமாறு கோரினார் அந்த தேநீர் கடையின் வயதான சொந்தக்காரர் உடன் தேவையான பாலை அந்த தாய்க்கு வழங்கியது மட்டுமல்லாது மேலும் கால்லிட்டர் பாலை வழியில் மீண்டும் அந்தக்கைக்குழந்தை அழுதால் புகட்டிடுமாறு வழங்கினார்

இந்த பாலிற்கான விலைஎவ்வளவுஎன அந்த தாய் வினவியபோது குழந்தைகளுக்கான பாலை விலையில்லாமல் தங்களுடைய தேநீர்கடையில் வழங்குவது வழக்கமென க்கூறி அந்த தாய் கொடுத்த பணத்தை ஏற்றுக்கொள்ளமறுத்துவிட்டார் அந்த கிராமத்து வயதான தேநீர்கடை முதலாளி.

இதில்யார் பணக்காரன் யார் ஏழை என நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள் மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாது உதவிசெய்வதே மனித்தன்மையாகும் என்ற நியதியை மனதில் கொள்க.

போதுமென்ற மனமே பொன்செயும் மருந்தாகும்


பெண்கள் தங்களுக்கு தேவையான கணவனை தேர்வுசெய்து கொள்முதல் செய்வதற்கான பெரிய கடைஒன்றை நியூயார்க் நகரில் துவங்கியிருந்தனர் அவ்வாறான கடையை தம்முடைய வாழ்நாளிலேயே கண்டதில்லையென பெண்களின் கூட்டம் அந்த கடையில் அலைகடலென குவிந்தனர் என்னதான் அந்த கடையில் இருக்கின்றதென காணலாமே என அந்த கடைக்கு ஒருபெண் சென்றார்

அந்தக்கடையின் ஒவ்வொரு மாடிக்கும் ஒருமுறை மட்டமே போகமுடியும் திருப்தியாக இல்லையெனில் அடுத்தமாடிக்கத்தான் செல்லவேண்டுமே தவிர மீண்டும் முந்தை தளத்திற்கு செல்லமுடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது

பரவாயில்லையே ஐந்துமாடி இருக்கின்றது எதிலாவது நமக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்காமலா போய்விடுவார் பார்க்கலாம் என முதல்மாடியில் முகப்பில் இந்த தளத்தில் இருக்கும் மாப்பிள்ளைகள் அனைவரும் வேலைவெட்டியில்லாதவர்கள் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு சீச்சீ இந்த தளம் வேண்டாம் என இரண்டாவது தளத்திற்கு சென்றார்

இரண்டாவதுதளத்தில் இங்கு உள்ள மாப்பிள்ளைகள் நல்லசம்பளத்துடன் கூடிய பணியில் உள்ளனர் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு பரவாயில்லை மேலும் கூடுதலான தகுதியிருந்தால் நன்றாகஇருக்கும் என எண்ணிக்கொண்டு அதற்கடுத்த தளத்தில் என்னஇருக்கின்றது என காண்போமென மூன்றாவது தளத்திற்கு சென்றார்

மூன்றாவது தளத்தில் இங்கு இருக்கும் மாப்பிள்ளைகள் அனைவரும் நல்லசம்பளத்துடன் கூடிய பணியோடு நல்ல அன்பாக பழகக்கூடியவர்கள் என்ற அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு அதைவிட இந்த தளத்தில் பரவாயில்லை சரி நான்காவது தளத்தில் என்னதான் இருக்கின்றது என காண்போம் என நான்காவதுதளத்திற்கு சென்றார்

அங்கு நான்காவது தளத்தில் இங்கு உள்ள மாப்பிள்ளைகள் நல்லசம்பளத்துடன் கூடிய பணியோடு நல்ல அன்பாக பழகுவதுடன் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்பவர்கள் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு மிகமிக பரவாயில்லை இதைவிட கூடுதல் தகுதியிருந்தால் நன்றாக இருக்குமே என ஐந்தாவது தளத்திற்கு சென்றார்

அங்கு மிக்க நன்றி நான்கு தளத்திலும் உங்களுக்கு பிடித்தமானமாப்பிள்ளை இருந்தபோதிலும் உங்களுக்கு பொருத்தமான மாப்பிள்ளை கண்டிப்பாக கிடைப்பார் மின்தூக்கி வழியாக சென்றுவாருங்கள் என வெளியே அனுப்பிவிட்டனர் .

திங்கள், 16 நவம்பர், 2015

உண்மையான அன்பிற்கு எந்தவொரு எல்லையுமில்லை


பரபரப்பான காலைநேரத்தில் 8.30 மணிக்கு ஒருமருத்துவமனையின் ஒருஇளைஞன் அவசரமாக வந்துதன்னுடைய கட்டைவிரலில் அடிபட்டதற்கு தேவையான கட்டினை கட்டுமாறு கோரியதை தொடர்ந்து மருத்துவரும் காயத்திற்கு போதுமான கட்டினையும் மருந்து மாத்திரைகளையும் வழங்கி அவைகளை எவ்வாறு எவ்வெப்போது விழங்கவேண்டும் என ஆலோசனை கூறி அந்த இளைஞன் ஏன் பரபரப்பாக இருக்கின்றான் என்றும் உடனடியாக எங்கு செல்லவிரும்புகின்றான்என்றும் வினவினார்

அதற்கு அந்த இளைஞன் சரியாக 9 மணிக்கு கொஞ்ச தூரத்திலுள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து காலை சிற்றுண்டி அருந்துவதை வழக்கமாக செய்துவருவதாகவும் அதனால்தான் என பதிலிருத்தான் தொடர்ந்து மருத்துவர் அந்த இளைஞனின் மனைவிக்கு என்ன நோய் என வினவியபோது பயங்கர எனும் நோயால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக கடந்த ஒருவருடமாக அந்த மருத்தவமனையில் இருப்பதாகவும் தனக்கு எந்தபணி இருந்தாலும் காலையிலும் இரவிலும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்த உணவு அருந்துவது வழக்கமான செயலாகும் என்றும் கூறினான் தொடர்ந்து உங்களுடைய மனைவிக்குதான் உங்களை அடையாளம் தெரியாதே என க்கூறியதை தொடர்ந்து

அவர் என்னுடைய மனைவி என்று எனக்கு தெரியுமல்லவா அதனால் தான் அவ்வாறு கடைபிடித்து வருகின்றேன் உண்மையான அன்பிற்கு எந்தவொரு எல்லையுமில்லையல்லவா எனக்கூறி விடைபெற்று அவசரமாக சென்றார் அந்த இளைஞன்.

நாம் அனைவரும் மற்றவர்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு மனதளவில் துன்பம் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கின்றோம்


தொடர் வண்டி ஒன்று பெரிய நகரத்திலிருந்து தன்னுடைய பயனத்தை துவங்கியது அதில் ஏராளமான பயனிகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகமுக்கியமாக தத்தமது பணிக்கு சென்று பணிமுடிந்து வீடுதிரும்புவோர்கள் அதிகஅளவு இருந்தனர் இளம் கணவன் மனைவிமார்களும் கல்லூரியில் பயிலும் இளைஞர்களும் அந்த பெட்டியில் கூட்டமாக பயனம் செய்தனர் அந்த பெட்டியில் ஒருவயதான மனிதனும் 30 வயதுடைய இளைஞனும் சாளரத்திற்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர் .

அந்த இளைஞன் அங்கே பாருங்கள் அப்பா அனைத்து மரங்களும் செடிகொடிகளும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்று தன்னுடைய தந்தையிடம் மிகவும் மகிழ்ச்சியோடு சத்தமிட்டு கூறிக்கொண்டிருந்தான் அதனை கண்ணுற்ற அருகிலிருந்தோர் அனைவரும் என்ன இந்த இளைஞன் பித்துபிடித்தவன் போலும் அதனால்தான் கூக்குரலிடுகின்றான் என தங்களுக்குள் முனுமுனுத்தனர் சிறிதுநேரம் கழித்து சாரல்மழை துவங்கியது அதனை கண்ணுற்ற அந்த இளைஞன் மேலும் அதிக மகிழ்ச்சியுடனும் சத்தத்துடனும் அப்பா அப்பா இப்போது பாருங்களேன் என்ன அருமையாக மழை பொழிகின்றது என மகிழ்ச்சி கூச்சிலிட்டான்

இதனை கண்ணுற்ற மற்ற பயனிகள் அந்த பெரியவரிடம் தே பெரிசு உங்களுடைய பித்தாங்குளி பையனை அடக்கிவையுங்கள் இந்த சாளரத்தை முதலில் மூடிவிடுங்கள் எங்களுக்கு எல்லாம் ஒரே தொந்தரவாக இருக்கின்றது வாயை மூடிக்கொண்டு இருக்கசொல்லுங்கள் என சன்டைபிடிக்க ஆரம்பித்தனர்

உடன் பெரியவரும் ஐயாமார்களே அம்மாமார்களே சிறிது மன்னித்துகொள்ளுங்கள் எனக்கூறினார் தொடர்ந்து அந்த இளைஞனுக்கு சிறுவயதிலிருந்து கண்பார்வை இல்லாமல் இருந்துவந்தது கடந்தவாரந்தான் அவர்களுடைய தாய் இறந்தபோது அவருடைய கண்களை அறுவைசிகிச்சை வாயிலாக இந்த இளைஞனுக்கு பொருத்தப்பட்ட பார்வை திரும்பியது தற்போதுதான்முதன்முதல் மருத்துவமனையிலிருந்து தங்களுடைய வீட்டிற்கு திரும்பி வருகின்றோம் எனக்கூறி தங்களுடைய இருக்கையிலிருந்து எழுந்து அடுத்த பெட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துசென்றார்

நாம் அனைவரும் மற்றவர்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு மனதளவில் துன்பம் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கின்றோம் என்பதே எதார்த்தமான உண்மைநிலவரமாகும்.

திங்கள், 9 நவம்பர், 2015

இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் சமம்


முன்னொரு காலத்தில் முதிய துறவிஒருவர் பாலைவணத்தில் அமர்ந்து தவம்புரிந்து கொண்டிருந்தார். அந்நிலையில் அவர் சுற்றுசூழலையே மறந்திருப்பார் அதனால் எதுநடந்தாலும் அதில் அவருடைய கவணம் செல்லாது .

அப்போது அந்த நாட்டினுடைய அரசன் அந்த வழியே தன்னுடைய படையுடன் சென்றுகொண்டிருந்தார் . பொதுவாக அரசனை பார்த்தவுடன் நாட்டுமக்கள் அனைவரும் தாம் எந்த பணியை செய்து கொண்டிருந்தாலும் அதனை அப்படியே நிறுத்தம்செய்துவிட்டு எழுந்துநின்று தலைகுனிந்து அரசனுக்கு மரியாதை செய்வது வழக்கமான செயலாகும் .

ஆனால்அவ்வாறு எதுவும் செய்திடாமல் இந்த முதிய துறவி அமர்ந்திருந்ததை கண்ணுற்ற அரசன் தன்னுடைய மந்திரியை அழைத்து "இந்த துறவி ஏன் அவ்வாறு மரியாதை செய்யாமல் அமர்ந்துள்ளார் " என விசாரித்து வருமாறு உத்திரவிட்டார் .உடன் மந்திரியும் அரசன் உத்திர விட்டவாறு அந்ததுறவியிடம் சென்று "நம்முடைய நாட்டு அரசன் இந்த வழியே செல்லும்போது நம்முடையஅரசருக்கு எழுந்துநின்று ஏன் குனிந்து வணங்கவில்லை " என வினவினார்

அந்த துறவியானவர் "ஒருநாட்டின் அரசனுக்கு குடிமக்கள் அனைவரும் அடிமையன்று. அந்நாட்டின் குடிமக்களை சரியாக பாதுகாத்து அவர்களின் குறைநிரைகளை சரிசெய்வதே அரசனுடைய பணியாகும். இவ்வுலகில் அரசனும் சாதாரணகுடிமகனும் சரிசமமானவர்களே எவ்வாறு எனில் இறந்தபின்னர் அனைவரையும் மண்ணில் குழிதோண்டி புதைத்தபின் சிறிதுகாலம் கழித்து தோண்டிபார்த்தால் அனைவருடைய எலும்புகளும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் அதனால் அரசன் உயிருடன் இருக்கும்வரை அவருக்கு கிடைத்த அரசபதவியை கொண்டு மற்றவர்களுக்கு தொந்திரவு கொடுத்திடாமல்பொதுமக்கள் அனைவருக்கும் நல்லசெயலைசெய்து வாழச்சொல்லுங்கள் !" என அந்த துறவி அறிவுரை கூறினார்.

நாம் எதையும் கொண்டுவரவில்லை அதனால் நாம் எதையும் கொண்டுசெல்லமுடியாது


உலகில் ஏராளமான நாடுகளை வெற்றிகொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த மாபெரும் பேரரசன் அலெக்ஸான்டர் உடல்நிலைசரியில்லாமல் படுத்தபடுக்கையாகிவிட்டார் தன்னுடைய நாட்டிற்கே திரும்புவோமா என்ற சந்தேகம் அவருக்கு வந்து விட்டது . அந்தளவிற்கு அவருடைய உடல்நிலை மோசமாகவிட்டது

ஒருவழியாக அவருடைய நாட்டிற்கு வந்துசேர்ந்தவுடன் தன்னுடையஅமைச்சரை அருகில் அழைத்து தான் இனிஉயிருடன் இருக்கபோவதில்லை அதனால் தான் இறந்தவுடன் தன்னுடைய இருவிருப்பங்களைமட்டும் செயல்படுத்திடுமாறு வேண்டிக்கொண்டார் அவருடைய அமைச்சரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார்.

"முதல் விருப்பமாக தான் இறந்தபின் தன்னுடைய உடலை சுடுகாடுநோக்கி எடுத்துசென்றிடும் வழிமுடிவுவரை தான் வெற்றிகொண்ட நாடுகளில் இருந்துகொண்டுவந்த அனைத்து பொன் வெள்ளி நாணயங்கள் ஒன்றைகூட கையிருப்பில் வைத்திடாமல் அனைத்தையும் கீழே கொட்டிகாலிசெய்துவிடவேண்டும் ஏனெனில் ஒரு ரூபாய்கூட என்னோடு நான் எடுத்து செல்லமுடியாது"

"இரண்டாவதாக என்னுடைய புதைகுழியில் என்னுடைய கைகளை திறந்துவைத்தவாறு வைத்திடவேண்டும் ஏனெனில் நான் பிறக்கும்போது கைகளில் எதையும் எடுத்துவரவில்லை அவ்வாறே நான் இறந்தபின்னரும எந்தவொருபொருளையும் கைகளில் எடுத்தசெல்லவில்லை என அனைவருக்கும் தெரியவேண்டும் " என்றவாறு அவருடைய விருப்பத்தினை கூறிமுடித்தவுடன் அவருடைய உயிரும் அவருடைய உடலைவிட்டு பிரிந்தது.

நீதி நாம் என்ன சம்பாதித்தாலும் வெற்றிகொண்டாலும் நம்மோடு ஒன்றுகூட கொண்டுசெல்லமுடியாது என்பதே உண்மைநிலையாகும்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...