நிறுவனங்களுக்கான குழுக்காப்பீடு
இன்றைய காலகட்டத்தில் குழுக்காப்பீடு என்பதே மிக முக்கியமான தொழிலாளர் நல திட்டமாக பெரியநிறுவனங்களின் முன்வைக்கப்படுகிறது, 100 பேருக்கு குறைவான ஊழியர்களை பணியமர்த்தியிருக்கும் நிறுவனங்கள் கூட இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தி பெரிதும் பயனடைமுடியும்,
தனிப்பட்டவர்களாக ஆயுள்காப்பீடுசெய்வதைவிட குழுக் காப்பீடாக ஒருநிறுவனத்தின் மூலம் செய்வது குறைந்தசெலவில் அதிக நன்மைகிடைக்கும் ஒருசெயலாகும்,இந்த குழுக் காப்பீடு நம்முடைய தேவைக்கேற்ப பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன அவற்றில் ஒன்றை நம்விருப்பப்படிதெரிவுசெய்து நடைமுறைபடுத்தலாம், இதன் வகை பின்வருமாறு
1.மருத்துவசெலவிற்கான குழுக்காப்பீடு ,
2. தனிநபர்விபத்து குழுக்காப்பீடு ,
3. பணிக்கொடை குழுக்காப்பீடு ,
4.ஆயுள் குழுக்காப்பீடு ,
5.ஓய்வூதிய குழுக்காப்பீடு,
6.தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சட்டத்திற்குட்பட்ட ஈடிஎல்ஐ நன்மைகளுக்கான மாற்று குழுக்காப்பீடு,
இந்த குழுக்காப்பீட்டில் பின்வரும் முக்கிய நன்மைகள் கிடைக்கின்றன
1,முப்பது வயதிற்குட்பட்ட ஒருவர் ஆயுள்காப்பீட்டிற்கான பாலிசியை தனிப்பட்ட முறையில் எடுக்கும்போது ரூபாய் ஒருஇலட்சம் காப்பீட்டிற்காக மூவாயிரத்திற்கு குறையாமல் வருடாந்திர பிரீமியதொகை செலுத்திடவேண்டும்அதையே குழுவாக நிறுவனத்தின் மூலம் எடுத்திடும்போது ரூபாய் நூறுமட்டும் வருடாந்திர பிரீமியதொகை செலுத்திட்டால்போதும்
2,வயது வரம்பு மற்றும் காத்திருக்கும் காலம் போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் குழுக்காப்பீட்டில் இல்லை,
3.நிறுவனத்தில் ஒருமுறை குழுக்காப்பீட்டு பாலிசி எடுத்துபுதுப்பித்து கொண்டுவந்திட்டால் புதிய பணியாளராக சேரும் ஒருவரின் பெயர் தானாகவே இந்த குழுக்காப்பீட்டில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உறுப்பினராக சேர்த்துகொள்ளப்படுவார்,
4, நிறுவனத்தின் மூலம் இந்த குழுக்காப்பீடடிற்கான அனைத்துசேவைகளும் உடனுக்குடன் கிடைக்கின்றன,
5,ஊழியர் ஒருவர் இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தவுடன் ஒவ்வொரு மாதமும் அவருடைய மாதசம்பளத்தில் இதற்கான பிரீமியத்தொகை பிடித்தம்செய்யப்பட்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு நிருவாகம் செலுத்திவிடுகின்றது,
6, ஊழியர் ஒருவர் தனிப்பட்ட முறையில் ஆயுள்காப்பீடு செய்திருந்தாலும் இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்த்தகொள்ளப்படுவார்
பொதுவாக குழுக்காப்பீடு என்பதைமட்டுமே அனைவரும் தெரிந்திருப்பார்கள் ஆனால் குறைந்த செலவில் என்னென்ன நன்மைகள் இதில் கிடைக்கின்றன என அறிந்திருக்கமாட்டார்கள் அதனைபற்றி இப்போது காண்போம்
மருத்துவசெலவிற்கான குழுக்காப்பீடு.
ஊழியர் மற்றும் அவரை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர் களுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவினை ஈடுசெய்ய இந்த திட்டம் பயன்படுகின்றது,இதன்பயன்கள் பின்வருமாறு
1,இந்த திட்டத்தில் ஊழியர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்பட்டால் தங்களுடைய உடல்நிலையை சீர்செய்வதற்காக காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று இதற்கான அடையாள அட்டையை மட்டும் காண்பித்து சொந்தமுறையில் பணச்செலவில்லாமல் தங்களுடைய பிணியை தீர்த்து பயன்பெறலாம்
2,ஊழியர் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இதன்மூலம் காப்பீடு செய்யப்பட்டு இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் மருத்துவ செலவினை இதன்மூலம் ஈடுசெய்யப்படுகின்றது,
3,இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்பு ஏதேனும் நோய்வாய் பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து விடுபடுவதற்காக இந்த திட்டத்தின் மூலம் மருத்துவசெலவிற்கான தொகை ஈடு செய்யப்படுகின்றது,
விபத்து குழுக்காப்பீடு
நிறுவனங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை ஈடுசெய்வதற்காக இந்த திட்டம் உதவுகின்றது,விபத்தினால் ஊழியர்களின் உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டாலும்
அதற்கான பகுதி இழப்பீட்டுதொகையை இந்த திட்டம் வழங்குகின்றது,இந்த திட்டத்தில் குழுவாக பிரீமியத்தொகை செலுத்ததுவதால் குறைந்த அளவிற்கே நிறுவனத்திற்கு செலவாகின்றது, ஆயினும் அதிக அளவிற்கு நட்டஈட்டின்மூலம் நன்மைகள் கிடைக்கின்றன,
பணிக்கொடை குழுக்காப்பீடு ,
ஊழியர் ஒருவர் நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது அவருக்கு பணிக்கொடை வழங்கவேண்டியது சட்டப்படி கட்டாயமாக செயல்படுத்தவேண்டிய செயலாகும்,பொதுவாக ஒரு நிறுவனத்தின் ஆரம்பத்தில் நிறுவனத்தை விட்டு குறைந்த அளவு ஊழியர்களே ஓய்வுபெறுவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு ஓட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரும் ஓய்வு பெரும்நிலையில் அதிகப்படியாக பணிக் கொடை வழங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை அந்நிறுவனத்திற்கு ஏற்படும் அதனை தவிர்த்து ஆரம்பித்திலிருந்தே சிறிதுசிறிதாக பணிக் கொடைக்கு என்று குறிப்பிட்டத் தொகையை ஒதுக்கீடு செய்து வந்தால் பின்னர் அதிகசெலவாகும் நிலையில் சரிசெய்வதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும், இதற்காக உதவ வருவதுதான் பணிக்கொடை குழுக்காப்பீட்டு திட்டமாகும், இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்டஅளவிற்கு தொகை செலுத்தி வந்தால் போதும் எத்தனை ஊழியர்கள் பணியிலிருந்து வெளியேறும் நிலையிலும் அவர்களுக்கான பணிக்கொடைத் தொகை மிகசுலபமாக இந்தபணிக்கொடைகுழுக்காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும் மிக முக்கியமாக ஊழியர்களுக்கு பணியிடையில் ஏற்படும் இன்னல்களின்போது அவருடைய முழுபணிக்காலத்திற்குமான பணிக்கொடைத்தொகை இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றது,
ஆயுள் குழுக்காப்பீடு
இந்த திட்டத்தில் தனிநபர் விபத்து காப்பீடு போன்று மருத்தவ பரிசோதனை எதுவும் செய்யத்தேவையில்லை,
குழுவாக பிரீமியத்தொகை செலுத்துவதால் வயதுவரம்பிற்கு ஏற்றவாறு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செலுத்தத் தேவையில்லை அதற்கு பதிலாக ஒரேமாதிரியான சமமான பிரீமியத்தொகை ஒவ்வொருவருடைய சம்பளத்தில் இருந்தும் பிடித்தம்செய்ப்பட்டு செலுத்தப்படுகின்றது
இதே அளவு பிரீமியத்திற்கு தனிநபர் விபத்து காப்பீட்டைவிட காப்பீட்டுதொகை பலமடங்கு அதிகமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை கிடைக்கின்றது,
ஓய்வூதிய குழுக்காப்பீடு பாலிசி
ஊழியர்கள் ஒய்வுபெறும்போது வருங்கால வைப்பு நிதியிலிருந்து அவருடைய கணக்கில் உள்ளத்தொகை மற்றும் பணிக்கொடை போன்றவை ஒட்டுமொத்தமாக வழங்கபடுகின்றது ஏதோ குடும்ப சூழல் போன்ற காரணங்களினால் இந்த ஒட்டு மொத்த தொகை உடனடியாக அவரால் செலவிடப்படுகின்றது எனக்கொள்வோம் இதனால் அதன்பின்னர் அவருடைய வாழ்நாள் முழுவதும் வருமானம் ஏதுவுமில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்தே வாழவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகின்றது,
இதனை தவிர்க்கும்பொருட்டு ஓய்வூதிய குழுக்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகின்றது இதன்மூலம் குறிப்பிட்ட சதவிகித தொகை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு செலுத்தப்படுகின்றது, பின்னர் இதன் உறுப்பினர் பணிஓய்வுபெறும்போது அதற்கடுத்தமாதத்தில் இருந்தே அவர் பணியில்இருக்கும்போது மாதாமாதம் சம்பளம் பெறுவதை போன்று குறிப்பிட்டதொகை ஒய்வூதியமாக வழங்ககப்படுகின்றது இந்த திட்டத்தினால் நிருவாகத்திற்கு கூடுதலாக செலவேதும் இல்லை ஆனால் ஊழியர்களின் மனநிறைவுமட்டும் கிடைக்கப்பெறுகின்றது,
வருங்கால வைப்புநிதி சட்டத்திற்குட்பட்ட ஈடிஎல்ஐ பதிலான மாற்று குழுக்காப்பீடு ,
இந்த திட்டத்தினால் நிருவாகத்திற்கு கூடுதலாக செலவேதும் இல்லை, வருங்கால வைப்புநிதியில் ஈடிஎல்ஐ செலுத்துவதற்கு பதிலாக அதே தொகையை வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் அனுமதிபெற்று ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தப் படுகின்றது, இந்த தொகை ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்தில் 0,5% அதிகபட்சம் வருடத்திற்கு ரூபாய் 390.00 ஆகும், இதன்மூலம் காப்பீட்டு பயனாக ரூபாய் அறுபதாயிரம் வரை ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதிதிட்டத்தில் கிடைக்கின்றது ஆனால் இதேபிரீமியத்தொகைக்கு ரூபாய் 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை காப்பீட்டுத்தொகை ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திலிருந்து நிருவாகத்திற்கு கூடுதலான செலவேதுமில்லாமல் இந்த திட்டத்தின்மூலம் கிடைக்கின்றது,
இவ்வாறு பல்வேறுவகையானகுழுக்காப்பீட்டுதிட்டத்தில் ஊழியர்களை உறுப்பினர்களாக சேர்த்து குறைந்த பிரீமியத்தில் நிருவாகத்திற்கு கூடுதலான செலவேதுமில்லாமலும் அதிகஅளவிற்கு பலன் (நன்மைகள்) பெறும்படிசெய்து அதன்மூலம் ஊழியர்களின் மனநிறைவையும் மகிழ்ச்சியைம் பெற்று ஒருநிறுவனத்தின் உற்பத்தியை உயர்த்தவதற்கான சூழலை உண்டாக்க வழிகோலுவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக