சனி, 30 செப்டம்பர், 2023

வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறுவது ?தாத்தா பேரனுக்கு அறிவுரை

 ஒருமுறை ஒரு சிறுவன் கோடை விடுமுறையில் தன்னுடைய தாத்தாவைப் பார்க்க கிராமத்திற்கு வந்தான். அவன் எப்பொழுதும் தன்னுடைய தாத்தாவோடு விளையாடுவது வழக்கமாகும். ஒரு நாள் அவன் தன்னுடைய தாத்தாவிடம், "தாத்தா நான் வளர்ந்தவுடன், நான் வெற்றிகரமான மனிதனாக மாற விரும்புகிறேன், அவ்வாறு வெற்றிகரமான மனிதனாக மாறுவதற்கான  வழிமுறைகளை கூற முடியுமா?" எனக்கோரினான். 

உடன் அவனுடைய தாத்தா சரி அதற்கான வழிமுறைகளை கூறுகின்றேன் வா ஆம் என க்கூறி,அந்த சிறுவனை தன்னுடன் அருகில் உள்ள தோட்டங்களுக்கான நாற்றங்காளிற்கு  அழைத்துச் சென்றார்.அந்நாற்றங்காலில் இருந்து இரண்டு சிறிய செடிகளை வாங்கிக்கொண்டு தாத்தா தன்னுடைய பேரனுடன் வீட்டிற்கு திரும்பிவந்தார். வீட்டிற்கு வந்தபின்னர் ஒரு தொட்டியில் ஒரு செடியை நட்டு வீட்டிற்குள் வைத்தார் மற்றொன்றை வீட்டிற்கு வெளியே நட்டார்.தொடர்ந்து " இந்த இரண்டு செடிகளில் எது எதிர்காலத்தில் நன்றாக வளரும் " என்று தாத்தா தன்னுடைய பேரனிடம் கேட்டார். சிறுவன் சிறிது நேரம் ஆலோசனைசெய்து, "வீட்டினுள் பாதுகாப்பாக வைத்த செடிதான் நன்றாக வளரும், ஏனென்றால் அது எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கும், அதே நேரத்தில் வெளியில் உள்ள செடி அதிகசூரிய ஒளி, பலமான புயல், விலங்குகள் போன்ற பலவற்றால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளது." என்றார் .தாத்தா சிரித்துக் கொண்டே, "சரி  என்ன நடக்கும் என காண்போம்.* என்றார் .அதன் பிறகு சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் நகரத்திற்கு சென்றுவிட்டான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறுவன் மீண்டும் தன் தாத்தாவைகாண கிராமத்திற்கு வந்தான். சிறுவன் தன்னுடைய தாத்தாவைப் பார்த்ததும், "தாத்தா, கடந்த முறை நான் வாழ்க்கையில் வெற்றிபெற சில வழிமுறைகளைக் கேட்டேன், ஆனால் நீங்கள் என்னிடம் எதுவும் கூறவில்லை. அதனால் இந்த முறை நீங்கள் கண்டிப்பாக எனக்கு கூறவேண்டும்." என்றான் .இப்போதும் தாத்தா சிரித்துக் கொண்டே , ‘கண்டிப்பாக ஆனால் முதலில் நாம் சில வருடங்களுக்கு முன்பு நட்டுவைத்த செடிகளை எந்த நிலையில் உள்ளது எனக்காண்போம்". எனக் கூறியவாறு, தாத்தா அந்த சிறுவனை வீட்டிற்குள் செடியை நட்டு வைத்திருந்த  இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த செடி.யானது காற்றில் தள்ளாடும் மெல்லிய மரமாக மாறியதைக் கண்டனர். பின்னர்  வீட்டிற்கு வெளியே நட்டுவைத்திருந்த செடியை காண அந்த சிறுவனை அழைத்துச் சென்றார். அங்கே ஒரு பெரிய மரம் நிற்பதையும் அதன் கிளைகள் வெகுதூரம் பரவி, வழிப்போக்கர்களுக்கு நிழல் தருகின்றவாறு இருப்பதையும் கண்டனர். இப்போது, தாத்தா அந்த சிறுவனைப் பார்த்து, ", எந்தச் செடி நன்றாகவும் வெற்றிகரமாகவும் வளர்துள்ளது?" கேட்டார். அதற்கு அந்த சிறுவன், "நாம் வெளியில் நட்டதுதான். ஆனால் தாத்தா, இது எப்படி சாத்தியம்? அந்த செடி இவ்வளவு பெரியதாக வளர்ந்துள்ளது ஆனால்அது பல ஆபத்துகளைச் சந்தித்திருக்க வேண்டுமே!" என சந்தேகமாக வினவினானஅ .உடன்தாத்தா சிரித்துக்கொண்டே , "ஆம், வெளியில் உள்ள செடி பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருந்தது, அதனால் அவ்வாறான பிரச்சனைகளைச் சமாளிப்பதும் அதன் பலனாக. வெளியில் உள்ள செடிக்கு தன் வேரையும் கிளைகளையும எவ்வளவு வேண்டுமானாலும் பரப்பும் சுதந்திரம் இருந்தது. புயல் போன்ற பிரச்சனை, வேர்களை வலுவாக்கியது. இன்று ஒரு சிறிய புயல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது. , நான் உனக்குச் சொல்லப் போவது, அதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்க, அப்போதுதான் வாழ்க்கையில் நீ எதைச் செய்தாலும் வெற்றி பெறுவாய். நீ எப்போதும் வசதியான தேர்வுகளைச் செய்தால், எல்லா ஆபத்துகளையும் மீறி இந்த உலகத்தில் வெற்றியாளனாக வளரமுடியாது அவ்வாறான ஆபத்துகளை எதிர்கொள்ள நீ தயாராக இருந்தால் அவற்றை சமாளித்து வெற்றியாளனாக உன்னால் வளரமுடியும் .வாழ்க்கையி்ல் ஏற்படும் அவ்வாறான பிரச்சனைகளை தடைகள் என நினைக்காதே அவைகளை வெற்றிக்கான படிகள் என்று எண்ணி செயல்படுக." என நீண்ட விளக்கமளித்தார் சிறுவன் நீண்ட பெருமூச்சு எடுத்து கொண்டு  வெளியில் வளர்ந்திருந்த மரத்தை உற்றுப் பார்த்தான், அவனது தாத்தாவின் சொற்கள் அவனுக்குப் புரிந்தது - வாழ்க்கையில் நாம் எதிர்படும் கருதும் தடைகள் நம்மை தோல்வியுறச்செய்வதாக கருதாமல், அதே தடைகள் நம்மை வலிமையடையச் செய்கின்றன, மேலும் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றன. என முடிவுசெய்துசெயலபடுக.

சனி, 23 செப்டம்பர், 2023

.துறவிக்கு துனி துவைப்பவரின் அமைதியான பதில் -

 ஒரு சமயம் துறவி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த ஒரு பெரிய பாறையில் அமர்ந்து தியானம் செய்யத்துவங்கினார்.அவ்வாற்றின் கரையின் அவ்விடத்தில் ஒரேயொரு  பாறை மட்டுமே  இருந்ததால், தினமும் ஒரு துனிதுவைப்பாவரும் அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரை பயன்படுத்தி அந்த பாறையில் துணி துவைக்க வருவார் . அவ்வாறே இன்று, துனிதுவைப்பதற்காக அந்த பாறைக்கு வந்த அந்த துனிதுவைப்பவர் அந்த பாறையில் துறவி தியானம் செய்து கொண்டிருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் துறவி தியானம்முடிந்து எழுந்து சென்றுவிடுவார் நாமும் நம்முடைய பணியை செய்திடலாம் என, அவர் காத்திக்க முடிவு செய்தார், ஆனால் இரண்டு மணி நேரம் கழித்துகூட அந்த துறவி எழுந்து செல்லவில்லை. எனவே, அந்த துணி துவைப்பவர்  கைகளைகூப்பி வணங்கிய வாறு துறவியிடம் பணிவுடன்  - ஐயா எனக்கு துணி துவைக்க இந்த பாறை தேவை, நீங்கள் வேறு எங்காவது சென்று உட்கார்ந்து தியானம் செய்தால், நான் என்னுடையபணியைமுடிக்க முடியும்.  என கேட்டுக் கொண்டார் அந்த துறவி எழுந்திருப்பதாக தெரியவில்லை அதனால், துணிதுவைப்பவர் தான் கொண்டு வந்த துணிகளை அந்த பாறையில்  துவைக்கத் தொடங்கினார், அவ்வாறான அவரின் துணி துவைக்கும் பணியில்  அழுக்கடைந்த நீர்  துறவியின் மீது தெறித்தது. இதனால் துணிதுவைப்பரின் மீது அதிக கோபம் கொண்டு துறவி அவரை மோசமாக திட்டினார். இதைகண்ட அந்த துணிதுவைப்பவர்  - நான் ஏதாவது குற்றம் செய்திருக்க வேண்டும் அதனால்தான் என்னை இவ்வாறு இந்த துறவியானவர் கோபமாக திட்டு கின்றார். என எண்ணினார் எனவே, அவர் தனது கைகளை மடக்கி துறவியிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார். துறவி கோபமாக அவரை நோக்கி கத்தினார் - உன்னிடம் எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லை, நீ துணிகளை துவைப்பதால் என் மீது அழுக்குத் தண்ணீர் த்தெறித்துவிழுவதை ப் பார்க்கவில்லையா. , அவ்வாறான அழுக்கு நீர் தெறிப்பதால் இப்போது என் உடைகள் அனைத்தும் அழுக்காகிவிட்டன.என திரும்பவும் கோபமாக திட்டினார் உடன் துணிதுவைப்பவர்  - தயவுசெய்து அமைதியாக இருங்கள், நான் தவறு செய்துவிட்டேன்.  அழுக்குத் துணிகளைத் துவைக்கும்போது அழுக்கு தண்ணீர் உங்களின்மீது தெறித்து விழாமல் இருப்பதற்காக நான் கவனம் செலுத்த வில்லை. தயவு செய்து என்னை மன்னித்திடுங்கள் ஐயா. என்று கூறிவிட்டு,தொடர்ந்து தான்கொண்டுவந்த துணிகளை  துவைத்து எடுத்துக்கொண்டு, மீண்டும் துறவியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றார். இப்போது யோசித்துப் பாருங்கள், உண்மையான துறவி யார்? கோபமும் சகிப்புத்தன்மையும் உண்மையான புரிதலின் எதிரிகள்.

சனி, 16 செப்டம்பர், 2023

குயவன் அல்லது நகைக்கடைக்காரன் - யார் பெரிய முட்டாள்

 மண்பானை செய்திடும் ஒரு குயவன் தான் கொண்டுசென்ற பானைகளை யெல்லாம் விற்றுவிட்டு சந்தையிலிருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் போது, வழியில் கண்ணாடி போன்று பளபளப்பான கல்ஒன்றினைக் கண்டார்.   தனது குழந்தைகளுக்கு இந்த பளபளப்பான கல்லை  விளையாடி மகிழ்வதற்காக கொடுக்கலாம் என்று நினைத்து அதை தன்னுடைய கையலெடுத்தார். முற்காலத்தில் பொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு செல்வதற்காக கழுதைதான் பயன்பட்டது  இந்த கல்லை எவ்வளவுதூரம் கைகளிலேயே எடுத்துக் கொண்டு வருவது அதற்கு பதிலாக தன்னுடைய கழுதையின் கழுத்தில் கட்டி கொண்டு வருவது நல்லது என்று நினைத்தார். மேலும் அது கழுதைக்கு ஒருஅணிகலண் போன்று  இருக்கும் என எண்ணி அந்த கல்லை தன்னுடைய கழுதையின் கழுத்தில் கட்டிடுவதற்கான ஒரு கயிற்றை தேடி கண்டுபிடித்தார் தொடர்ந்துஅந்த பளபளப்பான கல்லை கழுதையின் கழுத்தில் கட்டியபின் அந்த கழுதையுடன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். நகைக்கடைக்காரன் ஒருவன் அதே வழியில் ஒரு குதிரையின்மீது அமர்ந்து பயனம் சென்று கொண்டிருந்தார். அவரது கண்கள் கழுதையின் கழுத்தில் விழுந்தது, கழுதையின் கழுத்தில் இவ்வளவு அழகான வைரம் தொங்கவிடப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதனால் உடன் அந்த நகைக்கடைக்காரன் தன் குதிரையை நிறுத்தி, "உன் கழுதையின் கழுத்தில் தொங்கும் கல்லின் விலை என்ன?" என்று கேட்டார். குயவன் அதிகநேரம் செலவிட்டு, "எட்டு அணாவுக்கு (பழைய இந்திய நாணயம்) விற்கலாம்" என்று பதிலளித்தார். அதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்த வைரக்கல்லை அந்த குயவன் எட்டு அணாவுக்கு விற்கத் தயாராக இருந்ததால்!அந்தக் கல் விலைமதிப்பற்ற வைரம் என்பது குயவனுக்குத் தெரியாது என்பதை நகைக்கடைக்காரன் முழுமையாகப் புரிந்துகொண்டார்.  ஆனால் அந்த நகைக் கடைக்காரன் பேராசை கொண்டார். அதனால்  குயவனிடம், °இது வெறு கல்தான் இந்தக் கல்லை எட்டு அணாவுக்கு விற்பதற்கு வெட்கமாக இல்லையா?  நான்கு அணா மட்டுமே என்னால் கொடுக்க முடியும் இந்த கல்லை எனக்கு தருகின்றாயா?" என வினவினார். நான்கு அணாவுக்கு இந்தக் கல்லை கழுதையின் கழுத்தில் இருந்து யார் அகற்றி கொடுப்பார்கள் என்று நினைத்த குயவன், "அப்படியானால் அந்த கல் கழுதையின கழுத்தில் அப்படியே இருக்கட்டும். நான் அதை விற்க விரும்பவில்லை" என்று பதிலளித்தார். அதனால் நகைக்கடைக்காரன் தன்னுடைய பயனத்தினை தொடர்ந்தார் சிறிது நேரம் கழித்து குயவன் இன்னும் இரண்டு அணா சேர்த ஆறு அணா அல்லது நான்கு அணாவுக்கு கூட விற்றுவிடலாம் என்று முடிவுசெய்து கொண்டிருந்தார் . சிறிது நேரபயனத்திற்கு பின்னர் அந்த நகைக்கடைக்காரன் மீண்டும் திரும்பி வந்து அந்த கல்லினை  குயவன் என்னவிலை சொல்கின்றாரோ அந்த விலைக்கு தான் வாங்கி கொள்வதாகவும் தனக்கு அந்த கல்லை விற்பனைசெய்திடுமாறும் கோரினார். அதற்கு குயவன், "நீங்கள் போன பிறகு இன்னொருவர் வந்து அந்தக் கல்லுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார். அதனால் அவருக்கு நான் விற்றுவிட்டேன்" என்றார். இதைக் கேட்ட நகைக் கடைக்காரன், "முட்டாளே! பைத்தியக்கார குயவனே! என்ன செய்தாய் தெரியுமா? கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரத்தை ஒரு ரூபாய்க்கு விற்றுவிட்டாயே" என்று கோபத்துடன் கத்தினார். இதைக் கேட்ட குயவன் சிரிக்க ஆரம்பித்தான். அவர், "நான் ஒரு குயவன். அது கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரம் என்று எனக்குத் தெரியாது, எனக்கு ஒரு ரூபாய் கிடைத்தது, அதுவே அந்த கல்லுக்கு போதுமானது என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் ஒரு நகைக்கடைக்காரர்,  அதை எட்டு அணாவுக்கு அல்லது ஆறாணவிற்கு கூட  வாங்க தயாராகஇல்லை!அதனால் நீங்கள் கோடிகணக்கான வருமானத்தினை இழந்தீர்கள், நான் அன்று, ஏனென்றால் அது இவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று எனக்குத் தெரியாது". எ்ன்றார். குயவன் ஒரு முட்டாள்தான், ஆனால் அது அறியாமையால் ஏற்பட்டது, ஆனால் நகைக்கடைக்காரனும் ஒரு பெரிய முட்டாளாக மாறிவிட்டான், ஆனால் அவனுடைய பேராசையால் வருமானத்தினை இழந்தான்.  என்ன வாசகரே இதில் யார் பெரிய முட்டாள் என்று நீங்களே முடிவுசெய்திடுக

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

தபால்காரரும்வயதான பெண்மணியும்

 தனது வீட்டின் வெளியே தனியே அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியிடம் "அம்மா, உங்கள் மகன் பண  அனுப்பியுள்ளார்" என்று ஒரு தபால்காரர் கூறினார்.
தபால்காரரைப் பார்த்ததும் அந்த அம்மாவின் கண்கள் மின்னியது.
அந்த அம்மா “மகனே முதலில் நான் என் மகனிடம் பேசவேண்டும்” என்றாள்.
அந்த அம்மா நம்பிக்கையுடன் தபால்காரரைப் பார்த்துக் கொண்டிருந்தார், ஆனால் தபால்காரர் , "அம்மா எனக்கு அவ்வளவு நேரம் இல்லை, ஒவ்வொரு முறையும் உங்கள் மகனை நான் அழைக்க முடியவில்லை",எனக்கூறி அதைத் தவிர்க்க முயன்று அங்கிருந்து செல்ல விரும்பினார், ஆனால் அந்தஅம்மா , “மகனே! அதற்கு சிறிது காலம் பிடித்தாலும் பரவாயில்லை எனக்காக உதவிசெய்திடு.”
என தபால்காரரை நச்சரிக்க ஆரம்பித்தார். "அம்மா, நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் மகனுடன் பேசுவதற்காக அழைத்திடுமாறு வலியுறுத்துகின்றீர்கள். ஆனால் என்னுடைய பணிச்சூழல் என்னால் முடியவில்லை "  என தபால்காரர் பதிலளித்தார்.
இவ்வாறு கூறிவிட்டு தபால்காரர் அம்மாவிடம் பணம் கொடுப்பதற்கு முன் கைபேசியில் ஒரு எண்ணை தொடர்புகொள்ளமுயன்றார்.
"இந்தாருங்கள் அம்மா ஆனால் அதிகம் நேரம் பேசாதீர்கள் நான் அடுத்த பணியை தொடரவேண்டும்" என்று தபால்காரரர் தன்னுடைய கைபேசியை அந்த வயதான அம்மாவிடம் கொடுத்தார்.
அந்த வயதான அம்மா தபால்காரரின்  கையிலிருந்து கைபேசியை வாங்கி. ஒரு நிமிடம் தன் மகனுடன்  பேசி மிகவும் மகிழ்ந்தார்  சுருக்கம் நிறைந்த அந்த அம்ம்வின் முகத்தில் புன்னகை பரவியது.
“இந்தாருங்கள் அம்மா ! உங்களுடைய மகன் அனுப்பிய புணம் ஆயிரம் ரூபாய்“ ,எனக்கூறியவாறு, தபால்காரர் பத்து நூறு ரூபாய் தாட்களை அந்த அம்மாவிடம் கொடுத்தார்.
பணத்தை எண்ணி முடித்த பின்அந்த அம்மா ஒருநூறு ரூபாய் தாளை எடுத்து தபால்காரரிடம் கொடுத்து, “மகனே இதனை நீ வைத்துக்கொள்” என்றார்.
உடன் தபால்காரர் "ஏன் அம்மா? உங்களுடைய மகன் அனுப்பிய பணத்தில்நான் நூறுரூபாய் வாங்கி கொள்ளவேண்டும்"  என சந்தேகம் கேட்டார்.
உடன் அந்த வயதானஅம்மா சிரித்துக்கொண்டே, "இந்த பணத்தினை எனக்கு தேடிவந்த  தருவதைத் தவிர, என்னையும் என் மகனிடம் உன்னுடைய கைபேசி வாயிலாக பேச அனுமதிக்கின்றாய் அல்லவா. அதற்குப் பணம் செலவாகும். இல்லையா? அதனால் வைத்துக் கொள்." என பதிலளி்த்தார்
தபால்காரர் மறுத்துக்கொண்டே இருந்தார், ஆனால் அம்மா வலுக்கட்டாயமாக ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுத்துவிட்டு,நீயும் உன்குடும்பத்தாரும் நன்றாக இருக்கவேண்டும் எனக்கூறியவாறு தன்னுடைய வீட்டிற்குள் சென்றார்.
பின்னர்தபால் காரர் அங்கிருந்து சிறிதுதூரம் நடந்தவுடன், திடீரென்று யாரோ அவருடைய தோளை தொட்டனர்.
தபால்காரர் திரும்பிப் பார்த்தபோது, எதிரே கைபேசி்விற்றிடும் கடை நடத்தி வருபவர் நிற்பதைக் கண்டார்.
"தம்பி, எப்படி இருக்கீங்க?", என்று தபால்காரர் கேட்டார்.
அவர் "நான் இங்கு ஒருவரைச் சந்திக்க வந்தேன், ஆனால் நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். அண்ணா, நீங்கள் ஏன் ஒவ்வொரு மாதமும் இவ்வாறுச் செய்கிறீர்கள்?" என்றார் தபால்காரரிடம்.
"நான் என்ன செய்தேன்?", பதற்றத்துடன் தபால்காரர் கேட்டார்.
அவர், "மாதாமாதம் அந்த வயதான அம்மாவிற்கு உன்னுடைய பணத்தினை கொடுக்கின்றீர்கள். அதுமட்டுமில்லாம அந்த அம்மாவுடை மகனுடன் கைபேசியில்பேசவும் பணம் தருகின்றீர்கள்!! ஏன்?" என வினவினார்
அவர் அவ்வாறான கேள்வியை ஏழுப்பியதும் தபால்காரர் சற்றுத் தயங்கினார், ஆனால் பிறகு, "நான் அந்தஅம்மாவிற்கு பணம் கொடுக்கவில்லை, அந்த பணத்தை என்னுடைய அம்மாவிடம் தான்கொடுக்கிறேன்."
அதைக் கேட்டு அவருக்கு மிகஆச்சரியமாக இருந்தது.
தபால்காரர் தொடர்ந்தார், "அவரது மகன் பணம் சம்பாதிக்க தொலைதூரத்திற்குச் சென்றார், ஒவ்வொரு மாதமும் தனது தாயாருக்கு ஆயிரம் ரூபாய்  அனுப்புவார், ஆனால் ஒரு நாள், பணத்திற்கு பதிலாக, அவரது மகனின் நண்பரின் கடிதம் அம்மாவின் பெயரில் வந்தது. ." எனக்கூறினாற்
அவர்மிக ஆர்வமாகி, "என்ன கடிதம்? அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?" என வினவினாபர்
"அவரது மகன் நோய்த்தொற்று காரணமாக உயிர் இழந்தார். தன்னுடைய வாழ்க்கை செலவுக்காக தன்னுடைய மகன் அனுப்புகின்ற பணற்காகக் காத்திருந்த அந்தஅம்மாவிடம் அதைச் சொல்லத் துணியவில்லை, . அதனால், நான் மாதந்தோறும் அந்த அம்மாவிற்கு பணம் வருவதை போன்று கொடுத்துவருகின்றேன்." எனததபால்காரர் கூறினார்
"ஆனால் அவர் உன்னுடைய அம்மா இல்லையே..", என்றார் அவர்.
தபால்காரர், "இதேபோன்று நானும் ஒவ்வொரு மாதமும் என் அம்மாவுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவேன், ஆனால் என்னுடைய அம்மா உயிருடன் இல்லை" என,க்கூறிய தபால்காரரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
மாதந்தோறும் தபால்காரர் ஆயிரம் ரூபாய் தன்னுடைய தாய்க்கு அனுப்புவதை போன்று வழங்குவதையும் அந்த வயதான அம்மா தபால்காரரிடம் பணம் வாங்கிக்கொண்டு தபால் காரரை தன்னுடைய  மகனை போன்று பேசி பழகியதையும் கண்டு அவர் வாயடைத்துப் போனார்.

சனி, 2 செப்டம்பர், 2023

ஒரு கூடையளவு மண்

 தந்திரசாலியான ஒருவன் ஒரு கிராமத்தில் பணஉதவி தேவைப்படுபவர்கள் தன்னிடம் வந்தபோது தந்திரமாக சிறிய தொகையை மட்டும் கடனாக கொடுப்பது அவனது வழக்கமான செயலாகும். அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நன்றாகப் படிக்காதவர்கள் விவரம் தெரியாதவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கடனை திருப்ப முடியாததால் வட்டியை அசல் தொகையுடன் அந்த வட்டிக்கும் வட்டியாக கூட்டுவட்டி கணக்கிட்டு  சேர்த்துக் கொண்டே இருந்தான். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தொகை மிகவும் அதிகமாகி, அந்த கிராமத்தில் வாழும்மக்கள் திருப்பிச் செலுத்த முடியாமல், தங்கள் நிலத்தை தந்திரசாலியிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படுமாறு செய்துஅந்த கிராமத்திலுள்ள அனைத்து நிலங்களையும் அபகரித்து கொள்வது வழக்கமான செயலாகும்.
இப்போது  அவனது வீட்டிற்கு அருகில் வாழ்கின்ற ஒரு மூதாட்டிக்கு சொந்தமான நிலத்தில் அவனது பார்வை விழுந்தது அந்த மூதாட்டிக்கு சொந்தமான நிலமும் நமக்கு கிடைத்துவிட்டால் இந்த ஊரிலுள்ள நிலமுழுவதும் நம்ஒருவனுக்கு மட்டுமே யாகி விடுமே என சிந்தித்தான். ஆனால் அம்மூதாட்டிமட்டும், வேறுயாருடனும் சேராமல் தானே பயிர் செய்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது வழக்கமாகும்.மேலும் இந்த தந்திரக்காரணிடம் மட்டும் எந்த தேவைக்கும் கடன்வாங்காமல் தனியாக பயிரிட்டு அதில் வருகின்ற வருமானத்தை கொண்டு வாழ்ந்துவந்தார்   அம்மூதாட்டியை எவ்வாறு கவர்ந்து அம்மூதாட்டியின் நிலத்தை அபகரிப்பது என்று எந்தவொரு வழிமுறையும்இந்த தந்திரசாலியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் பின்னர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து அந்த அரசு அதிகாரியின் மூலம் போலியான ஆவணங்களை தயாரித்து, அம்மூதாட்டியின் பெயரிலுள்ள நிலத்தினை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டான் அதனைதொடர்ந்து. அவன்  அரசாங்க அதிகாரியுடன் சேர்ந்து தனக்கு சொந்தமான நிலத்தினை மூதாட்டி அனுபவித்து வருவதாகவும் அது தனக்கு சொந்தமானதால் உடன் அந்த நிலத்தினை தன்னிடம் ஒப்படைக்குமாறு அறிவிப்புக்கடிதம் ஒன்றினை  கொடுத்தான்.
இதையறிந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்து, தன் வாழ்நாள் முழுவதும் இங்கு தான் வாழ்ந்து வருகிறேன் என்றும், இந்த நிலம் தன் முன்னோர்களுக்கு சொந்தமானது என்றும், தன் அன்புக்குரியமுன்னோர்கள் அனைவரும் இந்த நிலத்தினை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வாழ்ந்துவந்தவர்கள் என்றும், தனக்கு வாரிசுரிமையின்படி தனக்குதான் சொந்தமானது என்றும், இதை இப்போது  வேறுஒருவரால் எவ்வாறு உரிமை கொண்டாட முடியும்? என அந்த கிராமத்திற்கான நீதிமன்றத்தை அணுகினார், ஆனால் அந்த தந்திரசாலி அனைவருக்கும் லஞ்சம் கொடுத்தான் போலியாக தயார்செய்த உரிமை ஆவணங்களை சமர்ப்பித்தான். இதனால், தந்திரசாலிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மனச்சோர்வடைந்த மூதாட்டி நிலத்தை காலி செய்யத் தயாரானார், அப்போது அந்த தந்திரசாலியும் அவனது அடியாட்களும் அம்மூதாட்டி காலிசெய்தவுடன் அந்த நிலத்தினை தன்னுடைய உரிமையுள்ள நிலமாக சேர்த்து கொள்வதற்காக தயாராக அங்கே காத்திருந்தனர். அந்த நிலத்தினை விட்டு வெளியேறும் போது, இரண்டு கண்களிலும் கண்ணீர் சிந்திகொண்டு அந்த மூதாட்டி அந்த தந்திரசாலியை அணுகி, "ஐயா, நீங்கள் இன்று என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள், என் முழு வாழ்க்கையும் இங்கே கழிந்தது, ஆனால் இப்போது நான் இந்த நிலத்தினை உங்களிடம் விட்டு செல்கிறேன். இங்கு நான் , குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வளர்ந்தவந்த நிலம், இந்த மண் எனக்கு மிகவும் விருப்பமான மண்“. என்றார்.  மேலும் அம்மூதாட்டி, “நாம் அனைவரும் இந்த மண்ணால் ஆனவர்கள், அதனால் நாம் அனைவரும் இந்த மண்ணின்மீது அன்பு வைத்திருப்பது வழக்கமான செயலாகும். அவ்வாறு நான் அன்பு செலுத்தும் இந்த மண்ணை என்னுடன் வைத்திருக்க விரும்புகின்றேன் அதனால்இந்த நிலத்தின்மண்ணில் ஒரு கூடையளவு மட்டும் என்னுடன்  எடுத்துச் செல்ல என்னை அனுமதியுங்கள்,  நான் அமைதியாக இறக்கும் வரை இந்த மண்ணின் மனம் எப்போதும் என்னுடன் இருக்கும்.“ எனக்கோரினார்
அந்த தந்திரசாலிஅந்த மூதாட்டிக்கு சொந்தமான நிலம் முழுவதையும்  பணம் கொடுக்காமல் தனக்கு உரிமையாக்கி விட்டதால், அம்மூதாட்டிக்கு  ஒரு கூடையளவு மண்ணைக் கொடுத்து விடலாம், அதனால் அவள் அமைதியாகப் போய்விடுவார் என்று நினைத்து சிரித்தான். தொடர்ந்து, “நன்று. நீங்கள் உங்கள் கூடையில் மண்ணை  நிரப்பி எடுத்து செல்லாம்." எனக்கூறினான்
மூதாட்டி தான் வைத்திருந்த கூடையில் தன்னுடைய நிலத்தின் மண்ணை நிரப்ப துவங்கினார். அவ்வாறு நிரப்பியதும் அந்த கூடையை தன்னுடைய தலையில் தூக்கி வைத்துக்கொள்ளமுயற்சித்தார் வயதானதால் அம்மூதாட்டியால் தன்னுடைய நிலத்தின் மண்நிரம்பிய அந்த கூடையை தலையில்  தூக்கிவைக்க முடியாமல் தவித்தார். அதனால் அந்ததந்திராலியிடம், “ஐயா, இந்த கூடையை என் தலையில் தூக்கிவைப்பதற்கு கை கொடுப்பீர்களா?” என்றாள். உடன் அந்த தந்திரசாலி அம்மூதாட்டிக்கு உதவ முன் வந்து, “ஓ, பாட்டி, மண்ணால் நிரப்பப்பட்ட இந்தக் கூடையைத் தூக்கிச் செல்ல  சிரமப்படுவோம் என இந்த கூடையை மண்ணால் நிரப்புவதற்கு முன்பு நீங்கள் சிந்திக்கவில்லையா? , பிறகு  எவ்வாறு இந்த கூடைநிறைய மண்ணைஉங்களுடன் தூக்கி எடுத்துச் செல்வீர்கள்?" என்றான்
கண்ணீருடன், அம்மூதாட்டி, "ஐயா, இந்த முழு நிலமும் எனக்குச் சொந்தமானது, என் வாழ்நாள் முழுவதையும் இங்கே கழித்தேன், ஆனால் நான் இன்னும் உயிர்வாழும் வரையிலாவது என்னுடன் இருக்குவேண்டுமென இங்கிருந்து ஒரு கூடை மண்ணை எடுத்துச் செல்ல சிரமப்படுகிறேன். அவ்வாறு மிகஅதிக சிரமத்துடன் எடுத்துசென்றாலும் நான் இறக்கும்போது கூடையில் எடுத்து செல்லும் என்னுடைய நிலத்தின் மண்ணை என்னுடன் கொண்டுச் செல்ல முடியாது. அவ்வாறான நிலையில் ஐயா,இந்த ஊரில் மற்றவர்களை ஏமாற்றி அபகரித்து உங்கள் பெயரில் சேர்த்து கொண்டு மற்றவர்களின் நிலம் மிகவும் அதிகம். அதையெல்லாம்   நீங்கள் மட்டும் எவ்வாறு உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள்?" எனக்கூறினார்.
மூதாட்டி இவ்வாறு கூறியதைக் கேட்ட அந்த தந்திரசாலி திகைத்து நின்றார். தன் தவறை உணர்ந்து அந்த மூதாட்டியிடம் மன்னிப்பு கேட்டான். மேலும் அம்மூதாட்டி இறக்கும் வரை இந்த நிலத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கேட்டு, அம்மூதாட்டியிடமே அந்த நிலத்தைத் திருப்பிக் கொடுத்தான்.
    மற்றவர்களை ஏமாற்றாதீர்கள், பேராசை கொள்ளாதீர்கள். தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியாக இருங்கள்,  அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு போதுமானது.


பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...