சனி, 30 மார்ச், 2019

தவளை விற்பனை


சீன விவசாயி ஒருவர் தன்னுடைய கிராமத்திற்கு அருகிலுள்ள நகரத்திற்கு வந்து ஒரு மில்லியன் தவளைகளை தான் வழங்கதயாராக இப்பதாகவும் அவற்றை வாங்கி கொள்ள முடியுமா என்றும் ஒரு உணவக உரிமையாளரிடம் கோரினார்.அதனை தொடர்ந்து ஒரேநபரிடமிருந்து ஒரு மில்லியன் தவளைகள் கிடைக்கின்றதா என்ற தகவலினால் அவ்வுணவக உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார் இதற்காக பல்வேறு நபர்களை தேடிபிடித்து கொண்டுவந்து சேர்ப்பதைவிட ஒரேநபரிடமிருந்து நம்முடைய உணவகத்திற்கு தேவையான அளவு தவளைகள் கிடைக்கின்றனவே என ஆச்சரியத்துடன்மிகவும் நன்றி ஐயா எவ்வாறு ஒரு மில்லியன் தவளைகளை உன்னால் மட்டும் வழங்கமுடியும் என அவ்விவசாயியிடம் வினவினார் ஐயா என் வீட்டிற்கு அருகே தவளைகள் நிறைந்த குளம் ஒன்று உள்ளது அதில் ஏராளமான அளவிற்கு அதாவது மில்லியன் கணக்கில் தவளைகள் உள்ளன அவையனைத்தும் சேர்ந்துநீண்ட நாட்களாக இரவு முழுவதும் கத்தி கொண்டேயிருந்து என்னை பைத்தியமாக்கிக் கொண்டிருக்கின்றன எனக்கூறினார் அதனை தொடர்ந்து வாரமொன்றிற்கு ஐந்நூறுதவளைகள்வீதம் ஒவ்வொரு வாரமும் அவ்விவசாயி கொண்டுவந்து கொடுப்பதாகவும் அவற்றை உணவக உரிமையாளர் பெற்றுக்கொள்வதாகவும் முடிவுசெய்து அதற்கான ஒப்பந்தத்தை இருதரப்பார்களும் ஏற்று கையொப்பமிட்டனர் அதனை தொடர்ந்து முதல் வாரத்தில், உணவகத்திற்கு வெறும் இரண்டேயிரண்டு சிறிய தவளைகளுடன் மட்டும் விவசாயி வந்து சேர்ந்தார் உடன் உணவக உரிமையாளர் ஐயா பரவாயில்லை ஒத்துக் கொண்டவாறு தவளைகளுடன் வந்து சேர்ந்துள்ளீர் ஆனால் ஐந்நூறு தவளைகளை கொண்டுவருவதாக கூறிசென்றீர் ஆனால் இரண்டேயிரண்டு மட்டுமே கொண்டுவந்துள்ளீர் மிகுதி தவளைகள் எங்கே என வினவினார் அதற்கு அவ்விவசாயி ஐயா மன்னித்துகொள்ளுங்கள் இந்த இரண்டு தவளைகள் மட்டுமே குளத்தில் இருந்தன. ஆனால் அவை ஆயிரகணக்கான தவளைகளை போன்று இரவுமுழுவதும் அதிக சத்தம் போட்டு கத்திகொண்டிருந்தன என மிக மனவருத்ததுடன் பதில் கூறினார் அப்படியா ஐயா பரவாயில்லை நான் வழக்கமாக பல்வேறு நபர்களை தேடிபிடித்து கொள்முதல் செய்வதை போன்றே கொள்முதல் செய்து கொள்கின்றேன் போய்வாருங்கள் என விடைகொடுத்தனுப்பினார் உணவக உரிமையாளர் ஒரு ஜோடி தவளைகள் சேர்ந்து சத்தமிடுவதை இரவின் இருளில் அவைகளின் எண்ணிக்கைகளை அறியாமல் ஒருமில்லியன் தவளைகள் சத்தமிடுவதாக அந்த விவசாயி தவறாக யூகித்ததைபோன்று மற்ற நிறுவனங்களின் உண்மை செயல்பாட்டினை அறியாமல் அல்லது தெரியாமல் விமர்சிக்கவோ அல்லது கேலி செய்யவோ வேண்டாம் என்ற அறிவுரையை மனதில் கொள்க

சனி, 23 மார்ச், 2019

வங்கியின்நிருவாக மேலாளருக்கும் கிளை மேலாளருக்கும் இடையேநடைபெற்ற நிருவாகத்தின் இலக்குநோக்கியவிவாதம்


நிருவாக மேலாளர்:நம்முடைய வங்கியின் கடந்தகாலாண்டு அறிக்கையை பார்த்தீர்களா அதில் உங்களுடைய பொறுப்பில் இருக்கும் கிளையின் கடந்த காலாண்டு இலாபம் மிகவும்குறைந்துவிட்டது எனும் தகவலாவது அறிந்துகொண்டீர்களா. வங்கி கிளையில் வங்கிபணி தவிர வேறு என்னதான் செய்துகொண்டிருகின்றீர்?

கிளை மேலாளர்: ஐயா! நான் நமது வங்கியின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறேன் ஐயா!.

நி.மே: ஆனால் நீங்கள் உங்களுடைய இலக்குகளை மட்டும் எட்டவில்லை .அப்படித்தானே.

கி.மே:இல்லைஐயா! கடந்த காலாண்டின் துவக்கத்திலேயே எங்களுடைய கிளையானது இலக்கில் மிகவும் பின்னடைந்திருந்தது அதனால்தான் ஐயா!

நி.மே: அதன்பின்னர் முயற்சி செய்து ஏன் உங்களுடையஇலக்கை அடையவில்லை.

கி.மே: எங்களுடைய கிளையின் நீண்டகாலகடன் முன்மொழிவுகளில் ஒருசில மண்டல(ZO) /வட்டார(RO) அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டன என்பனபோன்ற காரணங்களாக இருக்கலாம் ஐயா!, அதுமட்டுமல்லாது ஒருசில கடன் விண்ணப்பங்களில் வாடிக்கையாளர்களிடம் விளக்கம் கோரி கேள்வி எழுப்பப்-பட்டபோது அவ்வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடன் முன்மொழிவுகளையே கைவிட்டு விட்டனர்ஐயா!.இன்னும் சிலர் தம்முடைய கடன்விண்ணப்பத்திற்கான அனுமதி தலைமை அலுவலகத்திலிருந்து கிடைத்தவுடன் தங்களுக்கு நீண்டகாலகடன் கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் ஐயா!

நி.மே:நீங்கள் உங்களுடைய இலக்குகளில் கவனம் செலுத்தினால் அதனை நீங்கள் கண்டிப்பாக அடைந்திருக்க முடியும்.

கி.மே: ஐயா! அதேநேரத்தில் நமது வங்கியின் மற்ற மண்டலங்களை விட எங்களுடைய மண்டலத்தின் சில்லறை கடன்களை வழங்குவதில் கூடுதலான இலக்கை அடைவதற்கு கவனம் செலுத்துமாறு கோரினார்கள் அதனால் சில்லறை கடன் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது. ஐயா!

நி.மே: எனவே நீங்கள் உங்களுடைய கிளையில் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமானஅளவில் சில்லறை கடன்களை வாரிவழங்கிவிட்டீர்கள். அல்லவா!

கி.மே: இல்லை ஐயா!. விவசாயம் ,வியாபாரம் ஆகியவற்றிற்கான காப்பீடு எனும் புதிய திட்டம் அறிமுகபடுத்தப்பட்டதால் காப்பீட்டுதிட்டத்தை வாடிக்கையாளர் அனைவரிடமும் பிரச்சாரம் செய்யும்படி நான்அறிவுறுத்தப்பட்டேன்ஐயா!.

நி.மே: ரொம்பநல்லது. அவ்வாறே பிரச்சாரம் செய்து ஏராளமான காப்பீடுகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்த்து காப்பீட்டிற்கான தொகையை உங்களுடைய கிளையில் வசூலித்துவிட்டீர்கள் அல்லவா!

கி.மே: இல்லை ஐயா! எங்களுடையகிளையின் அனைத்து வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கும் KYCஇக்கு இணக்கமான வாடிக்கையாளர் விவரங்களை சரியாக பெற்று பூர்த்தி செய்து அனைத்து வாடிக்கையாளர்களின் கணக்குகளையும் மாற்றி-யமைத்திடுமாறு மின்னஞ்சல் ஒன்று கிடைக்கபெற்று அதில் நாங்கள் கவனம் செலுத்தி கொண்டிருந்தோம் ஐயா!!

நி.மே: அதனால் உங்களுடைய வங்கிகிளையிலுள்ள வாடிக்கையாளர் கணக்குகள் அனைத்தும் KYC இணக்கமானவையாக வாடிக்கையாளர் விவரங்களை சரியாக பெற்றுபூர்த்தி செய்துமாற்றியமைத்துவிட்டீர்கள் அப்படித்தானே.!

கி.மே: இல்லை ஐயா!, உடனடியாக உடல்நலன் / பொது காப்பீடுகளில்கவனம் செலுத்துமாறு மண்டல(ZO)/ வட்டார (RO)அலுவலகத்திலிருந்துஉத்தரவு கிடைக்க பெற்றது ஐயா!!

நி.மே: எனவே உடன் நீங்களும் உடல்நலன் / பொது காப்பீடு மூலம் ஒரு நல்ல வருமானத்தை உங்களுடைய கிளையில் பெறச்செய்தீர்கள் அல்லவா.!

கி.மே: இல்லை ஐயா!. இந்நேரத்தில்புதியதாக அறிமுகபடுத்தியுள்ள பிரதம மந்திரியின் பல்வேறு திட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பங்குகொள்ளவேண்டும் என்பதற்காக வங்கிகிளையின் வாடிக்கையாளர்களைபற்றிய முழுவிவரங்களையும் சேகரித்தல் அவர்களின் தகுதி குறித்து ஆய்வுசெய்தல் என்பனபோன்ற பணிகளை உடனடியாக செயற்படுத்திடுமாறு கோரி மின்னஞ்சல் ஒன்று கிடைக்கபெற்றது ஐயா!!. நிமே: அதன்படி நீங்கள் அவ்வாறான பணிஅனைத்தையும் செய்துவிட்டீர்கள் அல்லவா!

கி.மே:இல்லை ஐயா!, நமது வங்கியில் எங்களுடைய கிளையில் வாராக்கடன் (NPA) எவையெவையுள்ளன அவைகளை தள்ளுபடிசெய்வதற்கான (Writeoff)விவரங்களை தயார்செய்திடுவதன்மீது உடனடியாக கவனம் செலுத்துமாறு மண்டல (ZO) /வட்டார அலுவலகம்(RO) எங்களுக்கு அறிவுறுத்தியது ஐயா!.

நி.மே: அதனால் நேர்மையாக கடனை செலுத்திடும் (ஏமாந்தவர்களின்) கடனை மட்டும் வசூல்செய்துவீட்டீர்கள் மற்றவர்களின்( கடனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றுபவர்களின்) கடன்களை தள்ளுபடிசெய்துவிட்டீர்கள் அப்படித்தானே !

கி.மே: இல்லை ஐயா! அதற்குள் கடந்த காலாண்டும் முடிந்துவிட்டதுஐயா!.

வெள்ளி, 15 மார்ச், 2019

இயக்குநர்களிடமிருந்து நிறுமம் கடன்பெறுவது


பதிவுபெற்ற பெரும்பாலான இந்திய நிறுமங்கள் தம்முடைய இயக்குனர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களைப் பற்றி மட்டுமே இதுவரையில் ஏராளமான வகையில் சச்சரவுகளும் வாத விவாதங்களும் கலந்துரையாடல்களும் இருந்துவந்துள்ளன, ஆனால் தாம்பதவி வகிக்கும் நிறுமங்களுக்கே கடன்களை வழங்கும் இயக்குநர்களைப் பற்றிய செய்திகள் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டுள்ளன , ஆயினும் இவ்வாறு நிறுமங்களுக்கு இயக்குநர்கள் கடன்வழங்குவதுகுறித்த சட்டப்பூர்வ இணக்கங்கள் மிகுதியாக உள்ளன. அதனால் அதன்வாயிலாக எழும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, சமீபத்திய திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம்2013 இன் படி இவ்வாறான சிக்கலை தீர்வு செய்வது பற்றி தற்போது விவாதிப்போம். இயக்குனர்களிடமிருந்து நிறுமங்களானவை இட்டுவைப்புத்தொகை , கடன் தொகை ஆகிய இருவழிகளில் ஏதேனும் ஒருவகையில் தமக்குதேவையான தொகையை பெறலாம் அதனால் இவைகளின் வாயிலாக பெறப்பட்ட தொகையை அதாவது இயக்குநர்களிடமிருந்து இவ்வாறு பெறப்பட்ட தொகையானது கடன்தொகையா அல்லது இட்டுவைப்பு தொகையா என எவ்வாறு வகைப்படுத்துவது என்பதுதான் தற்போதைய சிக்கலாகும் .இங்கு நாம் இயக்குநர்களிட- மிருந்து பெறப்படும் கடன்பற்றிமட்டும் இப்போது காண்போம் இயக்குநர்களிடமிருந்து பெறப்படும் இட்டுவைப்புத்தொகைபற்றி பின்னர் வேறொரு சமயத்தில் காண்போம் பொதுவாக அவ்வாறு இயக்குந்களிடமிருந்து பெறப்பட்ட தொகையானது ஒரு இட்டுவைப்பு தொகையென எனக் கருதப்பட்டால், அது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 73 (2) அல்லது பிரிவு 76 இன் விதிமுறைகளுடன் இணங்குவதோடு, படிக்கப்பட்ட நிறுமங்களின் (வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்ளும்) விதிமுறைகள் 2014 உடன் ஒத்ததாக இருக்கவேண்டும் . அ்துதவிர இயக்குனர்களிடமிருந்து பெறப்படும் கடன்களை பொதுவாக இயக்குனரின் சொந்த நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை என்றும் , இயக்குநர்கள் தாம் பெற்ற கடன் நிதியிலிலிருந்து பெறப்பட்ட தொகைஎன்றும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் இயக்குனர்கள் தம்முடையசொந்த நிதிகளிலிருந்து பெறப்பட்ட தொகை, நிறுமங்களுக்கு அவ்வாறு வழங்குபவர் ஒரு பங்குதாரரா இல்லையா என்பதன்அடிப்படையில் அவை கடன்களாகக் கருதப்படுகிறது ஆயினும் இந்நிலையில் நிறுமங்களின் சட்டம் பிரிவு 73 (2) அல்லது பிரிவு 76 உடன் இணக்கமாக இருக்கத் தேவையில்லை. எனினும், இந்த நிவாரணத்தைப் பெற இயக்குனர்கள் பணம் கொடுக்கும் நேரத்தில் அந்நிறுமமானது, மற்றவர்களிடமிருந்து கடன்கள் அல்லது வைப்புத்தொகைகளை பெறுதல் அல்லது ஏற்றுக் கொள்வதற்காக அறிவிப்புஏதனும் செய்து அதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதிகளில் அடிப்படையில் இந்த தொகை பெறப்படவில்லை என உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் .ஆயினும், நிறுமமானது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 (கீழே விவாதிக்கப்படுகின்றது)இன்கீழ் பொருந்துமாறு கடன் பெறுவது பற்றிய தகவல்கள் இயக்குனரின் அறிக்கை மற்றும் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றில் தக்க குறிப்புகளுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும்.. இயக்குனர் கடன் வாங்கிய தொகைகளில் பெறப்பட்ட தொகை இதன்கீழ்இயக்குனர் ஒரு பங்குதாரர் அல்லாத சூழ்நிலை, இயக்குநர் ஒரு பங்குதாரராக உள்ள சூழ்நிலை ஆகிய இருவகைகளில் விவாதிப்போம் இயக்குனர் ஒரு பங்குதாரர் அல்லாத சூழ்நிலையில், அவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையானது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 ன் விதிமுறைகளுடனும், படிக்கப்பட்ட நிறுமங்களின் (வைப்புகளை ஏற்றுக்கொள்ளும்) விதிமுறைகள் 2014 உடனும்கவருகின்றன. அத்தகைய ஒருநிலையில் நிகர சொத்துமதிப்பு ரூ. 100 கோடி அல்லது அந்நிறுமத்தின் விற்பனைவருமானம் ரூ. 500 கோடி ஆக உள்ள ஒரு பொது நிறுமத்தால் மட்டுமே அவ்வாறான இட்டுவைப்புத்தொகையை பெறமுடியும் (அதாவது, தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமங்கள் மற்றும் தகுதியற்ற பொது நிறுமங்கள் ஆகியவற்றின் இயக்குநர்கள் தாம் கடன்வாங்கிய நிதியிலிருந்து அவர்கள் பதவிவகிக்கும் நிறுமங்களானவை இவ்வாறான கடன்களை / இட்டுவைப்புகளைப் பெற முடியாது). நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 இன்படி ஒவ்வொரு வருடமும் கடன் வழங்குவதற்கான தகுதி மதிப்பீட்டை(credit rating ) பெறவும், வைப்புத் தொகையாளர்களுக்கு ஆதரவாக வைப்புத் தொகைக்கு குறையாமல் அந்நிறுமங்களின் சொத்துக்களைப் பொறுப்பேற்பதற்காக பதிவாளரிடம் அந்த சொத்துகளின்மீது பொறுப்பொன்றினை உருவாக்கி (create a charge)பதிவு செய்திட வேண்டும். இது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 மேலும் ஈர்ப்பதால் இது குறித்து தனியாக கீழே விவாதிக்கப்படுகின்றது. இயக்குநர் ஒரு பங்குதாரர் ஆவார் எனும்சூழ்நிலையில் , இயக்குநர்களிடமிருந்து பெறப்பட்ட தொகைகள் இட்டு வைப்புகளாக கருதப்படுகின்றன, ஆயினும், அவை நிறுமங்கள் தம்முடைய உறுப்பினர்களிட- மிருந்து பெறப்பட்ட இட்டு வைப்பு தொகைகளாக கருதப்படுகின்றன, மேலும் இந்நடவடிக்கைகளானவை நிறுமங்களின் (இட்டுவைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்) விதிமுறைகளுடன் படிக்கப்படும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 73 (2) வின் விதிகளை ஈர்க்கின்றன. மேலும் இந்த நடவடிக்கையும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 மேலும் ஈர்ப்பதால் இதுகுறித்தும் தனியாக கீழே விவாதிக்கப்படுகின்றது. நிறுமங்களின் சட்டம் 2013பிரிவு 180, இதன்படி ஒரு நிறுமத்திற்கு தம்முடைய இயக்குநர்களிட- மிருந்து இவ்வாறு கடன்பெறுவதற்காக ஒப்புதல் அளிப்பதற்குமுன் அதற்காக அந்நிறுமத்தின் பங்குதாரர்களின் பொதுப்பேரவை கூட்டத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிஇருக்கவேண்டும் (அவ்வாறான சிறப்பு தீர்மானமானது படிவம் MGT-14 இன் கீழ் நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.), வழக்கமான வணிக நடவடிக்கைக்காக ஏற்கனவே வங்கியாளர்களிடமிருந்து பெறப்பட்ட தற்காலிக கடன்கள் மட்டுமல்லாமல், நிறுமத்தின் பெறப்பட்ட பங்கு மூலதனம்(paid-up share capital), சுதந்திர ஒதுக்கீடுகள் (free reserves) மற்றும் பத்திரங்களின் பிரீமியம்( securities premium) ஆகியவற்றின் மொத்த மதிப்பைவிட கூடுதலாக கடன்பெறுவதற்காக இந்த சிறப்புதீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கவேண்டும் இருப்பினும் 05.06.2015 தேதியிட்ட நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 இற்கான அறிவிப்பு, தனியார் நிறுமங்களுக்கு பொருந்தாது. எனவே, தனியார் நிறுவமங்கள், பிரிவு 180 ன் கீழ் ஒரு சிறப்புத் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், தகுதியுள்ள இடங்களில், வைப்புத் தொகையை வாங்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியும். இருப்பினும், அனைத்து பொது நிறுமங்களும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 உடன் இணங்க சிறப்புத்தீர்மானத்தின்வாயிலாக மட்டுமே இயக்குநர்களிடமிருந்த கடன்தொகையைபெறமுடியும்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...