ஞாயிறு, 17 மே, 2015

நோய்நொடிஇல்லாமல் நல்ல ஆரோக்கியமாக வாழுவதற்காக கடவுள் எவ்வளவு தொகைக்கான பட்டியலை கோருவார்?


ஒரு மனிதனுக்கு 70 வயது ஆகிவிட்டது இவ்வாறு வயதாகிவிட்டதால் இதுவரையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த அம்மனிதனுக்கு தற்போது சீறுநீரகத்தில் மிக அதிக வலி ஏற்பட்டது

அதனால் உடன் அருகிலிருந்த ஆங்கில மருத்துவரை அம்மனிதின் அனுகியபோது அவருடைய சிறுநீரகம் முழுவதும் பழுதடைந்துவிட்டதால் அவ்வாறான வலி ஏற்பட்டுள்ளது என்றும் அவ்வாறான பழுதினை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என்றும் அவருக்கு ஆறுதல்கூறி அறுவை சிகிச்சைக்கான நாள்குறித்து அவருடைய சம்மதத்தை கோரினார்

அவர் சம்மதித்ததும் மருத்துவர் குறிப்பிட்ட நாளில் அவருக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து அவரை பழையநிலைக்கு கொண்டுவந்தார் அதனோடுகூட அந்தமனிதனிடம் தன்னுடைய மருத்துவமனையில் செய்த அறுவைசிகிச்சைக்கும் மாத்திரைமருந்துகளுக்காகவும் பட்டியல் ஒன்றை அவரிடம் கொடுத்து உடனடியாக அந்த தொகையை செலுத்துமாறு மருத்துவர் கோரினார்

உடன் அந்த மனிதன் ஓவென்று அழத்தொடங்கினான் அதனை தொடர்ந்து மருத்துவர் அவரிடம் “என்ன ஐயா! தொகை அதிகமாக இருக்கின்றது என பயப்படுகின்றீர்களா!” என வினவியபோது,

அந்த மனிதன் “இந்த தொகைஅதிகமாகிவிட்டது என அழவில்லை, சிறிய அறுவை சிகிச்சைக்கே இவ்வளவு தொகையை பட்டியலாக மருத்துவர் கோருகின்றாரே, என்னுடைய உடலை நோய்நொடிஇல்லாமல் நல்ல ஆரோக்கியமாக இந்த எழுபது ஆண்டுகளாக வைத்து பராமரித்து என்னை காத்திடும் அந்த கடவுள் எவ்வளவு தொகைக்கான பட்டியலை என்னிடம் அளித்து எவ்வளவு தொகையை கோருவார் என எண்ணியபோது அதிகபயமாகிவிட்டது” என கூறினான்..

இரண்டுவகை மனிதர்களில் நாம் எந்தவகையை சார்ந்தவர்கள்


ஒருமனிதன் அருகிலிருந்த மற்றொரு ஊருக்கு சென்றுகொண்டிருந்தான் அவ்வாறு அவன் சென்றுகொண்டிருந்த போது நடைபாதையில் கல்ஒன்று குறுக்காக இருந்து அவனுடைய கால் பாதத்தில் தடுத்ததால் உடன் அம்மனிதன் தடுமாறி விழஇருந்தவன் சமாளித்து நின்றபின் “கொடுமை! கொடுமை! நம்முடைய அரசாங்கம் இந்த சாலையை சரியாகவே பராமரிக்கவில்லையே!” என திட்டிகொண்டு அந்த கல்லை தாண்டி சென்றான்.

அவ்வாறே அன்று முழுவதும் ஏறத்தாழ பத்து அல்லது பதினைந்து நபர்களும் அந்த கல் தடுத்ததால் தடுமாறி விழுவதும் அல்லது விழாமல் சமாளித்து நின்று அந்த கல்லை தாண்டி செல்வதுமாக இருந்தனர் மேலும் அவ்வனைவரும் அரசாங்கத்தை மட்டுமல்லாது அந்த சாலையை உருவாக்கியவனையும் பாரமரித்தவனையும் கடுமையான சொற்களால் திட்டிகொண்டே சென்றனர் ஆயினும் அவர்கள் எவரும் வேறுஎதுவும் செய்யவில்லை

இந்த நிலையில் வேறொரு நல்லமனிதன் அதே பாதை வழியாக செல்லும்போது அவனுடைய காலில் அதே கல்இடறியது உடன் அம்மனிதன் மற்றவர்களை போல அரசாங்கத்தையும் சாலையை உருவாக்கியவனையும் பாரமரித்தவனையும் கடுமையான சொற்களால் திட்டாமல் நம்மை போன்ற இந்த பாதையின் வழியாக நடந்து வருபவர்களுக்கு அந்த கல்லால் துன்பம் ஏற்படக்கூடாது என குனிந்து அந்த கல்லை மிகமுயன்று பிடுங்கி அப்புறபடுத்தினான்

அப்போது அந்த கல்லின் அடியில் ஒருதுண்டுசீட்டு இருந்தது அதனைபிரி்த்து படித்தான் அதில் “ஏ! மனிதனே! மற்றவர்களை போன்றில்லாமல் மற்றமனிதர்கள்யாரும் துன்பம் அடையாமல் இருப்பதற்காக கல்லை இந்த பாதையிலிருந்து எடுத்து அப்புற படுத்தினாயே! நீதான் இந்த நாட்டின் உண்மையான செல்வம். உன்னை போன்றவர்கள்தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் மிகமுக்கியமானஅடிக்கல் போன்றவர்கள் ஆவீர்கள்” என குறிப்பிடபட்டிருந்தது.

பொதுவாக ஒருசிலர் எப்போதும் பேசிகொண்டும் மற்றவர்களை திட்டிகொண்டும் இருப்பார்கள் ஆயினும் வேறுசிலர் எப்போதும் செயலைமட்டும் செய்து கொண்டு இருப்பார்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவர்களைவிட செயலை செய்பவர்களே நாட்டின் உண்மையான செல்வமாகும்.

ஆம் இந்தஇரண்டுவகை மனிதர்களில் நாம் எந்தவகையை சார்ந்தவர்கள் என முடிவுசெய்து கொள்க.

சனி, 9 மே, 2015

எதையும் மறைப்பதை தவிர்த்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கமுடியும்


ஒரு இனிய மாலைபொழுதில் இரண்டு பிள்ளைகள் தங்களுடைய வீட்டின்முன்புறம் காலியாக இருந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர் அவ்வாறு விளையாடியபின் சோர்வுற்றபோது அவர்கள் இருவரும் தத்தமது வீடுகளில் தங்களுக்கு அளித்த திண்பண்டங்களை தமக்குள் பங்கிட்டு தின்னலாம் என இருவரும் முடிவுசெய்து அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தனர்

அவ்விருவரில் ஒருபிள்ளை தன்னிடமிருந்த அனைத்து பொறிவிளங்காய் உருண்டைகளையும் எடுத்து பங்கிட்டு கொடுத்தவுடன் இருவரும் அதனை தின்றுமுடித்தனர்

உடன் மற்றொருபிள்ளையானது தன்னுடைய பையிலிருந்த எள்ளுருண்டைகளில் ஒன்றைமட்டும் மறைத்து வைத்து கொண்டு மிகுதியை மட்டும் பங்கிட்டு தின்றனர் .பிறகு பொழுது சாய்ந்துவிட்டதால் இருவரும் அவரவர்களுடைய வீடுகளுக்கு சென்று இரவு உணவை அருந்திவிட்டு உறங்க சென்றனர் .

முதலில் பொறிவிளங்காய் உருண்டைகள் பங்கிட்டு வழங்கிய பிள்ளையானது நன்றாக நிம்மதியாக உறங்கஆரம்பித்தது.

ஆனால்இரண்டாவதாக எள்ளுருண்டைகளில் ஒன்றை மறைத்தைவைத்து மிகுதியை பங்கிட்டு வழங்கிய பிள்ளையானது முதல் பிள்ளையானது ஏதேனும் பொறிவிளங்காய் உருண்டைகளை தன்னைபோன்று மறைத்து வைத்திருப்பானோ என சந்தேகத்தினால் தூக்கமே வராமல் இரவு நெடுநேரம் கண்விழித்தவாறு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தான்.

ஆம் நம்மில் பெரும்பாலானோர் இவ்வாறே எதையும் மற்றவர்களுக்கும் தெரியகூடாது அல்லது வழங்ககூடாது என மறைத்துவைத்துவிட்டு வாழ்வில்நிம்மதிஇல்லாமல் துன்புற்று அல்லல் உற்று பல்வேறு வியாதிகளின் பிடிகளில் சிக்கி தவிக்கின்றோம் அதனை தவிர்த்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கமுடியும் என்பதே உண்மையான நிலவரமாகும்

சனி, 25 ஏப்ரல், 2015

செயலூக்கத்துடன் செயல்பட்டுகொண்டே இருந்தால் புதியபுதிய கண்டுபிடிப்புகளையும் ஆக்கங்களையும் உருவாக்கிடமுடியும்


நிறுவனம் ஒன்று கடலில் வெகுதூரம் சென்று மீன்களை பிடித்துவந்து நாட்டின் உட்பகுதியில் வெகுதூரத்திலிருந்த நகரங்களுக்கும்ஊரகபகுதிகளுக்கும் கொண்டு சென்றுவிற்பணை செய்துவந்தது

அதனால் புதியதாக பிடித்தமீன்போன்று இல்லாமல் காய்ந்து போனமீனாக விற்பனை செய்யவேண்டியதாகிவிட்டதால் உட்பகுதியில் இருந்த மக்கள் யாரும் வாங்கமுன்வரவில்லை அதனால் குளிர்பதின சாதனத்துடன் கூடிய வண்டிகளில் மீன்களை வைத்து எடுத்துசென்று விற்பனைசெய்தனர்

ஆயினும் மக்கள் குளிர்பதன பெட்டியில் வைத்தமீன்களும் சுவைகுறைந்துவிட்டதுஎன வாங்கமுன்வரவில்லை இந்நிலையில் ஆங்காங்கே நீர்நிறைந்த சிறிய தொட்டிகளை வைத்து அதில் கடலில் பிடித்தமீன்களைவிட்டு உயிரோடு இருக்கும் மீன்களாக மக்களிடம் விற்பனை செய்தனர்

அந்தவழிமுறையிலும் சிறிதுகாலம் கழித்து விற்பனை ஆகவில்லை என்னவென ஆய்வு செய்தபோது நீர்நிறைந்த சிறிய தொட்டிகளில் மீன்களை உயிருடன் இருந்தபோதும் அசைவு அதிகமில்லாததால் சுவையில்லாததாகிவிட்டது

நீர்நிறைந்த சிறிய குளங்களில் உயிருள்ள மீன்களுடன் இளஞ்சுராக்களையும் சேர்த்து வைத்தபோது அதனிடம் தப்பிப்பதற்காக அனைத்து மீன்களும் அங்கும் இங்கும் நீந்திஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது

அதன்பின் மீன்களின் விற்பனை அமோகமாக இருந்துவந்தது அவ்வாறே நாமும் எப்போதும் செயலூக்கத்துடன் செயல்பட்டுகொண்டே இருந்தால் புதியபுதிய கண்டுபிடிப்புகளையும் ஆக்கங்களையும் நம்முடைய வாழ்வின் வசதிக்காக உருவாக்கிட முடியும்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சிறிய செயலாக இருந்தாலும் நாம் அதனை மிகச்சரியாக செய்தால் அதன் பலன் உடன் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும்


பதினெட்டுவயதுமுடிந்தஒருவன் ஒரு இருசக்கரவாகணங்கள் பழுதுபார்ப்பு கடையொன்றில் புதியதாக பணியில் சேர்ந்து பணிபுரிந்துவந்தான் இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகணத்தின் சக்கரத்தில் காற்றில்லாமல் கைகளால் தள்ளிகொண்டுந்து அதனைசரிசெய்து தரும்படி கோரிவிட்டுவிட்டு சென்றார் அதனை தொடர்ந்து புதியதாக பணிக்குசேர்ந்தவனிடம் அந்த பணிஒப்படைக்கபட்டது உடன் புதியதாக பணிக்கு சேர்ந்த இளைஞன் அதனை சரிசெய்ததோடு அந்த இருசக்கர வாகணத்தை நன்கு தண்ணீர் அடித்து கழுவி சுத்தம் செய்து வண்டியை பளபளவென புத்தம்புதியதாக தோன்றிடுமாறு செய்ததை அவனுடன் பணிபுரிந்தமற்ற நண்பர்கள் சொன்னவேலையை மட்டும் செய்திடாமல் சொல்லாததையும் செய்துவிட்டான் என கிண்டலும் கேலியும் செய்து கைகொட்டி சிரித்தனர்.

மறுநாள் அந்த இருசக்கர வாகணத்தின் உரிமையாளர் வண்டியை எடுத்து செல்லஅந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது தன்னுடைய வண்டியானது தான் புதியதாக வாங்கியபோது இருந்த தோற்றத்தில் இருந்ததை கண்டு மிகவும் மகிழ்வுற்று யார்இவ்வாறு செய்தது என விசாரித்து அறிந்து கொண்டார் அதன் பின்னர் ஓரிருநாளில் அந்த புதியஇளைஞனுக்கு தம்முடைய தொழிலகத்தில் சிறந்ததொரு பணியையும் நல்லசம்பளத்துடன் வழங்கினார்.

ஆம் சிறிய செயலாக இருந்தாலும் நாம் அதனை மிகச்சரியாக செய்தால் அதன் பலன் உடன் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதே உலகநியதியாகும்

திங்கள், 30 மார்ச், 2015

நாம் ஒருவருக்கு செய்திடும் உதவி பின்னாளில் நமக்கு தானாகவே வந்து உதவிடும்


இங்கிலாந்தின் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலைத்தில் விவசாய பணிசெய்து கொண்டிருந்தார் .அந்நிலையில் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டு சிறுவன் ஒருவன் கதறும் சத்தம் கேட்டவுடன் அவர் தன்னுடைய பணியை அப்படியே விட்டுவிட்டு ஓடிசென்று பார்த்தபோது சிறுவன் ஒருவன் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சகதியில் தவறிவிழுந்து வெளியிலெழுந்தவரமுடியாமல் உயிருக்கு போராடிகொண்டிருப்பதை கண்டார்

.உடன் கயிற்றின் ஒருமுனையை தான்பிடித்துகொண்டு மறுமுனையை அச்சிறுவன் பிடித்து கொள்வதற்காக வீசிஎறிந்து பிடித்துகொள்ளுமாறு செய்தார் தொடர்ந்து மரஏணி ஒன்றினை அச்சிறுவன் அருகில் செல்லுமாறு வைத்து அதில் அச்சிறுவனை ஏறிகொண்டும் கயிற்றை மற்றொருகையால் பிடித்துகொண்டும் வருமாறு செய்து ஒருவழியாக அச்சிறுவனை கரையேற்றி காப்பாற்றி பத்திரமாக ஊர்போய்சேருமாறு செய்தபின் தன்னுடைய விவசாய பணியை தெடர்ந்து செய்யஆரம்பித்தார்

. மறுநாள் விலையுயர்ந்த குதிரைவண்டியில் ஒருவர் அந்த விவசாயியின் வீட்டிற்கு வந்தார் அவர் அந்த விவசாயியிடம் தன்னுடைய மகனுடைய உயிரை காப்பாற்றியதற்காக தக்க பரிசுபொருளை பெற்றுகொள்ளுமாறு வேண்டி வழங்கியபோது அவ்விவசாயியானவர் அந்த பரிசு பொருளை வாங்க மறுத்ததுடன் ஒரு உயிரை காப்பது தன்னுடைய கடமை என்றும் அதற்காக தான் பரிசுபொருள் எதுவும் வாங்க விரும்பவில்லை என மறுத்து கூறினார்

அந்நிலையில் அவ்விவசாயியின் மகன் வீட்டிற்குள் நுழைவதை கண்டவிருந்தாளி காப்பாற்றபட்ட தன்னுடைய மகனின் வயதே அவனும் இருப்பதால் தன்னுடைய மகனுடன் சேர்ந்து அவனுக்கும் தான் கல்வி கற்க வேண்டிய உதவிசெய்வதாக கூறியதை தொடர்ந்து அவ்விவசாயியின் மகனும் நல்ல தரமானகல்வி நிறுவனத்தின் கல்வி பயின்று பெரிய மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானியாக வளர்ந்தார்

பின்னாளில் காப்பாற்றபட்ட சிறுவன் வளர்ந்து பெரியமனிதனாக ஆனார் அப்போது ஒருநாள் நிமோனியா காய்ச்சலினால் அவர் துயருற்றபோது அதே விவசாயியின் மகனான விஞ்ஞானி கண்டுபிடித்த பென்சிலின் மருந்து அவருடைய உயிரை காப்பாற்றியது

அந்தமனிதன் சிறிய வயதில் இருந்தபோது தந்தையும் வளர்ந்து பெரியவனாக உயர்ந்தபோது அவ்விவசாயியின் மகனும் அவருடைய உயிரை காப்பாற்றினர்

இவ்வாறு காப்பாற்றபட்ட சிறுவன்தான் சர்.வின்ஸ்டன் சர்ச்சில் காப்பாற்றிய விஞ்ஞானிதான் பெஞ்சமின் பிராங்களின்

நாம் ஒருவருக்கு செய்திடும் உதவி பின்னாளில் நமக்கு தானாகவே வந்து உதவிடும் என்பதே இயற்கையின் நியதியாகும்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

நாம் என்னவாக இருக்கின்றோமோ அவ்வாறே இந்த சமூக மக்களும இருப்பார்கள் என்பதே உண்மை நிலையாகும்


நகரத்தின் சாலைஒரத்தில்மரநிழலில் ஒருவயதான மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தார் அந்த நேரத்தில் கிராமத்தில் இருந்து ஒருவன் அந்த நகரத்தை நோக்கி கால்நடையாக வந்து கொண்டிருந்தான்

அந்த வழிபோக்கன் அந்த பெரியவரை அனுகி “ஐயா இந்தநகரின் மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா எவ்வாறு இருப்பார்கள்” என அவரிடம் வினவியபோது

“தம்பி நீவருகின்றாயே அந்த ஊரின் மக்கள் எவ்வாறானவர் என கூறு நான் உன்னுடைய கேள்விக்கு பின்னர் பதில் கூறுகின்றேன்” என பதில் கேள்வி கேட்டார்

உடன் அந்த மனிதன் “நான் இருந்து வாழ்ந்து ஊர் மிகவும் மோசம் அனைவரும் கெட்டவர்கள் யாரையும் கெடுதல் செய்து கொண்டே இருப்பார்கள்” என பதிலிறுத்தான்

உடன் அந்த பெரியவரும் “இந்த நகர மக்களும் அவ்வாறானவர்களே அவர்களுடன் முந்தைய நிலையை தொடர்ந்து கடைபிடித்து வாழலாம் போய்வா” என விடைகெடுத்தார்.

சிறிதூரம் சென்ற அவ்வழிபோக்கன் திரும்பவும் அந்த வயதானவரிடம்மீண்டும் வந்து “ஐயா நான் வாழ்ந்து வளர்ந்த என்னுடைய ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள் மழையில்லை என்ற ஒரே காரணத்தினாலேயே நான் இந்த நகரத்திற்கு வருகின்றேன் அதனால் சரியாக சொல்லூங்கள் ஐயா இந்த நகரமக்கள் எவ்வாறானவர்கள்” என மீண்டும் வினவியபோது

“தம்பி இந்த நகரத்து மக்களும் மிக நல்லவர்கள்தான் வல்லவர்கள்தான் வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று அரவணைத்து வாழவைக்கும் தயாள குணம் கொண்டவர்கள்தான் அதனால் அவர்களுடன் நல்லுறவை வளர்த்து மகிழ்ச்சியாக வாழமுடியும் சென்றுவா” என விடைகொடுத்தார்

ஏன் அந்த பெரியவர் நகரத்தின் மக்களை முதலில் கெட்டவர்கள் என்றும் பின்னர் நல்லவர்கள் என்றும் மாற்றிமாற்றி கூறினார்

நாம் என்னவாக இருக்கின்றோமோ அவ்வாறே இந்த சமூக மக்களும இருப்பார்கள் என்பதே உண்மை நிலையாகும்