சனி, 26 மார்ச், 2022

பார்வையற்ற கணவன்


ஒருவன் மிக அழகான பெண்ஒருத்தியை மணந்தான் .திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அந்த மனிதன் தன்னுடைய மனைவியை மிகவும் நேசித்தான்

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, தனக்கு தோல் நோய் வந்தது என்பதையும், அதன் காரணமாக படிப்படியாக  தனது அழகை இழக்கின்றோம் என்பதையும்அந்த  மனைவி அறிந்தார்.

இதை அறிந்த மனைவி , “நான் அழகாயில்லாமல் இருந்தால், என் கணவர் என்னை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்...அதனை பொறுத்துக் கொண்டு என்னால் வாழ முடியாது.",மனதிற்குள் யோசிக்க ஆரம்பித்தாள்

இதற்கிடையில் ஒரு நாள் அவளுடைய கணவன் ஏதோ பணிசெய்வது தொடர்பாக வெளியூர் செல்ல நேர்ந்தது.  பணி முடிந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பி கொண்டி ருந்தபோது ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் அந்த மனிதன் தனது இரண்டு கண்களையும் இழந்தார்

இதையெல்லாம் மீறி, அவர்களின் திருமண வாழ்க்கை வழக்கமாகவே நடந்துவந்தது.

சிறிது காலம் கழிந்தபின்னர், அம்மனைவி தனதுதோல் நோயால் தன்னுடைய அழகை முற்றிலும் இழந்தாள். அதனால் அம்மனைவயின் உருவம் பார்க்க சகிக்காமல் அசிங்கமாக மாறிவிட்டது, ஆனால் அவளுடைய பார்வையற்ற கணவனால் அதைப் பார்க்க முடியவில்லை. அதனால்  அவர்களின் திருமண வாழ்க்கை பாதிக்கவில்லை

அவளுடைய கணவன் எப்போதும் போல இருந்ததால் அவர்களுடைய திருமண வாழ்க்கையும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது

ஒரு நாள் மனைவி இறந்து போனார். இப்போது அந்த மனிதன் மிகவும் சோகமாகவும் தனியாகவும் இருந்தார்.அதனால் அந்த மனிதன் தான் வாழும்  நகரத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

தன்னுடைய மனைவிக்கான அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்தபின்னர். அடுத்த நாள்,புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த மனிதனுடைய பக்கத்து வீட்டுக்காரர் , அந்த மனிதனிடம் சென்று, “உங்களுக்கோ இரு கண்களும் பார்வை தெரியாததால் பல ஆண்டுகளாக உங்களுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் உங்கள் மனைவி எப்போதும் இருந்தார் உங்களுடைய மனைவியின் ஆதரவின்றி நீங்கள் எவ்வாறுதனியாக வாழ முடியும்? அது உங்களுக்கு மிகக்கடினமாக இருக்குமே." என அனுதாபம் தெரிவித்தார்

அதற்கு அந்த மனிதன், “நண்பரே, நான் பார்வையற்றவன் அன்று. நான் பார்வையற்றவன் போன்று நடித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், என் மனைவிக்கு தன் தோல்நோயைப் பற்றித் தெரிந்ததும், அவள் அதைப் பற்றி கவலைப்படுவதையும் பயப்படுவதையும் உணர்ந்தேன்  என் மனைவிக்கு அவளின் அசிங்கமான தோற்றத்தை நான் பார்க்க முடியும் என்று தெரிந்திருந்தால், அவளுடைய நோயை விட அது அவளை அதிகம் பாதித்திருக்கும். அவள் மிகவும் நல்ல மனைவி, நான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினேன். அதனால்தான் இத்தனை வருடங்களாக நான் பார்வையற்றவனாக நடித்தேன்." என பதில் கூறினார் 

கற்றல் மகிழ்ச்சியாக இருக்க, சில சமயங்களில், ஒருவருக்கொருவர் குறைபாடுகளை சுட்டிகாட்டாமல் அனுசரித்து வாழ பழகிகொள்ள வேண்டும்.

சனி, 19 மார்ச், 2022

மகிழ்ச்சியாக எவ்வாறு வாழ முடியும்?

 

நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு மனிதன் துறவிஒருவரிடம்  சென்று, "ஐயா நான் எவ்வாறு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது?" என வினவினார்

இதைக் கேட்டஅந்த துறவி, அந்த மனிதனை தன்னுடன் காட்டிற்கு நடந்து வரும்படி கூறினார். அந்த மனிதனும் ஒப்புக்கொண்டான் அவர்கள் இருவரும் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டில் நடந்துகொண்டிருந்தபோது, துறவி அந்த மனிதனிடம் அங்கே தரையில் கிடந்த கல் ஒன்றினை கையில் எடுத்துகொண்டுவருமாறு கூறினார், உடன் அந்த மனிதனும் தரையில் கிடந்த அந்த கல்லை கையில் எடுத்து வைத்து கொண்ட பின்னர் இருவரும் நடக்கத் தொடங்கினர். சிறிது நேரம் அந்த கல்லை கையில் வைத்து கொண்டே நடந்த பிறகு, அந்த மனிதன் துறவியிவிடம், “ஐயா, இந்த கல்லை என்னுடைய கையில் தூக்கி கொண்டுவருவதால் என்னுடைய கை வலிக்கிறது” என்றார்.

துறவியும், “சரி, நீ கையில் எடுத்துகொண்டுவரும் அந்தக் கல்லை  கீழே தரையில் போட்டு விட்டு வா” என்றார்.

துறவி இவ்வாறுச் சொன்னவுடனேயே, அந்தமனிதனும் அந்தக் கல்லைக் கீழேவீசி எறிந்து விட்டான். மீண்டும் அவர்கள் இருவரும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர்

சிறிது நேரம் கழித்து, துறவி, “இப்போது எப்படி உணர்கிறாய்?” என அந்த மனிதனிடம் வினவினார்.

உடன் , ‘ ஐயா நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அந்த கல்லை எறிந்த பிறகு, எனக்கு அவ்வளவு வலி எதுவும் இல்லை கையிலும் வலிஎதுவும் இல்லாமல் நன்றாக மகிழ்ச்சியாக உணர்கிறேன்." என அந்த மனிதன் பதிலளித்தான்

அப்போது துறவி, “இதுதான் மகிழ்ச்சியின்இரகசியம். இனி நீயும் இவ்வாறே  மகிழ்ச்சியாக வாழலாம்.” என அறிவுரை கூறினார்

அவ்வாறான துறவியின் அறிவுரையை கேட்ட அந்த மனிதன் மிகக்குழப்பமடைந்து, “எனக்கு புரியவில்லை ஐயா” என வினவினான்.

துறவி சிரித்துக் கொண்டே , 'மக்கள் தங்கள் வாழ்க்கையில் மனதில் வலியை ஏற்படுத்தும் எத்தனையோ கற்களைத் தொடர்ந்து சுமந்து கொண்டு  வாழ்ந்து கொண்டுவருகிறார்கள், பிறகு அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எனவே, மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அவ்வாறான மனதிற்கு வலியைத் தரும் கற்களை மனதிலிருந்து தூக்கி எறிந்து விட்டு நிம்மதியாக வாழ பழக வேண்டும்.” என அறிவுரைகூறினார் 


சனி, 12 மார்ச், 2022

ஓவியரும் பணக்கார பெண்ணின் உருவப்படமும்



ஒரு நகரத்தில்ஓவியர் ஒருவர் வாழ்ந்துவந்தார், அவருடைய புத்திசாலித்தனமான ஓவியத்தினால்ர் அந்நகரம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். அவருடன் ஓவியம் வரைகின்ற பயிற்சியாளர் ஒருவரும் வாழ்ந்துவந்தார் ஒரு நாள் ஒரு பணக்கார பெண்மணி தனது நாயுடன் அவரைச் சந்தித்து, தனது நாயுடன் இருக்குமாறான தோற்றத்துடன் தன்னை ஓவியம் வரையுமாறு கோரினார், அந்த ஓவியரும் ஒரு வார கடின உழைப்பிற்குப் பிறகு, நாயுடன் சேரந்துநிற்கும் பணக்கார பெண்மணியின் ஓவியத்தினை ஒருவழியாக வரைந்து முடித்தார். அந்த வார முடிவில் அந்த பணக்கார பெண்மனி தன்னுடைய நாயுடன் தான்சேர்ந்து நிற்கும் தன்னுடைய ஓவியத்தை பெற்று கொள்ள வந்தாள், அவளுடைய நாயும் அவளுடன் வந்திருந்தது.

ஓவியர் அந்த உருவப்படத்தைஅந்த பணக்கார பெண்மனியிடம் காட்டினார்.

அந்த பணக்கார பெண்மணி அந்த ஓவியத்தைப் பார்த்தார் ஓவியம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் அவளுடைய நாய் அந்த ஓவியத்தைப் பார்த்து அமைதியாக இருந்தது அதனால் அந்த பணக்கார பெண்மனி, “நீ வரைந்த என்னுடைய ஓவியத்தைைபார்த்து என்னுடைய நாய் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கின்றது உன்னுடைய ஓவியம் என்னுடைய நாயைக்கூட கவரமுடியவில்லை. அதனால் இதுவெறும் குப்பைதான் உன்னுடைய ஓவியத்தைப் பற்றி பலரும் மிகவும் பாராட்டியதால்தான் நான் இங்கு வந்தேன், ஆனால் அது தவறு. இந்த ஓவியத்திற்கு பணம் எதுவும் தரமாட்டேன். நீயே இதை வைத்துகொள்", என கோபமாக கூறிவிட்டு அவள் கிளம்ப தயாரானாள் .

அப்போது, அந்த ஓவியர் அவளைத் தடுத்து நிறுத்தி, “அம்மா, உங்களுடைய நாயை இந்த ஓவியம் கவரவில்லை என்பதுதானே உங்களுடைய விருப்பம், நாளைக் காலை வாருங்கள், அதற்குள் நான் இந்த ஓவியத்தில் அவ்வாறான தவறைத் திருத்தி சரிசெய்துவிடுகின்றேன். நாளை உங்கள் நாய்க்கும் இந்த ஓவியம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.", என கேட்டுகொண்டார்

அடுத்த நாள், அந்த பணக்கார பெண்மனி மீண்டும் தனது நாயுடன் வந்துசேர்ந்தாள்

இந்த முறை பணக்கார பெண்மணி தனது நாயுடன் தன்னுடைய ஓவியத்தை காண அருகில் வந்தவுடன், அந்த பெண்மனியினுடைய நாய் மிகவிரைவாக ஓடிவந்து அந்த ஓவியத்தை நக்க ஆரம்பித்தது, இதைப் பார்த்தஅந்த பணக்கார பெண்மணி தனது நாய்க்கு தன்னுடைய நாயுடனான அந்த ஓவியம் மிகவும் பிடித்துவிட்டது என மிக மகிழ்ச் சியடைந்தார். அந்த ஓவியத்திற்கான பணத்தை அந்த ஓவியரிடம் கொடுத்துவிட்டு ஓவியத்தை வாங்கி கொண்டு திரும்பி சென்றுவிட்டாள்

இதைப் பார்த்த ஓவியரின் பயிற்சியாளர் மிகவும் ஆர்வமாகி அந்த ஓவியரிடம் , “நேற்று, இதே ஓவியத்தை அந்த பணக்கார பெண்மனியின் நாய் திரும்பிகூட பார்க்கவில்லை ஆனால் இன்றுஅந்த நாய் வேகமாக ஓடிவந்து அதே ஓவியத்தினை நக்கிக்கொண்டிருந்ததே. இது எப்படி சாத்தியம்?" என சந்தேகத்தினை எழுப்பினார்

ஓவியர் சிரித்துக்கொண்டே, "தம்பி நான்நேற்று இரவு அந்த ஓவியத்தின் கீழ் விளிம்பில் சிறிய இறைச்சித் துண்டு ஒன்றினை கொண்டு வந்துத் தேய்த்தேன், அந்த இறைச்சியின் வாசனையால் இன்று அந்த பணக்கார பெண்மனியினுடைய நாயானது அதே ஓவியத்தை நக்க ஆரம்பித்துவிட்டது" , என பதிலளித்தார்


ஞாயிறு, 6 மார்ச், 2022

பெரியோர்களின் அறிவுரைகளை பின்பற்றிடுக

 


ஒருமுறை பள்ளியின் வகுப்பறையில், இயற்பியல் ஆசிரியர் ஒருவர்மாணவர்களிடம், "நம்முடைட மகிழுந்தில் ஏன் வேகத்தடை வைத்துள்ளோம்?" எனும் கேள்வியை கேட்டார்

உடன்ஒரு மாணவன் எழுந்து, “வண்டியை நிறுத்துவதற்காக வைத்துள்ளோம்” என்று பதிலளித்தார்.
மற்றொரு மாணவர், "
மகிழுந்தின் வேகத்தைக் குறைத்து கட்டுப்படுத்திடுவதற்காக வைத்துள்ளோம்" என்று பதிலளித்தார்.
ூன்றாவதாக ஒருமாணவர்
, 'விபத்தினை தவிர்க்க'' என்றார்.
வெகுவிரைவில், அனைத்து மாணவர்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பதிலைச் சொல்லத் தொடங்கினர். எனவே, ஆசிரியர் கேள்விக்கு தானே பதிலளிக்க முடிவு செய்தார்.
, "
மாணவர்களாகிய உங்கள் அனைவரின் பதில்களையும் நான் பாராட்டுகிறேன். ஆயினும் ந்த வகையில் பார்த்தாலும் - மகிழுந்தில் உள்ள வேகத்தடைகள், அதை வேகமாக இயக்கவே நமக்கு உதவுகின்றன என்பதே உண்மையான பதிலாகும்'', என்றார் இயற்பியல் ஆசிரியர்.
ந்பதிலைக் கேட்டு
, வகுப்பில் ஆழ்ந்த அமைதி நிலவியது, ஏனென்றால் இவ்வாறான பதிலை யாரும் எதிர்பாரத்திடவும் இல்லை ,கற்பனை செய்க்கூடவும்வில்லை,

தொடர்ந்தஆசிரியர் , “ஒரு கணம், நம் மகிழுந்திற்கு வேகத்தடை இல்லை என்று வைத்துக் கொள்வோம், பிறகு நாம் எவ்வளவு வேகமாக மகிழுந்தினை ஓட்ட தயாராக இருக்கிறோம்? என சிந்தித்தீர்களா. மகிழுந்தில் உள்ளவேகத்தடைகள்தான் மகிழுந்தினை வேகமாகசெலுத்தி நாம் சென்றடைய வேண்டிய இலக்கை அடைய வைப்பதற்கான உறுதியை தருகிறது''. என விளக்கமளித்தார்
இயற்பியல் ஆசிரியரின் இந்த விளக்கஉரையை கேட்டுவகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் அதிக குழப்பமடைந்தனர். மகிழுந்தின் வேகத்தடைகளைப் பற்றி அவர்கள் இவ்வாறு ஒருபோதும் நினைத்துகூட பார்த்ததில்லை.
ஆயினும் அந்த இயற்பியல் ஆசிரியர் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார், “அதேபோல், நம் வாழ்க்கையிலும் இதுபோன்ற பல வேகத்தடைகள் உள்ளன.வைம் நம்முடைய வாழ்க்கையில் தாறுமாறாக சென்றிடாமல் தடுக்கின்றது அல்லது நம் தவறு செய்திடாமல் அதனைக் கட்டுப்படுத்துகின். நாம் பின்பற்ற விரும்பும் திசை, நமது முன்னேற்றம் அல்லது வாழ்க்கையில் இலக்குகள் ஆகியவற்றினை நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் சரிசெய்து நம்முடைய வாழக்கையின் சரியான வழியை காட்டுகின்றார்கள்
.
அவர்களின் குறுக்கீடுகள் அல்லது அறிவுரைகளை நமதுவாழ்க்கை பாதையின் குறுக்கே தடுக்கும் வேகத்தடைகற்களாகநாம் பார்க்க முனைகிறோம்
.
ஆனால், நம்முடைய வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதை உறுதிசெய்து கொள்ளவும்
, ஆபத்துக்களைிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளவும் உதவுகின்ற நமது ஆதரவாளர்களாக அல்லது ஊக்கியாக அவர்களைப் பார்ப்பதுதான் மிகச்சரியான நடவடிக்கையாகும். ஏனென்றால், அவர்கள் சில சமயங்களில், நம்வாழ்க்கையின் திசையை தடுத்து நிறுத்தி அல்லது பின்வாங்கி சரியான திசைக்கு செல்ல வழிகாட்டுகின்றனர்
வ்வாறான அவர்களின் குறுக்கீடுகள் அல்லது அறிவுரைகளை தான்வருங்காலத்தில் நாம் நல்ல நிலையை அடைகின்ற வழிகாட்டிகளாக திகழ்கின்றன
.
இந்த வேகத்தடைகற்கள் இல்லாமல்
, நாம் நழுவலாம், திசையை இழக்கலாம் அல்லது துரதிர்ஷ்டவசமான விபத்தில் பலியாகலாம்.
எனவே, நம் வாழ்க்கையில் வேகத்தடைகற்கள் நம்மை பின்னுக்குத் தள்ளவோ ​​அல்லது பிணைப்பதற்கோ அல்ல
, மாறாக முன்பை விட நம்முடைய வாழ்க்கையில் நாம்வேகமாக முன்னேற உதவக்கூடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் நாம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் நம்முடைய வாழ்க்கையின் இலக்கை அடைய முடியும்''. என்ற நீண்ட விளக்கமளித்தார்

நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோர்களின் குறுக்கீடுகள் அல்லது அறிவுரைகளை நமதுவாழ்க்கை பாதையின் குறுக்கே தடுக்கும் வேகத்தடைகற்களாகநாம் பார்க்காமல் அவற்றை நம்முடைய வாழ்க்கை பாதையின் படிக்கற்களாக பயன்படுத்தி முன்னேற உறுதி செய்து கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...