திங்கள், 30 ஏப்ரல், 2018

பொய் பேசினாலும் பொருத்தமாக பேசுக


ஒரு இரவு கல்லூரியில் பயிலும் நான்கு கல்லூரி மாணவர்கள் அடுத்தநாள் நடக்கவிருக்கும் மாதாந்திர தேர்விற்கு தயார்செய்திடாமல் இரவு விருந்தில் கலந்து கொண்டு வீணாக கழித்துவிட்டு அடுத்த நாள் காலையில் அழுக்குடன் கூடிய ஆடையைஅணிந்து கொண்டு "நேற்று இரவு எங்களுடைய நண்பனின் திருமணத்திற்கு சென்று தாங்கல் சென்றுதிரும்புவதற்கு பயன்படுத்திய காரின் டயர் வெடித்து விட்டதால் கைகளால் அந்த காரினை இரவு தூங்காமல் தள்ளிக்கொண்டே வந்து காலையில் தான் வந்த சேர்ந்தோம் அதனால் எங்களால் இன்றைய தேர்விற்கு தயாராக முடியவில்லை வேறு நாளிற்கு இந்த தேர்வினை தள்ளிவைத்தால் நல்லது ஐயா!” என கல்லூரி முதல்வரிடம் வேண்டிகேட்டு கொண்டனர் இவர்களுடைய தோற்றத்தை பார்த்த அக்கல்லூரிமுதல்வர் இவர்களிடம்உண்மைநிலையை எவ்வாறு அறிந்து கொள்வது என .யோசித்து பின்னர் சரி தம்பிகளா நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்வதாக இருந்தால் நான் கூறுமாறு செய்திடுங்கள் என நான்கு கல்லூரிமாணவர்களையும் தனித்தனிய அறையில் உட்கார வைத்து ஒரு வெள்ளைதாளில் அவர்களனைவரும் சென்றுவந்த காரின் டயர் எத்தனைமணிக்கு எந்தஇடத்தில் வரும்போது வெடித்தது அவ்வாறு வெடித்த டயர் முன்பகுதி சக்கரங்களெனில் எந்தபக்கசக்கரத்தினுடையது பின்பகுதி சக்கரங்களினெனில் எந்தபக்கசக்கரத்தினுடையது என தனித்தனியாக பதிலெழுதி வருமாறுகோரினார் உடன் அந்த கல்லூரி மாணவர்கள் நால்ரும் தங்களுடைய குட்டுவெளிப்பட்டுவிட்டதால் தங்களை மன்னிக்குமாறு கோரினர்

திங்கள், 23 ஏப்ரல், 2018

நம் வாழ்நாளின் நோக்கம் என்ன?


50 பேர் கொண்ட ஒரு கருத்தரங்கில் கூட்டத்தில் அந்த கூட்டத்தின் பேச்சாளர் திடீரென்று தன்னுடைய பேச்சினை நிறுத்தி ஒவ்வொருவரிடமும் பலூன் ஒன்றினை கொடுத்தார். தொடர்ந்து ஒவ்வொருவரும் மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி அவரவர்களின் பெயரை அவரவர்களுக்கு வழங்கிய பலூன்களில் எழுதும்படி கோரினார். பின்னர் அனைத்து பலூன்களும் ஒன்றாக சேகரிக்கப்பட்டு அருகிலிருந்க மற்றொரு அறையில் வைக்கப்பட்டன.கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் பலூன் வைக்கப்பட்ட அறைக்குள்சென்ற 5 நிமிடங்களுக்குள் அவரவர்களும் தத்தமது பெயர் எழுதப்பட்ட பலூனை கண்டுபிடித்து எடுத்துவருமாறு கோரப்பட்டனர் உடன் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று ஒருவருக்கொருவர்முட்டி மோதி தங்களுடைய பெயர் எழுதப்பட்ட பலூனை தேடிக்கொண்டேஇருந்தனர் அனுமதிக்கப்பட்ட5 நிமிடங்களின் இறுதியில் யாராலும் தம்முடைய பெயர் எழுதிய பலூனை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதன்பின்னர் அப்பேச்சாளர் பார்வையாளரிடம் அதே அறைக்குள் சென்ற ஏதாவதுவொரு பலூனை எடுத்துவருமாறு கோரினார் இப்போது ஓரிரு நிமிடங்களில் அனைவரும் ஆளுக்கொரு பலூனை எடுத்து கொண்டுவந்தசேர்ந்தனர் இப்போது அவர்கள் அனைவரும் ஆளுக்கொன்றாக எடுத்துவந்த பலூனில் எழுதியுள்ள பெயரை படித்துபார்க்கு மாறு கோரப்பட்டனர் என்ன ஆச்சர்யம் எல்லோருக்கும் அவரவர்களின் சொந்தபெயர்களுடன் கூடிய பலூன் கிடைத்திருந்தது.

பொதுமக்களே இதே போன்றதுதான் நம்முடைய வாழ்க்கையும் எல்லோரும் தாம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் எனஎல்லோரும் வெளிப்படையாக மகிழ்ச்சியான வாழ்க்கையை , அது எங்கே என்று தெரியாமல் தேடுகிறார்கள் அவ்வாறு முயல்வதால் நாமனைவரும் மகழ்ச்சியற்று ஒருவருக்கொருவர் அடித்துகொண்டு அல்லல்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதற்கு பதிலாக மற்றவர்களுக்கு தொந்திரவு வழங்காமல் வெளியே எங்கும் தேடாமல் அவரவர்களும் அவரவர்களின் சொந்த வாழ்க்கையை வாழ்ந்தால் மகிழ்ச்சியை பெறுவீர்கள். இதுதான் மனித வாழ்க்கைக்கான நோக்கம். என பேசிமுடித்தார்

சனி, 14 ஏப்ரல், 2018

நம்முடைய உயிருக்கு ஆபத்து எனஉணரும்போது மட்டுமே நம்முடைய அடிப்படையானசெயலை பயன்படுத்திடும் நம்முடைய மனப்பாண்மையை ஒழித்திட்டால் நாம் வாழ்வில் முன்னேற முடியும்


முன்னொரு காலத்தில், அரசன்ஒருவன் தம்முடைய அண்டைநாட்டின் அரசனை மரியாதை நிமித்தமாக சந்திக்கசென்றார் அதனை தொடர்ந்து அந்த அண்டை நாட்டு அரசனும்அதனை கவுரவிக்கும் பொருட்டு இவருக்கு ஒரு ஜோடி புறாக்களை பரிசாக வழங்கினார் . அவை பார்ப்பதற்கு மிக அழகானதாக இருந்தன தன்னுடைய நாட்டிற்கு திரும்பியவுடன் அந்த பறவைகளை நன்கு பாதுகாத்து பயிற்றுவிப்பதற்காக ஒரு பயிற்சியாளரை நியமித்தார் .அப்பயிற்சியாளரும் அந்த பறவைகள் இரண்டிற்கும் பறப்பதற்காக ஒரேமாதிரியான பயிற்சி வழங்கினார் ஆயினும் அவ்விரண்டில் ஒன்றுமட்டும் மிகஅழகாக பறந்து சென்று திரும்பி வந்தது மற்றொன்று மட்டும் பயிற்சியாளர் எவ்வளவு முயன்றாலும் எவ்வளவுநேரம் முயன்றாலும் பறக்காமல் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தது அரசரும் வெவ்வேறு பயிற்சியாளர்களை கொண்டு முயன்று பார்த்தார் அப்போதும் அந்த மற்றொரு பறவைமட்டும் பறக்கவேயில்லை ஆனால் அதற்கு வழங்கப்பட்ட உணவுத்தானியங்களை மட்டும் இரண்டும் சமமாக உண்டன தண்ணீரை சமமாக அருந்தின அதனால் தன்னுடைய நாட்டின் கிராமத்திலுள்ள மக்களுள் யாராவது ஒருவர் வந்து அந்த பறவையை பறக்கசெய்யுமாறு கோரினார் அதனைதொடர்ந்து ஒரு கிராமத்து விவசாயிஒருவர் வந்துசேர்ந்தார் என்ன ஆச்சரியம் அந்த கிராமத்து விவசாயியின் பயிற்சி ஆரம்பித்தவுடன் அந்த மற்றொரு பறவை மட்டும் வானத்தில் பறந்து செல்வதை அந்த அரசன் பார்த்தாார் உடன் அந்த விவசாயியிடம் "மற்றவர்கள் அனைவரும் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த பறவையை பறக்கசெய்ய முடியாத செயலை அந்த விவசாயி வந்தவுடன் மட்டும் எவ்வாறு செய்யமுடிந்தது" என வினவினார் அதற்கு அவ்விவசாயி "மிகஎளிது ஐயா அந்த பறவை அமர்ந்திருந்த கிளையின் அடிப்பகுதியை வெட்ட ஆரம்பித்தேன் உடன் நான் வெட்டிய கிளைமுறிந்துபோனால் தன்னுடைய உயிருக்கே ஆபத்து ஏற்படும் என அந்த மற்றொரு பறவை பறக்க ஆரம்பித்துவிட்டது" என பதில்கூறினார் நம்முடைய உயிருக்கு ஆபத்து எனஉணரும்போது மட்டுமே நம்முடைய அடிப்படையானசெயலை பயன்படுத்திடும் நம்முடைய மனப்பாண்மையை ஒழித்திட்டால் நாம் வாழ்வில் முன்னேற முடியும்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

எதிரில் தெரியும் பலாப்பழத்தைவிட கையிலிருக்கும் சிறிய கலாப்பழமே சிறந்தது


அது ஒரு மிகவும் வெம்மைமிகுந்த கோடைக்காலநாளாகும் காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று மிகவும் பசியோடு உணவு எதுவும் கிடைக்காமல் உணவிற்காக அங்கிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்து ஆனாலும் ஒரு சிறிய முயலைகூட தன்னுடைய உணவிற்காகஅந்த சிங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை அதற்குமேல் அந்த வெயிலில் இரைதேடமுடியாதுஎன சோர்வுற்று ஒருமரத்தின் நிழலில் இளைப்பாறி சிறிதுநேரம் ஓய்வெடுத்த-பின்னர் தன்னுடைய உணவிற்கானவேட்டையை தொடரலாம் என முடிவு-செய்து அந்த மரத்தின் கீழ் வந்தது அப்போது வெயிலிற்காக சிறிதுநேரம் ஓய்வெடுக்கலாம்என சிறியமுயல் ஒன்று அதே மரத்தில்ஓய்வெடுத்து கொண்டிருந்தது உடன் அந்த சிறியமுயலை சிங்கமானது தன்னுடைய வாயால் பற்றி உண்ணலாம் எனமுயலும் போது, மான் ஒன்று வெயிலிற்காக அதே மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுக்கலாம் என வந்து கொண்டி-ருந்ததை கண்டது அதனால் சிங்கமானத தன்னுடைய பிடியில் இருந்த முயல் மிகவும் சிறியது நம்முடைய பசிக்கு சோளப்பொறி போன்று பத்தாது அதனால் இந்த சிறியமுயலை வாயில் வைத் துகொண்டு பெரிய அந்தமானை பிடித்து உண்ண-முடியாது என தன்னுடைய வாயால் கவ்வியிருந்த சிறியமுயலை விட்டிட்டு மானை பிடிப்பதற்காக தாவியது மரத்தின் நிழலில் சிங்கம் இருந்ததை ஏற்கனவே பார்த்து விட்ட மானானது தற்போது உயிர்பிழைத்தால் போதும் நிழலில் ஒதுங்கி ஓய்வெடுப்பதை பின்னர் பார்த்து கொள்ளலாம் என சிட்டாக ஒடியது சிங்கமானது வெகுதொலைவு வரை அந்த மானை தூரத்தி சென்றாலும் சிங்கத்தால் அந்த மானை பிடிக்கமுடியவில்லை அதனால் அந்த சிங்கமானது மானையும் பிடிக்கமுடியாமல் கையிலிருந்த சிறியமுயலையும் விட்டுவிட்டோமே என சோர்வுற்ற அருகிலிருந்த மரத்தின் நிழலில் பசியால் அதற்குமேல் ஓடமுடியாமல் படுத்துவிட்டது எதிரில் தெரியும் பலாப்பழத்தைவிட கையிலிருக்கும் சிறிய கலாப்பழமே சிறந்தது அதிக மதிப்புள்ளதுஎன அறிந்து கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...