சனி, 29 ஜூன், 2019

எந்தவொரு பிரச்சினைக்கும் முயன்றால் தீர்வு காணமுடியும்


ஒரு நாள் காலை நேரத்தில் பெரிய வியாபார நிறுவனத்தின் சொந்தகாரன் அன்றைய பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்வது என தெளிவு பெறாமல் குழப்பத்துடன் தன்னுடைய வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டிருந்தான் அந்நிலையில் ஒரு சிறிய எறும்பு அங்கும் இங்கும் சென்றுகொண்டும் வந்துகொண்டிரும் இருந்ததை கண்ணுற்றதும் தன்னுடைய பிரச்சினையை மனதின் ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு அந்த சிறிய எறும்பு என்ன செய்கின்றது என பார்வையிட துவங்கினான் அந்த எறும்பானது தன்உருவைவிட மிகப்பெரிய இலை ஒன்றினை தன்னுடைய வாயால் பிடித்து இழுத்துகொண்டு சென்றது எங்குதான் அந்த இலையை இழுத்து செல்கின்றது என பார்ப்போம் என ஆழ்ந்து கவணித்தான் அந்தஎறும்பானது தான் செல்லும் வழியில் அந்த சிறிய எறும்பால் கடந்து செல்லமுடியாதவாறான கீரல் ஒன்று தரையில் இருந்தது அதன் மீது இந்த இலையை கொண்டு சென்று வைத்தது இப்போது அந்த இலையானது தரையிலிருந்த அந்த எறும்பால் கடக்க முடியாதவாறு இருந்த கீரலிற்கு மேல் ஒருபாளம் போன்று ஆகிவிட்டது அதனால் அந்த எறும்பானது அனாயசமாக அந்த இலையின்மீது ஊர்ந்து சென்று கீரலின் அடுத்தபகுதிக்கு சென்றது அங்கு சிறிய மலைபோன்ற தின்பண்டங்களின் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன அவற்றில் ஒவ்வொன்றாக தன்னுடைய வாயால் பிடித்து இழுத்துகொண்டு அந்த இலையின் மேல் ஊர்ந்து கீரலிற்கு இந்த பக்கத்தில் கொண்டுவந்து தன்னுடைய வசிப்பிடத்திற்கு கொண்டுசேர்த்தது இதனை கண்டவுடன் அடடா ஒரு சிறிய எறும்பு தனக்குமுன் தன்னால் கடக்கமுடியாத அளவிற்கு பெரிய பள்ளம் போன்று இருந்த கீரல் என்ற தடையை தாண்டிசெல்வதற்கு அருமையான வழியை கண்டுபிடித்து தனக்கு தேவையான உணவினை அடைந்துவிட்டதே என ஆச்சரியம் அடைந்தான் அதனை தொடர்ந்து அவனும் நம்பிக்கையுடன் இன்று நாம் நம்முடைய வியாபாரத்தில் எதிர் கொண்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை காண கண்டிப்பாக முயற்சிசெய்வோம் வெற்றி கொள்வோம் என முடிவெடுத்தான் Z

சனி, 8 ஜூன், 2019

கையில் கிடைத்த கலாக்காயை விட்டுவிட்டு உயரத்திலிருக்கும் பலாக்காய்க்கு ஆசைபடவேண்டாம்


ஒரு சமயம் காட்டில் வாழும் சிங்கம் ஒன்று காடுமுழுவதும் அலைந்து திரிந்தும் இரை எதுவும் கிடைக்காததால் மிகவும் சோர்வுற்று தன்னுடைய குகைக்கு வெறும் கையுடன் திரும்பியது பசி களைப்பில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தபின்னர் மீண்டும் வேட்டையாடுவதற்காக மிகவும் பசியோடு தன்னுடைய குகையைவிட்டு வெளியில் வந்து சுற்றி பார்த்தபோது ஒரு சிறுமுயல் மட்டும் அதனுடைய கண்ணில் பட்டது அடச்சீ யானை பசிக்கு சோளப்பொறி போன்று நம்முடைய பசிக்கு இது பத்தாதே என்னசெய்வது சரி இருந்தபோதிலும் இந்த சிறியமுயலை அடித்து சாப்பிடுவோம் நம்முடைய பசி களைப்பும் சிறிது குறையும் அதன்பின்னர் வேட்டையாடுவதற்காக கிளம்பலாம் என முடிவுசெய்து அந்த சிறியமுயலை பிடித்திட முயலும்போது கொழுகொழுவென இருக்கும் மான்ஒன்று அந்த வழியாக கடந்து செல்வதை சிங்கம் கண்டது உடன் இந்த சிறிய முயலை பிடித்து சாப்பிட்டால் பசி சிறிதுதான் குறையும் அதற்கு பதிலாக அந்த மானை பிடித்தால் இரண்டு மூன்று வேளைக்கு போதுமானதாக இருக்கும் அதனால் அந்த மானையே பிடிப்போம் என கைக்கு எட்டியதூரத்தில் இருந்த சிறிய முயலை பிடித்திடாமல் மானை பிடித்திட பாய்ந்து சென்றது சிங்கம் தூரத்திலேயே சிங்கத்தை பார்த்துவந்த மானானது தன்னுடைய உயிரை காத்து கொள்வதற்காக அந்த காட்டில் மிகவும் வேகமாக ஓடிமறைந்து விட்டது அந்த மானை பிடிக்கமுடியாமல் தோல்வியுடன் திரும்பியசிங்கமானது சிறிய முயலையாவது பிடித்து தின்று பசிமயக்கத்தை சிறிது குறைத்து கொள்வோம் என திரும்பி பார்த்தால் முயலும் ஏற்கனவே ஓடி மறைந்துவிட்டிருந்தது அடடா கையில் கிடைத்த கலாக்காயை விட்டுவிட்டு உயரத்திலிருக்கும் பலாக்காய்க்கு ஆசைபட்டதால் மொத்தத்தில் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடக்க-வேண்டியதாகிவிட்டதே என சோர்வுடனும் பசிமயக்கத்துடனும் தன்னுடைய குகைக்குள் சுருண்டுபடுத்துவிட்டது சிங்கம்

செவ்வாய், 4 ஜூன், 2019

தவறான புரிதல்


சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முடிவெட்டும் கடைக்கு ஒருநாள் வயதான மனிதர் ஒருவர் சென்றார் அவருக்கு அந்த கடைகாரர் அழகாக முடிவெட்டிமுடித்தபின்னர் அந்த வயதான மனிதர் எவ்வளவு தொகை தரவேண்டும் என கோரி தன்னுடை சட்டைபையிலிருந்து பணத்தைஎடுத்து கொடுத்தார் உடன் இவர் மிவும் வயதானவர் என்பதால்" நன்றி! ஐயா நான் சமுதாய சேவைக்காக கட்டணமெதுவும் வாங்குவதில்லை அதனால் தொகைஎதுவும் தேவையெில்லை" என வாங்காமல் மறுத்துவிட்டார் அதனால் அந்த வயதான மனிதரும் "சரி தம்பி!” என தன்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்றார் அதற்கு மறுநாள்காலையில் அந்த முடிவெட்டும் கடைக்காரர் தன்னுடைய கடையின் பூட்டினை திறக்கும்போது "தங்களின் சமுதாய சேவைக்கு மிக்க நன்றி!” என்ற அட்டையும் அதனோடு கூடவே டஜன் கணக்கான கேக்குகளும் இருந்தன அதனை கண்ணுற்றதும் மிகவும் நெகிழ்ச்சியுடன் அன்றைய பணியை துவங்கினார். அதற்டுத்து ஒருசிலநாட்கள் கழித்து மற்றொரு வயதான மென்பொருள் பொறியாளர் அதே கடைக்கு வந்தார் அவருக்கு அந்த கடைகாரர் அழகாக முடிவெட்டிமுடித்தபின்னர் அந்த வயதான மனிதர் எவ்வளவு தொகை தரவேண்டும் என கோரி தன்னுடை சட்டை-பையிலிருந்து பணத்தைஎடுத்து கொடுத்தார் உடன் இவர் மிவும் வயதானவர் என்பதால் "நன்றி ஐயா! நான் சமுதாய சேவைக்காக கட்டணமெதுவும் வாங்குவதில்லை அதனால் தொகைஎதுவும் தேவையெில்லை" என வாங்காமல் மறுத்துவிட்டார் அந்த வயதானமென்பொருள் பொறியாளரும் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்றார்அதற்கடுத்த நாள் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளதன்னுடைய முடிவெட்டும் கடைக்கு அந்த கடைக்கு வந்தபோது அவருடைய கடையின் வாயிலில் டஜன் கணக்கான மென்பொருள் பொறியாளர் கள் கட்டணமில்லாமல் முடிவெட்டிகொள்வதற்காக வரிசையாக நின்று கொண்டிருந்தனர்

சனி, 1 ஜூன், 2019

மரியாதை என்பது இருவழிப்பாதை போன்றது


நமது இந்திய நாட்டின் எல்லையோரத்தில் காவல்பணியாற்றிடும் தரைப்படையில் புதியதாக சேர்ந்த காவல்படை அலுவலர் ஒருவர் ஒருநாள் தன்னுடைய கட்டுப்-பாட்டில் உள்ள அனைத்து காவலர்களும் விழிப்புடன் பணிபுரிகின்றார்களா என சுற்றி பார்த்துகொண்டேவந்தார்.அப்போது ஒரு காவலர் மட்டும் இந்த இளம்-காவல்படை அலுவலர் வரும்போது மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றுகொண்டிருந்தார் அதனை கண்ணுற்ற நமது இளம்காவல்படை அலுவலர் ' மரியாதை நிமித்தமான வணக்கம்கூடநமக்கு செய்யாமல் நின்றுகொண்டிருப்பதா' என கோபமுற்று "ஏன் எனக்கு வணக்கம் செலுத்தாமல் நின்று கொண்டுள்ளாய்!” என அந்த காவலரிடம் வினவினார். அதனை தொடர்ந்து "ஐயா! நீங்கள் வருவதை நான் பார்க்கவில்லை" எனஅந்த காவலர் பதில் கூறினார்.அதனால் மிகவும் கோபமுற்று "அப்படியா! என்னுடைய வருகை அவ்வளவு அலட்சியமாகி விட்டதா! இந்த செயலிற்கு தண்டனையாக நீ எனக்கு100 முறை வணக்கம் செலுத்த வேண்டும்" என அந்த இளம்காவல்படை அலுவலர் உத்திரவிட்டார். அப்போது அந்த வழியாக தரைப்படை தலைமை அலுவலர் ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்ஸா சென்று கொண்டிருந்தார் இந்த செயல்களை பார்த்து தன்னுடைய வாகணத்தை நிறுத்தம் செய்து "இங்கு என்ன பிரச்சினை?” என வினவினார் "அதுஒன்றும் இல்லை,ஐயா! நான் வழக்கம்போன்று அனைத்து காவலர்களும் விழிப்புடன் பணிபுரிகின்றார்களா என சுற்றி பார்த்து கொண்டு வந்தேன் இந்த காவலர் மட்டும் நான் வரும்போது எனக்கு வணக்கம் செலுத்தாமல் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தார் அதனால் இவருக்கு தண்டனையாக எனக்கு100 முறை வணக்கம் செலுத்தவேண்டும்" என க்கூறிக்கொண்டிருந்தேன். என்றார் இளம்காவல்படை அலுவலர். "அப்படியா சரிசரி அந்த காவலர் வணக்கம் செலுத்திடும்போது பதிலுக்கு நீங்களும் வணக்கம் செலுத்துங்கள்" என தரைப்படை தலைமை அலுவலர் இளம்காவல்படை அலுவலருக்கு ஆலோசனை கூறிச்-சென்றார். அதனை தொடர்ந்து அடுத்த இரண்டு மணிநேரமாக அந்த காவலர் 100முறைஅந்த இளம்காவல்படை அலுவலருக்கு வணக்கம் செய்தார் அதனை ஏற்று அந்த இளம்காவல்படை அலுவலரும் 100முறை பதில் வணக்கம் செய்தார் .மரியாதை என்பது இருவழிப்பாதை போன்றது எனஅந்த இளம்காவல்படை அலுவலர் இந்த செயலின் வாயிலாகதெரிந்து கொண்டார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...