சனி, 8 ஜூன், 2019

கையில் கிடைத்த கலாக்காயை விட்டுவிட்டு உயரத்திலிருக்கும் பலாக்காய்க்கு ஆசைபடவேண்டாம்


ஒரு சமயம் காட்டில் வாழும் சிங்கம் ஒன்று காடுமுழுவதும் அலைந்து திரிந்தும் இரை எதுவும் கிடைக்காததால் மிகவும் சோர்வுற்று தன்னுடைய குகைக்கு வெறும் கையுடன் திரும்பியது பசி களைப்பில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தபின்னர் மீண்டும் வேட்டையாடுவதற்காக மிகவும் பசியோடு தன்னுடைய குகையைவிட்டு வெளியில் வந்து சுற்றி பார்த்தபோது ஒரு சிறுமுயல் மட்டும் அதனுடைய கண்ணில் பட்டது அடச்சீ யானை பசிக்கு சோளப்பொறி போன்று நம்முடைய பசிக்கு இது பத்தாதே என்னசெய்வது சரி இருந்தபோதிலும் இந்த சிறியமுயலை அடித்து சாப்பிடுவோம் நம்முடைய பசி களைப்பும் சிறிது குறையும் அதன்பின்னர் வேட்டையாடுவதற்காக கிளம்பலாம் என முடிவுசெய்து அந்த சிறியமுயலை பிடித்திட முயலும்போது கொழுகொழுவென இருக்கும் மான்ஒன்று அந்த வழியாக கடந்து செல்வதை சிங்கம் கண்டது உடன் இந்த சிறிய முயலை பிடித்து சாப்பிட்டால் பசி சிறிதுதான் குறையும் அதற்கு பதிலாக அந்த மானை பிடித்தால் இரண்டு மூன்று வேளைக்கு போதுமானதாக இருக்கும் அதனால் அந்த மானையே பிடிப்போம் என கைக்கு எட்டியதூரத்தில் இருந்த சிறிய முயலை பிடித்திடாமல் மானை பிடித்திட பாய்ந்து சென்றது சிங்கம் தூரத்திலேயே சிங்கத்தை பார்த்துவந்த மானானது தன்னுடைய உயிரை காத்து கொள்வதற்காக அந்த காட்டில் மிகவும் வேகமாக ஓடிமறைந்து விட்டது அந்த மானை பிடிக்கமுடியாமல் தோல்வியுடன் திரும்பியசிங்கமானது சிறிய முயலையாவது பிடித்து தின்று பசிமயக்கத்தை சிறிது குறைத்து கொள்வோம் என திரும்பி பார்த்தால் முயலும் ஏற்கனவே ஓடி மறைந்துவிட்டிருந்தது அடடா கையில் கிடைத்த கலாக்காயை விட்டுவிட்டு உயரத்திலிருக்கும் பலாக்காய்க்கு ஆசைபட்டதால் மொத்தத்தில் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடக்க-வேண்டியதாகிவிட்டதே என சோர்வுடனும் பசிமயக்கத்துடனும் தன்னுடைய குகைக்குள் சுருண்டுபடுத்துவிட்டது சிங்கம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...