சனி, 16 செப்டம்பர், 2023

குயவன் அல்லது நகைக்கடைக்காரன் - யார் பெரிய முட்டாள்

 மண்பானை செய்திடும் ஒரு குயவன் தான் கொண்டுசென்ற பானைகளை யெல்லாம் விற்றுவிட்டு சந்தையிலிருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் போது, வழியில் கண்ணாடி போன்று பளபளப்பான கல்ஒன்றினைக் கண்டார்.   தனது குழந்தைகளுக்கு இந்த பளபளப்பான கல்லை  விளையாடி மகிழ்வதற்காக கொடுக்கலாம் என்று நினைத்து அதை தன்னுடைய கையலெடுத்தார். முற்காலத்தில் பொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு செல்வதற்காக கழுதைதான் பயன்பட்டது  இந்த கல்லை எவ்வளவுதூரம் கைகளிலேயே எடுத்துக் கொண்டு வருவது அதற்கு பதிலாக தன்னுடைய கழுதையின் கழுத்தில் கட்டி கொண்டு வருவது நல்லது என்று நினைத்தார். மேலும் அது கழுதைக்கு ஒருஅணிகலண் போன்று  இருக்கும் என எண்ணி அந்த கல்லை தன்னுடைய கழுதையின் கழுத்தில் கட்டிடுவதற்கான ஒரு கயிற்றை தேடி கண்டுபிடித்தார் தொடர்ந்துஅந்த பளபளப்பான கல்லை கழுதையின் கழுத்தில் கட்டியபின் அந்த கழுதையுடன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். நகைக்கடைக்காரன் ஒருவன் அதே வழியில் ஒரு குதிரையின்மீது அமர்ந்து பயனம் சென்று கொண்டிருந்தார். அவரது கண்கள் கழுதையின் கழுத்தில் விழுந்தது, கழுதையின் கழுத்தில் இவ்வளவு அழகான வைரம் தொங்கவிடப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதனால் உடன் அந்த நகைக்கடைக்காரன் தன் குதிரையை நிறுத்தி, "உன் கழுதையின் கழுத்தில் தொங்கும் கல்லின் விலை என்ன?" என்று கேட்டார். குயவன் அதிகநேரம் செலவிட்டு, "எட்டு அணாவுக்கு (பழைய இந்திய நாணயம்) விற்கலாம்" என்று பதிலளித்தார். அதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்த வைரக்கல்லை அந்த குயவன் எட்டு அணாவுக்கு விற்கத் தயாராக இருந்ததால்!அந்தக் கல் விலைமதிப்பற்ற வைரம் என்பது குயவனுக்குத் தெரியாது என்பதை நகைக்கடைக்காரன் முழுமையாகப் புரிந்துகொண்டார்.  ஆனால் அந்த நகைக் கடைக்காரன் பேராசை கொண்டார். அதனால்  குயவனிடம், °இது வெறு கல்தான் இந்தக் கல்லை எட்டு அணாவுக்கு விற்பதற்கு வெட்கமாக இல்லையா?  நான்கு அணா மட்டுமே என்னால் கொடுக்க முடியும் இந்த கல்லை எனக்கு தருகின்றாயா?" என வினவினார். நான்கு அணாவுக்கு இந்தக் கல்லை கழுதையின் கழுத்தில் இருந்து யார் அகற்றி கொடுப்பார்கள் என்று நினைத்த குயவன், "அப்படியானால் அந்த கல் கழுதையின கழுத்தில் அப்படியே இருக்கட்டும். நான் அதை விற்க விரும்பவில்லை" என்று பதிலளித்தார். அதனால் நகைக்கடைக்காரன் தன்னுடைய பயனத்தினை தொடர்ந்தார் சிறிது நேரம் கழித்து குயவன் இன்னும் இரண்டு அணா சேர்த ஆறு அணா அல்லது நான்கு அணாவுக்கு கூட விற்றுவிடலாம் என்று முடிவுசெய்து கொண்டிருந்தார் . சிறிது நேரபயனத்திற்கு பின்னர் அந்த நகைக்கடைக்காரன் மீண்டும் திரும்பி வந்து அந்த கல்லினை  குயவன் என்னவிலை சொல்கின்றாரோ அந்த விலைக்கு தான் வாங்கி கொள்வதாகவும் தனக்கு அந்த கல்லை விற்பனைசெய்திடுமாறும் கோரினார். அதற்கு குயவன், "நீங்கள் போன பிறகு இன்னொருவர் வந்து அந்தக் கல்லுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார். அதனால் அவருக்கு நான் விற்றுவிட்டேன்" என்றார். இதைக் கேட்ட நகைக் கடைக்காரன், "முட்டாளே! பைத்தியக்கார குயவனே! என்ன செய்தாய் தெரியுமா? கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரத்தை ஒரு ரூபாய்க்கு விற்றுவிட்டாயே" என்று கோபத்துடன் கத்தினார். இதைக் கேட்ட குயவன் சிரிக்க ஆரம்பித்தான். அவர், "நான் ஒரு குயவன். அது கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரம் என்று எனக்குத் தெரியாது, எனக்கு ஒரு ரூபாய் கிடைத்தது, அதுவே அந்த கல்லுக்கு போதுமானது என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் ஒரு நகைக்கடைக்காரர்,  அதை எட்டு அணாவுக்கு அல்லது ஆறாணவிற்கு கூட  வாங்க தயாராகஇல்லை!அதனால் நீங்கள் கோடிகணக்கான வருமானத்தினை இழந்தீர்கள், நான் அன்று, ஏனென்றால் அது இவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று எனக்குத் தெரியாது". எ்ன்றார். குயவன் ஒரு முட்டாள்தான், ஆனால் அது அறியாமையால் ஏற்பட்டது, ஆனால் நகைக்கடைக்காரனும் ஒரு பெரிய முட்டாளாக மாறிவிட்டான், ஆனால் அவனுடைய பேராசையால் வருமானத்தினை இழந்தான்.  என்ன வாசகரே இதில் யார் பெரிய முட்டாள் என்று நீங்களே முடிவுசெய்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...