தனது வீட்டின் வெளியே தனியே அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியிடம் "அம்மா, உங்கள் மகன் பண அனுப்பியுள்ளார்" என்று ஒரு தபால்காரர் கூறினார்.
தபால்காரரைப் பார்த்ததும் அந்த அம்மாவின் கண்கள் மின்னியது.
அந்த அம்மா “மகனே முதலில் நான் என் மகனிடம் பேசவேண்டும்” என்றாள்.
அந்த அம்மா நம்பிக்கையுடன் தபால்காரரைப் பார்த்துக் கொண்டிருந்தார், ஆனால் தபால்காரர் , "அம்மா எனக்கு அவ்வளவு நேரம் இல்லை, ஒவ்வொரு முறையும் உங்கள் மகனை நான் அழைக்க முடியவில்லை",எனக்கூறி அதைத் தவிர்க்க முயன்று அங்கிருந்து செல்ல விரும்பினார், ஆனால் அந்தஅம்மா , “மகனே! அதற்கு சிறிது காலம் பிடித்தாலும் பரவாயில்லை எனக்காக உதவிசெய்திடு.”
என தபால்காரரை நச்சரிக்க ஆரம்பித்தார். "அம்மா, நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் மகனுடன் பேசுவதற்காக அழைத்திடுமாறு வலியுறுத்துகின்றீர்கள். ஆனால் என்னுடைய பணிச்சூழல் என்னால் முடியவில்லை " என தபால்காரர் பதிலளித்தார்.
இவ்வாறு கூறிவிட்டு தபால்காரர் அம்மாவிடம் பணம் கொடுப்பதற்கு முன் கைபேசியில் ஒரு எண்ணை தொடர்புகொள்ளமுயன்றார்.
"இந்தாருங்கள் அம்மா ஆனால் அதிகம் நேரம் பேசாதீர்கள் நான் அடுத்த பணியை தொடரவேண்டும்" என்று தபால்காரரர் தன்னுடைய கைபேசியை அந்த வயதான அம்மாவிடம் கொடுத்தார்.
அந்த வயதான அம்மா தபால்காரரின் கையிலிருந்து கைபேசியை வாங்கி. ஒரு நிமிடம் தன் மகனுடன் பேசி மிகவும் மகிழ்ந்தார் சுருக்கம் நிறைந்த அந்த அம்ம்வின் முகத்தில் புன்னகை பரவியது.
“இந்தாருங்கள் அம்மா ! உங்களுடைய மகன் அனுப்பிய புணம் ஆயிரம் ரூபாய்“ ,எனக்கூறியவாறு, தபால்காரர் பத்து நூறு ரூபாய் தாட்களை அந்த அம்மாவிடம் கொடுத்தார்.
பணத்தை எண்ணி முடித்த பின்அந்த அம்மா ஒருநூறு ரூபாய் தாளை எடுத்து தபால்காரரிடம் கொடுத்து, “மகனே இதனை நீ வைத்துக்கொள்” என்றார்.
உடன் தபால்காரர் "ஏன் அம்மா? உங்களுடைய மகன் அனுப்பிய பணத்தில்நான் நூறுரூபாய் வாங்கி கொள்ளவேண்டும்" என சந்தேகம் கேட்டார்.
உடன் அந்த வயதானஅம்மா சிரித்துக்கொண்டே, "இந்த பணத்தினை எனக்கு தேடிவந்த தருவதைத் தவிர, என்னையும் என் மகனிடம் உன்னுடைய கைபேசி வாயிலாக பேச அனுமதிக்கின்றாய் அல்லவா. அதற்குப் பணம் செலவாகும். இல்லையா? அதனால் வைத்துக் கொள்." என பதிலளி்த்தார்
தபால்காரர் மறுத்துக்கொண்டே இருந்தார், ஆனால் அம்மா வலுக்கட்டாயமாக ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுத்துவிட்டு,நீயும் உன்குடும்பத்தாரும் நன்றாக இருக்கவேண்டும் எனக்கூறியவாறு தன்னுடைய வீட்டிற்குள் சென்றார்.
பின்னர்தபால் காரர் அங்கிருந்து சிறிதுதூரம் நடந்தவுடன், திடீரென்று யாரோ அவருடைய தோளை தொட்டனர்.
தபால்காரர் திரும்பிப் பார்த்தபோது, எதிரே கைபேசி்விற்றிடும் கடை நடத்தி வருபவர் நிற்பதைக் கண்டார்.
"தம்பி, எப்படி இருக்கீங்க?", என்று தபால்காரர் கேட்டார்.
அவர் "நான் இங்கு ஒருவரைச் சந்திக்க வந்தேன், ஆனால் நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். அண்ணா, நீங்கள் ஏன் ஒவ்வொரு மாதமும் இவ்வாறுச் செய்கிறீர்கள்?" என்றார் தபால்காரரிடம்.
"நான் என்ன செய்தேன்?", பதற்றத்துடன் தபால்காரர் கேட்டார்.
அவர், "மாதாமாதம் அந்த வயதான அம்மாவிற்கு உன்னுடைய பணத்தினை கொடுக்கின்றீர்கள். அதுமட்டுமில்லாம அந்த அம்மாவுடை மகனுடன் கைபேசியில்பேசவும் பணம் தருகின்றீர்கள்!! ஏன்?" என வினவினார்
அவர் அவ்வாறான கேள்வியை ஏழுப்பியதும் தபால்காரர் சற்றுத் தயங்கினார், ஆனால் பிறகு, "நான் அந்தஅம்மாவிற்கு பணம் கொடுக்கவில்லை, அந்த பணத்தை என்னுடைய அம்மாவிடம் தான்கொடுக்கிறேன்."
அதைக் கேட்டு அவருக்கு மிகஆச்சரியமாக இருந்தது.
தபால்காரர் தொடர்ந்தார், "அவரது மகன் பணம் சம்பாதிக்க தொலைதூரத்திற்குச் சென்றார், ஒவ்வொரு மாதமும் தனது தாயாருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவார், ஆனால் ஒரு நாள், பணத்திற்கு பதிலாக, அவரது மகனின் நண்பரின் கடிதம் அம்மாவின் பெயரில் வந்தது. ." எனக்கூறினாற்
அவர்மிக ஆர்வமாகி, "என்ன கடிதம்? அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?" என வினவினாபர்
"அவரது மகன் நோய்த்தொற்று காரணமாக உயிர் இழந்தார். தன்னுடைய வாழ்க்கை செலவுக்காக தன்னுடைய மகன் அனுப்புகின்ற பணற்காகக் காத்திருந்த அந்தஅம்மாவிடம் அதைச் சொல்லத் துணியவில்லை, . அதனால், நான் மாதந்தோறும் அந்த அம்மாவிற்கு பணம் வருவதை போன்று கொடுத்துவருகின்றேன்." எனததபால்காரர் கூறினார்
"ஆனால் அவர் உன்னுடைய அம்மா இல்லையே..", என்றார் அவர்.
தபால்காரர், "இதேபோன்று நானும் ஒவ்வொரு மாதமும் என் அம்மாவுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவேன், ஆனால் என்னுடைய அம்மா உயிருடன் இல்லை" என,க்கூறிய தபால்காரரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
மாதந்தோறும் தபால்காரர் ஆயிரம் ரூபாய் தன்னுடைய தாய்க்கு அனுப்புவதை போன்று வழங்குவதையும் அந்த வயதான அம்மா தபால்காரரிடம் பணம் வாங்கிக்கொண்டு தபால் காரரை தன்னுடைய மகனை போன்று பேசி பழகியதையும் கண்டு அவர் வாயடைத்துப் போனார்.
ஞாயிறு, 10 செப்டம்பர், 2023
தபால்காரரும்வயதான பெண்மணியும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக