ஞாயிறு, 26 ஜூன், 2022

பழங்களின் விலை-ஆதரவற்றவர்களின்உதவிக்கான வழியைக் கண்டறிதல்

 ஒரு மனிதன் பழக்கடைை ஒன்றிற்கு பழங்கள் வாங்கச் சென்றார். அவர் கடைக்காரரிடம், "வாழைப்பழம் என்னவிலை?, ஆப்பிள் என்ன விலை ?" என வினவினார்.உடன் பழக்கடைக்காரர் ,"வாழைப்பழம் டசன் 20ரூபாய், ஆப்பிள் கிலோ 100ரூபாய்." என பதலளித்தார்.அதே நேரத்தில், ஒரு பெண் அந்த பழக்கடைக்கு வந்து, "அண்ணா, எனக்கு ஒரு கிலோ ஆப்பிள்  ஒரு டஜன் வாழைப்பழம் வேண்டும். அவை என்ன விலை ?" என வினவினார் .அதனை தொடர்ந்து அந்த பழக்கடைக்காரர், "வாழைப்பழம் டசன் 5 ரூபாய், ஆப்பிள் கிலோ 25ரூபாய் " என்றார்.

பழக்கடையில் ஏற்கனவே பழங்களின் விலையை கேட்டு நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளர் பழக்கடைக்காரரை கோபமாக கொன்றிடும்மனநிலையுடன் பார்த்தார், இதைக் கவனித்த பழக்கடைகாரர், அவரிடம் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினார்.

அந்தப் பெண் தனக்கு தேவையான பழங்களை எடுத்துக்கொண்டு அவைகளுக்கான விலையைச் செலுத்தியிபின்,  "மிக்க நன்றி அண்ணா, இன்று எங்களுடைய குழந்தைகள் இந்த பழங்களை மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்." என பழக்கடைக்காரரிடம் நன்றிகூறியவாறு மிகமகிழ்ச்சியுடன் கடையை விட்டு வெளியேறினாள்

அந்த பெண் சென்ற பிறகு. பழக்கடைக்காரர் கோபப்பார்வையுடன் ஏற்கனவே காத்துகொண்டிருந்த வாடிக்கை யாளரைப் பார்த்து, "மிக்கநன்றி சகோதரரே, நான்இந்த பழங்களுக்குஉங்களிடம் அதிக விலைகூறி உங்களை ஏமாற்றவில்லை" எனக்கூறத் துவங்கியபின் சிறிது நேரம் நிறுத்தியபின் தொடர்ந்தார், "இப்போது நீங்கள் பார்த்த இந்த பெண் ஒரு ஏழை விதவை, நான்கு குழந்தைகளின் தாய், அவள் எங்களுடைய வீட்டிற்கு அருகில் வசிக்கிறாள், அவளுக்கு உதவ நான் பல முறை முயற்சித்தேன், ஆனால் அவள் யாரிடமிருந்தும் எந்தவொரு உதவியையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதனால்  அவளுக்கு உதவ தற்போதைய இந்த வழியை யோசித்தேன்.  அவள் இந்த பழக்கடைக்கு பழங்கள் வாங்க வரும்போதெல்லாம், நான் அவளுக்கு விலையை குறைத்து பழங்களைக் கொடுக்கிறேன்.  நான் உதவி செய்வதா கவோ, மற்றவர்களைச் சார்ந்து இருப்பதாகவும் அவள் உணர முடியாதவாறு இந்த வழி யமைந்துள்ளது. அவளுக்கு நான் உதவியை வழங்குவதற்கான  இதுதான் சரியான ஒரே வழியாகும் மேலும் அண்ணே, இந்தப் பெண்மணி வாரத்திற்கு ஒருமுறை இந்த பழக் கடைக்கு வரும்போது, அந்தநாளில் , என் கடைவிற்பனையும் கூடுகிறது." என மிக நீண்ட விளக்கமளித்தார்  இதைக் கேட்டு வாடிக்கையாளர்களின் கண்களில் கண்ணீர் பெருகியது, அவர் கடைக்காரரிடம் கைகுலுக்கி பேரம் பேசாமல் மகிழ்ச்சியுடன் பழங்களை வாங்கி சென்றார்.

சனி, 18 ஜூன், 2022

வங்கியின் காசாளரும் வாடிக்கையாளரும்


  ஒருமுறை வங்கியின் கிளைஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர்தன்னுடைய கைச்செலவிற்கு பணம் எடுக்கச் சென்றார். அந்த வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்கு தேவையானவாறு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து காசாளரிடம் கொடுத்தார். காசாளர் வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்காக சமர்ப்பித்த படிவத்தை சரிபார்த்து வாடிக்கையாளர் கோரிய பணத்தைக் கொடுத்தார்.

 வாடிக்கையாளர் பணத்தை வாங்கிய பின்னர் சரிபார்த்தபோது, அவர் படிவத்தில் நிரப்பிய ரூ.1,20,000 க்கு பதிலாக 1,40,000 ரூபாயை காசாளர் கொடுத்ததை உணர்ந்தார். காசாளர் தனது தவறைப் பற்றி அறியாததைக் கண்ட வாடிக்கையாளர், அமைதியாக தனது பையில் அந்த பணத்தை வைத்துக்கொண்டு வங்கியிலிருந்து வெளியேறினார்.

 அது தன்னுடைய தவறோ இல்லையோ ஆனால் அந்த பணத்தை தன்னுடைய பையில் வைத்தவுடன், தனக்குகூடுதலாக கிடைத்த ரூ.20,000ரூபாய் பற்றி கவலைப்பட ஆரம்பித்தார்.

 ஒரு கணம்அந்த  வாடிக்கையாளர் அது நம்முடைய பணமன்று அதனால் கூடுதலாக பெற்ற அந்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று நினைத்தார், ஆனால் அடுத்த நொடியே  தற்செயலாக ஒருவருக்கு அதிகப் பணம் கொடுத்தால் அந்தப் பணத்தைத் திருப்பித் தர யார் முன்வருவார்கள் அதனால்கூடுதலாக கிடைத்த அந்த பணத்தினை அப்படியே வைத்துகொள்வோம்? என  மீண்டும் மாற்றியோசித்தார், அவர் கூடுதலாக கிடைத்த அந்த பணத்தை ஏன் திருப்பித் தர வேண்டும் என்று அவரது மனதில் தோன்றியது, ஆனால்கூடுதலாககிடைத்த பணத்தைத் திருப்பித் தராததற்கு அவரது மனம் மீண்டும் ஏதாவது சாக்குபோக்கு அல்லது காரணத்தைக் கூறி கொண்டிருந்தது.

 ஆனால் அவரது மனசாட்சியின் குரல் உள்ளே இருந்து கொண்டு  யாரோ செய்த தவறை நீ பயன்படுத்திக் கொள்ளக்கூடாது அதனால் கூடுதலாக கிடைத்த அந்த பணத்தினை திருப்பி கொடுத்துவிடு என உறுத்திகொண்டேயிருந்தது 

அதனால் அந்த வாடிக்கையாளர்கூடுதலாக கிடைத்த அந்த பணத்தை வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று முழு நேரமும் யோசித்துக் கொண்டேயிருந்ததால் அவருடைய மனத்தில் அமைதியின்மை அதிகரித்துகொண்டேயிருந்தது.  அவர் நேரத்தைப் பார்த்தார், அது வங்கியை மூடும் நேரம். என்பதை காண்பித்தது

 அதனால் அந்த வாடிக்கையாளர் உடன் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்ட அந்த 20,000 ரூபாயை எடுத்துக்கொண்டு வங்கிக்குத் திரும்பினார். கூடுதலாக கிடைத்த பணத்தைத் திருப்பித் தர முடிவு செய்த உடனேயே, அந்த வாடிக்கையாளரிடைய அமைதியின்மையும் பதற்றமும் குறைய ஆரம்பித்தன

 வங்கியின் பணிநேரம் முடிவடைவதற்குள் வாடிக்கையாளர் வங்கியை அடைந்து காசாளரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

 வாடிக்கையாளர் பணத்தை திருப்பி கொடுத்ததும், காசாளர் நிம்மதி பெருமூச்சு விட்டார். தொடர்ந்து காசாளர்,  “தம்பி, நீங்கள் எனக்கு ஒரு பெரிய உதவி செய்தீர்கள், ஏனென்றால் நீங்கள் இந்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றால், எனது சம்பளத்தில் இருந்து இந்த பணம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கும். மிக்க நன்றி, இந்த பணத்தை உங்கள் குழந்தைகளுக்கு இனிப்புகள் வாங்க பயன்படுத்திடுக" எனக்கூறி. தனது சட்டைப் பையில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து வாடிக்கையாளரிடம் கொடுத்தார்,

  வாடிக்கையாளர் சிரித்துக் கொண்டே, “சகோதரரே, நான்தான் உங்களுக்கு நன்றி யுள்ளவனாக இருந்து உபசரிப்பு செய்யவேண்டியுள்ளவானக இருக்கிறேன்." எனதக்கூறினார்.

  காசாளர் ஆச்சரியப்பட்டு, "ஆனால் நீங்கள் ஏன் எனக்கு நன்றி தெரிவிக்கின்றீர்கள்? " எனக்கேட்டார

  அதற்கு வாடிக்கையாளர்,  "நீங்கள் தவறுதலாக கொடுத்த 20,000 ரூபாய், ஆனதுநான் என்னை சுயமதிப்பீடு செய்ய எனக்கு ஒரு வாய்ப்பளித்தது. இந்த தவறை நீங்கள் செய்யாமல் இருந்திருந்தால், நான்   என் பேராசையை வென்று அதிலிருந்து வெளியே வருவதன் மூலம் என்னால் வெல்ல முடிந்திருக்காது. . பல மணிநேர என்னுடைய மனப் போராட்டத்திற்குப் பிறகுதான் என்னால் வெற்றி பெற முடிந்தது. இந்த அரிய வாய்ப்புக்கு நன்றி” என்று கூறினார்.


ஞாயிறு, 12 ஜூன், 2022

ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் -அரசனுக்கு சிற்பி விடுத்தசவால்..!

 அது குளிர்காலமாக இருந்ததால், காலையில் சூரியனின் வெப்பம் நன்கு பரவியபின்னர் ஒரு அரசனின் அவை துவங்கியது. மன்னனும் அனைத்து அமைச்சர்களும்,  ஏராளமான பொது மக்களும் அவையில் இருந்தனர்.

 சிறிது நேரம் கழித்து, ஒரு நபர்அந்த அவைக்கு வெளியில் வந்து நின்றுகொண்டு அரசவைக்குள் செல்வதற்கு  அரசவையின் பாதுகாவலர் மூலம்  அந்த அரசனிடம் அனுமதி கோரினார் உடன் மன்னர் அந்த புதிய நபர் அரசவைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கினார்

 அந்த புதிய நபர் அரசவைக்குள்ளே வந்தவுடன், “அரசே,  நான் ஒரு சிற்பி, நான் ஒரு சவாலுடன் இந்த அரசவைக்கு வந்துள்ளேன்.  நான் இந்த சவாலுடன் பல அரசவைகளுக்கு சென்றுள்ளேன், இதுவரை யாராலும்  அந்த சவாலை வெற்றிகொள்ள முடியவில்லை.  அந்த சவாலை இந்த அவையில் கூறுவதற்கு எனக்கு அனுமதித்திடுக ." எனக்கூறினார் 

உடன்  அந்த அரசன், “சிற்பியே அந்த சவாலை கூறிடுக?” என உத்தரவிட்டார்.

 அதனை தொடர்ந்து அந்த சிற்பியானவர், “நான் இரண்டு சிலைகளை தயார் செய்துள்ளேன். ஒன்று வைரத்தால் ஆனது மற்றொன்று கண்ணாடியால் ஆனது. அவ்வாறான இவ்விரண்டு சிலைகளில் எது வைரத்தால் ஆனது என்பதை அடையாளம் கண்டு மிகச்சரியாக கூறவேண்டும். இந்த சவாலுக்கு உங்கள் அரசவையில் உள்ள எவரும் பதிலளிக்கலாம்

 சரியாக கூறினால் வைரச் சிலையை இந்த அரசவைக்கு கொடுத்துவிடுவேன், ஆனால் தவறாக கூறினால் வைரச் சிலையின் மதிப்பிற்கு இணையான பணத்தை எனக்குக் கொடுக்க வேண்டும். ." என தன்னுடைய சவாலை அந்த அரசவையில் கூறினார்

அரசன் அந்த சிற்பியின் சவாலை ஏற்றுக்கொண்டார்,சிற்பியின் இரண்டு சிலைகளும் அரசவையின் மையத்தில் வைக்கப்பட்டன

 அரசவையில் இருந்த அனைவரும் அந்த சிற்பியின்சிலைகள் இரண்டும் வேறுபாடு எதுவும் அறிந்து கொள்ளமுடியாதவாறு ஒரேமாதிரியாக இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தனர்

ஏனெனில் அவ்விரண்டு சிலைகளும் ஒரே மாதிரியாகவும், ஒரே அளவாகவும், ஒரே தோற்றத்துடனும், ஒரே நிறத்துடனும், ஒரே மாதிரியாக ஒளி பிரதிபலிக்குமாறும்  இருந்ததால் அவ்விரண்டிற்கும் இடையே வேறுபாடு எதுவும் கண்டுபிடிக்கமுடியாத நிலையில்  அந்த அவையிலுள்ள அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

 அரசன் ஒவ்வொரு கோணத்திலும் சிலைகளை மீண்டும் மீண்டும் பார்த்தார், ஆனாலும் அந்த அரசனால் எது வைரத்தாலான சிலை எது கண்ணாடியால் ஆன சிலைஎன வேறுபடுத்தி காண முடியவில்லை

அவையிலிருந்த அமைச்சர்களாலும் சரியானதை சொல்லத் தெரியவில்லை.

 ஏனென்றால் அவர்கள் தோற்றால், அரசன் அந்த வைரச்சிலைக்கு சமமான  பணம்  கொடுப்பதோடு மட்டும் முடிவதில்லை அந்த அரசனின்  கௌரவத்தையும் பாதிக்கும். என்பதால் யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.

 சிறிது நேரம் கழித்து, சிற்பி , “இந்த அரசவையிலுள்ள எவராலும் வைரத்திலான சிலை எதுவென்  கூறமுடியவில்லை அதனால் நான் தான் வெற்றிபெற்றவனாக ஆகின்றேன் அரசே வைரச்சிலைக்கு சமமான பணத்தினை எனக்கு கொடுக்கின்றீர்களா ?" எனக்கூறினான்

  சிற்பி அவ்வாறு கூறியதும், அரசவையில் குழுமிபொதுமக்களில் இருந்த ஒரு முதியவர்,  அரசனின் முன்சென்று, “ அரசே நான் இந்த சவாலை ஏற்கிறேன். நான் இவைகளுள் எந்த சிலை வைரச்சிலை எனக்கூறுவதற்கு முயற்சி செய்யலாமா?" என வேண்டினார் உடன் மன்னரும் அம்முதியவருக்கு அனுமதி அளித்தார்

அதனை தொடர்ந்து அம்முதியவர்  இரண்டு சிலைகளையும் சுற்றி பார்த்துவிட்டு கவனமாக அவ்விரண்டு சிலையையும் தொட்டுபார்த்தார். ஒரு நிமிடம் கழித்து. எது வைரச்சிலை என சரியாகச் சுட்டி காட்டினார்

சிற்பியானவர் அம்முதியவர் சுட்டிகாட்டிய சிலையை காண்பித்து , “ இதுதான் வைரச்சிலையா ? " என  கேட்டார் 

முதியவர் நம்பிக்கையுடன், "ஆம் நான் காட்டியதுதான் வைரச்சிலை" என்று பதிலளித்தார்.

 அதற்கு சிற்பி, “ அரசே முதியவர் மிகச்சரியாக வைரச்சிலை எதுவென காட்டிவிட்டார் அதனால்.நான் உறுதியளித்தபடி இந்த வைரச் சிலையை அரச கருவூலத்திற்கு கொடுத்து விடுகிறேன்” என்றார்.

 அந்த அரசவையில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்து முதியவரை வாழ்த்தினர். அரசன்மிகவும் ஆர்வமாக அம்முதியவரிடம், “முதியவரே இதுதான் வைரச்சிலை என உங்களால் எவ்வாறு மிகச்சரியாக அடையாளம் காண முடிந்தது?” என்று கேட்டார்.

 அதற்கு அம்முதியவர் சிரித்துக் கொண்டே, “ அரசே அதுவொன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை  மிகஎளிமையானது. நாம் அனைவரும் வெளியில் சென்றால் நம்முடைய உடலின் மீது சூரிய ஒளி படுகின்றது அதனால் நம்முடைய உடல் வெப்பமடைகின்றது, இவ்விரண்டு சிலைகளும்அவ்வாறே வெளியே சூரிய ஒளி படுமாறு கொண்டுவரப்பட்டு இந்த அரசவையில் வைக்கப்பட்டுள்ளன. அதனால் இவ்விரண்டு சிலையையும் தொட்டேன். வைரத்தால் செய்யப்பட்ட சிலை குளிர்ச்சியாக இருந்தது, ஆனால் கண்ணாடியால் செய்யப்பட்ட சிலை சூடாகஇரு்நதது. அதனால் வைரச்சிலை எதுவென என்னால் கூற முடிந்தது.” எனக்கூறினார்


ஞாயிறு, 5 ஜூன், 2022

நாம் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு செயலும் நிகழ்காலத்திலிருந்து வெளிப்படும்


ஒருமுறை அரசன் ஒருவருக்கு  தனது அமைச்சரின் அறிவாற்றலில் திருப்தியடைய வில்லை. எனவே, அவர் தான்கூறும் செய்தியை அமைச்சரின் வீட்டிற்குச் சென்றுஅவரிடம் கூறும்படி தனது தூதுவருக்கு உத்தரவிட்டார்.  அமைச்சரின் பிறந்தநாளின்போது தனது வீட்டிற்கு அரசனின் செய்தியுடன்தூதுவன் வந்தபோது அமைச்சர் மிகவும் மகிழ்ச்சியடைந்தர்.

அரசனின் தூதுவர், “இன்று மாலையில் அமைச்சர் தூக்கிலிடப்படுவார்” என்ற செய்தியை அமைச்சரிடம் கூறினார் இந்தசெய்தியைக் கேட்டதும் அமைச்சரின் வீட்டிலிருந்த அமைச்சரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகிய அனைவரும் ஆடாது அ்சையாது நின்றுவிட்டனர். அதனைதொடர்ந்து  அங்கு குழுமியிருந்த அமைச்சரின் நண்பர்களும், உறவினர்களும் மிகவருத்தமடைந்து கதறி அழுதனர்

ஆனால் அமைச்சர் மட்டும் இசையையும் நடனத்தையும் அனுபவித்து சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாய் இருந்தார். அவ்வாறான அமைச்சரின் செயல் அரசனின் அந்த உத்திரவானது தனக்கானது இல்லை என்பது போல் இருந்தது

 இதை கண்ட அரசனன் தூதுவர் திகைப்புடன்  “இன்று மாலையில் அமைச்சர் தூக்கிலிடப்படுவார்” என்ற அரசனின் செய்தியை அமைச்சரிடம் மீண்டும்அறிவித்தார்

இரண்டாவதாக அரசனின் தூதுவர் கூறியதைக் கேட்ட அமைச்சர், தூதுவரிடம், “தூதுவரே அரசரக்கு என் சார்பாக நன்றியை கூறிடுக. நான் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக செலவிடுவதற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. நான் இறக்கவேண்டிய நேரத்தினை என்னிடம் முன்கூட்டியே கூறி பெரிய உதவியை எனக்கு அரசர் செய்திருக்கிறார்  இப்போது நான் இறப்பதற்கு முன் மகிழச்சியாக கொண்டாட முடியும். எனவே தூதுவரே அரசருக்கு என் சார்பாக நன்றியை கூறிவிடுக” எனக்கூறிய பின்னர் அமைச்சர் தொடர்ந்து மகிழச்சியுடன் இசைக்கேற்ப நடனம் ஆட ஆரம்பித்தார்.. இதை கண்ட அரசனின் தூதுவர் அமைச்சரின் நடவடிக்கை குறித்து ஒன்றும் புரியமால்  அரசனிடம் அமைச்சரின் செய்தியை கூறிவிடலாம் என திரும்பிசென்றார்.

தூதுவர் அவ்வரசனின் அவையை அடைந்ததும், , “ அமைச்சரிடம் அவருடைய தூக்குத் தண்டனையபற்றிக் கூறினீர்களா? என்னுடைய உத்தரவினை கேட்ட பிறகு அமைச்சரின் எதிர்வினை என்ன?” என்று  அரசன் தூதுவரிடம் வினவினார்

உடன் தூதுவர் , "அரசே உங்களுடைய உத்தரவினை கேட்டபிறகுதான் அமைச்சர் மகிழ்ச்சியுடன் மிகவும் துள்ளிக் குதித்து நடனமாடிக் கொண்டிருக்கின்றார், அவர் சார்பாக உங்களிடம் நன்றி சொல்லும்படியும் என்னிடம்கூறியனுப்பினார்." என பதிலளித்தார்

தனது சொந்த மரணச் செய்தியில் யாராவது மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று அரசனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, உண்மையைத் தெரிந்துகொள்ள அரசனே நேரடியாக மந்திரியின் வீட்டிற்குச் சென்றார். அமைச்சர் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதையும் பாடிக்கொண்டிருப்பதையும் அவ்வரசன் கண்டார்.

மன்னன் அமைச்சரிடம் , “இன்றிரவு உன் மரணம் உள்ளது , ஆயினும் நீ சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டுமிருக்கின்றாய்” என்று கேட்டார்.

அமைச்சர் முதலில்அரசன் தன்னுடைய வீட்டிற்கு வந்ததற்காக நன்றி தெரிவித்துவிட்டு, “இதற்கு முன்பு நான் இவ்வளவு மகிழ்ச்சியில் மூழ்கியதில்லை. ஏனெனில் என்னுடைய சரியான மரண நேரத்தைச் சொல்லி பெரிய உதவி செய்தீர்கள். என்னுடைய  மரணத்தைக் நான் கொண்டாடுவது எனக்கு இப்போது எளிதாகிவிட்டது”. எனக்கூறினார் 

இதைக் கேட்ட மன்னன் வாயடைத்துப் போய் நின்றுவிட்டான், தன் அமைச்சர் நடப்பு காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதையும், மரணத்திற்கு அஞ்சவில்லை என்பதையும் உணர்ந்தார். அரசன் அமைச்சரிடம், “உனக்கு மரணத்தால் வருத்தம் இல்லை என்றால் அது பயனற்றது அதனால் என்னுடைய உத்திரவு நீக்கம்செய்யப்படுகின்றது ." என க்கூறினார் 

கற்றல்: நாம் அனைவரும் அச்சம் நிறைந்த சூழலில் வாழ்கிறோம். ஆனால் நாம் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு செயலும் நிகழ்காலத்திலிருந்து வெளிப்படும் என்பதால் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வது நல்லது

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...