ஞாயிறு, 12 ஜூன், 2022

ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் -அரசனுக்கு சிற்பி விடுத்தசவால்..!

 அது குளிர்காலமாக இருந்ததால், காலையில் சூரியனின் வெப்பம் நன்கு பரவியபின்னர் ஒரு அரசனின் அவை துவங்கியது. மன்னனும் அனைத்து அமைச்சர்களும்,  ஏராளமான பொது மக்களும் அவையில் இருந்தனர்.

 சிறிது நேரம் கழித்து, ஒரு நபர்அந்த அவைக்கு வெளியில் வந்து நின்றுகொண்டு அரசவைக்குள் செல்வதற்கு  அரசவையின் பாதுகாவலர் மூலம்  அந்த அரசனிடம் அனுமதி கோரினார் உடன் மன்னர் அந்த புதிய நபர் அரசவைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கினார்

 அந்த புதிய நபர் அரசவைக்குள்ளே வந்தவுடன், “அரசே,  நான் ஒரு சிற்பி, நான் ஒரு சவாலுடன் இந்த அரசவைக்கு வந்துள்ளேன்.  நான் இந்த சவாலுடன் பல அரசவைகளுக்கு சென்றுள்ளேன், இதுவரை யாராலும்  அந்த சவாலை வெற்றிகொள்ள முடியவில்லை.  அந்த சவாலை இந்த அவையில் கூறுவதற்கு எனக்கு அனுமதித்திடுக ." எனக்கூறினார் 

உடன்  அந்த அரசன், “சிற்பியே அந்த சவாலை கூறிடுக?” என உத்தரவிட்டார்.

 அதனை தொடர்ந்து அந்த சிற்பியானவர், “நான் இரண்டு சிலைகளை தயார் செய்துள்ளேன். ஒன்று வைரத்தால் ஆனது மற்றொன்று கண்ணாடியால் ஆனது. அவ்வாறான இவ்விரண்டு சிலைகளில் எது வைரத்தால் ஆனது என்பதை அடையாளம் கண்டு மிகச்சரியாக கூறவேண்டும். இந்த சவாலுக்கு உங்கள் அரசவையில் உள்ள எவரும் பதிலளிக்கலாம்

 சரியாக கூறினால் வைரச் சிலையை இந்த அரசவைக்கு கொடுத்துவிடுவேன், ஆனால் தவறாக கூறினால் வைரச் சிலையின் மதிப்பிற்கு இணையான பணத்தை எனக்குக் கொடுக்க வேண்டும். ." என தன்னுடைய சவாலை அந்த அரசவையில் கூறினார்

அரசன் அந்த சிற்பியின் சவாலை ஏற்றுக்கொண்டார்,சிற்பியின் இரண்டு சிலைகளும் அரசவையின் மையத்தில் வைக்கப்பட்டன

 அரசவையில் இருந்த அனைவரும் அந்த சிற்பியின்சிலைகள் இரண்டும் வேறுபாடு எதுவும் அறிந்து கொள்ளமுடியாதவாறு ஒரேமாதிரியாக இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தனர்

ஏனெனில் அவ்விரண்டு சிலைகளும் ஒரே மாதிரியாகவும், ஒரே அளவாகவும், ஒரே தோற்றத்துடனும், ஒரே நிறத்துடனும், ஒரே மாதிரியாக ஒளி பிரதிபலிக்குமாறும்  இருந்ததால் அவ்விரண்டிற்கும் இடையே வேறுபாடு எதுவும் கண்டுபிடிக்கமுடியாத நிலையில்  அந்த அவையிலுள்ள அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

 அரசன் ஒவ்வொரு கோணத்திலும் சிலைகளை மீண்டும் மீண்டும் பார்த்தார், ஆனாலும் அந்த அரசனால் எது வைரத்தாலான சிலை எது கண்ணாடியால் ஆன சிலைஎன வேறுபடுத்தி காண முடியவில்லை

அவையிலிருந்த அமைச்சர்களாலும் சரியானதை சொல்லத் தெரியவில்லை.

 ஏனென்றால் அவர்கள் தோற்றால், அரசன் அந்த வைரச்சிலைக்கு சமமான  பணம்  கொடுப்பதோடு மட்டும் முடிவதில்லை அந்த அரசனின்  கௌரவத்தையும் பாதிக்கும். என்பதால் யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.

 சிறிது நேரம் கழித்து, சிற்பி , “இந்த அரசவையிலுள்ள எவராலும் வைரத்திலான சிலை எதுவென்  கூறமுடியவில்லை அதனால் நான் தான் வெற்றிபெற்றவனாக ஆகின்றேன் அரசே வைரச்சிலைக்கு சமமான பணத்தினை எனக்கு கொடுக்கின்றீர்களா ?" எனக்கூறினான்

  சிற்பி அவ்வாறு கூறியதும், அரசவையில் குழுமிபொதுமக்களில் இருந்த ஒரு முதியவர்,  அரசனின் முன்சென்று, “ அரசே நான் இந்த சவாலை ஏற்கிறேன். நான் இவைகளுள் எந்த சிலை வைரச்சிலை எனக்கூறுவதற்கு முயற்சி செய்யலாமா?" என வேண்டினார் உடன் மன்னரும் அம்முதியவருக்கு அனுமதி அளித்தார்

அதனை தொடர்ந்து அம்முதியவர்  இரண்டு சிலைகளையும் சுற்றி பார்த்துவிட்டு கவனமாக அவ்விரண்டு சிலையையும் தொட்டுபார்த்தார். ஒரு நிமிடம் கழித்து. எது வைரச்சிலை என சரியாகச் சுட்டி காட்டினார்

சிற்பியானவர் அம்முதியவர் சுட்டிகாட்டிய சிலையை காண்பித்து , “ இதுதான் வைரச்சிலையா ? " என  கேட்டார் 

முதியவர் நம்பிக்கையுடன், "ஆம் நான் காட்டியதுதான் வைரச்சிலை" என்று பதிலளித்தார்.

 அதற்கு சிற்பி, “ அரசே முதியவர் மிகச்சரியாக வைரச்சிலை எதுவென காட்டிவிட்டார் அதனால்.நான் உறுதியளித்தபடி இந்த வைரச் சிலையை அரச கருவூலத்திற்கு கொடுத்து விடுகிறேன்” என்றார்.

 அந்த அரசவையில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்து முதியவரை வாழ்த்தினர். அரசன்மிகவும் ஆர்வமாக அம்முதியவரிடம், “முதியவரே இதுதான் வைரச்சிலை என உங்களால் எவ்வாறு மிகச்சரியாக அடையாளம் காண முடிந்தது?” என்று கேட்டார்.

 அதற்கு அம்முதியவர் சிரித்துக் கொண்டே, “ அரசே அதுவொன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை  மிகஎளிமையானது. நாம் அனைவரும் வெளியில் சென்றால் நம்முடைய உடலின் மீது சூரிய ஒளி படுகின்றது அதனால் நம்முடைய உடல் வெப்பமடைகின்றது, இவ்விரண்டு சிலைகளும்அவ்வாறே வெளியே சூரிய ஒளி படுமாறு கொண்டுவரப்பட்டு இந்த அரசவையில் வைக்கப்பட்டுள்ளன. அதனால் இவ்விரண்டு சிலையையும் தொட்டேன். வைரத்தால் செய்யப்பட்ட சிலை குளிர்ச்சியாக இருந்தது, ஆனால் கண்ணாடியால் செய்யப்பட்ட சிலை சூடாகஇரு்நதது. அதனால் வைரச்சிலை எதுவென என்னால் கூற முடிந்தது.” எனக்கூறினார்


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...