சனி, 26 ஜூன், 2021

பூனைக்கு யார்மணிகட்டுவது

 
ஒரு ஊரில் ஒரு மளிகை கடை இருந்தது. அந்த மளிகைக் கடையில் ஏராளமான எலிகள் வசித்து வந்தன. அவைகளுக்கு தேவையானஉணவுப்பொருட்கள் ஏராளமாக அந்த கடையில்இருந்தன. அதனால் அவை அந்த கடையில் உள்ள எல்லாவற்றையும் தின்றது மட்டுமல்லாமல் அவைகளை கடித்து குதறி வீணாக்கிவிட்டன, அந்த கடையில் பொருட்களை சேமித்து வைத்திருந்த எல்லா மூட்டைகளையும் கடித்து வீணாக்கின. அதாவது கடையின் ரொட்டி, பிஸ்கட் , பழங்கள் ஆகியவற்றைகடித்து வீணடித்தன. அந்த மளிகை கடைக்காரர் எளிகளின் தொல்லையால் கடையிலுள்ள பொருட்கள் யாவும் வீனாவதை கண்டு மிகவும் கவலைப்பட்டார். எனவே, " ஒரு பூனை வாங்கி மளிகைக்கடையில் வளரத்தால்தான் என்னுடைய மளிகை பொருட்களை சேமிக்க முடியும்" என்று நினைத்தார். அவர் ஒரு நல்ல, பெரிய பூனை ஒன்றினஐ வாங்கி கடையில் வைத்து வளர்த்தார், அந்த பூனையானது எலிகளை வேட்டையாடி அவற்றைக் கொன்றது. அந்த பூனை வந்த பிறகு எலிகளால் இப்போது சுதந்திரமாக அந்த கடையில் வாழமுடியவில்லை. எந்த நேரத்திலும் அந்த பூனை அதங்களை கடித்து சாப்பிட்டுவிடக்கூடும் என்று அவை பயந்தன. எலிகள் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்கு ஏதாவது செய்ய விரும்பின. அதனால் அவை அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தின, அந்த கூட்டத்தில் அவைஅனைத்தும் "நாம் இந்த பூனையின் தாக்குதலிலிருந்து விடுபட வேண்டும். யாராவது ஒரு ஆலோசனையை வழங்க முடியுமா" என்று விவாதித்தன. எலிகள் அனைத்தும் அமைதியாக இருந்தன. ஒரு புத்திசாலித்தனமான சுட்டி எலிமட்டும், "பூனை மென்மையாக நடந்தவருகிறது. அதனால்அந்த பூனை வருவது நமக்குதெரியவில்லை என்பதுதான் பிரச்சினை. அதனால் அந்த பூணையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டினால், அந்த பூனை நம்மை பிடித்து தின்ன நடந்து வரும்போது அதனுடைய கழுத்திலுள்ள மணி அசையும் ஒலி நமக்கு கேட்கும் அந்த மணியின் ஒலியை கொண்டு நாமும் பூனௌ வருகின்றது என நாம் எச்சரிக்கையாக தப்பித்துவிடலாம் . பூனையின் அசைவுகளை நாம் அறிந்து கொள்ள முடியும்" என்றது . "ஆமாம், அதுதான் சரி" என்று எல்லா எலிகளும் ஒன்றாக கூறின. ஒரு வயதான எலி மெதுவாக எழுந்து நின்று, "ஆனால் அந்த மணியை பூனையின் கழுத்தில் யார்க் கட்டுவார்கள்?" என்று சந்தேகம் எழுப்பியிது . கொஞ்சநேரத்திற்கு இந்த கேள்விக்கான பதிலளிக்க யாரும் எழவில்லை. நீதி: வெற்றுத் தீர்வுகள் பயனில்லை.

சனி, 19 ஜூன், 2021

விவேகமான நீதி

 

முன்னொரு காலத்தில் ஒருஅரசனின் அரசவைக்கு இரண்டு பெண்கள் தங்களுக்கு நல்லதொரு தீர்ப்பினை வழங்கிடுமாறு தங்களுக்கிடையிலான ஒரு பிரச்சினையை கொண்டுவந்தனர். அதாவது அவ்விரு பெண்களும் ஒரே குழந்தையை தங்களுடைய குழந்தைதான் என உரிமை கொண்டாடினர் என்பதுதான் அந்த பிரச்சினையாகும் அந்த குழந்தையின் மீதான உரிமை தனக்குதான் என இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். ஒவ்வொருவரும் தான்தான் அந்த குழந்தையின் தாய் என்று சொல்லிக்கொண்டு அந்த அரசனுடைய அவையிலும் சண்டையிட்டுக்கொண்டனர். ஒரு பெண், "அரசே! நான் தான் இந்த குழந்தையின் தாய்" என்றாள். மற்றொருவர் , "அரசே! அவளை நம்பாதீர்கள் அவள் இந்த குழந்தையின் தாய் இல்லை. நான்தான் இந்த குழந்தையின் தாய்" என்றாள். இவ்வாறான சூழலில் . இந்த பிரச்சினையைய எவ்வாறு தீர்வுசெய்வது என அவ்வரசன் மிக அதிக குழப்பமடைந்தார் இருந்த போதிலும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, "அம்மையீர் நீங்கள் இருவரும் ஒரே குழந்தையை உங்களுடைய குழந்தை என ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடுவதால் இந்த பிரச்சினையை தீர்வு செய்வது என்பது மிகக்கடினமான செயலாகும் இருந்தாலும் வழக்கமான நீதி நடைமுறையின் படி என்னுடைய உதவியாளரை அழைத்து இந்த குழந்தையை சரிபாதியாக (இரண்டாக) வெட்டிடுமாறு உத்திரவிடுகின்றேன் நீங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பாதிகுழந்தையை எடுத்து கொண்டு செல்லுங்கள்" என்றார். அந்த அரசினுடைய இவ்வாறான தீர்வினை கேட்டவுடன் அவ்விரண்டு பேர்களுள் ஒரு பெண்மட்டும் இந்த தீர்வினை மகிழ்ச்சியாக ஏற்று "அரசே அவ்வாறு செய்திடுங்கள் " என ஆமோதித்தித்தாள். மற்றொரு பெண்மட்டும் "அரசே! இந்த குழந்தை அவளுக்கு பிறந்ததாகவே இருக்கட்டும். இந்த குழந்தையை மட்டும் அவ்வாறு வெட்டி சமமான இரண்டு பாகமாக பிரிக்கவேண்டாம் எங்கிருந்தாலும் இந்த குழந்தை நன்றாக வாழ்ந்தால் போதும்" என்று அழுதாள். உடன் இவ்வாறு தன்னுடைய உரிமை போனாலும் பரவாயில்லை தன்னுடைய குழந்தை உயிருடனும் நலமுடனும் வாழ்ந்தாள் போதும் என்று அழுகின்றவள்தான்உண்மையான தாய்என அந்த மன்னன் அறிந்துகொண்டார் அதனை தொடர்ந்து அரசன் அந்த தாய்தான் உண்மையான தாயென்று தீர்ப்பளித்தார் மேலும் அந்த குழந்தையின் உண்மையான அந்த தாயிடம் அந்த குழந்தையை எடுத்துசெல்லுமாறு அனுமதித்து உத்திரவிட்டர்.
 நீதி: உண்மைதான் எப்போதும் வெற்றி பெறுகிறது.

சனி, 12 ஜூன், 2021

ஏழை மனிதனின் செல்வம்

 
கந்தன் ஏழுமலை ஆகியஇருவரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கந்தன் ஒரு ஏழை விவசாயி. ஏழுமலை பல்வேறு மனைஅனியங்களின் உரிமையாளர் ஒரு பணக்காரர். கந்தன் ஏழை விவசாயியாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இரவில் தனது வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடவேண்டும் என ஒருபோதும் கவலைப்படுவதில்லை. இரவில் அவருக்கு( கந்தனுக்கு) ஆழ்ந்த தூக்கம் இருந்தது. அவரிடம்( கந்தனிடம்) பணம் இல்லை என்றாலும் அவர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார். ஏழுமலை எப்போதும் மிகவும் பதட்டமாக இருப்பார். இரவில் தனது வீட்டின் அனைத்து கதவுகளும் ஜன்னல்களும்சரியாக மூடப்பட்டுள்ளதாவென மிகவும் சந்தேகத்துடன் சரிபார்த்து கொண்டிருந்தார். அதனால் இரவில் அவரால்(ஏழுமலையால் ) நன்றாக தூங்க முடியவில்லை. யாராவது ஒருவர் தனது பாதுகாப்பினையும் மீறி கதவினைத் திறந்து தனது பணத்தை திருடக்கூடும் என்று அவர் எப்போதும் கவலைப்பட்டுகொண்டேயிருந்தார். ஆயினும் எவ்வாறு பக்கத்துவீட்டு கந்தன் மட்டும் அமைதியான இரவில் தூங்குகின்றார் என பொறாமைப்பட்டார்.அதனை தொடர்ந்து ஒரு நாள், ஏழுமலை என்பவர் கந்தன் என்பவரை அழைத்து , “ நண்பரே. என்னிடம் ஏராளமான செல்வங்கள் குவிந்துள்ளன. உன்மையில் நீங்கள் வறுமையில் வாழ்வதை காண என்னுடைய மனம் பொறுக்கவில்லை. எனவே, இந்தாருங்கள் பணம் இந்த பணத்தை கொண்டு வறுமை இல்லாமல் செழிப்புடன் வாழ்ந்திடுங்கள். "என கூறிஅவருக்கு(கந்தனுக்கு) ஒரு பெட்டிநிறைய பணத்தை கொடுத்தார் .அவ்வாறு ஏழுமலை தனக்கு ஒரு பெட்டிநிறைய பணம் கொடுத்ததால் கந்தன் மிகுந்த மகிழ்ச்சியானார். மேலும் அவர்(கந்தன்) அந்த நாள் முழுவதும் மிகவும்மகிழ்ச்சியாக இருந்தார். இரவு வந்தது. கந்தன் வழக்கம் போல் வீட்டு கதவுகள் எதையும் மூடாமல் படுக்கைக்குச் சென்றார். ஆனால், இன்று, அவரால்(கந்தனால்) தூங்க முடியவில்லை. இன்று ஏழுமலை தன்னிடம் பெட்டிநிறைய கொடுத்த பணம் இருப்பதால் அந்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வீட்டின் அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் மூடினார். இருந்தாலும் தூங்க முடியவில்லை. அவர்(கந்தன்) அந்த பணப்பெட்டியைதன்னுடைய படுக்கைக்கு அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். சிறிது கண்ணயர்ந்தால் யாராவது ஒரு திருடன் கதவை திறந்து கொண்டு வந்து அந்த பணத்தை எடுத்து சென்றுவிட்டால் என்னாவது என அவர்(கந்தன்) கலங்கியவாறு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தார். பொழுதுவிடிந்ததும் உடன், கந்தன் ஏழுமலை கொடுத்த அந்த பணப்பெட்டியை எடுத்துகொண்டு ஏழுமலையின் வீட்டிற்கு சென்றார். , “அன்புள்ள நண்பரே, நான் ஏழைதான். ஆனால், நான் இதுவரையில் தினமும் இரவில் மனநிம்மதியாக மிகமகிழ்ச்சியுடன் தூங்கினேன் நீங்கள் நேற்று எனக்கு கொடுத்த உங்களுடைய ள் பணம் என்னிடமிருந்து மகிழ்ச்சியையும் தூக்கத்தையும் அமைதியைப் பறித்தது. அதனால் தயவுசெய்து உங்கள் பணத்தை திரும்பப் பெற்றுகொள்ளுங்கள். " எனக்கூறியவாறு அவர்(கந்தன்) அந்த பணப்பெட்டியை எழுமலையிடம் கொடுத்தார். நீதி: பணத்தால் எல்லாவற்றையும் பெற முடியாது.

சனி, 5 ஜூன், 2021

எவ்வாறு சரியான நபரை தேர்ந்தெடுப்பது

 
முன்னொருகாலத்தில் ஒரு மன்னன் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். பல்வேறு சிறந்த அறிஞர்களை நியமித்து அவர்களுக்கு அனைத்து கலைகளையும் கற்பிக்கசெய் தார். ஒரு சில வருட கற்றலிற்குப் பிறகு, மன்னர் மோசமாக நோய்வாய்ப்பட்டார். எனவே, அவர் தனக்கு பிறகு தனது நாட்டை ஆள்வதற்காக அடுத்த அரசனை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்காக அவர் தனது மகன்களின் திறன்களை பரிசோதிக்க விரும்பினார். அவர் தன்னுடைய மகன்கள் இருவரையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக காலியான அறை ஒன்றினை கொடுத்தார். , “நீங்கள் விரும்பும் எந்தவொரு பொருளையும் கொண்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நிரப்பலாம் ஆனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட அறையானது முழுமையாக நிரம்பியிருக்க வேண்டும். அவ்வாறு நிரப்பபடுகின்ற பொருளானது எதுவாகவும் இருக்கலாம்! ஆனால் காலியாக இருக்ககூடாது, மேலும் நீங்கள் யாரிடமிருந்தும் இதற்கான ஆலோசனையைப் பெறக்கூடாது! " என்ற நிபந்தனைகளுடன் தன்னுடைய மகன்களுக்கு உத்திரவிட்டார். அடுத்த நாள் மன்னர் பெரியவமகனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றார். அந்த அறை முழுவதுமாக வைக்கோல் நிரம்பியிருந்தது. மூத்த மகனின் முட்டாள்தனத்தைப் பற்றி மன்னர் பெருமூச்சு விட்டார். அவர் இளைய மகனின் அறைக்குச் சென்றார். ஆனால் அது மூடப்பட்டிருந்தது. மன்னர் அறையின் கதவைத் தட்டினார். இரண்டாவது மகன் அறையின் கதவை திறந்து தனது தந்தையை உள்ளே வருமாறு கோரினார்.பின்ன்ர் தன்னுடைய தந்தை அறைக்குள் வந்ததும் மீண்டும் கதவை மூடினார். அறைமுழுவதும் இருள் ஆக இருந்தது, அரசன் தனது இரண்டாவது மகனிடம் "இந்த இருளைத்தான் உனக்கு ஒதுக்கப்பட்ட அறைமுழுவதும் நிரப்பி உள்ளாயா ", என மிகவும் கோபமாக கத்தினார். ஆனால் இரண்டாவது மகன் "தந்தையே சிறிது பொறுத்துகொள்ளுங்கள் " எனக்கூறி தீக்குச்சியை பற்றவைத்து அதன்வாயிலாக ஒரு அகல்விளக்கினை எரியச்செய்தார் இப்போது அறை முழுவதும் அகல்விளக்கின் ஒளியால் நிரப்பப்பட்டுவிட்டது , அதனை தொடர்ந்து “அப்பா நீங்கள் கூறியவாறு நான் இந்த அறைமுழுவதும் அகல்விளக்கின்ஒளியால் நிரப்பிவிட்டேன்!” எனஇரண்டாவது மகன் கூறினார். இப்போது மன்னர் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டார், தனது மகனை பெருமையுடன் கட்டிப்பிடித்தார். தனக்குப் பிறகு தன்னுடைய நாட்டை ஆளுவதற்கு இளைய மகன்தான் சரியான நபராக இருப்பார் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...