சனி, 12 ஜூன், 2021

ஏழை மனிதனின் செல்வம்

 
கந்தன் ஏழுமலை ஆகியஇருவரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கந்தன் ஒரு ஏழை விவசாயி. ஏழுமலை பல்வேறு மனைஅனியங்களின் உரிமையாளர் ஒரு பணக்காரர். கந்தன் ஏழை விவசாயியாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இரவில் தனது வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடவேண்டும் என ஒருபோதும் கவலைப்படுவதில்லை. இரவில் அவருக்கு( கந்தனுக்கு) ஆழ்ந்த தூக்கம் இருந்தது. அவரிடம்( கந்தனிடம்) பணம் இல்லை என்றாலும் அவர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார். ஏழுமலை எப்போதும் மிகவும் பதட்டமாக இருப்பார். இரவில் தனது வீட்டின் அனைத்து கதவுகளும் ஜன்னல்களும்சரியாக மூடப்பட்டுள்ளதாவென மிகவும் சந்தேகத்துடன் சரிபார்த்து கொண்டிருந்தார். அதனால் இரவில் அவரால்(ஏழுமலையால் ) நன்றாக தூங்க முடியவில்லை. யாராவது ஒருவர் தனது பாதுகாப்பினையும் மீறி கதவினைத் திறந்து தனது பணத்தை திருடக்கூடும் என்று அவர் எப்போதும் கவலைப்பட்டுகொண்டேயிருந்தார். ஆயினும் எவ்வாறு பக்கத்துவீட்டு கந்தன் மட்டும் அமைதியான இரவில் தூங்குகின்றார் என பொறாமைப்பட்டார்.அதனை தொடர்ந்து ஒரு நாள், ஏழுமலை என்பவர் கந்தன் என்பவரை அழைத்து , “ நண்பரே. என்னிடம் ஏராளமான செல்வங்கள் குவிந்துள்ளன. உன்மையில் நீங்கள் வறுமையில் வாழ்வதை காண என்னுடைய மனம் பொறுக்கவில்லை. எனவே, இந்தாருங்கள் பணம் இந்த பணத்தை கொண்டு வறுமை இல்லாமல் செழிப்புடன் வாழ்ந்திடுங்கள். "என கூறிஅவருக்கு(கந்தனுக்கு) ஒரு பெட்டிநிறைய பணத்தை கொடுத்தார் .அவ்வாறு ஏழுமலை தனக்கு ஒரு பெட்டிநிறைய பணம் கொடுத்ததால் கந்தன் மிகுந்த மகிழ்ச்சியானார். மேலும் அவர்(கந்தன்) அந்த நாள் முழுவதும் மிகவும்மகிழ்ச்சியாக இருந்தார். இரவு வந்தது. கந்தன் வழக்கம் போல் வீட்டு கதவுகள் எதையும் மூடாமல் படுக்கைக்குச் சென்றார். ஆனால், இன்று, அவரால்(கந்தனால்) தூங்க முடியவில்லை. இன்று ஏழுமலை தன்னிடம் பெட்டிநிறைய கொடுத்த பணம் இருப்பதால் அந்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வீட்டின் அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் மூடினார். இருந்தாலும் தூங்க முடியவில்லை. அவர்(கந்தன்) அந்த பணப்பெட்டியைதன்னுடைய படுக்கைக்கு அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். சிறிது கண்ணயர்ந்தால் யாராவது ஒரு திருடன் கதவை திறந்து கொண்டு வந்து அந்த பணத்தை எடுத்து சென்றுவிட்டால் என்னாவது என அவர்(கந்தன்) கலங்கியவாறு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தார். பொழுதுவிடிந்ததும் உடன், கந்தன் ஏழுமலை கொடுத்த அந்த பணப்பெட்டியை எடுத்துகொண்டு ஏழுமலையின் வீட்டிற்கு சென்றார். , “அன்புள்ள நண்பரே, நான் ஏழைதான். ஆனால், நான் இதுவரையில் தினமும் இரவில் மனநிம்மதியாக மிகமகிழ்ச்சியுடன் தூங்கினேன் நீங்கள் நேற்று எனக்கு கொடுத்த உங்களுடைய ள் பணம் என்னிடமிருந்து மகிழ்ச்சியையும் தூக்கத்தையும் அமைதியைப் பறித்தது. அதனால் தயவுசெய்து உங்கள் பணத்தை திரும்பப் பெற்றுகொள்ளுங்கள். " எனக்கூறியவாறு அவர்(கந்தன்) அந்த பணப்பெட்டியை எழுமலையிடம் கொடுத்தார். நீதி: பணத்தால் எல்லாவற்றையும் பெற முடியாது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...