சனி, 25 செப்டம்பர், 2021

தொடர் வண்டியில்ஒருஇந்தியரும்ஆங்கிலேயர்களும் பயனம்செய்த போதானநிகழ்வு

 


தொடர் வண்டியொன்று அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அதன்ஒரு பெட்டியில், ஒரேயொருஇந்தியரும் ஏராளமான ஆங்கிலேயர்களும் அமர்ந்து பயனம் செய்துகொண்டிருந்தனர்.
அந்த பெட்டியில் பயனம் செய்த ஆங்கிலேயர்கள்அனைவரும் அந்த இந்திய பயனியை பார்த்து கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். அவர்களுள் சிலர் அவருடைய உடையைப் பார்த்து கேலிசெய்து சிரித்துகொண்டிருந்தனர், வேறுசிலர் அவரை முட்டாள் என்று கிண்டலாக அழைத்து கேலிசெய்தனர், அதனை தொடர்ந்து இன்னும் சிலர் ஏளனமாக அவரைபார்த்து கோபமாக, "ஏன் ஒரு இந்தியரை நம்மோடு ஒன்றாக ஒரேபெட்டியில் பயனம் செய்ய அனுமதித்தனர்?” என்று தொடர்வண்டியின் நிர்வாகத்தின்மீது ழிசுமத்தி கூச்சலிட்டனர்.
ஆனால் இவை அனைத்தும் இடுப்பில் வேட்டி மார்பில் சட்டை தலையில் தலைப்பாகை (இந்திய உடை) அணிந்து அமர்ந்திருந்தஅந்தஇந்தியரின் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவர் அமைதியாக உட்கார்ந்திருந்தார், ஆயினும் அவர் தீவிரமா ஏதோ ஒரு நிகழ்வில் கவனம் செலுத்தது போன்று அமர்ந்து இருந்தார்.
தொடர்வண்டி அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது , ஆங்கிலேயர்கள அந்த இந்தியரை கேலி செய்வதும் அவமதிப்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது
ஆனால் திடீரென்று அந்த இந்தியர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து - "தொடர் வண்டியைஉடனே நிறுத்துங்கள்",.என சத்தமாக கத்தினார். யாருக்கும் எதுவும் புரியும் முன், அவர் விரைவாக தொடர்வண்டியை நிறுத்துவதற்கான சங்கிலியை இழுத்தார்.அதனால் அந்த தொடர்வண்டி நிறுத்தப்பட்டது.
இந்தியரின் இந்த செயலல், உடன் பயனம் செய்த ஆங்கிலேயர்கள் மிகவும் கோபம் அடைந்தனர், அவருடன் பயனம் செய்த ஆங்கிலேயர்கள் அனைவரும் அவரைத் திட்டத்தொடங்கினர், ஆனால் அந்த சொற்கள் எதுவும் அவரைப் பாதிக்காதது போல் அவர் தீவிரமான மனநிலையில் இருந்தார்.
அந்த தொடர்வண்டியின் பாதுகாவலர் அந்த பெட்டிக்குள் ஓடி வந்து மிகக் கடுமையான குரலில், "தொடர்வண்டியை நிறுத்தியது யார்?" என வினவினார் ஆங்கிலேயர் ரும் பேசுவதற்கு முன், இந்தியர் எழுந்து நின்று, "நான் தான் தொடர்வண்டியை நிறுத்த செய்தேன்" என்றார்.
தொடர்வண்டி பாதுகாவலர் மிகவும் கோபமாக, "உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கின்றது? நீங்கள் இப்போதுதான் தொடர்வண்டியில் முதன்முதல் பயனம் செய்கின்றீர்களா? காரணமில்லாமல் தொடர்வண்டியை நிறுத்துவது குற்றச்செயல் என்று தெரியுமா? ." என வினவினார்
இந்தியர் அமைதியாக , "ஆம். எனக்குத் தெரியும், ஆனால் நான் தொடர்வண்டியை நிறுத்தாமல் இருந்திருந்தால், இந்த தொடர்வண்டியில் பயனம் செய்து கொண்டிருக்கின்ற நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்திருப்பார்கள்." ன பதிலளித்தார்
இந்தியரின் அந்த பதிலை கேட்டு ங்கிலேயர் அனைவரும் அவரைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.
மேலும் அவர்தொடர்ந்து , "இங்கிருந்து சிறிது தூரத்தில் தண்டவாளங்கள் இணைப்பில்லாமல் தொடர்வண்டி செல்கின்ற தடம் உடைந்துள்ளது. நீங்கள் உறுதிப்படுத்த விரும்பினால், நீங்களே அதனை நேரில் சென்று சரிபார்க்கலாம்."என கூறினார்
வ்வாறான அவருடைய பதிலைக் கேட்டவுடன், தொடர்வண்டி பாதுகாவலரும் சில ஆங்கிலேயர்களும் தொடர்வண்டியில் இருந்து இறங்கி தொடர்வண்டியின் தடங்களான முன்பக்கத்தில் தண்டவாளங்களாலான் பாதைசெல்லும் திசையை நோக்கிச் சென்று சரிபார்த்தனர், அவ்வாறு சரிபார்ப்ப்தற்காக தொடர்வண்டியின் பாதையில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது கூட ந்த இந்தியரைப் பற்றி மோசமாக திட்டிகொண்டும் கிண்டலாக பேசிக் கொண்டும் நடந்து சென்று கொண்டிருந்தர்.
சிறிது தூரம் நடந்த சென்ற பிறகு, உண்மையில் தொடர்வண்டியின் பாதையின் தண்டவாளங்கள் உடைந்திருப்பதை, அதன் திருகுமரைகள் கழன்று தண்டவாளங்கள் இணைப்பு பிரிந்து தனித்தனியாக கிடைப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இப்போது அந்த இந்தியரை பைத்தியம் முட்டாள் என அழைத்து கிண்டலும் கேலியும் செய்து கொண்டிருந்த தொடர்வண்டியின் பாதுகாவலர் உட்பட அனைத்து ஆங்கிலேயர்களும் மீண்டும் தொடர்வண்டிக்கு திரும்பி வந்து மிகஆர்வத்துடன் அவரைப் பார்க்கத் தொடங்கினர்.
தொடர்வண்டியின் பாதுகாவலர் , "தண்டவாளங்களாலான தொடர்வண்டி பாதை உடைந்திருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?", என வினவினார்
அதனை தொடர்ந்து இந்தியர் , "இந்த தொடர்வண்டியில் பயனம் செய்திடும் பயனிகள் அனைவரும் த்தமது பணியில் மும்முரமாக இருந்தபோது, ன் கவனம் முழுவதும் தொடர்வண்டியின் ட்டத்தில் மட்டுமே இருந்தது, தொடர்வண்டி வழக்கமாக விரைவாக ஓடிக்கொண்டிருந்த அதிர்வு ஒரேசீராக கேட்டுகொண்டிருந்தது.
ஆனால் பாதையில் தண்டவாளங்களாலான பாதை உடைந்திருந்ததால் தொடர்வண்டி வழக்கமாக விரைவாக ஓடிக்கொண்டிருந்த அதிர்வில் மாற்றம் ஏற்பட்டது. சிறிது தூரத்தில் தொடர்வண்டி பாதையின் தண்டவாளங்களாலான பாதை உடைந்திருந்தால் மட்டுமே தொடர்வண்டியின் ஒட்டத்தின் அதிர்வில் மாற்றம் அடையும் . எனவே. ஒரு நிமிடம் கூட காலம் தாழ்த்தாமல் நான் இந்த தொடர்வண்டியைநிறுத்தம் செய்வதற்கான சங்கிலியை இழுத்தேன்." என பதிலளித்தார்
அந்த பெட்டியின் பயனம் செய்த ஆங்கிலேயர்கள்,தொடர்வண்டியின் பாதுகாவலர் ஆகிய அனைவரும் திகைத்தநின்றனர். மிக ஆச்சரியத்துடன் அவரைபார்த்தனர்.
தொடர்வண்டி பாதுகாவலர், "இவ்வளவு சிறந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட! நீங்கள் ஒரு சாதாரண மனிதர் போன்று தெரியவில்லை. தயவுசெய்து நீங்கள் யார் என்று கூறுங்களேன்" என்றார்.
இந்தியர் பணிவுடன், "நான் ஒரு இந்திய கட்டிடப்பொறியாளர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா" என்று பதிலளித்தார்.

ருடைய தோற்றத்தினையும் கண்டு மிகத்தாழ்வாக எண்ணவேண்டாம்

சனி, 11 செப்டம்பர், 2021

உழைப்பை சுரண்டுதல்


முன்னொரு காலத்தில் மரவேலை செய்திடும் தச்சன் ஒருவர் வெகுதூரத்திலுள்ள ஒருநகரத்தின் வணிகர் ஒருவரிடம் பணிபுரிந்து கொண்டிருந்தார் அவ்வாறு பணிபுரிந்து கொண்டிருந்தபோது மரத்தினை அறுக்க பயன்படும் கருவியான அவருடைய வாள்ஆனது உடைந்துவிட்டது அந்த வாள் இல்லாமல் மரத்தினை அவ்வப்போது அறுத்து துண்டுகளாக பிரித்திடமுடியாது உடனடியாக அவ்வாறு வாள் ஒன்று அவருடைய அன்றாட பணிக்கு தேவையாகும் அதனால் அருகிலுள்ள கிராமத்தில் அவ்வாறான உடைந்த வாளினை சரிசெய்து புதிய வாளாக உருவாக்குகின்ற கருமான் ஒருவரை காணச்சென்றார்

அந்த கிராமத்தில் அவ்வாறான வாளினை உருவாக்குகின்ற கருமான் ஒரேயொருவர்தான் என அந்த தச்சனுக்கு தெரியவந்தது அதனால் அந்த கருமானிடம், "ஐயா! என்னுடைய மரம் அறுக்கின்ற வாள் உடைந்துவிட்டது அதனை சரிசெய்து முழுமையான வாளாக ஆக்கி கொடுக்கின்றீர்களா!” எனக் கோரினார் அதனைதொடர்ந்து அந்த கருமான் , "நாளை உன்னுடைய உடைந்த வாளினை எடுத்து கொண்டு வா கண்டிப்பாக உன்னுடைய உடைந்த வாளினை புதியதாக செய்து தருகின்றேன்.” என க்கூறினார்.

அந்த வாள் இல்லாமல் தன்னுடைய மரவேலை செய்கின்ற அன்றைய பணி தடைபெறுவதால் அன்றே அந்த வாளினை செய்துதருவதாக இருந்தால் கருமானிற்கு அந்த வாளின் விலையைவிட அதிகமாக எவ்வளவு கோரினாலும் தச்சன் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்

ஆனாலும் கருமான் தச்சனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை "ஐயா! எனக்கு பணம் பெரியதன்று. அவ்வாறான கருவியை அவசரஅவசரமாக செய்தால் அந்த கருவி தரமாக இருக்கும் என உத்திரவாதம் எதுவும் என்னால் தரமுடியாது. அவ்வாறு அவசரஅவசரமாக கருவியை செய்த என்னுடைய பணியில் எனக்கும் திருப்தியாக இருக்காது. நாளை தான் என்னால் இந்த வாளினை சரிசெய்து புதிய வாளாக தரமுடியும் இன்று போய் நாளை வா,” என கூறிவிட்டார் .

அதனால் வேறு வழியில்லாமல் அந்த தச்சன் மறுநாள் ந்த புதிய வாளினை வாங்கி கொள்வதாக ஏற்றுகொண்டு திரும்பி சென்றார்.

அடுத்த நாள், தச்சன் அந்த கருமானின் பணிஇடத்திறகு சென்று பார்த்தபோது தன்னுடைய வாளானது மிகவும் நன்றாக செய்யப்பட்டு இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தார் , தச்சன் நகர்ததிற்கு திரும்புசென்று இந்த புதிய வாளினை கொண்டு தன்னுடைய பணியை முன்னெப்போதையும் விட மிகச்சிறப்பாகவும் செய்ய முடிந்தார். தச்சன் கருமானின் வாள் செய்கின்ற பணியில் மிகவும் ஈர்க்கப்பட்டார், அதனால் அவர் கருமானின் வாள்செய்கின்றபணியை பற்றி தன்னுடைய முதலாளியான ணிகரிடம் தகவல் தெரிவித்தார். வணிகரும் அந்த புதிய வாளினை கொண்டு உருவாக்கிய மரவேலைப்பாடுகளை சரிபார்த்து தச்சனிடம், "இந்த புதிய வாள் செய்வதற்காக அந்த கருமானிற்கு எவ்வளவு பணம் கொடுத்தாய்?" என வினவினார் உடன் தச்சன் , "அதற்காக நான் 10 ரூபாய் கொடுத்தேன் ஐயா " என பதிலளித்தார். அந்த வணிகரானவர் , நகரத்தில் எவரும் இவ்வளவு நல்ல தரமான வாளிற்கு அசல் விலையை விட மூன்று மடங்கு கொடுக்க தயாராக இருப்பார்கள். பிறகு நான் ஏன் ஒரு டஜன் வாளினை அந்த கருமானிடம் வாங்கி அவற்றை இந்த நகரத்தில் விற்கக்கூடாது. என நினைத்தார். அதனை தொடர்ந்து தச்சனுடைய முதலாளியான வ்வணிகர் அந்த கருமான பணிசெய்து கொண்டிருந்த கிராமத்திற்கு சென்றார். ணிகர் கருமானைச் சந்தித்தபோது, "நான் உங்களுக்கு ஒரு பெரிய கொள்முதல் உத்திரவினை தருகிறேன்,அதாவது நீங்கள் செய்யும் ஒவ்வொரு வாளிற்கும் உங்களுக்கு 15 ரூபாய் தருகிறேன், ஆனால் இன்று முதல் நீங்கள் வாளினை செய்கின்ற பணியை எனக்காக மட்டுமே செய்யவேண்டும் ஏற்றுகொண்டு வாட்களை செய்து தருகின்றீர்களா" எனக்கோரிக்கை வைத்தார் .அதன தொடர்ந்து கருமான் , "என்னால் உங்களுடைய நிபந்தனைய ஏற்க முடியாது .." எனக்கூறினார். ந்த கருமானுக்கு அதிக பணம் தேவைப்படலாம் என்று வணிகர் நினைத்தார் . அதனால் அந்த வணிகர் , "சரி நான் உங்களுக்கு இப்போது வாள் ஒனறிற்கு 20 ரூபாய் தருகிறேன். என் நிபந்தனையை இப்போது ஏற்கின்றீர்களா? ” என விலையை உயர்த்தி கூறினார் .தொடர்ந்து அந்த கருமான், "இல்லை ஐயா, என்னால் உங்களுடைய நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பணியின் மதிப்பை நான் தான் தீர்மானிப்பேன் அதனடிப்படையில் தற்போது நான் சுதந்திரமாகபணி செய்து வருகிறேன். நான் உங்களுக்கு அடிமையாக பணி செய்ய முடியாது . நான் சுதந்திரமாக பணிசெய்து பொருளிற்கான விலையை நானே நிர்ணையிக்கினஎன்னுடைய தற்போதைய நிலையில் நான் திருப்தி அடைகிறேன், இதற்கு மேல் எனக்கு எதுவும் தேவையில்லை" என மறுத்தார் .வணிகர் அவருடைய பதிலைக் கண்டு ஆச்சரியப்பட்டு, "நீங்கள் மிகவும் விசித்திரமான மனிதர், இருந்தாலும் நான் உங்களுக்கு அசல் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக தரத்தயாராக இருக்கிறேன்" என மேலும் ஆசை காட்டினார். அதற்கு ருமான், நீங்கள் என்னிடமிருந்து வாட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதை நகரத்திற்கு எடுத்துச் சென்று ஏழையான நபர்களுக்கு அதிக விலைக்கு விற்றுவிடுவீர்கள். அவ்வாறு ஏழைகளிடமிருந்து நீங்கள் பணத்தினை சுரண்டுவதற்கு உதவ என்னால் முடியாது. இன்று நான் உங்களுடைய அதிகவிலைக்கு ஈர்க்கப்பட்டு அடிமையாக பணிசெய்திட துவங்கினால், ஏழைகள் பலர் அதற்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும், எனவே உங்கள் சலுகையை என்னால் ஏற்க முடியாது.போய்வாருங்கள் " என உறுதியாக மறுத்தளித்தார் .ருமான் தனது கொள்கைகளில் உறுதியாக நிற்கிறார் என்பதையும், எந்த அளவு செல்வத்தையும் வாங்க முடியாத நேர்மையான உண்மையான மனிதன் என்பதையும் வணிகர் உடனடியாக புரிந்து கொண்டு நகரத்திற்கு திரும்பி சென்றார் .



 

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...