சனி, 26 அக்டோபர், 2019

மகிழ்ச்சியைத் துரத்த வேண்டாம். மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மையானது மகிழ்ச்சியை தானாகவே கொண்டுவரும்


ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் வாழ்ந்துவந்தார்.அவர் எப்போதும் மற்றவர்களைபற்றிய மிக மோசமான மனநிலையில் மிகநீண்ட காலமாக அவர்களை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக விஷமத்தனமாக குறைகூறி கொண்டிருந்தார் மேலும் அவர் மற்றவர்களிடையே மகிழ்ச்சியற்ற உணர்வை உருவாக்குகின்ற அவதூறு பிரச்சாரத்தையும் செய்து கொண்டிருந்தார். அதனால் அவரைத் தவிர்ப்பதற்காக அந்த கிராமத்து மக்கள் தங்களால் முடிந்தவரை அவரிடம் அனுகாமல் தூர விலகிவிலகி ஓடிச் சென்றனர் இவ்வாறான சூழலில் அவருக்கு எண்பது வயதாகும்போது, ஒருநாள் . "அந்த வயதானவர் இன்று மகிழ்ச்சியாக இருக்கின்றார், அவர் யாரைப் பற்றியும் புகார் கூறுவதிவில்லை, யாரைகண்டாலும் வெறுத்து ஒதுக்காமல் புன்னகைசெய்கின்றார், மேலும் அவரது முகம் கூட புத்துணர்ச்சியுடன் தென்படுகின்றது. மிகமுக்கியமாக யாருக்காவது எந்தவொரு உதவிவேண்டுமானாலும் தான் செய்யதயாராக இருப்பதாக உதவிக்கரம் நீட்டுகின்றார் " எனும் செய்தி காட்டுதீபோன்று உடனடியாக அந்த கிராமத்தில் வாழும் மக்கள் எல்லோருரிடமும் பரவியது அவ்வாறான செய்தியை கேள்வியுற்றதும் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அந்த வயதான மனிதரைச் சுற்றி கூடி, "மிகவும் அதிசயமாக இருக்கின்றதே எவ்வாறு இப்படி மாறிவிட்டீர்கள் உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என மூலைக்குமூலை அவரிடம் கேள்விகேட்க ஆரம்பித்தனர் அதனை தொடர்ந்து அம்முதியவர், " அதிசயம் ஒன்றும் இல்லை யப்பா. எண்பது ஆண்டுகளாக நான் மகிழ்ச்சியைத் துரத்திக் கொண்டிருந்தேன், அது பயனற்றது என நேற்றுதான் தெரிந்துகொண்டேன்அதாவது நான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமானால் மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை மகிழ்ச்சியுடன் செய்தால் போதும் என தெரிந்துகொண்டேன் அதனால் நானும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்னை சந்திக்கின்ற மற்றவர்களும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றனர்." என கூறிக்கொண்டிருந்தார் நாம் வாழும் நம்முடைய வாழ்க்கைக்கான மகிழ்ச்சியைத் துரத்த வேண்டாம். மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மையானது மகிழ்ச்சியை தானாகவே கொண்டுவரும் என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 19 அக்டோபர், 2019

உண்மையான அழகு என்பது கண்களால் காணக்கூடிய உருவத்தோற்றம்அன்று, உள்ளத்தில் இருக்கக்கூடியதுஆகும்


ஒரு காலத்தில் ஒரு செல்வந்த முதியவர் மிகப் பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் பலவீனமாக ஆகிகொண்டிருந்ததால், தன்னையும் தன்னுடைய பெரிய வீட்டையும் அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை, எனவே வீட்டின் அனைத்து வேலைகளுக்கும் அவரை கவனித்துக் கொள்வதற்கும் உதவக்கூடிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினால் நல்லது என எண்ணினார் அதனை தொடர்ந்துஅம்முதியவர் அங்கு, சங்கு ஆகிய இரண்டு ஊழியர்களை நியமித்தார். அங்கு ஒரு அழகான இளைஞனாக இருந்தான், சங்கு ஒரு அசிங்கமான தோற்றமுடைய இளைஞனாக இருந்தான் . இருவரும் பணியில் சேர்ந்த முதல்நாள் அவ்விருவரும் அம்முதியவர் முன்னிலையில் கைகட்டி நின்றுகொண்டிருந்தனர் முதலில் அம்முதியவர் அங்குவை அழைத்து தனக்கு குடிப்பதற்கு தேநீர் தயாரித்து கொண்டுவருமாறு கூறினார். உடன் அங்கு சமையலறைக்கு சென்றபிறகு, அந்த முதியவர் சங்கு எனும் வேலைக்காரன் பக்கம் திரும்பி, "அங்கு நீ மிகவும் மோசமானவன், நம்பத்தகாதவன் என்று உன்னைப் பற்றி தவறாக என்னிடம் கூறுகின்றானே அவ்வாறுதான் நீ இருப்பாயா?" என வினவினார் அம்முதியவர் அவ்வாறு தன்னிடம் கூறியதும் சங்கு ஒரு கணம் யோசித்து, "அங்கு மிகவும் அழகானவன் மிகவும் நல்லவனாயிற்றே அவன் என்னை பற்றி அவ்வாறு கூறியிருக்கமுடியாதே " என்று பதில் கூறினான். அத்தகைய அழகான அங்கு தன்னைபற்றி இல்லாததும் பொல்லாததும் கண்டிப்பாக ஒருபோதும் சொல்ல மாட்டானே எனும் நம்பிக்கை சங்குவிற்கு இருந்தது. எனவே சங்கு அந்த முதியவரிடம், " , என்னிடம் ஏதாவது தவறு இருக்க வேண்டும்ஐயா அதனால் அங்கு என்னைபற்றி அவ்வாறு கூறியிருக்கலாம் ஐயா. அந்த தவறு என்னவென தெரிந்துகொணடு சரிசெய்து கொள்கின்றேன் ஐயா " என பதலளித்தான் ஆஹா அசிங்கமாக தோற்றமளித்தாலும்சங்கு குணத்தில் மிகவும் நல்லவனாக இருக்கின்றானே என எண்ணுமாறு சங்கு தன்னுடைய நல்ல குணத்தால் அந்த முதியவர் ஈர்க்கப்பட்டார் அதனைதொடர்ந்து அம்முதியவர் சங்குவின்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டார் . இதற்கிடையில், அங்கு அம்முதியவர்கோரியவாறு ஒரு கோப்பை தேநீருடன் சமையலறையில் இருந்து திரும்பிவந்துசேர்ந்தான் அந்த முதியவர் சங்கு பக்கம்திரும்பி தனக்கு காலை சிற்றுண்டி தயாரித்துகொண்டுவா என சங்குவை சமையலறைக்கு அனுப்பினார், சங்கு சமையலறைக்கு சென்றபின்னர் அங்குபக்கம் திரும்பி, "அங்கு நீ மிகவும் மோசமானவன், நம்பத்தகாதவன் என்று உன்னைப் பற்றி தவறாக என்னிடம் கூறுகின்றானே அவ்வாறுதான் நீஇருப்பாயா?" என சந்தேகம் எழுப்பினார் முதியவர். இவ்வாறாக முதியவர் கூறியதைக் கேட்டவுடன் அங்கு மிகவும் கோபமடைந்து சங்குவை கண்டபடி திட்டஆரம்பித்தான் மேலும் "சங்கு ஒரு மோசடிசெய்பவன் அவன் எப்போதும் மற்றவர்களை பற்றி அவதூறு கூறிக்கொண்டே இருப்பான்" என கோபமாகவும் படபடப்பாகவும் அம்முதியவரிடம் சங்குவைபற்றி இல்லாத பொல்லாத செய்திகளையும் சேர்த்து கூறினான் அங்கு இவ்வாறு கோபமாக சங்குவை பற்றி கூறியதும் ஒரு அழகான தோற்றம் கொண்ட மனிதனுக்கு உள்ளேமனமானது கொடூரமாக இருக்கின்றதே, அதே நேரத்தில் அசிங்கமாக தோற்றமுடைய மனிதனுக்கு மிகப்பெரிய நல்லமனதாக இருக்கின்றதே என்று அம்முதியவர் சிந்திக்க ஆரம்பித்தார். "உண்மையான அழகு என்பது கண்களால் காணக்கூடிய உருவத்தோற்றம்அன்று, உள்ளத்தில் இருக்கக்கூடியதுஆகும். நம் கண்களால் காண்பது ஒருநாள் மறைந்துவிடும், ஆனால் நம் உள்ளத்தில் இருக்கக்கூடியது என்றென்றும் நிலைத்திருக்கும் ..."

சனி, 12 அக்டோபர், 2019

நெருக்கடியான நேரத்தில் மிகச்சரியாகசிந்தித்து தெளிவாக முடிவெடுத்தால் வெற்றிபெறமுடியும்


முன்னொரு காலத்தில் ஒருநகரத்தில் சில வணிகர்கள் வசித்து வந்தனர். அவர்கள் வியாபாரத்திற்கு எங்கு சென்றாலும், ஒன்றாகச் செல்வது வழக்கம். ஒருமுறை அவர்கள் வெகுதூரம் பயணித்து, எடுத்துச் சென்ற பொருட்கள் அனைத்தையும் விற்று ஏராளமான அளவில் பணத்தினை சம்பாதித்தனர் அதன் பின்னர் அவ்வியாபாரத்தில் கிடைத்த பணத்துடன் வீடு திரும்பினர். திரும்பும் வழியில் ஒரு அடர்ந்த காடு இருந்தது, அதிகாலைநேரத்தில் அந்த காட்டினை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுகாட்டில் இரண்டு கொள்ளையர்கள் புதரில் மறைந்திருந்தனர். வணிகர்கள் அந்ததிருடர்கள் மறைந்திருப்பதை கவணிக்காமல் பயனம் செய்து கொண்டிருந்தனர். அந்த கொள்ளையர்கள் இருவரும் திடீரென புதரிலிருந்துவெளிவந்து அவர்களுக்கு முன் மேலும் பயனம்செய்யஅனுமதிக்காமல் வழிமறித்து நின்று கொண்டு. தங்களுடைய கையிலுள்ள பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி உயிர் பிழைக்கவேண்டுமானால், அவ்வணிகர்களிடம் இருந்த பணம் விலையுயர்ந்து பொருட்கள் ஆகியஅனைத்தையும் கீழே போடுமாறு கட்டளையிட்டனர். வணிகர்களின் கைகளில் தற்காப்பிற்கான ஆயுதம் ஏதும் இல்லை எனவே வணிகர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும், கொள்ளையர்களுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆதலால் வணிகர்கள் தாம் அணிந்திருந்த கைக்கடிகாரம் உட்பட அனைத்து பொருட்களையும் கொள்ளையர்களிடம் இழந்தனர். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வணிகர்கள் அனைவரின் உடைமைகள் முழுவதையும் கொள்ளையடித்ததால் மிகவும் அதிககர்வத்துடன் அவ்வாறு கொள்ளையடித்த வணிகர்களுக்கு முன்பாக திருடர்கள் ராஜாக்களைப் போல அமர்ந்துகொண்டு வணிகர்கள்.தங்களுடைய வீடுகளுக்கு திரும்புவதற்கு முன்பு தங்கள் முன்னிலையில் வணிகர்கள் அனைவரும் நடனமாடுமாறு கட்டளையிட்டனர். அவ்வணிகர்கள் அனைவரும் தங்களுடைய அனைத்து பொருளையும் இழந்து மட்டுமல்லாமல் அந்த கொள்ளையர்கள் திருப்தி அடைவதற்காக நடனமும் ஆடவேண்டுமா என தங்களுடைய இக்கட்டான நிலையை வெளியில் வாய்விட்டு பேசமுடியாமல் நொந்துகொண்டு நடனமாடினார்கள் அவ்வணிகர்களில் ஒருவர். மட்டும் தனக்கும் தனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து எவ்வாறு தப்பிசெல்வது என சிந்திக்க ஆரம்பித்தார். மேலும் வணிகர்கள் ஆடவேண்டிய நடனம் குறித்தும், கொள்ளையர்கள் தரையில் அமர்ந்திருக்கும் விதம் குறித்தும் அவர் யோசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு பல்வேறு வகையில் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, கொள்ளையர்கள் இருவரும் தங்களுடைய ஆயுதங்களை கைகளில் வைத்திருக்காமல் தரையில் வைத்துவிட்டதை அவர் கவனித்தார். , அக்கொள்ளையர்களை முழுமையாக முட்டாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற வணிகர்களுடன் சேர்ந்துஇவரும் அந்த கொள்ளையர்கள் தன்மீது சந்தேகிக்க கூடாது என ஒப்புக்காக பெயரளவில் நடனமாடத் தொடங்கினர். இந்நிலையில் மிகவும் புத்திசாலிதனமாக அந்த கொள்ளையர்களை விரட்ட வேண்டும் என இறுதியாக முடிவுசெய்தார் ஏற்கனவே கொள்ளையர்கள் தங்களுடைய ஆயுதங்களை தரையில் வைத்துவிட்டதை கவனித்திருந்ததால், அவர் அதைப் பற்றி தனது நண்பர்களுக்கு சமிக்ஞை செய்தார், அதனை கவணித்தவணிகர்கள் அனைவரும் திடீரென்று திருடர்கள் தரையில் வைத்துவிட்ட அந்த ஆயுதங்களை தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் மீதுபாய்ந்து தாக்கதொடங்கினர். இவ்வாறு தங்களுடைய ஆயுதத்தையே வணிகர்கள் தங்களுக்கு எதிராக திரும்ப தாக்குவதற்கு பயன்படுத்துவார்கள் என அவ்விரு கொள்ளையர்களும் எதிர்பார்க்கவில்லை, அதனால் அவ்விருவரும் எப்படியாவது . தங்களுடைய உயிர்பிழைத்தால் போதுமென வணிகர்களின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு தாங்கள் கொள்ளையடித்த பொருட்களையும் அப்படியே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினர். அதனை தொடர்ந்து அவ்வணிகர்கள் அனைவரும் தங்களுடைய, மதிப்புமிக்க பொருட்களையும் பணத்தையும் தரையிலிருந்து பொறுக்கி சேகரித்து எடுத்துகொண்டு பத்திரமாக வீடுவந்து சேர்ந்தனர்

சனி, 5 அக்டோபர், 2019

காணாமல் போன கைகடிகாரம்


ஒரு முறை ஒருகிராமத்தில் வாழும் மிகப்பெரிய பணக்கார விவசாயி ஒருவருடைய கைக்கடிகாரமானது அவருடைய நெற்களஞ்சியத்தில் காணாமல் போய்விட்டது . அது சாதாரண கைகடிகாரம் அன்று, அது அவர் இளைஞனாக கல்லூரிக்கு படிக்கசெல்லும்நிலையில் அவருடைய தாய் அவருடைய பிறந்த நாளின்போது பரிசாக அளித்தது அதனால் அந்த கைக்கடிகாரத்தை தன்னுடைய தாயின் நினைவாக மிகபத்திரமாக பாதுகாத்து மிகவும் உணர்வுபூர்வமாக எப்போதும் தன்னுடன் வைத்துகொண்டிருந்தார் அதனால் அதனை எப்படியாவது தேடிகண்டுபிடித்தவேண்டிய கட்டாயநிலையில் நெற்களஞ்சியம் முழுவதும் நீண்டநேரம் அவர்தேடியும் அவருக்கு அந்த கைக்கடிகாரம் மட்டும் கிடைக்கவேயில்லை அதனை தொடர்ந்து எப்படி தேடியும் எவ்வளவுநேரம் தேடியும் அந்த கைக்கடிகாரத்தை மட்டும் தேடிகண்டு பிடித்திடமுடியவில்லையேயென மிகவும் சோர்வுற்றிருந்த போது அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்ததை கவணித்தஅவர் அவர்களை அழைத்து "பிள்ளைகளே என்னுடைய கைகடிகாரம் இன்று இங்கு காணாமல் தொலைந்த விட்டது அதனை யார்தேடிகண்டுபிடித்து கொடுத்தால் அவ்வாறு அதைக் கண்டுபிடித்த நபருக்கு ரூ.100/- பரிசாக கொடுக்கின்றேன்" என கூறியதை தொடர்ந்து அந்த பிள்ளைகள் அனைவரும் "ஆகா! கைக்கடிகாரத்தை தேடி-கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.100/- பரிசாக கிடைக்கின்றதா அப்படியெனில் உடனடியாக தேடிடுவோம்" என உற்சாக குரலில் கத்திகொண்டு அக்குழந்தைகள் நெற்களஞ்சியத்திற்குள் விரைந்தோடிவந்து, அந்த நெற்களஞ்சியம் முழுவதையும் சுற்றி சுற்றி தேடிவந்தனர். ஆனால் அந்த பிள்ளைகள் அனைவரும் எவ்வளவு நேரம் தேடியும் அவர்களாலும் அந்த கைக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மிகவும் சோர்வுற்று அவர்கள் அனைவரும் தங்களால் அந்த கைக்கடிகாரத்தினை தேடிகண்டு பிடித்திட முடியவில்லை யென கூறி அவரிடம் விடைபெற்றுகொண்டு வெளியில் சென்று வழக்கம் போன்று விளையாடுவதற்கு சென்றுவிட்டனர் ஆயினும் அவர்களுள் ஒரு சிறுவன் மட்டும் அவரிடம் வந்து தன்னை மீண்டும் தேடிட அனுமதித்தால் தான் கண்டிப்பாக அந்த கைக்கடிகாரத்தை தேடிகண்டுபிடித்து கொண்டுவந்து தருவதாகவும் அதனால் தனக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கும்படியும் கோரினான் கண்டிப்பாக கிடைக்காது என நம்பிக்கை யற்று இருந்தநிலையில் அந்த சிறுவனின் நம்பிக்கையான உறுதிமொழியை கேட்டு அவனுக்கு உற்சாகம் அளிக்கும் பொருட்டு "சரிதம்பி நெற்களஞ்சியத்திற்குள் சென்று தேடிகண்டுபிடித்து கொண்டுவா மேலும் ரூ.100/-சேர்த்து ரூ.200/- பரிசாக வழங்குகின்றேன்" என அனுமதி்த்தார் அதனை தொடர்ந்து அந்த சிறுவன் அந்த நெற்களஞ்சியத்திற்குள் மீ்ண்டும் சென்று அவருடைய கைக்கடிகாரத்தை தேடஆரம்பித்தான் என்ன ஆச்சரியம் சிறிது நேரம் கழித்து அந்தச் சிறுவன் கையில் அவருடைய கைகடிகாரத்துடன் வெளியே வந்துசேர்ந்தான்! அந்த விவசாயிமிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் "நானும் நீண்டநேரமாக தேடிபார்த்தும் கிடைக்கவில்லை உன்னுடன் விளையாடிய பிள்ளைகள் அனைவரும் நீண்டநேரம் தேடியும் கிடைக்கவில்லை ஆனால் உனக்கு மட்டும் எப்படி தம்பி கிடைத்தது" என கேள்வியெழுப்பினார் "அது ஒன்றும் இல்லை ஐயா! அவர்கள் அனைவரும் ஒரே கூச்சலாகவும் சத்தமாகவும் பேசிகொண்டு தேடியதால் அவர்களால் இந்த கைகடிகாரத்தை தேடிகண்டுபிடித்திடமுடியவில்லை ஆனால் நான் மிகஅமைதியாக நெற்களஞ்சியத்தின் மையத்திற்குள் தரையில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தேன் அப்போது அமைதியாக இருந்ததால் இந்த கைக்கடிகாரம் இயங்கும் டிக் டிக் எனும் ஒலி மட்டும் என்னுடைய காதில் கேட்டது அதனைதொடர்ந்து அந்த டிக் டிக் எனும் ஒலிவந்த திசையில் தேடிகொண்டே சென்றபோது குவியலான வைக்கோலிற்கு அடியில் இந்த கைகடிகாரம்இருந்தது கண்ணுற்று எடுத்துவந்தேன்" என பதில் கூறினான் உடன் தன்னுடைய கைக்கடிகாரத்தை பெற்றுகொண்டு தான் வாக்களித்தவாறு அந்த சிறுவனுக்கு ரூ.200/- பரிசாக வழங்கினார் ஆம் அமைதியான மனம் அலைபாயும் மனதை விட சிறப்பாக தெளிவாக சிந்தித்து எந்தவொரு பிரச்சினைக்கும் உண்டான தீர்வினை எளிதாக கிடைக்கச்செய்யும் அதனால் தற்போதைய நம்முடைய ஆரவாரமான வாழ்க்கையில் தினமும் சிறிதுநேரம் அமைதியாக அமர்ந்து சிந்தித்தால் நம்முடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுசெய்வதற்கான வழி கண்டிப்பாக கிடைக்கும் என்ற செய்தியை மனதில் கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...