சனி, 19 அக்டோபர், 2019

உண்மையான அழகு என்பது கண்களால் காணக்கூடிய உருவத்தோற்றம்அன்று, உள்ளத்தில் இருக்கக்கூடியதுஆகும்


ஒரு காலத்தில் ஒரு செல்வந்த முதியவர் மிகப் பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் பலவீனமாக ஆகிகொண்டிருந்ததால், தன்னையும் தன்னுடைய பெரிய வீட்டையும் அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை, எனவே வீட்டின் அனைத்து வேலைகளுக்கும் அவரை கவனித்துக் கொள்வதற்கும் உதவக்கூடிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினால் நல்லது என எண்ணினார் அதனை தொடர்ந்துஅம்முதியவர் அங்கு, சங்கு ஆகிய இரண்டு ஊழியர்களை நியமித்தார். அங்கு ஒரு அழகான இளைஞனாக இருந்தான், சங்கு ஒரு அசிங்கமான தோற்றமுடைய இளைஞனாக இருந்தான் . இருவரும் பணியில் சேர்ந்த முதல்நாள் அவ்விருவரும் அம்முதியவர் முன்னிலையில் கைகட்டி நின்றுகொண்டிருந்தனர் முதலில் அம்முதியவர் அங்குவை அழைத்து தனக்கு குடிப்பதற்கு தேநீர் தயாரித்து கொண்டுவருமாறு கூறினார். உடன் அங்கு சமையலறைக்கு சென்றபிறகு, அந்த முதியவர் சங்கு எனும் வேலைக்காரன் பக்கம் திரும்பி, "அங்கு நீ மிகவும் மோசமானவன், நம்பத்தகாதவன் என்று உன்னைப் பற்றி தவறாக என்னிடம் கூறுகின்றானே அவ்வாறுதான் நீ இருப்பாயா?" என வினவினார் அம்முதியவர் அவ்வாறு தன்னிடம் கூறியதும் சங்கு ஒரு கணம் யோசித்து, "அங்கு மிகவும் அழகானவன் மிகவும் நல்லவனாயிற்றே அவன் என்னை பற்றி அவ்வாறு கூறியிருக்கமுடியாதே " என்று பதில் கூறினான். அத்தகைய அழகான அங்கு தன்னைபற்றி இல்லாததும் பொல்லாததும் கண்டிப்பாக ஒருபோதும் சொல்ல மாட்டானே எனும் நம்பிக்கை சங்குவிற்கு இருந்தது. எனவே சங்கு அந்த முதியவரிடம், " , என்னிடம் ஏதாவது தவறு இருக்க வேண்டும்ஐயா அதனால் அங்கு என்னைபற்றி அவ்வாறு கூறியிருக்கலாம் ஐயா. அந்த தவறு என்னவென தெரிந்துகொணடு சரிசெய்து கொள்கின்றேன் ஐயா " என பதலளித்தான் ஆஹா அசிங்கமாக தோற்றமளித்தாலும்சங்கு குணத்தில் மிகவும் நல்லவனாக இருக்கின்றானே என எண்ணுமாறு சங்கு தன்னுடைய நல்ல குணத்தால் அந்த முதியவர் ஈர்க்கப்பட்டார் அதனைதொடர்ந்து அம்முதியவர் சங்குவின்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டார் . இதற்கிடையில், அங்கு அம்முதியவர்கோரியவாறு ஒரு கோப்பை தேநீருடன் சமையலறையில் இருந்து திரும்பிவந்துசேர்ந்தான் அந்த முதியவர் சங்கு பக்கம்திரும்பி தனக்கு காலை சிற்றுண்டி தயாரித்துகொண்டுவா என சங்குவை சமையலறைக்கு அனுப்பினார், சங்கு சமையலறைக்கு சென்றபின்னர் அங்குபக்கம் திரும்பி, "அங்கு நீ மிகவும் மோசமானவன், நம்பத்தகாதவன் என்று உன்னைப் பற்றி தவறாக என்னிடம் கூறுகின்றானே அவ்வாறுதான் நீஇருப்பாயா?" என சந்தேகம் எழுப்பினார் முதியவர். இவ்வாறாக முதியவர் கூறியதைக் கேட்டவுடன் அங்கு மிகவும் கோபமடைந்து சங்குவை கண்டபடி திட்டஆரம்பித்தான் மேலும் "சங்கு ஒரு மோசடிசெய்பவன் அவன் எப்போதும் மற்றவர்களை பற்றி அவதூறு கூறிக்கொண்டே இருப்பான்" என கோபமாகவும் படபடப்பாகவும் அம்முதியவரிடம் சங்குவைபற்றி இல்லாத பொல்லாத செய்திகளையும் சேர்த்து கூறினான் அங்கு இவ்வாறு கோபமாக சங்குவை பற்றி கூறியதும் ஒரு அழகான தோற்றம் கொண்ட மனிதனுக்கு உள்ளேமனமானது கொடூரமாக இருக்கின்றதே, அதே நேரத்தில் அசிங்கமாக தோற்றமுடைய மனிதனுக்கு மிகப்பெரிய நல்லமனதாக இருக்கின்றதே என்று அம்முதியவர் சிந்திக்க ஆரம்பித்தார். "உண்மையான அழகு என்பது கண்களால் காணக்கூடிய உருவத்தோற்றம்அன்று, உள்ளத்தில் இருக்கக்கூடியதுஆகும். நம் கண்களால் காண்பது ஒருநாள் மறைந்துவிடும், ஆனால் நம் உள்ளத்தில் இருக்கக்கூடியது என்றென்றும் நிலைத்திருக்கும் ..."

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...