சனி, 5 அக்டோபர், 2019

காணாமல் போன கைகடிகாரம்


ஒரு முறை ஒருகிராமத்தில் வாழும் மிகப்பெரிய பணக்கார விவசாயி ஒருவருடைய கைக்கடிகாரமானது அவருடைய நெற்களஞ்சியத்தில் காணாமல் போய்விட்டது . அது சாதாரண கைகடிகாரம் அன்று, அது அவர் இளைஞனாக கல்லூரிக்கு படிக்கசெல்லும்நிலையில் அவருடைய தாய் அவருடைய பிறந்த நாளின்போது பரிசாக அளித்தது அதனால் அந்த கைக்கடிகாரத்தை தன்னுடைய தாயின் நினைவாக மிகபத்திரமாக பாதுகாத்து மிகவும் உணர்வுபூர்வமாக எப்போதும் தன்னுடன் வைத்துகொண்டிருந்தார் அதனால் அதனை எப்படியாவது தேடிகண்டுபிடித்தவேண்டிய கட்டாயநிலையில் நெற்களஞ்சியம் முழுவதும் நீண்டநேரம் அவர்தேடியும் அவருக்கு அந்த கைக்கடிகாரம் மட்டும் கிடைக்கவேயில்லை அதனை தொடர்ந்து எப்படி தேடியும் எவ்வளவுநேரம் தேடியும் அந்த கைக்கடிகாரத்தை மட்டும் தேடிகண்டு பிடித்திடமுடியவில்லையேயென மிகவும் சோர்வுற்றிருந்த போது அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்ததை கவணித்தஅவர் அவர்களை அழைத்து "பிள்ளைகளே என்னுடைய கைகடிகாரம் இன்று இங்கு காணாமல் தொலைந்த விட்டது அதனை யார்தேடிகண்டுபிடித்து கொடுத்தால் அவ்வாறு அதைக் கண்டுபிடித்த நபருக்கு ரூ.100/- பரிசாக கொடுக்கின்றேன்" என கூறியதை தொடர்ந்து அந்த பிள்ளைகள் அனைவரும் "ஆகா! கைக்கடிகாரத்தை தேடி-கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.100/- பரிசாக கிடைக்கின்றதா அப்படியெனில் உடனடியாக தேடிடுவோம்" என உற்சாக குரலில் கத்திகொண்டு அக்குழந்தைகள் நெற்களஞ்சியத்திற்குள் விரைந்தோடிவந்து, அந்த நெற்களஞ்சியம் முழுவதையும் சுற்றி சுற்றி தேடிவந்தனர். ஆனால் அந்த பிள்ளைகள் அனைவரும் எவ்வளவு நேரம் தேடியும் அவர்களாலும் அந்த கைக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மிகவும் சோர்வுற்று அவர்கள் அனைவரும் தங்களால் அந்த கைக்கடிகாரத்தினை தேடிகண்டு பிடித்திட முடியவில்லை யென கூறி அவரிடம் விடைபெற்றுகொண்டு வெளியில் சென்று வழக்கம் போன்று விளையாடுவதற்கு சென்றுவிட்டனர் ஆயினும் அவர்களுள் ஒரு சிறுவன் மட்டும் அவரிடம் வந்து தன்னை மீண்டும் தேடிட அனுமதித்தால் தான் கண்டிப்பாக அந்த கைக்கடிகாரத்தை தேடிகண்டுபிடித்து கொண்டுவந்து தருவதாகவும் அதனால் தனக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கும்படியும் கோரினான் கண்டிப்பாக கிடைக்காது என நம்பிக்கை யற்று இருந்தநிலையில் அந்த சிறுவனின் நம்பிக்கையான உறுதிமொழியை கேட்டு அவனுக்கு உற்சாகம் அளிக்கும் பொருட்டு "சரிதம்பி நெற்களஞ்சியத்திற்குள் சென்று தேடிகண்டுபிடித்து கொண்டுவா மேலும் ரூ.100/-சேர்த்து ரூ.200/- பரிசாக வழங்குகின்றேன்" என அனுமதி்த்தார் அதனை தொடர்ந்து அந்த சிறுவன் அந்த நெற்களஞ்சியத்திற்குள் மீ்ண்டும் சென்று அவருடைய கைக்கடிகாரத்தை தேடஆரம்பித்தான் என்ன ஆச்சரியம் சிறிது நேரம் கழித்து அந்தச் சிறுவன் கையில் அவருடைய கைகடிகாரத்துடன் வெளியே வந்துசேர்ந்தான்! அந்த விவசாயிமிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் "நானும் நீண்டநேரமாக தேடிபார்த்தும் கிடைக்கவில்லை உன்னுடன் விளையாடிய பிள்ளைகள் அனைவரும் நீண்டநேரம் தேடியும் கிடைக்கவில்லை ஆனால் உனக்கு மட்டும் எப்படி தம்பி கிடைத்தது" என கேள்வியெழுப்பினார் "அது ஒன்றும் இல்லை ஐயா! அவர்கள் அனைவரும் ஒரே கூச்சலாகவும் சத்தமாகவும் பேசிகொண்டு தேடியதால் அவர்களால் இந்த கைகடிகாரத்தை தேடிகண்டுபிடித்திடமுடியவில்லை ஆனால் நான் மிகஅமைதியாக நெற்களஞ்சியத்தின் மையத்திற்குள் தரையில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தேன் அப்போது அமைதியாக இருந்ததால் இந்த கைக்கடிகாரம் இயங்கும் டிக் டிக் எனும் ஒலி மட்டும் என்னுடைய காதில் கேட்டது அதனைதொடர்ந்து அந்த டிக் டிக் எனும் ஒலிவந்த திசையில் தேடிகொண்டே சென்றபோது குவியலான வைக்கோலிற்கு அடியில் இந்த கைகடிகாரம்இருந்தது கண்ணுற்று எடுத்துவந்தேன்" என பதில் கூறினான் உடன் தன்னுடைய கைக்கடிகாரத்தை பெற்றுகொண்டு தான் வாக்களித்தவாறு அந்த சிறுவனுக்கு ரூ.200/- பரிசாக வழங்கினார் ஆம் அமைதியான மனம் அலைபாயும் மனதை விட சிறப்பாக தெளிவாக சிந்தித்து எந்தவொரு பிரச்சினைக்கும் உண்டான தீர்வினை எளிதாக கிடைக்கச்செய்யும் அதனால் தற்போதைய நம்முடைய ஆரவாரமான வாழ்க்கையில் தினமும் சிறிதுநேரம் அமைதியாக அமர்ந்து சிந்தித்தால் நம்முடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுசெய்வதற்கான வழி கண்டிப்பாக கிடைக்கும் என்ற செய்தியை மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...