சனி, 27 நவம்பர், 2021

போகட்டும் விட்டிடுக

 


தற்போது நாமனைவரும் பல்லூடகங்களின் பிடியில்அதிலும் முகநூல்(facebook) போன்ற சமூக ஊடக உலகில் வாழ்ந்துகிறோம், ந்த சமூகஊடகங்களில் நாம் ஒவ்வொரு நிமிடமும் புதிய பிரபலமான தலைப்புகளை காண்கிறோம் , கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் நம்முடைய கருத்தை பதிவுசெய்கிறோம். சமூக ஊடகங்களில் பெரும்பாலானவை உள்ளடக்க பிரச்சாரத்தால் இயக்கப்படுகிறது. நம்முடைய உண்மையான குறிக்கோள்களை மறந்துவிட்டு, "விராட் அல்லது தோனி யார் சிறந்தவர்?" என்பன போன்ற நமக்கு தொடர்பே இல்லாத பிரச்சினைகளில் அறிமுகமில்லாத அந்நியர்களுடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கி விடுகின்றோம் "அவர்களுள்எந்த பிரபலம் சிறந்தவர்?" என்றவிவாதம் நம்மைப் பற்றியதா? நம்முடைய வாழ்க்கையை பற்றியதா எனகவலைபடாமல் அனல்பறக்கின்ற அளவிற்கு விவாத்தினை நடத்தி அதிலேயே நாள்முழுவதும் மூழ்கிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்கிறார்கள், ஆனால் நம்மைப் பற்றி கவலைப்படாதஇந்த பிரபலங்களுக்காக நம்முடைய இருப்பையே மறந்து அதனை பற்றிய விவரம் கூட அறிந்து கொள்ளமல் நாம் அவர்களைப் பற்றி சண்டையிடுகிறோம்.

இதைபோன்ற நிகழ்வுகளில் கருத்துகளை உருவாக்குவதற்கும், நமக்குப் பொருட்படுத்தாத பிரச்சினைகளில் பயனற்ற முறையில் போராடுவதற்கும் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறோம். இது நமது மன அமைதியையும் தெளிவாக பாதிக்கிறது. இவை அனைத்திற்காகவும் நாம் செய்யும் தர்க்கத்தைப் பற்றி யோசித்துப் பார்த்திடுக? சில செய்திகளை அப்படியே விட்டுவிட வேண்டும். ம்மால் அதை மாற்ற முடியாது. நமக்குப் பிடித்த நடிகர் அல்லது அரசியல்வாதியைப் பற்றிய மற்றவரின் கருத்தை நம்மால் மாற்ற முடியாது, எனவே,இதுபோன்ற செய்திகளில் ஒருவருக்கொருவர் நேரத்தையும் சக்தியையும் ஏன் வீணாக்க வேண்டும்? தேவையற்ற செய்திகளின் தேவையற்ற அதிகப்படியான தகவல்களை நாம் எடுத்துச் செல்கிறோம், இது நம்முடைய வாழக்கையின் இலக்குகளிலிருந்து நம் கவனத்தை மாற்றுகிறது. மட்டைபந்துவிளையாட்டிலிருந்து இன்னொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு சிறந்த , சாதாரண மட்டைபந்தாளர்களுக்கு இடையேயான வேறுபாடு என்னவெனில், சிறந்த மட்டபந்தாளருக்கு வீசுகின்ற பந்துகளில் எந்த பந்தை அடிக்காமல் விடுது எதை மிகச்சரியாக அடிப்பது என்பது பற்றிய விவரம் நன்கு தெரியும். அது அவரது அடிக்கின்ற பாதுகாப்பு எல்லைக்கு வெளியே இருந்தால், அவர் அதை அடிப்பதற்காகபாதுகாப்பு எல்லையைவிட்டு வெளியேறாமல் பந்தை மிகச்சரியாக அடித்து விளையாடுவார் அவரது மனவலிமை அல்லது பந்துகள் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும்வரை ஓட்டங்களை எடுப்பார். அப்படி செயல்படுவதான் மூலமாக மட்டுமே அவர் வெற்றி பெறுகிறார். நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தான். அமைதியாக இருக்க முயற்சி செய்க நம்முடைய பணியில் அதிக கவனம் செலுத்துக. நம்மைச் சுற்றி பல தவறுகள் நடக்கின்றன. அவை எல்லாவற்றையும் நம்மால் மாற்ற முடியுமா? அவற்றில் நம்மால் மாற்ற முடிந்தவைகளை மட்டும் மாற்ற முயற்சித்திடுக ஆயினும் அவற்றுள் ஒவ்வொரு செயலிலும் நாம் தொடர்ந்து தலையிட்டுக்கொண்டே இருந்தால், நாம் எப்போது நம்முடைய இலக்கை நோக்கி செயல்படமுடியும்? சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரத்தின் கைப்பாவையாகநாம் இருக்கவேண்டாம். சமூக ஊடகங்களில் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி கவலைபடாமல் அவைகளை அப்படியே போகட்டும் என விட்டிடுக ஆனால் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும், நமக்கான புதிய திறன்களையும் செயல்களையும் கற்றுக் கொள்வதற்கான சிறந்த தொரு கருவியாக அதனை பயன்படுத்தி கொள்க.

அதை நேர்மறையாக மட்டும் பயன்படுத்திடு. நமக்கும் நம்முடைய தொழிலுக்கும் தொடர்பில்லாத முக்கியமில்லாத செய்திகளை அப்படியே விட்டுவிட கற்றுக்கொள்க.

ஞாயிறு, 21 நவம்பர், 2021

ஒவ்வொரு உயிரும் முக்கியம்

 


மிகவும் பொருத்தமான ஆனால் பரவலாக விவாதிக்கப்படாத "தற்கொலை".எனும் செய்தியை பற்றிஇப்போது அறிந்துகொள்வோம். இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் உயர்ந்து கொண்டே வருகிறது.


ஆயினும தற்கொலை என்பது தனிநபரின் மரணம் மட்டுமன்று நாம் வாழ்கின்ற இந்த சமூகத்தின் மரணமுமாகும்.

நாமனைவரும் இவ்வாறு தற்கொலை செய்துகொள்ளும் நபரை கோழை என்று அழைக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒரு தனிநபரின் துயரத்தை உண்மையில்ஏதோ ஒரு கடுமையான பிரச்சனையால்தான் அவர் இந்த முடிவினை எடுக்கவுள்ளார் என அமைதியாக அவருடைய பிரச்சினையை காதுகொடுத்து கேட்கின்றோம்? ஏனெனில் தற்போதைய சூழலில் நாமனைவரும் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக மாறிவிட்டோம், நம்மோடு வாழ்கின்ற மக்களின் இருப்பையே மறந்துவிட்டோம்.

தற்போது சமூக ஊடகங்கள் நம்மை அந்நியர்களுடன் மிகநெருக்கமாக கொண்டு வந்துள்ளன, ஆனால் நம்மை நம்முடைய உண்மையான நண்பர்களிடமிருந்தும் , நலன் விரும்பிகளிடமிருந்தும் பிரித்துவிட்டன.


மற்றவர்களின் பிரச்சினையைக் கேட்பது என்பது நமக்கு ஒருநேர விரயமாகின்ற செயலாகிவிட்டது. நம் தரப்பின் துயரத்தை யாராவது காது கொடுத்து கேட்க மாட்டார்களா என மனிதமனம் தேடுகின்ற ஒரு காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்துவருன்கிறோம். நாம் அனைவரும் எவ்வளவு வலுவாக மாற முயற்சி செய்யலாம் என்று பாதிக்கப்படக்கூடிய பக்கம் நம் அனைவருக்கும் உள்ளது. நாம் இருக்கும் அந்த உள்வெளியில் ஒரு சிலர் மட்டுமே உள்நுழைய முடியும்

நம்மடைய உண்மையான பாதுகாப்பின்மையை மறைக்கவும், ஆனால் சில நேரங்களில் இந்த பாதுகாப்பின்மை மிகவும் துயரத்துடன் மாறும், மேலும் நம்மைக் கேட்க யாரையும் காணாதபோது, நாம் கடுமையான ஒன்றை நினைக்கிறோம். ஆனால் ஒரு சமூகமாக நாம் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம் அல்லது அந்த நபரை கோழை அல்லது பலவீனமானவர் என்று முத்திரை குத்திவிடுகின்றோம்.

அவ்வாறு தற்கொலை செய்துகொள்கின்ற நபர் உண்மையில் அதற்கான பொறுப்பு அன்று, உண்மையில் அதற்கு நாம் வாழ்கின்ற இந்த சமூகம் முழுவதும்தான் பொறுப்பு. இது அந்த நபரின் மனப்போராட்டத்தைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் தவறிய ஒரு சமூகத்தின் கொலையாகும்.

நாம் பணத்தையோஅல்லது யதார்த்தமான செய்திகளையோ நம்முடைய சட்டைபையில் வைத்திருக்கவில்லை அவை எப்போதுவேண்டுமானாலும் கடந்து செல்லககூடும் நாம் சில உணர்ச்சிகளுடனா பிறந்தோம். ஒரு சிறு குழந்தைக்கு எப்படி சிரிக்க அல்லது அழுவது என்று யாரும் கற்பிப்ப தில்லை. . சிலரால் அந்த உணர்ச்சி வெடிப்பை சமாளிக்க முடிவதில்லை

போட்டியுடனான அவசரத்தில் ஓடிக்கொண்டேயிருக்கன்ற இந்த குருட்டு உலகில் நாம் ஒருவருக்கொருவர் அனுசரனையாக வாழ மறந்துவிட்டோம். பொருள் சார்ந்த செய்திகள் மட்டுமே நமக்கு முக்கியம் என்றும். நமக்கு அதிக பணம், அதிக வெற்றி, அதிக புகழ் வேண்டுமென, நாம்அவைகளை துரத்திகொண்டே இருக்கின்றோம் ஆனால் நாம் அதை என்ன விலையில் பெறுகிறோம்? என்பதை காணத்தவறுகின்றோம்

இந்தியாவில் உடனடி தலைவர்களையும் அல்லது போக்கிரிகளையும் உருவாக்குகின்ற மனப்பான்மை கொண்டவர்களாகிய நாம். மற்றவர்களை விமர்சிப்பதில் அல்லது மற்றவர்களின் செயல்களுக்கு தீர்ப்பளிப்பதில் நாம் மிகவும் இரக்கமற்றவர்களாக இருக்கின்றோம், மற்றவர்களுக்கும் உணர்ச்சிகள் இருப்பது என்பதையே மறந்து விடுகின்றோம்.

தேர்வில் தோல்வியடையும் போது அல்லது கனவு வேலை கிடைக்காதபோது உலகமே முடிந்துவிடாது. இவ்வாறு மனச்சோர்வடையும் போது மறறவர்களிடம் மனக்குறைகளை கூறுக, ஏதாவது எழுதுக, ஆலோசனை உதவிக்கு மனநில மருத்துவரிடம்செல்க. அதன் வாயிலாக நம்முடைய மனதையும் எண்ணங்களையும் தெளிவுபடுத்திடுக,

நம் வாழ்வின் குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பதே தவிர, நம்மிடம் இல்லாதவற்றிற்காக அதிருப்தி அல்லது சோகமாக இருக்கக்கூடாது. நாம் சம்பாதிக்கும் பொருட்களையும் பணத்தையும் விட ஒவ்வொருவரின் வாழ்க்கையும் முக்கியம். பணம் சம்பாதிப்பது போன்றே நம்முடைய அன்புக்குரியவர்களின், நம்முடைய நண்பர்களின் மனக்குறைகளை அறிந்து அவர்கள் தொடர்ந்து வாழுகின்ற சூழலை உருவாக்குவது மிகமுக்கியமாகும்.


திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டார் அல்லது அதிகமாகப் பேசுவார், .அல்லது நீண்ட காலமாக பேசாு இருக்கின்றார் என்றவாறு மனம் மாறிவிட்ட நம்முடைய மனநிலையை வழக்கமான நிலைக்கு கொண்டுவருவதற்காக நண்பரை நேரில் அழைத்து அவருடைய மனக்குறைகளை மனந்திறந்து பேசுகின்ற பேச்சைக் கேட்க தினமும் 10-15 நிமிடங்கள் ஒதுக்குக, அவர் மனம்திறந்து பேசுவதை காதுகொடுத்து கேட்டிடுக . இவ்வாறு சில நிமிடங்கள் ஒதுக்குவதன் வாயிலாக யாரோ ஒருவருக்கு மீட்பாளராக செயல்பட்டு அவருடைய உயிரை காத்திடுக

சனி, 13 நவம்பர், 2021

கழுத்தை நெரிக்கின்ற அளவிலான போட்டியுடைய தற்போதையசூழலில் நம்முடையமனநலனை பராமரித்தல்

தற்போது நாம் அனைவரும் கழுத்தை நெருக்கி ஒடுக்குகின்ற அளவிற்கான போட்டியுடைய சகாப்தத்தில் வாழ்ந்துவருகின்றோம். ஒரு மாணவராக இருந்தால், தேர்வில் கலந்து கொள்வதற்கான போட்டிக்காக தயார் செய்வதில் எப்போதும் பரபரப்பாக இருக்கநேரிடும், ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தால், தன்னுடைய தொழிலை அல்லது நிறுவனத்தை மேலும் வளர்த்து அதிக வருமானம் சம்பாதிப்பதில் எப்போதும் பரபரப்பாக இருக்கநேரிடும். பணியாளராக இருந்தால் தற்போதைய நவீண வாழ்க்கை வசதிகேளுக்கு ஏற்ற வருமானம் ஈட்டுவதற்காக எப்போதும் பரபரப்பாக இருக்கநேரிடும். என்றவாறான தற்போதைய சூழலில் வாழும் நாமெல்லோரும் மிகவும் பரபரப்பாக மேலும் பொருளீட்டுவதிலேயே நம்முடைய கவணம் முழுவதையும் செலுத்தி இயந்திரம் போன்று இயங்கி கொண்டிருக்கின்றோம்

சக நண்பர்களையும் தோழர்களையும் விட கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் வசதிகளையும் நாமே அடைய விரும்புகிறோம். நம்மில் ஒருவருக்கொருவர் அவைகளை பற்றிய விவரங்களை கூறுவதை கேட்பதற்குகூட யாருக்கும் நேரமில்லாமல் நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம், அதனால் நம் உணர்ச்சிகள் அனைத்தையும் மெதுவாக பின்புறத்திற்கு தள்ளி நாமெல்லோரும் உணர்வற்ற புதியொதரு இயந்திரங்களாக மாறி இயங்கிவருகிறோம்.

இவ்வாறான தற்போதைய சூழலில்மாணவர்கள் ஏதேனும் ஒரு தேர்வில் தோல்வியடையும் போது, அல்லது தொழில்முனைவோர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு விலகும்போது, அல்லது நம் அன்புக்குரியவர்களை இழக்கநேரிடும் போது அல்லது உறவில் முறிவு ஏற்படும்போதும் இந்த பரபரப்பான நம்முடைய வாழ்க்கைமுறை என்ன ஆகின்றது?

அவ்வாறான சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கையே அதோடு முடிந்து போனதாக முடிவு செய்து கொள்கிறோம். நம்முடைய மனவருத்தத்தை கூறி சாய்ந்து அழுவதற்கு நம்மைச் சுற்றிலும் ஏதேனும் தோள்கள் கிடைக்காத என நாம் தேடுகிறோம், ஆனால் இந்த கண்மூடித்தனமான போட்டியில் நாம் சாய்ந்து அழ வேண்டிய தோள்களை கூட தட்டிவிட்டிட்டு வெகுதூரத்திற்கு நாம் சென்று விட்டதை அதன்பிறகு தான் கண்டு நாம் திகைத்து நின்று விடுகிறோம் என்பதே உண்மை நிலவரமாகும், அதனால் நம்முடைய தனிமையானது நம் மனதை ஆழ்ந்த மனவருத்தத்திற்குள் மூழ்கடித்து கடுமையான மன அழுத்தத்திற்கு நம்மை தள்ளிவிடுகின்றது.

உண்மையில் நாம் நமக்கு அத்தியாவசியமாக தேவையானவற்றை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம், ஆனால் எப்போதும் தற்காலிகமான மகிழ்ச்சியை தருகின்ற செயல்களைதேடி ஓடிக்கொண்டே யிருக்கிறோம். இதன்வாயிலாக நாமே நம்முடைய வாழ்க்கையை சிக்கலாக்குகிறோம், பின்னர் நாம் அவ்வாறான சூழ்நிலைகளை சபிக்கிறோம்

இவ்வாறான பிரச்சனை நம் சிந்தனையில்தான் இருக்கிறது, நம் சூழ்நிலைகளில் அன்று என்பதை காணமறுக்கின்றோம்.

தினமும் தற்கொலை , மாரடைப்பு போன்ற பலசெய்திகள் வந்து கொண்டேஉள்ளன. ஏனெனில் நாம் நமது மன நலனில் கவனம் செலுத்து வதில்லை அல்லது அவசியமில்லாத வைகளில் மட்டும் அதிக ஈடுபாடு காண்பிக்கின்றோம்.

நாம் தினமும் காலையில் 30 நிமிடங்கள் மனநலனிற்காக மனதினை ஒருமுகபடுத்தி அமைதியாக யோகா செய்திடவேண்டும் என முடிவுசெய்து செயற்படுத்திட துவங்கிடும்போது. திடீரென்று அன்று நாம் முடிக்க வேண்டிய சில பணிகள் இருப்பதால். அமைதியாக யோகாசெய்வது அவ்வளவு முக்கிய மன்று, முடிக்கவேண்டிய பணிதான் முக்கியம் என நாம் நினைப்பதால், அவ்வாறான அருமையான நேரத்தினை அன்றைய முடிக்க வேண்டிய பணிக்கு திருப்பிடு கின்றோம் இது நம்முடைய மனநலனை பாதிப்பதில் முதல் காரணியாக திகழ்கின்றது.

அடுத்து , நம்முடைய அன்புக்குரியவர்களுடன் கலந்துரையாடுவதற்காக நம்முடைய நேரத்தை செலவழிக்க விரும்புகின்ற சூழ்நிலையில், திடீரென்று ஒரு வாடிக்கையாளர் நம்மை அழைத்து அவருடைய கோரிக்கையை உடன் முடிக்குமாறு நம்மிடம் கோருகிறார்.அதனை தொடர்ந்து நம்முடைய அன்புக்குரியவர் களுடன் நேரத்தை செலவிடுவதை விட நமக்கு பணம்தான் முக்கியம் என்பதால் நாம் அந்த நேரத்தினை வாடிக்கையாளரின் கோரிக்கையை நிறைவேற்று வதற்கு திருப்பிவிடுகின்றோம்.ஆயினும் வெகுவிரைவில் நம்மிடம் பணம் வந்து சேர்ந்துவிடும் ஆனால் அவ்வாறு ஏராளமாக நம்மிடம் பணம் இருக்கும் போது நம்முடைய அன்புக்குரிய வர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . இந்நிலையில் நாம் அந்த சூழ் நிலையை சபிப்போம் ஆனால் நாம் தான் பணத்தை விரும்பி நம்முடைய அன்புக்குரியவர்களுடன் நேரத்தினை செலவிடாது விட்டுவிட்டோம் என்பதை உணர மறுக்கின்றோம்.

போட்டியுடைய இவ்வுலகில் நமக்கு வெற்றி அல்லது பணம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று நமது மன நலனும் உறவுகளுடனான கலந்துரையாடுவதற்காக நம்முடைய நேரத்தை செலவிடுவதும் நமக்கு முக்கியமாகும். ஒரு மனிதன் ஒரு உணர்ச்சியற்ற இயந்திரமன்று. நம் அன்புக்குரியவர்களுடன் சரியாக நேரத்தை செலவிடுவது நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அடிப்படையாகும்

நாமும் மனஅமைதியுடன் இல்லாமல்.எப்போதும் நம்முடைய உணர்ச்சிகளுடன் தொடர்ந்து எதிர்த்து சண்டையிட்டுகொண்டே இருக்கின்றோம்.தற்போதைய நமது சமூகமும் நமது மன ஆரோக்கியத் திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. இந்நிலையில் நம்முடைய மனநலனைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிப்பது நல்லது அதைவிட உளவியலாளரின் உதவியைப் பெறுவது பரவாயில்லை. நம் மனம் நம் உடலின் ஒரு பகுதியாகும், அதுஎப்போதுவேண்டுமானாலும்சரியில்லாமல் போகலாம்.அதனால் நம்முடைய கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் கவனம் செலுத்துவது போன்றே, நம்முடைய மனநலன் மீதும் கவனம் செலுத்திடுக.




புதன், 3 நவம்பர், 2021

தோல்வி ஏன் அவசியம்?

 


நாம் அனைவரும் எந்தவொரு செயல்களிலும் நமக்கு தோல்வி ஏற்பட்டுவிடுமா என தோல்வியை சந்திப்பதில் மிகவும் பயப்படுகிறோம். அவ்வாறானதொரு தோல்வியானது நம்முடைய கனவுகளை கலைத்து விடுகிறது. ஆனால் அது இல்லாமல் நம்முடைய வாழ்க்கை ஒழுங்காக நடைபெறமுடியுமா என்ற அடிப்படை தகவல் கூடநம்மில் பலருக்கு தெரியாமலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம்?

ஏனெனில் நமது வாழ்வில் தோல்விகள் மீண்டும் மீண்டும் வந்து நமது திறனை பரிசோதிக்கின்றன. உண்மையில் நாம் அறிந்துகொள்கின்ற ஒவ்வொரு வெற்றிக் கதையிலும் அவ்வெற்றிக்குப் பின்னால் பலதோல்விகளைக் கொண்டுள்ளது . வெற்றி பெறுபவர்கள் தோல்விகளை தங்களுடைய வெற்றிக்கான படிக்கல்லாக கொண்டு அவ்வெற்றியை பெறுவதற்கான தீர்மானத்தை எடுப்பதற்கு அது உதவுகின்றது.

தோல்வி இல்லாத வெற்றிக் கதைகளை விட வெற்றிக்கான தோல்வியின் கதைகள் அவ்வெற்றியை அடைந்தே தீரவேண்டும் என ஊக்குவிக்கின்றன.

நாம் எப்போதும் தோல்வி அல்லது நிராகரிப்பை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வதே நல்லது. உலகின் மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது தோல்விக்குப் பிறகு அடைகின்ற வெற்றி மட்டுமேயாகும்.

ஒரு தேர்வில் அல்லது நம்முடைய கனவு பணிக்கான நேர்காணலில் அல்லது நம்முடைய உறவுகளை பேணிகாப்பதில் தோல்வியடையலாம், ஆனால் எப்போதும் அந்த தோல்வியை வெல்வதற்கான உள்ளமைந்த திறன் நம்மிடம் உள்ளது. அந்த தோல்வியை உந்துதலுடன். சமாளிப்ப தற்கான சரியான ஆற்றல் நமக்குள் மறைந்துள்ளது. அவ்வாறான தோல்வியின் போது நாம் அழுகிறோம், நம்மை தனிமைப் படுத்தி கொள்கிறோம் அல்லது நம்முடைய வாழ்க்கையில் எதிர்மறையான ஒன்றை சந்திக்கும்போது நம்மில் சிலர் மிகக்கோபக்காரனாக மாறி இருக்கலாம். அவ்வாறு செய்வது சரியானதுதான், ஆனால் அப்படியே இருப்பது சரியன்று.


நம்முடைய வாழ்வில் தோல்வி அடைவதும் நல்லதுதான், ஏனெனில் அது நம்முடைய சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்கு உதவுகின்றது. அது நம்முடைய குறைபாடுகளைப் பற்றி சிந்திக்க வைக்கிறது;நம்முடைய நலன் விரும்பிகளின் உண்மையான நிறங்களை நாம்அறிந்து கொள்ளஉதவுகின்றது மிகமுக்கியமாக அது நமக்கு பொறுமையையும் விடாமுயற்சியையும் கற்பிக்கிறது; அவ்வெற்றியை கண்டிப்பாக பெற நம்மைத் தூண்டுகிறது; அதனோடு நம்மை நல்லதொரு வெற்றிவீரணாக ஆக்குகிறது.

நாம் சுவாசிக்கும் வரை நம்முடய வாழ்க்கை நீடிக்கும் அதனால் நம்முடைய ஒவ்வொரு சுவாசத்தையும் வெற்றிக்காக கணக்கிடுவதை உறுதிசெய்க. நாம்சாதாரணமாக பிறக்கவில்லை. நமக்குள் மறைந்திருக் கின்ற வெற்றி வாய்ப்புகளுடன்தான் நாம் பிறந்துள்ளோம் திறனுடன் மறைபவர்களை இவ்வுலகம் நினைவில் கொள்வதில்லை, ஆனால் அவர்களின் திறனை வெற்றி படிக்கல்லாக நிறைவேற்ற முடிந்தவர்களை மட்டுமே அது நினைவில் கொள்கிறது.

அதனால் நம்மிடம் உள்ள மறைக்கப்பட்ட ஆற்றலை வெளிப்படுத்திடுக. நம்முடைய மனநிலையின். ஒரு சூழ்நிலையைப் பற்றி விவாதிப்பது மிகவும் நல்லது, ஆனால் அதை மாற்ற நடவடிக்கை எடுத்திடுக.

நம்முடைய வாழ்க்கை நியாயமானது அன்றுதான். ஆனால் அது நம்மை ஒவ்வொரு முறையும் நம்முடைய மனதின் கடினத்தன்மையை மீண்டும் மீண்டும் பரிசோதிக்கின்றது. எந்தவொரு செயலையும் அதோடு விட்டு விடவேண்டுமா அல்லது மீண்டும் கடினமாக முயற்சி செய்து வெற்றிபெற வேண்டுமா என்பது நம்முடைய கையில்தான் உள்ளது.

இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த கேப்டன்களான கங்குலி ,தோனி ஆகிய இருவர்களின் வாழ்க்கையும் தோல்விகளுடன் தான் துவங்கியது என்பதை தெரிந்துகொள்க. 1992 ல் விளையாட்டிலிருந்தே கங்குலி கைவிடப்பட்டார் ஆயினும் தனது விடாமுயற்சியினால் சிறந்தகேப்டனாக உயர்ந்தார் , அவ்வாறே 1996 இல் ஒரு பெரிய மீள்துவக்கத்தின்போது தோனி பூஜ்ஜியத்துடன்தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வாறு தோல்வியை தனது வெற்றிப்பாதையின் படிக்கல்லாக மாற்றியவர்களின் கதைகள் பலஉள்ளன.

அதனால் தோல்வி ஒரு குற்றம் அன்று. யார் வேண்டுமானாலும் தோல்வி யடையலாம், ஆனால் நம்முடைய வாழ்க்கையானது தோல்வியுடையது என முடிவுசெய்யாது, அதன்வாயிலாக நம்முடைய சிறந்த திறனை வெளியே கொண்டு வந்து வாழ்க்கையில் வெற்றிபெறுக.

நம்முடைய வாழ்க்கையில் நாம் பெறுகின்ற தோல்வியை தண்டனையாக இல்லாமல் ஒரு பாடமாக எடுத்துக் கொள்க,.


பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...