புதன், 3 நவம்பர், 2021

தோல்வி ஏன் அவசியம்?

 


நாம் அனைவரும் எந்தவொரு செயல்களிலும் நமக்கு தோல்வி ஏற்பட்டுவிடுமா என தோல்வியை சந்திப்பதில் மிகவும் பயப்படுகிறோம். அவ்வாறானதொரு தோல்வியானது நம்முடைய கனவுகளை கலைத்து விடுகிறது. ஆனால் அது இல்லாமல் நம்முடைய வாழ்க்கை ஒழுங்காக நடைபெறமுடியுமா என்ற அடிப்படை தகவல் கூடநம்மில் பலருக்கு தெரியாமலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம்?

ஏனெனில் நமது வாழ்வில் தோல்விகள் மீண்டும் மீண்டும் வந்து நமது திறனை பரிசோதிக்கின்றன. உண்மையில் நாம் அறிந்துகொள்கின்ற ஒவ்வொரு வெற்றிக் கதையிலும் அவ்வெற்றிக்குப் பின்னால் பலதோல்விகளைக் கொண்டுள்ளது . வெற்றி பெறுபவர்கள் தோல்விகளை தங்களுடைய வெற்றிக்கான படிக்கல்லாக கொண்டு அவ்வெற்றியை பெறுவதற்கான தீர்மானத்தை எடுப்பதற்கு அது உதவுகின்றது.

தோல்வி இல்லாத வெற்றிக் கதைகளை விட வெற்றிக்கான தோல்வியின் கதைகள் அவ்வெற்றியை அடைந்தே தீரவேண்டும் என ஊக்குவிக்கின்றன.

நாம் எப்போதும் தோல்வி அல்லது நிராகரிப்பை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வதே நல்லது. உலகின் மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது தோல்விக்குப் பிறகு அடைகின்ற வெற்றி மட்டுமேயாகும்.

ஒரு தேர்வில் அல்லது நம்முடைய கனவு பணிக்கான நேர்காணலில் அல்லது நம்முடைய உறவுகளை பேணிகாப்பதில் தோல்வியடையலாம், ஆனால் எப்போதும் அந்த தோல்வியை வெல்வதற்கான உள்ளமைந்த திறன் நம்மிடம் உள்ளது. அந்த தோல்வியை உந்துதலுடன். சமாளிப்ப தற்கான சரியான ஆற்றல் நமக்குள் மறைந்துள்ளது. அவ்வாறான தோல்வியின் போது நாம் அழுகிறோம், நம்மை தனிமைப் படுத்தி கொள்கிறோம் அல்லது நம்முடைய வாழ்க்கையில் எதிர்மறையான ஒன்றை சந்திக்கும்போது நம்மில் சிலர் மிகக்கோபக்காரனாக மாறி இருக்கலாம். அவ்வாறு செய்வது சரியானதுதான், ஆனால் அப்படியே இருப்பது சரியன்று.


நம்முடைய வாழ்வில் தோல்வி அடைவதும் நல்லதுதான், ஏனெனில் அது நம்முடைய சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்கு உதவுகின்றது. அது நம்முடைய குறைபாடுகளைப் பற்றி சிந்திக்க வைக்கிறது;நம்முடைய நலன் விரும்பிகளின் உண்மையான நிறங்களை நாம்அறிந்து கொள்ளஉதவுகின்றது மிகமுக்கியமாக அது நமக்கு பொறுமையையும் விடாமுயற்சியையும் கற்பிக்கிறது; அவ்வெற்றியை கண்டிப்பாக பெற நம்மைத் தூண்டுகிறது; அதனோடு நம்மை நல்லதொரு வெற்றிவீரணாக ஆக்குகிறது.

நாம் சுவாசிக்கும் வரை நம்முடய வாழ்க்கை நீடிக்கும் அதனால் நம்முடைய ஒவ்வொரு சுவாசத்தையும் வெற்றிக்காக கணக்கிடுவதை உறுதிசெய்க. நாம்சாதாரணமாக பிறக்கவில்லை. நமக்குள் மறைந்திருக் கின்ற வெற்றி வாய்ப்புகளுடன்தான் நாம் பிறந்துள்ளோம் திறனுடன் மறைபவர்களை இவ்வுலகம் நினைவில் கொள்வதில்லை, ஆனால் அவர்களின் திறனை வெற்றி படிக்கல்லாக நிறைவேற்ற முடிந்தவர்களை மட்டுமே அது நினைவில் கொள்கிறது.

அதனால் நம்மிடம் உள்ள மறைக்கப்பட்ட ஆற்றலை வெளிப்படுத்திடுக. நம்முடைய மனநிலையின். ஒரு சூழ்நிலையைப் பற்றி விவாதிப்பது மிகவும் நல்லது, ஆனால் அதை மாற்ற நடவடிக்கை எடுத்திடுக.

நம்முடைய வாழ்க்கை நியாயமானது அன்றுதான். ஆனால் அது நம்மை ஒவ்வொரு முறையும் நம்முடைய மனதின் கடினத்தன்மையை மீண்டும் மீண்டும் பரிசோதிக்கின்றது. எந்தவொரு செயலையும் அதோடு விட்டு விடவேண்டுமா அல்லது மீண்டும் கடினமாக முயற்சி செய்து வெற்றிபெற வேண்டுமா என்பது நம்முடைய கையில்தான் உள்ளது.

இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த கேப்டன்களான கங்குலி ,தோனி ஆகிய இருவர்களின் வாழ்க்கையும் தோல்விகளுடன் தான் துவங்கியது என்பதை தெரிந்துகொள்க. 1992 ல் விளையாட்டிலிருந்தே கங்குலி கைவிடப்பட்டார் ஆயினும் தனது விடாமுயற்சியினால் சிறந்தகேப்டனாக உயர்ந்தார் , அவ்வாறே 1996 இல் ஒரு பெரிய மீள்துவக்கத்தின்போது தோனி பூஜ்ஜியத்துடன்தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வாறு தோல்வியை தனது வெற்றிப்பாதையின் படிக்கல்லாக மாற்றியவர்களின் கதைகள் பலஉள்ளன.

அதனால் தோல்வி ஒரு குற்றம் அன்று. யார் வேண்டுமானாலும் தோல்வி யடையலாம், ஆனால் நம்முடைய வாழ்க்கையானது தோல்வியுடையது என முடிவுசெய்யாது, அதன்வாயிலாக நம்முடைய சிறந்த திறனை வெளியே கொண்டு வந்து வாழ்க்கையில் வெற்றிபெறுக.

நம்முடைய வாழ்க்கையில் நாம் பெறுகின்ற தோல்வியை தண்டனையாக இல்லாமல் ஒரு பாடமாக எடுத்துக் கொள்க,.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...