சனி, 25 ஜூலை, 2015

நம்முடைய பிள்ளைகளை நேர்மறையான சிந்தனைகளுடனும் வளர்த்து வருவோம்


சுட்டி கிட்டி என்ற இரு சிறுவர்களும் அருகருகான வீட்டில் வாழ்ந்துவந்தனர் சுட்டியின் பெற்றோர்கள் எப்போதும் நேர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி நேர்மறையான சிந்தனைகளுடன் தங்களுடைய பிள்ளையான சுட்டியை வளர்த்து வந்தனர் அதாவது இந்திந்த செயலை இப்படி இப்படி செய்யவேண்டும் அப்போதுதான் சிறப்பாக இருக்கும் என அறிவுரை கூறுவதற்கேற்ப அவ்வாறே மிகச்சரியாக செய்து எந்தபிரச்சினையிலும் சிக்காமல் மட்டிகொள்ளாமல் சுட்டி இருப்பான்

ஆனால் கிட்டியின் பெற்றோர்கள் எப்போதும் எதிர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி எதிர்மறையான சிந்தனைகளுடன் தங்களுடைய பிள்ளையான கிட்டியை வளர்த்து வந்தனர் அதாவது எப்போதும் அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூறிவருவர் பொதுவாக எப்போதும் மனித மூளையானது அதிலும் சிறுவர்களின் வளர்ந்து வரும் மூளையானது புதியதாக எதையாவது கற்று தேர்ச்சி பெறவிரும்பும் அவ்வாறான நிலையில் நாம் ஒரு செயலை செய்யாதே என கூறினால் உடன் ஏன் அதனை செய்துபார்த்தால் என்னவென செய்யதுடிக்கும் அதனடிப்படையில் சுட்டியானவன் அவனுடைய பெற்றோர்கள் இந்த செயலை செய்யாதே என்றால் சுட்டியானவன் அந்த செயலை மட்டும் முயன்று செய்து இக்கட்டிலும் இன்னலிலும் மாட்டிகொள்வது வழக்கமாகும் இதேபோன்ற நடைமுறையின் போது சிறு குழந்தைகள் என்பதால் மரங்களில் ஏறி காய்கணிகளை பறிப்பது வழக்கமாகும் அவ்வாறு நடைமுறையில் சுட்டியும் கிட்டியும் அருகிலிருந்த மரத்தில் விளையாட்டாக ஏறிவிட்டனர் சுட்டியானவன் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான்

ஆனால் கிட்டியானவன் மரத்தின் பாதிதூரம் இருந்த கிளையில் இருந்தான் இந்நிலையில் பயங்கரமான சூறைகாற்று வீசியது அப்போது சுட்டியின் பெற்றோர் சுட்டியை அழைத்து "தம்பி! மரக்கிளையை நன்கு கெட்டியாக பிடித்து கொள் காற்றுவீசுவது நின்றவுடன் கீழே பத்திரமாக இறங்கிவிடலாம்" என நேர்மறையாக கூறியதை தொடர்ந்து சுட்டி மரத்தின் கிளையை நன்கு கெட்டியாக அனைத்து பிடித்துகொண்டான்

ஆனால் கிட்டியின் பெற்றோர்கள் "டேய் தம்பி! சூறை காற்று வேகமாக வீசுகின்றது நீ கீழே விழுந்துவிடாதே!” என எதிர்மாறையாக அறிவுரைகூறினார்கள் அதனை தொடர்ந்து கிட்டியானவன் மரக்கிளையை சரியாக பிடித்து கொள்ளாததால் காற்று வீசுகின்ற வேகத்தில் தடுமாறி கீழேவிழுந்து அவனுக்கு கால்முறிவும் கைமுறிவும் ஏற்பட்டது

பொதுவாக பெற்றோர்கள் அனைவரும் தத்தமது பிள்ளைகளிடம் நேர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி அவர்களை நேர்மறையான சிந்தனைகளுடன் வளர்த்திடவேண்டும் மாறாக எதிர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி அவர்களை எதிர்மறையான சிந்தனைகளுடன் வளர்த்தால் அதனுடைய பாதிப்பை உடன் நாம் சந்திக்கவேண்டியிருக்கும் ஏனெனில் நம்முடைய மூளையானது எப்போதும் நாம் என்ன கூறுகின்றோமோ அதனை அப்படியே செயல்படுத்துகின்றது அதனால் நாமனைவரும் எப்போதும் நேர்மறையான சொற்களுடனான விவாதங்களை செய்திடுவோம் தொடர்ந்து நேர்மறையான சிந்தனைகளுடன் வாழ்ந்து வருவோம் நம்முடைய பிள்ளைகளையும் நேர்மறையான சொற்களின் அறிவுரைகளுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் வளர்த்து வருவோம்

சனி, 18 ஜூலை, 2015

நாம் என்ன செய்கின்றோமே அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்


ஒருஊரில் நடுவயது பெண்ஒருவள் வாழ்ந்தவந்தாள் அவள் தன்னுடைய உணவுக்கு தேவையான கோதுமை ரொட்டியை செய்து உண்ணுவாள் மிகுதியாக ஒன்று தேவைப்படாது மிகுந்துவிடும் அப்போது அவருடைய மகன்வெளியூருக்கு பணிசெய்வதற்காக சென்றவன் நல்லபடியாக திரும்பிவரவேண்டுமென பிரார்த்தனை செய்துகொண்டு அந்தமிகுதியான ரொட்டியை அந்தவழியே செல்லும் பிச்சைகாரர்களுக்கு உதவட்டும் என அருகிலிருந்த தின்னையில் வைத்துசென்றிடுவார்

அதனை தொடர்ந்து அங்கு உலவி கொண்டிருந்த பிச்சைகாரனைபோன்ற தோற்றமுடைய பெரியவர் ஒருவர் " நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்" என கூறிக்கொண்டு அந்த ரொட்டியை எடுத்துகொண்டு சென்றார்

இவ்வாறே தினமும் ஒரு ரொட்டி மிகுதியாவதும் அந்தபெண் தன்னுடைய மகனுக்காக பிரார்த்தனை செய்துகொண்டு அந்த மிகுதியான ரொட்டியை தின்னையில்வைத்திடுவதும் பிச்சைகாரனைபோன்ற தோற்றமுடைய பெரியவர் " நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்"என கூறிக்கொண்டு அந்த ரொட்டியை எடுத்துகொண்டு செல்வதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டது

.இந்நிலையில் தினமும் நாம் வைத்திடும் ஒருரொட்டியை அந்த பெரியவர் எடுத்துசென்று சாப்பிடுகின்றார் அதனால் அதில் ஆட்களைகொல்லும் நஞ்சை ஏன் சேர்த்து செய்துவைக்ககூடாது என தவறான என்னம் அந்த பெண்ணின் மனதில் தோன்றியது அதனை தொடர்ந்து அன்று ஒருநாள் பிச்சைக்காக வைத்திடும்ரொட்டியில் மட்டும் ஆட்களைகொல்லும் நஞ்சை சேர்த்து உருவாக்கி தின்னையில் வைத்துசென்றாள்

.வழக்கம்போல பிச்சைகாரனைபோன்ற தோற்றமுடைய பெரியவர்" நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்" என கூறிக்கொண்டு அந்த ரொட்டியை எடுத்துகொண்டு சென்றார்

அன்று சாயுங்காலம் அவளுடைய மகன் திரும்பி வந்தான் ஆளைபார்த்தால் உணவு கிடைக்காத பஞ்சத்தில் இருப்பவன் போன்று மிகஒல்லியாக நடக்கவே தெம்பில்லாதவனை போன்றிருந்தான் அவளுடைய மகன் அம்மா நான் இங்கு வந்து சேருவதே மிகசிரமமாகிவிட்டது உண்பது உணவே கிடைக்கவில்லை கையில் பணமெதுவுமில்லை அந்நிலையில் நம்முடைய ஊருக்கு அருகில் நடக்கமுடியாமல் தவித்து கொண்டிருந்தபோது பெரியவர் ஒருவர் ஒரு ரொட்டியை தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை நீசாப்பிடு தம்பி " நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்" என கூறிக்கொண்டு கொடுத்தார்

அதனை சாப்பிட்டபின் கிடைத்த தெம்பில் நம்முடைய வீடுவந்தசேர்ந்தேன் என கூறியதை தொடர்ந்தஅந்த பெண் வீட்டு தின்னையை பார்த்தாள் அன்று அவள் நஞ்சு வைத்து செய்திருந்த ரொட்டி காணவில்லை " ஐயையோ என்னுடைய மகனுக்கு நானே நஞ்சு வைத்து ரொட்டிசெய்துகொடுத்து சாகடித்து விட்டேனே" என ஒப்பாரியிட ஆரம்பித்தாள் உடன் அவளுடைய மகனும் உடல் நீலமாக மாறி இறந்துவிட்டிருந்தான் .

ஆம் தினை விதைத்தவன் தினையை அறுவடை செய்வான். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான் .அதபோன்று நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்தால் நன்மையே நமக்கு திரும்ப கிடைக்கும் அவ்வாறே மற்றவர்களுக்கு தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்பகிடைக்கும் என்பதே உலகநியதி ஆகும்

படித்த மேதையும் படிக்காத படகோட்டியும்


படித்த மேதை ஒருவர் அருகிலிருந்த மற்றொரு ஊருக்கு செல்லவிரும்பினார். ஆயினும் அந்த ஊருக்கும் செல்லும் வழியில் குறுக்கே எப்போதும் தண்ணீர் வற்றாத பெரிய அகலமான ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. படகு வாயிலாக மட்டுமே அந்த ஆற்றை கடந்து செல்லமுடியும் என்றநிலை இருந்ததால் அங்கிருந்த படகொன்றில் ஏறி அந்த கரைக்கு சென்றுகொண்டிருந்தார்

அப்போது அந்த படகோட்டியிடம்அவர் " என்ன தம்பி உனக்கு எழுத படிக்க தெரியுமா" என வினவினார் உடன் படகோட்டி"எனக்கு எழுத படிக்கவெல்லாம் தெரியாது ஐயா எனக்கு தெரிந்தது எல்லாம் இந்த ஆற்றின் நீரோட்டம் ,படகு ஓட்டுதல்,இந்த ஆற்றில் நீச்சலிடுதல் ஆகியவை மட்டுமே" எனக்கூறினான். உடன் படித்தமேதை "என்ன கொடுமை தம்பி நீ வாழ்க்கையில் பாதியை வீனடித்துவிட்டாயே" என பரிதாப பட்டார். அதனால் அந்த படகோட்டி அதிக வருத்தப்டடான் இருந்தாலும் வாயை திறந்து பதில் எதுவும் பேசவில்லை

.இந்தநிலையில் ஆற்று நீரோட்டம் வேகமாகமாகவும் சுழன்றோடுவது போன்றும் மாறியது அதனைதொடர்ந்து அந்த படகோட்டியினால் படகை சரியாக ஓட்டமுடியவில்லை அதனால் அந்த படகோட்டி படித்த மேதையிடம் "ஐயா உங்களுக்கு இந்த ஆற்றை கடந்து செல்வதற்கான நீச்சல் தெரியுமா" என வினவினான் உடன் படித்த மேதை "எனக்கு நீச்சல் தெரியாதே" என பதிலிறுத்தார் "அடடா அப்படியெனில் உங்களுடைய வாழ்க்கையே முடியபோகின்றது இந்தபடகு இதற்குமேல் நகர்ந்து போகாது அதற்குபதிலாக இது இப்போது கவிழபோகின்றது முடிந்தால் நீச்சல் அடித்து உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள் " எனக்கூறிவிட்டு அற்றோட்டத்தில் தாவிகுதித்து நீந்திசெல்லஆரம்பித்தான் .படித்தமேதையோ ஆற்றோட்டத்தில் மூழ்கி இறந்தார்

அதனால் குறிப்பிட்ட துறையில் மட்டும் நிபுணராக இருப்பதும் அதனால் மற்றவர்களை மிககேவலமான கண்ணோட்டத்தில் பார்த்து கேலிபேசுவதும் பெருமையன்று ஆபத்துகாலத்தில் தன்னை காத்து கொள்வதற்கு தேவையான கலைகளையும் கற்றிருந்தால் மட்டுமே நம்முடைய உயிரை நாம் காத்துகொள்ள முடியும்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

எந்தவொரு நல்ல செயலையும் முதலில் நாம் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திடுக


கடற்கரையோரம் ஒரு மனிதன் காலாற நடந்துசென்று உடல்பயிற்சியையும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் அளித்திட செய்துகொண்டிருந்தான் அவ்வாறு காலாற நடந்து செல்லும்போது வேறுஒரு மனிதன் குனிந்து தரையிலிருந்து அவனுடைய கைகளால் எதையோ எடுத்து கடலுக்குள் வீசியெறிவதை பார்த்தான் அந்த மனிதனின் அருகில் சென்று வணக்கம் நன்பா குனிந்து தரையிலிருந்து எதையோ எடுத்து கடலுக்குள் வீசிஎறிகின்றாயே அது என்ன வென முதலாவது மனிதன் வினவியபோது இரண்டாவது மனிதன் பார்த்தால் தெரியவில்லை கடற்கரையில் ஒதுங்கிடும் மீன் ஆனாது கரையிலேயே இருந்தால் தண்ணீர் இல்லாமல் காய்ந்து இறந்துவிடும் தற்போதைய பருவத்தில் அதிகசூரை காற்று வீசுவதால் கடலலைகளானது கடலில் இருந்து மீன்கள் அனைத்தையும் கரைகளில் தூக்கிவீசி ஒதுக்கி சென்றுவிடும் அவ்வாறு ஒதுக்கி சென்று மீன்கள் காய்ந்து இறந்துவிட்டால் அடுத்தபருவத்திற்கு நாம் கடலிற்கு சென்று நம்முடைய பிழைப்பிற்காக பிடிப்பதற்கான மீன் அதிகமாக கிடைக்காது அதனால் நாம் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினி கிடக்கநேரிடும் என பதிலிறுத்தான் .அப்போது தனியொருவன் சிறிதளவு மீன்களை மட்டும் பிடித்து மீண்டும் கடலில் விட்டுவிட்டால் மிகுதி மீன்கள்என்ன ஆவது என முதலாவது மனிதன் வினவியபோது அனைவருக்கும் நாம் வித்தியாசமாக முன்மாதிரியாக இருந்து செயல்பட்டால் நம்முடைய செயலை பார்ப்பவர்கள் நம்மை பின்தொடர்ந்து செயல்படஏதுவாகும் யாராவது ஒருவர் நல்லதொரு பணியை செய்யதொடங்கினால்தானே அனைவரும் அவரை பின்பற்றுவார்கள் யாருமே தொடங்கவில்லையெனில் அந்த பணிசெய்யபடாமலேய போய்விடும் ஐயா அதனால் நான் என்னுடைய கடமையை செய்ய தொடங்கி செய்துவருகின்றேன் என கூறியதை தொடர்ந்த முதலாமவது மனிதனும் அந்த பணியை செய்யதொடங்கினான் அவர்கள் செய்திடும் பணியை பார்த்த அந்த கிராமத்து மக்கள் அனைவரும் அந்த பணியை செய்யதொடங்கினார்கள் ஆம் சிறிய தீக்குச்சியிலிருக்கும் நெருப்புதான் நமக்கு தேவையான சமையல் பணியை செய்ய காரணமாக அமைகின்றது

தம் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் உழைப்பை அவ்வப்போது அங்கீகரித்து பாராட்டி உற்சாக படுத்துக


ஒரு நிருவாக அலுவகத்தில் அலுவலக மேலாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது அதில் கலந்து கொண்ட இறுதியாக தேர்வு செய்யபடவுள்ள ஒரு இளைஞனை அதன் நிருவாக இயக்கநர் அந்த இளைஞனுடைய கல்வித்தகுதியை பார்த்து பரவாயில்லையே மிக நன்றாக படித்திருக்கின்றானே என மனதிற்குள் எண்ணியபடி "தம்பி ! நீ கல்லூரியில் படிப்பதற்காக அரசின் உதவித்தொகை ஏதேனும் பெற்றாயா?” என வினவினார் .உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட இளைஞன் "இல்லை ஐயா! நான் கல்லூரியில் படிப்பதற்காக உதவித்தொகை எதுவும் பெறவில்லை.” என பதிலிறுத்தான் . "பரவாயில்லை; உன்னுடைய தந்தையே உன்னுடைய கல்விக்கான கட்டணத்தை செலுத்தினாரா ?” என நிருவாக இயக்கநர் வினவியபோது "இல்லை ஐயா! என்னுடைய தந்தை நான் சிறிய வயதாக இருக்கும் போதே இறந்துவி்ட்டார்; அதன் பின்னர் என்னுடைய தாய்தான் என்னை வளர்த்து வருகின்றார் தொடர்ந்து பள்ளியிலும் கல்லூரிகளிலும் நான் படிப்பதற்கான கல்வி கட்டணங்கள் அனைத்தும் செலுத்திவருகின்றார்." என அந்த இளைஞன் பதிலிறுத்தார்

அதன்பின்னர் நிருவாக இயக்கநர் " நிரம்ப மகிழ்ச்சி தம்பி உன்னுடைய தாய் எங்கு பணிசெய்கின்றார் ?” என வினவினார். உடன் அவ்விளைஞன் "என்னுடைய தாய் எந்த நிறுவனத்திலும் பணிசெய்யவில்லை ஆயினும் கிராமங்களில் விவசாய கூலிவேலையை செய்துவருகின்றார்" என கூறினான் அதனை தொடர்ந்து நிருவாக இயக்கநர் "உன்னுடைய கையை விரித்து காட்டு தம்பி!” என கோரியபோது உடன் இளைஞன் தன்னுடைய கைகளை திறந்து காண்பித்தான் அவனுடைய உள்ளங்கைகளும் கைவிரல்களும் நன்றாக மழமழவென இருந்தன அதன்பின்னர் நிருவாக இயக்கநர் "சரி தம்பி! உன்னுடைய தாய் செய்திடும் விவசாய வேலைக்கு நீஏதாவது உதவி செய்திருக்கின்றாயா?” என வினவியபோது உடன் "இல்லை ஐயா~ நான் என்னுடைய தாய்க்கு உதவிசெய்திட எப்போதும் அவர் அனுமதிக்கமாட்டார் அதற்கு பதிலாக நான் நன்றாக படிக்கவேண்டும் என்றே விரும்பினார்" என அந்த இளைஞன் பதிலிறுத்தான். பின்னர் நிருவாக இயக்கநர் "சரி தம்பி! இன்று வீட்டிற்கு சென்று உன்னுடைய தாயின் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு நாளை என்னை வந்து பார் " என விடைகூறி அனுப்பினார்.

அன்று இரவு அவ்விளைஞன் வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய தாயை அழைத்து சென்று அவருடைய கைகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்திடமுனைந்தான் அப்போது அவனுடைய தாயின் உள்ளங்கைகளும் விரல்களும் மேடுபள்ளமாக கரடுமுரடாக காய்ந்து இருந்ததை கண்ணுற்றதும் "அம்மா எனக்காக எவ்வளவு கடினமாக உழைத்துள்ளீர்கள்"” என கண்ணீர்விட்டு அழுதான்.அதன்பின்னர் தன்னுடைய தாயை விவசாய கூலிவேலைக்கு அனுப்புவதில்லை என முடிவுசெய்துகொண்டுஇரவு உறங்க சென்றான் மறுநாள் அவ்விளைஞன் அந்த நிருவாக இயக்கநரை சந்தித்தபோது அவர் "நேற்றிரவு வீட்டிற்கு சென்று நான் கூறிய செயலை செய்தபோது என்ன உணர்ந்தாய்" என வினவினார் உடன் அவ்விளஞன் "1என்னுடைய தாயின் கடினமான தன்னலமற்ற உழைப்பு இல்லையென்றால் நான் இந்தஅளவிற்கு படித்து இருக்கமுடியாது 2 வாழ்வில்எந்தவொரு பணியும் கடினமான செயலே 3 அவ்வாறு கடினமான பணிசெய்பவர்களின் பணியை உடனுக்குடன் பராட்டினால் சகபணியாளர் அல்லது சகமனிதற்களுடனான உறவு மேம்படும்" ஆகிவற்றை தான் அறிந்துகொண்டதாக கூறினான்

"ஆம் தம்பி இந்த உணர்வையே உன்னிடம் உருவாக வேண்டும் நான் எதிர்பார்த்தேன் பொதுவாக ஒருநிருவனத்தின் நிருவாகியாக பணிசெய்பவர் தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் பணிமுடிந்தவுடன் உடனுக்குடன் அவர்களை பராட்டி உற்சாக படுத்தினால் அடுத்தடுத்து அவர்களுக்கு வழங்கிடும் பணியை மேலும் உற்சாகத்துடன் பணிபுரிந்து வெற்றிகரமாக பணியை முடிப்பார்கள் மேலும் நிருவாகிக்கும் பணியாளர்களுக்கும் இடையேயான உறவும் வலுப்படும்" என அறிவுரைகூறியபின் அந்த இளைஞனுக்கு அவருடைய நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணிஆணையை உடன் வழங்கினார்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...