படித்த மேதை ஒருவர் அருகிலிருந்த மற்றொரு ஊருக்கு செல்லவிரும்பினார். ஆயினும் அந்த ஊருக்கும் செல்லும் வழியில் குறுக்கே எப்போதும் தண்ணீர் வற்றாத பெரிய அகலமான ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. படகு வாயிலாக மட்டுமே அந்த ஆற்றை கடந்து செல்லமுடியும் என்றநிலை இருந்ததால் அங்கிருந்த படகொன்றில் ஏறி அந்த கரைக்கு சென்றுகொண்டிருந்தார்
அப்போது அந்த படகோட்டியிடம்அவர் " என்ன தம்பி உனக்கு எழுத படிக்க தெரியுமா" என வினவினார் உடன் படகோட்டி"எனக்கு எழுத படிக்கவெல்லாம் தெரியாது ஐயா எனக்கு தெரிந்தது எல்லாம் இந்த ஆற்றின் நீரோட்டம் ,படகு ஓட்டுதல்,இந்த ஆற்றில் நீச்சலிடுதல் ஆகியவை மட்டுமே" எனக்கூறினான். உடன் படித்தமேதை "என்ன கொடுமை தம்பி நீ வாழ்க்கையில் பாதியை வீனடித்துவிட்டாயே" என பரிதாப பட்டார். அதனால் அந்த படகோட்டி அதிக வருத்தப்டடான் இருந்தாலும் வாயை திறந்து பதில் எதுவும் பேசவில்லை
.இந்தநிலையில் ஆற்று நீரோட்டம் வேகமாகமாகவும் சுழன்றோடுவது போன்றும் மாறியது அதனைதொடர்ந்து அந்த படகோட்டியினால் படகை சரியாக ஓட்டமுடியவில்லை அதனால் அந்த படகோட்டி படித்த மேதையிடம் "ஐயா உங்களுக்கு இந்த ஆற்றை கடந்து செல்வதற்கான நீச்சல் தெரியுமா" என வினவினான் உடன் படித்த மேதை "எனக்கு நீச்சல் தெரியாதே" என பதிலிறுத்தார் "அடடா அப்படியெனில் உங்களுடைய வாழ்க்கையே முடியபோகின்றது இந்தபடகு இதற்குமேல் நகர்ந்து போகாது அதற்குபதிலாக இது இப்போது கவிழபோகின்றது முடிந்தால் நீச்சல் அடித்து உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள் " எனக்கூறிவிட்டு அற்றோட்டத்தில் தாவிகுதித்து நீந்திசெல்லஆரம்பித்தான் .படித்தமேதையோ ஆற்றோட்டத்தில் மூழ்கி இறந்தார்
அதனால் குறிப்பிட்ட துறையில் மட்டும் நிபுணராக இருப்பதும் அதனால் மற்றவர்களை மிககேவலமான கண்ணோட்டத்தில் பார்த்து கேலிபேசுவதும் பெருமையன்று ஆபத்துகாலத்தில் தன்னை காத்து கொள்வதற்கு தேவையான கலைகளையும் கற்றிருந்தால் மட்டுமே நம்முடைய உயிரை நாம் காத்துகொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக