ஞாயிறு, 25 ஜூன், 2023

குரங்கும் & மணியோசையும் - வதந்தி

 காட்டின் ஓரத்தில் ஒரு கிராமம் அமைந்திருந்தது, அது செழிப்பான கிராமமானதால் கிராம மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
அதனால் அக்கிராமமக்கள் அக்கிராமத்தின் நடுவில் ஒரு கோயிலைக் கட்டி, அங்கு தினமும் வழிபாடு செய்து வந்தனர். கோவில் வாயிலில் ஒரு பெரிய மணி தொங்கவிட்டிருந்தனர்.
ஒரு நாள் இரவு திருடன்ஒருவன் அந்தகோவிலின் வாயிலிலிருந்த மணியைத் திருடிகொண்டு காட்டை நோக்கி ஓடினான்.
அவன்காட்டில் வெகுதூரம் எங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருந்ததால் அந்த கோவிலின் மணியும் ஆடிக்கொண்டேஇருந்தது அதன் தொடர்ச்சியாக மணியோசையும் வெகுதூரம் பரவிக்கொண்டிருந்தது. அருகில் சுற்றித் திரிந்த சிங்கம் ஒன்று அந்த மணியின் ஓசைலியை கேட்டு  ஏதோ நம்முடைய காட்டில் புதியதாக ஓசை கேட்கின்றதே என மிகஆர்வத்துடன் மணியோசையைப் பின்தொடரத் தொடங்கியது.
கிராமத்திலிருந்து காட்டிற்கு ஓடும்போது திருடன் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருந்தான். எனவே, ஓய்வெடுக்க ஒரு மரத்தடியில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் அம்மரத்தின் அருகில் வந்த சிங்க ஆஹா நமக்கு அருமையான இரைகிடைத்தது என அந்த திருடனை அடித்துக் கொன்றது. அந்த திருடன் வைத்திருந்த மணியும் அவனருகில் தரையில்விழுந்தது.
 மறுநாள் குரங்கு கூட்டம் அந்த இடத்தை கடந்து சென்றது. அவை அந்த மணியைப் பார்த்தது, அவற்றுள் ஒரு குரங்கு மட்டும் அதை எடுத்து அசைத்தது அதனால் குரங்குகள் அந்த மணியின் மெல்லிய ஓசையை மிகவும் ஆர்வத்துடன்அந்த மனியை ஒன்றுகொன்று வீசிஎறிந்துகொண்டு அம்மணியுடன் விளையாட ஆரம்பித்தன.
பெரும்பாலும், குரங்குகள் நாள்முழுவதும் இரைதேடிசெல்வது இரவில் ஓய்வெடுக்க அந்த மரத்தில் கூடி, அந்த மணியை வீசிஎறிந்துகொண்டு அம்மணியுடன் விளையாடுவது வழக்கமான செயலாகிவிட்டது. இரவில்மட்டும் அந்த காட்டில் இருந்து வரும் மணியின் சத்தத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை அறியாத கிராம மக்கள் அதை மிகவும் விசித்திரமாக இருப்பதாக தங்களுக்குள் விவாதித்து கொண்டனர்.
இருந்த போதிலும் ஒரு நாள் அந்த கிராமமகள்ள அனைவரும் ஒன்றுகூடி தினமும் இரவில் மட்டும் அந்த காட்டில் மணி யோசைவருகின்ற இரகசியம் தெரிய வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்தனர். எனவே, கிராமத்து இளைஞன்ஒருவனை தெரிவு செய்து அந்த காட்டிற்கு அந்த இளைஞனை அனுப்பி தினமும் இரவில் மட்டும் காட்டிலிருந்து மணியோசை வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளமுடிவுசெய்தனர். அதனடிப்படையில் அந்த இளைஞன் பகலில் காட்டிற்குள் சென்ற தேடிபார்த்தபோது,ஒருமரத்தினடியில் திருடனின் எலும்புக் கூட்டை மட்டும் கண்டான்.
அதனால் உடன் அந்த இளைஞன் அதிகமாக பயந்து கிராமத்திற்குத் திரும்பி ஓடி வந்து, காட்டில் ஏதோ பேய் உலவுவதாகவும், அது மக்களைக் கொன்றுவிட்டு இரவில் மட்டும் மணியை அடிப்பதாகவும் எல்லோரிடமும் கூறினான்.
அக்கிராம மக்கள் அதற்குமேல் ஆய்வுஎதுவும் செய்திடாமல் தீர விசாரித்திடாமல் அந்த இளைஞனுடைய சொற்களை உண்மையென நம்பினார்கள். இந்த செய்தி உடனடியாக காட்டுத் தீ போல் கிராமம் முழுவதும் பரவியது. காட்டிற்கு அருகில் தங்களுடைய கிராமம் இருப்பதால் நம்மையும் அந்த பேய் அவ்வாறு கொன்றுவிருமோ என பயந்து நடுங்குகின்ற அச்சமான சூழல் நிலவியது. அதனால் மெல்ல அந்த கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.
தன்னுடைய நாட்டில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் அங்கிருந்து புலம் பெயர்வதை அறிந்த அந்நாட்டு அரசன் அந்த கிராமத்திற்கு அருகிலிருந்த00, காட்டில் சுற்றித் திரியும் பேயை விரட்டுபவர்களுக்கு உரிய விருது வழங்கப்படும் என அந்நாடு முழுவதும் செய்தியை அறிவித்தான். .
அரசனனி இந்த அறிவிப்பை அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு மூதாட்டியும் அறிந்துகொண்டார். இரவில் பேய் உலாவுகின்றது என்ற செய்தி வெறும் வதந்தி என அம்மூதாட்டி நம்பினாள். அதனால் எதற்கும் பயப்படாமல் ஒரு நாள் இரவு அம்மூதாட்டி மட்டும் தனியாக காட்டிற்குள் சென்றாள். அங்கே மரத்தில் மணிவீசியெறிந்து  விளையாடிக் கொண்டிருந்த குரங்குகளைக் கண்டாள்.
இரவில் மணி அடிக்கும் சத்தத்தின் இரகசியத்தை அககிழவி புரிந்து கொண்டு தன்னுடைய  கிராமத்திற்கு திரும்பி வந்துசேர்ந்தாள்.
அடுத்த நாள், அந்நாட்டு அரசனிடம் சென்று, "காட்டில் அலையும் பேயை என்னால் விரட்ட முடியும், ஆனால் அந்த தீய ஆவியைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு சடங்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் தேவை" என்று அம்மூதாட்டி கோரினாள்.
 அம்மூதாட்டி கோரியவாறு  அரசன் உடனடியாக பணம் ஏற்பாடு செய்து கொடுத்தான். அந்தப் பணத்தில் காய்கணிகள் பருப்பு, பழங்கள் போன்ற தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு கோவில் வளாகத்தில் ஒரு வட்டம் போட்டு உணவுப் பொருட்களை எல்லாம் வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு கடவுளிடும்  வேண்டுதல் செய்வது போன்று நடிக்க ஆரம்பித்தாள்.. அந்த கிராமமக்களும் நமக்காக இந்த மூதாட்டி கடவுளிடம் வேண்டி கொள்வதை வேடிக்கை பார்கக ஆரம்பித்தனர். இவ்வாறு தினமும் அம்மூதாட்டி செய்து கொண்டிருப்பதால் அக்கிராம மக்களும் பயம் எதுவும் இல்லாமல் தங்களுடைய வழக்கமான பணிகளை செய்திட சென்றுவிட்டனர்   
அதனை தொடர்ந்து ஒரு நாள் மாலைநேரத்தில் அம்மூதாட்டி, எல்லா உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றாள். காட்டிற்குள் உள்ள அந்த மரத்தை அடைந்து, தான்கொண்டுவந்த அனைத்து உணவுப்பொருட்களையும் அம்மரத்தடியில் வைத்துவிட்டு, குரங்குகள் வரும் வரை அருகில் வேறொரு மரத்தின் பின்னால் ஒளிந்து காத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த குரங்குகள் கூட்டம் நிறைய உணவுப் பொருட்களைக் கண்டதும் மணியை ஒருபுறம் தூக்கி எறிந்துவிட்டு அவ்வுணவு பொருட்களை தின்ன ஓடியது. குரங்குகள் காய்கறி  பழங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தின்று க்கொண்டிருந்தன.சரியான, வாய்ப்பு கிடைத்ததால், அம்மூதாட்டி கோவிலின் மணியை எடுத்துக்கொண்டு கிராத்திற்கு திரும்பிவந்தார் மறுநாள் மன்னரின் அரண்மனைக்கு சென்று சேர்ந்தாள்.
அம்மணியை அரசனிடம் ஒப்படைத்துவிட்டு, "அந்தத் தீய ஆவி இந்த மணியை விட்டுவிட்டு காட்டை விட்டு ஓடி விட்டது. கிராம மக்கள் இப்போது பயப்படத்தேவையில்லை" என்றாள்.
அந்த மூதாட்டியின் துணிச்சலைக் கண்டு மிகவும் மகிழ்ந்த அரசன் அவளுக்கு தான்கூறியவாறு பரிசினை வழங்கினான்.
  அன்றிலிருந்து  தினமும் இரவில் அந்த காட்டிலிருந்து கிராம மக்களுக்கு மணியின் சத்தம் கேட்கவில்லை, அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினர்.
கற்றல்.
1. சிந்திக்காமல் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.
2. புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்க முடியும்.

ஞாயிறு, 18 ஜூன், 2023

பணக்காரனுக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையிலானஇலாபப் பகிர்வு

 ஒருமுறை ஒரு பணக்காரர் சாலையோரத்தில் ஒரு இளம் பிச்சைக்காரனைப் பார்த்தார், அப்பணக்காரர் அப்பிச்சைக்காரனிடம் சென்று, "நீங்கள் பணிசெய்வதற்கு ஏற்ற உடல்ஆரோக்கித்துடன் இருக்கும்போது ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்?" என வினவினார்
அதற்கு பிச்சைக்காரன், “நான் பட்டதாரி, பலநிறுவனங்களிலும்   முயற்சித்தேன் ஆனால் எனக்குட்டும் பணிசெய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை,  ஆயினும் . எனக்கு வேலை கிடைத்தால் உடன் பிச்சை எடுப்பதை நிறுத்திவிடுவேன்." என க்கூறினார்
பணக்காரர்  "சரி, என்னால் உனக்கு பணிவாய்ப்பு கொடுக்க முடியாது, ஆனால் அதற்கு பதிலாக வேறு ஏதோ நன்றாக செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது, நீ ஏன் என்னுடைய ஒரு தொழிலக்ததின் கூட்டாளியாக ஆகக்கூடாது"
உடன் அப்பிச்சைக்காரன் பணக்காரர் சொன்னதை நம்ப முடியாமல், “என்ன சொல்கிறீர்கள், உங்களுடன் தொழில் கூட்டாளிவது சாத்தியமா?” என்று சந்தேகம் கேட்டான்.
பணக்காரன், “ஆம், இந்த நகரத்தில் எனக்கு ஒரு கடை உள்ளது, அதை நீங்கள் என்னுடைய கூட்டாளியாக சேர்ந்த நடத்திடலாம். ஒவ்வொரு மாத இறுதியிலும் அந்த கடையி்ல் கிடைக்கின்ற இலாபத்தை நாமிருவரும்  பகிர்ந்து கொள்வோம்” எனக்கூறினார்
இதைக்கேட்டதும்பிச்சைக்காரனின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது, "நீங்கள் ஒரு ஆபத்துதவியாளராக  வந்திருக்கின்றீர்கள். நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை" என தழுதழுத்த குறளில் கூறினான்.
 தொடர்ந்து அப்பிச்சைக்காரன் அத்தொழிலதிபரிடம், "நாமிருவரும் அந்த கடையில் கிடைக்கின்ற இலாபத்தை எந்த அடிப்படையில் பகிர்ந்து கொள்வோம்?" என வினவியபோது பணக்காரர் " நான் 20% , நீங்கள் 80% அல்லது நான் 10% நீங்கள் 90% என்றவாறு அந்த கடையில் கிடைக்கின்ற இலாபத்தினை நாமிருவரும் பகிர்ந்து கொள்வோம் நீங்கள் இவ்விரண்டில் எதனை தெரிவு செய்தாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்"" என கூறினார்
பணக்காரர் சிரித்துக்கொண்டே, "எனக்கு 10% இலாபம் , நீங்கள் 90% இலாபம் எடுத்துக்கொள்ளலாம், அதனால் நீங்கள் வாழ்வில் நன்றாக முன்னேறலாம்" என்றார்.
இதைக் கேட்ட அப்பிச்சைக்காரன் அப்பணக்காரணின் காலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.
அடுத்த நாள் முதல், பிச்சைக்காரன் பணக்காரனின் கடையை கூட்டாளியாக சேர்ந்து நடத்த ஆரம்பித்தான். அந்த க்கடையின் விற்பனை அதிகரிப்பதற்காக காலநேரம் பார்க்காமல்  அவர் கடுமையாக உழைத்தார். பின்னர் அந்த மாதம் முடிந்த  இலாபத்தை பகிர்ந்து கொள்ளவேண்டிய நாள் வந்தது கூறியவாறு  அப்பணக்காரருக்கு  இலாபத்தில் 10% வேண்டியிருந்தது.
அப்போது திடீரென்று பிச்சைக்காரன், "நான் இரவும் பகலும் கடினமாக உழைத்தேன், அந்த பணக்காரர் எனக்கு வாய்ப்பு கொடுத்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, பிறகு நான் ஏன் இந்த 10% இலாபத்தினை பணக்காரனக்கு கொடுக்க வேண்டும்?" என சிந்திக்க ஆரம்பித்தான்
குறிப்பிட்ட நாளில் பணக்காரர் அந்த கடையின் தனது 10% இலாப  பங்கை சேகரிக்க ல் வந்து சேர்ந்தார்
அப்பணக்காரன்  அந்த கடையின் தன்னுடைய இலாபப் பங்கைக் கேட்டபோது, பிச்சைக்காரன் "இன்னும் போனமாத கணக்கீடு முடிக்கவில்லை.கடைக்கு வரவேண்டிய தொகை கொஞ்சம்  நிலுவையில் உள்ளது.." என்று வேறு சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தான்.
பிச்சைக்காரன் தனக்குப் பங்களிப்பதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட அப்பணக்காரன், "நீ இந்த கடையில் எவ்வளவு இலாபம் ஈட்டியிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும், நம்முடைய ஒப்பந்தத்தின்படி ஏன் என்னுடைய பங்கைக் கொடுக்காமல் தவிக்கிறாய்?" என வினவிபோது
உடன் பிச்சைக்காரன் , "உனக்கு இந்த கடையின் இலாபத்தில் எந்தப் பங்கும் கிடையாது, ஏனென்றால் இந்த கடையில் அல்லும் பகலும் நான்மட்டுமே கடுமையாகஉழைத்தேன் நீங்கள் என்னை போன்று உழைக்கவே இல்லை இலாபத்தை மட்டும் நான் எப்படி உங்களுக்கு பகிர்ந்து தரமுடியும்ப்பையும் ." என மிகக்கராராக கூறினான்
இப்போது யோசியுங்கள்... நாம் அந்த பணக்காரராக இருந்து, பிச்சைக்காரனிடம் இப்படி ஒரு பதிலை கேட்டிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்?
அதேபோன்று இந்த உலகில் நாம் வாழ்வதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளையும் இயற்கை நமக்கு வழங்கிகொண்டிருக்கின்றது நாம் நம்முடைய உடலுழைப்பை மட்டும் கொண்டு நான் தான் அனைத்தும் செய்தேன் என இந்த இயற்கையை நமக்கு பின்னர்வருகின்ற சந்ததிகள் பயன்படுத்த முடியாமல் செய்து கொண்டிருப்பது சரியா  என அனைவரும் தங்களுடைய மனதில் கேளுங்கள்
 

ஞாயிறு, 11 ஜூன், 2023

மேலுலகத்திற்கான நாணயம் எது?

    ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து, 50 வயதை எட்டியபோது, அவர் பல தொழில்நிறுவனங்களைத் துவங்கியதால் அந்நகரின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தார்.
அத்தொழில்அதிபர் ஒரு நாள், தனது மகிழ்வுந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, அவ்வண்டியின் ஓட்டுனர் சத்சங்க கேட்பொலியை இயக்கினார். அதில், துறவி ஒருவர் - நீங்கள் உங்கள் கைகளையும் கால்களையும் கொண்டு எவ்வளவு அதிக கடினமாக உழைத்தாலும், நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நீங்கள் இவ்வுலகிற்கு வந்ததைப் போன்றே வெறும் கைகால்களுடன் மட்டுமேஇவ்வுலகைவிட்டு விடைபெறுவீர்கள். எனக்கூறினார் மேலும் இதுகுறித்து- உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எதைச் சம்பாதித்தீர்களோ அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவழித்தீர்களோ, அது வீடு, பணம், புகழ் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அதை உங்களால் ஒருபோதும் நீங்கள் இறக்கும்போது உங்களோடு கூடவே கொண்டசெல்ல முடியாது. எனமிக நீண்ட விளக்கமளித்தார்
இதைக் கேட்ட தொழிலதிபர், தான் இவ்வளவு சம்பாதித்து,பெயரும் புகழும் அடைந்தும்  தான் இறந்த பிறகு தன்னுடன் எதுவும் கொண்டுபோக போவதில்லையா என்று நினைக்க ஆரம்பித்தார். அதனால், இவ்வளவுநாள் சம்பாதித்ததை தான் இறக்கும் போது தன்னோடு கூடவே எடுத்துச் செல்வதற்கான வழியை தேட ஆரம்பத்தார்.
அன்றிலிருந்து அந்த தொழிலதிபர் இரவும் பகலும் அது குறித்துமட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் தான்மட்டும் எவ்வளவுதான் சிந்தித்தாலும் தனக்கு அதற்கான வழி கிடைக்காது என புரிந்து கொண்ட பிறகு, தன்னால்  அதற்குமேல் அதுகுறித்து சிந்திக்க முடியாது என்று முடிவு செய்தார்
எனவே, ஒரு நாள் அவர் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தனது பணியாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி, தான் இறந்த பிறகு தான் சம்பாதித்த தன்னுடைய பணத்தை எவ்வாறு தன்னுடன் எடுத்துச் செல்வது என்று தனக்கு சிறந்த ஆலோசனை கூறினால், அந்த நபருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்தார்.
அதன்பின்னர் அவருடைய நிறுவனத்தில் பணிபரியும் பணியாளர்கள் அனைவரும் அதைப் பற்றியே விவாதிக்கத் தொடங்கினர், ஒரு வாரம் கழித்து, யாராலும் அதுகுறித்த சிறந்த ஆலோசனையை  அவருக்கு கூற முடியவில்லை.
எனவே, அவர் மீண்டும் தனது பணியாளர்கள் அனைவரையும் கூட்டி, இந்த முறை தனக்கு ஆலோசனை கூறக்கூடிய நபருக்கு  ஐந்து கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தார், ஆனால் இந்த முறை இந்த பரிசானது ஊழியர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் பொருந்தும் எனக் கூறியிருந்தார் மேலும் அந்நகரம் முழுவதும்  இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது அதனால், அந்த நகரம் முழுவதும் இவ்வாறான ஆலோசனை கூறுவது குறித்தும் அதற்கான பரிசுத்தொகை குறித்தும்  மிகபரபரப்பாக பொதுமக்கள் அனைவராலும் விவாதிக்கப்பட்டது.
அடுத்த நாள் அந்த நகரில் வாழும் ஒருவர் அத்தொழிலதிபரின் வீட்டை அடைந்து, 'உங்களுக்கு வேண்டிய ஆலோனையை நான் வழங்கத் தயாராக இருக்கின்றேன் ஆனால் அதற்கு முன் என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்' என்றார்.
அதற்கு தொழிலதிபரும் ஒப்புக்கொண்டார்.
அம்மனிதன் தொழிலதிபரிடம், 'நீங்கள் எப்போதாவது அமெரிக்கா சென்றிருக்கிறீர்களா?' என்று  வினவிபோது உடன் தொழிலதிபர் , 'ஆம். பல முறை. சென்றிருக்கின்றேன். ' என பதிலளித்தார்
அம்மனிதன், 'அப்பயனங்களின்போது எந்த பணத்தை அந்த நாட்டில் உபயோகிக்க அங்கு கொண்டு செல்கின்றீர்கள்?' என வினவியபோது
தொழிலதிபர், "நான் விமான நிலையத்திற்கு சென்றடைந்த, பின்னர் நம்முடைய நாடடு பணத்தை அமெரிக்காவில் பயன்படுத்தக்கூடிய டாலர்களாக மாற்றிக்கொள்கிறேன்." என  பதிலளித்தார்
இப்போது அம்மனிதன் தொழிலதிபரிடம் வெவ்வேறு நாடுகளின் பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லி அதே போன்ற கேள்விகளைக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் தான் பயனம் செய்ய விழையும் குறிப்பிட்ட அந்த நாட்டின் பணமாக விமான நிலையத்தில் மாற்றிக் கொண்டு எடுத்துச்செல்வேன் அவ்வாறாக மாற்றிய அந்தந்த நாட்டின் பணத்தை அந்தந்த நாட்டில் பயன்படுத்திக்கொள்வேன் என்று பதிலளித்தார்.
இவ்வாறு அந்த மனிதன் ஒவ்வொரு நாடாக தான் பயனம் செய்வது குறித்து கேள்வி கேட்பதை கண்டு அத்தொழிலதிபர் மிகஅதிகஎரிச்சலடைந்தார். தொழிலதிபர்  அந்த மனிதனிடம் “ஏன் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்கிறாய்? என்னுடைய மரணத்திற்குப் பிறகு எனது பணத்தை நான் எவ்வாறு என்னுடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான தீர்வை மட்டும் எனக்கு நேரடியாக கூறிடுங்களேன்* எனமிக எரிச்சலுடன் கேட்டார்
உடன் அம்மனிதன் சிரித்துக்கொண்டே, “இதைத்தான் நான் உங்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறேன்.. நீங்கள்குறிப்பிட்ட நாட்டிற்கு பயணம் செய்யும் துவங்கிடும்போது  நம்முடைய நாட்டின் பணத்தை  அந்தந்த நாட்டின் பணமாக மாற்றுவது போன்று.
 நீங்கள் இறப்பதற்கு முன் உங்களுடைய எல்லாப் பணத்தையும் மேலுலகத்திற்கான நாணயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் குறிப்பிட்ட நாட்டிற்கு பயனம் செய்திடும்போது அந்த நாட்டின் பணத்தை உடன் எடுத்து செல்வதை போன்ற அதனை மிக எளிதாக எடுத்தச் செல்லமுடியும் என மிக நீண்ட விளக்கமளித்தார்
இவ்வாறான அந்த மனிதரின் விளக்கத்தை கேட்டு அத்தொழிலதிபர் மிக அதிக குழப்பமடைந்து, "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மேலுவலகத்திற்கான நாணயம் எது?" என வினவினார்
உடன் அம்மனிதன்  “மேலுலகத்தின் நாணயம் அறம் செய்தல். உங்களுக்கு நல்லொழுக்கத்தைத் தரும் இதுபோன்ற அறப்பணிகளில் உங்கள் பணத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் இறந்த பிறகும் நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்ல ஒரே வழி அதுதான். எனக்கூறினார்.
தொழிலதிபர் அந்த மனிதனின் கருத்தை புரிந்து கொண்டார். அவர்  பரிசுபணத்தினை உறுதியளித்தவாறுஅம்மனிதனுக்கு வழங்கினார்  அவரது வாழ்நாள் முழுவதும் பொதுமக்களுக்கும் தொண்டும் ஏழைஎளியவர்களுக்கு சேவை செய்தும் தன்னுடைய அறப்பணிகளை செய்யத்துவங்கினார்.

செவ்வாய், 6 ஜூன், 2023

பொய் சொன்ன வேலைக்காரனுக்கு அக்பர் அளித்த தண்டனை

ஒரு நாள், வேலைக்காரன் ஒருவன் பேரரசர் அக்பரின் படுக்கையறையை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, அவ்வேலைக்காரன் கையிலிருந்து ஒரு குவளை விழுந்து உடைந்துவிட்டது. அது அக்பருக்கு மிகவும் பிடித்தமான குவளையாகும் என்பதால் வேலைக்காரன் பயந்து போனான். அவ்வேலைக்காரன்  உடைந்த குவளையின் எல்லா துண்டுகளையும் சேகரித்து இரகசியமாக வெளியில் கொண்டுசென்று எறிந்துவிட்டுவந்தான். அப்போது அக்பர் தன்னுடைய படுக்கையறைக்கு வந்துசேர்ந்தார் அப்போது, அவ்வறையில் தனக்குப் பிடித்தமான குவளை காணவில்லை என தெரிந்துகொண்டார் . உடன் அக்பர் அவ்வேலைக்காரனை அழைத்து அதைப் பற்றி கேட்டார் .அதனைதொடர்ந்து பயத்தால் வேலைக்காரன் , "நான் அந்த குவளையை சரியாக சுத்தம் செய்வதற்காக என் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்" என பொய் சொல்லிவிட்டான். அதனால் அக்பர் அந்த அவ்வேலைக்காரணிடம் அவனுடைய வீட்டிற்கு சென்று அந்த குவளையை உடனடியாக தனது படுக்கைஅறைக்கு எடுத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவ்வாறு அக்பர் உத்தரவு இட்டதும், தன்னால் உண்மையை மறைக்க முடியாது என தெரிந்து கொண்ட, அவ்வேலைக் காரன் நடந்த அனைத்தையும் அக்பரிடம் கூறி, கைகூப்பி மன்னிப்பு கேட்க ஆரம்பித்தான். தன்னிடம் அவ்வாறு பொய் சொன்ன வேலைக்காரன் மீது அக்பர் அதிக கோபமடைந்தார். அதனால் உடனே அவ்வேலைக்காரனுக்கு மரண தண்டனை விதித்தார். அதனால் மேலும் பயந்து போன அவ்வேலைக் காரன் கைகளிரண்டையை கட்டிக்கொண்டு அக்பரிடம் தன்னை மன்னித்து விடும்படி மன்றாடி கேட்டுக்கொண்டே இருந்தான் ஆனால் அக்பர் அவனுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த நாள், அக்பர் தனது அரசவையில் இந்த செய்தியை ஒரு விவாதப் பொருளாக ஆக்கி, "உங்களில் யாராவது பொய் சொன்னீர்களா?" என பொதுவவாக வினவினார் அரசவையிலிருந்த அனைத்து  உறுப்பினர்களும் ஒரே குரலில் தாங்கள் வாழ்நாளில் யாரும் பொய்கூறியதே இல்லையென மறுத்துவிட்டனர். அதனால் அக்பர் முதலில் நேரடியாக பீர்பாலிடம் அதைய கேட்டபோது, பீர்பால்  "அரசே, எல்லோரும் சில நேரங்களில் ஏதாவது ஒரு பொய் கண்டிப்பாக கூறிடுவார்கள். அதன்படி நானும் பொய்கூறியிருக்கிறேன். ஆயினும் அந்த பொய்யானது யாருக்கும் தீங்கு செய்யாதது எனில்  பொய் சொல்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்று நினைக்கிறேன்." என பதிலளித்தார், இதைக் கேட்டு மிகவும் கோபமடைந்த அக்பர் பீர்பாலை அரசவையிலிருந்து உடனடியாக வெளியேறிடுமாறு உத்திரவிட்டார். அக்பரின் உத்திரவின் படி பீர்பாலும் அரசவையிலிருந்து வெளியேறினார், ஆனால் வேலைக்காரனின் மரண தண்டனை குறித்து அவர் கவலைப் பட்டார். எனவே, வேலைக்காரணைக் காப்பாற்றுவதற்கான வழியை யோசிக்க ஆரம்பித்தார். அவவாறு ஆலோசித்தப் பிறகு, அவர் ஒரு பொற்கொல்லர் கடைக்குச் சென்று, தங்கத்தால் நெல் (அரிசியாக அரைக்கப்படாத நெல்) செய்யச் சொன்னார். மறுநாள் காலை பொற்கொல்லரும் பீர்பாலுக்கு அவர்கோரியவாறு தங்கத்தால் செய்யப்பட்ட நெல்லைக் கொடுத்தார். அந்த தங்க நெல்லை எடுத்துக்கொண்டு பீர்பால் அக்பரின் அரசவைக்குச் சென்றார். அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் கூட பீர்பால் அரசவைக்குள் வருவதற்கான துணிச்சலைக் கண்டு அக்பர் அதிக கோபமடைந்தார். இருந்தபோதிலிரும் பீர்பால் அக்பரிடம் தங்க நெல்லைக் காட்டி, , "அரசே, நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தியொன்றை சொல்ல விரும்புகின்றேன், அதனால்தான் நான் இன்று அரசவைக்குள் உங்களுடைய உத்திரவை மீறி இங்கு வந்தேன். நேற்று மாலை, வீட்டிற்குச் செல்லும் போது, நான் ஒரு துறவியைச் சந்தித்தேன். அவர் இந்த தங்க நெல்லை என்னிடம் கொடுத்து, இதை ஏதாவது விளை நிலத்தில் விதைக்குமாறும் . இதை விதைத்தால் அந்த வயலில் பொன்நெல்லாக விளையும். என்றும் அறிவுரைவழங்கினார் நான் ஒரு வளமான நிலத்தைக் கண்டுபிடித்திருக்கின்றேன். அந்த வயலில்  இதனை விதைக்க எல்லா அரசவை உறுபபினர்களும் நீங்களும் வரவேண்டும் என நான் வேண்டி கேட்டுகொள்கிறேன் இந்த தங்க நெல்லை அவ்வயலில் விதைத்தால் தங்கநெல்லாக விளையும் எனஅத்துறவி சொன்னது உண்மையா இல்லையா என்பதை சரி பார்க்கலாம். ” என மிகநீண்ட விளக்கமளித்தார் அக்பரும்ஒப்புக்கொண்டார்,  அடுத்த நாள் காலைபத்துமணிக்கு அனைத்து அரசவைஉறுப்பினர்களையும் அந்த விளைநிலத்திற்குவந்துசேருமாறு கட்டளையிட்டார். அடுத்த நாள், அனைவரும் வயலிற்கு வந்துசேர்ந்ததும், அக்பர் பீர்பாலிடம் அந்த தங்க நெல்லை வயலில் விதைக்கச் சொன்னார். ஆனால் பீர்பால் மறுத்து, "அரசே இந்ததங்கநெல்லை என்னிடம் கொடுக்கும்போது, பொய் சொல்லாத ஒருவர் விதைத்தால்தான் தங்கநெல்லாக விளையும்  என்று துறவி எனக்கு அறிவுறுத்தினார். அதனால் என்னால் இதை விதைக்க முடியாது. தயவுசெய்து  இதை விதைப்பதற்கு அரசவையில் பொய்சொல்லாத ஒருவருக்கு உத்தரவிடுங்கள்.." எனக்கோரினார்  உடன் தன்னுடைய அரசவை உறுப்பினர்களில் பொய்சொல்லாத ஒருவர் வயலில் அந்த தங்கநெல்லை விதைக்குமாறு கோரினார், யாரும் முன்வரவில்லை. எல்லோரும் ஏதாவது ஒரு முறை பொய் சொல்லியிருப்பார்கள் என்பதை அக்பர் புரிந்து கொண்டார். யாரும் முன்வராத போது, பீர்பால் அந்த தங்கநெல்லை அக்பரின் கைகளில் கொடுத்து, "இங்கு யாரும் பொய்சொல்லாதவர்கள் யாருமேயே இல்லை . அதனால் நீங்கள்தான் இதை விதைக்க வேண்டும்.." என்றார். ஆனால் அக்பர் கூட அந்த தங்கநெல்லை  வயலில் விதைப்பதற்கு  தயங்கி, "நானும் சின்ன வயசுல பொய் சொல்லிஇருக்கின்றேன். அதனால் என்னாலும் இதை விதைக்கமுடியாது" என்றார். இதைக் கேட்ட பீர்பால் சிரித்துக்கொண்டே, "பொற்கொல்லனிடம் இருந்துதான்  இந்த தங்க நெல் எனக்கு கிடைத்தது. உலகில் உள்ளவர்கள் சிலநேரங்களில் பொய் சொல்கிறார்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதே எனது நோக்கம். யாருக்கும் தீங்கு செய்யாத பொய் பொய்யன்று" என்றார்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...