ஞாயிறு, 25 ஜூன், 2023

குரங்கும் & மணியோசையும் - வதந்தி

 காட்டின் ஓரத்தில் ஒரு கிராமம் அமைந்திருந்தது, அது செழிப்பான கிராமமானதால் கிராம மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
அதனால் அக்கிராமமக்கள் அக்கிராமத்தின் நடுவில் ஒரு கோயிலைக் கட்டி, அங்கு தினமும் வழிபாடு செய்து வந்தனர். கோவில் வாயிலில் ஒரு பெரிய மணி தொங்கவிட்டிருந்தனர்.
ஒரு நாள் இரவு திருடன்ஒருவன் அந்தகோவிலின் வாயிலிலிருந்த மணியைத் திருடிகொண்டு காட்டை நோக்கி ஓடினான்.
அவன்காட்டில் வெகுதூரம் எங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருந்ததால் அந்த கோவிலின் மணியும் ஆடிக்கொண்டேஇருந்தது அதன் தொடர்ச்சியாக மணியோசையும் வெகுதூரம் பரவிக்கொண்டிருந்தது. அருகில் சுற்றித் திரிந்த சிங்கம் ஒன்று அந்த மணியின் ஓசைலியை கேட்டு  ஏதோ நம்முடைய காட்டில் புதியதாக ஓசை கேட்கின்றதே என மிகஆர்வத்துடன் மணியோசையைப் பின்தொடரத் தொடங்கியது.
கிராமத்திலிருந்து காட்டிற்கு ஓடும்போது திருடன் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருந்தான். எனவே, ஓய்வெடுக்க ஒரு மரத்தடியில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் அம்மரத்தின் அருகில் வந்த சிங்க ஆஹா நமக்கு அருமையான இரைகிடைத்தது என அந்த திருடனை அடித்துக் கொன்றது. அந்த திருடன் வைத்திருந்த மணியும் அவனருகில் தரையில்விழுந்தது.
 மறுநாள் குரங்கு கூட்டம் அந்த இடத்தை கடந்து சென்றது. அவை அந்த மணியைப் பார்த்தது, அவற்றுள் ஒரு குரங்கு மட்டும் அதை எடுத்து அசைத்தது அதனால் குரங்குகள் அந்த மணியின் மெல்லிய ஓசையை மிகவும் ஆர்வத்துடன்அந்த மனியை ஒன்றுகொன்று வீசிஎறிந்துகொண்டு அம்மணியுடன் விளையாட ஆரம்பித்தன.
பெரும்பாலும், குரங்குகள் நாள்முழுவதும் இரைதேடிசெல்வது இரவில் ஓய்வெடுக்க அந்த மரத்தில் கூடி, அந்த மணியை வீசிஎறிந்துகொண்டு அம்மணியுடன் விளையாடுவது வழக்கமான செயலாகிவிட்டது. இரவில்மட்டும் அந்த காட்டில் இருந்து வரும் மணியின் சத்தத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை அறியாத கிராம மக்கள் அதை மிகவும் விசித்திரமாக இருப்பதாக தங்களுக்குள் விவாதித்து கொண்டனர்.
இருந்த போதிலும் ஒரு நாள் அந்த கிராமமகள்ள அனைவரும் ஒன்றுகூடி தினமும் இரவில் மட்டும் அந்த காட்டில் மணி யோசைவருகின்ற இரகசியம் தெரிய வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்தனர். எனவே, கிராமத்து இளைஞன்ஒருவனை தெரிவு செய்து அந்த காட்டிற்கு அந்த இளைஞனை அனுப்பி தினமும் இரவில் மட்டும் காட்டிலிருந்து மணியோசை வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளமுடிவுசெய்தனர். அதனடிப்படையில் அந்த இளைஞன் பகலில் காட்டிற்குள் சென்ற தேடிபார்த்தபோது,ஒருமரத்தினடியில் திருடனின் எலும்புக் கூட்டை மட்டும் கண்டான்.
அதனால் உடன் அந்த இளைஞன் அதிகமாக பயந்து கிராமத்திற்குத் திரும்பி ஓடி வந்து, காட்டில் ஏதோ பேய் உலவுவதாகவும், அது மக்களைக் கொன்றுவிட்டு இரவில் மட்டும் மணியை அடிப்பதாகவும் எல்லோரிடமும் கூறினான்.
அக்கிராம மக்கள் அதற்குமேல் ஆய்வுஎதுவும் செய்திடாமல் தீர விசாரித்திடாமல் அந்த இளைஞனுடைய சொற்களை உண்மையென நம்பினார்கள். இந்த செய்தி உடனடியாக காட்டுத் தீ போல் கிராமம் முழுவதும் பரவியது. காட்டிற்கு அருகில் தங்களுடைய கிராமம் இருப்பதால் நம்மையும் அந்த பேய் அவ்வாறு கொன்றுவிருமோ என பயந்து நடுங்குகின்ற அச்சமான சூழல் நிலவியது. அதனால் மெல்ல அந்த கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.
தன்னுடைய நாட்டில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் அங்கிருந்து புலம் பெயர்வதை அறிந்த அந்நாட்டு அரசன் அந்த கிராமத்திற்கு அருகிலிருந்த00, காட்டில் சுற்றித் திரியும் பேயை விரட்டுபவர்களுக்கு உரிய விருது வழங்கப்படும் என அந்நாடு முழுவதும் செய்தியை அறிவித்தான். .
அரசனனி இந்த அறிவிப்பை அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு மூதாட்டியும் அறிந்துகொண்டார். இரவில் பேய் உலாவுகின்றது என்ற செய்தி வெறும் வதந்தி என அம்மூதாட்டி நம்பினாள். அதனால் எதற்கும் பயப்படாமல் ஒரு நாள் இரவு அம்மூதாட்டி மட்டும் தனியாக காட்டிற்குள் சென்றாள். அங்கே மரத்தில் மணிவீசியெறிந்து  விளையாடிக் கொண்டிருந்த குரங்குகளைக் கண்டாள்.
இரவில் மணி அடிக்கும் சத்தத்தின் இரகசியத்தை அககிழவி புரிந்து கொண்டு தன்னுடைய  கிராமத்திற்கு திரும்பி வந்துசேர்ந்தாள்.
அடுத்த நாள், அந்நாட்டு அரசனிடம் சென்று, "காட்டில் அலையும் பேயை என்னால் விரட்ட முடியும், ஆனால் அந்த தீய ஆவியைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு சடங்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் தேவை" என்று அம்மூதாட்டி கோரினாள்.
 அம்மூதாட்டி கோரியவாறு  அரசன் உடனடியாக பணம் ஏற்பாடு செய்து கொடுத்தான். அந்தப் பணத்தில் காய்கணிகள் பருப்பு, பழங்கள் போன்ற தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு கோவில் வளாகத்தில் ஒரு வட்டம் போட்டு உணவுப் பொருட்களை எல்லாம் வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு கடவுளிடும்  வேண்டுதல் செய்வது போன்று நடிக்க ஆரம்பித்தாள்.. அந்த கிராமமக்களும் நமக்காக இந்த மூதாட்டி கடவுளிடம் வேண்டி கொள்வதை வேடிக்கை பார்கக ஆரம்பித்தனர். இவ்வாறு தினமும் அம்மூதாட்டி செய்து கொண்டிருப்பதால் அக்கிராம மக்களும் பயம் எதுவும் இல்லாமல் தங்களுடைய வழக்கமான பணிகளை செய்திட சென்றுவிட்டனர்   
அதனை தொடர்ந்து ஒரு நாள் மாலைநேரத்தில் அம்மூதாட்டி, எல்லா உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றாள். காட்டிற்குள் உள்ள அந்த மரத்தை அடைந்து, தான்கொண்டுவந்த அனைத்து உணவுப்பொருட்களையும் அம்மரத்தடியில் வைத்துவிட்டு, குரங்குகள் வரும் வரை அருகில் வேறொரு மரத்தின் பின்னால் ஒளிந்து காத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த குரங்குகள் கூட்டம் நிறைய உணவுப் பொருட்களைக் கண்டதும் மணியை ஒருபுறம் தூக்கி எறிந்துவிட்டு அவ்வுணவு பொருட்களை தின்ன ஓடியது. குரங்குகள் காய்கறி  பழங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தின்று க்கொண்டிருந்தன.சரியான, வாய்ப்பு கிடைத்ததால், அம்மூதாட்டி கோவிலின் மணியை எடுத்துக்கொண்டு கிராத்திற்கு திரும்பிவந்தார் மறுநாள் மன்னரின் அரண்மனைக்கு சென்று சேர்ந்தாள்.
அம்மணியை அரசனிடம் ஒப்படைத்துவிட்டு, "அந்தத் தீய ஆவி இந்த மணியை விட்டுவிட்டு காட்டை விட்டு ஓடி விட்டது. கிராம மக்கள் இப்போது பயப்படத்தேவையில்லை" என்றாள்.
அந்த மூதாட்டியின் துணிச்சலைக் கண்டு மிகவும் மகிழ்ந்த அரசன் அவளுக்கு தான்கூறியவாறு பரிசினை வழங்கினான்.
  அன்றிலிருந்து  தினமும் இரவில் அந்த காட்டிலிருந்து கிராம மக்களுக்கு மணியின் சத்தம் கேட்கவில்லை, அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினர்.
கற்றல்.
1. சிந்திக்காமல் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.
2. புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...