ஞாயிறு, 18 ஜூன், 2023

பணக்காரனுக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையிலானஇலாபப் பகிர்வு

 ஒருமுறை ஒரு பணக்காரர் சாலையோரத்தில் ஒரு இளம் பிச்சைக்காரனைப் பார்த்தார், அப்பணக்காரர் அப்பிச்சைக்காரனிடம் சென்று, "நீங்கள் பணிசெய்வதற்கு ஏற்ற உடல்ஆரோக்கித்துடன் இருக்கும்போது ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்?" என வினவினார்
அதற்கு பிச்சைக்காரன், “நான் பட்டதாரி, பலநிறுவனங்களிலும்   முயற்சித்தேன் ஆனால் எனக்குட்டும் பணிசெய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை,  ஆயினும் . எனக்கு வேலை கிடைத்தால் உடன் பிச்சை எடுப்பதை நிறுத்திவிடுவேன்." என க்கூறினார்
பணக்காரர்  "சரி, என்னால் உனக்கு பணிவாய்ப்பு கொடுக்க முடியாது, ஆனால் அதற்கு பதிலாக வேறு ஏதோ நன்றாக செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது, நீ ஏன் என்னுடைய ஒரு தொழிலக்ததின் கூட்டாளியாக ஆகக்கூடாது"
உடன் அப்பிச்சைக்காரன் பணக்காரர் சொன்னதை நம்ப முடியாமல், “என்ன சொல்கிறீர்கள், உங்களுடன் தொழில் கூட்டாளிவது சாத்தியமா?” என்று சந்தேகம் கேட்டான்.
பணக்காரன், “ஆம், இந்த நகரத்தில் எனக்கு ஒரு கடை உள்ளது, அதை நீங்கள் என்னுடைய கூட்டாளியாக சேர்ந்த நடத்திடலாம். ஒவ்வொரு மாத இறுதியிலும் அந்த கடையி்ல் கிடைக்கின்ற இலாபத்தை நாமிருவரும்  பகிர்ந்து கொள்வோம்” எனக்கூறினார்
இதைக்கேட்டதும்பிச்சைக்காரனின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது, "நீங்கள் ஒரு ஆபத்துதவியாளராக  வந்திருக்கின்றீர்கள். நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை" என தழுதழுத்த குறளில் கூறினான்.
 தொடர்ந்து அப்பிச்சைக்காரன் அத்தொழிலதிபரிடம், "நாமிருவரும் அந்த கடையில் கிடைக்கின்ற இலாபத்தை எந்த அடிப்படையில் பகிர்ந்து கொள்வோம்?" என வினவியபோது பணக்காரர் " நான் 20% , நீங்கள் 80% அல்லது நான் 10% நீங்கள் 90% என்றவாறு அந்த கடையில் கிடைக்கின்ற இலாபத்தினை நாமிருவரும் பகிர்ந்து கொள்வோம் நீங்கள் இவ்விரண்டில் எதனை தெரிவு செய்தாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்"" என கூறினார்
பணக்காரர் சிரித்துக்கொண்டே, "எனக்கு 10% இலாபம் , நீங்கள் 90% இலாபம் எடுத்துக்கொள்ளலாம், அதனால் நீங்கள் வாழ்வில் நன்றாக முன்னேறலாம்" என்றார்.
இதைக் கேட்ட அப்பிச்சைக்காரன் அப்பணக்காரணின் காலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.
அடுத்த நாள் முதல், பிச்சைக்காரன் பணக்காரனின் கடையை கூட்டாளியாக சேர்ந்து நடத்த ஆரம்பித்தான். அந்த க்கடையின் விற்பனை அதிகரிப்பதற்காக காலநேரம் பார்க்காமல்  அவர் கடுமையாக உழைத்தார். பின்னர் அந்த மாதம் முடிந்த  இலாபத்தை பகிர்ந்து கொள்ளவேண்டிய நாள் வந்தது கூறியவாறு  அப்பணக்காரருக்கு  இலாபத்தில் 10% வேண்டியிருந்தது.
அப்போது திடீரென்று பிச்சைக்காரன், "நான் இரவும் பகலும் கடினமாக உழைத்தேன், அந்த பணக்காரர் எனக்கு வாய்ப்பு கொடுத்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, பிறகு நான் ஏன் இந்த 10% இலாபத்தினை பணக்காரனக்கு கொடுக்க வேண்டும்?" என சிந்திக்க ஆரம்பித்தான்
குறிப்பிட்ட நாளில் பணக்காரர் அந்த கடையின் தனது 10% இலாப  பங்கை சேகரிக்க ல் வந்து சேர்ந்தார்
அப்பணக்காரன்  அந்த கடையின் தன்னுடைய இலாபப் பங்கைக் கேட்டபோது, பிச்சைக்காரன் "இன்னும் போனமாத கணக்கீடு முடிக்கவில்லை.கடைக்கு வரவேண்டிய தொகை கொஞ்சம்  நிலுவையில் உள்ளது.." என்று வேறு சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தான்.
பிச்சைக்காரன் தனக்குப் பங்களிப்பதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட அப்பணக்காரன், "நீ இந்த கடையில் எவ்வளவு இலாபம் ஈட்டியிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும், நம்முடைய ஒப்பந்தத்தின்படி ஏன் என்னுடைய பங்கைக் கொடுக்காமல் தவிக்கிறாய்?" என வினவிபோது
உடன் பிச்சைக்காரன் , "உனக்கு இந்த கடையின் இலாபத்தில் எந்தப் பங்கும் கிடையாது, ஏனென்றால் இந்த கடையில் அல்லும் பகலும் நான்மட்டுமே கடுமையாகஉழைத்தேன் நீங்கள் என்னை போன்று உழைக்கவே இல்லை இலாபத்தை மட்டும் நான் எப்படி உங்களுக்கு பகிர்ந்து தரமுடியும்ப்பையும் ." என மிகக்கராராக கூறினான்
இப்போது யோசியுங்கள்... நாம் அந்த பணக்காரராக இருந்து, பிச்சைக்காரனிடம் இப்படி ஒரு பதிலை கேட்டிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்?
அதேபோன்று இந்த உலகில் நாம் வாழ்வதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளையும் இயற்கை நமக்கு வழங்கிகொண்டிருக்கின்றது நாம் நம்முடைய உடலுழைப்பை மட்டும் கொண்டு நான் தான் அனைத்தும் செய்தேன் என இந்த இயற்கையை நமக்கு பின்னர்வருகின்ற சந்ததிகள் பயன்படுத்த முடியாமல் செய்து கொண்டிருப்பது சரியா  என அனைவரும் தங்களுடைய மனதில் கேளுங்கள்
 

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...