வெள்ளி, 29 ஜூன், 2018

நம்முன் குறுக்கிடும் இதைபோன்ற எந்தவொரு தடையையும் நாம் தகர்த்தெறிந்தால் நம்முடையவாழ்க்கையைமேம்படுத்திடுவதற்காகன வாய்ப்பை நாம் பெறுவதற்கான நல்லசூழ்நிலைய நமக்கு கண்டிப்பாக கிடைத்திடும்


முன்னொரு காலத்தில், நாட்டின் அரசனொருவன் அந்தநாட்டின் வழியே செல்லும் சாலை ஒன்றில் பெரிய பாறாங்கல் ஒன்றினை வைத்து அதனை கடந்து செல்பவர்கள் என்ன செய்கின்றார்கள் என கவணித்து வந்தார் பொதுவாக அந்த சாலை வழியே சென்றவர்களுள் வியாபாரிகள் அந்த பாறங்கல்லை சுற்றிகொண்டே சென்றனர் பொதுமக்கள் பொதுமக்களனை-வரும் சாலையை சிரமம் இல்லாமல் நடந்து செல்வதற்கேற்ப இந்த சாலையைகூட சரியாக பராமரிக்கவில்லை எனஅந்த நாட்டு அரசனை திட்டிகொண்டே சென்றனர் ஆயினும் ஒருநாள் சாதாரணவிவசாயி ஒருவர் அருகிலிருந்த நகரத்தின் சந்தைக்கு தன்னுடைய நிலத்தில்விளைந்த காய்கறிகளை அந்த வழியே எடுத்துசென்று கொண்டிருக்கும்போது குறுக்கே பெரிய பாறாங்கல் இருப்பதை பார்த்தான் உடன் காய்கறிசுமையைஇறக்கி வைத்துவிட்டு அந்த பெரிய பாறங்கல்லை மிகவும் கடினமாக முயன்று புரட்டிதள்ளி அனைவரும் அந்த சாலையைஎளிதாக செல்லுமாறு செய்தான் பின்னர் கீழே இறக்கிவைத்த தன்னுடையகாய்கறி சுமையை தூக்கிஎடுத்து செல்லமுயன்றபோது அந்த விவசாயி புரட்டி தள்ளிய பெரிய பாறாங்கல்லிற்கு கீழே துனிப்பைஒன்று இருப்பதை கண்டான் அதனை எடுத்து பார்த்தபோது அதனுள் தங்க நாணயங்கள் இருந்ததை கண்ணுற்று இந்த பாறாங்கல்லை முயற்சிசெய்து தள்ளி பாதையை சரியாக செய்பவர்களுக்கு ஆனதக்க பரிசாகும் என எண்ணி மகிழ்ந்து எடுத்து சென்றான்

நம்முன் குறுக்கிடும் இதைபோன்ற எந்தவொரு தடையையும் நாம் தகர்த்தெறிந்தால் அதனை தொடர்ந்து நாம் நம்முடையவாழ்க்கையை மேம்படுத்திடுவதற்காகன நல்லதொரு வாய்ப்பை நாம் பெறுவதற்கான நல்லசூழ்நிலை நமக்கு கண்டிப்பாக கிடைத்திடும்

ஞாயிறு, 24 ஜூன், 2018

எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது


இருசக்கரவாகணம் பழுதுபார்ப்பு கடைவைத்திருந்தவரின் கடைக்கு ஒருவர் தன்னுடைய இருசக்கரவாகணத்தை பழுதுநீக்கம் செய்துதரும்படி கொண்டுவந்து விட்டிருந்தார் அந்த இருசக்கரவாகணத்தின் பழுதினை சரிசெய்ததோடு மட்டுமல்லாமல் அந்த இருசக்கர வாகணத்தினை கழுவி சுத்தம் செய்து புதிய இருசக்கரவாகணம் போன்று பளபளவென மின்னும்படி செய்தார் அந்த கடையின் சொந்தக்காரர் இதனை கண்ணுற்ற அருகிலிருந்த மற்ற கடைகாரர்கள்அவரைபார்த்து கோரிய பணியை மட்டும் செய்திடாமல்கோராத பணியையும் சேர்த்து செய்துள்ளாயேஅதனால் உனக்கு என்ன பயன் எனகிண்டல்செய்தனர் சரிபரவாயில்லை என்னுடைய மனதிருப்திக்காக நான்அவ்வாறுசெய்தேன் என பதிலிருத்தார் அந்த கடைகாரர் அதன்பின்னர் அந்தஇருசக்கரவாகணத்தின் சொந்தக்காரர் வந்து தன்னுடைய வண்டியை பார்த்தபோது அதனுடைய பழுதுமட்டும் நீக்கியதுமட்டுமல்லாது அவருடைய இருசக்கரவாகணத்தைய புதியதாக தோன்றிடுமாறு செய்துள்ளதை பார்த்து மிகவும் ஆச்சரியத்துடன் அவருடைய விசுவாசத்தை பராட்டி தன்னுடைய நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் அந்த கடைகாரருக்கு வழங்கி கெளரவித்தார் எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது என்ற கருத்தினை மனதில்கொள்க

சனி, 9 ஜூன், 2018

எந்தவொரு செயலையும் நமக்கு பயந்துகொண்டு மற்றவர்கள் விட்டுகொடுக்கின்றார்கள் என இறுமாந்திருந்திடாதே


ஒருசமயம் யானை ஒன்று சாலையில் நடந்து கொண்டிருந்தது வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டதால் அதனை கடந்துசெல்ல குறுகிய பாளம் ஒன்று கட்டப்பட்டிருந்தது அதில் ஒரேசமயத்தில் ஒருவர்மட்டுமே செல்லமுடியும் அதாவது எதிரும்புதிருமாக இருவர் கடந்து செல்லமுடியாது யாராவது ஒருவர் மட்டுமே கடந்து செல்லமுடியும் அந்த ஆற்றுபாளத்தை கடக்க அந்த யானை முயன்றபோது எதிரில் சேற்றில் உழலும் பன்றி ஒன்று அதேஆற்று பாளத்தின் மீது வந்துகொண்டிருந்தது அதை கண்டவுடன் யானையானது ஒதுங்கி நின்றுகொண்டு பன்றி பாளத்தை கடந்துவரும்வரை காத்திருந்தது பன்றி சென்றபின்னர் யானையானது ஆற்று பாளத்தை கடந்து செல்ல துவங்கியது உடன் அந்த பன்றியானது அருகிலிருந்த தன்னுடைய நண்பர்களிடம் "பார்த்தாயா நண்பா என்னை பார்த்தவுடன் அவ்வளவுபெரிய யானையே பயந்து கொண்டு நான் ஆற்றுப்பாளத்தை கடந்தவர வழிவிட்டது" என ஜம்பமாக பேசியது இதனை கேள்வியுற்ற யானையானது தன்னுடைய நண்பர்களிடம் "நண்பா நான் நினைத்திருந்தால் அந்த பன்றியை என்னுடைய கால்களால் மிதித்து நசுக்கிவிட்டு சென்றிருக்கமுடியும் ஆனால் நான்இப்போதுதான் குளித்து விட்டுவருகின்றேன் மீண்டும் நான் என்னுடைய கால்களை கழுவுவேண்டியிருக்கும் அதனால் தான் ஒதுங்கிவழிவிட்டேன்" என கூறியது எந்தவொரு செயலையும் நமக்கு பயந்துகொண்டு மற்றவர்கள் விட்டுகொடுக்கின்றார்கள் என இறுமாந்திருந்திடாதே அது நம்முடைய குறையினால் விட்டுகொடுத்திருக்கலாம் அதனை சரிசெய்திட முதலில் முயன்றிடுக

சனி, 2 ஜூன், 2018

ஒரே பொருள் பயன்படுத்திடுவதற்காக கொண்டு செல்லும் இடத்திற்கேற்ப மாறுபட்ட விலை


ஒரு பழக்கடையில் வாழைப்பழம் வாங்குவதற்காக தமிழ்நாடு மின்விநியோக நிறுவனத்தின் தலைமை பொறியாளர் ஒருவர் அந்த வாழைப்பழத்தினுடைய விலை என்னவென வினவினார் உடன் கோவிலுக்கு எனில் கிலோ 10ரூபாய் ஏழைகளுக்கு கொடுக்கவெனில் கிலோ 15ரூபாய் பள்ளிபிள்ளைகளுக்கு கொடுக்கவெனில் கிலோ 20ரூபாய் உங்களுடைய வீட்டிற்குஎனில் கிலோ 25ரூபாய் உணவுவிடுதிக்கு எனில்கிலோ 30ரூபாய் தொழிலகத்திற்குஎனில் கிலோ 35ரூபாய் நீங்கள் எந்த தேவைக்காகவாங்குகின்றீர்களோஅதற்கேற்ற விலைஐயா எனகூறினார் பழக்கடைகாரர் .அதனைதொடர்ந்து அவர் ஒரே வாழைப்பழம்தான் கொண்டு செல்கின்ற இடத்திற்குஏற்றவிலைவித்தியாசம் ஏன் என வினவினார் தொடர்ந்து பழக்கடைக்காரர் ஆம் ஐயா அனைவரும் பயன்படுத்துவது ஒரேமின்சாரம்தான் ஆனால்நீங்கள் மட்டும் ஒவ்வொரு வொருக்கும்ஒவ்வொரு விலையில் அல்லவா மின்சாரத்தினை வினியோகம்செய்கின்றீர் அதுசரியென்றால் நான் கூறும் பழத்தின் விற்பணைவிலையும்சரிதான் எனகூறினார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...