சனி, 2 ஜூன், 2018

ஒரே பொருள் பயன்படுத்திடுவதற்காக கொண்டு செல்லும் இடத்திற்கேற்ப மாறுபட்ட விலை


ஒரு பழக்கடையில் வாழைப்பழம் வாங்குவதற்காக தமிழ்நாடு மின்விநியோக நிறுவனத்தின் தலைமை பொறியாளர் ஒருவர் அந்த வாழைப்பழத்தினுடைய விலை என்னவென வினவினார் உடன் கோவிலுக்கு எனில் கிலோ 10ரூபாய் ஏழைகளுக்கு கொடுக்கவெனில் கிலோ 15ரூபாய் பள்ளிபிள்ளைகளுக்கு கொடுக்கவெனில் கிலோ 20ரூபாய் உங்களுடைய வீட்டிற்குஎனில் கிலோ 25ரூபாய் உணவுவிடுதிக்கு எனில்கிலோ 30ரூபாய் தொழிலகத்திற்குஎனில் கிலோ 35ரூபாய் நீங்கள் எந்த தேவைக்காகவாங்குகின்றீர்களோஅதற்கேற்ற விலைஐயா எனகூறினார் பழக்கடைகாரர் .அதனைதொடர்ந்து அவர் ஒரே வாழைப்பழம்தான் கொண்டு செல்கின்ற இடத்திற்குஏற்றவிலைவித்தியாசம் ஏன் என வினவினார் தொடர்ந்து பழக்கடைக்காரர் ஆம் ஐயா அனைவரும் பயன்படுத்துவது ஒரேமின்சாரம்தான் ஆனால்நீங்கள் மட்டும் ஒவ்வொரு வொருக்கும்ஒவ்வொரு விலையில் அல்லவா மின்சாரத்தினை வினியோகம்செய்கின்றீர் அதுசரியென்றால் நான் கூறும் பழத்தின் விற்பணைவிலையும்சரிதான் எனகூறினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...