சனி, 26 மே, 2018

யாரையும் அலட்சியமாக எண்ணி தீங்குசெய்தால் அதற்கான பாதிப்பு கண்டிப்பாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும்


ஒரு நகரத்தின் கடைத்தெருவில் ஒரு கடையும் அதனருகில் குடிசையொன்றும் இருந்தன அந்த கடைமுதலாளி நம்முடைய பெரிய கடைக்கு பக்கத்தில் இந்த ஒலைக்குடிசை இருப்பதால் நம்முடைய கடையின் தோற்றமும் நன்றாக இல்லை வியாபாமும் சரியாக நடைபெறவில்லை அதனால் இந்த குடிசையை எப்படியாவது காலி செய்யவேண்டும் எனஅந்த குடிசையில் வாழும் வயதானவரை அழைத்து தான் அந்தகுடிசையை விலைக்குவாங்க விரும்புவதாகவும் அந்த வயதானவரின் விருப்பத்தை கோரினார் அவர் மறுநாள் தன்னுடைய விருப்பத்தைகூறுவதாக சென்றுவிட்டார் மறுநாள் கடைகாரரின் சூழ்ச்சியை தெரிந்து கொண்டு சரி தம்பி இந்த குடிசையை விற்றுவிடுகின்றேன் அதற்கான தொகை எவ்வளவு தருவாய் என்றார் தற்போதை இதனுடைய மதிப்பு இரண்டுரூபாய்தான் பெறும் அதனை உடனே வாங்கி கொள் என மிரட்டுவது போல் பதிலிருத்தார் கடைகாரர் சரிதம்பி அந்த தொகையை எனக்கு இப்போது தரவேண்டாம் நீயேவைத்து கொண்டு நான் நாடுபூராவும் இருக்கும் கோவில்களுக்கு கால்நடையாக சென்று திரும்பி வரும்போது அந்த தொகையை ஒவ்வொரு ஆறுமாதத்திலும் கையிலிருக்கும்தொகையின் இருமடங்காக உயர்த்தி கொண்டேவந்து நான் கோரும்போது அன்றைய நாளின் தொகை. கொடுக்க வேண்டும் அதற்காக 10ரூபாய் முத்திரைதாளில் ஒப்பந்தம் எழுதி பதிவுசெய்து தர வேண்டும் எனஅந்த வயாதனவர் கோரியதை ஏற்று உடன் 10ரூபாய் முத்திரைதாளில் ஒப்பந்தம் எழுதி பதிவுசெய்துநகலை பெரியவர்கையில் கொடுத்த விட்டார் அந்த ஏழைவயதானவரும் நாடுகளில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு நடைபயனமாக சென்றுவிட்டார் பன்னிரண்டு ஆண்டு கழித்து அந்த வயது முதிர்ந்த முதியோர்அந்த நகரத்திற்கு வந்து தன்னுடைய குடிசையை வாங்கிகொண்ட கடைகாரரிடம் வந்த தம்பி ஒப்பந்தபடி நான் கொடுத்த தொகையை ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் இரண்டுமடங்காக உயர்த்தி கணக்கிட்டு வழங்கிடு என கோரியபோது கடைகாரர் மொத்தம் பன்னிரண்டு ஆண்டு ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் இரண்டுரூபாய்என கணக்கிட்டால் 25 X 2 = ரூபாய் 50 தான் வருகின்றது இந்தாங்க ஐயா 500 ரூபாய்என வழங்கினார் ஆயினும் அந்த முதியவர் தம்பி சரியாக கணக்கிட்டால் ஒருகோடியே அறுபத்தேழுஇலட்சத்து ஏழுபத்தேழாயிரத்து இருநூற்று பதினாறு ரூபாய் நீதரவேண்டி வருகின்றது ஒப்பந்தபடி அந்த தொகையை நீகொடுக்கவேண்டும் என கோரினார் அவ்வளவு தொகை என்னால் தரமுடியாது என அந்த கடைகார்ர் மறுத்தார் அதனால் முதியவர் அந்த கடைகாரர் ஒப்பந்தபடி தொகை தரவில்லை என நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார் உடன் கடைகார்ர் தன்னுடைய கடைவீடு ஆகியவற்றை விற்பணைசெய்தது மட்டுமல்லாமல் தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் விற்றுவந்த தொகை அனைத்தையும் நீதிமன்றத்தில் செலுத்தினார் அப்போதும் அந்த கடனை தீர்வுசெய்திடமுடியாமல் தத்தளித்தார் அதனால் யாரையும் அலட்சியமாக எண்ணி தீங்குசெய்தால் அதற்கான பாதிப்பு கண்டிப்பாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: